மேம்படுத்தப்பட்ட லாம்-ரிம் பாதை குறித்த விளக்கம்

விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையின் சிறந்த பயன்

ஆன்மீகத்தை நோக்கிச் செல்ல சாத்தியமான வகையில், நாம் அனைவரும் விலைமதிப்பில்லாத மனித உடலுடன், விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை   அடைந்திருக்கிறோம். நாம் இப்போது மனிதர்களாக இருப்பதை விட அறிவொளியை அடைவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது - தெய்வங்களின் ராஜாவான இந்திரனாக நாம் மறுபிறவி எடுத்தாலும் கூட அந்த வாய்ப்பு இல்லை!  

நாம் இப்போது கொண்டிருப்பதை விட சிறந்த செயலாற்றும் அடிப்படை எதுவுமில்லை என்பதால், அதை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாம் அறிந்திருப்பது முக்கியம்.  ஆன்மிகத்தை வளர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி அதனை நமக்குள்ளாகவே மேலும் மேலும் அதிகமாக, கருணை மற்றும் இலகிய இதயத்தோடு மேம்படுத்துதல். ஒரு இலகிய இதயத்தின் அடிப்படையில், நாம் ஒரு போதிச்சிட்டா நோக்கத்தின் அர்ப்பணிப்பு இதயத்தை வளர்த்துக் கொள்ளலாம். இது ஞானத்தை அடைவதற்கான விருப்பம், மற்றொரு விதமாகச் சொல்வதானால் நம்முடைய அனைத்து குறைபாடுகளையும் அகற்றி நம்மால் முடிந்த வரை ஒவ்வொருவரும் சிறப்பிலும் சிறப்பான பலனை சாத்தியப்படுத்தும் விதமாக நம்முடைய முழுத்திறனையும் அடைதல். ஞானத்தை அடைவதற்கு நம்முடைய இதயத்தை நாம் பிறருக்காக அர்ப்பணித்தால், அதுவே நம்முடைய விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை சிறந்த பயனுள்ளதாக்க முடியும். 

Top