உந்துதலின் இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகள்

மறு ஆய்வு

ஆன்மிகப்பாதைக்கான மேம்படுத்தப்பட்ட நிலைகள் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், அங்கே நாம் நமது உந்துதலை சிறிய நம்பிக்கையில் இருந்து அது நிறைவுபெறும் வரையில் அடிப்படையில் அகலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். இவ்வழியில் ஒவ்வொரு நிலையும் முந்தைய நிலைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியின் மூலம் செல்வதற்கு இரண்டு வழிகள் இருப்பதையும் நாம் பார்த்தோம். இந்த வாழ்நாளை சிறப்பாகவும் நம்முடைய வாழ்க்கையை சிறிதேனும் நல்லதாக்குவதற்குமான அக்கறையுடன் நாம் தர்மா – லைட் பதிப்பை பின்பற்றலாம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் தொடங்க வேண்டிய நிலை இது தான். இருப்பினும், பாரம்பரிய வழங்கல் இந்த நிலையை கருத்தில் கொள்ளாது, ஏனெனில் மறுபிறப்பு தொடக்கம் மற்றும் முடிவில்லாத நம்பிக்கை என்று கருதப்படுகிறது. உண்மையான தர்மப் பொருள், என்பது உண்மையான கோக-கோலாவைப் போல, மறுபிறப்பு சூழலை வளர்ச்சியுடன் பேசுகிறது.     

தொடக்க நிலை உந்துதல், அனைத்து உந்துதல் நிலைகளைப் போலவே, ஒரு நோக்கத்தைக் கொண்டது, அந்த நோக்கத்தை அடைவதற்கான காரணம் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் உணர்வு இலக்கை அடைவதற்காக நம்மை இழுத்துச் செல்வதை நாம் காண்கிறோம். தொடக்க நிலையில், நாம் நம்முடைய எதிர்காலத்தை மேம்படுத்துவதற்குப் பார்ப்போம், விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை தொடர்ந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவோம் அப்போது தான் நம்மை நாமே முன்னேற்றிக் கொண்டு மிகப்பெரிய இலக்குகளை அடைய முடியும். இந்த வாழ்நாளிலேயே இறுதி இலக்கை அடைவதென்பது கடினம் என்பதை நாம் உணர்கிறோம். இலக்கை அடைய காலங்கள் பலவும் நிறைய கடின உழைப்பும் தேவை. முயற்சிப்பதற்கான காரணமும் தொடர்ந்து சிறப்பான மறுபிறப்புகளை கொண்டிருந்தால் நம்மால் அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியும். 

ஒரு விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பின் இலக்கை நாம் அடையும் போது அதைத்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் திட்டமிடுகிறோம். நம்முடைய அடுத்த ஜென்மத்தில் சொர்க்கத்திற்குச் சென்று நல்ல நேரத்தை கொண்டிருப்பதைப் பற்றி நாங்க் பேசவில்லை. இந்த எல்லைக்குள், சிறந்த மறுபிறப்பைத் தேட நம்மைத் தூண்டும் உணர்ச்சி மோசமான மறுபிறப்பைப் பெறுவதற்கான அச்சமாகும். இந்த மோசமான நிலைகளுடன் நம்மை நாமே முன்னேற்றவும் செயல்படுத்தவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஆனால், இதனை தவிர்ப்பதற்கு ஒரு வழி இருக்கிறது என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது. நாம் இதனை பாதுகாப்பான திசை, அல்லது அடைக்கலம் என்ற தலைப்பில் ஆலோசித்திருக்கிறோம். இந்த திசையானது அடிப்படையில் முயற்சிக்கவும், நம்முடைய மனநிலையை ஆட்கொள்ளும் எதிர்மறை விஷயங்கள் குறிப்பாக நம்முடைய நடத்தை மற்றும் அனைத்து அளவீடுகளையும் எப்போதைக்கும் முழுவதும் நிறுத்தி வைக்கும். இதனோடு, நாம் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட விரும்புகிறோம். நாம் இதனை விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையைக் கொண்டிருக்கிறோம் என்ற சூழலுக்குள் இருக்கும் வாய்ப்புகளைப் போற்றுவதோடு, இறக்கும் நேரத்தில் இவற்றை நாம் நிச்சயமாக இழக்கப் போகிறோம் என்ற புரிதலுடன் செயல்படுத்தலாம். மரணம் நிச்சயம் வரப்போகிறது ஆனால் அது எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாது. 

சிறந்த மறுபிறப்பு நிலைகளும் கூட திருப்தியற்றவையே

இடைநிலை நம்பிக்கையுடன், நாம் மேலும் இதனை ஆராயலாம். நமக்கு சிறந்த மறுபிறப்புகளோ அல்லது விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்புகளோ இருந்தாலும் கூட, அவ்வாறே தொடர்வதென்பது அதிருப்தியானது. அடுத்த கனம் நாம் எவ்வாறு உணரப்போகிறோம் என்ற நிலைத்தன்மையில்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது இயல்பும் அதுவே. நாம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் அடுத்த நிமிடமே சட்டென்று இறுகிய சூழலிலோ, சோகமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ கூட உணரலாம்.  

சிறு சிறு விஷயங்கள் நம்மை வருத்தப்படுத்துகின்றன நிச்சயமாக பிறப்பின் மூலமாக ஒவ்வொரு வாழ்க்கையிலும், நம்முடைய உடல் செயல்பாடுகளின் எந்த கட்டுப்பாடுமின்றி மீண்டும் மீண்டும் வரும் பிரச்னைகள் இருக்கின்றன. எப்படி நடக்க வேண்டும் பேச வேண்டும் என்பதை கற்க வேண்டும், இதையே மீண்டும் மீண்டும் செய்வதனால் சலிப்பு வருகிறது. நாம் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும், மீண்டும் அதனையே செய்ய யார் விரும்புவார்கள்?! நமக்கான துணை மற்றும் வேலையைத் தேட வேண்டும், மீண்டும் ஒரு முறை நோய்வாய்ப்படுதல், வயது முதிர்வு, மரணத்தை சந்திக்க வேண்டும், நம்மிடம் மட்டுமின்றி நாம் நேசிப்பவர்களையும் சேர்த்து அனைத்தையும் காண வேண்டும். 

விலைமதிப்பான இந்த மனித வாழ்விலும் கூட, பல்வேறு அதிருப்தியான விஷயங்கள் இருக்கின்றன, மேலும் நம்முடைய அனைத்து உணர்வுப்பூர்வமான பிரச்னைகளும் அங்கேயே இருக்கத் தான் போகின்றன. நாம் கோபமடைகிறோம், வருத்தமடைகிறோம், பேராசைப்படுகிறோம். நபர்கள் மற்றும் பொருட்களிடத்தில் மிகவும் பிணைப்பு கொள்கிறோம். காரணம், தாக்கம் மற்றும் யதார்த்தம் குறித்து நாம் அப்பாவியாக இருக்கிறோம், ஆதலால் நாம் செயல்பட நினைக்கும் விதம் மற்றும் பேசும் முறை மற்றவர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதைப் போல நாம் முட்டாள்தனமாக செயல்படுகிறோம். சில நேரங்களில் மற்றவர்கள் உண்மையில் இல்லாவிட்டாலும் இருப்பதைப் போன்ற உணர்வுடன் நடந்து கொள்வோம். அது முற்றிலும் அப்பாவித்தனமானது, இல்லையா?

இந்த அனைத்துப் பிரச்னைகளும் தொடரப்போகின்றன எந்த அதிர்ஷ்டமான மறுபிறப்பாக இருந்தாலும் இந்த ஏற்ற இறக்கங்கள் இருக்கப் போகின்றன. அதிர்ஷ்டம் துரதிஷ்டமாகவும், மறுபிறப்புகள் சிறந்ததில் இருந்து மோசமானதாகும் சூழல்களும் நேரமும் வரத்தான் போகின்றன. இது போகும் போகும் போய்க்கொண்டே இருக்கும். இதைத்தான் நாங்கள் “கட்டப்பாடின்றி மீண்டும் மீண்டும் இருத்தல் அல்லது மறுபிறப்பு” என்று சொல்கிறோம், சமஸ்கிருதத்தில் இதற்கான வார்த்தை “சம்சாரி”.

உரிமையை துறத்தல்: சுதந்திரமாக இருப்பதற்காக விடுதலையை நோக்கமாக வைத்தல்

இடைநிலை நம்பிக்கையுடன், நாம் அடைய விரும்பும் இலக்கானது இவை அனைத்திலும் இருந்து விடுதலை. நம்முடைய மனதின் தொடர்ச்சிக்கு தொடக்கமோ முடிவோ இல்லை, கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் இந்த முடிவுறா மறுபிறப்பு சுழற்சியில் தொடர நாம் விரும்பவில்லை. இதற்கு முடிவே-இல்லை” என்று நாம் சொன்னால், அதற்கு அர்த்தம் அவை குறித்து நாம் எதுவும் செய்யவில்லை என்றால் இது எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது என்பதாகும். நாம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், சம்சாராவின் உண்மையான நிறுத்தத்தை அனுபவிக்கலாம். எதற்காக? ஏனெனில் நாம் துன்பப்படுவதை நிறுத்த விரும்புகிறோம். வரும் பிரச்சினைகள் மிகவும் மோசமானவை அல்ல என்றாலும், இன்னும் நுட்பமான பிரச்சினைகளை நிறுத்த விரும்புகிறோம். விடுதலையை அடைய விரும்புவதற்கான காரணம் இதுதான்.

சமஸ்கிருதத்தில், விடுதலையை “நிர்வாணா” என்று அழைக்கிறோம், மேலும் இதை நோக்கி நம்மை இயக்கும் உணர்வே பெரும்பாலும் “உரிமையை துறத்தல்” என்று சொல்லப்படுகிறது. இது சிறந்த மொழிபெயர்ப்பு இல்லை, ஆனால் அடிப்படையில் இது சுதந்திரமாக இருப்பதற்கான மிக உறுதியான எண்ணத்தை குறிக்கிறது. உரிமையை துறத்தலுடன், நாம் கொண்ட இந்த துன்பமே போதும் என்று நாம் முடிவு செய்கிறோம். நாம் இதனால் சோர்ந்து போய்விட்டோம், மேலும் ஆழ்மட்ட அளவில் பார்த்தால் உண்மையில் இவை அனைத்தாலும் நாம் சலிப்படைந்துவிட்டோம். இதுவே போதும்: நாம் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்.

நம்முடைய குழப்பமான உணர்வுகளை விட்டுக்கொடுக்க ஆர்வமாக இருக்கிறோம்

சுதந்திரமாக இருத்தலென்றால் அதற்கு, நம்முடைய அனைத்து பிரச்னைகள் மற்றும் துன்பத்திற்கான காரணங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். துன்பத்தை மட்டுமல்ல அதற்கான காரணங்களையும் மொத்தமாக கைவிட நாம் விருப்பத்தோடு இருக்கிறோம். கைவிடுதல் என்றால் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் அல்லது இவை போன்ற ஏதோ ஒன்றை விட்டுவிடுவதைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை. இது உரிமையை துறத்தல் பற்றிய மிகவும் அற்பமான புரிதலாகும். நம்முடைய கோபம், பேராசை மற்றும் அதற்கான இணைப்பு ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்க நாம் தீர்மானம் செய்கிறோம். ஒரு வேளை அது சாக்லேட்டாக இருந்தால், அதன் நல்ல குணங்களை மிகைப்படுத்தியதன் அடிப்படையில் அதன் மீதான நம்முடைய இணைப்பை விட்டுக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, “உலகிலேயே இது தான் மிகவும் அற்புதமான சுவை நிறைந்த பொருள் மேலும் இது என்னை மகிழ்ச்சியாக்கும், இறுதியில் அதிக மகிழ்ச்சியைத் தரும்” என்று நினைக்கிறோம். சாக்லேட் அப்படி செய்யுமென்றால் நாம் எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சியடைவோம். நாம் எந்த அளவிற்கு சாக்லேட்டிற்கு அடிமையாக இருக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் உடல்நலம் குன்றி மீண்டும் சாக்லேட் பக்கமே திரும்பிப் பார்க்க விரும்ப மாட்டோம்.

நம்முடைய கோபம், இணைப்புகள் உள்ளிட்ட பலவற்றைக் கைவிடும் நம்முடைய விருப்பத்தில் உண்மையாக இருப்பது மிகவும் ஆழமானது மற்றும் மிகவும் கடினம். நாம் அதை அற்பமாக்கக்கூடாது. கேலியாக சொல்வது போல யாரோ ஒருவர் சுவறை எதிர்த்து தலையை மோதிக் கொண்டு இருக்கிறார், அவருக்குத் தெரியாது அவ்வாறு தலையை மோதுவதை நிறுத்தினால் மேலும் மோசமாகும் என்று அதனால் நிறுத்தப் பயப்படுகிறார்.  இப்படியே நாமும் பழகிவிட்டோம், ஆகவே சுவற்றிற்கு எதிராக தலையை மோதிக்கொண்டே இருக்கிறோம். நிச்சயமாக இது உச்சபட்ச உதாரணம். மிக பொதுவான ஒரு உதாரணமென்றால் யாருடனாவது கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற உறவுமுறை, அந்த உறவுமுறையை உடைக்க தயங்குகிறோம் ஏனெனில் தனிமையில் இருக்க பயப்படுகிறோம். இதன் விளைவாக இந்த ஆரோக்கியமற்ற உறவுமுறையை வைத்துக் கொண்டு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம்.

இது பொதுவானது ஒன்று இல்லையா? ஒரு வேளை அவர்கள் நம்மை அநாதையாக விட்டுவிடுவார்கள் என்பதால் குறிப்பிட்டவர்களிடம் குறிப்பிட்ட விஷயங்களைச் சொல்ல விரும்ப மாட்டோம். நாம் இங்கே விசித்திரமான அனுபவங்களைப் பற்றி பேசவில்லை, நாம் எல்லா நேரமும் அனுபவிக்கக் கூடியவற்றை பற்றி மட்டுமே பேசுகிறோம். 

கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் இருந்து விடுதலை சாத்தியமா, அதனை அடைவதற்கு நான் தகுதியானவனா?

விடுதலையின் இலக்கு மற்றும் இறுதியில் ஞானத்தை அடைவதற்கு, அது சாத்தியம் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வதோடு அதனை எவ்வாறு அடைவது என்பதை அறிய வேண்டும். இவையாவும் கடினமான தலைப்புகள், ஏனெனில் அடையக்கூடிய இலக்கு தான் அதனை நாம் அனைவரும் அடையலாம் என்பதை விவரிப்பது மிகக் கடினம், பலரும் இதனை தவிர்த்து விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு ஏனெனில் இவற்றை நாம் அடைவோம் என்று நாம் உண்மையில் நம்பிக்கை வைக்காவிட்டால், அதனை நோக்கி செயல்பட முயற்சிப்பதை பற்றி ஏன் கவலைப்படுவோம்? நாம் வெறுமனே விளையாட்டை விளையாடுகிறோம் இறுதியில் ஒரு புள்ளியை அடைவோம் அங்கே இது அபத்தமானது என்று கூறி கைவிட்டுவிடுவோம். 

புத்தரின்-இயல்பு, மனதின் இயல்பான தூய்மை உள்ளிட்டவை பற்றிய தலைப்புகளை நாம் ஆழமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் (விடுதலை மற்றும் ஞானத்திற்கு அனுமதிக்கும் காரணிகள்). நம்முடைய சிக்கலான உணர்வுகள் மற்றும் குழப்பம் நம்முடைய மனதின் அடிப்படை பகுதியா? அது அப்படி என்றால், ஒவ்வொரு கனமும் அவை அப்படியே இருக்கும் என்றே பொருள். அவை அப்படி இல்லை யென்றால், அவை தற்காலிகமானவை அவற்றை அகற்றி விட முடியுமா இதனால் அவை எப்போதும் திரும்ப வரவே வராதா? 

இவை பற்றி கேள்வி எழுப்புவதும் விவாதிப்பதும் நிச்சயம் அவசியமானது. ஏதோ ஒன்றை குருட்டு நம்பிக்கையில் ஏற்றுக்கொள்வதைப் போன்றதல்ல. சொல்லப்போனால், நாம் எவ்வளவு அதிகம் கேள்வி கேட்கிறோமோ, அவ்வளவு சிறப்பு, ஏனெனில் நாம் நம்முடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து நாம் என்ன செய்கிறோம் என்பதில் மிகவும் நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். 100% நமக்கு நம்பிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டுமா? ஆம், அது எளிமையான கேள்வியல்ல. நமக்கு முழுவதுமாக நம்பிக்கை வந்துவிட்டது என்பதை எப்படி அறிவது? அதற்கு வெகு காலம் தேவைப்படலாம். 

இது வெறும் குப்பை என்று நாம் நினைத்தால், நிச்சயமாக நம்மால் அதனுடன் செயல்பட முடியாது. ஆனால் இது சாத்தியப்படலாம் என்று கருதி அந்தத் திசையில் நாம் சென்றால், நம்மால் தொடர்ந்து செயல்பட முடியும். எப்படி இருந்தாலும், குருட்டு நம்பிக்கை இல்லாமல் இதன் அடிப்படையில் ஒரு காரணம் இருக்கிறது, அல்லது “என்னுடைய ஆசிரியர் இப்படி கூறி இருக்கிறார்” என்று சிந்தித்து அது உண்மை என நினைக்கிறோம். “நான் கூறினேன் என்பதற்காக என் மீதான நம்பிக்கையால் எதையும் நம்ப வேண்டாம், தங்கத்தை வாங்கும் போது எப்படி தரம் பார்ப்பீர்களோ” அப்படியே பரிசோதித்துப் பாருங்கள் என்று புத்தரும் கூட கூறி இருக்கிறார். இது உண்மை தானா என்று நாம் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும்.  

மறுபிறப்பை உறுதிபடுத்துதல்: செர்காங் ரின்போச் விஷயத்தில் இரண்டு ஜென்மங்களில் நிகழ்ந்தது

மறுபிறப்பு மீது நம்பிக்கை வருவது உண்மையில் மிக நீண்ட செயல்முறையாகும். நான் என்னுடைய சொந்த அனுபவத்தைப் பகிர்கிறேன், ஏனெனில் நான் பல ஆண்டுகளாக இதனுடன் செயலாற்றி இருக்கிறேன். நான் பௌத்தத்தை 45 ஆண்டுகளுக்கும் மேலாக படித்து வருகிறேன், மேலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் காரணத்தின் அடிப்படையில் மறுபிறப்பு ஏன் அர்த்தத்தை கொடுக்கிறது என்ற அறிவாற்றல் நிலையை அடைந்திருக்கிறேன். ஆனால் உண்மையில் எது என்னை தூக்கி எறிந்து உணர்வு ரீதியில் நம்ப வைத்தது என்றால் என்னுடைய ஆசிரியரின் இரண்டு ஜென்மங்களுடனான பந்தம். அவருடைய பெயர் செர்காங் ரின்போச், புனிதர் தலாய் லாமாவின் ஆசிரியர்களில் ஒருவர் இவர்; அவருடைய நெருங்கிய சீடரான நான் இருந்தது என்னுடைய மிக அதிர்ஷ்டம். நான் அவருடன் 9 ஆண்டுகள் பயணித்தேன், இந்த காலகட்டத்தில் அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் தனிச் செயலாளராகவும் செயலாற்றி இருக்கிறேன். அவருடன் நெருங்கிப் பழகியதோடு, அவருடைய அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயண ஏற்பாடுகளைச் செய்தும் அவருடன் சேர்ந்து பயணித்தும் இருக்கிறேன். அவர் 1983ல் இயற்கை எய்தி, மீண்டும் மறுபிறப்பு எடுத்து திபெத்திய துல்கு முறையில் மீண்டும் காணப்பட்டார்.

அவருக்கு இப்போது 25 வயது, கடந்த ஜென்மத்தைப் போலவே இப்போதும் நான் அவருடன் மிக நெருங்கிய உறவுமுறையைக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக வயது வித்தியாசத்தில் பார்த்தால் தலைகீழ் ஒற்றுமை இருப்பதை மறுக்க முடியாது!

புதிய செர்காங் ரின்போச்சை நான் முதன் முதலில் பார்க்கும் போது அவருக்கு வயது நான்கு, நான் முதலில் அவருடைய அறைக்கு நடந்து சென்ற போது, அவரை பராமரித்துக்கொண்டவர்கள் என்னிடம் “இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “இது என்ன முட்டாள்தனமான கேள்வி இவர் யார் என்று எனக்குத் தெரியும்,” என்பதை பதிலாகத் தந்தேன். மிக தொடக்கத்தில் இருந்தே, அவர் 4 வயதாக இருக்கும் போதிலிருந்தே, அவர் எனக்கு மிகவும் நெருக்கம் மேலும் அவரும் மற்றவர்களை விட என் மீது அளவு கடந்த அன்போடு இருந்தார். அவர் வளர்ந்த பிறகும் அந்த அன்போடு இருந்தார்.

பல சமயங்களில் நாங்கள் இருவரும் அவருடைய கடந்த ஜென்ம வீடியோக்களை பார்ப்போம், அவர் என்னிடம்  “ஆமாம், எனக்கு நினைவிருக்கிறது” என்பார் – தேவையற்ற குப்பைகளைப் பற்றி என்னிடம் பேசமாட்டார். அனைத்து தர்க்க மற்றும் காரணங்களுக்கும் மேலாக, இந்த அனுபவமே உண்மையில் “நல்லது, இருக்கலாம், அநேகமாக…” என்ற உணர்வைத் தாண்டிச் செல்ல உதவியது. அது எனக்கு உறுதியைத் தந்தது.  

இந்த விஷயங்கள் எளிதல்ல. விடுதலை அடைவதென்பது உண்மையில் சாத்தியமா? மனதின் இயல்பு உண்மையில் பரிசுத்தமானதா? பகுத்தறிவுடன் நாம் புரிந்து கொண்டாலும் கூட, இதனை உணர்வுப் பூர்வமாக புரிந்து கொள்ள ஆழமாகச் செல்ல வேண்டும். ஆனால், மெல்ல, அதனுடன் செயலாற்றுவோம். 

கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பு காரணமாக யதார்த்தம் பற்றி குழப்பமடைதல்

லாம்-ரிம்மின் இடைப்பட்ட நிலை உந்துதலுடன், மறுபிறப்பு இயக்குமுறை பற்றிய மிக விரிவான விளக்கத்தை சார்ந்து எழுதல் எனும் 12 தொடர்புகளுடன் கொண்டிருக்கிறோம். கர்மாவின் முழு பிரச்னை, கர்மாவின் பின்விளைவு உள்ளிட்டவற்றை கையாளும் மிக கடினமான இயக்கமுறையின் பெயர் மட்டுமே இது. பல விதமான சிக்கலான உணர்வுகளான கோபம், பேராசை, அவை எப்படி எழுகின்றன, அதன் பின் மறைந்திருப்பது என்ன உள்ளிட்டவற்றை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். எளிதாகச் சொல்ல வேண்டுமானால், இதற்குப் பின்னால் இருக்கும் காரணியை நான் “குழப்பம்” என்று ஒப்பிடுவேன், ஏனெனில் நம்முடைய நடத்தை மற்றவர்களிடத்திலும் நம்மிடத்திலும் எந்த வகையிலான விளைவை ஏற்படுத்துகிறது என்று குழம்புகிறோம். மேலும் ஆழமாகப் பார்த்தால், நாம் எப்படி இருக்கிறோம், மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள், அனைத்தும் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய குழப்பத்தில் நாம் இருக்கிறோம்.

அடிப்படையில், விஷயங்கள் சுயாதீனமாக, முழுவதும் அதன் சொந்த சக்தியில் இருக்கின்றன, மேலும் எல்லாவற்றில் இருந்தும் பிரிந்து இருப்பதாகக் கருதுகிறோம், அது ஒரு பிளாஸ்டிக் சுற்றப்பட்டதைப் போல நினைக்கிறோம். எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றாலும் பொருட்களுக்கு குச்சியுடன் தொடர்பு இருந்தாலும் பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்டிருப்பதைப் போன்று கருதுகிறோம். சாத்தியமில்லாத வழியில் இருப்பது குறித்து நாம் அறிந்து கொள்ள பல நிலைகளில் நுட்ப நுணுக்கம் இருக்கின்றன. சாத்தியப்படுவது என்ன என்பதையும், சரியாக நம்முடைய குழப்பம் எல்லோரிடத்திலும் எல்லாவற்றிலும் எதனை முன்னெடுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

வெற்றிடம் (வெறுமை): தற்போதுள்ள சாத்தியமற்ற வழிகளின் மொத்த இல்லாமை

நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் “வெற்றிடம்” அல்லது “வெறுமை.” வெற்றிடத்தின் அர்த்தம் முழு இல்லாமை; ஏதோ ஒன்று அங்கே எப்போதும் இருக்காது.  அங்கே இல்லாதது இந்த முன்னெடுப்புகளின் உண்மையான குறிப்பு என்பது சாத்தியமற்றது. அவை உண்மையான எதற்கும் பொருந்தாதவை.

நாம் சான்டா கிளாஸை இதற்கான உதாரணமாகப் பயன்படுத்தலாம். நீண்ட வெள்ளை தாடியுடன் சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் யாரோ ஒருவரை நாம் பார்த்தால், அவர் “சான்டா கிளாஸ்” போல இருக்கிறார் என்று சொல்வோம். அவர் தான் சான்டா கிளாஸ், என்று நாம் நினைக்கிறோம், ஆனால் ஏன்? ஏனெனில் அவர் சான்டா கிளாஸ் போல இருக்கிறார். இருப்பினும், சான்டா கிளாஸின் உருவம் நிஜமான எதற்கும் ஒத்துப் போகவில்லை, ஏனெனில் சான்டா கிளாஸ் என்ற ஒருவர் இல்லவே இல்லை. உண்மையான சான்டா கிளாஸ் இல்லாதது இந்த நபரின் தோற்றத்திற்கு ஒப்பானதாகிறது, வெற்றிடமும் இதைப் பற்றியே பேசுகிறது. அங்கே ஒரு மனிதன் இருக்கிறார் என்பதை எந்த வகையிலும் மறுக்கவில்லை மேலும் அவர் பார்ப்பதற்கு சான்டா கிளாஸ் போல இருக்கிறார்.  அந்த நபர் நமக்குத் தோற்றமளிக்கும் விதம் ஏமாற்றமளிக்கும் என்பதையே நாம் தெளிவுபடுத்துகிறோம். அவர் பார்ப்பதற்கு சான்டா கிளாஸ் போல இருக்கிறார், ஆனால் உண்மையில் அவர் சான்டா கிளாஸ் அல்ல, ஏனெனில் அப்படி ஒருவர் இல்லவே இல்லை.

நம்முடைய மனமானது எல்லா நேரத்திலும் இந்த வழியிலேயே செயல்படுகிறது. இவர் மிகவும் அழகானவர், அல்லது அவர் மிகவும் மோசமானவர், அல்லது உலகிற்கு கடவுள் தந்த பரிசு நாம், என்று தேவையற்ற அனைத்து முட்டாள் தனங்களையும் அல்லது அதற்கும் மாறாக நாம் ஒன்றிற்கும் உதவாதவர் என்று நாம் முன்னெடுக்கிறோம். நாமோ அல்லது அவையோ எல்லாவற்றில் இருந்தும் முழுவதும் சுயாதீனமாக இருந்தது போலவும், அது உண்மை மற்றும் மாறாதது என்றும் நாம் திட்டமிடுகிறோம். 

யதார்த்தத்தில், அப்படி யாருமே இல்லை. சொல்லப்போனால், அது சாத்தியமில்லை, ஏனெனில் அனைத்துமே மற்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. புனிதர் தலாய் லாமா எப்போதுமே நம்முடைய விரல்களை உதாரணமாகச் சொல்வார். நம்முடைய நான்காவது விரல் பெரியதா அல்லது சிறியதா? ஐந்தாவது விரலோடு ஒப்பிடும் போது பெரியது, ஆனால் நடுவிரலோடு ஒப்பிடும் சிறியது. ஆக அதன் பக்கத்தில் இருந்து, அதன் சொந்த சக்தியில், அது பெரியதா அல்லது சிறியதா? இதற்கு விடையே இல்லை ஏனெனில் அது பெரியதா அல்லது சிறியதா என்பது மற்ற விஷயங்களோடு தொடர்புடையது.  இது முற்றிலும் இதர விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது மேலும் பெரியது எது சிறியது எது என்ற நம்முடைய கருத்தையும் சார்ந்தது. நீங்கள் ஒரு திட்டத்தைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்த இடைப்பட்ட நிலையில், வெற்றிடத்தைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கு நாம் இந்த அடிப்படை தவறான புரிதலில் இருந்து விடுபட நாம் செயலாற்றுவோம். இந்த அதிக குழப்பமே கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்புக்கான காரணம், ஏனெனில் 12 சார்ந்து எழுதலின் இணைப்புகளுக்கான கடினமான இயக்கமுறையில் விளக்கப்பட்டது போல அது கர்மா, கர்மா பின்விளைவுகளை தூண்டிவிடுகின்றது.

ஒருமுகப்படுத்துதல் மற்றும் நன்னெறி சுய – ஒழுக்கத்திற்கான தேவை

வெற்றிடம் பற்றிய புரிதலைப் பெற, நமக்கு ஒருமுகப்படுத்துதல் தேவை. ஒருமுகப்படுத்துதலை வளர்க்க, நமக்கு நன்னெறி ஒழுக்கம் தேவை. இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணமானது மரத்தை வெட்டுவதைப் போன்றது. புரிதல் என்பது கூர்மையான கோடரி போல, ஆனால் உண்மையில் மரத்தை வெட்ட வேண்டுமென்றால் நாம் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் வெட்ட வேண்டும். தொடர்ந்து ஒரே இடத்தில் வெட்டுவது என்பது ஒருமுகப்படுத்துவதைப் போன்றது. உண்மையில் கோடரியை எடுத்து, வீசி, ஒரே இடத்தில் வெட்டுவதற்கு நமக்கு உறுதி தேவை. இந்த உறுதியானது நன்னெறி சுய – ஒழுக்கத்தில் இருந்து வருகிறது, அது நாம் அழிவுகரமாக செயல்படுவதில் இருந்து விலக்குகிறது.   

இடைநிலை நம்பிக்கை எடுத்துக்கொள்ளக்கூடிய பல்வேறு சபதங்களின் தொகுப்புகளை முன்வைக்கிறது. துறவி அல்லது கன்னியாஸ்திரிகளின் முழு அல்லது புதிய சபதங்கள், அல்லது ஆணோ பெண்ணோ, குடும்பப்பெண் சபதங்கள் அனைத்தையும் இது உள்ளடக்கியது. மடத்தில் கொண்டாட்ட வாழ்க்கையை வழிநடத்தாதவர் குடும்பப்பெண் என்று குறிப்பிடப்படுகிறார், ஆனால் இதற்கு அர்த்தம் உங்களுக்கு கட்டாயம் குடும்பம் இருக்க வேண்டும் என்பதல்ல; இது ஒரு நபரைக் கூட குறிக்கும். பண்டைய இந்தியாவில், இது சற்று அரிதே, ஏனெனில் பெரும்பாலும் குடும்பப் பெண்களுக்கு குடும்பம் இருக்கும். இந்த துறவற மற்றும் குடும்பப் பெண் சபதங்களின் தொகுப்பே “தனிமனித சுதந்திரத்திற்கான சபதங்கள்” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இவற்றின் நோக்கமே நம்முடைய சொந்த விடுதலை தான். இந்த சபதங்கள் சிக்கலான உணர்வுகளால் உந்தப்பட்டு நம்முடைய தியானப் பயிற்சி மற்றும் நேர்மறை விஷயங்கள் போன்ற பல விதமான நடத்தைகளை தவிர்ப்பதற்கு நமக்கு உதவுகிறது. 

சபதம் எடுத்தல் என்பது மிகவும் முக்கியம். ஏன்? ஏனெனில் நாம் சபதம் எடுத்தால் அதை மீண்டும் செய்ய மாட்டோம், அது நம்மை உறுதியின்மையில் இருந்து விடுவிக்கிறது. உதாரணமாக, நாம் குடிப்பழக்கத்தையோ அல்லது புகைப்பழக்கத்தையோ கைவிட முயற்சிக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் மது அல்லது புகைக்கும் பழக்கம் கொண்ட நபர்களுடனே இருக்கிறோம், நமக்கு இது தேவையா அல்லது இதற்கு இப்போது கூடாது என்று சொல்லப்போகிறோமா என்பது பற்றிய உறுதியின்மை நம்மிடமே இருக்கிறது. உண்மையில் நாம் கைவிடுவதற்கு முயற்சித்தால், ஒவ்வொரு முறையும் இந்தச் சூழல் ஏற்படும் போது நாம் முடிவு எடுக்க வேண்டும், இது அழுத்தத்திற்குள்ளானதாக இல்லையென்றால், சவாலானதாக இருக்கலாம்.  

நாம் ஒரு சபதம் எடுத்தால், அதுவே இறுதி. “நான் குடிக்கப் போவதில்லை, நான் புகைக்கப்போவதில்லை,” அல்லது இது போன்ற ஏதோ ஒன்றை நாம் ஒரு முடிவு எடுத்துவிட்டோம். பின்னர் நம்மைச் சுற்றி எல்லோரும் மது அருந்தினாலும் அது ஒரு விஷயமாகவே இருக்காது, ஏனெனில் நம்முடைய மனதை நாம் தயார்படுத்தி விட்டோம். கட்டுப்பாடுகள் அல்லது தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, இந்த சபதங்களை எடுப்பது உண்மையில் நமக்கு ஏராளமான உறுதியைத் தருவதோடு உறுதியின்மையில் இருந்து நம்மை விடுவிக்கும், குறிப்பாக இறுதி விடுதைலையை நாம் அடைவதற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இருந்து விடுவிக்கும்.   

பௌத்தத்தில், எந்தவொரு சபதத்தையும் எடுக்க வேண்டிய கட்டாயமில்லை. நாம் அவசியம் இதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்த அல்லது அந்த சபதத்தை எடுக்க வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது, மேலும் நீங்கள் துறவியாக அல்லது கன்னியாஸ்திரியாக வேண்டும் மடத்தில் வாழ வேண்டும் என்றும் யாரும் கூறவில்லை. இருப்பினும், சம்சாரியத்தில் இருந்து விடுதலை பெறுவதில் உண்மையில் தீவிரமாக இருந்தால், கோபம், இணைப்பு, பேராசை உள்ளிட்டவற்றை உங்களிடம் இருந்து எப்போதைக்குமாக வெளியேற்ற நினைத்தால் குறிப்பிட்ட சபதங்களை எடுப்பது நிச்சயமாக எளிதாக்கும். நாம் இப்போது வேண்டுமானால் இதற்குத் தயாராக இல்லாமல் இருக்கலாம், அது பரவாயில்லை. நம்முடைய சொந்த சூழ்நிலைகளோடு நேர்மையாக நம்மை நாமே மதிப்பிட வேண்டும். 

இதுவே இடைநிலை நம்பிக்கை. ஒருமுகப்படுத்துதலும் வெற்றிடமும் இதன் ஒரு அங்கமாக இருந்தாலும், அவை இன்னும் முழுவதுமாக விவாதிக்கவில்லை. இந்த தலைப்புகள் மேம்பட்ட நம்பிக்கை போதனைகளில் முழுவதுமாக பார்க்கப்படும். 

உந்துதலின் மேம்பட்ட நிலை: இதர அனைத்தையும் பற்றி சிந்தித்தல்

மேம்பட்ட நம்பிக்கையுடன், இந்த அண்டத்தில் நாம் மட்டுமே இல்லை என்று சிந்திப்போம். இங்கே மற்றவர்களும் இருக்கிறார்கள், நம்மைப்போலவே மற்றவர்களுக்கும் சரியாக இதே போன்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்களும் கூட துன்பப்படுகிறார்கள், கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பையும் கடந்து செல்கிறார்கள். நமக்கு நிலையான மகிழ்ச்சி மற்றும் துன்பத்தை தவிர்க்க வேண்டும், மற்றவர்களுக்கு அப்படியே தான். இந்த வழியில் நாம் அனைவரும் சமமே. இங்கே நான், குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு உயிர்களுமே. நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள் மற்றும் ஒருவரை ஒருவர் சார்ந்தவர்கள். நாம் சுயாதீனமாக இருக்க முடியாது. உண்மையில், நம்மால் அப்படி உயிர் வாழவே முடியாது.   

நம்முடைய இதயத்தில் அனைவரையும் சமமாக சேர்ப்பதற்கு விரிவாக்கம் செய்யும் சில சவுகரியமான வழிமுறைகள் உண்மையில் இருக்கின்றன. இதில் சிறிதளவை நாம் ஏற்கனவே கலந்து ஆலோசித்து இருக்கிறோம், அனைத்து இதர உயிர்களையும் கடந்த ஜென்மத்தில் நம்முடைய தாயாக இருந்தவர்கள் மேலும் அவர்கள் நம்மிடம் நம்பமுடியாத அன்புடனும் இருக்கிறார்கள் என்று உணர்வதைப் பற்றி பேசி இருக்கிறோம். தர்மா-லைட் பதிப்பும் அங்கே இருக்கிறது அதில் மற்றவர்கள் எப்படி தாயன்புடன் நம்மை பராமரிக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். எனினும், இதற்கு கட்டுப்பாடுகளுண்டு ஏனெனில் இதனை நம்முடைய நண்பனான கொசுவிற்கு பொருத்திப் பார்ப்பது கடினம். 

அன்பு

நம்முடைய இதயத்தை விரிவாக்கம் செய்யத் தொடங்கும் போது, நாம் அழைக்கும் “அன்பு” என்பதில் மேம்படுத்த தொடங்குவோம். இந்த செயல்முறையானது உண்மையில் சமநிலை என்பதில் இருந்து ஆரம்பமாகிறது, அங்கே நாம் யாராலும் ஈர்க்கப்பட மாட்டோம், யாராலும் விரட்டப்பட மாட்டோம், எஞ்சியவற்றில் இருந்து மாறுபடுவோம். எல்லோரிடத்திலும் வெளிப்படையாக இருக்க நாம் செயலாற்ற வேண்டும் இதன் அடிப்படையில் நாம் ஒவ்வொருவருடனும் இணைந்திருக்கிறோம் என்பதை உணரலாம். கடந்த ஜென்மத்தில் ஒவ்வொருவரும் நம்முடைய தாயாக நம்மிடம் மிகவும் பரிவுடன் இருந்தவர்கள் என்ற காரணத்தின் மூலமோ, அல்லது நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் அனைத்துமே மற்றவர்களின் உழைப்பில் இருந்து வருகிறது என்பதை உணர்வதன் மூலமோ மேம்படுத்தலாம். உங்கள் காலுக்கு கீழே இருக்கும் தரையைப் பாருங்கள், நீங்கள் இருக்கும் கட்டிடம், நீங்கள் பருகும் நீர், இவை அனைத்தும் எங்கிருந்து வந்திருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? நமக்கான உணவும் தண்ணீரும் இங்கே எப்படி கிடைக்கிறது? இவை அனைத்துமே மற்றவர்களின் உழைப்பு, நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரின் முயற்சிகள். நாம் அனைவருமே சமம் ஆகவே நம்முடைய சொந்த பலனுக்காக மட்டுமே செயலாற்றுவது தர்க்கமில்லாதது, ஏனெனில் உண்மையில் நாம் பயன்பெறவேண்டுமெனில், நாம் அனைவரையும் பலனடையச் செய்ய வேண்டும்.

இந்த அடிப்படையில் நம்மால் அன்பை எல்லோருக்கும் சமமானதாக மேம்படுத்த முடியும். இந்த அன்பானது ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சிக்கான காரணத்தை கொண்டிருக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. காதல் அன்புடன் எதையும் செய்ய முடியாது, ஏனெனில் அது பெரும்பாலும் மிகப்பெரிய பிணைப்பை கையாள்வதோடு கலந்தது. “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று நாம் சொன்னால், அதற்கு பொதுவான அர்த்தம், “நீ எனக்குத் தேவை. என்னை விட்டு எப்போதும் சென்று விடாதே. நீயின்றி என்னால் வாழ முடியாது” என்பதாகும். நாம் விரும்பும் கவனம் மற்ற நபரிடம் இருந்து கிடைக்கவில்லையெனில், அல்லது அவர் மோசமான எதையாவது கூறி விட்டால், ஈர்ப்பு சீக்கிரமே மாறி “நான் உன்னை இனி ஒரு போதும் காதலிக்க மாட்டேன்” என்றாகிவிடுகிறது. 

பௌத்தத்தில், நாம் பேசும் அன்பின் வகையானது மற்றவர்கள் எப்படி செயலாற்றுகிறார்கள் அல்லது அவர்கள் நம்மை நோக்கி என்ன செய்கிறார்கள் என்பதை எல்லாம் பொருட்படுத்தாது. இது வெறும் விருப்பமே: உங்களை மகிழ்விக்கலாம். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களைப் போன்றதே: நாம் நம்முடைய விரல்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவோம், ஒன்றிரண்டு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. பதிலுக்கு விரல்கள் நமக்கு என்ன செய்தது என்பது விஷயமல்ல.  

இரக்கம்

அன்புடன், நாம் “இரக்கத்தை” மேம்படுத்தப் போகிறோம். மற்றவர்களும் துன்பம் மற்றும் துன்பத்தின் விளைவுகளில் இருந்து விடுபட விரும்புதல். இது மேலோட்ட அளவில் இருக்கும் துன்பமான வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக ஆழ்ந்த வகையான துன்பங்களான கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பையும் குறிக்கிறது. இரக்கத்துடன் இருப்பதன் அர்த்தம் நம்மை விட எளியவர்களைப் பார்த்து அவர்களுக்காக வருத்தப்பட்டு, “அட எவ்வளவு மோசமான விஷயம்” என்று பரிதாபப்படுவதல்ல. பௌத்த இரக்கம் மரியாதை மேலும் மற்றவர்களும் துன்பம் மற்றும் அதன் விளைவுகளில் இருந்து விடுபடுவது சாத்தியமே என்ற புரிதல் அடிப்படையிலானது. இது வெறுமனே நல்ல விருப்பமோ அல்லது அழகான வார்த்தைகளோ அல்ல. இரக்கத்துடன், துன்பத்தில் இருந்து விடுபடும் உண்மையான நிலையை கொண்டு வருவதற்காக நாம் பொறுப்பை எடுத்துக்கொள்ளத் தொடங்க வேண்டும். இங்கே ஒரு பெரிய தைரியத்தை கையாள்கிறோம். 

“மகத்தான இரக்கம்” என்று அறியப்படுவதை நாம் மேம்படுத்திவிட்டால், நம்முடைய இரக்கத்தின் நோக்கம் அனைத்து உயிர்களிடத்திலும் சமமானதாகவும் ஒவ்வொன்றின் மீதும் தாய் தன்னுடைய குழந்தையின் மீது அன்பு செலுத்துவதைப் போல அக்கறை காட்டுவதையும் குறிக்க வேண்டும். நம்முடைய மகத்தான இரக்க உணர்வானது ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கும் விருப்பத்தை கொண்டிருப்பதோடு மேலும் அதிக துன்பத்தில் சிக்கிகொள்ளாமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். 

விதிவிலக்கான தீர்வு

அடுத்ததாக நாம் கொண்டிருக்க வேண்டிய மேம்படுத்த மன நிலையானது “விதிவிலக்கான தீர்வு.” மேலோட்டமாக இல்லாமல் ஆழமான வழியில் மற்றவர்களுக்கு உதவுகதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ளிப் போகிறேன் என்பது ஒரு உறுதியான முடிவு. புத்தரின் முழுமையான ஞானமடைந்த நிலையை மற்றவர்கள் அடைய உதவுவதற்கான பொறுப்பேற்க நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் இதைச் செய்ய விரும்பவில்லையெனில் நம்முடைய மனதை: இதனை நிச்சயமாக செய்யப் போகிறோம் என்று தயார்படுத்த வேண்டும்.  

போதிசிட்டா: மற்றவர்களும் பலன் அடைவதற்காக ஞானமடையும் இலக்கு

இந்தத் தொடரில் இறுதி நிலையானது நாம் அழைக்கும் “போதிசிட்டா”வை மேம்படுத்துதல், அன்பு, இரக்கம் மற்றும் விதிவிலக்கான தீர்வு எது என்பதற்கான அடிப்படை. நாமே புத்தரின் நிலையை அடைவது மட்டுமே மற்ற ஒவ்வொருவருக்கும் நம்மால் சிறப்பாக உதவ முடியும் என்பதை உணர்வதற்கான ஒரே வழி. ஆனால், இந்த ஆசை நிதர்சனமாவதற்கு, புத்தா என்றால் என்ன, எந்தெந்த வழிகளில் புத்தரால் மற்றவர்களுக்கு உதவ முடியும் எவற்றில் உதவ முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

ஒரே ஒரு சொடக்கில் அனைவரின் எல்லா துக்கங்களையும் அகற்றிவிடக் கூடிய சர்வ வல்லமை படைத்த கடவுள் அல்ல புத்தர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புத்தரால் குறிப்பிட்ட வழியை மற்றவர்களுக்கு காண்பித்து அவர்களுக்கு உத்வேகத்தைத் தர முடியும், ஆனால் அனைத்து பணிகளையும் நமக்காக நாம் செய்ய வேண்டும். நமக்காக வேறு யாரும் நிதர்சனத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்; நமக்காக நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஆகவே, அன்பு மற்றும் இரக்கத்தால் இயக்கப்படும் போது, போதிசிட்டா நம்முடைய சொந்த எதிர்கால ஞானத்தில் கவனம் செலுத்துகிறது. ஷக்யமுனி புத்தரோ அல்லது பொதுவான ஞானமடைதலோ அல்ல இது நம்முடைய சொந்த ஞானமடைதல். நம்முடைய ஞானமடைதல் இன்னும் நிகழவில்லை, ஆனால் அது நடக்கும் புத்த – இயல்பு காரணிகளின் நம்முடைய மனதின் தொடர்ச்சி அடிப்படையில் அது நடக்கும். இந்தக் காரணிகள் அதன் அடிப்படை நிலையற்ற இயல்பு மற்றும் அதன் அனைத்துத் திறன்கள் மட்டும் சாத்தியங்களையும் உள்ளடக்கியது. இதுவரையிலும் நிகழ்ந்திராத ஞானத்தில், அதனை அடைவோம் என்ற நோக்கத்துடன் அதன் மீது கவனம் செலுத்துவோம், இதனால் நம்மால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு பலன் தர முடியும். ஞானமடைதலுக்கான வழியில் அதனோடு சேர்த்து, முடிந்த வரையில் மற்றவர்கள் பலன் பெறுவதற்கான நோக்கமும் நமக்கு இருக்கும்.   

இதுவே போதிசிட்டா. இது அற்புதமான பரந்த நிலை மற்றும் மனம், அன்பு மற்றும் இரக்கத்திற்காக தியானம் செய்யும்போது நாம் இவற்றில் தவறு செய்யக் கூடாது. அது அப்படி இல்லை. அன்பு மற்றும் இரக்கம் ஒரு அடிப்படை, ஆனால் போதிசிட்டா மேலும் மேலும் அதிகமானது. 

ஆறு தொலைதூர- அடைதல் அணுகுமுறைகள் (ஆறு பரிபூரணங்கள்)

நாம் ஏற்கனவே பார்த்தது போல, மேம்படுத்தப்பட்ட நம்பிக்கையின் நோக்கமே புத்தரின் நிலையை அடைதல், இதனால் நம்மால் முடிந்த வரையில் மிக அதிகமாக மற்றவர்களுக்க உதவ முடியும். நாம் அன்பு, இரக்கம் மற்றும் விதிவிலக்கான தீர்வால் இயக்கப்படுகிறோம். ஆனால் உண்மையில் நாம் இந்த ஞானமடைதலை எவ்வாறு அடைகிறோம்? இது நமக்கு ஆறு பரிபூணரங்கள் என்றால் என்ன என்ற காட்சிப்படுத்தலை வழங்குகிறது, சமஸ்கிருதத்தில் இது “ஆறு பரமிதாஸ்”என்று சொல்லப்படுகிறது, அல்லது நான் எப்போதும் அவர்களுக்கு “ஆறு தொலைதூர – அடைதல் அணுகுமுறைகள்” என்று மொழிபெயர்க்கிறேன். நான் இந்த அர்த்தத்தையே முன்மொழிவேன், ஏனெனில் புத்தரின் நிலையை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் அதற்கு அவர்கள் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டும். சிலருக்கும் பரிபூரணங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதனால் அவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படி இல்லை. ஆதலால் போதுமானதாக இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்தச் சொல் அதிகரிக்க வேண்டிய உணர்வு அல்ல.

பெருந்தன்மை

நாம் முதலில் மேம்படுத்த வேண்டிய அணுகுமுறை பெருந்தன்மை, அங்கே நாம் மற்றவர்களுக்கு பொருட்களை மட்டுமல்ல, ஆலோசனை, போதனைகள் மற்றும் பயத்தில் இருந்து விடுதலை உள்ளிட்டவற்றையும் கொடுக்கலாம். கொடுப்பதற்கு நம்மிடம் எந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட, விருப்பம் கொள்ளும் அணுகுமுறையை விதைத்து என்ன தேவையோ அதனை கொடுக்கலாம். நாம் கொடுக்க முடியும் மற்றொரு பரிசு மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது. ஏனெனில் நாம் சமநிலையை உருவாக்கி இருக்கிறோம், இதன் அர்த்தம் மற்றவர்கள் நம்மை பார்த்து பயப்பட நம்மிடம் ஒன்றும் இல்லை. நாம் மற்றவர்களிடம் கோபப்படப் போவதில்லை, அவர்களைப் பற்றிக்கொள்ளப் போவதில்லை, அல்லது அவர்களிடம் இருந்து எதாவது வாங்கப் போவதில்லை. நமக்கு பிடிக்காத எதையாவது செய்தால் நாம் அவர்களை புறக்கணிக்கப்போவதோ அல்லது நிராகரிக்கப் போவதோ இல்லை.  கூடுதலாக, நாம் அவர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உதவ முயற்சிக்கப் போகிறோம். உண்மையில் நம்மால் யாருக்கேனும் கொடுக்க முடிகிற நம்பமுடியாத பரிசு அது, நாம் பெருந்தன்மையுடன் வளர்த்துக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பரிசாகும். 

நன்னெறி சுய - ஒழுக்கம்

நாம் மேம்படுத்தக்கூடிய அடுத்த தொலைதூர – அடைதல் அணுகுமுறையானது நன்னெறி சுய- ஒழுக்கம், நாம் அழிவுகரமாக செயல்படாமல் மாறாக இயன்ற வரை ஆக்கப்பூர்வமான வகையில் செயலாற்றுதலாகும். கற்க, தியானிக்க மற்றவர்களுக்கு உண்மையில் உதவ நாம் ஒழுக்கத்தைக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு உதவுவதாக நாம் அதிக சோர்வடைந்துவிடக்கூடாது, மேலும் நமக்கு உதவ வேண்டும் என்று விருப்பம் இல்லையெனில் அதற்காக நாம் மற்றவர்களை புறக்கணிக்கக் கூடாது.  

பொறுமை

கோபப்படாமல் அல்லது வருத்தப்படாமல், துன்பம் மற்றும் கஷ்டங்களைத் தாங்குவதற்கான ஒரே திறன் பொறுமை. நமக்குள்ளாகவே செயலாற்றி பிறருக்கு உதவ முயற்சிப்பது அத்தனை எளிதல்ல, மேலும் பெரும்பாலானவர்களுக்கு உதவுவதே எளிதல்ல. அவர்கள் நமக்கு மோசமான நேரத்தை கொடுப்பார்கள் நமக்கு பொறுமை தேவை அப்போது தான் நாம் கோபமடைய மாட்டோம். இதர தொலைதூர – அடைதல் அணுகுமுறைகளைப் போல பொறுமையை மேம்படுத்த பல வழிகள் இருக்கின்றன.

விடாமுயற்சி

அடுத்த அணுகுமுறையானது விடாமுயற்சி, எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த விதத்தில், இந்த தொலைதூர – அடைதல் அணுகுமுறை என்பது ஒரு கதாநாயகனின் தைரியம் போன்றது. விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு மட்டுமல், மாறாக மற்றவர்களுக்கு உதவுவதால் மகிழ்ச்சியையும் எடுத்துக்கொள்வோம், உண்மையில் இப்படியான ஒரு வாய்ப்பைக் கொண்டிருப்பது மகிழ்வானது. இதனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பல்வேறு வழிகாட்டுதல்கள் உள்ளன, மேலும் எப்போது ஓய்வு மட்டும் இடைவெளி எடுக்க வேண்டும் என்று அறிவதையும் அவை உள்ளடக்கியவை. நம்மை நாமே கடினமாக உட்புகுத்தினால், நம்மால் யாருக்கும் உதவ முடியாது. இதனுடன், நமக்கு நாமே செயலாற்றுதல் மற்றும் பிறருக்கு உதவுவதில் உள்ள அனைத்து பல வகையான சோம்பல்களையும் வென்று வருவதற்கு பல வழிகள் இருக்கின்றன. 

மன உறுதி

இதனைத் தொடர்ந்து மன உறுதியை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. இது ஒருநிலைப்படுத்துதலை விட அதிகமாக, உணர்ச்சி ஸ்திரத்தன்மையையும் உள்ளடக்கியது. நாம் கொண்டிருக்க விரும்பும் மனநிலை என்னவென்றால் அலைபாயும் மனம், நம்மை ஈர்க்கும் பொருட்களை நோக்கி மனம் பறத்தல் உள்ளிட்டவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வராத மேலும் அது மந்தத்தையோ அல்லது தூக்கத்தையா ஏற்படுத்தாத நிலை.  இது போன்ற மனமானது நமக்கு என்ன தேவையோ அதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கும். உதாரணமாக, நம்மிடம் யாராவது பேசிக்கொண்டு இருந்தால், நம்முடைய மனம் மற்ற விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டு அலைபாயாது. நாமும் கூட உறுதித்தன்மைக்கு தொந்தரவு தரும் வருத்தமான உணர்வுகளை நாம் கொண்டிருக்கவில்லை என்ற உறுதியான உணர்வைக் கொண்டிருப்போம்; நாம் மனநிலை மாறுபாடுகளைப் பெற மாட்டோம். அதாவது நாம் அதிக நுண்உணர்வு அல்லது உணர்வற்ற நிலையில் இல்லாமல் சமமகவும், உறுதியாகவும் இருப்போம்.

விழிப்புணர்வை பாகுபடுத்துதல்

பெரும்பாலும் இது “ஞானஒளி” என்று மொழிபெயர்க்கப்படுகிறது சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ”பிரஜ்னாபரமிதா”. இந்த இறுதியான அணுகுமுறை விஷயங்கள் எப்படி இருக்கின்றன மற்றும் சாத்தியமில்லாதது என்ன என்பதற்கு இடையிலான திறனை வேறுபடுத்துவதைக் குறிக்கிறது. இது மிக குறிப்பான விழிப்புணர்வு, எனவே “ஞானஒளி” என்ற வார்த்தை சிறிது தெளிவற்றது.  சாத்தியமில்லாதது எது என்ற விழிப்புணர்வை அறிதல் பற்றி நாம் குறிப்பாக பேசுகிறோம், இது வெற்றிடத்தை (வெறுமை) புரிந்து கொள்ளுதலையும் உள்ளடக்கியது. குறிப்பிட்ட விஷயங்கள் கேலிக்கூத்தானவை, சாத்தியமில்லாதவை, எதனோடு ஒப்பிட முடியாதவை என்றும் நாம் பாகுபடுத்துகிறோம்.  

நாம் இந்தப் பயிற்சிகள் மற்றும் ஆறு – தொலைதூர அடைதல் அணுகுமுறைகள், நம்முடைய நோக்கம், உந்துதல், தீர்வு மற்றும் போதிசிட்டா உள்ளிட்டவற்றுடன் செயலாற்றுகிறோம். இவை அனைத்து மேம்பட்ட உந்துதல் நம்பிக்கையை உள்ளடக்கியது.

சுருக்கம்

தொடக்க நிலையை கட்டமைக்கும் போது, இடைப்பட்ட நம்பிக்கையுடன் சிறந்த நிலையில் நாம் மறுபிறப்பு எடுத்தாலும், நாம் துன்பப்படப்போகிறோம் என்பதை உணர்கிறோம். எப்படியும் நாம் பிரச்னைகளை எதிர்கொள்ளப்போகிறோம், உடல்சுகமின்மை மற்றும் மரணத்தை அடையப் போகிறோம், மீண்டும் அனைத்தையும் செய்யப் போகிறோம். மீண்டும் மீண்டும். இதனால் சலிப்புற்றதுடன், கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்புகளின் அனைத்து விஷயங்களிலும், குறிப்பான சிறப்பு என்று எதுவும் இல்லை என்பதை இவை அனைத்தின் மூலமும் நாம் புரிந்து கொள்கிறோம், எனவே நாம் இதில் இருந்து விடுதலை என்பதை நோக்கமாக வைக்கிறோம். 

மேம்பட்ட நிலைக்கு நாம் தொடர்ந்துசென்றால், நாம் மட்டுமே முக்கியமான நபர் – பிரபஞ்சத்தின் மையம் என்று சிந்திப்பதை நிறுத்துவோம். மகிழ்ச்சியை விரும்புதல் மற்றும் துன்பத்தை தவிர்க்க விரும்புவதில் அனைவரும் சமமே என்பதை நாம் உணர்வோம். இது மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் கடந்த ஜென்மம் மற்றும் இந்த ஜென்மம் என இரண்டிலும், நம்மிடம் நம்பமுடியாத நேசத்தை கொண்டிருக்கிறது. அவை இல்லையெனில், நம்மால் உண்ணவோ அல்லது பருகவோ, படிக்கவோ அல்லது எழுதவோ, கடைகளுக்குச் செல்லவோ, படங்களை பார்த்து மகிழவோ, அல்லது அதற்கும் அதிகமாக எதையுமோ செய்ய முடியாது. இந்த பரிவைப் புறக்கணித்தல் அவமானகரமானது என்று நாம் பார்த்து, அவர்கள் மீது அன்போடும் இரக்கத்தோடும், போதிசிட்டாவை வளர்த்துக்கொண்டோம், இதன் மூலம் மற்றவர்களுக்கு இறுதி நன்மை பயக்கும் பொருட்டு நம் சொந்த ஞானத்தை அடைய விரும்புகிறோம். 

Top