பொறுமையின் பரிபூரணம்: சாந்திபரமிதா

"பொறுமை என்பது ஒரு நற்குணம்," போன்றதாகும். அதனால் நாம் எப்போதும் எல்லாவற்றையும் பொறுத்துப் போக வேண்டுமா? பௌத்தத்தில் பொறுமை என்பது ஒரு சக்திவாய்ந்த பயிற்சி அதன் பொருள் வெறுமனே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவதல்ல, மாறாக நம்முடைய மனதுடன் நாம் வீரியமாக செயல்பட்டு அது சிக்கலான உணர்ச்சிகளிடம் வீழாமல் இருப்பதை உறுதிபடுத்துவதாகும். பொறுமையானது நாம் மற்றவர்கள் என இருவரும் பலனடைவதற்காக செயலாற்றும் உறுதியைத் தருகிறது, மேலும் விடுதலை மற்றும் ஞானமடைதலை நோக்கி நம்மை இயக்கும் காரணிகளில் ஒன்றும் ஆகும்.

அறிமுகம்

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகளில் (பரிபூரணங்கள்) பொறுமை மூன்றாவதாகும், நாம் கோபமடையாமல் இருக்கும் ஒரு மனநிலை, ஆனால் அதற்கு பதிலாக பல்வேறு கஷ்டங்கள் மற்றும் துன்பத்தை சகித்துக் கொள்பவராக இருத்தல். மற்றவர்களிடம் இருந்து எல்லா வகையான தீங்குகளையும் நாம் சந்திக்க நேரிடலாம், ஆனால் அது நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்கு எதிரிளோ அல்லது நம்மை காயப்படுத்த முயற்சிப்பவர்களோ இல்லை என்பதல்ல இதன் அர்த்தம், மாறாக நாம் கோபம், வெறுப்பு, ஊக்கமின்மை, அவர்களுக்கு உதவ தயக்கம் இல்லாதவராக இருத்தல் என்று பொருள். நாம் எப்போதும் நம்முடைய நிதானத்தை இழந்து கொண்டிருந்தால், உண்மையில் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்? இந்த மனோபாவத்தில் மூன்று வகையான பொறுமைகள் உள்ளன:

பொறுமையை மேம்படுத்துவது பற்றி சாந்திதேவா சொன்னவை

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் நூலில் பொறுமையை வளர்ப்பதற்கான பல வழிகளை சாந்திதேவா விளக்குகிறார். சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்:

நாம் நம்முடைய கையை சுட்டுக்கொண்டாலோ அல்லது ஸ்டவ் மீது கையை வைத்துக் கொண்டாலோ, நெருப்பு ஏன் சுடாக இருக்கிறது என்று அதன் மீது கோபமடைய மாட்டோம். சுடுவது நெருப்பின் இயல்பு. அதே போன்று தான், சம்சாரியத்தில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக, மற்றவர்கள் நம்மை தாழ்வாக்கப் போகிறார்கள், நம்மை காயப்படுத்தப் போகிறார்கள், விஷயங்கள் கஷ்டமாக இருக்கப் போகிறது. நமக்காக எதாவது செய்ய வேண்டும் என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் சரியாக செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் செய்யாவிட்டால், அது யாருடைய தவறு? சோம்பேறித்தனத்தால் அதை நாமே செய்யாமல் மற்றவர்களை செய்ய கேட்டது நம்முடைய சொந்த தவறு.  யார் மீதாவது கோபப்பட வேண்டுமெனில், நாம் நம்முடைய சொந்த சோம்பேறித்தனத்தின் மீது தான் கோபப்பட வேண்டும். 

"சம்சாரியத்தில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்" என்பது, நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பல்வேறு வகையான பொறுமைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு சொற்றொடர். வாழ்க்கை சுலபமாக இருக்கும் என்றும், எல்லாமே எப்போதும், என்றும் சிறப்பாகச் செயல்படும் என்று நாம் நினைக்கிறோமா? நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தின் இயல்பும் சம்சாரியம் - அது கட்டுப்பாடில்லாமல் மீண்டும் வரும் துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சமம். எனவே, நாம் விரும்பியபடி விஷயங்கள் செயல்படாதபோது அல்லது மக்கள் நம்மை காயப்படுத்தும்போது அல்லது ஏமாற்றமடையும்போது, ஆச்சரியப்பட வேண்டாம். நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதனால்தான் நாங்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகிறோம்.

இது எப்படி இருக்கிறதென்றால் பனிக்காலம் மிகவும் குளிராகவும் இருளாகவும் இருக்கிறது என்று புகார் செய்வதைப் போன்றதாகும். பனிக்காலத்திட்ம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும் - நாம் சூரியக் குளியல் எடுக்கும் விதமாக அது மிக அருமையாக இதமாக இருக்குமா?! நெருப்பின் இயல்பு சுடுவது, அதில் கையை விட்டால் நம்முடைய கை எரிச்சலடையும், அதே போன்று குளிர்காலம் என்பது குளிராகவும் இருளாகவும் இருக்கும். இதனால் கோபமடைவதில் எந்தப் பயனும் இல்லை.  

சாந்திதேவா பரிந்துரைக்கும் மற்றொரு முறை, மற்றவர்களை பைத்தியக்காரர்கள் அல்லது குழந்தைகளைப் போல பார்ப்பது. ஒரு பைத்தியக்காரன் அல்லது குடிகாரன் நம்மைப் பார்த்துக் கத்தினால், நாம் திருப்பிக் கத்துவது கைத்தியக்காரத் தனமாக, இல்லையா? நம்முடைய இரண்டு வயது குழந்தை, தொலைக்காட்சி பார்க்கும் போது நிறுத்திவிட்டு தூங்க சொல்லும் போது அந்தக் குழந்தை "நான் உன்னை வெறுக்கிறேன்!" என்று கத்தினால், நாம் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு நம்முடைய குழந்தை நம்மை வெறுக்கிறது என்று வருத்தப்படுவோமா? இல்லை, ஏனெனில் அது ஒரு குழந்தை. கொடூரமாக நடந்துகொள்ளும் மற்றவர்களை அவர்களை ஒரு வெறித்தனமான குழந்தை அல்லது பைத்தியம் பிடித்தவர் போல் பார்க்க முடிந்தால், அது உண்மையில் அவர்களுடன் கோபப்படாமல் இருக்க உதவுகிறது.

கூடுதலாக, யாரேனும் நமக்கு மோசமான நேரத்தை கொடுத்தால், அவர்களை நம்முடைய குருவாகப் பார்ப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். உச்சபட்சமாக கத்தும் ஒரு நபரை நாம் எப்போதும் பார்த்திருப்போம் நம்மால் அவரை எப்போதும் தவிர்க்க முடியாது, இல்லையா? நாம் அவர்களுடன் இருந்தால், "இவர் என்னுடைய பொறுமையின் குரு" என்று நாம் நினைக்கலாம். உண்மையில் யாரும் நம்மிடம் கத்தவில்லை கடினமான நேரத்தை கொடுக்கவில்லையெனில், நம்மால் பொறுமையை எப்போதுமே கற்றுக் கொள்ள முடியாது. நாம் ஒருபோதும் சவாலுக்கு ஆளாக மாட்டோம், எனவே இந்த வகையான வாய்ப்புகளை வழங்குவதில் இவர்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதை நாம் காணலாம். புனிதர் தலாய் லாமா சீனத் தலைவர்கள் தனது ஆசிரியர்கள் என்றும், மாவோ சேதுங் தனது பொறுமையின் சிறந்த ஆசிரியர் என்றும் எப்போதும் கூறுகிறார்.

Top