புத்தரின் உயர்வான பாதையை ஏன் & எப்படி பின்பற்றுவது?

லாம்-ரிம் என்றால் என்ன? மற்றும் அது புத்தரின் போதனைகளில் இருந்து எவ்வாறு வெளிப்பட்டது?

உயர்வான பாதையான, லாம் – ரிம் என்பது அடிப்படை பௌத்த போதனைகளை நம்முடைய வாழ்வில் அணுகவும் ஒருங்கிணைக்கவும் ஒரு வழி. புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் சமூகம் மற்றும் அதற்குப் பின்னர், கன்னியாஸ்திரிகள் சமூகத்தினருடன் வாழ்ந்தார். அவர் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே கற்பிக்காமல், மாறாக பலரின் வீடுகளுக்கும் அழைக்கப்பட்டார் அங்கு உணவு பரிமாறப்பட்ட பின்னர் அவர் சொற்பொழிவு ஆற்றுவார். 

“திறமையான வழிமுறைகள்” என்று நாம் சொல்வதையே புத்தர் எப்போதும் போதித்தார், இது மற்றவர்கள் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வழியில் கற்பிக்கும் முறையை குறிக்கிறது. இது அவசியமானது ஏனெனில், பல விதமான வேறுபட்ட நுண்ணறிவு அளவுகள் மற்றும் ஆன்மிக மேம்பாடு நிச்சயமாக இப்போதும் உள்ளன. மிக வேறுபட்ட மட்டங்களில் பரந்துபட்ட பலவகையான தலைப்புகளில் புத்தரின் போதனைக்கு இவை வழிவகுக்கின்றன.  

புத்தரை பின்பற்றும் பலருக்குத் தனித்துவமான நினைவுகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் எதுவும் எழுதப்படவில்லை போதனைகள் துறவிகளால் நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டு பின்வந்த தலைமுறையினருக்கு வாய்மொழியாக உரைக்கப்பட்டது. இறுதியில் போதனைகள் எழுதியும் வைக்கப்பட்டன, அவையே சூத்திரங்களாக அறியப்பட்டன. நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பல மிகப்பெரிய இந்திய குருக்கள் பொருட்களை ஒருங்கிணைக்கவும் அது குறித்த வர்ணனைகளை எழுதவும் முயற்சித்தனர். திபெத்திற்கு சென்ற இந்திய குருக்களில் ஒருவரான அதிஷா, 11ஆம் நூற்றாண்டில் இந்த முன்மாதிரிக்கான காட்சிப்படைப்பான லாம்-ரிம்மை உருவாக்கினார்.

அதிஷாவின் முன்மாதிரி என்பது ஒரு புத்தரின் நிலையை நோக்கி ஒவ்வொருவரும் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒரு முறையை மட்டுமே முன்வைத்தது. வெறுமனே சூத்திரங்களை மாறி மாறி படிப்பது மட்டுமே ஆன்மிகப் பாதையை எங்கிருந்து தொடங்குவது அல்லது ஞானத்தை எவ்வாறு அடைவது என்ற தெளிவை நமக்குத் தரப்போவதில்லை. அனைத்துப் பொருட்களுமே அங்கே இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தையும் ஒன்றுசேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. 

தரப்படுத்தப்பட்ட வரிசையில் பொருளை வழங்குவதன் மூலம் லாம்-ரிம் இதைத்தான் சரியாகச் செய்கிறது. அதிஷாவிற்குப் பின்னர், பல விதமான, அதிக விரிவான பதிப்புகள் திபெத்தியத்தில் எழுதப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் சோங்காபா எழுதிய பதிப்பைப் பார்ப்போம், இது பொருளின் மிகப்பெரிய விரிவாக்கமாக இருக்கலாம். சோங்காபாவின் படைப்பின் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால், அதில் சூத்திரங்கள் மற்றும் இந்திய வர்ணனைகளின் மேற்கோள்கள் உள்ளன, எனவே அவர் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்று நாம் நம்பலாம்.

மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், சோங்காபா பல்வேறு விஷயங்களின் மிக விரிவான, தர்க்கரீதியான செயல்விளக்கங்களை வழங்குகிறது, இதனால் தர்க்கம் மற்றும் காரணத்தின் அடிப்படையில் போதனைகளின் செல்லுபடியாக்கலில் இன்னும் வலுவான நம்பிக்கையைப் பெறுகிறோம். சோங்காபாவின் சிறப்பியல்பு என்னவென்றால், முந்தைய எழுத்தாளர்கள் மிகவும் கடினமான விஷயங்களைத் தவிர்த்துவிடுவார்கள், ஆனால் இவர் அவற்றில் கவனம் செலுத்துவார்.

நான்கு திபெத்திய பௌத்த மரபுகளில், சோங்காபாவுடன் தோன்றியவை "கெலுக்பா" பாரம்பரியம் என்று அழைக்கப்படுகின்றன.

Top