விடா முயற்சியின் பரிபூரணம் : வீர்யபரமிதா

நல்லொழுக்கமுள்ளவராக இருப்பது ஒரு திடமான கழுதையை மலைமீது இழுத்துச் செல்வததைப் போன்று கடினமானது, ஆனால் அழிவுகரமான விஷயங்கள் என்பது கற்பாறைகளை மேல் இருந்து கீழ் நோக்கி தள்ளுவதைப் போல எளிமையானது என்று திபெத்தியர்கள் கூறுகிறார்கள். நாம் எவ்வளவு பொறுமையாக, பெருந்தன்மையாக, விவேகமாக இருக்கிறோம் என்பது பொருட்டல்ல, நம்மால் சோம்பேறித்தனத்தை வெல்ல முடியவில்லை என்றால், நம்மால் எப்போதும் யாரையும் பலனடையச் செய்ய முடியாது. நாயகனுக்கான தைரியம் மற்றும் விடாமுயற்சியுடன்,நம்முடைய ஞானமடைதல் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களும் பயனடைய வேண்டும் என்ற தேடுதலில் உள்ளோ புறமோ எந்தப் போராக இருந்தாலும் நாம் படைவீரராக மாறி அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அறிமுகம்

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகளில் (பரிபூரணங்கள்) நான்காவது விடாமுயற்சியாகும். ஆற்றல் மிக்க சக்தியுடன் ஆக்கப்பூர்வமாக நடத்தையில் ஈடுபடுத்தும் மற்றம் அதனுடன் முயற்சியை கடைபிடிக்கும் ஒரு மனநிலை அது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால் இது சில நேர்மறையான செயல்களில் ஒட்டிக்கொள்வதை விட உயர்வானது, அதில் கைவிடாத வீர தைரியம் மற்றும் ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்வதில் மகிழ்ச்சி ஆகியவை அடங்கும்.

இது உண்மையில் கடின உழைப்பு மனப்பான்மையைப் பற்றியது அல்ல, அங்கு நாம் நம் வேலையை வெறுக்கிறோம், ஆனால் கடமை, குற்ற உணர்வு அல்லது அது போன்ற ஏதாவது ஒரு உணர்வுடன் அதை எப்படியும் செய்கிறோம். ஒரு வேலைக்காரனைப் போல அன்றாடம் இயந்திரத்தனமாகச் சென்று பணியாற்றுவதைப் போன்றதும் அல்ல. இது நாம் சொல்லும் "குறுகிய கால உற்சாகம்" இல்லை, அங்கு நாம் எதையாவது செய்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், அதில் மிகப்பெரிய அளவிலான ஆற்றலைச் செலுத்துகிறோம், ஆனால் பின்னர் ஆற்றல் சாம்பலானதும் ஒரு வாரத்திற்குப் பிறகு எடுத்த செயலை கைவிட்டுவிடுகிறோம். நாம் இங்கு நிலைத்த முயற்சி மற்றும் ஆர்வம் பற்றி பேசுகிறோம், அதனால் தான் அதனை விடாமுயற்சி என்று அழைக்கிறோம். நிலையானது என்று அதனை சொல்வதற்குக்கு காரணம் நாம் அந்தச் செயலை செய்யும் போது மகிழ்ச்சியுடன் செய்கிறோம் - நம்முடைய அனைத்து நேர்மறை ஆற்றலையும் அதில் ஈடுபடுத்துகிறோம். விடாமுயற்சி, வீர தைரியத்துடன் இணையும் போது சோம்பேறித்தனம் மற்றும் காலம் கடத்துதலுக்கு சிறந்த எதிரிகளாவர்.

கவசம் போன்ற விடாமுயற்சி

மூன்று வகைகளான விடாமுயற்சி இருக்கிறன, அவற்றில் முதலாவது கவசம் போன்றதாகும். இது எவ்வளவு நேரம் எடுத்தாலும், கஷ்டம் வந்தாலும் தொடரும் விருப்பம். என்ன நடந்தாலும், நாம் சோம்பலடையாமல் அல்லது ஊக்கமிழக்காமல் இருத்தலாகும். தர்ம பாதையானது உண்மையில் மிக நீண்ட நேரம் எடுக்கக் கூடியது என்பதை நாம் அறிந்தால், மற்றவர்களுக்கு உதவுவதற்காக நரகத்திற்கு செல்லக் கூடித் தயாராக இருந்தால், பின்னர் சின்னதாக ஒரு பிரச்னை வந்தாலும் கூட சோம்பேறியாவதோ அல்லது ஊக்கமிழப்பதோ சாத்தியமில்லாததாகும். "என்ன நடந்தாலும் எதனாலும் என்னை அசைக்க முடியாது என்ற நடத்தையை நாம் கவசம் போலக் கொண்டிருக்கிறோம்!" இவ்வகையான வீர மிக்க தைரியம் நாம் எதிர்கொள்ளும் எந்த கஷ்டமாக இருந்தாலும் அதில் இருந்து நம்மை பாதுகாக்கும், ஏனெனில் விஷயங்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு காலம் எடுத்தாலும், நாம் அதனைச் செய்யப் போகிறோம் என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். 

ஒரு வகையில், ஞானம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவு விரைவாக அது வரும்; அதேசமயம் அது உடனடியாகவும் எளிதாகவும் வரும் என்று நாம் எதிர்பார்த்தால், அது நீண்ட காலம் எடுக்கும். நாம் உடனடியான, எளிமையான ஞானமடைதலை நாடினால், நிச்சயமாக அதன் அடிப்படையில் நம்முடைய சுயநலம் மற்றும் சோம்பேறித்தனம் இருக்கும் என்று பல பெரிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறி இருக்கின்றனர்.  நமக்குப் பலன்கள் வேண்டும், ஆனால் நாம் மற்றவர்களுக்கு தருவதற்காக அதிக நேரத்தை செலவிட மாட்டோம். வெறுமனே நமக்கு ஞானமடைதல் என்னும் சுவைமிக்க தேன் மட்டும் வேண்டும். அடிப்படையில், நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம்! அதற்குத் தேவையான கடின உழைப்பை செய்ய நாம் விரும்பவில்லை. ஞானத்தை விற்பனையில் வாங்க விரும்புகிறோம், அதனை எவ்வளவு மலிவாகப் பெற முடியுமோ அவ்வளவு மலிவாகப் பெற விரும்புகிறோம். ஆனால், இந்த வகையான பேரம் ஒருபோதும் பலன் தராது.

"மற்றவர்களுக்கு உதவுவதில் நேர்மறையான சக்தியைக் கட்டமைக்க நான் மூன்று பில்லியன் யுகங்கள் உழைக்கப் போகிறேன்" என்ற மனப்பான்மையுடன் நாம் இரக்கத்துடன் இருக்கும்போது, இந்த வீரத் துணிவின் மகத்தான நோக்கம் மிக விரைவாக ஞானத்தைக் கொண்டுவர உதவுகிறது.

ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு விடாமுயற்சி பயன்படுத்தப்படுகிறது

நேர்மறையானவற்றில் ஈடுபடுவதற்கான உறுதியான முயற்சி, நமக்கு ஞானமடைதலை கொண்டு வருவதற்கு தேவைப்படும் நேர்மறை சக்தியை கட்டமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான செயல்களே இரண்டாவது வகையான விடாமுயற்சியாகும். நம்முடைய முதல்நிலை பயிற்சிகளைச் செய்தல், வழிபாடு, கற்றல் மற்றும் தியானம் செய்வதில் நாம் சோம்பேறிகளாக இல்லை. இவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டும், அவற்றைச் செய்வதில் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 

வரையறுக்கப்பட்ட உயிரினங்கள் பலனடைவதற்காக விடாமுயற்சியுடன் செயலாற்றுதல்

மூன்றாவது வகை விடாமுயற்சி என்பது, மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயனடைவதற்கும் செயலாற்றுவதில் ஈடுபட்டுள்ள உறுதியான முயற்சியாகும், இது நமது நேர்மறையான செல்வாக்கின் கீழ் மற்றவர்களை ஒன்று சேர்ப்பதற்கான நான்கு வழிகளையும் 11 வகையான நபர்களுடன் உதவும் விதத்தில் இணைந்து பணியாற்றுவதையும் குறிக்கிறது. அவையும் கூட ஆறு தொலைதூர- அடைதல் நன்னெறி ஒழுக்கத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை ஒரே மாதிரியானவை அல்ல. அடிப்படையில், இங்கே இதன் பொருளானது இவ்வகையானவர்களுக்கு பல்வேறு வழிகளில் தீவிரமாக உதவுவதாகும் அதுவே இந்த விடாமுயற்சிக்கு பொருந்துவதாகும்.  இவை அனைத்தையும் செய்வதனால் பெறும் மகிழ்ச்சியானது உண்மையில் நம்மால் மற்றவர்களுக்கு உதவ முடிகிறது என்ற மகிழ்ச்சியான உணர்வாகும். கூடுதலாக, பொறுமையுடன், நாம் என்ன கஷ்டங்களைச் சந்திக்கப் போகிறோம், மேலும் நன்னெறி சுய ஒழுக்கத்துடன், உண்மையில் அவர்களுக்கு உதவுவதைத் தடுக்கும் அந்த தொந்தரவு உணர்ச்சிகள் அனைத்தையும் நாம் தவிர்க்கப் போகிறோம். பல்வேறு தொலைதூர-அடைதல் அணுகுமுறைகள் ஒன்றுக்கு ஒன்று எப்படி ஆதரிக்கப் போகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. 

மூன்று வகைகளான சோம்பேறித்தனங்கள்

நம்முடைய விடாமுயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் மூன்று வகையான சோம்பேறித்தனங்கள் இருக்கின்றன. விடா முயற்சியை மேம்படுத்தவும் பயிற்சிக்கவும், நாம் சோம்பேறித்தனத்தை வென்றெடுக்க வேண்டும். 

1. மந்தம் மற்றும் காலம் கடத்துதலின் சோம்பேறித்தனம்

நம்மில் பலருக்கும் இவ்வகையான சோம்பேறித்தனத்தின் முதல் அனுபவம் இருக்கும், அது வேறொன்றுமில்லை விஷயங்களை நாளைக்கு என்று தள்ளிப்போடுதல். இந்த சோம்பலை வெல்வதற்கு, நாம் மரணம் மற்றும் நிலையில்லாமை பற்றி சிந்தித்து தியானிக்க வேண்டும். மரணம் எப்போது நிகழப்போகிறது என்று நமக்கு நிச்சயமாக எந்தத் துப்பும் இல்லை, நிச்சயமாக நாம் இறக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், விலைமதிப்பில்லாத இந்த மனித வாழ்க்கையானது வரப்போகிற கஷ்டங்களைக் கடந்து செல்ல அற்புதமான பல விஷயங்களை செய்யும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. 

எனக்கு மிகப் பிடித்தஜென் தத்துவமானது, "மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அமைதியாய் இரு." இந்த வாக்கியத்தை மனதில் வைத்திருப்பது நல்லது. மரணம் எந்த நொடியில் வேண்டுமானாலும் நிகழலாம் என்பது உண்மை, அதை நினைத்து நாம் மிகவும் இறுக்கமாகவும், பதற்றத்துடனும், படபடப்புடனும் இருந்தால், அதன் பின்னர் நம்மால் எதையுமே எப்போதுமே சாதிக்க முடியாது. "எல்லாவற்றையும் நான் இன்றே செய்யப் போகிறேன்!" என்று நாம் நினைத்து கற்பனையில் வாழ்கிறோம், அது உதவாது. ஆம் நாம் சாகப் போகிறோம் அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், ஆனால் இந்த வாழ்க்கையின் பலனை நாம் எடுக்க விரும்பினால், அப்போது நாம் இந்த இரண்டு உண்மைகள் கருத்தில் கொண்டு அமைதியாய் இருத்தல் வேண்டும். மரணம் பற்றிய பயத்துடனே எப்போதும் இருந்தால், எப்போதும் நமக்கு போதுமான நேரம் இல்லை என்ற உணர்வு நமக்கு இருந்து கொண்டே இருக்கும். 

2. அற்பமானவற்றை பற்றிக் கொண்டு இருக்கும் சோம்பேறித்தனம்

இரண்டாவது வகையான சோம்பேறித்தனம் என்பது அற்பமான விஷயங்களில் இணைப்புடன் இருப்பது, மேலும் நாம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று என்றும் கூறலாம். தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிப்பது, கிசுகிசுப்பு பேசுவது நண்பர்களுடன் வீண் அரட்டைகள் அடிப்பது, விளையாட்டுகள் பற்றி பேசுவது என்று நாம் ஏராளமான நேரத்தை வீணடிக்கிறோம். இந்தச் செயல்பாடுகளே நேர விரயம் என்று ஒப்பிடப்படுகிறது, மேலும் இது சோம்பேறித்தனம் என்ற வடிவத்தின் அடிப்படை என்று சொல்லலாம். எளிதாகச் சொல்வதானால்: தியானத்தில் உட்கார்ந்திருப்பதைவிட தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருப்பது மிகவும் எளிது, அப்படித்தானே? நம்முடைய சொந்த சோம்பேறித்தனத்தால் நாம் இந்த சாதாரண, உலகம் சார்ந்த விஷயங்களோடு இணைந்திருக்கிறோம், கஷ்டமான அதிக அர்த்தமுள்ள எதையாவது செய்யாமல் எதையும் முயற்சிக்க விரும்பாமல் இருக்கிறோம். 

அதற்காக எந்த பொழுதுபோக்கோ அல்லது இளைப்பாறுதலோ இருக்கக் கூடாது என்று பொருளல்ல, ஏனெனில் சில நேரங்களில் நமக்கு நாமே புத்துயிரூட்ட வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சோம்பேறித்தனத்தின் காரணமாக அனைத்திலும் பற்று கொள்ளாமல் இருத்தலாகும். நாம் எப்போதும் ஒரு இடைவெளி எடுத்துக்  கொள்ளலாம், ஒரு நடைபயிற்சி செல்லலாம், தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்கலாம் - ஆனால் அதில் நாம் பற்று கொண்டிருக்கக் கூடாது. நமக்கு போதும் என்ற உணர்வு வந்த பின்பு நாம் ஏற்கனவே செய்ததை விட கூடுதலான நேர்மறை விஷயங்களைச் செய்யச் சென்று விட வேண்டும். 

அற்பமான விஷயங்களில் பிடிமானம் கொள்வதைக் கடந்து செல்வதற்கான சிறந்த வழி, சாதாரண சாதனைகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து நாம் பெறும் இன்பங்களும் திருப்தியும் எவ்வாறு நிலையான மகிழ்ச்சியைத் தருவதில்லை என்பதைப் பற்றி சிந்திப்பதாகும். நாம் எத்தனை திரைப்படங்கள் பார்த்தோம் என்பதோ, அல்லது பிரபலங்கள் பற்றி நாம் எவ்வளவு கிசுகிசு பேசினோம், அல்லது வெவ்வேறு இடங்களுக்கு நாம் எவ்வளவு பயணம் செய்திருக்கிறோம் என்பதோ விஷயமல்ல: சொல்லப்போனால் அது எப்போதும் ஒரு துளி மகிழ்ச்சியை கூட நமக்கு கொண்டு வந்து சேர்க்காது. நீடித்த மகிழ்ச்சியை பெறுவதற்கான ஒரே வழி தர்ம வழிமுறைகள் முன்நடத்தும் பாதையில் நம்மை நாமே பயிற்சிப்பதாகும். நம்முடைய முழு நேரத்தையும் ஒரு பந்தை வலைக்குள் செலுத்துவதைப் போல பயிற்சிக்கு செலவிடுகிறோம், ஆனால் அது நமக்கு சிறந்த மறுபிறப்பை எப்போது தரப்போவதில்லை. 

எனவே, நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இணைப்பு இல்லாமல் இருத்தலாகும். இளைப்பாறுதலுக்காக நாம் ஏதேனும் செய்யலாம் அது நல்லதே. ஆனால் அந்தச் செயலுடனே இணைந்து கொண்ட நம்முடைய அனைத்து முயற்சியையும் அதில் செலவிடுகிறோ ஏனெனில் மிக ஆக்கப்பூர்வமான எதையாவது நாம் மிகுந்த சோம்பேறிகளாக இருக்கின்றோம் - இதனால் அது ஒரு தேவையற்றதே.  இந்த வகையான சோம்பல் உண்மையில் ஆக்கபூர்வமான விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஒரு தடையாக இருக்கிறது.

3. ஊக்கமளிக்காமல் இருப்பதற்கான சோம்பல்

மூன்றாவது வகையான சோம்பேறித்தனம் என்பது, இயலாமை பற்றிய மாயைகள் நமக்கு இருக்கும் - விஷயங்கள் மிகவும் கடினமானவை, அவற்றை நம்மால் ஒருபோதும் செய்ய முடியாது - என்று அதனால் நாம் சோர்வடைகிறோம். "அடக்கடவுளே, நான் அதை செய்ய முயற்சிக்கவே மாட்டேன் - என்னைப் போன்ற ஒருவரால் எப்படி செய்ய முடியும்?" என்று நாம் எத்தனை முறை நினைத்திருப்போம். ஞானமடைதல் போன்ற ஒரு பெரிய குறிக்கோள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பது சோம்பேறித்தனத்தின் ஒரு வடிவமாகும். 

இதனைப் போக்குவதற்கு, புத்தர்-இயல்பை நாம் நினைவுகூர வேண்டும் - நம் ஒவ்வொருவர் இடத்திலும் பல்வேறு அற்புதமான குணங்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சுயிங் கம் விற்பதால் சிறிய லாபத்தை பெற முடியும் என்பதற்காக காலை முதல் இரவு வரை அயராது உழைப்பவர்கள் இருக்கும் போது, நம்மாலும் நிச்சயமாக எதையாவது அடைவற்காக ஆக்கப்பூர்வமானவற்றை செய்வதற்காக திறனை செலுத்த முடியும். ஒரு கச்சேரிக்கு செல்வதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து நுழைவுச் சீட்டு வாங்க முடியும் என்றால், ஞானம் என்ற நித்திய லட்சியத்திற்கு வழிவகுக்கும் ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்ய நம்மால் இயலாது என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது.

விடாமுயற்சியை வளர்ப்பதற்கான நான்கு ஆதரவுகள்

விடாமுயற்சியை வளர்ப்பதற்கு நமக்கு உதவும் நான்கு ஆரவுகளை சாந்திதேவா விவரிக்கிறார். 

1. உறுதியான நம்பிக்கை

தர்மத்தின் நேர்மறையான குணங்கள் மற்றும் அவை நமக்குக் கொண்டு வரும் நன்மைகளில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதன் மூலம் போதனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான வலுவான எண்ணத்தைப் பெறுகிறோம்.

2. உறுதிப்பாடு மற்றும் சுய – பெருமை

தன்னம்பிக்கை மற்றும் புத்த- இயல்பை புரிந்து கொள்வதற்கு அடிப்படையில் நமக்கு உறுதிப்பாடும் நிலைத்தன்மையும் தேவை. புத்த - இயல்பு என்பது நம் அனைவருக்குள்ளும் இருக்கும் அடிப்படைத் திறன் என்று உண்மையில் நாம் நம்பினால் - அதன் பின்னர் தானாகவே நாம் வியத்தகு தன்-நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம், அதையே சாந்திதேவா "பெருமை" அல்லது "சுய-பெருமை" என்று கூறுகிறார். நாம் தன்-நம்பிக்கை கொண்டிருந்தால், நம்மால் நம்முடைய முயற்சியில் நிதானமாகவும் நிலையாகவும் இருக்க முடியும். என்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன என்பதுவிஷயமல்ல, வீர தைரியத்துடன் நம்மால் விடா முயற்சி செய்ய முடியும். 

3. மகிழ்ச்சி

மூன்றாவது ஆதரவானது நாம் என்ன செய்தாலும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளுதல். இது நம் வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதில் இருக்கும் திருப்தி உணர்வு. நம்மை மேம்படுத்திக்கொள்ளவும், மற்றவர்களுக்கு உதவுவதற்காக செயலாற்றுவதிலும் அதிக மிகவும் சுய திருப்தி மற்றும் நிறைதைத் தரும் விஷயம். நாம் இதைச் செய்யும்போது, அது இயற்கையாகவே நமக்குள் ஒரு பெரிய மகிழ்ச்சியை உருவாக்குகிறது.

4. செல்ல அனுமதித்தல்

இறுதியான ஆதரவு என்பது எப்போதும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை அறிதலாகும். கைவிடுவது, விட்டுக்கொடுப்பது, நாம் என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை எதிர்கொள்ள முடியாமல் போகும் அளவிற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. நம்மை மிகவும் கஷ்டத்திற்குள்த் தள்ளுவதற்கும், ஒரு குழந்தையைப் போல நடத்துவதற்கும் இடையேயான நடுத்தர வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் கொஞ்சம் சோர்வாக உணரும்போது, ஒரு குட்டித் தூக்கத்திற்காக நாம் படுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த விஷயமானது சொல்லவில்லை!

இருப்பினும், புனிதர் தலாய் லாமாவின் ஜூனியர் பயிற்றுநரான த்ரிஜங் ரின்போச்சே, நாம் மிகவும் மோசமான, எதிர்மறை மனநிலையில் இருந்தால் எந்த இதர தர்ம வழிமுறைகளும் நமக்கு உதவாது என்றால், ஒரு சிறிய உறக்கத்திற்கு செல்வது மிகவும் நல்ல விஷயம். நாம் தூங்கி எழும் போது நம்முடைய மன நிலை வித்தியாசமாக இருக்கும், தூக்கத்தின் இயல்பு அது. இது மிக நடைமுறையான அறிவுரையாகும்.  

வீர தைரியத்தை மேம்படுத்துவதற்கான மேலும் இரண்டு காரணிகள்

நமக்கு உதவக்கூடிய மேலும் இரண்டு காரணிகளை சாந்திதேவா சுட்டிக்காட்டுகிறார். 

1. ஏற்பதற்கு தயாராக இருத்தல்

நாம் என்ன பயிற்சிக்க வேண்டும், எதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு நாம் முதலில் தயாராக இருக்க வேண்டும். கூடுதலாக, அதில் ஈடுபட்டிருக்கும் கடினங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.  

அதனை நாம் ஏற்றுக்கொண்டு நமக்குள் எடுத்துச் செல்லும் போது நம்முடைய திறன் மற்றம் யதார்த்தத்தில் சேர்ந்திருப்பது என்ன என்பதையும் அறியலாம். நாம் நிதர்சனமில்லாத அணுகுமுறையை கொண்டிருக்கக் கூடாது. நாம் 100,000 முறை வணங்குவதற்கு திட்டமிட்டால், அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். நம்முடைய கால்கள் வலிக்கப் போகிறது, நம்முடைய உள்ளங்கைகள் சிவந்துவிடும், நிச்சயமாக நாம் சோர்ந்து போகப் போகிறோம். எனவே பலன்கள் பற்றி நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 

நாம் நிறுத்த வேண்டியது என்ன? ஒரு தொடக்கத்திற்கு முதலில் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும், அது தான் முடியவே முடியாத ஒரு விஷயம் ஏற்கனவே இருக்கும் விஷயங்களில் ஒன்றை தவிர்த்து நேரத்தை உருவாக்கலாம்.  " என்னால் இதைச் செய்ய முடியுமா?" என்று நம்மை நாமே நேர்மையாக பகுப்பாய்ந்து பார்க்கலாம்.  இதில் உள்ள யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் மற்றும் மகிழ்ச்சியான உற்சாகத்துடன் நம் மனதை அதில் ஈடுபடுத்துகிறோம். 

2. கட்டுப்பாட்டுடன் இருத்தல்

விடாமுயற்சியை மேம்படுத்துவதற்கான சாந்திதேவாவின் இரண்டாவது முக்கியமான விஷயமானது, மேலே சொல்லப்பட்டிருப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் யதார்த்த அணுகுமுறையை ஒரு முறை கொண்டிருந்தால், அதனை நமக்கு நாமே செயல்படுத்துவதற்கான கட்டுப்பாட்டை உண்மையில் நாம் எடுப்போம். மன உறுதியுடன், எந்தவொரு பழைய வகையிலும் - குறிப்பாக சோம்பேறித்தனத்துடன் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். கட்டுப்பாட்டை நாம் எடுத்துக்கொண்டு, நாம் செய்ய விரும்பும் நேர்மறையான வேலையில் நம்மைப் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் நாம் சொல்வது போல, நமது "முழு இதயத்தையும் அதில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறோம்”.

சுருக்கம்

தர்மத்தை கடைப்பிடிப்பதன் பலன்களை நாம் உண்மையாக நம்பி, அது தரும் மகிழ்ச்சியை எதனுடனும் ஒப்பிடமுடியாது என்பதை பார்க்கும்போது, அதில் விடாமுயற்சி இயல்பாகவே உருவாகிறது. நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, விடாமுயற்சியுடன் ஒரு வலுவான உந்துதல் இருந்தால், ஒரு நாயகனைப் போல, நாம் நமது நோக்கங்களை அடைவோம்.

நம்முடைய இலக்குகளை அடைய முயற்சிக்கும் போது  நம்மில் பலர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் ஒன்றான சோம்பேறித்தனத்தை கடக்க  விடாமுயற்சி உதவுகிறது: சோம்பல். இங்கு விவரிக்கப்பட்டுள்ள முறைகள் ஞானமடையும் பாதையில் நாம் முன்னேறுவதற்காக மட்டுமல்லாமல், நம் வாழ்நாள் முழுவதும் நமது மிகவும் சாதாரணமான நோக்கங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Top