தவறாக நடந்து கொள்ளும் ஆன்மிக ஆசிரியர்களை கையாள்வது குறித்து தலாய் லாமாவின் அறிவுரை

இங்கே வந்திருப்பவர்களில் பலர் திபெத்தில் இருந்தும் பெரும்பாலானவர்கள் சீனாவில் இருந்து இங்கே இருக்கிறீர்கள், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. பாசாங்குத்தனமான, தவறான ஆன்மிக ஆசிரியர்கள் இருந்தால், அவர்களின் பொய் மற்றும் ஏமாற்றுத்தனத்தை நீங்கள் அம்பலப்படுத்த வேண்டும். அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.  

சில ஆண்டுகளுக்கு முன்னர், தர்மசாலாவில் நடந்த கருத்தரங்கம் ஒன்றிற்கு திபெத்திய பௌத்தத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கில் இருந்தும், ஜென் பௌத்தத்தை கற்பிக்கும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். அந்த கருத்தரங்கில் பேசும் போது, சில மேற்கத்திய ஆசிரியர்கள், “இப்போதெல்லாம், ஜென் குருக்களில், சிலர் மிகவும் தவறானவர்களாக இருக்கிறார்கள், அதே போன்று திபெத்திய லாமாக்களிலும் சிலர் மிகவும் தவறாக இருப்பதாக புகார் கூறினர். அவர்களின் போக்கை நிறுத்துவதற்கு ஒரு திறன்மிகு முறை தேவை என்பதை இந்தப் புகார் வெளிச்சம் போட்டு காட்டியது.”

அந்த சமயத்தில், நான் அவர்களிடம் சொன்னேன், “அவர்களை தடுப்பதற்கு நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. பகவான் புத்தர் தெளிவாகவும் உறுதியாகவும் கைவிட வேண்டியது என்ன மற்றும் தழுவ வேண்டியது என்ன என்று அறிவித்திருக்கிறார். உதாரணமாக, போதனைகளின் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்பட மற்றவர்களை வலியுறுத்துங்கள் மற்றும் இந்த நோக்கங்களுடன் நீங்கள் தொடர்ந்து செயல்படுங்கள்.’ ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை; அவர்கள் அதை மதிக்கவில்லையா. பகவான் புத்தர் சொன்னதை அவர்கள் மதிக்கவில்லை என்றால், நாம் ஏதாவது சொன்னால் அதனால் என்ன மாறப்போகிறது? அது எந்த உதவியும் செய்யாது என்று புத்தர் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூறி இருக்கிறார். 

“சூழலை நீங்கள் பொதுவெளிப்படுத்த வேண்டும். தர்மத்தை போதிக்கிறார்கள் ஆனால் மோசமான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால், அந்த நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, செய்தித்தாள்களில் செய்தி வெளியிடலாம்.  அதை விளம்பரப்படுத்துங்கள். நம்முடைய விளக்கங்கள் அவற்றைத் தடுக்க உதவாத போது இது சிறிது உதவலாம் மற்றும் சில நன்மைகளைத் தரலாம்” என நான் அவர்களிடம் சொன்னேன்.

அது அப்படித் தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாசாங்குத்தனமான, தவறான ஆசிரியர் இருப்பதற்கான சூழ்நிலை இருந்தால், அவரின் பெயரை விளம்பரப்படுத்துங்கள், கடைசியில், தேவைப்பட்டால் அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வையுங்கள். அமெரிக்காவில் இப்படி நடந்திருக்கிறது சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், தைவானிலும் கூட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவை அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை. 

இது போன்ற சில தர்ம ஆசிரியர்கள், “லாமா” என்கிற தலைப்பை வைத்துக்கொண்டு அவமானகரமாக இருந்து கொண்டு, பொதுப்பார்வையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், இது போன்றவர்களால் புத்தத மதத்திற்கு தீங்கு ஏற்படப் போகிறது என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஒரு சமயம், சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் இங்கிலாந்தில் இருந்த போது, பிரிட்டானிய தர்ம மையங்களில் இருந்த லாமா ஒருவர் பெண்களிடம் மோசமான நடந்து கொண்டதால் அமெரிக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு தண்டனை பெற்றார். அவருடைய மாணவர்கள் மிகவும் வருத்தப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர். இது போன்றவர்களால், புத்தரின் போதனைகளுக்கு சேதாரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் பயந்தார்கள். அதற்காக அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்ற நான் அவர்களிடம் சொன்னேன். பகவான் புத்தர் வந்து 2500 ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது இருக்கும் தர்ம ஆசிரியர்களில் சிலர் மட்டுமே அவமானகரமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களால் புத்தரின் போதனைகளுக்கு சேதாரம் ஏற்படுத்த முடியாது. இப்போது அவமானகரமானவர்களாக அறியப்படும் இது போன்ற ஆசிரியர்களால் புத்தரின் போதனைகளுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாது என்று நான் அவர்களிடம் சொன்னேன். நான் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 

Top