விவேகமான தியானம்
பொதுவாக தியானத்தில் இரண்டு நிலைகள் உள்ளன: விவேகமான தியானம் மற்றும் நிலையான தியானம். விவேகமான தியானத்தில், ஒன்று நாம் முன்னேற்றப் பாதைகள் மூலம் செயலாற்றுவோம் அல்லது சிந்தனை முன்னேற்றத்தில் நாம் செய்தது போல, நம்மை பிரபலப்படுத்தும் ஒரு மனநிலையை கட்டமைக்க முயற்சிக்கும் காரணத்தோடு செயலாற்றுவோம். இரக்கத்தைப் பொருத்த வரையில், நாம் நம்முடைய சொந்த கவலைகள் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம் மேலும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானத்தை உருவாக்குவோம். பின்னர், இந்த அடிப்படையுடன், நம்மைச் சுற்றி ஏராளமானோர் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு முதலில் நம் மனதைத் திறந்து, இதயத்தில் இருப்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்தி, இணைப்பு, விலகல் மற்றும் அலட்சியம் உள்ளிட்டவற்றில் இருந்து விடுபடுவோம். அதன் பிறகும் கூட எல்லா உயிரினங்கள் மீதும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், அவை எல்லாவற்றின் மீதும் நமக்கு இருக்கும் சேர்த்திணைப்பு மற்றும் சார்புடைமையை நினைவில் கொள்ளத் தொடங்கி அதன் மூலமாக நாம் தொடர்ச்சியாக செயலாற்றலாம்.
அதன் பின்னரும் கூட, உயிர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்த முடிந்தால், அவை அனுபவித்த அனைத்து துன்பங்களையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். எப்போதும் அவை துன்பமாகவும் மற்றும் வெறுப்பாகவும் இருந்திருக்கும், மேலும் அவை இது வரையில் எந்த மகிழ்ச்சியையும் கொண்டிருக்காது மற்றும் எப்போதும் திருப்தியடைந்திருக்காது என்பதையும் அறியலாம். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சித்திருப்பார்கள், ஆனால் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவதற்காக மனநிறைவைத் தரும் தோற்றத்திற்கு மாறுவது அல்லது மேலும் கூடுதாலாக எதையாவது வாங்கிக் குவிப்பது போன்றவற்றை அவர்கள் முயற்சித்தாலும் இவையாவும் எப்போதும் பலனளிக்காது; அவையாவும் அவர்களுக்கு கூடுதல் பிரச்னைகளையே கொடுக்கும். அதே போன்று நாம் அனைவருமே ஒரே சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையும் ஒருவருக்கொருவர் உதவி தேவை என்பதையும் நமக்கு நாமே நினைவூட்ட வேண்டும், ஏனெனில் எல்லோரும் சுயநலவாதிகளாக இருந்தால், நாம் அனைவருமே பாதிக்கப்படுவோம்.
இந்த வகையில், இரக்கத்துடன் உணர நம்மை நாமே கட்டமைத்து, இந்த மிகப்பெரிய அளவிலான உயிர்கள் அனைத்தையும் சமமாகவும், அவற்றின் அனைத்து துன்பங்களில் இருந்து விடுதலையடையவும், கூடுதலாக அவற்றின் பிரச்னைகளைக் குறைக்க நம்மால் முடிந்த வகையில் தனிப்பட்ட முறையில் ஏதேனும் செய்யலாம் என்ற முனைப்புடன் மற்றும் எல்லோருக்கும் இவை கிடைப்பதற்கான விருப்பத்துடன் கவனம் செலுத்தலாம்.
விவேகமான தியானத்துடன், வெகுஜன உயிர்களிடத்தில் இரக்கத்துடன், அதே நேரம், நாம் உணர்ந்து அங்கீகரிக்கிறோம் என்ற விவேகத்துடன் அனைத்து விவரங்கள் மற்றும் புள்ளிகளையும் முறையே கடப்பதன் மூலம் நம்முடைய இரக்க உணர்வை கட்டமைப்பதற்கு தொடர்ந்து கவனம் செலுத்தலாம். இதற்காக, நமது இரக்கமுள்ள மனநிலையானது மொத்த கண்டறிதல் மற்றும் நுட்பமான விவேகத்தின் காரணிகளைக் கொண்டுள்ளது. முந்தையதைக் கொண்டு, நம்முடைய நோக்கத்தில் கவனம் செலுத்துதல் பற்றிய முக்கியமான பொதுவான விஷயத்தில், உண்மையில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதை அடையாளம் கண்டிருக்கிறோம் என்கிற உணர்வை, மட்டுமே கண்டுபிடிப்போம். பிந்தையவற்றுடன், அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான துன்பங்களின் அனைத்து விவரங்களையும் நாம் பாகுபடுத்துகிறோம். இந்த இரண்டு கலவையுடன், அந்த நோக்கம் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் உணர்ந்து அங்கீகரிக்கிறோம், விரிவான, ஆழ்ந்த புரிதலைப் போல, ஆனால் நம்முடைய மனதில் ஒவ்வொரு புள்ளியாகவோ அல்லது அவற்றை வாய்மொழிச்சொல்லாகவோ கடந்து செல்லாமல் ஒரே மனநிலைக்கு அனைத்தையும் ஒருங்கிணைக்கிறோம். இந்த விவரங்களை நாம் கண்டறிதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் பலவீனமாகிவிட்டால், நாம் மீண்டும் எல்லா புள்ளிகளையும் ஒவ்வொன்றாகக் கடப்பதன் மூலம், மொத்த கண்டறிதல் மற்றும் நுட்பமான விவேகம் மற்றும் செறிவு ஆகியவற்றால் நிரப்பப்பட்டு, மீண்டும் இரக்கத்தை உருவாக்குகிறோம்.
தியானத்தை நிலைப்படுத்துதல்
நாம் நிலையான தியானத்துடன் விவேகமான தியானத்தைப் பின்பற்றுகிறோம். நாம் இப்போது அதே இரக்கத்துடன் வெகுஜன உயிர்கள் மீது தொடர்ச்சியாக கவனம் செலுத்தப் போகிறோம், ஆனால் இந்த முறை அவர்களின் துன்பங்களை முழுமையாகக் கண்டறிதல் அல்லது நுட்பமான பகுத்தறிவு இல்லாமல், ஆனால் அவர்கள் அனுபவிக்கும் புரிதலுடனும், நினைவாற்றலுடனும் கவனம் செலுத்தப் போகிறோம்.
இதுவே தியானத்தின் செயல்முறை; நீங்கள் எதையாவது ஒருங்கிணைத்து, அதற்கு ஏற்ப உங்களை எவ்வாறு பழக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். நாம் ஒரு வகை தியானத்தைப் பற்றி மட்டுமே பேசினாலும் கூட அதில் நீங்கள் ஒரு நோக்கத்தின் மீது கவனம் செலுத்தலாம், அல்லது ஒரு வகை தியானத்தில் நீங்கள் ஒரே மன நிலையில் தொடர்ந்து இருக்கலாம், அல்லது இரண்டையும் சேர்க்கும் ஒன்று, அது அச்சு அசலாக இந்த எல்லா முறைகள் மற்றும் அனைத்து விவரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
விவேகமான மற்றும் நிலையான தியானத்தை ஒன்றுக்கொன்று வேறுபடுத்துதல்
உங்களது மனதின் செயல்பாட்டின் சக்தியைக் கொண்டு விவேகமான தியானம் மற்றும் நிலையான தியானத்திற்கு இடையேயான வேறுபாட்டை புனிதர் தலாய் லாமா விவரிக்கிறார். இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட மிகவும் மென்மையான, மிகவும் சுத்திகரிக்கப்பட்ட வழி இது. விவேகமான தியானத்துடன், உங்களுடைய கவனத்தின் ஆற்றல் வெளி நோக்கி சென்று கொண்டிருந்தால், இதன் அர்த்தம் அதன் எல்லா விவரங்களுடன் எதையோ விவேகமான பொருள் கொள்கிறது. நிலையான தியானத்துடன், உங்களுடைய கவனத்தின் ஆற்றல் உள்நோக்கி சென்றால், அதன் அர்த்தம் உணர்ச்சி அல்லது புரிதலை மூழ்கடித்தலை மையமாக் கொண்டு, விவேகமான தியானம் வழிவகுக்கும் முக்கிய விஷயங்களில் மனநிறைவு இருப்பதன் அடிப்படையிலானது. ஆற்றலானது விவரங்களுடன் விவேகமான தியானத்தை சிதறடிக்காது, ஆனால் பரந்துவிரிந்தது, முக்கிய புள்ளியில் மென்மெருகிட்டு இருத்தல்.
ஆற்றலானது அதன் அனைத்து விவரங்களுடன் வெளியே செல்லும் அர்த்தத்துடனான இரக்கத்துடன் கூடிய ஏதோ ஒன்றின் விவேகம் – மற்றும் ஆற்றல் அதிக கவனத்துடன் இருக்கும் நிலையான இரக்கம் இரண்டிற்குமான வித்தியாசத்தை விவரிப்பது மிகவும் கடினம். மனதை அமைதிப்படுத்துவதில் இருந்து வரும் ஒரு பலன் இது. நீங்கள் வெற்றியடைந்தால், ஏதோ ஒரு அளவில், உங்களுடைய தலையில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லா சத்தங்களையும் அமைதிப்படுத்தலாம் (உங்களுடைய ஐபாடில் நிலையான பேச்சு, நிலையான கருத்துரை, நிலையான பாடல் ஒலித்துக் கொண்டிருத்தல்), பின்னர் நீங்கள் உங்களுடைய ஆற்றலுக்கு கூர்உணர்வோடு இருக்கத் தொடங்குவீர்கள், மேலும் உங்களுடைய மனதின் ஆற்றல் நிலை என்ன என்பதை உங்களால் கூற முடியும்.
உங்கள் ஆற்றல் குழப்பமானதா அல்லது அமைதியானதா என்பதில் கவனம் செலுத்துவதே உங்கள் ஆற்றலை உணரத் தொடங்குவதற்கான சிறந்த வழி. எடுத்துக்காட்டாக, கோபம், பயம், பதட்டம், பேராசை அல்லது ஆணவம் போன்ற குழப்பமான உணர்ச்சியின் தாக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் கண்டறியும் வழி, உங்கள் ஆற்றல் அமைதியாக இருக்காது. நீங்கள் யாருடனாவது பேசினால், உங்களுடைய வயிற்றில் ஒரு இருக்கம் இருப்பதை உணர்ந்தால், உங்களுடைய ஆற்றல் சிறிது சோர்வாக இருக்கிறது என்பதை அது குறிக்கிறது, ஏதோ ஒரு வகை குழப்பமான உணர்வின் ஈடுபாடு இருக்கிறது என்பதற்கு இது மிகச் சிறந்த குறியீடு.
நீங்கள் ஒரு நபரை ஈர்க்க முயற்சிக்கலாம், அல்லது அவரை ஏதோ ஒன்றின் மூலம் சமாதானப்படுத்த முயற்சிக்கலாம், அல்லது அங்கு ஏதோ ஆக்கிரமிப்பு இருக்கலாம் – இவற்றில் ஏதோ ஒன்று உங்களுடைய மனதில் குழப்பமான ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை குறிக்கிறது. தவறாக ஏதோ நடக்கிறது என்பதை நீங்கள் அடையாளம் காண முடிந்தால், அதன் பின்னர் உங்களுடைய சிந்திக்கும் செயல்முறையை மறுதொடக்கம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் – ஒரு விதத்தில் உங்கள் மனதை மீண்டும் துவக்கவும், உங்கள் தொடர்புக்கு பின்னால் இருக்கும் உணர்ச்சியை மாற்றவும், மேலும் ஆரோக்கியமானவற்றை மாற்றவும் கிடைக்கும் வாய்ப்பு. குறிப்பாக ஒருவருடனான பரிமாற்றத்தில், குழப்பமான உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் உண்மையிலேயே உங்களுக்குத் தேவை.
அதிக நேரம் மற்றும் பயிற்சி காரணமாக, விவேகமான தியானத்தின் சக்தி வெளி நோக்கி பரவுவதையும், நிலையான தியானத்தின் அகன்ற சக்தியானது உள்நோக்கி வருவதையும் உங்களால் போதுமான அளவில் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
ஒருநிலைப்படுத்தலை ஈன்ற தேவையான காரணிகள்
விவேகமான மற்றும் நிலையான தியானம் இரண்டிற்குமே ஒருநிலைப்படுத்தலை ஈன்ற தேவைப்படும் காரணிகள் பொதுவானவை. போதிசத்துவ நடத்தையில் ஈடுபடுதல், என்னும் தன்னுடைய புத்தகத்தில் சாந்திதேவா, நன்னெறி ஒழுக்கத்தை மேம்படுத்துதல் என்னும் உள்ளடக்கத்தின் கீழ் இவை குறித்து விவாதித்திருக்கிறார். எனவே முதலில் நாம் எவ்வாறு பேசுகிறோம் மற்றும் செயலாற்றுகிறோம் என்ற நம்முடைய மொத்த நடத்தை வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும், அதன் பின்னர் அவற்றை நம்முடைய மனதிற்கும் செயல்படுத்தலாம்.
நமக்குத் தேவையான மற்றும் பயன்படும் முக்கியமான மனதின் காரணியானது மனந்தெளிநிலை, அது ஒரு மனநிலையில் அல்லது நடத்தையில் மனதை பசை போட்டு இருக்க வைக்கும். “நினைவில் கொள்” என்ற அதே வார்த்தை தான், ஆனால் நாம் நினைவு கோப்பில் இருந்து எதையோ எடுத்து அதனை நினைவுபடுத்தல் என்ற அர்த்தத்தில் அது குறித்து பேசவில்லை. இது அதுவல்ல. இதன் அர்த்தம் எதையாவது நினைவில் வைத்து அதனுடன் பிடிமானமாக இருத்தல். நாம் கவனம் செலுத்தும் பொருள் மற்றும் நம்முடைய மனம் அதனுடன் எவ்வாறு தொடர்பில் இருக்கிறது என்பதற்கு நாம் மனப்பசையுடன் இருத்தல் தேவை.
மனந்தெளிநிலையோடு தியானித்தால், நாம் நம்முடைய மனப்பிடிமானத்திலும் கவனம் செலுத்துவோம். பொதுவாக நம்முடைய மனநிலையானது சிக்கலான உணர்வுகள், மனம் அலைபாய்தல் அல்லது மனச்சோர்வின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறதா என்று மொத்தமாக கண்டறிவதற்காக நாம் இங்கு மனதின் காரணியை பணியமர்த்துகிறோம் என்று சோங்காப்பா விவரிக்கிறார். நுட்பமான விவேகம் என்பதற்கு மாறாக அவர் குறிப்பாக மொத்த கண்டறிதல் என்று சுட்டிக்காட்டுகிறார். நுட்பமான விவேகம் என்பது அதன் நுணுக்க விவரங்களை அதிக ஈடுபாடு செலுத்தி சரிபார்த்தல், எனவே நம்முடைய கவனமானது அந்தப் பொருளின் மையம் என்ற முதன்மையில் இருக்காது. தியானத்தில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது அதாவது நாம் மிகவும் மூட பயம் கொள்கிறோம் அதாவது நாம் அந்தப் பொருளை இழக்கப் போகிறோம் என்று அலைபாயத் தொடங்கி, நாம் மிகவும் இருக்கமாகவும் பதற்றப்படவும் தொடங்குகிறோம். இது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். மற்றொரு புறம் நீங்கள் மிகவும் நிதானமாகவும் மெதுவாகவும் இருக்க விரும்பவில்லை; அது பயன்படவும் போவதில்லை.
நமக்குத் தேவை விழிப்புணர்வு, அது ஒரு அபாய எச்சரிக்கையைப் போன்றது. தியானத்தின் மையப்பொருளை நாம் இழக்கிறோம் என்பதைக் கண்டறிந்தால், விழிப்புணர்வு அபாய மணியை எழுப்பி – ஏதோ ஒன்று சரி செய்யப்பட வேண்டும் என எச்சரிக்கிறது. பின்னர் நாம் கவனத்தை மீண்டும் கொண்டு வருகிறோம்.
திருத்திக்கொள்ளப்பட வேண்டிய தவறுகள்
இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நாம் விடுபட முயற்சிக்கும் இரண்டு தவறுகள்: “மனதின் தவிப்பு” மற்றும் “மன மந்தநிலை.” மனதின் தவிப்பு என்றால் நமக்கு இருக்கும் இணைப்பு அல்லது விருப்பத்தின் காரணமாக மனம் அலைபாய்தல். அது வார்த்தைகளின் சிந்தனை அல்லது மன ஓட்டமாக வடிவமெடுக்கும். பெரும்பாலான பாரம்பரிய நூல்கள் தவிப்பை பாலியல் இணைப்பு என்ற வகையில் விவாதிக்கின்றன, ஒருவேளை அந்த காலகட்டத்தில் இருந்த முக்கிய பார்வையாளர்கள் பிரம்மச்சாரி துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள், அவர்களுக்கு பாலியல் இணைப்பை வென்று வருதல் மையப் பிரச்னையாக இருந்திருக்கலாம். ஆனால் இணைப்பு என்பது உணவு அல்லது இசை அல்லது வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனம் அலைபாய்தலுக்கு இருக்கும் வேறுபாடு என்பது எந்த சிக்கலான உணர்வு, சிந்தனை அல்லது சப்தத்தில் அல்லது ஏதேனும் புலன் சார் தலையீடு மூலமும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுவாக மனம் அலைபாய்தல் என்பது “கவனச்சிதைவு” என்றும் அழைக்கப்படுகிறது.
மன தவிப்பிற்கு பல நிலைகள் உள்ளன, ஒரு பொருளின் மீது நம்முடைய கவனம் அல்லது உணர்வை வைப்பதை கையாள்கிறது.
- மொத்த தவிப்பு – அந்தப் பொருள் மீதான உங்களது பிடிப்பை முழுவதுமாக இழந்து மற்ற எல்லா விஷயங்கள் பற்றியும் சிந்திக்கத் தொடங்குதல். மனந்தெளிநிலை, மனப் பசையானது மிகவும் பலவீனமடைவதால் நீங்கள் முழுவதுமாக அந்தப் பொருளையே மறந்து போவீர்கள்.
- நுட்பமான தவிப்பு – நீங்கள் அந்தப் பொருளில் இருந்து முழுவதுமாக விலகுவதில்லை ஆனால், அதே நேரம் அந்தப் பொருளை வேறு ஏதோ ஒன்றைப் பற்றிய அடிநீரோட்டத்தின் நடுவிலேயே பிடிமானம் வைத்திருப்பீர்கள்.
- நுண்ணுனர்வுடைய தவிப்பு – உங்களுக்கு அந்த அடிநீரோட்டம் கூட இருக்காது, ஆனால் அந்தப் பொருளில் இருந்து விலகிச் சென்று வேறு எதைப்பற்றியாவது சிந்திக்க வேண்டும் என்ற நச்சரிப்பு இருத்தல். மனப் பிடிப்பின் இறுக்கம் மிகவும் அழுத்தமாக இருக்கும் போது இது நிகழக் கூடும்.
மன மந்தநிலை அந்தப் பொருள் மீதான தெளிவைக் கையாள்கிறது, காட்சியாக இருந்தால் அது தோற்றமாக இருக்கலாம், அல்லது மன நிலையாக இருந்தால் இரக்கம் போன்ற உணர்வாக இருக்கலாம்.
- மொத்த மந்தநிலை – “தோற்றத்தை உருவாக்குதல்” உங்கள் மனதின் செயல்பாடு மிகவும் பலவீனமாக இருக்கிறது அதனால் எந்த காட்சி அல்லது உணர்வுக்கும் எழுச்சி தர முடியாது. அவற்றை இரண்டு காரணிகள் மூலம் இணைக்க முடியும், அவை “மூடுபனி – மனப்பான்மை,” அது மனம் மற்றும் உடலில் பாரமான உணர்வு, அல்லது தூக்கமின்மை மற்றும் தூக்கமும் கூட.
- நுட்பமான மந்தநிலை – ஒரு தோற்றம் இருக்கும், ஆனால் அதில் இருக்கும் பிடிமானம் போதுமான இறுக்கத்தில் இருக்காது எனவே அதன் கூர்மைத்தன்மையை இழக்கிறது. காட்சிப்படுத்தலின் நுணுக்கங்கள் மீதான கூர்மையான கவனம் குறித்து மட்டும் நாம் இங்கு பேசவில்லை, ஆனால் இரக்கம் போன்ற உணர்வும் கூட கவனத்தில் இல்லாமல் போகலாம். இது மிகவும் தெளிவற்ற உணர்வாக இருக்கலாம், அன்பு, அமைதி, நான் எல்லோரையும் நேசிக்கிறேன் – நீங்கள் ஒரு உணர்வை உருவாக்குகிறீர்கள், ஆனால் அது குறிப்பிட்ட இலக்கை இழக்கிறது அதாவது அனைவரும் துன்பங்களில் இருந்தும் அதற்கான காரணங்களில் இருந்தம் விடுபட வேண்டும் என்ற உணர்வு. ஒவ்வொரு நுணுக்கம், நாம் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு மனநிலையும் மிகவும் குறிப்பிடப்படுபவை, அவை தெளிவற்றதாக இருத்தல் கூடாது.
- நுண்ணுனர்வான மந்தநிலை – உங்கள் மனம் ஒரு பொருளை உருவாக்கும் போது உங்களுக்கு கூர்மையான கவனம் இருக்கும், ஆனால் அதன் மீதான பராமரிப்பு மிகவும் இறுக்கமாக இல்லை, எனவே அது புதிதாக, தெளிவாக அல்லது உயிர்ப்புடன் இல்லை. ஒவ்வொரு கணத்திலும் அது புதியதாக இருக்க வேண்டும், பழமையான ரொட்டியைப் போல அல்ல, அது மிகவும் பழையதாகவும் கடினமாகவும் இருக்கிறது, அது மிகவும் நன்றாக இல்லை.
“இடைவெளி விடுதல்” குறித்து நாம் பேசினால், அது மேலே இருக்கும் எந்தத் தவறுகளையும் குறிப்பிடலாம், எனவே இவற்றில் ஏதேனும் தோன்றினால் அதனை நாம் கண்டறிய வேண்டும். முதலில், அந்தப் பொருள் மீதான உங்களது மனதின் பிடிமானம் அல்லது மனநிலையை பொருத்துங்கள். அதன் பின்னர் மனந்தெளிநிலையோடு, மனப் பசையானது அதைப் போக விடாது.
திருப்திகரமான தியானத்திற்கு மிக முக்கியமான காரணி இதுவே. பிடிமானமாக இருத்தல், ஆனால் மிகவும் இறுக்கமாகவும் இல்லை, தளர்வாகவும் இல்லை. உதாரணத்திற்கு நீங்கள் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது பேக்கரி பக்கம் செல்கிறீர்கள் அங்கு அழகான கேக்குகள் இருக்கின்றன, நீங்கள் உங்களது உணவுக்கட்டுப்பாட்டில் பிடிமானமாக இருக்கிறீர்கள், பிடிமானமாகவே இருந்து அதில் இருந்து விலகிச் செல்லவில்லை, எனவே நீங்கள் அந்த கடைக்குள் சென்று ஒரு துண்டு சாக்லேட் கேக் வாங்கவில்லை. அல்லது அவர்கள் மேசையில் இருக்கும் அனைவருக்கும் ஐஸ்கிரீம் பரிமாறுகிறார்கள் நீங்கள் பிடிமானமாகவே இருந்து உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறாமல், “நன்றி, எனக்கு வேண்டாம்,” நான் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று சொல்லலாம்.
நாம் வழிதவறி செல்கிறோமா என்று பார்க்க நமக்கு கண்டறிதல் தேவை. “பொருளின் மீதான பிடிமானம் மற்றும் மனம் வைப்பதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? பொருளை அல்லது உணர்வை உருவாக்குவதில் என்னுடைய மனதில் ஏதேனும் தவறாக இருக்கிறதா? நாம் சில தவறை கண்டறிந்தால், விழிப்புணர்வு உள் எச்சரிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது இதனால் கவனம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது. அதே நேரத்தில், நாம் அது பற்றிய மூட ஐயம் கொண்ட காவலர் போல கட்டாயம் இருக்கக் கூடாது, அங்கு “என்னை” அதாவது காவலர் மற்றும் “நான்” அதாவது தியானித்தல் இரண்டிற்கும் இடையிலான இரட்டைத் தன்மை இருக்கிறது. இரட்டைத்தன்மை தியானம் போன்றவற்றை தவிர்ப்பதற்கு, சுயத்தின் வெற்றிடம் குறித்த சில புரிதல் தேவை - இந்த சாத்தியமற்ற இரட்டை வழியில் நாம் முற்றிலும் இல்லை.
தியானத்தில் பயிற்சிபெற்ற திறன்களின் நடைமுறை பயன்பாடு
பொருளின் மீது கவனத்துடனும் மனந்தெளிநிலை மற்றும் ஒருநிலைப்படுத்தலோடும் இருத்தல் என்பது நம்முடைய அன்றாட வாழ்வில் தேவைப்படுவது. அதனாலேயே நாம் தியானத்தை பயிற்சிக்கிறோம் : பலன்தரும் பழக்கங்களை நாம் மேம்படுத்தி அவற்றை நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்த முடியும். உதாரணத்திற்கு, நாம் யாருடனாவது பேசினாலோ அல்லது கவனித்துக் கொண்டிருந்தாலோ, நாம் அவருக்கு கவனம் செலுத்த வேண்டும். நாம் கவனத்துடன் இருக்க வேண்டும், அப்போது போய் மதியஉணவு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது அல்லது “வாயை மூடிக்கொண்டு போக வேண்டும்” என்று மனதிலேயே சொல்லிக்கொள்ளக் கூடாது. எனவே தனிப்பட்ட இடைவினைகள், நம்முடைய பணி, நம்முடைய படிப்பு உள்ளிட்டவை ஒருநிலைப்படுத்தலை பயிற்சிக்க சிறந்த பகுதிகள்.
நான்கு ஆதரவுகள்
நம்முடைய தியானத்தில் செயலாற்றும் போது ஒருநிலைப்படுத்தலைப் பெற நமக்கு தேவைப்படும் இரண்டு அம்சங்கள் வீரியம் (அடிக்கடி நாம் சொல்லும் “விடாமுயற்சி”) மற்றும் பொறுமை. வீரியம் என்பது உறுதி, பெரும்பாலும் கதாநாயகனுக்குரிய தைரியம் மற்றும் நேர்மறையான ஏதோ ஒன்றை அடையும் முயற்சி. அதுவே பொறுமை என்பது கோபப்படாமல் அல்லது ஊக்கம் இழக்காமல் அனைத்து கஷ்டங்கள் மற்றும் கடினங்களையும் தாங்கும் திறன். போதிசத்துவ நடத்தையில் ஈடுபடுதல் , என்னும் தன்னுடைய புத்தகத்தில் சாந்திதேவா, வீரியத்தை மேம்படுத்த உதவி செய்யும் ஆறு காரணிகளை விளக்குகிறார். அவை நான்கு ஆதரவுகள் மற்றும் இரண்டு சக்திகள் எனப்படுகின்றன, அவை அறிந்து கொள்ளவும் அதனுடன் செயலாற்றவும் பயனுள்ளவை.
முதலாவது உறுதியான நம்பிக்கை அல்லது உறுதியான அவா. “அவா” என்பது விருப்பத்திற்கான வலுவான வார்த்தை மேலும் அது இலக்கை அடைவதற்கான பலனிற்கு உறுதியான நம்பிக்கை என்றும் இலக்கை அடையாததற்கான குறைபாடுகளை விளக்குகிறது, எனவே அதனை அடைவதற்கான அபிலாஷைகளை திசை திருப்பவோ அல்லது திருப்பி விடவோ முடியாது. பல்வேறு மன நிலைகள் குறித்து நாம் படித்தால் நாம் நம்முடைய பௌத்த பயிற்சியுடன் அதனை அடைய விரும்புவோம், அதற்கு கைமாறாக நமக்கு முதலில் கிடைப்பதெல்லாம் அதனை அடைவதற்கான பலன்கள் அதன் குறைபாடுகளை அல்ல. பயில்வதற்கு இவை முக்கியமானவை. சாந்திதேவா தன்னுடைய புத்தகத்தகமான போதிவிட்டாவின் முதல் அத்தியாயத்தில் இந்த முறையை பின்பற்றினார். இந்த மனநிலையை கொண்டிருப்பதற்கான பலன்களால் நம்பிக்கை பெறுவோம், மேலும் அது நமக்கு உறுதி மற்றும் அதற்காக பணியாற்றுவதற்கான மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. எப்போதெல்லாம் நாம் ஊக்கமிழக்கிறோமோ, நாம் அடைய நினைக்கும் இலக்கின் பலன்கள் என்ன என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.
அடுத்தது உறுதியான அல்லது தன் – நம்பிக்கை. “உறுதியான தன்மை”க்கு அர்த்தம் பயிற்சியில் உறுதியாகவும் விடாமுயற்சியுடனும் இருத்தல், இது நாம் அடைய விரும்பும் இலக்கை நம்மால் அடைய முடியுமா என்று ஆய்வதில் இருந்து வருகிறது, மேலும் நம்மால் முடியும் என்று நம்ப வைக்கிறது. தன் நம்பிக்கையுடன், உறுதியாக நமக்கு நாமே செயல்படுத்தினால், செயல்முறையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், யதார்த்தத்தில் என்ன நடக்கிறது என்பதே விஷயம். சில நாட்கள் சிறப்பாக அமையும் மேலும் மற்றவை மிக மோசமாக இருக்கும். சில நாட்கள் நாம் செல்வதே அரிது, மற்ற நாட்களில் நாம் பயிற்சி செய்யவே விரும்புவதில்லை. ஆனால் நாம் பலன்களால் நம்பிக்கை கொண்டால், நமக்கு விடாமுயற்சி இருந்தால், அது ஒரு கவசம் போன்றது என்று விவரிக்கப்படுகிறது, அதன் பின்னர் நாம் “இது ஒரு விஷயமே இல்லை. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை, நான் ஒவ்வொரு நாளும் நிதானமாகத் தொடரப்போகிறேன். இறுதியில், என்னுடைய இலக்கை அடைவது சாத்தியமே என்று எனக்குத் தெரியும்” என்று சிந்திப்போம்.
இந்தச் செயல்முறையை நாம் நீண்டகாலம் செய்வதன் மூலம் நாம் மிகவும் செறிவடைந்திருக்கிறோம் என்ற படிப்படியான இயல்பைக் காண முடியும், அதன் பின்னர் நாம் அடுத்த ஆதரவை மேம்படுத்துவோம், அது தான் மகிழ்ச்சி. சிறு செயல்முறையிலேயே நாம் திருப்தியடைவதில்லை, எனவே சுய - திருப்தி என்னும் உணர்வுடன் மேலும் மேலும் வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த முயற்சியை எடுப்போம். இதன் முடிவு நிச்சயமாக நாம் மகிழ்ச்சியாக இருப்போம், ஏனெனில் இவையெல்லாவற்றின் ஒட்டு மொத்த புள்ளி துன்பத்தை வெளியேற்றுதல். நம்முடைய மனம் குறைவாக திசை திரும்பினால், குறைவான மன உளைச்சல் மற்றும் குறைவான தொந்தரவு, நிச்சயமாக நாம் மகிழ்ச்சியாக இருப்போம். இதைப் பார்க்கும் போது உண்மையில் நாம் வியப்படைந்து மேலும் மேலும் செயல்முறைகளை செய்வதற்கான முனைப்பைக் காட்டுவோம்.
நான்காவது ஆதரவு ஓய்வு, அதாவது நாம் சோர்ந்து போனால் இடைவெளி எடுப்பது. இது நம்முடைய சோம்பேறித்தனத்தால் அல்ல, மாறாக நமக்கு நாமே புத்துணர்வு கொடுப்பதற்காக. அதிக அழுத்தம் கொடுப்பதை விட நம்முடைய முயற்சிகளை எதுவும் மோசமாக அழித்து, அதை எரித்துவிடுவதற்கான காரணத்தை நமக்குத் தரப்போவதில்லை. அதிக அழுத்தம் கொடுப்பதால் உண்மையில் நம்முடைய உடலில் உள்ள சக்தியானது சோர்வடைகிறது – வெடிக்கும் அளவிற்கு பலூனை அழுத்துவதைப் போல. நமக்கு ஓய்வு தேவையா என்பதை தீர்மானித்து அவற்றை நமக்கு நாமே மதிப்பிட முடிய வேண்டும் – இதற்காக குற்றஉணர்வாக உணரக் கூடாது! நம்முடைய குழப்பமான உணர்வுகளை அதிகரிக்காமல் நாம் இளைப்பாறுவதற்கு உதவும் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பது நல்லது. நிச்சயமாக இது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். வீரியத்திற்கான நான்கு ஆதரவுகள் இவையே.
இரண்டு சக்திகள்
இப்போது நாம் பார்க்கப் போவது இரண்டு சக்திகள். இதில் முதலாவது இயல்பாகவே ஏற்றுக்கொள்ளுதல், அதாவது நம்முடைய இலக்கை அடைவதற்காக நாம் என்ன பயிற்சிக்க வேண்டும், எதில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல். நம்முடைய சூழ்நிலையில் இருக்கும் யதார்த்தத்தை பார்த்து, நாம் வெளியேற வேண்டியதில் ஈடுபட்டிருப்பவற்றின் கஷ்டங்களை இயல்பாக ஏற்றுக்கொள்வதுமாகும், உதாரணத்திற்கு சிக்கல் தரும் உணர்வுகள். தொடக்கத்தில் நாம் யதார்த்தமாக இருந்தால், அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் பின்னர் வியப்படைய மாட்டோம்.
புனிதர் தலாய் லாமா அடிக்கடி சொல்வார், “பௌத்தம் எளிமையானது மற்றும் விரைவானது என்று சொல்லும் எந்த பௌத்த ஆசிரியர் அல்லது நபரும் சந்தேகத்திற்குரியவர்கள் மற்றும் அவர்களின் நோக்கமும் சந்தேகமானது, ஏனெனில் அது அவ்வளவு எளிதானதோ அல்லது விரைவானதோ அல்ல. நாம் குழப்பமான உணர்வுகளுக்கு பழக்கப்பட்டவர்கள், அதில் இருந்து வெளியேறுவதென்பது ஒரு மாத்திரை போட்டால் தீர்ந்து விடும் என்பது போன்றதல்ல” என்கிறார். என்னுடைய ஆசிரியர்களில் மற்றொருவரான, கெஷ் க்வாங் தர்க்யேய், “பௌத்த மதத்தில் எளிதான மற்றும் விரைவான பாதைகளுக்கு ஈர்க்கப்பட்டவராக யார் இருந்தாலும், இதன் அடிப்படை சோம்பல் காரணமாகும். உண்மையில் அவசியமான கடின உழைப்பில் ஈடுபட அவர்கள் விரும்பவில்லை” என்று கூறுவார்.
இரண்டாவது சக்தி கட்டுப்பாட்டை எடுத்தல், அதாவது நாம் அடைய விரும்புவது என்ன என்று கட்டுப்பாட்டில் எடுத்து அதனை நமக்கு நாமே செயல்படுத்துதலாகும். நமது சோம்பேறித்தனம் அல்லது வேறு எந்த குழப்பமான உணர்ச்சியையும் கட்டுப்படுத்த விடாமல், ஒரு இலக்கை அடைய வேண்டும் என்ற நமது அபிலாஷையே கட்டுப்பாட்டை எடுக்கும். “ஒரு குழந்தையைப் போல செயல்படுவதை நிறுத்து. ஒன்றாகச் சேர்த்து அதனைச் செய்! ”என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும்.
சோர்வு அல்லது சோம்பல்?
சோர்வு மற்றும் சோம்பேறித்தனம் இரண்டிற்கும் எவ்வாறு வேறுபாடு காண முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். முதலாவதாக, பல்வேறு விதமான சோம்பேறித்தனங்கள் இருக்கின்றன, அதாவது நாம் அற்பமான விஷயங்களால் கவனம் திசைதிரும்புவதைப் போல. நாம் நம்முடைய தியானத்தை செய்யவோ அல்லது படிக்கவோ மிகவும் சோம்பல்படுகிறோம், மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது இணையதள தேடுதலில் நேரத்தை செலவிட்டு கவனத்தை திசை திருப்புவது. பின்னர் அதுவரை விஷயங்களை தள்ளிவைக்கலாம் என்ற சோம்பல் வருகிறது, இதனால் எப்போதும் விஷயங்களை ஒத்திவைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். "என்னால் அதைச் செய்ய முடியாது" போன்ற ஒரு வகையான சோம்பேறித்தனமும் உங்களுக்கு சாக்குகளை ஏற்படுத்துகிறது.
நாம் சோர்வாக இருந்தாலும், நம்மால் செய்ய முடியும் என்ற விருப்பம் இருந்து கொண்டே இருக்கும் : உண்மையில் நான் அதைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் எனக்கு இப்போது மிகவும் துக்கமாக இருக்கிறது, எனவே நான் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு நான் மீண்டும் திரும்பிச் சென்று அதைச் செய்வேன்” என்று உறுதி கொள்தல். இது சாக்கு போக்கையோ அல்லது அக்கறையின்மையையோ ஏற்படுத்தாது. சோம்பேறித்தனத்திற்கு தொடரலாம் என்ற விருப்பமே உண்மையில் இருக்காது.
சுருக்கம்
தியானம் எளிதானதல்ல, நம்பமுடியாத உணர்தல்களை அடைவதற்கு விரைவான வழிகள் உள்ளன என்று கூறும் எவரிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் பொதுவாக, அப்படி ஒருபோதும் நடக்காது.
நம்முடைய தியானம் ஒரு செயலுக்கான செயல்முறையாக இருக்க வேண்டும், இது மந்தமான அல்லது சலிப்பான ஒன்றல்ல, அங்கு நாம் கவனித்த மற்றும் சிந்தித்த போதனைகளை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். நாள்தோறும், ஆண்டுதோறும் இதைச் செய்ய முடிந்தால், போதனைகள் வேரூன்றிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை, பிரச்சினைகள் அல்லது எதிர்மறை உணர்ச்சிகள் எழும்போது, அவர்கள் விரும்புவதைப் போல, இறுதியில் அவற்றை சிரமமின்றி சமாளிக்க முடியும்.