சரியான பார்வை மற்றும் நோக்கம்

எது சரி, தவறு, எது உதவிகரமானது, தீங்கு விளைவிப்பது என்பதை வேறுபடுத்தி பார்ப்பதே சரியான விழிப்புணர்வாக இருக்கும். இதற்காக எண்வகை மார்க்கத்தில் கடைசி இரண்டு வகைகள் உள்ளன : சரியான பார்வை மற்றும் சரியான நோக்கம் (சரியான ஊக்குவிக்கும் சிந்தனை).

சரியானது என நாம் நம்புபவற்றில் எது சரி எது தவறு அல்லது எது உதவியானது, தீங்கு விளைவிப்பது என்பதை சரியாக வேறுபடுத்துவதன் அடிப்படையில் சரியான பார்வையை காட்டுகிறது. சரியான உந்துதல் என்பது ஆக்கப்பூர்வமான மனநிலைக்கு அதனை முன் நடத்துக்கிறது.

பார்வை

நமக்கு சரியான அல்லது தவறான வேறுபடுத்தும் விழிப்புணர்வு இருக்கலாம்:

  • நாம் சரியாக பாகுபடுத்தலாம் அது உண்மை என்றும் நம்பலாம்.
  • நாம் தவறாக பாகுபடுத்தலாம் அது உண்மை என்றும் நம்பலாம்.

தவறான பாகுபாட்டை கொண்டிருக்கும் போது அது உண்மை என்று பிடிமானமாக இருத்தலே தவறான பார்வை, சரியான பார்வை என்பது சரியான பாகுபடுத்தலைக் கொண்டிருக்கும் போது அது சரியானது என உறுதியாக இருத்தலாகும்.

தவறான பார்வை

தவறான பார்வை என்பதற்கான உதாரணம் நம்முடைய செயல்களில் சிலவை ஆக்கப்பூர்வமானதாக இருக்கின்றன, சில அழிவுகரமாக இருக்கின்றன என்பதற்கான நன்னெறி பரிமாணம் இல்லை என்று நம்புவதோடு, நம்முடைய அனுபவத்தில் எதிர்பார்க்கும் முடிவுகளை இவை தராது என்றும் நம்புவதாகும்.  இன்று பலருக்கும் இருக்கும் “எதுவாக இருந்தாலும்” என்ற மனநிலையால் இது வகைபடுத்தப்படுகிறது. அது ஒரு பொருட்டல்ல; எதுவும் முக்கியமில்லை. எதுவாக இருந்தாலும்; நான் இதைச் செய்கிறேனோ அல்லது செய்யவில்லையோ, அது ஒரு பொருட்டல்ல. இது தவறானது. நீங்களை புகைப் பிடிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியம். நீங்கள் புகைப்பிடிப்பதால் உங்களுடைய ஆரோக்கியத்தில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

மற்றொரு தவறான பார்வை நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள மற்றும் குறைபாடுகளை கடந்து வர வழிகளே இல்லை என்று நம்புவதாகும், அதனால் கவலைப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. இது தவறானது, ஏனெனில் நிலையானது அல்லது மாறாதது என்று எதுவுமே இல்லை. மற்றவர்களிடம் அன்போடு இருப்பதிலோ அல்லது பிறருக்கு உதவ முயற்சிப்பதிலோ எந்தப் பயனும் இல்லை என்று சிலர் நம்பலாம், எனவே அனைவரையும் நன்றாக பயன்படுத்திக்கொண்டு முடிந்த வரையிலான பலனைப் பெற்றால் அது மகிழ்ச்சியைத் தரும் என்று நினைக்கிறோம். இது தவறானது, ஏனெனில் இவை மகிழ்ச்சியை முன்நடத்தாது. நம்முடைய திறமையை மற்றவர்கள் திருடுவதென்பது பேராசை, சண்டை மற்றும் கவலையை கொண்டு வரும்.

தவறான பாகுபடுத்தலில் பல வகைகள் இருக்கின்றன. இதனால் துன்பம் மற்றும் அதன் காரணிகளைக் கையாள முடியும், உதாரணத்திற்கு உங்களுடைய குழந்தை பள்ளியில் தவறாக நடந்து கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். தவறான பாகுபடுத்தல் “இது எல்லாமே என்னால் தான். பெற்றோராக இது என்னுடைய தவறு” என்று நினைக்கும். சாதாரணமானவை பற்றிய தவறான பாகுபடுத்தலின் வெளிப்பாடு இது. ஒரே ஒரு காரணத்தால் எந்தக் காரிய காரணமும் எழாது. ஒரு விஷயம் நடப்பதற்கு பல காரணங்களின் தொகுப்புகள் இருக்கும், பல காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும், ஒன்றே ஒன்று மட்டும் காரணமல்ல. நாமும் அதில் பங்காற்றி இருக்கலாம், ஆனால் நாம் மட்டுமே பிரச்னைக்கான காரணமல்ல. சில நேரங்களில் நாம் காரணமாக இல்லாமல் கூட இருக்கலாம் – தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். குழப்பமான ஒருவரை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் இங்கு அவரை உதாரணமாகச் சொல்கிறேன்: அவர் கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றார், அந்த அணி தோல்வியை சந்தித்தது. தான் பங்கேற்றதாலேயே அந்த அணி தோல்வியைச் சந்தித்ததாக அவர் கருதினார். “என்னால் தான் அணி தோற்றது” என்று புலம்பினார். இது அப்பட்டமானது. சாதாரணமாக நடந்த ஒன்றைப் பற்றிய தவறான பாகுபடுத்தல் இது.

சரியான பார்வை

சரியான விழிப்புணர்வு பாகுத்தாய்வு என்பது முக்கியமானது, இதற்காக நாம் யதார்த்தம், காரணத்தின் உண்மை உள்ளிட்டவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வானிலை மாற்றத்திற்கு பல்வேறு காரணங்களும், காரியங்களும் இருப்பது போலத் தான். நம்முடைய குழந்தை பள்ளியில் செய்த தவறுக்கு நாம் செய்யும் ஒரே ஒரு செயலால் அனைத்துமே நன்றாகி விடும் என்று தவறாக நம்மை நாமே கடவுள் போல சித்தரித்துக்கொள்ளக் கூடாது. எந்த விஷயமும் அப்படி நடக்காது.

விழிப்புணர்வை பாகுபடுத்த பொது அறிவு, நுண்ணறிவோடு நம்முடைய சரியான பாகுபடுத்தலுக்கான ஒருமுகத்தன்மையோடு கவனத்துடன் இருக்க வேண்டும். இதற்கு நமக்கு ஒழுக்கம் தேவை. இப்படியாக அனைத்தும் ஒருங்கே பொருந்திப் போகும்.

நோக்கம் (சிந்தனையை ஊக்குவித்தல்)

உதவிகரமானது எது தீங்கு விளைவிப்பது எது என்று ஒரு முறை நாம் பாகுபடுத்திவிட்டால், நிதர்சனம் எது, நிச்சயமில்லாதது எது, நம்முடைய நோக்கம் அல்லது ஊக்குவிக்கும் சிந்தனையின் அக்கறை ஒரு விஷயத்தை நாம் பாகுபடுத்துவதால் ஏற்படும் தாக்கம் அல்லது நாம் பேசும் விதம் அல்லது செயல் நமது அணுகுமுறையை எவ்வாறு பாதிக்கிறது அல்லது வடிவமைக்கிறது என்பதைப் பற்றியது. நாம் தவறாக பாகுபடுத்தினால், தவறான ஊக்குவிக்கும் சிந்தனை பின்பற்றப்படும், சரியாக பாகுபடுத்தினால், சரியான ஊக்குவிக்கும் சிந்தனை பின்பற்றப்படும்.

தவறான நோக்கம்

நோக்கம் அல்லது ஊக்குவிக்கும் சிந்தனையின் தாக்கத்திற்கு மூன்று முக்கிய பகுதிகள் இருக்கின்றன:

உணர்வுகளின் ஆசை

தவறான ஊக்கமளிக்கும் சிந்தனை என்பது சிற்றின்ப ஆசையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் - உணர்வுபூர்வமான பொருள்களுடன் ஒரு ஏக்க ஆசை மற்றும் இணைப்பு, அவை அழகான விஷயங்கள், இசை, நல்ல உணவு, நல்ல உடைகள் மற்றும் பல. ஆசைகளை தொடர விரும்பும் நம்முடைய ஊக்குவிக்கும் சிந்தனையானது அவை தான் முக்கியம் என்ற தவறான பாகுபடுத்தலை அடிப்படையாகக் கொண்டது. நமக்கு சரியான பாகுபடுத்தல் இருந்தால் நம்மிடம் சமநிலை இருக்கும், அந்த சம மனநிலையானது பொருள்கள் மீது இருக்கும் பிணைப்பில் இருந்து விடுவிக்கிறது.

இதற்கான உதாரணம், நாம் எங்கு இரவு உணவு சாப்பிட்டோம் மற்றும் என்ன சாப்பிட்டோம் என்பது மிக முக்கியம் என்று தவறாக பாகுபடுத்துகிறோம். நாம் இரவு உணவு சாப்பிட சரியான இடம் மற்றம் உணவு தேர்ந்தெடுத்தால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று கருதுகிறோம். நீங்கள் சரியாக பாகுபடுத்தினால் இது முக்கியமல்ல என்பதைப் பார்க்க முடியும், இரவு உணவாக என்ன சாப்பிட்டோம் அல்லது தொலைக்காட்சியில் என்ன நிகழ்ச்சி என்பதைவிட வாழ்வில் வேறு பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. மனது மிகவும் நிதானமாகவும், சீரானதாகவும் மாறும்.

வன்மம்

இரண்டாவது தவறான உந்துதல் அல்லது நோக்கம், யாரோ ஒருவருக்கு தீங்கோ அல்லது அவர்களைத் துன்புறுத்தவோ செய்தல். ஒருவர் செய்யும் தவறால் உங்களுக்கு கோபம் வருகிறது, இதனால் அவர்கள் உண்மையில் மோசமானவர்கள் என்று நினைத்து அவர்களை தண்டிக்க விரும்புகிறோம்; இது தவறான பாகுபடுத்தலாகும். 

மனிதர்கள் எப்போதுமே தவறு செய்யமாட்டார்கள் என்று நாம் தவறான பாகுபடுத்தலைக் கொண்டிருக்கிறோம், இது பொருத்தமில்லாதது. நமக்கும் கோபம் வரலாம் யாரையாவது அடிக்கலாம் என்று தோன்றும், ஆனால் நமக்கு சரியான பாகுபடுத்தல் இருந்தால், நாம் நல்லெண்ணத்தை மேம்படுத்துவோம். இதுவே மற்றவர்களுக்கு உதவுவதற்கான விருப்பம் மற்றும் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தலாகும், இது வலிமை மற்றும் மன்னித்தலை உள்ளடக்கியது. யாரேனும் தவறு செய்தால் இது இயல்பு தான் என்று நீங்கள் உணர்வீர்கள் மனதில் உட்பகை இருக்காது.

கொடூரம்

தவறான நோக்கத்திற்கான மூன்றாவது வகை மனம் கொடூரத்தால் நிறைந்திருப்பது, இவை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:

  • போக்கிரித்தனம் – இரக்கமின்றி பிறர் துன்பப்படவும், மகிழ்ச்சியின்றி இருக்கவும் விரும்புதல். உதாரணத்திற்கு, மற்ற கால்பந்து அணியின் ரசிகர்களை நாம் கொடூரமானவர்கள் என்று கருதி அவர்களிடம் சண்டையிடுகிறோம் ஏனெனில் அவர்களுக்கு மற்றொரு அணி பிடித்திருக்கிறது.
  • சுய வெறுப்பு- சுய- அன்பு இல்லாததன் காரணமாக நாம் நம்முடைய மகிழ்ச்சியை நாசப்படுத்துகிறோம் ஏனெனில் நாம் மோசமான மனிதர் என்று நினைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்கத் தகுதி இல்லாதவர் என்று கருதுகிறோம். ஆரோக்கியமற்ற உறவுமுறைகள், கெட்டப்பழக்கங்களை கடைபிடித்தல், மற்றும் அளவிற்கு அதிகமாக உண்ணுதல் போன்றவைகளால் நாம் அடிக்கடி இதனைச் செய்கிறோம்.
  • வக்கிரமமான மகிழ்ச்சி – மற்றவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதை கேட்டோ அல்லது பார்த்தோ கொண்டாடுவது. யாரோ ஒருவர் மோசமானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதனால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பம் அவர்களுக்குத் தேவைதான் என்று கருதுகிறீர்கள்,நமக்கு பிடிக்காத அரசியல்வாதி தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பது போல. சிலர் மோசமானவர்கள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், எல்லாமே தவறாக நடக்க வேண்டும் என்று இங்கு நாம் தவறாக பாகுபடுத்துகிறோம் ஆனால் மற்றவர்களுக்கு, குறிப்பாக நமக்கு எல்லாமே நன்றாக நன்றாகச் செல்ல வேண்டும்.

சரியான நோக்கம்

சரியான நோக்கம் சரியான பாகுபடுத்தலை அடிப்படையாகக் கொண்டது அது அகிம்சை, கொடூரமில்லாத தன்மை கொண்டது. துன்பத்தில் இருப்பவர்களை எரிச்சலுட்டவோ அல்லது அவர்களைக் கடிந்து கொள்ளவோ, அவர்ளுக்கு தீங்கு ஏற்படுத்தவோ விரும்பாத மனநிலை இருக்கும். அவர்களுக்கு தவறாக ஏதேனும் நடந்தால் நாம் அமைதியாக இருக்க மாட்டோம். இது ஒரு வகை இரக்க குணமும் கூட, மற்றவர்கள் துன்பங்களில் இருந்தும் அதற்கான விளைவுகளில் இருந்தம் விடுபட வேண்டும் என்று விரும்புதல், ஏனெனில் ஒவ்வொருவரும் துன்பப்படுவதை நாம் பார்க்கிறோம், யாருமே துன்பப்பட விரும்புவதில்லை, யாருமே துன்பப்பட தகுதியானவர்கள் அல்ல. மனிதர்கள் தவறு செய்தால், உள்ளூர அவர்கள் மோசமானவர்கள் அல்ல அவர்களின் குழப்பமே அதற்குக் காரணம் என்பதைக் காண முடியும். சரியான பாகுபடுத்தலுடன், சரியான நோக்கமும் இருந்தால் இயற்கையாகவே சரியான பேச்சு மற்றும் செயலுக்கு வழிவகுக்கும்.   

எட்டு காரணிகளை ஒருங்கே பொருத்துதல்

நல்வழிக்கான எட்டு காரணிகள் அனைத்தையும் ஒருங்கே பொருத்துதல்:

  • சரியான பார்வை மற்றும் நோக்கம் பயிற்சிக்கான சரியான அடித்தளத்தை அமைக்கிறது, சரியான பேச்சு, செயல் மற்றும் வாழ்வியலில் ஈடுபட இயற்கையாகவே நம்மை வழிநடத்துகிறது. நம்முடைய நடத்தை மற்றவர்களிடத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு உதவ விரும்புவது, அவர்களை துன்புறுத்தாமல் இருப்பதை உள்ளிட்டவற்றை கொண்டு எது சரி என்று நாம் பாகுபடுத்தலாம். 
  • இதன் அடிப்படையில் நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம், நல்ல பண்புகளை வளர்க்க மற்றும் நம்முடைய உடல் மற்றும் உணர்வுகள் குறித்த அபத்தமான எண்ணங்களால் கவனம் திரும்பாமல் இருக்கலாம். ஒருமுகப்படுத்தலை பயன்படுத்தி எது பலன் தரக்கூடியது என்பதில் நாம் கவனத்துடன் இருப்பலாம், அதன் பின்னர் நமது நோக்கமான வலிமையானதாக வளரும். இந்த வழியில் இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. 

மூன்று பயிற்சிகள் மற்றும் எண் மார்க்கப் பாதைகளை நாம் ஒருங்கே செயல்படுத்த முடியும் என்றாலும், அவை அனைத்தையும் முழுமையான ஒன்றாக நடைமுறையில் கொண்டு வர முடியும் என்பதே இறுதி நோக்கம்.

சுருக்கம்

காலையில் எழுந்திருக்கும் அந்த நொடி முதல் இரவு உறங்கப்போகும் வரை, நம்முடைய புலன்கள் பொழுதுபோக்கிற்காக ஏங்குகின்றன. நம்முடைய கண்கள் அழகிய வடிவங்களையும், நம்முடைய காதுகள் இனிமையான ஓசைகளையும், நம்முடைய வாய் அறுசுவைகளையும் விரும்புகிறது. மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற விரும்புவதில் குறிப்பாக எந்தத் தவறும் இல்லை, இது நம்முடைய வாழ்க்கையின் நீட்சியாக இருந்தாலும் நாம் எப்போதும் திருப்திகொள்ள மாட்டோம், மேலும் நம்மால் ஒருபோதும் ஒரு அவுன்ஸ் அளவு கூட ஒருமுகத்தன்மையை மேம்படுத்த முடியாது.

நன்னெறியில் உள்ள மூன்று பயிற்சிகள், ஒருமுகத்தன்மை மற்றும் விழிப்புணர்வு நம்மை வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் முடிந்த வரையில் சிறந்த வழியில் வாழ அனுமதிக்கிறது. ஒருவரின் மகிழ்ச்சியைத் தேடுவதற்குப் பதிலாக, எண்மார்க்க பாதை நாம் மட்டுமின்றி மற்றவர்களும் பலன் அடைவதற்கான அச்சுருவைத் தருகிறது. சரியான பார்வைகள் ஏன் சரியானவை, தவறான பார்வைகள் ஏன் அவ்வாறு இல்லை என்பதை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ளும்போது, சரியான செயல்கள் ஏன் உதவிகரமாக இருக்கின்றன, தவறான செயல்கள் தீங்கு விளைவிக்கின்றன (மற்றும் பல) இதற்கு ஏற்ப நடந்து கொள்ளும்போது,நம் வாழ்க்கை தானாகவே மேம்படும் . "ஒரு முழு பௌத்த வாழ்க்கை" என்று நாம் அழைப்பதை வழிநடத்துவோம்.

Top