தர்மம் என்பது வாழ்வில் உள்ள பிரச்னைகளைக் கையாள்வதற்கானது
தர்ம பயிற்சியில் நம்மை நாமே ஈடுபடுத்திக் கொள்ள நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் பல வகையான பிரச்னைகள் அல்லது வாழ்வில் நமக்கு இருக்கும் கஷ்டங்களை உணர்தல். அடுத்ததாக தர்ம பயிற்சியின் நோக்கமென்பது நம்முடைய பிரச்னைகளில் இருந்து வெளியேறுவதற்காக உதவுவது என்பதை அடையாளம் காணுதல்.
தர்ம பயிற்சி என்பது நல்லவராக உணர மட்டுமோ, அல்லது ஒரு நல்ல பொழுதுபோக்கை கொண்டிருப்பதற்காகவோ, அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல இருப்பதற்காகவோ அல்ல. தர்ம பயிற்சி நம்முடைய பிரச்னைகளில் இருந்து வெளியேறுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது. அதாவது, தர்மத்தை யதார்த்தமாக பயிற்சிக்க வேண்டுமானால், அது ஒரு இனிமையான செயலாக்கமாக இருக்கப் போவதில்லை என்பதை நாம் உணர வேண்டும். நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் நம்முடைய வாழ்வின் துன்பமான விஷயங்கள், நமக்கு இருக்கும் கஷ்டங்களையும் சந்திக்கத் தயாராக இருத்தல் வேண்டும் – அதில் இருந்து தப்பித்து ஓடுவதற்கு பதிலாக நான் இப்போது இந்த சிக்கலை கையாள முயற்சிக்கப் போகிறேன் என்ற அணுகுமுறையோடு அதனை எதிர்கொள்ளுங்கள்.
நம்முடைய பிரச்னைகள் பல வடிவங்களை எடுக்கலாம். அவற்றில் பல நமக்கு பரிட்சயமானவை – நாம் பாதுகாப்பற்றவர்கள்; மற்றவர்களுடனான நம்முடைய உறவுமுறைகளில் நாம் கஷ்டங்களைக் கொண்டிருக்கிறோம்; நாம் மனம் உடைந்ததாக உணர்வோம்; நம்முடைய உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் நமக்கு இடர்பாடுகள் இருக்கிறது – இவை அனைத்தும் நாம் அனைவரும் எப்போதும் கொண்டிருப்பவை.
நம்முடைய குடும்பத்தினர் மற்றும் பெற்றோரைக் கையாள்வதற்கு சிரமப்படுகிறோம்; அவர்களுக்கு வயது முதிர்வு மற்றும் உடல்நலமில்லை. நம்முடைய சொந்த உடல் சுகமின்மை மற்றும் வயோதிகத்தைக் கையாள்வதில் கஷ்டங்களைக் கொண்டிருக்கிறோம். மேலும் நாம் இளைஞராக இருந்தால், நம்முடைய வாழ்வில் என்ன செய்யப் போகிறோம், வாழ்வை எப்படி தீர்மானிக்கப்போகிறோம், எந்த திசையில் செல்லப் போகிறோம் என்பன உள்ளிட்டவற்றை கட்டமைப்பதில் கஷ்டங்களைக் கொண்டிருக்கிறோம். நாம் இது போன்ற எல்லாவற்றையும் பார்க்க வேண்டியது அவசியம்.
குழப்பம்
பௌத்தத்தில் நாம் உணர வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் நாம் அனுபவிக்கும் எல்லாப் பிரச்னைகளும் காரணங்களில் இருந்து தோன்றுகின்றன. எந்தக் காரணமும் இல்லாமல் அவை அங்கே இல்லை. இந்தப் பிரச்னைகளுக்கான ஆதாரம் நமக்குள்ளாகவே இருக்கிறது. இது பெரிய உள்நோக்கு பெருவாரியான மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய பிரச்னைகளுக்கு பிறரையோ அல்லது வெளிப்புற சூழல்களையோ குற்றம் சாட்டுகிறோம். “நீ செய்த விஷயத்திற்காக நான் கஷ்டப்படுகிறேன் – நீ என்னை கூப்பிடவில்லை; நீ என்னை கைவிட்டுவிட்டாய்; நீ என்னை நேசிக்கவில்லை” என்று நாம் நினைக்கிறோம். இது எல்லாமே உங்களுடைய தவறு. இல்லாவிட்டால் நாம் நம்முடைய பெற்றோர் மீது பழி சுமத்துகிறோம் – நாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது பெற்றோர் என்ன செய்தார்கள் அல்லது நமக்கு என்ன செய்யவில்லை என்று குறை சொல்கிறோம். இல்லாவிடில் பொருளாதார சூழல் அல்லது அரசியல் சூழல் அல்லது சமூக சூழல் உள்ளிட்டவற்றை குற்றம் சொல்கிறோம். நிச்சயமாக, இந்தக் காரணிகள் அனைத்தும் நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் பங்காற்றுகின்றன. பௌத்தம் அதை நிராகரிக்கவில்லை. ஆனால் முக்கியமான காரணம், நம்முடைய பிரச்னைகளுக்கான ஆழ்ந்த காரணம் நமக்குள்தான் இருக்கிறது – அது நம்முடைய அணுகுமுறை குறிப்பாக நம்முடைய குழப்பம்.
அன்றாட வாழ்வில் பௌத்தத்தை பயிற்சிப்பதற்கான அர்த்தம் என்ன? பௌத்த அணுகுமுறையின் அக்கறையை தெளிவாக விளக்கும் ஒரு காரணியை நாம் காண விரும்பினால், நான் உறுதியாகச் சொல்வேன் இது தான் அது. நமக்கு கஷ்டங்கள் இருந்தால், நமக்குள்ளாகவே அதற்கான ஆதாரத்தை காண முயற்சிக்க வேண்டும், மேலும் ஒரு முறை நாம் அடையாளம் கண்டுவிட்டால், நாம் அந்தச் சூழலை அதில் இருந்து மாற்ற முயற்சிக்கலாம். நம்முடைய பிரச்னைகளுக்கான ஆதாரத்தை தேடுதல் மற்றும் அதற்குள்ளாகவே காணுதல் என்பதைப் பற்றி நாம் பேசினால், நான் கெட்டவன் மேலும் நான் நல்லவனாக மாற வேண்டும் என்ற தார்மீக தீர்ப்பின் அடிப்படையில் இருக்கக் கூடாது. நம்முடைய உட்புற பிரச்னைகளுக்கான ஆதாரத்தை நாம் எளிதாக இடம்குறிக்க முயற்சிக்க வேண்டும் ஏனெனில் நாம் பாதிக்கப்படுகிறோம், மேலும் நம்முடைய பிரச்னைகள் மற்றும் துன்பத்தில் இருந்து வெளியேற விரும்புகிறோம், இவற்றிற்கெல்லாம் முக்கிய ஆதாரம் நம்முடைய சொந்த அணுகுமுறை. குறிப்பாக, நம்முடைய பிரச்னைகள் மற்றும் பாதிப்பிற்கு ஆழமான காரணம் நம்முடைய குழப்பமே என்று புத்தர் கூறி இருக்கிறார். ஆகவே, நாம் என்ன கண்டறிய வேண்டுமெனில் என்ன நடக்கிறது என்பதில் நாம் எவ்வாறு குழம்பி இருக்கிறோம் மேலும் சரியான புரிதலைப் பெற்று அதனை நாம் எவ்வாறு திருத்திக்கொள்ளலாம் என்பதையும் அறிதல் அவசியம்.
நம்முடைய குழப்பம் எதைப்பற்றியது? அது பல விஷயங்களைப் பற்றியது. அதில் முக்கியமானது, நடக்கும் சம்பவங்களுக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவு. ஒரு நிச்சயமான வழியில் நாம் செயல்பட்டால் அது எந்த தாக்கத்தையும் தரப்போவதில்லை என்று நாம் சிந்திக்கிறோம். எடுத்துக்காட்டாக, “நான் தாமதமாக வரலாம், உன்னை தவிர்க்கலாம், இவையெல்லாம் ஒரு விஷயமே அல்ல” என்று நாம் நினைக்கலாம். அது தவறு; அது குழம்பிய நிலை. இல்லையெனில் நாம் செய்யும் ஏதோ ஒன்று அல்லது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது கொடுக்கப் போகிற நிரந்தர தாக்கமானது அபத்தமாகப் போகிறது. மேலும் நடக்காமல் போவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நாம் சிந்திக்கிறோம். உதாரணத்திற்கு, “நான் உன்னிடம் நல்லவிதமாக நடந்து கொள்வதால் நீ என்னை பதிலுக்கு நேசிக்கிறாய். நான் உனக்கு நல்ல பரிசை வாங்கி இருக்கிறேன், எனவே இப்போது நீ என்னை ஏன் நேசிக்கவில்லை?” என்பன போன்ற சிந்தனைகளுடன், நம்முடைய செயல்கள் மற்றும் நடத்தை சாத்தியமில்லாத தாக்கத்தைத் தரப்போகிறது என்று கற்பனை செய்கிறோம் அல்லது நாம் அதனை ஊதிப்பெரிதாக்குகிறோம், அதனால் முடிந்த வரை கூடுதலான தாக்கத்தை தரப் போகிறது என்று கருதுகிறோம். மேலும், சில விஷயங்கள் ஒரு வித தாக்கத்தை கொண்டு வந்து தரப்போகிறது என்று நாம் சிந்திக்கலாம்; உண்மையில் அது தலைகீழாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம் எனவே எல்லா நேரமும் மது அருந்துவது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் மகிழ்ச்சியை விட அதிகமான பிரச்னைகளையே இது ஏற்படுத்தும்.
நாம் குழப்பிக்கொள்ளும் மற்றொரு விஷயம் நாம் எவ்வாறு வாழ்கிறோம், மற்றவர்களும் உலகமும் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியது. உதாரணத்திற்கு சொன்னால், நாம் வருத்தப்படுவதால் வயது முதிர்வின் போது துக்கமாகவும் உடல் நலமின்மையையும் பெறுகிறோம். ஆனால் மனிதர்களான நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? மனிதர்களுக்கு உடல் சுகமின்னை, வயது முதிர்வு ஏற்படும், நாம் இளைஞராகவே இறக்காவிட்டால் – இந்த விஷயங்கள் எல்லாம் மிகப்பெரிய ஆச்சரியமே இல்லை. கண்ணாடியில் நம்முடைய நரைமுடியை பார்க்கத் தொடங்கிவிட்டால், நாம் துன்பப்படுகிறோம் அது குறித்து அதிர்ச்சியடைகிறோம், உலகம் எவ்வாறு இயங்குகிறது, நாம் எப்படி இருக்கிறோம் என்று யதார்த்தமில்லாத மற்றும் குழப்பமாக இருத்தலை இது குறிக்கிறது.
வயது கூடுவதில் நமக்கு பிரச்னை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது குறித்த நம்முடைய குழப்பத்தால் – அதன் யதார்த்த நிலையை நாம் ஏற்றுக் கொள்ளாததால் – தொந்தரவு தரும் உணர்வுகள் மற்றும் அணுகுமுறையால் நாம் அழிவுகரமான பாதையில் செயல்படுகிறோம். உதாரணத்திற்கு, வலுக்காட்டாயமாக இளமையான மற்றும் ஈர்ப்பான தோற்றத்தை வெளிக்காட்ட முயற்சிக்கிறோம், நீண்ட நாள் ஆசையுடன் நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் சில விஷயங்களைப் பெற முயற்சிக்கிறோம் – கவனம், பிறரின் அன்பு, குறிப்பாக வசீகரிப்பவர்கள் என்று நாம் கண்டறிந்துள்ள இளம் வயதினர்.
இதற்கு பின்னால் இருக்கும் ஒரு குறைபாடு நான் தான் இந்த உலகத்திலேயே மிக முக்கியமான நபர் என்று எப்போதும் இருக்கும் ஒரு குழப்பம்தான்; நான் தான் இந்த அண்டத்தின் மையப்புள்ளி. எனவே ஒவ்வொருவரும் எனக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். நான் எப்படி இருந்தாலும், எல்லோரும் என்னை நேசிக்க வேண்டும், ஈர்ப்பவராகப் பார்க்க வேண்டும். யாரேனும் நாம் ஈர்ப்பாக இல்லை என்று கண்டாலோ அல்லது நம்மை நேசிக்கவில்லை என்றாலோ இது முட்டாள்தனத்திற்கு நம்மை இழுத்துச்செல்கிறது. அவர்கள் நம்மை நிராகரிக்கிறார்கள் என்றால் மேலும் முட்டாள்தனத்திற்கே இது வழிவகுக்கிறது – அவர்கள் நம் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் தோற்றத்தில் இல்லை என்றாலும், ஏதோ ஒரு வகையில் நாம் ஈர்ப்பானவர்கள் என்று அவர்களுக்கு காட்ட விரும்புகிறோம். சொல்லப்போனால் எல்லோருக்கும் ஷக்யமுனி புத்தரை பிடிக்கவில்லை; எனவே என்ன நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால் எல்லோரும் நம்மை நேசிக்கப் போகிறார்கள்!
அனைவராலும் நாம் விரும்பப்பட வேண்டும் என்ற ஆசை யதார்த்தமில்லாத எதிர்பார்ப்பு. இது யதார்த்தம் இல்லை. இது குழப்பம், நீண்ட நாள் ஆசை மற்றும் அனைவரும் நம்மை ஈர்ப்புள்ளவராகக் காண வேண்டும் மற்றும் நம்மை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் என்ற இணைப்பின் அடிப்படையிலானது. இதன் கீழ் இருப்பது தொந்தரவு தரும் அணுகுமுறையான அப்பாவித்தனம்.
நாம் மிகவும் முக்கியமானவர் மற்றும் அன்பானவர் எனவே அனைவரும் நம்மை நேசிக்க வேண்டும், அவளுக்கோ அல்லது அவருக்கோ என்னை பிடிக்கவில்லையென்றால் கட்டாயம் ஏதோ ஒன்று அந்த நபரிடம் தவறாக இருக்கிறது என நாம் நினைக்கிறோம். இல்லாவிட்டால் அதைவிட மோசமாக நம் மீதே நாம் சந்தேகம் கொள்கிறோம்: “அந்த நபருக்கு என்னை பிடிக்காமல் போவதற்கு காரணம் என்னிடம் ஏதோ தவறு இருக்கிறது,” என்று நாம் மோசமாகவோ அல்லது குற்றஉணர்ச்சிக்கோ ஆளாகிறோம். இவை அனைத்துமே அப்பாவித்தனம் தான்.
இதன் பின்னர், நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நமக்குள்ளாகவே செயலாற்றுதல். தர்ம பயிற்சியும் இதைப் பற்றியது தான். சூழ்நிலை என்ன என்பது பெரிதல்ல – நமக்கு கஷ்டங்கள் இருந்தாலும், பாதுகாப்பின்மையாக உணர்ந்தாலும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நமக்குள்ளாகவே நாம் பார்க்க வேண்டும். நான் உணரும் இந்த சிக்கல் தரும் உணர்வுகளுக்கு பின்னால் எங்கு குழப்பம் இருக்கிறது? எவ்வாறாயினும், உறவுமுறைக்குள் பார்த்தால் அந்த பிரச்னை அதிகரித்ததில் நம்முடைய பங்கும் இருக்கும், அதே போன்று நாம் மட்டுமே குழப்பத்தில் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால், மற்ற நபருக்கும் கூட குழப்பம் இருக்கிறது. இங்கே விஷயம் என்னவென்றால் நாம் வெறுமனே, “நீ மாற வேண்டும்; நான் செய்வது அனைத்தும் சரி மற்றும் சிறந்தது; மாற வேண்டியது நீ தான்” என்று சொல்வது.
மற்றொரு புறம், இல்லாவிட்டால் நான் தான் மாற வேண்டும் என்பதைச் சொல்வதில்லை, ஏனெனில் அது தியாகி என்ற உணர்வை சீர் குலைக்கக் கூடும். மற்றவருடன் நம்முடைய விஷயங்கள் குறித்து மனம் திறந்து கலந்தாலோசிக்க முயற்சிக்க வேண்டும் – இருப்பினும், நிச்சயமாக அந்த நபர் அதை உள்வாங்கி பதிலளிப்பவராக இருக்க வேண்டும். இருவருமே குழப்பத்தில் இருக்கிறோம் என்பதை இருவருமே ஒப்புகொள்ள வேண்டும். நம்முடைய உறவுமுறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது அதை நாம் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதில் இருவரிடமுமே பிரச்னை இருக்கிறது, எனவே இருவருமே அந்த குழப்பத்தில் இருந்து தெளிவு காண முயற்சிக்க வேண்டும். முன்னேறிச் செல்வதற்கு சரியான யதார்த்தமான மற்றும் தர்ம வழி இதுவே.
பயிற்சிப்பதற்கு முன்னர் தர்மத்தை புரிந்து கொள்ளுதல்
பல வெவ்வேறு விதமான பௌத்த பயிற்சிகள் உள்ளன. சில தந்திரங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது போன்று அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற விதிமுறைகளைப் பெற்றுவிட்டால் மட்டுமே போதாது. அதற்கு மிகவும் முக்கியம் புரிதல், ஏதோ ஒரு பயிற்சியுடன், நம்முடைய கஷ்டங்களைக் கடந்து வர அவை நமக்கு எவ்வாறு உதவப் போகிறது.
பயிற்சியை எப்போது எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை மற்றும் கற்றால் போதாது, ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் கற்பிதங்களையும் அறிதல் தேவை. நாம் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து அடித்தளத்தை கட்டமைக்கிறோம், எனவே தொடர்ச்சியாக தர்ம போதனைகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எந்த ஒரு பயிற்சியால் என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியும்.
தற்போது, நாமும் போதனைகளைப் படிக்கிறோம் என்பது உண்மை, “உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டால், அது எவ்வாறு செயல்படுகிறது என்று கேள்வி கேட்காமல், மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்!” இது நல்ல அறிவுரையாக இருந்தாலும், இது உச்சத்திற்கு எதிரான எச்சரிக்கை என்பதை நாம் உணர்தல் வேண்டும். உச்சம் என்பது வெறுமனே படித்து, போதனைகளை புரிந்து கொள்ள முயற்சித்தல், ஆனால் நாம் கற்ற எதையும் எப்போதும் பயிற்சிப்பதில்லை. நாம் இந்த உச்ச நிலையைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் மற்றொரு உச்ச நிலையும் இருக்கிறது, இருப்பினும், நாம் சமநிலையில் தவிர்த்தல் வேண்டும். அதாவது நாம் சில பயிற்சியை ஊக்குவிக்கும் சில தர்ம விதிமுறைகளைக் கேட்டால், பிறகு, குருட்டு நம்பிக்கையுடன், நாம் என்ன செய்கிறோம் அல்லது ஏன் செய்கிறோம் என்ற புரிதல் இல்லாமலே செய்கிறோம்.
இந்த உச்ச நிலையில் இருந்து வரும் பிரச்னை என்பது உண்மையில் பயிற்சியை எப்படி நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது என்று எப்போதுமே நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் செய்யும் எந்த பயிற்சியின் தாக்கத்தை புரிந்து கொண்டால் – அது எவ்வாறு செயல்படுகிறது அதன் நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால் – பின்னர் அதனை எவ்வாறு அன்றாட வாழ்வில் செயல்படுத்த வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. நாம் புரிந்து கொண்டோம் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதும் நமக்கே தெரியும்.
நம்முடைய பிரச்னைகளை வெளியேற்றுவது பற்றி நாம் பேசினால், நம்முடைய சொந்த பிரச்னைகளை மட்டுமே வெளியேற்றுவதைப் பற்றி பேசுவதில்லை, மற்றவர்களுக்கு உதவுவதில் இருக்கும் கஷ்டங்களில் இருந்து விலகுவது குறித்தும் பேச வேண்டும். “சோம்பேறித்தனம் அல்லது சுயநலம் அல்லது நேரமின்மையால் பிறருக்கு உதவுவதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. “அல்லது, உன்னுடைய பிரச்னை என்னவென்று எனக்குப் புரியவில்லை மேலும் அதற்கு நான் எவ்வாறு உதவுவது என்றும் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.” நமக்கு இருக்கும் பெரிய கஷ்டம் இது தான், இல்லையா? மற்றவர்களுக்கு உதவுவதில் இருக்கும் இந்த எல்லா கஷ்டங்களும் கூட நம்முடைய குழப்பத்தினால் தான்.
எடுத்துக்காட்டாக, நான் எல்லாம் வல்ல கடவுளாக இருக்க வேண்டுமானால், நான் செய்ய வேண்டியது ஒரே விஷயம் அந்த ஒற்றை விஷயமே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வாகப் போகிறது என்ற குழப்பம்; அப்படி அது உங்களுடைய பிரச்னையை தீர்க்கவில்லையெனில், உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது. நீங்கள் அதைச் சரியாகச் செய்யவில்லை, என்று நீங்களே குற்ற உணர்வுக்குள்ளாவீர்கள். இல்லையெனில் என்னால் உங்களது பிரச்னையை தீர்க்க முடியும், ஆனால் நான் செய்யவில்லை, எனவே நான் நல்லவனல்ல என்று குற்ற உணர்ச்சிக்குள்ளாவது. மீண்டும் எழும் இது தொடர்பான காரணம் மற்றும் விளைவு பற்றிய குழப்பம்.
தர்மத்தின் மீதான நம்பிக்கை
மற்றொரு விஷயம் நரம்பியல் வழியின்றி தர்மத்தை நம்முடைய வாழ்வில் சிறப்பானதாக செயல்படுத்த முடியும், நம்முடைய பிரச்னைகளில் இருந்து விலகுவது சாத்தியமே என்று நாமும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அடிப்படை பௌத்த அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய குழப்பத்தில் இருந்து வெளியேறுவது சாத்தியமே என்று நாம் கட்டாயம் நம்ப வேண்டும்: ஏதோ ஒன்றில் இருந்து வெளியேற வேண்டுமெனில், அது ஏற்படுத்தும் காரணங்களை வெளியேற்றுவதும் அவசியம். ஆனால், நிச்சயமாக, அதை ஆழ்ந்த மட்டத்தில் பெறுவது மிகக் கடினம், மீண்டும் நடைபெறாத வகையில் நம்முடைய எல்லா குழப்பத்தையும் வெளியேற்ற முடியும் என்ற உறுதியான நம்பிக்கை, மேலும் விடுதலை மற்றும் ஞானத்தைப் பெறுவதும் கூட சாத்தியமே என்ற உறுதியான நம்பிக்கை. உண்மையில் விடுதலை மற்றும் ஞானமடைதல் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ளாவிட்டால், குறிப்பாக அது மிகக் கடினம்.
எனவே இது சாத்தியம் தானா அல்லது அதை அடைய முடியாதா என்பதை நாம் எவ்வாறு கருத்தில் கொள்வது? அது சாத்தியமில்லை என்று நாம் நினைத்தால், இருப்பதாகக் கூட நாம் நினைக்காத ஒன்றை அடைவதை நோக்கமாகக் கொள்வது கொஞ்சம் பாசாங்குத்தனமல்லவா? அதன் பின்னர் நம்முடைய தர்ம பயிற்சி உண்மைக்கானதல்ல. நாம் ஏதோ முட்டாள்தனமான விளையாட்டை விளையாடுகிறோம் என்ற வகையிலானதாக மாறிவிடும்;
நாம் உண்மையில் நம்பிக்கை கொண்ருக்க வேண்டும், இதற்கு ஏராளமான கற்றலும் புரிதலும் தேவை, அதே போன்று ஆழ்ந்த சிந்தனை மற்றும் தியானமும் அவசியம். விடுதலை மற்றும் ஞானமடைதல் மட்டுமே சாத்தியமென்று நாம் நம்புவதைக் காட்டிலும்; அதனை அடைவதும் கூட எனக்கு சாத்தியமே என்று கட்டாயம் நம்ப வேண்டும். ஷக்யமுனி மட்டுமே அதனை அடைவது சாத்தியமல்ல நானும் கூட அதனைச் செய்வேன். என்னால் முடியும் என்றால், எல்லோராலும் கூட அதனை அடைவது சாத்தியமே. நம்முடைய குழப்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை புரிந்து கொள்வதும் கட்டாயம்.
உண்மையில் நாம் விடுவிக்கப் போவது என்ன? நம்முடைய குழப்பத்தில் இருந்து உண்மையில் விடுவிக்கப் போவது சரியான புரிதல்; ஆகவே சரியான புரிதல் எப்படி குழப்பத்தை வெல்லப் போகிறது என்பதை நாம் புரிந்து கொண்டு அதனை வெளியேற்றினால் அது மீண்டும் நிகழாது. இவை எல்லாவற்றின் முடிவு, அன்றாட வாழ்வில் தர்ம பயிற்சிக்கான உண்மையான செயலாற்றும் இடத்தை பார்க்க முடியும்; வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நம்முடைய பிரச்னைகள், நம்முடைய குழப்பம் மற்றும் நம்முடைய குழப்பங்களை அது கையாள்கிறது.
தர்ம பயிற்சிக்கு தேவை தற்சோதனை
தர்ம பயிற்சி என்பது வெறுமனே வாழ்வில் நேரம் ஒதுக்குவதல்ல, நல்ல, அமைதியான தியானக் குகைக்கு செல்வது அல்லது நம்முடைய அறைக்குச் செல்வது, மேலும் நம்முடைய வாழ்வை எதிர்கொள்வதில் இருந்து தப்பிக்க மெத்தையில் அமர்ந்து கொள்வதுவதும் அல்ல. தப்பித்தல் தர்ம பயிற்சியின் நோக்கமல்ல. தியானிப்பதற்கு நாம் அமைதியான இடத்திற்கு சென்றால், வரிசையான திறன்களை கட்டமைத்து நம்முடைய வாழ்வின் பிரச்னைகளைக் கையாள வேண்டும். முக்கிய குறிக்கோள் என்பது வாழ்க்கை. உட்கார்ந்து கொண்டே மற்றும் தியானித்துக் கொண்டே ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வதல்ல நோக்கம்! தர்ம பயிற்சி என்பது வாழ்வில் தர்மத்தை செயல்படுத்துவதைப் பற்றியது.
மேலும், தர்ம பயிற்சி என்பது தற்சோதனை. இதனுடன், நம்முடைய உணர்வுகளின் நிலை, நம்முடைய உந்துசக்தி, நம்முடைய அணுகுமுறை, நம்முடைய வலுக்கட்டாயமான நடத்தையின் வகைகளை கருத்துடன் கவனிக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக தொந்தரவான உணர்வுகளை நாம் பார்த்தல் அவசியம். ஒரு குழப்பமான உணர்ச்சி அல்லது அணுகுமுறையின் வரையறுக்கும் பண்பு என்னவென்றால், அது எழும்போது, அது நம்மையும் / அல்லது மற்றவர்களையும் சங்கடமாக உணர வைக்கிறது. நாம் நம்முடைய அமைதியை இழக்கிறோம் மேலும் கட்டுப்பாட்டை இழந்தவராகி விடுகிறோம். இது மிகவும் உதவிகரமான விளக்கம், ஏனெனில் இதனை அறிவது ஏதோ ஒன்றின் தாக்கத்தின் கீழ் நாம் செயல்படுகிறோம் என்பதை உணர உதவுகிறது. நாம் அசவுகரியமாக உணர்ந்தால் நம்முடைய மனதில் தொந்தரவான ஏதோ ஒன்றி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிய முடியும். சில சமயங்களில், உள்ளுக்குள் என்ன சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் சரிபார்த்து அதனை திருத்திக் கொள்ள சரியான எதிர்ப்பு சக்தியை செலுத்த வேண்டும்.
நமக்குள் என்ன நடக்கிறது என்பதற்கு இந்த உணர்திறன் மிகவும் தேவை. நம்முடைய உணர்வுகளின் நிலையை மாற்றுவது குறித்து ஏதேனும் செய்ய வேண்டுமானால், அது தொந்தரவானது என்பதை கண்டறிந்தால், குழப்பமான மற்றும் குழப்பமான வழியில் நாம் செயல்படுகிறோம் என்பதை உணரத் தேவையெனில், அது நாம் இருவருக்கும் மற்றவர்களுக்கும் ஏராளமான மகிழ்ச்சியின்மையை உருவாக்கப் போகிறது. நமக்கு அது தேவையில்லை; போதும் என்ற அளவிற்காகிவிட்டது. நாம் வருத்தமடைந்தால், நாம் யாருக்காவது எப்படி உதவ முடியும்?
நெகிழ்வுத்தன்மை
தர்ம பயிற்சிக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல வெவ்வேறு எதிர் சக்திகளின் பரிட்சயமும் கூட தேவைப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை மிகவும் சிக்கலானது மேலும் ஒரு குறிப்பிட்ட மாற்று மருந்து எப்போதும் செயலாற்றாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி எப்போதும் சிறந்த தாக்கத்தைக் கொடுக்கப் போவதில்லை. உண்மையில் அன்றாட வாழ்வில் சிலவற்றை செயல்படுத்த முடியுமென்றால் அதற்கு நெகிழ்வுத்தன்மையின் பெரிய கையாளும் திறம் மற்றும் பல வேறுபட்ட வழிமுறைகள் தேவைப்படுகிறது. இது செயலாற்றவில்லையென்றால், பின்னர் நாம் அதைச் செய்யலாம்; அது செயல்படவில்லையென்றால், நாம் இதை முயற்சிக்கலாம்.
வாழ்வில் நீங்கள் எதையாவது செய்ய முயற்சித்தால், எப்போது இரண்டு அல்லது மூன்று மாற்று திட்டங்களை வைத்திருங்கள் என்று என்னுடைய ஆசிரியர் சென்ஷாப் செர்காங் ரின்போச் எப்போதும் சொல்வார். அப்போது தான், திட்டம் ஒன்று செயல்படவில்லையென்றால், நீங்கள் மனம்விட்டுப் போக மாட்டீர்கள். ஏனெனில் உங்களிடம் காப்புப் பிரதி திட்டமான, பி அல்லது சி இருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று நிச்சயமாக செயலாற்றும். இதை மிகவும் உதவிகரமான அறிவுரை என்று நான் கண்டிருக்கிறேன்.
தர்மத்திலும் இதே விஷயம் பொருந்தும்: சில குறிப்பிட்ட சூழலில் ஒன்றாம் வழிதுறை செயலாற்றவில்லையெனில், நம்மிடம் எப்போதும் காப்புப் பிரதி திட்டம் இருக்கும். நாம் மாறுவதற்கு வேறுசில விஷயங்களும் இருக்கிறது. இவை அனைத்தும் கற்றல், பல வழிமுறைகள் மற்றும் தியானங்களைக் கற்றுக் கொள்வதன் அடிப்படையிலானது, உடற்பயிற்சியில் நாம் செய்வதைப் போல அதனை நாம் பின்னர் தயார் படுத்துதலில் பயிற்சிக்கலாம். இந்த வழிகளுடன் நமக்குள்ளாகவே நாம் செயலாற்ற பயிற்சி எடுத்து பரிட்சயமாகலாம் எனவே தேவைப்படும் போது நாம் அதனை அன்றாட வாழ்விலும் செயல்படுத்த முடியும். இதற்குத் தேவை தர்ம பயிற்சியை பொழுதுபோக்காக இல்லாமல் ஒரு முழு நேர அர்ப்பணிப்பாக பார்த்தல் வேண்டும்.
உச்சங்களைத் தவிர்த்தல்
தர்ம பயிற்சியை நம்முடைய குடும்பங்களிலும் நாம் செயல்படுத்தலாம். நம்முடைய பெற்றோர், குழந்தைகள் மற்றும் பணியாற்றும் இடத்தில் இருப்பவர்களைக் கையாளும் விதங்களில் இதனை பொருத்திப் பார்க்கலாம். இதனைச் செய்யும் போது, பல்வேறு உச்சபட்சங்களை தவிர்த்தல் தேவை. அதில் கொஞ்சத்தைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். நம்முடைய பிரச்னைகளுக்காக மற்றவர்கள் மீதோ அல்லது முழுப்பழியையும் தன் மீதோ போட்டுக்கொள்ளும் உச்சத்தை தவிர்த்தல் வேண்டும் – இருவருமே பங்காற்றுகிறோம். மற்றவர்களை மாற்ற நாம் முயற்சிக்கலாம் அதற்கு பதிலாக நாம் மாறுவது எளிது.
சுய – முன்னேற்றம், அதன் பின்னர் கவனம்; ஆனால் இதைச் செய்யும் போது, தற்காதலில் உச்சமான சுய – முன்நோக்கை தவிர்க்க நாம் முயற்சிக்க வேண்டும். சுய – முன்நோக்குடன், நாம் எப்போதும் மற்றவர்கள் யார் மீதும் கவனம் செலுத்தாமல், நம்மை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்போம். இந்த அண்டத்தில் நான் தான் மையப்புள்ளி என்ற உணர்வை இது ஊக்கப்படுத்தும், இதனால் நம்முடைய பிரச்னை மட்டுமே இந்த உலகில் மிக முக்கியமானது. மற்றவர்களின் பிரச்னைகள் முக்கியமல்ல அல்லது காயப்படுத்துவதாகத் தோன்றாது.
மற்றொரு உச்சமென்பது நாம் எல்லோரும் கெட்டவர்கள் அல்லது நாம் அனைவரும் நல்லர்கள் என்ற சிந்தனை. நம்முடைய கடினமான பக்கங்களை நாம் உணர வேண்டும், நாம் செயல்படுத்த வேண்டிய பக்கங்கள் என்பது உண்மை தான். ஆனால் நம்முடைய நேர்மறை பக்கங்களையும், நேர்மறை தரங்களையும் அடையாளப்படுத்த வேண்டியதும் கூட அவசியம், ஏனெனில் அப்போது தான் அதை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முடியும். நம்மில் பெரும்பாலான மேற்கத்தியர்கள் குறைத்து சுய- மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். நம்முடைய பிரச்னைகள் மற்றும் குழப்பத்தில் அதிக கவனம் செலுத்தினால், அது எளிதாக குறைந்த சுய-மதிப்பீட்டை வலுப்படுத்தும். இது ஒரு முக்கியமான விஷயமே அல்ல.
அதே நேரம் நம்முடைய சிக்கலான உணர்வுகளை கண்காணிக்கும் போது நம்முடைய நல்ல குணங்களை நினைவுபடுத்தி அதனை சமம் செய்ய வேண்டும். கொடூரமானவர்களுக்கும் கூட சில நல்ல குணங்கள் இருந்ததற்கான அனுபவம் இருக்கும். சந்தேககே இல்லாமல் கைகளில் நாய்க்குட்டியையோ அல்லது மடியில் பூனைக்குட்டி வைத்திருந்த அனுபவமோ அவர்களுக்கும் இருந்திருக்கும், அதனை செல்லப்பிராணியாக வளர்த்திருப்பார்கள் அதன் மீது சிறிது பாச உணர்வு இருந்திருக்கும். குறைந்தபட்சமாக எல்லோருக்கும் இந்த அனுபவமாகவது இருந்திருக்கும். இது போனற் ஏதேனும் இதமான ஒன்றை செய்திருக்க முடியும் ஆகவே அதனை அடையாளம் கண்டு, இந்த வகையில், நம்முடைய நேர்மறை பக்கங்களையும் கூட காணலாம். தர்ம பயிற்சி என்பது நம்முடைய எதிர்மறை பக்கங்களுக்காக செயலாற்றுவது மட்டுமல்ல; அது கட்டாயம் சமன்படுத்தப்பட வேண்டும். நம்முடைய நேர்மறை பக்கங்களையும் கூட வலுப்படுத்த நாம் செயலாற்ற வேண்டும்.
இதைச் செய்வதனால், நம்முடைய குறைபாடுகள் மற்றும் நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கும் இடையே நிலையான சமநிலையை முயற்சிக்கலாம், நாம் மற்றொரு உச்சங்களின் ஜோடியை தவிர்த்தல் வேண்டும். ஒரு உச்சம் என்பது “நான் கெட்டவன். நான் பயிற்சித்தல் வேண்டும், நான் பயிற்சிக்கத் தொடங்கவில்லை என்றால், நான் மேலும் மோசமாகிவிடுவேன்” என்ற குற்ற உணர்வு.
தர்ம பயிற்சியை நாம் பார்க்கும் விதத்தில் இருந்து இந்த வார்த்தை நீக்கப்பட வேண்டும். இது எப்போதும் “சரியானது” என்பதல்ல விஷயம். நாம் கொண்டிருக்கும் சிக்கல்களில் இருந்து நாமே விலக விரும்பினால் மேலும் எதிர்காலத்தில் இதே போன்று நடக்காமல் தவிர்க்க, ஆரோக்கியமான அணுகுமுறை என்பது எளிது, “என்னுடைய பிரச்னையில் இருந்து நான் விலக வேண்டுமானால், இந்தப் பயிற்சி அதைச் செய்யும்” என்று சிந்திக்க வேண்டும். இப்போது, நாம் பயிற்சி செய்கிறோமோ இல்லையா என்பது நம்முடைய சொந்த தேர்வு. நீ இதைச் செய்ய வேண்டும், நீ செய்யவில்லையென்றால், நீ கெட்டவன்” என்று யாரும் சொல்லவில்லை.
ஆனாலும், நாம் மற்றொரு உச்சத்தையும் கூட தவிர்த்தல் வேண்டும், அந்த உச்சமென்பது, “நாம் எல்லோரும் சிறந்தவர்கள்; உங்களுடைய புத்த – இயல்பை பாருங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.” இது மிக மோசமான உச்சம் ஏனெனில் நாம் மாற வேண்டாம் என்ற அணுகுமுறைக்கு இது வழிவகுக்கிறது; நம்முடைய எதிர்மறையானவற்றை நாம் நிறுத்தவோ அல்லது கைவிடவோ தேவையில்லை ஏனெனில் நாம் ஏற்கனவே சிறந்தவராக இருக்கிறோம் என்று சிந்திக்க வைக்கிறது. நான் கெட்டவன் அல்லது நான் சிறந்தவன் - இது போன்ற இரண்டு உச்சங்களையும் நாம் தவிர்த்தல் வேண்டும். அடிப்படையில் நமக்கு நாமே பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே தர்மத்தை நம்முடைய வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான முக்கியமான திறவுகோல். நம்முடைய வாழ்க்கை தரத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டுமானால், நமக்காக நாமே பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
உந்துசக்தி
நமக்குள்ளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, நாம் நம்முடைய ஆன்மிக ஆசிரியர்கள், அதே போன்று நம்முடன் பயிற்சித்துக் கொண்டிருக்கும் மற்ற மக்கள் சமூகம் உள்ளிட்டவர்களிடம் இருந்து உந்துசக்தி பெறலாம். எவ்வாறாயினும், பெரும்பாலான மக்களுக்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குருமார்களால் காற்றில் கூட பறக்க முடிந்தது என்பது போன்ற கற்பனைக் கதைகள் எல்லாம் ஆசிரியர்களிடம் பெறக் கூடிய நிலையான உந்து சக்திக்கான ஆதாரமல்ல. ஏனெனில் சில விஷயங்கள் உண்மையில் தொடர்புபடுத்த கடினமானது மேலும் அவை மொத்தமும் நம்மை மாயாஜால பயணத்திற்கு வித்திடும். அதில் சிறந்தது வாழும் உதாரணங்கள் நாம் தொடர்பில் இருக்கும் சிலர், அந்த தொடர்பு குறைந்தபட்சமானதாக இருந்தாலும் பரவாயில்லை.
புத்தர்கள் அல்லது உண்மையில் தரமான ஆசிரியர்கள் நம்மை ஈர்க்க முயற்சிக்கவில்லை, அவர்கள் நம்மை ஈர்க்க முயற்சிக்கவும் மாட்டார்கள். அதற்கு சிறந்த உதாரணம் அவர்கள் சூரியனைப் போன்றவர்கள். சூரியன் மக்களை வெப்பமாக வைக்க முயற்சிக்கவில்லை; இயல்பில் சூரியன் எப்படி இருக்கிறது அப்படியே எல்லோருக்கும் வெப்பம் கிடைக்கிறது. இதே விஷயம் தான் பெரிய ஆன்மிக ஆசிரியர்களிடமும் உண்மையாக இருக்கிறது. அவர்கள் தங்களது வாழ்வில் இயல்பாக எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பண்பு மேலும் விஷயங்களை அவர்கள் கையாளும் விதம் உள்ளிட்டவற்றால் அவர்கள் தொடர்ச்சியாக நம்மை ஈர்க்கிறார்கள். இது மாயாஜால வித்தையல்ல. இதில் அதிக உந்துதல் என்னவென்றால் அதீத யதார்த்தம் மற்றும் பணிவுடன் இருத்தல்.
நான் டட்ஜாம் ரின்போச்சை நினைவில் கொள்கிறேன். அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். அவர் தான் யிங்மா லைனேஜின் தலைவர் மேலும் என்னுடைய ஆசிரியர்களின் ஒருவர். அவருக்கு தீவிர ஆஸ்துமா தொந்தரவு இருந்தது. எனக்கும் கூட ஆஸ்துமா இருக்கிறது எனவே சுவாசிப்பது கடினமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். உங்களால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லையெனில் கற்பிப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்குத் தெரியும், ஏனின்ல உங்களுடைய எல்லா சக்தியும் மூச்சை உள் இழுக்கும் திசையில் பயணிக்கும். இது போன்ற சூழலில் வெளியே செல்வது உங்களது சக்திக்கு மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், டட்ஜாம் ரின்போச்க்கு தீவிர ஆஸ்துமாக இருந்த போதும் மேடைக்குச் சென்று போதித்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆஸ்துமாவை அவர் சிறிது கூட பொருட்படுத்தாமல் அதனை வியத்தகு வழியில் தன்னுடைய அற்புதமான போதனைகள் மூலம் அதைக் கையாண்டார். இது நம்ப முடியாத உந்துதல், மிகவும் தாழ்மையுடன் இருத்தல், எந்த மாயாஜால வித்தையும் இல்லை. இது நிதர்சன வாழ்க்கைச் சூழல்களைக் கையாள்கிறது அதுவும் உந்துதலாக இருக்கிறது.
ஆன்மிகப் பாதையில் சென்று முன்னேற்றம் அடைந்தால், நம்மிடம் இருந்தே கூட நமக்கு உந்துதல் கிடைக்கும். இதுவும் கூட உந்துதலுக்கு முக்கியமான ஆதாரம். நாம் நம்முடைய சொந்த முன்னேற்றத்தில் இருந்து உந்துதல் பெறுகிறோம். ஆனால், இதனைச் செய்யும் போது நாம் மிகவும் பலமாக இருத்தல் வேண்டும். பெரும்பாலானவர்களால் இந்தக் காரணியை உணர்வு ரீதியாக கையாள முடியாது, ஏனெனில் முன்னேற்றத்திற்கான சிலவற்றை நம்மால் உருவாக்க முடிந்தால் அதன் தன்மையானது கர்வம் மற்றும் பெருமையை பெறுவது. எனவே நாம் முன்னேற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் எச்சரிக்கையுடன் விளக்க வேண்டும்.
பாதையில் முன்னேற்றம்
முதலில், முன்னேற்றம் என்பது எப்போதும் நேரியலானதல்ல என்பதை நாம் உணர வேண்டும்; அது மேலும் கீழும் செல்லும் ஏற்ற இறக்கம் இருக்கும். சம்சாரியத்தில் முக்கியமான பண்புகளில் இதுவும் ஒன்று, மேலும் இது வெறுமனே உயர்ந்த மற்றும் தாழ்ந்த மறுபிறப்புகளைப் பற்றி பேசுவதல்ல. ஏற்ற இறக்கம் என்பது அன்றாட வாழ்க்கையைக் கூட குறிக்கிறது. நாம் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன்; நான் இப்போது துன்பமாக உணர்கிறேன். நம்முடைய மனநிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நான் இப்போது பயிற்சிக்கலாம் என்று நினைக்கிறேன், எனக்கு இப்போது பயிற்சிக்கலாம் என்று தோன்றவில்லை – இது போன்று எல்லா நேரங்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், எனவே ஆச்சரியப்பட வேண்டாம். உண்மையில், சம்சாரியத்தில் இருந்து விடுபட்டு, சுதந்திரமான மனிதரான அருகதர் ஆகும் வரை இது தொடரப் போகிறது. அந்த ஏற்றம் பெறும் வரையில், நம்பமுடியாத முன்னேற்றமான, சம்சாரியம் என்பதில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது. எனவே ஊக்கமிழக்காதீர்கள், நீண்ட காலம் பயிற்சித்த பிறகு எடுத்த எடுப்பில் சொந்த அன்பான உறவுமுறையில் கஷ்டத்தை எடுத்துச் செல்லப் போகிறோம். உடனடியாக, நாம் உணர்வுப் பூர்வமாக வருத்தப்படுவோம் – இது நடக்கும்! இதற்கு அர்த்தம் நாம் தீவிர பயிற்சியாளராகிவிட்டோம் என்பதல்ல. இது இயல்பானதே, நம்முடைய சம்சாரிய நிலையில் யதார்த்தத்தில் கொடுக்கப்பட்டிருப்பவை.
தர்ம பயிற்சியில் அற்புதங்கள் எப்போதும் நிகழாது. தர்மத்தை நம்முடைய வாழ்வில் செயல்படுத்த விரும்பினால், அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள், குறிப்பாக நம்முடைய முன்னேற்றத்தில். முன்னேற்றத்தை நாம் யதார்த்தத்தில் எவ்வாறு அளவிடுகிறோம்?
தர்ம பயிற்சி செய்த ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளைப் பார்க்காதீர்கள் என்று புனிதர் தலாய் லாமா கூறுகிறார். சோதித்துப் பார்க்க ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் பயிற்சி என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும், “ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட நான் அமைதியான மனிதரா? என்னால் மேலும் மோசமான சூழல்களை சமாளிக்க முடியுமா மேலும் மிகவும் வருத்தமடைய மாட்டேனா அல்லது அதனால் தூக்கி எறியப்படுவேனா? “ நம்மால் முடிந்தால், நாம் சில முன்னேற்றத்தை அடைகிறோம் அதுவும் உந்ததலே. இருப்பினும் நமக்கு பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கிறது, ஆனால் இது நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்ல பலத்தைத் தருகிறது. எல்லாமே மிகவும் மோசமான சென்று கொண்டிருக்கும் கடினமான சூழலில் நாம் மிகவும் வருத்தம் அடைய மாட்டோம். அதில் இருந்து நம்மால் விரைவில் குணம்பெற முடியும்.
நமக்கு நாமே ஒரு உந்துதல் என்பதைப் பற்றி பேசினால், அதன் முக்கிய புள்ளி என்பத இந்த உந்துதலானது அதே பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கான பலத்தை நமக்குத் தருகிறது. ஏனெனில் நாம் சரியான திசையில் செல்வதாக நாம் நம்புகிறோம். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று நாம் மட்டுமே நம்ப முடியும் அந்தத் திசையில் சென்றால் என்ன என்ற யதார்த்த சிந்தனை – அதாவது, பொதுவான வழியில் சென்று கொண்டிருக்கும் போது, தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களும் இருக்கும்.
இவையே தர்ம பயிற்சியை அன்றாட வாழ்வில் எவ்வாறு ஒருங்கிணைத்தல் என்பதற்கான சில பொதுவான திட்டங்கள். இவை உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி.