மொழிபெயர்ப்பாளர்களும் சில தருணங்களில் தவறு செய்கிறார்கள். சொல்லப்பட்டது, எழுதப்பட்டது அல்லது உங்களுடைய பதிவுகளில் என்ன இருக்கிறதோ அவற்றை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. அது விவேகமற்றது. அதே போல, நான் போதிக்கும் போது, வாய் தவறியோ அல்லது பொருந்தாத எதையோ சொல்லக் கூடும். அந்த மாதிரியான நேரங்களில், பின்னர் நீங்கள் பதிவு செய்திருப்பதை கேட்கும் போது அது தவறாக இருக்கும்பட்சத்தில் அதனை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. தன்னுடைய சுயபோதனை பற்றி புத்தர் சொன்னது போல, நான் சொன்னேன் என்பதற்காக எதையும் அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது, மாறாக தங்கத்தை எப்படி உரசி தரம் பார்த்து வாங்குகிறோமோ அதே போல போதனைகளையும் ஆராய்ந்து உள்வாங்க வேண்டும். நம்பிக்கையை சார்ந்தோ அல்லது பதிவில் என்ன இருக்கிறதோ அவற்றை அப்படியே அர்த்தம் கொள்ள வேண்டாம்.
ஒன்பதாவது போதிசத்வ பூமி மட்டத்தை எட்டும் வரையில், நீங்கள் தவறுகளை செய்து கொண்டு தான் இருப்பீர்கள். ஒரே ஒரு முறை நீங்கள் ஒன்பதாவது மட்டத்திலான மனதை அடைந்துவிட்டால் விஷயங்களை விவரிக்கும் போது செய்யும் தவறுகளை நீங்கள் கண்டறிவீர்கள். அதாவது அந்த நேரத்தில் தான் நீங்கள் நான்கு துல்லியமான மற்றும் முழு புரிதல்களை பெறுவீர்கள். இயல்பை நீங்கள் ஒரு முறை அடைந்துவிட்டால், அதன் பின்னர் நீங்கள் எந்தத் தவறுகளையும் செய்ய மாட்டீர்கள்.
உதாரணமாக போதிசர்யவதரா, போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் என்னும் இந்த போதனையின் தொடக்கத்தில், இதை எப்படி மொழி பெயர்ப்பது என்று எனக்குத் தெரியாவிட்டாலும், நான் என்ன சொன்னேன் என்றால், குனுலாமா ரின்போச் புத்தபலிதா எனும் சமஸ்கிருத ஓலையை படிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் புத்தகயாவில் இருந்தார், எனினும் அந்த நூல் திபெத்தியத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்று வாய் தவறி சொல்லிவிட்டேன். அந்த குறிப்பிட்ட ஓலைச்சுவடியில் குறிப்பிட்ட பதிப்பு மட்டும் மொழிபெயர்க்கப்படவில்லை என்ற அர்த்தத்தில் நான் சொன்னேன். புத்தபலிதா நூல் திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்னும் பொதுவான கூற்று சரியல்ல. சொங்கப்பா அந்த நூலைப் படித்து அதன் அடிப்படையில் தன்னுடைய நிதர்சன நிலையைப் பெற்றார் என்று நான் சொல்லி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நான் சொன்னது சரிதானா என்று ஆராய்ந்து நீங்கள் என்னை கேள்வி கேட்டிருக்க வேண்டும், ஏனெனில் நடைமுறையில் செய்ய வேண்டியவை அவை தான். சில நேரங்களில், இது போன்ற தவறுகள் நடக்கும்.
உதாரணத்திற்கு, ஒரு நாள் நான் முதன்முறையாக பிரசங்கிகா மற்றும் சித்தமத்ரா பள்ளிகளில் உரையாடல் வழங்கிக்கொண்டிருந்த போது, சௌத்ராந்திகா பள்ளியில் ஆழமான உண்மை நிகழ்வுகளுக்கு மூன்று ஒத்த சொற்களின் தொகுப்புளான: நிபந்தனைக்குட்பட்ட நிகழ்வுகள், புறநிலை நிறுவனங்கள் மற்றும் நிலையற்ற நிகழ்வுகள் உள்ளன என்று நான் சரியாகச் சொன்னேன். சித்தமாத்ரா பள்ளியில், நீங்கள் மற்ற ஆற்றல்மிக்க, முழுமையாக நிறுவப்பட்ட மற்றும் முற்றிலும் கற்பனையான நிகழ்வுகளை வழங்குகிறீர்கள் என்று நான் கூறினேன். அந்த அமைப்பில், முற்றிலும் கற்பனையான நிகழ்வுகள் உண்மையிலேயே நிறுவப்பட்ட, தடையற்ற இருப்பு இல்லாமல் இருந்தன. நேற்று, நான் அந்த உரையை மதிப்பாய்வு செய்தபோது, அது அவ்வாறு மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் - மொழிபெயர்ப்பாளர் அதை அவரே சரிசெய்திருந்தார் - சௌத்ராந்திகாவின் படி இரண்டு வகையான உண்மை நிகழ்வுகளுக்கான ஒத்த சொற்களின் தொகுப்பை மாற்றியமைத்ததால் நான் பேசியதில் உள்ள தவறை சரிசெய்துகொண்டேன். இந்த விதத்தில், வாய் தவறி எதையாவது சொல்வது என்பது மிக எளிமையானது.
நீங்கள் பார்க்கும், கேட்கும், படிக்கும் மற்றும் செய்யும் அனைத்தையும் நீங்கள் எப்போதும் சரிபார்க்க வேண்டும். கற்பிப்பவராக இருந்தாலும், நான் ஒரு போதனையை வழங்கிய பிறகு, நான் திரும்பிச் சென்று நான் சொன்னதை மதிப்பாய்வு செய்து, நான் ஏதேனும் தவறு செய்திருக்கிறேனா என்று பார்க்கிறேன். அதேபோல், போதனையைக் கேட்பவர்களிடமும் இது போன்ற விழிப்பு இருக்க வேண்டும்.