ஆர்யதேவா இலங்கையைச் சேர்ந்த அரச குடும்பத்தில் பிறந்தவர். பொ.ஊழி 2 மற்றும் 3ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் பிறந்தவர். சில குறிப்புகள் இவர் தாமரையில் இருந்து பிறந்ததாகக் கூறுகிறது. சிறு வயதிலேயே துறவறம் ஏற்றவர். மன்னர் உதயிபத்ராவின் ஷதவாஹனா ராஜ்ஜியத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து படிப்பதற்பாக தென்இந்தியா புறப்படும் முன்னர் பௌத்த வேதங்கள், த்ரிபிடகாவை முழுவதும் கற்றவர். மன்னர் உதயிபத்ரா நாகாரஜுனாவின் நட்புக்கு பாத்திரமானவர். ஆர்யதேவா நாகார்ஜுனாவுடன் இணைந்து ஸ்ரீபர்வதத்தில் பயின்றார். இந்தப் புனித மலையானது தற்போது ஷதவாஹனா ராஜ்ஜியத்திற்குட்பட்ட ஆந்திர பிரதேசத்தில் நாகார்ஜுனகொண்டா பள்ளத்தாக்காகத் திகழ்கிறது.
அந்த சமயத்தில் சிவ பக்தரான மத்ரசெதா, நாலந்தாவில் தனது பேச்சால் அனைவரையும் வீழ்த்திக் கொண்டிருந்தார். அவருடன் போட்டி போட ஆர்யதேவா புறப்பட்டார். வழியில் அவர் சந்தித்த மூதாட்டி ஒருவருக்கு சிறப்பு சக்திகளை அடைய துறவி ஒருவரின் கண் தேவைப்பட்டது. ஜுவகாருண்யத்தை நோக்கி பயணிக்கும் ஆர்யதேவா தனது ஒரு கண்ணை அவருக்கு கொடுத்தார். அப் பெண் சர்வசாதாரணமாக அந்தக் கண்ணை பாறையின் மீது போட்டுடைத்தார். பின்நாளில் ஆர்யதேவாவிற்கு ஒற்றைக்கண்ணே அடையாளமாகிப் போனது. மத்ரசெதாவை வாதத்திலும், சிறப்பு சக்தியிலும் தோற்கடித்தார் ஆர்யதேவா. அதன் பின்னர் மத்ரசெதா ஆர்யதேவரின் சிஷ்யரானார்.
ஆர்யதேவா நாலந்தாவில் பல ஆண்டுகள் தங்கி இருந்தார். சில காலங்களுக்குப் பிறகு நாகார்ஜுனாவிடம் திரும்பிச் சென்றார். நாகார்ஜுனா உயிரிழப்பதற்கு முன்னர் தனது போதனைகள் அனைத்தையும் ஆர்யதேவாவிடம் ஒப்படைத்தார்.