சென்சாப் செர்காங் ரின்போச் (1914 – 1983) தலாய் லாமாவின் போதகர்களில் ஒருவர் மற்றும் விவாத பங்குதார குரு. திபெத்திய பௌத்தத்தின் நான்கு பள்ளிகள் பற்றியும் கற்றறிந்த குரு, செர்சாங் ரின்போச் இந்தியாவில் திபெத்திய பௌத்த மடாலயங்களை மீண்டும் அமைக்க உதவியவர். வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இரண்டு போதனைச் சுற்றுலா சென்றிருக்கிறார், நடைமுறை மெய்யறிவு, நகைச்சுவை மற்றும் யதார்த்தத்தால் தான் சந்திப்பவர்கள் அனைவரின் இதயத்தைத் தொட்டுவிடும் பண்பாளர்.