செர்காங் ரின்போச்சின் மரணம் மற்றும் மறுபிறப்பு

புனிதர் தலாய் லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல்

செர்காங் ரின்போச்சின் வாழ்க்கையை விட அவருடைய மரணம் மேலும் மறக்கமுடியாதது. 1983 ஜூலையில், ரின்போச் ஸ்பிட்டியில் உள்ள தபோ மடாலயத்தில் புனிதர் தலாய் லாமாவுக்கு காலசக்ரா அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்தார். அதன்பிறகு, ரின்போச் ஒரு உள்ளூர் வயதான துறவியான கச்சென் ட்ருப்யெலிடம், திபெத்திய ஜோதிடத்தின்படி இது புனிதருக்குத் தடையான ஆண்டு என்று குறிப்பிட்டார். புனிதரின் உயிர் ஆபத்தில் இருந்தது. இந்த தடைகளை தனக்கானதாக மாற்றிக் கொள்வது நல்லது. இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வயதான துறவியிடம் அவர் கூறினார். 

மூன்று வாரங்களுக்கு கடுமையான தியானப் பின்வாங்கலில் ஈடுபட்டார் ரின்போச். பின்னர், அவர் போதிசத்துவ நடத்தையில் ஈடுபடுவது பற்றி வீரர்களுக்கு கற்பிக்க அருகிலுள்ள திபெத்திய இராணுவ முகாமுக்குச் சென்றார். ரின்போச் நீண்ட காலத்திற்கு முழு உரையையும் மெதுவாகக் கற்பிக்க வேண்டும், ஆனால் விரைவாகவே அதனை நடத்தி முடித்தார்.

திட்டமிட்டதை விட பல நாட்களுக்கு முன்னதாக முகாமை விட்டு வெளியேறிய அவர், தனக்குச் செல்ல வேண்டிய சிறப்பான ஒரு இடம் இருப்பதாகக் கூறினார். 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்குப் புனிதர் சென்று கொண்டிருந்தார், அதே நேரத்தில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்தும் அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அராஃபத்துக்கு எதிராக இயக்கப்படும் பயங்கரவாதச் செயல் குறித்து காவல்துறை அதிகாரிகள் கவலைப்பட்டனர். புனிதரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று எச்சரித்தனர். 

புனிதரின் வாழ்க்கைக்கான தடைகளைத் தானே எடுத்துக் கொள்ளத் தயாராகுதல்

ரின்போச் மற்றும் ஙவாங் இராணுவ முகாமில் இருந்து ஒரு ஜீப்பில் வேகமாக புறப்பட்டு, தபோ மடத்தில் சிறிது நேரம் நின்றார்கள். கச்சென் ட்ருப்யெலை தங்களுடன் சேரும்படி ரின்போச் கேட்டுக் கொண்டார், ஆனால் அவர் அப்போது தான் அவருடைய ஆடைகளை துவைத்ததாக பழைய துறவி விளக்கினார். அது ஒரு பொருட்டல்ல, அவர் கீழ்பாவாடை அணிந்து கொண்டே வரலாம் என்று ரின்போச் கூறினார். வயதான துறவி செய்ததைப் போல, அவர் தனது ஆடைகளை ஜீப்பின் மேல்புறத்தில் கட்டி காய வைத்தார்.

அவர்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்குள் சென்றபோது, ரின்போச் ஙவாங்கிடம், இரக்கத்தின் மந்திரமான ஓம் மணி பத்மே ஹூம் என்ற மந்திரத்தை தொடர்ந்து திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்று நான் பல முறை சொல்லி இருக்கிறேன், ஆனால் நான் சொல்வதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார். அவரைப் பிரிந்து செல்லும் போது ரின்போச் சொன்ன அறிவுரை இது.

பின்னர் அவர்கள் கீ மடத்தில் நின்றனர். ரின்போச் படையல்களிட விரும்பினார். நேர தாமதமாகி விட்டதால் நாம் காலையில் சென்று செய்யலாம் என்று ஙவாங் கூறினார், ஆனாலும் ரின்போச் வற்புறுத்தினார். பெரும்பாலான நேரங்களில் ரின்போச் மெதுவாகவும் சிரமத்துடனும் நடந்தார். அப்படி இருந்தாலும், சில சமயங்களில்,ரின்போச்சால் ஓடக்கூட முடிந்தது. உதாரணமாக, ஒருமுறை விமான நிலையத்தில், நாங்கள் விமானம் ஏறுவதற்கு தாமதமாக வந்தபோது, ரின்போச் மிக விரைவாக ஓடினார், எங்களில் யாராலும் அவரைப் பின் தொடர்ந்து ஓட முடியவில்லை. இதேபோல், ஒருமுறை புத்தகயாவில், புத்தரின் வார்த்தைகளின் நூறு தொகுதி திபெத்திய மொழிபெயர்ப்பின் (கங்யூர்) வெகுஜன பாராயணத்தில் புனிதர் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ரின்போச் புனிதரின் பக்கத்தில் அமர்ந்தார், அவர்களுக்குப் பின்னால் அவர்களுடன் வலது பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேன். 

புனிதரின் உரையிலிருந்து ஒரு பக்கம் காற்றில் பறந்து சென்றபோது, ரின்போச் தனது இருக்கையில் இருந்து பறந்து ஓடி, தரையில் விழுந்த அந்த உரையின் ஓலையை உடனடியாக எடுத்து வைத்தார். பொதுவாக, அவர் எழுந்திருக்க மற்றவர்களின் உதவி தேவை. கீ மடாலயத்தில் அந்தச் சந்தர்ப்பத்தில், ரின்போச் செங்குத்தான மலைப் பாதையில் உதவியின்றி விரைவாக ஓடினார்.

ரின்போச் தனது காணிக்கைகளை வழங்கிய பிறகு, கீ துறவிகள் அவரை அங்கேயே இரவைக் கழிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அன்று இரவே தான் கைபார் கிராமத்தை அடைய வேண்டும் என்பதால் ரின்போச் மறுத்துவிட்டார். அவர்கள் அவரை மீண்டும் பார்க்க விரும்பினால், அங்கு தான் செல்ல வேண்டும். பின்னர் என்ன நடக்கப் போகிறது என்ற மறைமுகச் செய்தியைக் கொடுத்துவிட்டு விரைவாக அங்கிருந்து கிளம்பினார்.

ரின்போச் மற்றும் அவரது குழுவினர் கிபார் என்ற கிராமத்தை அடைந்ததும், அவருக்குத் தெரிந்த ஒரு விவசாயியின் வீட்டிற்குச் சென்றனர். அந்த விவசாயி தனது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், விருந்தினர்களை எதிர்பார்க்கவில்லை. வேலையில் மும்முரமாக இருக்கிறீர்களா அடுத்த வாரமும் வேலை இருக்கிறதா என்று ரின்போச் கேட்டார். இல்லை என்று மறுத்த விவசாயி ரின்போச்சை தங்குவதற்காக அழைத்தார்.

மாலைப் பொழுதை தியானத்தில் போக்கும் ரின்போச்

நீராடிவிட்டு சிறிது தயிர் சாப்பிட்ட பிறகு, ரின்போச் தனது நினைவிலிருந்த சோங்கப்பாவின் தி எசன்ஸ் ஆஃப் எக்ஸலண்ட் எக்ஸ்ப்ளேனேஷன் ஆஃப் இன்டர்ப்ரெடபிள் அண்ட் டெஃபினிட்டிவ் மீனிங்ஸை பாராயணம் செய்தார், அதற்கு அவருக்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. பாராயணம் பாடி முடித்ததும் ஙகாவாங்கை அழைத்து உடம்பு சரியில்லை என்றார். பின்னர் அவர் ஙவாங்கின் தோளில் தனது தலையை சாய்த்தார் - ரின்போச் வழக்கமாக செய்யாத ஒன்று அது. பின்னோக்கிப் பார்த்தால், அவர் விடைபெறுவதைப் போன்று தோன்றியது. இதற்கெல்லாம் முன்னதாக அவர் சோண்ட்சைலாவை சிம்லாவுக்கு அனுப்பிவிட்டார், ஏனென்றால் என்ன நடக்கும் என்பதை பார்ப்பது சந்தேகத்திற்கு இடமின்றி சோண்ட்சீலாவிற்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர் ஆறு வயதிலிருந்தே ரின்போச்சுடன் இருந்தார், ரின்போச் அவரை தனது மகனைப் போலவே வளர்த்தார்.

மருத்துவரை அழைத்து வர வேண்டுமா அல்லது ஏதாவது மருந்தை வாங்க வேண்டுமா என்று ஙகாவாங் கேட்டார், ஆனால் ரின்போச் வேண்டாம் என்று கூறினார். வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்று ஙவாங் கேட்டார், கழிப்பறைக்கு நடந்து செல்வதற்கு உதவுமாறு ரின்போச் ஙவாங்கிடம் கேட்டார், அவரும் உதவினார். பின்னர் தனது படுக்கையை தயார் செய்யுமாறும் ரின்போச் ஙவாங்கிடம் கேட்டார். அவர் எப்போதும் தூங்கும் வழக்கமான மஞ்சள் விரிப்புக்கு பதிலாக, ரின்போச் ஙகாவாங்கிடம் ஒரு வெள்ளை நிற விரிப்பை போடச் சொன்னார். தாந்த்ரீக பயிற்சியில், மஞ்சள் நிற விரிப்பு மற்றவர்களுக்கு உதவ ஒருவரின் திறனை அதிகரிக்கும் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் வெள்ளை என்பது தடைகளை அமைதிப்படுத்த பயன்படுகிறது.

ஙவாங் மற்றும் கசென் ட்ரப்கியேலை தனது படுக்கையறைக்கு வருமாறு ரின்போச் கேட்டுக் கொண்டார், அதைக் கேட்டு அவர்களும் வந்தார்கள். ரின்போச் புத்தரின் உறங்கும் தோரணையில் தனது வலது பக்கத்தில் படுத்துக் கொண்டார். வழக்கமாக உறங்கச் செல்வது போல், கைகளை பக்கவாட்டில் இடதுபுறமாகவும் முகத்தின் கீழ் வலதுபுறமாகவும் நிலையான நிலையில் வைத்திருக்காமல், தாந்திரீகத் தழுவல் சைகையில் அவற்றைக் கடந்தார்.

பின்னர் அவர் ஆழமாக மூச்சை இழுக்கத் தொடங்கி, வெளிப்படையாக "கொடுக்கல் மற்றும் வாங்குதல்" எனும் (டோங்லென்) தியான செயல்முறை மூலம் உடலைவிட்டு பிரிந்தார். மறைந்த போது அவருக்கு வயது அறுபத்தொன்பது மற்றும் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியில் அவரை முழு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். 

துல்லியமாக அந்த நேரத்தில், ஜெனிவா செல்வதற்காக புனிதர் விமானத்தில் இருந்தபோது, தலைவர் அராபத் திடீரென்று தனது முடிவை மாற்றிக்கொண்டு தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்தார். இதன்மூலம் விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயம் தவிர்க்கப்பட்டது. அவரது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கிய போதிலும், விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் அவரது வாகன அணிவகுப்பு காணாமல் போனது. இருப்பினும், புனிதர் தீங்கை தவிர்த்தார். செர்காங் ரின்போச் புனிதரின் வாழ்க்கைக்கான தடையை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் தனது சொந்த வாழ்வின் ஆற்றலை வழங்கினார்.

கொடுக்கல் வாங்கல் தியானத்தை ரின்போச் தடைகளை எடுக்கப் பயன்படுத்தினார்

கொடுப்பது மற்றும் எடுப்பது என்பது மற்றவர்களிடமிருந்து வரும் தடைகளை எடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கான ஒரு மேம்பட்ட போதிசத்துவ நுட்பமாகும். ரின்போச் இந்த நடைமுறையை கற்றுக் கொடுக்கும் போதெல்லாம், மற்றவர்களின் துன்பத்தை போக்குவதற்காக நம் வாழ்க்கையை தியாகம் செய்யும் அளவிற்கு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

குனு லாமா தனது சொந்த ஊரில் மற்றொருவர் தலையில் விழ வேண்டிய அடியை தான் வாங்கிக் கொண்டதால் காயம் அடைந்து அதன் விளைவாக காலமானதை ரின்போச் எப்போதும் சுட்டிக் காட்டுவார். இப்படிச் செய்வது வீண் இல்லையா என்று நாங்கள் கேட்டதற்கு, ரின்போச் இல்லை என்று பதில் அளித்தார். 

உலக முன்னேற்றத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த ஒரு விண்வெளி வீரர் போல அது இருக்கும் என்று அவர் விளக்கினார். விண்வெளி வீரரின் முன்மாதிரியும் புகழும் அவரது குடும்பத்திற்கு கணிசமான அரசாங்க ஓய்வூதியத்தை உறுதி செய்வது போல, லாமாவின் தியாகத்தின் வீர உதாரணம் அவரது சீடர்களுக்கு ஆன்மீக ஊட்டச்சத்தை வழங்கும். 

மூன்று நாட்கள் மரண-சந்திப்பு தியானத்தில் எஞ்சியிருத்தல்

செர்காங் ரின்போச் மூன்று நாட்கள் தெளிவான வெளிச்சத்தில் மரணம்-சந்திப்பு தியானத்தில் இருந்தார். மறுபிறவிகளை இயக்கும் திறன் கொண்டவர்கள் பொதுவாக இந்த தியானத்தில் மறுபிறவி லாமாக்களின் வரிசையை உருவாக்கும் அல்லது தொடரும் செயல்முறையின் ஒரு பகுதியாக நுழைவார்கள். தியானத்தின் போது, அவர்களின் இதயங்கள் சூடாக இருக்கும், மேலும் அவர்கள் சுவாசத்தை நிறுத்திவிட்டாலும் உடல்கள் சிதைவடையாது. பொதுவாக, பெரிய லாமாக்கள் பல நாட்கள் இந்த நிலையில் இருப்பார்கள், அதன் பிறகு அவர்களின் தலை சரிந்து, நாசியிலிருந்து இரத்தம் வெளியேறும், இது அவர்களின் உணர்நிலை அவர்களின் உடலை விட்டு வெளியேறியதைக் குறிக்கிறது.

செர்காங் ரின்போச் உடன் இந்த சமிக்ஞைகள் ஏற்பட்டபோது, வானில் வானவில் மின்னியது மற்றும் அவரது தகனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு மலையில் அற்புதமான விளக்குகள் தோன்றின. தகனச் சடங்குக்கு துறவிகள் வருமாறு தர்மசாலாவில் உள்ள புனிதர் நாமக்யால் மடாலயத்திற்கு மக்கள் தகவல் அனுப்பிய போதிலும், அவர்கள் சரியான நேரத்தில் வரவில்லை. ரின்போச் விரும்பியபடி ஸ்பிதி துறவிகள் அடக்கம் செய்வதற்கான சடங்குகளைச் செய்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்து குணப்படுத்தும் சக்திகளுடன் ஒரு புதிய நீர் ஊற்று வெளியேறியது. இன்றும் அந்த நீரூற்று பாய்ந்து வருவதால், இது புனித தலமாக மாறியுள்ளது. சரியாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, மே 29, 1984ல், ரின்போச் மீண்டும் ஒரு முறை ஸ்பிட்டியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.

மறுபிறப்பை இயக்குதல்

சில ஆண்டுகளுக்கு முன்னர், செரிங் சோத்ரக் மற்றும் குன்சங் சோத்ரான் என்ற கணவன் மனைவியை ரின்போச் சந்தித்தார், இருவரும் அவரை வெகுவாக ஈர்த்தனர். மிக உறுதியான தர்ம பயிற்சியாளர்கள், அந்த தம்பதி ரின்போச்சிடம் தாங்கள் துறவி மற்றும் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற தங்களது ஆழமான விருப்பத்தை தெரிவித்தனர். துரதிஷ்டவசமாக அந்த கிராமத்தின் தலைவர் இவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார், பதின் பருவத்தினர் தற்போது தான் இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தம்பதி துறவற வாழ்வில் ஈடுபடுவது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார். அவர்கள் முதலில் தங்களது குழந்தையை பார்த்துக கொள்ள வேண்டும். கிராமத் தலைவர் குழுவில் ரின்போல் இரண்டாவதாக இருந்தார். அந்த பெற்றோரின் நான்காவது குழந்தையாக ரின்போச் மறுபிறப்பெடுத்தார். 

மரணம்-சந்திப்பு தியானத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரிய லாமாவின் மறுபிறப்பைக் கண்டறிய சீடர்கள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தினர். இந்த முறைகளில் இறை தூதர்களை மற்றும் மிகவும் உணரப்பட்ட குருமார்களின் கனவுகளை வைத்து ஆலோசித்தல் உள்ளிட்டவையும் அடங்கும். பல ஒத்த தோற்றமுடைய பொருட்களிலிருந்து இறந்த லாமாவின் பல உடைமைகளை கடைசி நபர் சரியாக அடையாளம் காண வேண்டும். எப்படி இருந்தாலும், அத்தகைய வழிமுறைகளை மட்டுமே நம்ப வேண்டாம் என்று புனிதர் தலாய் லாமா எச்சரிக்கிறார். தீவிர மறுபிறப்பாளராக கருதப்படுவதற்கு முன், குழந்தை அதற்கான தனது அடையாளத்தின் அறிகுறிகளைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்.

ரின்போச்சின் மறுபிறப்பை அடையாளம் காணுதல்

ஸ்பிட்டி மக்கள் செர்காங் ரின்போச்சை ஒரு துறவியைப் போலவே கருதுகின்றனர்: கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் அவருடைய புகைப்படம் இருக்கும். சிறிய செர்காங் ரின்போச் பேசத் தொடங்கியதும், அவர் தனது பெற்றோரின் வீட்டுச் சுவரில் இருந்த ரின்போச்சின் படத்தைக் காட்டி, "அது நான்தான்!" என்றார். பின்னர் ஙவாங்க குழந்தையைப் பார்க்க வீட்டிற்குச் சென்றபோது, சிறுவன் உடனடியாக அவருடைய கைகளில் ஓடி அரவணைத்துக் கொண்டான். அவருடன் மீண்டும் தனது மடத்துக்குச் செல்ல சிறிய செர்காங் விரும்பினார்.

அவர் யார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முக்கிய ஸ்பிட்டி பெண்கள் குழு, அடுத்த முறை அவர் பள்ளத்தாக்கில் மறுபிறவி எடுக்குமாறு ரின்போச்சிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் தொலைதூர எல்லை மாவட்டத்தைப் பார்வையிட இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெறுவது எப்போதுமே ஒரு பிரச்சனையாகவே இருந்தது. அத்தகைய மறுபிறப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும். அவரது பெற்றோர், ஆழ்ந்த மரியாதையுடன், தங்கள் சம்மதத்தை அளித்தனர், மேலும் நான்கு வயதில், சிறிய ரின்போச் தர்மசாலாவுக்குப் புறப்பட்டார். அவரது பெற்றோர்கள் அவ்வப்போது அவரைப் பார்க்க வந்தாலும், அந்தச் சிறுவன் அவர்களைக் கேட்கவில்லை, அவர்களைக் காணாமல் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, அவர் தனது பழைய குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் இருப்பதைப் போல உணர்ந்தார். அவர்கள் அவருடைய இதயப்பூர்வமான குடும்பம்.

எங்கள் முதல் சந்திப்பிலேயே இளம் மறுபிறவி என்னை அடையாளம் கண்டார்

ரின்போச் முதன் முதலில் தர்மசாலா வந்த போது நான் இந்தியாவில் இல்லை அந்த சமயத்தில் பயிலரங்க சுற்றுலா போயிருந்தேன். சில மாதங்கள் கழித்து, நான் இந்தியா திரும்பிய போது, அவரை சந்திக்கச் சென்றேன், அதிக எதிர்பார்ப்பையோ அல்லது அதிக சந்தேகத்தையோ நான் கொண்டிருக்கவில்லை. நான் ரின்போச்சின் அறைக்குள் நுழைந்ததும், நான் யார் என்று தெரியுமா என அந்தச் சிறுவனிடம் ஙவாங் கேட்டார். அதற்கு அந்த பையன், “முட்டாள்தனமாக இருக்காதே. நிச்சயமாக, இது யார் என்று எனக்குத் தெரியும்! வாடிகனில் பழைய செர்காங் ரின்போச் மற்றும் புனித போப்பின் சந்திப்புக்காக நான் மொழிபெயர்த்த புகைப்படம் அவரது அறைச் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது, அதில் இருந்து அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று நினைத்தேன். இருந்தாலும்கூட, நாங்கள் சந்தித்த தருணத்திலிருந்து, சிறிய ரின்போச் என்னை ஒரு குடும்ப உறுப்பினரைப் போல முழு பரிச்சயத்துடனும் எளிமையுடனும் நடத்தினார். நான்கு வயதுக் குழந்தை அப்படிப் போலியாக இருக்க முடியாது. இவை அனைத்தும் அவர் யார் என்பதை எனக்கு உணர்த்தியது.

1998ல் 14 வயது ரின்போச்

1998ம் ஆண்டில், புதிய செர்காங் ரின்போச் 14 வயதை அடைந்தார். அவர் பெரும்பாலும் முண்ட்கோடில் உள்ள அவரது மடத்தில் வசித்து வந்தார், மேலும் புனிதர் முக்கிய போதனைகளை வழங்கும்போது வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தர்மசாலாவுக்கு வருவார். சோண்ட்செய்லா மற்றும் ரின்போச்சின் பழைய சமையல்காரர் இறந்துவிட்டார்கள் மற்றும் ஙவாங் காவி ஆடைகளை களைந்து, திருமணம் செய்து, அப்போது நேபாளத்தில் வசித்தார். ரின்போச், துறவிகளின் புதிய குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார், அவர்கள் அனைவரையும் அவர் தனது முந்தைய வாழ்க்கையில் தேர்ந்தெடுத்தார். உதாரணமாக, அவர் தனிப்பட்ட முறையில் ஸ்பிட்டி மற்றும் கின்னாரைச் சேர்ந்த இரண்டு பத்து வயதுச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருடைய வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அவருடன் சேர்த்து தன்னைப் பார்த்துக் கொண்டார்.

அவர் தனது முன்னோடிக்கு ஒத்த நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்தாலும், அதே நடைமுறையான அடிபணியும்  அணுகுமுறையைப் பகிர்ந்து கொண்டாலும், இளம் செர்காங் ரின்போச் தனது சொந்த ஆளுமையைக் கொண்டிருந்தார். ஒரு வாழ்நாளில் இருந்து அடுத்தது வரை தொடர்வது திறமைகள், சார்புகள் மற்றும் கர்ம தொடர்புகள் ஆகியவை ஆகும்.

அவருடனான எனது உறவில், கேப்டன் கிர்க்கின் அசல் ஸ்டார் ட்ரெக் குழுவின் உறுப்பினராக நான் உணர்கிறேன், அவர் இப்போது ஸ்டார் ட்ரெக்கின் கேப்டன் பிகார்ட்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் உடன் இணைந்துள்ளார். எல்லாமே மாறிவிட்டன, இருந்தாலும் உறுதியான தொடர்ச்சி இருக்கிறது.

ரின்போச்சியின் வளர்ப்பில் பின் இருக்கையின் பங்கை எடுத்தல்

இதுவரை, செர்காங் ரின்போச்சின் வளர்ப்பில் நான் பின் இருக்கை பங்கு வகித்தேன். பழைய ரின்போச் தனது சொந்த மக்களுக்கு சேவை செய்வதை முக்கியமாக விரும்பியிருப்பார் என்று நான் உணர்ந்தேன். பல பெரிய லாமாக்கள், திபெத்தியர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், மேற்கு அல்லது ஆசியாவின் பாரம்பரிய கலாச்சாரத்திற்கு வெளியே கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

பௌத்தத்தின் திபெத்திய வடிவமானது அதன் முழு வடிவில் நிலைத்திருக்க வேண்டுமானால், திபெத்தியர்களின் எதிர்கால சந்ததியினருக்கு பயிற்சி அளிப்பது அவசியம். ஏனென்றால், தற்போது முழு புத்த மத போதனைகள் திபெத்திய மொழியில் மட்டுமே கிடைக்கின்றன. எனது பயிற்சி மற்றும் சுய வளர்ச்சிக்கு கற்பனை செய்யக்கூடிய சிறந்த சூழ்நிலைகளை ரின்போச் எனக்கு வழங்கினார். அவருக்கு எனது நன்றிக்கடனை செலுத்த, அவருக்கும் அதையே செய்ய முற்பட்டேன்.

கலாச்சார மோதலைத் தடுக்க முயற்சிக்க, நான் ரின்போச்சின் நவீன கல்வியியலில் பங்கேற்கவில்லை. உண்மையில், நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்கிடையிலான நெருங்கிய பந்தம் தெளிவாகத் தெரிந்தாலும், அவருடன் அதிக தொடர்பு வைத்திருப்பதை நான் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். அதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள திபெத்தியப் பள்ளிகள் பயன்படுத்தும் அதே பாடத்திட்டத்தைப் பின்பற்றி, அவருக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூகப் பாடங்களை கற்பிக்க உள்ளூர் திபெத்திய பயிற்றுவிப்பாளர்களை ஏற்பாடு செய்ய நான் உதவியுள்ளேன். இதன் விளைவாக, ரின்போச் தனது சொந்த மக்களுடன் முழுமையாக தொடர்பு கொள்ள முடியும். நான் அவரை மேற்கத்திய நாடுகளுக்கு அழைத்துச் செல்லவில்லை அல்லது அவருக்கு கணினி அல்லது வீடியோ பிளேயர் வாங்கவில்லை, மற்றவர்கள் இவற்றை வழங்குவதையும் நான் ஊக்கப்படுத்தவில்லை. பல இளம் மறுபிறவி லாமாக்கள் தங்கள் பாரம்பரிய துறவற ஆய்வுகளை விட கம்ப்யூட்டர் கேம்கள் மற்றும் அதிரடி வீடியோக்களால் மிகவும் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.

இன்னொரு முறை அவருடைய சீடராக மாற பிரார்த்தனை

எனது இயக்கம் எவ்வளவு பங்களித்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ரின்போச் ஆழ்ந்த பாதுகாப்பு உணர்வைக் காட்டுகிறார் மற்றும் அவரது சொந்த கலாச்சாரத்தில் முழு சவுகரியத்துடன் இருக்கிறார். இது அவருக்கும் எதிர்காலத்தில் அவர் சந்திக்கும் அனைவருக்கும் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அவர் முதிர்ச்சி அடையும் போது மேற்கத்திய நாடுகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ள முடியும். எனது அடுத்த ஜென்மத்தில் மீண்டும் ஒருமுறை அவருடைய சீடனாக வர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

Top