மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் ஏற்ற இறக்கங்கள்
நாம் எதிர்கொள்ளும் பல வகையான பிரச்னைகள் மற்றும் துன்பங்கள் இருக்கின்றன. வாழ்க்கை வெறுப்பாகவும் அழுத்தத்திற்குட்பட்டதாகவும் இருக்கலாம். நமக்கு நாமே மகிழ்ச்சியான வாழ்வை உருவாக்க கடினமாக முயல வேண்டும், ஆனால் பெரும்பாலும் விஷயங்கள் நாம் நம்பும் விதத்திலேயே மாறுவதில்லை. நம்முடைய உறவுமுறைகள் மோசமாகச் செல்வது, மற்றவர்கள் நம்மை தாழ்வாக நடத்துவது, உடல்நலம் குன்றிப் போவது, வேலைஇழப்பு போன்ற எப்போதுமே வேண்டாம் என்று நினைக்கும் விஷயங்களே நமக்கு நடக்கும். எவ்வளவிற்கு எவ்வளவு நாம் இவற்றை தவிர்க்க நினைக்கிறோமோ, எப்படி இருந்தாலும் அது நடந்தே தீரும். பெரும்பாலும் இவற்றால் நாம் மனச்சோர்வை பெறுவோம் அல்லது அதனை நிராகரிக்க முயற்சிப்போம், ஆனால் பொதுவாக இந்தச் செயல்கள் விஷயங்களை மேலும் மோசமடையச் செய்யும். இதனால் நாம் மேலும் நிம்மதி இழக்க நேரிடும்.
சில மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நாம் வெற்றி கண்டாலும், அந்த மகிழ்ச்சியுடனும் ஒரு பிரச்னை இருக்கும் - அது நீடித்திருக்காது. அது எப்போதும் நம்மை திருப்திபடுத்தாது அதன் மீதான விருப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். சொல்லப்போனால், நாம் அதிக நேரம் மற்றும் சக்தியை நமக்கு "மிகுதியாக" தேவைப்படும் விஷயத்திற்காக செலவிடுவோம். சமூக வலைதள பக்கத்தில் ஒரு செல்பியை பதிவிடும் நம்முடைய அணுகுமுறை பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறை நாம் "லைக்" பெறும் போது லேசான டோபமைனின் அழுத்தத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் போன்று இருக்கும், அது எவ்வளவு நேரம் நீடித்திருக்கும்? எவ்வளவு விரைவாக நாம் மேலும் "லைக்குகளை" பெற்றிருக்கிறோமா என்று சரிபார்க்கிறோம்? அதிக லைக்குகளைப் பெறாவிட்டால் நாம் எவ்வளவு மோசமாக உணர்கிறோம்? அது துன்பம் இல்லையா?
உடல் மற்றும் மனங்களை நாம் நிரந்தரமாக்குகிறோம் அதனால் நாம் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கிறோம்
ஆக, வாழ்க்கை எல்லா நேரமும் ஏற்ற இறக்கத்துடனே செல்கிறது - சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் சிறந்தவர் என்று உணர்கிறோம், சில நேரங்களில் சோகமாகவும் மகிழ்ச்சியின்றியும் இருக்கிறோம். சூழ்நிலையை ஆமாகச் சென்று பார்க்காமல் "அதுதான் வாழ்க்கை" என்று அடிக்கடி வெறுமனே நாம் சொல்கிறோம். ஆனால் உண்மையில் அடுத்த கனம் எப்படி இருக்கப் போகிறது என்று நமக்கு எப்போது தெரியாது, நாம் விரும்பி இருக்க நினைக்கும் வாழ்க்கை அதுவா?
அதிர்ஷ்டவசமாக, புத்தர் ஆழமாக பார்த்து இவற்றிற்கு அடிநாதமான உண்மையான பிரச்னையை கண்டறிந்தார். உண்மையான பிரச்னை, உண்மையான துன்பம், நாம் கொண்டிருக்கும் வகைகளான உடல்கள் மற்றும் மனங்கள். நாம் கொண்டிருக்கும் உடல்கள் மற்றும் மனங்களே நாம் அனுபவிக்கும் ஏற்ற இறக்கங்களுக்கான அடிப்படை, அவை காந்தத்தை போல ஈர்க்கின்றன. நாம் மேலும் ஆழமாகப் பார்த்தால், உண்மையான பிரச்னை என்பது அது போன்ற உடல்கள் மற்றும் மனங்களை நாம் கொண்டிருப்பதனால், நாம் இது போன்ற பல ஏற்ற இறக்கங்களை இப்போது மட்டுமல்ல, அடுத்த வாரத்திற்கு, கடைசியில் நாம் உயிரிழக்கும் வரை கூட அவற்றை உருவாக்கி நிரந்தரமாக்குகிறோம். இதுமட்டுமல்ல, இந்த ஜென்மத்திற்கு மட்டுமல்லாமல் , மறுபிறப்பு, எதிர்காலத்தில் வரக்கூடிய அனைத்து ஜென்மங்களுக்கும் சேர்த்தே நாம் நம்முடைய பிரச்னைகளை நிரந்தரமாக்குகிறோம் என்று புத்தர் கூறி இருக்கிறார். மறுபிறப்பை நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் அப்படி ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எதிர்கால தலைமுறைக்கும் கூட நாம் இந்தப் பிரச்னைகளை எப்படி நிரந்தரமாக்குகிறோம் என்பதை நம்மால் காண முடியும். தற்போதைய பருவநிலை நெருக்கடியுடன் போது அது தெளிவாகத் தெரிகிறது, இந்த கிரகத்தை விட்டு நாம் சென்ற பிறகும் கூட நீடித்திருக்கும் வகையில் எப்படி நம்முடைய செயல்களால் பிரச்னைகளை நிரந்தரமாக்கி இருக்கிறோம் என்று கண்முன்னே காண்கிறோம்.
எனவே, நம்முடைய உடல்கள் மற்றும் மனங்களுடன் உண்மையான பிரச்னை என்ன? அந்தப் பிரச்னையானது அவை வரையறைக்குட்பட்டவை. ஒரு குடுவை பால் காலாவதியாகிவிடுவதைப் போல நம்முடைய உடல்களும் வரையறுக்கப்பட்டவை வயதாகும் போது அவை நோய்வாய்பட்டு அழிந்துபோகக்கூடியவை. ஆனால் பாலை விட மோசமான ஒரு நிலை உடலுக்கு, அவற்றிற்கு காலாவதியாகும் காலம் தெளிவாகத் தெரியாது. நம்முடைய உடலின் காலாவதிக் காலம் என்ன என்று நாம் எந்த யோசனையும் கொண்டிருக்க மாட்டோம். உடல் நீடித்திருந்தால், அதனை பராமரிப்பதற்காக நாம் எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாம் அதனை சுத்தம் செய்ய வேண்டும், ஆடை உடுத்த வேண்டும், உடலுக்கு உறுதி சேர்க்க சாப்பிட வேண்டும், கழிப்பிடம் செல்ல வேண்டும், உடலுக்கு பயிற்சி, ஓய்வு மற்றும் உறக்கம் கொடுக்க வேண்டும், காயமடைந்தால் அல்லது நோய்வாய்பட்டால் பராமரிக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரம் செலவிவட வேண்டும்? மிகப்பெரிய புத்த குரு அழகாகச் சொன்னது போல, நாம் அனைவரும் நம்முடைய உடலுக்கு அடிமைகளாக இருக்கிறோம்.
நம்முடைய மனங்கள், நம்முடைய உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளால் வரையறுக்கப்பட்டவை. நம்முடைய மனதிற்கு அறிவூட்டி பயிற்சிக்க வேண்டும், அதன் பிறகும் கூட நாம் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன. எந்த ஒன்றின் முழுத் தோற்றத்தையும் நம்மால் பார்க்க முடியாது - உதாரணமாக புவி வெப்பமடைதல், செயற்கை அறிவாற்றல், ரோபாடிக்ஸ், சுற்றுச்சூழலின் மெய்நிகர் யதார்த்தம் போன்றவற்றின் விளைவுகள், மட்டுமே நம்முடைய அன்றாட வாழ்வில் என்ன செய்து செல்கிறது. அதைவிட மோசமானது, நம்முடைய மனங்கள், நம்முடைய உடல்களைப் போல, வயது முதிர்ந்த பின்னர் அழிந்து போகும் - நம்முடைய குறுகிய - கால நினைவு சென்று விடும், நம்முடைய மனங்கள் மிக மெதுவாக செயல்படும், நாம் எளிதில் குழப்பமடைவோம்.
இவை அனைத்திற்கும் சிகரமானது, நம்முடைய உணர்வுகள் காயப்படும் மற்றம் நம்முடைய உணர்வுகள் காட்டுத்தனமாக ஓடி, தெளிவாக நாம் சிந்திப்பதில் இருந்து தற்காக்கும். ஆனால் இவை எல்லாவற்றுடனான உண்மையான பிரச்னை என்பது நம்முடைய வரையறுக்கப்பட்ட உடல்கள், மனங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் தங்களையே நிரந்தரமாக்குகின்றன;
நமது வரையறுக்கப்பட்ட உடல்களால் எடுத்துக்காட்டப்பட்ட உண்மையான துன்பத்தின் நான்கு அம்சங்கள்
நம்முடைய வரையறுக்கப்பட்ட உடல்களுடன் உண்மையான துன்பத்தை நான்கு அம்சங்களுடன் புத்தர் எடுத்துக்காட்டுகிறார்.
- முதலாவது, அவை நிரந்தரமில்லாதவை. சில நேரங்களில் நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பாக உணர்வோம், ஆனால் சின்ன விஷயம் கூட நம்முடைய உடலின் சமநிலையை இழக்கச் செய்யும் நாம் நோய்வாய்பட்டு வேதனையை உணர்வோம். நம்முடைய உடல் எவ்வளவு மென்மையானது என்று பாருங்கள் - லேசான விஷயம் கூட காயம் மற்றும் வலிக்கு காரணமாகிறது. இவை எல்லாவற்றிற்கும் கீழே மறைந்திருக்கும் உண்மையானழ ஒவ்வொர கனமும் நம்மை மரணத்திற்கு மிக நெருக்கத்தில் கொண்டு செல்கிறது. நாம் நம்முடைய உடலை எப்போதும் ஆரோக்கியத்துடனும் உறுதியுடன் வைத்திருக்க முடியும் என்று நாம் கற்பனை செய்கிறோம், பின்னர், நமக்கு வயது அதிகரிக்கும் போதும் கூட, இளம் வயதில் என்ன சாப்பிட்டோமோ அவற்றையே உண்பது அதே விஷயங்களைச் செய்வது என்று இருக்கிறோம். ஆனால் உண்மையில் நம்மை நாமே முட்டாளாக்குகிறோம்; எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற முடிவில்லாத போராட்டமானது நமக்கு சோகம் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- இரண்டாவதாக, நம்முடைய உடல்கள் தனக்கு தானே பிரச்னையானவை. நம்முடைய உடலுக்கு நறுமணம் போட்டு, அலங்காரம் செய்து அல்லது அதிக தசைகளை மேம்படுத்தி ஈர்க்கக் கூடியதாக்கினால், நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நம்மை நாமே அழகாக காண்பிக்க எவ்வளவு முயற்சிக்கிறோம் என்பது பெரிதல்ல, நாம் போதுமான அளவு காண்பதற்கு நன்றாக இல்லை என்று நாம் தொடர்ந்து கவலைப்படுகிறோம் அல்லது நாம் நம்முடைய நல்ல தோற்றத்தை இழக்கத் தொடங்குகிறோம். எவ்வளவு அலங்காரம் அல்லது தசைகளை கூட்டி இருக்கிறோம் அல்லது எவ்வளவு ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுகிறோம் என்பது பொருட்டல்ல, நம்முடைய உடல்களுடன் இருக்கும் ஒரு பிரச்னையானது அவை நோய்வாய்ப்படும், நாம் வளரும் போது விபத்து ஏற்பட்டு காயம்படவும் முடியும்.
- மூன்றாவதாக, நம்முடைய உடலைக் கழுவாவிட்டடால் நாற்றம் வீசுகிறது, பல் துலக்காவிட்டால் துர்நாற்றத்தை சுவாசிக்கிறோம், நாம் வெளியேற்றும் மலம் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் வீசுகிறது. நாம் மென்ற உணவை துப்பி வேறு யாருக்காவது கொடுக்கிறோம் அது சுத்தமானது உண்ணத்தக்கது என்று யாராவது கருதுவார்களா? இங்கை பிரச்னை என்னவென்றால், நாம் "நான்" என்று அழைக்கப்படும் சுயாதீனமாக இருக்கும் நிறுவனங்கள் அல்ல, அவை நம் உடலிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு "உடல் அழகு" என்ற கற்பனை உலகில் வாழ முடியும். குறைபாடுகள் இருந்தாலும் நாம் இந்த உடல்களுடன் சிக்கிக்கொண்டிருக்கிறோம், மேலும் நாம் அதனை பராமரிக்க வேண்டும், அவற்றைக் கவனித்து, துன்பங்களைக் கடப்பதற்கும் பிறருக்கு உதவுவதற்கும் நாம் எடுக்கும் முயற்சிகளில் உடலை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
- நான்காவதாக, மற்றவர்கள் நம் உடலைப் பார்க்கிறார்களே தவிர, நிஜ வாழ்க்கையில் நம்மால் பார்க்க முடியாது. வீடியோ கேமில் மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதற்காக ஆன்லைன் அவதாரத்தை உருவாக்கலாம், ஆனால் "யதார்த்த உலகில்" யாராவது நம்மைச் சந்திக்கும் போது, அவர்கள் நம் உடல்களை அப்படியே பார்க்கிறார்கள். நாம் 60 வயதில் இருக்கும்போது, 20 வயதில் எப்படித் தோன்றுகிறோமோ அப்படியே மனதளவில் நமக்குத் தோன்றலாம்,ஆனால் மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது 60 வயதுடைய உடலைத் தான் பார்ப்பார்கள். நாம் அதனை புரிந்து கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வயதிற்குப் பொருந்தாத வழிகளில் செயல்பட்டு பிரச்னைகள் ஏற்பட காரணமாக முடியும்.
சுருக்கம்
நமது வரையறுக்கப்பட்ட உடல்கள் உண்மையான துன்பத்தின் எடுத்துக்காட்டுகள், அவை நிலையற்றவை, சிக்கல் நிறைந்தவை, அவற்றிலிருந்து நாம் விலக முடியாது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது அவர்கள் பார்ப்பதுதான்.அந்த வகையான உடலைக் கொண்டிருப்பதே ஒரு பிரச்னைக்கு போதுமானது, ஆனால் புத்தர் சொன்ன உண்மையான துன்பம் என்னவென்றால், அத்தகைய உடலை இந்த வாழ்நாள் முதல் அடுத்த வாழ்நாள் வரை நாம் நிலைநிறுத்துகிறோம், இதன் அடிப்படையில் முடிவில்லாமல் தொடர்ச்சியான மகிழ்ச்சியற்ற சுழற்சியை அனுபவிக்கிறோம். திருப்தியற்ற இன்பம் மற்றும் மகிழ்ச்சி. உண்மையில் நீங்கள் விரும்புவது அதுதானா?