இரண்டு, நான்கு உண்மைகளில் இருந்து

ஆன்மிக இலக்கை நோக்கி செயலாற்றுதல்

ஆன்மிக இலக்கை நோக்கி நாம் செயலாற்ற இரண்டு வழிகள் இருக்கின்றன:

  • நம்பிக்கை அடிப்படையில் – இலக்கை அடைவது சாத்தியமே என்று நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் அதை நோக்கி செயலாற்றுங்கள், உங்களுடைய பயிற்சியில் நீங்கள் மேலும் முன்னேறினால், இறுதியில் இலக்கை அடைவது சாத்தியமே என்று நீங்கள் மனமாற்றம் அடைவீர்கள். உதாரணமாக, உங்களுடைய இலக்கானது துன்பத்தை எப்போதும் வென்று வருவது மற்றும் அகற்றுவது என்றால் அது சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருங்கள், அதை நோக்கி நீங்கள் செயலாற்றினால், உங்களுடைய துன்பம் குறையும் போது, இலக்கை அடைவது உங்களுக்கு சாத்தியமே என்று நீங்கள் மனமாற்றம் அடைவீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் அதிகம் படியுங்கள், தியானியுங்கள், இதன் மூலம் இலக்கு அடையக் கூடியதே என்று தர்க்க ரீதியில் நம்பிக்கையும் கூட உங்களுக்குக் கிடைக்கும். 
  • பற்றுக்கொள் அடிப்படையில் - இலக்கை அடைய முடியும் என்று நீங்கள் முதலில் காரணம் மற்றும் தர்க்கத்தின் மூலம் உறுதியாக நம்புகிறீர்கள், பின்னர் நீங்கள் அதை நோக்கி செயலாற்றுகிறீர்கள்.

பழமையான பௌத்த சூத்திரங்களோடு நாம் வைக்க விரும்பினால் போதிசிட்டாவை வளர்ப்பதற்கான இந்த இரண்டு வழிமுறைகளே பொதுவான இரண்டு அணுகுமுறைகளாக விவாதிக்கப்படுகின்றன. 

முதலில் நாம் தொடர்புடைய போதிசிட்டாவை வளர்த்து, இதுவரை நடந்திடாத ஆனால் நடக்கக் கூடிய நம்முடைய சுய எதிர்கால ஞானமடைதலை நோக்கமாக வைப்போம். ஒவ்வொருவரும் பலனடைவதற்காக நாம் இதனைச் செய்ய வேண்டும், ஏனென்றால், நாம் உண்மையில் அனைவருக்கும் உதவக்கூடிய ஒரே வழி, இந்த நிலையை அடைவதுதான், இதன் காரணத்தையும் விளைவையும் மற்றும் மற்றவர்களுக்கு உதவ மிகவும் பயனுள்ள வழிகளையும் நாம் முழுமையாக புரிந்துகொள்வதுதான். கூடுதலாக, அதனை அடைவது சாத்தியம் என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். 

மேலும் நாம் வளர்ச்சியடையும் போது, ஆழ்ந்த போதிசிட்டா என்று சொல்லப்படுவதை நாம் மேம்படுத்தலாம், வெற்றிடம்(வெறுமை) குறித்த புரிதலை அது குறிக்கிறது – உண்மை என்னவென்றால் விஷயங்கள் சாத்தியமற்ற வரிகளில் இருக்காது. நாம் யதார்த்தத்தை புரிந்து கொள்கிறோம், மனதின் இயல்பானது கற்பனையை முன்னிலைப்படுத்தும் திறன் படைத்ததல்ல என்பதை பார்க்கலாம், மாறாக உண்மையில் யதார்த்தத்தை தானே உணர்தல். அதனை உணர்வதன் மூலம், தர்க்க ரீதியில் இலக்கை அடைய முடியும் என்று நாம் நம்பிக்கையானவராக மாறுகிறோம். அதன் பின்னர் நம்முடைய நம்பிக்கையானது பற்றுக்கொள்ளாக மாறுகிறது.  

மற்றொரு அணுகுமுறையானது முதலில் யதார்த்தம் பற்றிய புரிதலை வளர்த்தல், அங்கே ஞானமடைதல் சாத்தியம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் – எனவே முதலில் ஆழ்ந்த போதிசிட்டா. இதன் அடிப்படையில், நம்மால் ஞானமடைய முடியும் என்று நாம் நம்புவோம், ஏனெனில் இந்த நம்பிக்கையால் நாம் அதனை அடைவதை நோக்கி செயலாற்றுவோம்.  இந்த இரண்டாவது அணுகுமுறையானது மிகப்பெரிய இந்திய குருவான நாகார்ஜுனாவின் புத்தங்களில் ஒன்றான "போதிசிட்டா மீதான வர்ணனை” -யில் (சமஸ்கிருதத்தில் போதிசிட்டா- விவார்ணா) காணப்படுகிறது.

இந்த அணுகுமுறையானது நாம் காணும் வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, நான்கு நேர்மையான உண்மைகளில் இருந்து இரண்டு உண்மைகள், மற்றும் நான்கு உண்மைகளில் இருந்து மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்களை எப்படி நாம் பெற்றோம். இதன் நோக்கமானது விடுதலை மற்றும் ஞானமடைதல் சாத்தியமே என்பதை உணர்வதற்கு நமக்கு உதவுகிறது, அவை யதார்த்தம் அடிப்படையிலானவை.  

  • விடுதலை என்பதன் அர்த்தம் கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் இருந்து எப்போதும் விடுபடும் நிலை: முழுவதும் சம்சாரியத்தில் இருந்து விடுதலை, இதனால் நாம் துன்பப்படுவதில் இருந்து எப்போதும் விடுதலை பெறுவோம். விடுதலையை அடைந்தவர்கள் “அர்ஹதர்கள்”, விடுபட்டவர்கள் ஆவார்கள். 
  • ஞானமடைதல் என்பது அனைத்து தெளிவின்மைகளில் இருந்து என்றென்றும் விடுபட்டு இருக்கும் நிலை ஆகும், இது அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களுக்கும் விடுதலை மற்றும் ஞானம் அடைய உதவும் மிகவும் பயனுள்ள வழிகளைப் புரிந்துகொள்வதைத் தடுக்கிறது. ஞானமடைந்தவர்களே “புத்தர்கள்” ஆவார்கள். 

ஷக்யமுனி புத்தரால் மட்டுமே விடுதலை மற்றும் ஞானத்தை அடைய முடியும் என்பதல்ல நம்மாலும் முடியும், அது சாத்தியம் என்று நாம் நம்புவதோடு மட்டும் இல்லாமல், அது நமது ஆன்மீக பயிற்சியில் நமக்கு அதிக வலிமையையும் ஸ்திரத்தன்மையையும் அளிக்கிறது. இருப்பினும், அதை புரிந்துகொள்வது மிகவும் எளிதானது அல்ல, ஆனால் அதை யாரும் சொல்லவில்லை! 

இரண்டு உண்மைகள்

நம்முடைய முதல் கூட்டத்தில், முதல் வரியை நாம் விவாதித்தோம்:

அடித்தளமாக இருக்கும் இரண்டு உண்மைகளின் பொருளை அறிகிறோம், அனைத்து விஷயங்களும் நிலைத்திருக்கும் வழி அதுவே,

இந்த ஒட்டு மொத்த கலந்துரையாடலின் அடித்தளமானது இரண்டு உண்மைகளின் விளக்கத்தில் இருக்கிறது, அது அனைத்தும் எப்படி இருக்கிறது மற்றும் இயங்குகிறது என்பதில் அக்கறை கொண்டிருக்கிறது – மற்றொரு விதமாகச் சொல்வதானால், அனைத்து விஷயங்களும் நிலைத்திருக்கும் வழி. அனைத்தைப் பற்றிய இந்த இரண்டு உண்மைகள், இரண்டும் செல்லத்தக்கவை அதனால் உண்மையும் கூட:

  • தொடர்புடைய உண்மை: விஷயங்கள் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளைச் சார்ந்தே எழுகின்றன. நிச்சயமாக, விஷயங்கள் எதைச் சார்ந்து இருக்கின்றன அதாவது அதன் பகுதிகள் மற்றும் அதனைக் குறிக்கும் சூழல்கள் என்று இதர மட்டங்களும் இருக்கின்றன. இங்கே முக்கியமான விஷயமென்பது அனுபவ ரீதியில் காரணம் மற்றும் தாக்கம், குறிப்பாக கர்மாவின் வலுக்கட்டாயத்துடன் தொடர்புபட்டு நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை.  
  • ஆழ்ந்த உண்மை: விஷயங்கள் நம்மைச் சார்ந்து தோன்றுவதாகத் தோன்றாவிட்டாலும், இருக்கும் சாத்தியமற்ற வழிகளின் ஏமாற்றுத் தோற்றங்கள் யதார்த்தத்துடன் ஒத்துப்போவதில்லை. நம்முடைய கணிப்புகளுக்கு ஏற்ற உண்மையான யதார்ததம் என்பது முழுவதுமாக இருப்பதில்லை. காரணங்கள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து சுயாதீனமாக இருக்கும் இந்த முழுமையான இல்லாமை "வெற்றிடம்" அல்லது "வெறுமை" என்று அழைக்கப்படுகிறது.

நான்கு மேன்மையான உண்மைகள்

இரண்டு உண்மைகளின் செல்லத்தக்கவை அடிப்படையில், புத்தர் புரிந்து கொண்டு நான்கு மேன்மையான உண்மைகளை வடிவமைத்தால். இது இரண்டாவது வரியில் காட்டப்பட்டிருக்கிறது:

நான்கு உண்மைகள் மூலம், நாம் எப்படி உள்ளே நுழைகிறோம் என்பது பற்றி உறுதியாகி விடுகிறோம், அதே போன்று கட்டுப்பாடின்றி மீண்டும் மறுபிறப்பெடுப்பதையும் மாற்றலாம்.

நான்கு மேன்மையான உண்மைகள் மிகவும் உணரப்பட்டவர்களால் உண்மையாகக் காணப்பட்டவை. இது ஒரு சுவராஸ்யமான புள்ளி, ஏனெனில் இதன் அர்த்தம் புத்தர்கள் மட்டும் இந்த உண்மைகளைச் சரியானவை என்று காணவில்லை, புத்தர் நிலைக்கு முந்தைய கட்டத்தை அடைந்தவர்கள் கூட உணர்ந்திருக்கிறார்கள், உண்மையில் அவர்கள் பயணிக்க வேண்டிய நீண்டதூரத்திற்கு முன்னரே உணர்கிறார்கள். வெற்றிடத்தின் கருத்தியல் அல்லாத அறிவாற்றல் அல்லது வேறு விதமாகச் சொல்வதானால், அது ஆழமான உண்மை. இந்தப் புரிதல் முழுவதும் துல்லியமானது மற்றும் முழுவதும் தீர்க்கமானது. இது கருத்தியல் அல்லாததால், நாம் வகைகளின் மூலம் விஷயங்களை உணரவில்லை என்று அர்த்தம்.

நாய் போன்ற ஒரு வகை இனத்துடன் நாம் சிந்தித்தால், நாயை குறிக்கும் ஏதோ ஒன்றை வைத்திருப்பீர்கள். இந்த பிரதிநிதித்துவம் ஒவ்வொரு மனிதருக்கும் லேசாக மாறுபடும், ஆனால் நாம் நாயை தெருவிலோ அல்லது வேறு எங்கோ கண்டால், இந்த வகையின் மூலம் நாம் அதை உணர்கிறோம். ஒரு நாயை உருவகப்படுத்துவதன் மூலம் - ஒரு குறிப்பிட்ட காட்சி இருக்க வேண்டிய அவசியமில்லை - நாய் பற்றிய கருத்தை நாங்கள் ஒன்றாக பொருத்துகிறோம். கருத்தியல் அல்லாத ஒன்றை நாம் உணரும்போது, அது எந்த வகையாலும் வடிகட்டப்படவில்லை அல்லது அதைப் பிரதிபலிக்கும் ஒன்று உள்ளது. அதனால்தான் இது "வெறும் அறிவாற்றல்" என்று அழைக்கப்படுகிறது. பொருட்களை ஒரு பெட்டிக்குள் பொருத்தாமல் நீங்கள் உணர்கிறீர்கள்.

உயர்நிலை உணர்வாளர்கள் அல்லது சமஸ்கிருதத்தில் ஆர்யர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், யதார்த்தத்தை “யதார்த்தம்” என்ற ஒரு பெட்டிக்குள் புகுத்தாமல் அப்படியே ஏற்கிறார்கள், “நான் இப்போது யதார்த்தத்தைக் காண்கிறேன்.”  எந்த பெட்டியிலோ அல்லது வகையிலோ வைக்காமல் அவர்கள் அதனை உணர்கிறார்கள் என்பதை அவர்கள் முழுமையாக, துல்லியமாக, தீர்க்கமாக புரிந்துகொள்கிறார்கள். நாம் அனைத்தையும் பெட்டிக்குள் வைக்கிறோம், பெட்டிக்குள் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும் தாமாகவே, அனைத்தில் இருந்தும் தனித்திருத்திருக்கிறது.

கருத்தியல் அறிவாற்றல் பற்றி இங்கே மேலும் விளக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே விஷயம் என்னவென்றால், யதார்த்தத்தை நீங்கள் இந்த வழியில் புரிந்து கொள்ள நீங்கள் புத்தராக இருக்க வேண்டியதில்லை. யதார்த்தத்தை நாம் கருத்தியல் அல்லாமல் உணரும் போது, நான்கு மேன்மையான உண்மைகள் உண்மையாக இருப்பதை நாம் பார்ப்போம் மற்றும் அது குறித்து நாம் உறுதியாக இருப்போம். 

இந்த நான்கு உண்மைகள் என்ன? முதலாவது துன்பப்படுதல். இராண்டாவது துன்பப்படுதலுக்கான காரணம். மூன்றாவது ஒன்று துன்பப்படுதல் மற்றும் அதன் காரணங்களுக்கான நிறுத்தங்கள். நான்காவது பாதை அல்லது துன்பப்படுதலை நிறுத்துவதற்கு வழிவகுக்கும் புரிதல். இவை “சரியான துன்பப்படுதல்,” “சரியான காரணம்” உள்ளிட்ட பலவற்றில் உள்ள உண்மைகள் என்று அழைக்கப்படுகின்றன.

மறுபிறப்பு என்ற சூழலுக்குட்பட்டது இந்த மொத்த விவாதமும் – தொடக்கம் மற்றும் முடிவில்லா மனத் தொடர்ச்சிகள். மறுபிறப்பே அதன் அடித்தளம்.  நிமிடத்திற்கு நிமிதம் தனியொருவர் அனுபவிக்கும் விஷயங்கள் குறித்து நாம் பேசினோம், அது காரணம் மற்றும் விளைவின் அடிப்படையில் செயல்பட்டால், ஒரு முழுமையான தொடக்கத்தைக் கொண்டிருக்க முடியாது ஏனெனில் அது இல்லாமையில் இருந்து தொடங்கியது. அதே போன்று கடைசி நிமிடம் என்ற ஒன்று இருக்க முடியாது ஏனெனில் அதுவும் இல்லாமையாக மாறிப்போகும். அதற்கு சாத்தியமில்லை. காரணம் மற்றும் தாக்கத்தின் அடிப்படை உண்மையில் இருந்து, தனிப்பட்ட மனத் தொடர்ச்சிகளுக்கு தொடக்கமோ முடிவோ இல்லை என்பதை நாம் தீர்மானித்துக்கொள்ளலாம், ஆதலால் மறுபிறப்பு என்பது கட்டாயம் உண்மையே. 

உண்மையில் துன்பப்படுதல்

சரியான துன்பப்படுதலுக்கு மூன்று அம்சங்கள் இருக்கின்றன:

  • முதலாவது நம்முடைய வழக்கமான மகிழ்ச்சியின்மை, அதனை நாம் துன்பத்தின் துன்பம் என்று சொல்கிறோம். நாம் அனைவருமே மகிழ்ச்சியின்மையை அனுபவித்திருக்கிறோம். மகிழ்ச்சியின்மை என்பது வலியைப் போன்றே இருக்க வேண்டிய அவசியமில்லை. மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை, இன்பம் மற்றும் வலி இரண்டும் வெவ்வேறு வகையான விஷயங்கள். இன்பம் மற்றும் வலி உடல் ரீதியிலான உணர்வுகள், ஆனால் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை மனநிலைகள். கடுமையான வலியை அனுபவத்தால் சிலர் அது குறித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள், தீவிர உடற்பயிற்சியைச் செய்வதைப் போன்றது, மேலும் சிலர் இன்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் அது குறித்து மகிழ்ச்சியின்றி இருப்பார்கள், உதாரணமாக வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வதைப் போன்றது. ஆக இவையே இரண்டு வேறுபட்ட காரணிகள். நாம் இங்கே மகிழ்ச்சியின்மை குறித்து பேசுகிறோம், அது நம் அனைவருக்கும் தெரிந்ததே, மேலும் இது அனைத்து வகையான துன்பங்களாலும் நிரப்பப்பட்ட மோசமான மறுபிறப்பின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது வகையானது மாற்றத்திற்காக துன்பப்படுதல், இது நம்முடைய வழக்கமான மகிழ்ச்சியை குறிக்கிறது. நம்முடைய வழக்கமான மகிழ்ச்சியுடன் இருக்கும் பிரச்னையானது, அது நீடித்திருக்காது அல்லது நம்மை திருப்திபடுத்தாது. நாம் எப்போதுமே அதிகம் தேவை என்று விரும்புகிறோம், ஆனால் நாம் அளவுக்கு அதிகமாக வைத்திருந்தால், நாம் எரிச்சலடைகிறோம், அதனால் அது மகிழ்ச்சியற்றதாக மாறுகிறது. ஒரு எளிமையான உதாரணம் என்னவென்றால் உங்களுக்கு பிடித்த உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்கள், இதனால் நீங்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறீர்கள். இனிமேல் அதைச் சாப்பிடவே கூடாது என்று விரும்புகிறீர்கள் இதனால் நீங்கள் மகிழ்ச்சியின்மையாக உணர்கிறீர்கள். ஆக பிரச்னை என்பது நம்முடைய வழக்கமான மகிழ்ச்சி நிலைத்திருப்பதில்லை அல்லது திருப்திபடுத்துவதில்லை. நம்முடைய அன்றாட வாழ்வில் ஏற்ற இறக்கம் இருக்கும், மேலும் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாகவும், சில சமயங்களில் மகிழ்ச்சியின்றியும் இருப்போம், ஆனால் அங்கே இதற்குள் எந்த பாதுகாப்பும் இல்லை. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தவிர, அடுத்த நிமிடம் நாம் எப்படி உணரப்போகிறோம் என்பதை நாம் எப்போதும் அறிந்திருப்பதில்லை. சட்டென்று நாம் மகிழ்ச்சியின்மை அல்லது சலிப்பு அல்லது அழுத்தத்ததை உணரலாம். அது தொடர்ந்து மேலும் கீழும், மேலும் கீழுமாகச் செல்லும்.
  • மூன்றாவது வகை துன்பம் எல்லா இடங்களிலும் உள்ள துன்பம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மகிழ்ச்சியற்ற தன்மை மற்றும் வழக்கமான மகிழ்ச்சியின் ஏற்ற தாழ்வுகளை அனுபவிப்பதற்கான அடிப்படையாகும். இதன் அடிப்படையானது நம்முடைய கட்டுப்பாடின்றி நிகழும் இருத்தல் அல்லது மறுபிறப்பு, சமஸ்கிருதத்தில் இது சம்சாரியம் என்று அறியப்படுகிறது. ஒரு வகையான உடல் மற்றும் மனதுடன் நாம் மீண்டும் மீண்டும் மறுபிறப்பு எடுப்போம் அதுவே ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பதற்கான அடிப்படை, அல்லது வாழ்வின் வழக்கமான மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை. இதுவே சரியான துன்பப்படுதல், நம்முடைய உண்மையான பிரச்னை. யதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தால் நம்மால் பார்க்க முடிகிற உண்மையான துன்பம் இதுவே. 

துன்பப்படுதலுக்கான உண்மையான காரணங்கள்

யதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தால், நாம் அனுபவிக்கும் ஏற்ற இறக்கம் உண்மையில் சரியானதே என்பதை நீங்கள் உணரலாம், அது கூட அடிப்படையுடன் சென்று கொண்டே இருக்கிறது. அது ஒரு காரணத்துடன் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். தொடர்புடைய உண்மையின் உண்மயயான புள்ளியானது அனைத்து விஷயங்களுமே காரணங்களில் இருந்து எழுகிறது, எனவே நமக்கு உண்மையான காரணம் என்னவென்றால் கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் தொடர்ந்து நுழைகிறோம், அந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்றதா? மற்றொரு விதமாகச் சொல்வதானால், இது எப்படி நடந்தது? இந்தச் தொடர் சுழற்சியை நிலைநிறுத்துவதற்கான காரணம் என்ன?

நம்முடைய கடைசி கூட்டத்தில், நாம் மகிழ்ச்சியின்மையை அனுபவித்தால், அது நம்முடைய அழிவுகரமான நடத்தையின் விளைவு என்பதை பார்த்தோம், நாம் சாதாரண மகிழ்ச்சியை அனுபவித்தால், அது ஆக்கப்பூர்வமான நடத்தையின் விளைவு. இதனுடன் நாம் கர்மாவையும் சேர்க்கலாம், பொதுவாக நான் இதனை வலுக்கட்டாயமானவை என்று மொழிபெயர்ப்பேன்.  ஆனவே நாம் வலுக்கட்டாயமான அழிவுகரமான நடத்தை மற்றும் வலுக்கட்டாயமான ஆக்கப்பூர்வமான நடத்தையை பெறுகிறோம். இது புத்தரின் ஆக்கப்பூர்வமான நடத்தையைப் போன்றதல்ல – ஆனால் நடத்தை என்பது வலுக்கட்டாயமானத, அங்கே நாம் அகங்காரம் என்னும் பயணத்தின் அடிப்படையில் நல்லதைச் செய்ய கட்டாயப்படுகிறோம், அல்லது சிறப்பாக இருப்பதற்கு கட்டாயப்பட்டு அனைத்தையும் சரியாகச் செய்கிறோம். இது சற்றே உளநோயுடையது. 

நாம் வலுக்கட்டாயமான வழியில் செயல்பட்டால், அதற்குக் காரணம் நாம் சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகள் தாக்கத்தின் கீழ் இருக்கிறோம், இதனை நாம் வலுக்கட்டாயமான அழிவுகரமான நடத்தை என்ற தலைப்பின் கீழ் ஏற்கனவே விவாதித்திருக்கிறோம். கோபத்தின் வெளிப்பாடாக, யாரோ ஒருவரை நாம் கொல்கிறோம்; பேராசையின் வெளிப்பாடாக, நாம் எதையோ களவாடுகிறோம்; அப்பாவித்தனத்தின் வெளிப்பாடாக, நம்முடைய செயல்களுக்க பின்விளைவுகள் இல்லை, அதனால் “என்னை யாரும் பிடிக்க முடியாது” என்று நினைக்கிறோம். இது ஒரு பொருட்டல்ல. “நான் திருடினால், அது கேளிக்கையாக இருக்கும்!” 

இந்த அழிவுகரமான நடத்தைக்குப் பின்னால் விழிப்புணர்வின்மை இருக்கிறது, பெரும்பாலும் இது “புறக்கணிப்பு” என்று மொழியாக்கப்படுகிறது, ஆனால் இதற்கு அர்த்தம் நாம் முட்டாள் என்பதல்ல, நாம் குழப்பமடைந்திருக்கிறோம். 

நமக்குத் தெரியாதது என்ன? முதலில், நாம் காரணம் மற்றும் விளைவை அறியவில்லை, உண்மையில் நாம் அதனை உணர்ந்து நம்பினால், நாம் அழிவுகரமாக செயல்பட மாட்டோம். அது நமக்குத் துன்பத்தை விளைவிக்கும் என்பதை நாம் இயல்பாகவே அறிவோம், இது ஒரு தண்டனை அல்ல, மாறாக நாம் உருவாக்கும் காரணங்களின் விளைவாகும்.

உண்மையில் இரண்டு வகையான விழிப்புணர்வின்மை இருக்கின்றன. அழிவுகரமாக செயல்படுவது இறுதியில் மகிழ்ச்சியின்மையை கொண்டு வரும் என்று நாம் அறியாதிருத்தல், அல்லது நாம் பின்நோக்கி சிந்தித்தல், அதாவது “நான் அழிவுகரமாக செயல்பட்டால், அது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது.” எனக்கு என்ன தேவையோ அதை நான் விரும்பினால், அது எனக்கு மகிழ்ச்சியை உருவாக்கப் போகிறது. “நான் என்னுடைய எதிரியைக் கொன்றால் அது எனக்கு மகிழ்ச்சியை தரப்போகிறது.” அழிவுகரமான செயல்பட்ட உடனேயே மகிழ்ச்சியான உணர்ந்தாலும் – அதாவது “அப்பாடா, நான் கொசுவை கொன்றுவிட்டேன், இனி நிம்மதியாக இருக்கலாம்!”  என்று நினைப்பது- இருப்பினும், நீண்ட கால விளைவை பொருத்தவரையில், என்ன நடந்தாலும் மகிழ்ச்சியற்றதான உணர்கிறேன், இது போன்ற அழிவுகரமான நடத்தையே இதற்குக் காரணமாகும். எனவே, அழிவுகரமான நடத்தையானது காரணம் மற்றும் விளைவின் விழிப்புணர்வின்மையில் இருந்து வருகிறது, மற்றொரு விதமாகச் சொல்வதானால் தொடர்புடைய உண்மை குறித்த விழிப்புணர்வின்மை. இவை அனைத்தும் புரிந்துகொள்வதற்கு எளிது என்று நான் பாசாங்கு செய்யப் போவதில்லை, ஏனென்றால் அது அப்படி இல்லை, ஆனால் அது நம்மால் செயலாற்ற முடிந்த ஒன்று.

இந்தப் புள்ளியை நாம் தொகுத்தால், நான் ஏன் அடிக்கடி மகிழ்ச்சியின்றி உணர்கிறேன் என்பதற்கான காரணம் என்னவெனில் நான் காரணம் மற்றும் விளைவை புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய மனம் கோபம், பேராசை, பொறாமை, உள்ளிட்டவற்றால் நிறைந்திருக்கும் போது, அது அழிவுகரமான விதத்தில் வலுக்கட்டாயமாகச் செயல்பட என்னை வழிநடத்துகிறது. உண்மையில் இது சுய –அழிவு, ஏனெனில் இதன் விளைவு நான் பெரும்பாலான நேரம் மகிழ்ச்சியின்மையை உணர்கிறேன். இது நாம் ஏற்படுத்தக் கூடிய ஒரு தொடர்பு. 

நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் கூட விழிப்புணர்வின்மையில் இருந்தே வருகிறது, ஆனால் இந்த விஷயத்தில், விஷயங்களின் ஆழமான உண்மை பற்றிய விழிப்புணர்வின்மை. மிகத் துல்லியமாகச் சொன்னால், விழிப்புணர்வின்மை ஆக்கம் மற்றும் அழிவுகரமான நடத்தை என இரண்டிலுமே இருக்கிறது என்று நாம் சொல்ல வேண்டும். அழிவுகரமான நடத்தைக்கு, நாம் ஆழமான உண்மை மற்றும் தொடர்புடைய உண்மை இரண்டும் பற்றி விழிப்புணர்வின்றி இருக்கிறோம். 

ஆக்கப்பூர்வமான நடத்தைக்கு, நாம் வெறுமனே ஆழமான உண்மை பற்றி விழிப்புணர்வின்றி இருக்கிறோம். நம்முடைய தலைக்குள் ஒரு வித சப்தம் இருக்கிறது, அது இவ்வாறு சிந்திக்கும், "நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? நான் என்னுடைய சொந்த வழியைப் பெற வேண்டும்! நான் கவலையாக இருக்கிறேன்.” உண்மையில் கண்டுபிடிக்கக் கூடிய “நான்” என்ற ஒரு சிறு விஷயம் இருக்கிறது அது பேசுகிறது என்று தோன்றலாம். ஆனால் யதார்த்தத்திற்கு இது ஒத்துவராது. அப்படி ஒன்று இல்லை. எங்கள் எண்ணங்களின் வாய்மொழி கூறு மட்டுமே உள்ளது மற்றும் குறைபாடு மற்றும் கவலைகளைச் செய்யும் சிறிய "நான்" இல்லை. நாம் எப்படி இருக்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாவிட்டால், ஆழமான யதார்த்தத்தின் விழிப்புணர்வின்றி இருக்கிறோம், இந்த முன்நிறுத்தலுடன் நமக்குள் ஒரு ”நான்” இருப்பதாக கற்பனையாக அடையாளம் கொள்கிறோம். ஏனெனில் இது யதார்த்தத்திற்கு ஒத்துவராது, நாம் அது குறித்து பாதுகாப்பின்றி இருக்கிறோம், நம்மை நாமே பாதுகாப்பாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம். நிச்சயமாக, நம்மால் எப்போதும் வெற்றி பெற முடியாது. 

கற்பனை செய்யப்பட்ட சிறிய "என்னை" பாதுகாப்பாக வைக்க நாம் பயன்படுத்தும் ஒரு முறையானது நமது குழப்பமான உணர்ச்சிகள். "நான் ஏதாவது பெற முடிந்தால், நான் பாதுகாப்பாக இருப்பேன்" என்று நாங்கள் உணர்கிறோம், அதனால் நாம் பேராசை, பற்று மற்றும் காமத்தை கொண்டிருக்கிறோம். “அதனை என்னிடம் இருந்து வெளியேற்ற முடிந்தால், நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று பின்னர் நாம் உணர்கிறோம், அதனால் நாம் கோபம் மற்றும் விரட்டுதலை கொண்டிருக்கிறோம். அல்லது நாம் அப்பாவித்தனமாக,” என்னை மிரட்டுவது எதுவோ அது இல்லாமல் இருந்தால், அது என்னை பாதுகாப்பாக உணர வைக்கும்” என்று நினைக்கிறோம். 

இதன் அடிப்படையில் நாமும் கூட அழிவுகரமான நடத்தையை கொண்டிருக்கிறோம், வளர்ந்து வரும் மன அழுத்தத்தை நாம் புறக்கணிப்பதைப் போன்றது. கோபத்தின் அடிப்படையில் நாம் கத்துகிறோம், காயப்படுத்துகிறோம், சொல்லப்போனால் பிறரை கொலை கூடச் செய்கிறோம். பேராசையுடன், நாம் திருடுகிறோம் அல்லது பிறரை காயப்படுத்தும் முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுதல். அப்பாவித்தனத்தால் நாம் வேலைக்காரர்களாக மாறுகிறோம், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்கிறோம், உடற்பயிற்சியும் செய்வது கிடையாது. இவை அனைத்துமே ஆழமான உண்மை பற்றிய அப்பாவித்தனத்தில் இருந்த வருகிறது – நாம் எப்படி இருக்கிறோம்- என்பதற்கான காரணம் மற்றும் விளைவு. 

ஆக்கப்பூர்வமான நடத்தையை பொறுத்தவரையில், தொந்தரவு செய்யும் உணர்ச்சிகளின் அடிப்படை இல்லாவிட்டாலும் கூட, இந்த அப்பாவித்தனம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. சிறந்த பெற்றோராக அல்லது எதுவாக இருந்தாலும் - "இது என் தலையில் உள்ள இந்த சிறிய 'என்னை' பாதுகாப்பாக உணர வைக்கும்" - இது ஒருபோதும் வெற்றிபெறாது - நம் இருப்பை நிரூபிக்க அல்லது நிலைநிறுத்த முயற்சிக்கிறோம். நாம் எப்போதும் பாதுகாப்பாக உணரவில்லை. பிறருக்கு உதவுவதன் மூலம் நாம் சில மகிழ்ச்சியை உணர்கிறோம் என்றாலும், அது இன்னும் வழக்கமான மகிழ்ச்சி, அதனால் அது நீடிக்காது. நாம் எப்போதும் திருப்தியுடன் இருப்பதில்லை, ஏனெனில் நாம் இன்னும் போதுமானதாக இல்லை, சிறப்பாக இல்லை என்று தவிர்க்க இயலாமல் உணர்கிறோம். எதையாவது நிரூபிக்கலாம் என்று நாம் இன்னமும் உணர்கிறோம். நாம் எப்படி இருக்கிறோம் என்ற ஆழ்மட்ட அளவிலான விழிப்புணர்வின்மையின் அடிப்படை இது என்று தெளிவாகிறது. 

மூன்றாவது வகையான துன்பப்படுதலுக்கு, மகிழ்ச்சியின்மை மற்றும் வழக்கமான மகிழ்ச்சியின் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பதற்கான அடிப்படை, “சார்ந்து எழுதலின் 12 தொடர்புகள்” என்று அழைக்கப்படும் மிகக் கடினமான முறையை நாம் கொண்டிருக்கிறோம், அதனை நான் இங்கே விரிவாக விளக்கமாட்டேன், ஆனால் அது கர்மா எப்படி செயலாற்றுகிறது என்பதைக் கையாள்கிறது.  

சுருக்கமாகச் சொன்னால், கர்மா என்பது கட்டாயப் படுத்துதலைக் குறிக்கிறது, இதன் அடிப்படையில் நாம் சில குறிப்பிட்ட வழிகளில் செயல்படுகிறோம், ஆக்கப்பூர்வமாக அல்லது அழிவுகரமாக. உண்மையில் கட்டாயப்படுத்துதலின் அர்த்தம் என்ன? யாரோ ஒருவர் கட்டாயமாக தங்கள் விரல்களைத் தட்டுவது போல, எதையாவது உங்களால் உண்மையில் கட்டுப்படுத்த முடியாது என்ற அர்த்தத்தை நிர்பந்தம் கொண்டுள்ளது. எதையாவது செய்வதைப் போன்ற உணர்வில் இருந்து இது எழுவது. கத்துவது, அல்லது கட்டித்தழுவுவது அல்லது சாப்பிடுவதைப் போன்ற உணர்வு “நான் இதைச் செய்ய வேண்டும், நான் இதைச் செய்ய விரும்புகிறேன், நான் இதைச் செய்ய ஆசைப்படுகிறேன்” என்று திபெத்திய வார்த்தையில் அர்த்தப்படுகிறது. 

அதன் பின்னர் கட்டாயப்படுத்துதல் என்ற காரணி வருகிறது நாம் அதைச் செய்கிறோம். இது மீண்டும் மீண்டும் அந்தச் செயலை செய்வதற்கு குறிப்பிட்ட போக்கையும், அது அழிவுகரமான செயலாக இருந்தால் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கும் போக்கை, ஆக்கப்பூர்வமான செயலாக இருந்தால் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போக்கையும் எளிதில் கட்டமைக்கிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகள் மூலம்இந்த போக்கானது சில புள்ளியில் தூண்டிவிடப்படுகிறது. அது கனியும் போது, மகிழ்ச்சியையோ, அல்லது மகிழ்ச்சியின்மையையோ, அல்லது மீண்டும் கத்துவது அல்லது கட்டித்தழுவுவது போன்றோ உணர்கிறோம்.

இது ஒரு நிலைநிறுத்தும் திட்டம், அது போய்க்கொண்டே இருக்கும், ஏனெனில் நாம் தொடர்ந்து இவ்வகையான நடத்தை தொடர்வதற்கு விரும்புகிறோம். நடத்தையின் இந்த போக்கானது முடிவின்றி பின்னர் திரும்புகிறது, ஏனெனில்ல நாம் தொடர்ந்து அதனை வலூவூட்டுகிறோம் உறுதியாக்குகிறோம். அதனால் நாம் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் இந்த ஏற்ற இறக்கத்தை அனுபவிக்கிறோம். 

இங்கே மிகவும் பொருத்தமான கேள்வியானது, இந்த போக்குகளானது முடிவைப் பெறுவதற்கு எவ்வாறு தூண்டப்படுகின்றன, அதனால் நாம் அந்த நடத்தையை மீண்டும் செய்வதைப் போன்று உணர்கிறோம். 

அது மிகக் கடினமானதாக இருந்தாலும், 12 தொடர்புகளுடன் இது மிக நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து இந்த ஏற்ற இறக்கத்தை கொண்டிருக்கிறோம், மேலும் அது குறிப்பாக நாடகத்தனமாக இருப்பதில்லை. நாம் தூங்கும்போது கூட, நாம் நன்றாக தூங்காத இடைப்பட்ட நிலையில் இருக்கலாம், மேலும் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே வழக்கமான மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கும் போது நம்முடைய மனநிலை என்ன? இந்த நிலைக்கான சமஸ்கி ரத வார்த்தையானது த்ரிஷ்னா, அதாவது “தாகம்.” பொதுவாக இந்த வார்த்தையானது "ஏக்கம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் உண்மையான பொருள் தாகம் என்பதாகும்.

அடிப்படையில் நாம் மகிழ்ச்சியின்மையை அனுபவித்தால், அதில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தாகத்தில் நாம் செத்துக்கொண்டிருக்கிறோம், தாகமாக இருப்பதில் இருந்து நீங்கள் வெளியேற விரும்புவதைப் போன்றது. மகிழ்ச்சியை நாம் அனுபவித்தால், அதில் இருந்து நாம் பிரிந்து வர நாம் விரும்ப மாட்டோம். இது எப்படியென்றால் உண்மையில் நீங்கள் தாகமாக இருந்தால் முதல் சிப் பருகுவீர்கள் –அதுவே போதுமானது இல்லையா? இருந்தாலும் குடிப்பதை நிறுத்தமாட்டீர்கள், மாறாக மேலும் அதிகம் தேவைப்படுகிறது. பின்னர், "நான் இந்த மகிழ்ச்சியின்மையிலிருந்து விடுபட வேண்டும்," "நான் இந்த மகிழ்ச்சியிலிருந்து விடுபடக் கூடாது" என்று நினைக்கும் ஒரு திடமான என்னைப் பற்றிக் கொண்டு இருக்கிறோம், இது கர்மப் போக்குகளை செயல்படுத்துகிறது.

அனைத்து பரவலான துன்பத்திற்கும் இதுவே உண்மையான காரணம். ஆகவே மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கும் போக்குகள், சிக்கலான உணர்வுகளுடன் கலந்த நம்முடைய வலுக்கட்டாயமான நடத்தையில் இருந்து வருகிறது, அதுவும் கூட யதார்த்தத்தை அதன் ஆழமான மட்டத்தில் பார்க்காத நம்முடைய விழிப்புணர்வின்மையில் இருந்து வருகிறது – நம்முடைய உணர்வுகள் எப்படி இருக்கின்றன (அது எல்லா நேரமும் மாறும்) மேலும் நாம் உண்மையில் எப்படி இருக்கிறோம் (நம் தலையில் கண்டுபிடிக்க முடியாத சில பாதுகாப்பற்ற நிறுவனங்களை எப்படியாவது பற்றிக்கொள்வதன் மூலம் பாதுகாக்க முடியும் என்பதைப் போன்றதல்ல).

இந்த விழிப்புணர்வின்மை அடிப்படை காரணம், மேலும் இது நம்முடைய ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான நடத்தையுடன் தொடர்புடையது. இதுவே உண்மையான பிரச்னையை உருவாக்குகிறது, அதுவே மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியின்றி இருப்பதற்கான போக்குகள் மற்றும் உண்மையில் இருத்தலுக்காக நம்முடைய நடத்தையை மீண்டும் செய்தல். இந்த தாகத்தை நாம் பார்த்தால், நாம் எப்படி இருக்கிறோம் என்ற இந்த அறியாமையுடன் அது உள்ளார்ந்த தொடர்புடையது. “என்னுடைய ‘நான்’, மட்டுமே முக்கியம், அதனால் நான் இந்த மகிழ்ச்சியில் இருந்து பிரியக் கூடாது. நான் மகிழ்ச்சியின்றி இருப்பது மிகவும் முக்கியம்,” என்று நினைக்கிறோம், மாறாக, “சரி, நான் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்றி இருக்கிறேன்… அதனால் என்ன?” நாம் தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு உண்மையான காரணம் இரண்டு உண்மைகள் பற்றிய நமது அறியாமையே. 

துன்பப்படுதலை நிறுத்துவதற்கான சரியான நிறுத்தம்

மூன்றாவது உண்மையானது சரியான நிறுத்தம், அங்கே துன்பப்படுவதற்கான காரணங்கள் நிறுத்தப்படுகிறது, இதனால் துன்பப்படுதலும் கூட நிறுத்தப்படுகிறது. யதார்த்தம் பற்றிய அறியாமையை எப்போதைக்குமானதாக நீக்குவது எப்படி சாத்தியம்? யதார்த்தத்திற்கு ஒத்துவராததை நீங்கள் உணர்ந்தால், அதற்கு எந்த அடித்தளமும் இல்லை. எந்த யதார்த்தத்திற்கும் அது ஒத்துவராது, அதனால் அதனை ஆதரிப்பதற்கு ஒன்றும் இல்லை.  

உதாரணமாக, ஒரு நாடகக்கலை தயாரிப்பில் உங்களுக்கு சில இயற்கைக்காட்சிகள் இருக்கும்போது, அதைத் தாங்குவதற்கு பின்னால் குச்சிகள் இருக்கின்றன. திபெத்திய காலத்தின் பொருள் என்னவென்றால், இந்த குச்சிகளைப் போல சாத்தியமற்ற நமது கணிப்புகளைத் தாங்கி நிற்பது எதுவும் இல்லை. காட்சியை தாங்கிப் பிடிக்க ஒன்றம் இல்லாவிட்டால், என்ன நடக்கும்? அது கீழே விழுந்துவிடும். 

ஒரு முறை உங்களால் நாம் கொண்டிருக்கம் தவறான முன்னெடுப்புகளை பிடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற உண்மையை நோக்கி கவனம் செலுத்த முடிந்தால், பின்னர் பயிற்சியுடன், இறுதியில் உங்களால் இந்த உணர்தலில் எப்போதும் உங்களால் கவனத்துடன் இருக்க முடியும்.  

இந்த காட்சியானது எப்போதும் பின்னால் நிற்கும் என்று எந்த முறையும் இல்லை. “நான் என்ன செய்ய முடியும்?”, “நான் சிறப்பாக இருக்க வேண்டும்” மற்றும் “நான் என்னுடைய சொந்த வழியைப் பெற வேண்டும்” என் தலைக்குள் இருக்கும் என்னுடைய என்ற சிறிய இந்த நாடகம் வருத்தப்படுவது நின்று போகும். எங்கள் கணிப்புகளைத் தாங்கிக்கொள்ள எதுவும் இல்லை என்பதை நாம் காணும்போது, நம் மனம் இனி சாத்தியமற்ற எதையும் திட்டமிடாது. இந்த அடிப்படையுடன், நாமும் இனி எந்த போக்குகளையும் தூண்டிவிடப்போவதில்லை, ஏனெனில் அவற்றில் தூண்டுவதற்கு எதுவும் இல்லை. இனியும் அங்கே எதுவும் இருக்கப்போவதில்லை: “நான், நான், நான். நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நான் மகிழ்ச்சியின்றி இருக்கக் கூடாது!” 

தூண்டுவதற்கு எந்த போக்கும் அங்கே இல்லாவிட்டால், பின்னர் உங்களுக்கு இனியும் போக்கு இருக்கிறது என்று உங்களால் கூற முடியாது. முடிவு என்ற ஒன்று இருக்க மடிந்தால் அந்த முடிவிற்கான ஏதோ ஒரு போக்கும் மட்டும் இரக்க முடியும். மற்றொரு விதமாகச் சொல்வதானால், போக்கு என்ற மொத்த கருத்துமே முடிவு இருப்பதை சார்ந்து இருக்கிறது. முடிவு அங்கே இல்லாவிட்டால், அதனை உருவாக்கும் போன்ற என்ற ஒன்று அங்கே இருக்கவே முடியாது. 

இவ்வாறாக நம்மால் கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறப்பை தலைகீழாக்க முடியும். நம்முடைய மனங்களானது தொடக்கமில்லாத நேரங்களின் போக்குகளுடன் நிரம்பி இருந்தாலும், அதனை தூண்டுவதற்கு எதுவும் அங்கே இல்லையெனில், பின்னர் அது எப்போதுமே இருக்காது. யதார்த்தத்தின் அறியாமையுடன் நாம் இருந்தால், மேலும் அதிக போக்குகளை கொண்டு வரும் வலுக்கட்டாயமான நடத்தையை மட்டுமே நாம் வெறுமனே கட்டமைக்க மாட்டோம். எனவே, கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பு நம்முடைய ஏற்ற இறக்கமான உணர்வுகளுக்கான அடிப்படை முடிவடைந்து எப்போதைக்குமாக சென்றுவிட்டது. இதுவே உண்மையான நிறுத்தம் மேலும் நாம் விடுதலை அடைந்துவிட்டோம்.  

சரியான நிறுத்ததை கொண்டு வருவதைப் பற்றி உண்மையான மனப் பாதை

நான்காவது மேன்மையான உண்மை பொதுவாக “சரியான பாதை,” என்று மொழியாக்கப்படுகிறது, மேலும் இது மன நிலைகளை அல்லது புரிதலைக் குறிக்கிறது, அது ஒரு பாதை போன்றது, இலக்கை நோக்கி உங்களை வழிநடத்தும். இதுவே இரண்டு உண்மைகளின் சரியான மற்றும் தீர்க்கமான புரிதல்.  நாம் எவ்வளவு அதிகமாகப் பழக்கப்படுத்திக்கொள்ள முடியுமோ, அதனால் இறுதியில் அது எப்போதும் நம்மிடம் இருக்கும், அது கட்டுப்பாடில்லாமல் மீண்டும் மீண்டும் பிறப்பதை உண்மையாக நிறுத்தும் ஒரு பாதையாக மாறும்.

முடிவுரை

இரண்டு உண்மைகளில் இருந்து நான்கு உண்மைகளை நாம் பெறும் வழி இதுதான்.

சம்சாரத்தில் நாம் எப்படி நுழைகிறோம்? நாம் பார்க்கும் வசனத்தின்படி, இது நான்கு மேன்மையான உண்மைகளில் முதல் இரண்டுடன் விவாதிக்கப்பட்டது, அதுவே உண்மையான துன்பம் மற்றும் உண்மையான காரணங்கள். அடிப்படையில், இரண்டு உண்மைகள் பற்றிய நம்முடைய குழப்பத்தின் வெளிப்பாடாக நாம் சம்சாரியத்தில் நுழைகிறோம். ஒன்று நாம் யதார்த்தத்தை அறியவில்லை, அல்லது உண்மையில் யதார்த்தம் என்ன என்பதில் இருந்து சற்றே மாறுபட்டு நாம் கற்பனை செய்கிறோம். இதில் இருந்து நாம் எப்படி வெளியேறுவது? மூன்றாவது மற்றும் நான்காவது மேன்மையான உண்மைகள், அல்லது சரியான நிறுத்தம் மற்றும் சரியான மனப்பாதைகள். யதார்த்தத்தின் இரண்டு உண்மைகள் பற்றி அறியாதத்தில் இருந்து, நாம் நான்கு மேன்மையான உண்மைகளின் முதல் இரண்டைப் பெறுகிறோம், அதை அறிவதில் இருந்து, நாம் இரண்டாவது இரண்டையும் பெறுகிறோம்.

இது மிகவும் கடினமான தலைப்பாக இருந்தாலும், இவ்வழியில் செயலாற்றுவதுடன் பௌத்த போதனைகளை முயற்சித்து அதில் சில நம்பிக்கையை பெற்று பௌத்தம் விவரித்துள்ள இலக்குகளை அடைவது உண்மையில் சாத்தியம், அதையும் நாம் நம்முடைய பயிற்சியை இலக்காக வைத்து செயல்பட வேண்டும். ஒரு முறை அனைத்தையும் நாம் துல்லியமாக புரிந்து கொண்டால், அது குறிப்பிடும் மற்ற எல்லா விஷயங்களுடனும் நாம் அதனை ஒன்றாக இணைக்க முடியும். தியானத்தின் மூலம், பின்னர் நமக்குள்ளாகவே நாம் அதனை பிரபலப்படுத்தலாம்: யதார்த்தத்தை பார்க்க நாம் இதனை வழக்கமாக உருவாக்கலாம்.  

கேட்டல், சிந்தித்தல் மற்றும் தியானித்தல் அடிப்படையில், நம்முடைய பயிற்சியுடன் நாம் அடைய நினைக்கும் இலக்கு உண்மையில் சாத்தியம் என்ற நம்பிக்கையை நாம் பெற முடியும், அதுவே உண்மை, அது அடைய முடிந்த ஒன்று, மேலும் போதுமான முயற்சியை போட்டால் நமக்கு நாமே கூட அடைய முடியும். இவ்வழியில், நம்முடைய பயிற்சியானது மேலும் நிலையானதாக மாறும், ஏனெனில் நம்முடைய நோக்கம் சாத்தியப்படலாம் என்ற நிலையில்லாத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, நாம் நிலையானவராக மாறுவோம்.    

Top