அறிமுகம் 

நான்கு உன்னதமான உண்மைகள்

இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்தார். தனது சிஷ்யர்கள் மாறுபட்ட நபர்கள் மற்றும் பல்திறன் கொண்டவர்கள் எனக் கருதினார், அவர்களுக்கு புரிந்த பொருளின்படி தனது போதனைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் நினைத்தார். ஆனால், உள்ளார்ந்த ஆற்றல், எழுச்சி தனக்கு கிடைத்தது எப்படி என அனைவரும் முதலில் கேட்பார்கள் என நினைத்தார்: அதற்காக அவர் உருவாக்கியதுதான் – “நான்கு உன்னதமான உண்மைகள்”. சாமானியர்களின் வாழ்வு குறித்த இந்த நான்கு உண்மைகள்.

இந்த நான்கு உண்மைகளில் உள்ள நிஜத்தை சாதாரண மக்களால் காண இயலாது, உயர்வை பெற்றவர்களால் அது சரியானது என்பதை உணரமுடியும். கீழ்காணும் கேள்விகள் அந்த 4 உண்மைகளுக்கான பதில்கள்:

  • உண்மையில் என்னவகையிலான துன்பங்கள் மற்றும் பிரச்னைகளை ஒவ்வொருவரும் வாழ்வில் எதிர்கொண்டுவருகிறார்கள்?
  • அவற்றின் பாதிப்புகள் என்னென்ன?
  • அப்பிரச்னைகளால் நாம் துன்பப்படுவோமா? அல்லது அவற்றை கட்டுப்படுத்தி மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?
  • எதைக்கொண்டு துன்பப்படுவதை நிறுத்த முடியும் என்பதைப் புரிந்துகொண்டால், அதிலிருந்து தப்பிக்கமுடியுமா?

இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளைதான் வாழ்வில் கற்றுக்கொள்வதின் அடிப்படையாக புத்தர் குறிப்பிட்டுள்ளார், இதைத்தான் அவர் முதலில் போதித்தார். 

எப்போதெல்லாம் நான்கு மேன்மையான உண்மைகளை உற்று நோக்குகிறோமோ, அப்போது அவை நம்முடனே இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியும். அடிப்படையிலிருந்து தொடங்கவேண்டும், திட்டத்தின் இறுதிக்கட்டத்தை எட்டும் போது முழுமையாக புரிந்துகொள்ள முடியும். மிகவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நான்கு உண்மைகளின் அடிப்படைதான் – வாழ்க்கையின் நான்கு அடிப்படை – இதுதான் எதார்த்தம். 

புத்த குருவாக இருக்கும் எனது நண்பர் ஒருவரிடம், பெளத்தத்தை ஒரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் அது என்னவாக இருக்கும் என்று கேட்டேன், அவர் சொன்ன ஒரு வார்த்தை – “எதார்த்தம்”.

நமது நடக்கவாய்ப்பில்லை, சாத்தியமற்றது போன்ற எந்த வித முன்முடிவுமின்றி, யதார்த்தைத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையில் சிக்கலான சூழ்நிலைகளை யதார்த்தமான வழிகளில் சமாளிக்க முடியும்.

யதார்த்தத்தைப் பற்றிய போதனை என்பது இந்த நான்கு உண்மைகளுக்கு அடிப்படையாகும். எது எப்படி இருந்தாலும், பொருட்களின் நிலைப்புத்தன்மை, வாழ்வியலின் செயல்பாடுகள் போன்ற நிலைகளை உள்ளடக்கியது. புத்தர் அவற்றைப் பற்றியெல்லாம் கற்பித்தார்.

மூன்று விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், வலிகளிலிருந்து விடுபட்டு, வாழ்வை மேம்பட்டவழியில் கொண்டு செல்ல இந்த நான்கு மேன்மையான உண்மைகள் நமக்கு தெளிவான வழிகாட்டியாக இருக்கும். இந்த வழித்தடம் தான் பெளத்த மொழியில் சொல்லப்படும் “மூன்று விலைமதிப்பற்ற ஆபரணங்கள்” அல்லது “சரண்டைதலின் மூன்று ஆபரணங்கள்” – புத்தா, தர்மா, சங்கா. ஆழமான அர்த்தங்கள் கொண்ட இவை மூன்றும் பல்வேறு நிலைகளைக் குறிக்கின்றன:

  • தர்மா – நமது வாழ்வின் நோக்கம், அதாவது நமது பிரச்னைகள் மற்றும் அவற்றின் காரணங்களுக்கு முடிவுகட்டுவது மற்றும் அவற்றை முழுமையாக புரிந்துகொள்வதால் நிரந்தரமாக விடுதலையடைவது
  • புத்தா – இறுதி இலக்கை எட்டியவர்கள் மற்றும் அவற்றை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்கள். 
  • சங்கா – போதனைகளை பின்பற்றுவார்கள், ஆனால், இலக்கின் ஒரு பகுதியை மட்டுமே எட்டியிருப்பார்கள், முழுமையாக அல்ல.

17 நாலந்தா பல்கலை குருமார்களுக்கான ஒரு பிரார்த்தனை

பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய பெளத்த மடத்தின் ஆகச்சிறந்த 17நாலந்தா பல்கலை குருமார்களிடம் இருந்து உத்வேகம் பெறுவதற்கான வேண்டுகோளாக புனிதர் தலாய்லாமா அர்த்தம் பொதிந்த உரை ஒன்றை எழுதியிருந்தார். நாலந்தா என்று அழைக்கப்பட்ட அது சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது. மடத்தைப் போல் நடத்தப்பட்ட அக்காலத்தில் புகழ் பெற்ற இந்த பல்கலைக்கழகம் மிகச்சிறந்த இந்திய பெளத்த குருமார்களை உருவாக்கியது. மிகவும் பிரபலமான அந்த 17 குருமார்களுக்கும் தலாய்லாமா ஒரு வேண்டுகோள் உரையை எழுதியிருந்தார்: “உங்களது கால் தடங்களை பின்பற்றி நடக்க எங்களுக்கு உத்வேகம் கொடுங்கள்”. தனிப்பட்ட வேண்டுதலுக்கு பிறகும், புனிதர் இன்னும் பல பொதுவான அனைவருக்குமான வேண்டுதல்களையும் சொல்லியிருந்தார்.

அவற்றில் தீர்க்கமான ஒரு வசனத்தின் மீதான வர்ணனையை முன்வைக்க விரும்புகிறேன். யதார்த்தம் குறித்து நான் சொல்லியிருந்தது (இரண்டு உண்மைகள்), நான்கு மேம்பட்ட உண்மைகள் மற்றும் சரணடைதலின் மூன்று ஆபரணங்கள் ஆகியவற்றை உள்ளிடக்கியது. இவை மூன்றும் உணர்த்தும் வழியில் சரணடைதலை மேற்கொண்டால், நமது வாழ்வில் ஏற்படும் துன்பம், பிரச்னைகளிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இரண்டு உண்மைகளின் அர்த்தத்தை அறிந்துகொள்வதே அடிப்படை, அதுவே எல்லாவற்றையும் பின்பற்றும் வழியாக அமையும் 

“பின்பற்றுதல்” என்பது விசயங்கள் எவ்வாறு உயிர்ப்புடன் உள்ளன மற்றும் எப்படி செயல்படுகின்றன என்பதன் பொருள் ஆகும். இன்னோரு வகையில் சொல்வதாக இருந்தால் யதார்த்தையை அறிதல்.

நான்கு உண்மைகள் மூலமாக நமது கற்றலை உறுதிப்படுத்திக்கொள்கிறோம் ஆனால் முடிவில்லாமல் நிகழும் மறுபிறப்பை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும்.

பிரச்னைகளை எப்படி கையாள்கிறோம், அவற்றிலிருந்து எப்படி விடுவித்துக்கொள்வது என்பதை உணர, இந்த நான்கு உண்மைகள் மூலம் நாம் யதார்த்தை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மிகச்சரியான புரிதல் மூலம் “மூன்று சரணடைதல்” என்பது நிச்சயமான உண்மை என்பது உறுதியாகிறது

“மூன்று சரணடைதல்” என்பது நாம் எட்டக்கூடிய உண்மையான இலக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் – பிரச்னைகளிலிருந்து முழுமையாக விடுதலையாவது, அதன் மூலம் அவை மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வது மற்றும் அந்த புரிதலை கொண்டுவரவேண்டும்.

பெளத்த பாதையை பின்பற்ற வேண்டும் என்றால், உங்களது இலக்கை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும். இலக்கை அடைவது சாத்தியம் என்று எப்படி அறிவீர்கள்? இது வேறும் கட்டுக்கதையா? அதில் எதேனும் உண்மை இருக்கிறதா? நம்மில் பலர் நம்பிக்கையின் அடிப்படையில் இலக்கை எட்டமுடியும் என கருதுகிறோம்: “அது அப்படித்தான் என எனது குரு சொன்னார். அதை நான் நம்பித்தான் ஆக வேண்டும், எனவே அதை நம்புகிறேன்”

அந்த நம்பிக்கை என்பது பலருக்கும் உதவக்கூடும், ஆனால், நடைமுறையில் இது எப்போதுமே பின்பற்றக்கூடியதாக இல்லை. நீண்ட கால கற்றலுக்கு பிறகு, பெரும்பாலும் நம்முன் எழும் கேள்வி – நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? பிரச்சனைகளை உண்டாக்கும் – கோபம், விருப்பம், சுயநலம் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து வெளியேற முடியாமல், தவிப்பதே இதற்கு காரணம். எனவே முன்னேற்றம் என்பது மிகவும் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால், முன்னேற்றம் என்பது நேர்க்கோட்டில் இருக்காது என்பதையும் உணரவேண்டும்: மேலும், கீழுமாகச் செல்லக்கூடியது. சில நாட்கள் மிகவும் சிறப்பாக நடக்கும், சில நாட்கள் மிகவும் மோசமாக இருக்கும். நம்பிக்கை அடிப்படையில் பெளத்த முறைகளை பின்பற்றினால், எந்த முன்னேற்றமும் இல்லையே என நீங்கள் சோர்வடையலாம். அப்போது, இலக்கை அடைவது உண்மையிலேயே சாத்தியம்தானா? என்ற கேள்வி எழும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அவரது உரை சொல்வது, “சரியான புரிதல் மூலம் முன்னெடுக்கப்படவேண்டும்”. இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால், தர்க்கம் மற்றும் காரணத்தின் அடிப்படையில் – இலக்கு நிலைத்திருப்பது, அதை எட்டுவது சாத்தியம் என உணரவேண்டும், அதேபோல் கடைசிவரை உறுதியாக இருந்து இலக்கை எட்டியவர்களும் இருக்கிறார்கள். எதேனும் புனித நூலில் எழுதப்படாவிட்டாலும், இவை உண்மைதான். யதார்த்தத்தின் அடிப்படையில் நான்கு உண்மைகள் மற்றும் மூன்று சரணடைதல் ஆகியவை உண்மை என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

விடுதலைக்கு வழிகாட்டும் மனதின் பாதை வேரை நட்டுவைக்க எனக்கு உத்வேகமாக இருங்கள்

விதையை நடுவது வழக்கம், ஆனால், இங்கே வேரை நடவேண்டும், விதைகளை அல்ல. இந்த விருப்பம்தான் இரு உண்மைகள், மூன்று சரணடைதலின் கட்டமைப்பை உணர்த்தும். அதுவே பெளத்ததின் முழுமையான ஆன்மீகப்பாதை, இவற்றை பின்பற்றியே மற்றவை அமையும். பயிற்சிகள் அனைத்தும் உண்மையின் அடிப்படையிலேயே என்ற இந்த வேர் உங்களது மனதில் ஆழமாக பதியப்படுகிறது. என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், இலக்கை எட்டுவது சாத்தியம்தானா என்பதை நீங்கள் உணர்வீர்கள் மற்றும் இலக்கு என்ன என்பதும் தெளிவாகத் தெரியும்.

ஆன்மீகப்பாதையை பின்பற்றப் போகிறோம் என்றால், பெளத்தத்தை நாடுவது என்பது முக்கியம் என நான் கருதுகிறேன். யதார்த்தத்தின் அடிப்படையில் சாத்தியம் என்பதை உணர்வதும் மிக அவசியம். கொஞ்சமும் சாத்தியமற்ற, உணர்ச்சியின் அடைப்படையில் நடக்கும் ஏதோ கருத்தியல் சாகசம் இல்லை என்பதையும் அறிய வேண்டும். யதார்த்தத்தின் அடிப்படையில், ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்கிறோம் என உணர்ந்துவிட்டால், நல்ல வகையான உணர்வுகளை எட்டமுடியும். இரண்டில் நாம் மிகவும் மிக கவனமாக இருக்கவேண்டும்: இரக்கம், உத்வேகம், பொறுமை, விருப்பம் போன்ற உணர்வு நிலைகள் மற்றும் அவற்றை சரியாக உணர்தல்.

இரண்டு உண்மைகள்

மிகச்சரியான, வழக்கமான உண்மை

இரண்டு உண்மைகளின் அர்த்தத்தை அறிவதே அடிப்படை, அதுவே எல்லாவற்றையும் வழிநடத்திச் செல்லும்

இரண்டு உண்மைகள் குறித்த விளக்கத்தில் முதல்வரியிலேயே: “மிகச்சரியான உண்மை” அல்லது “வழக்கமான உண்மை” அல்லது “ஆழமான உண்மை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது – வேறு முறையில் சொல்ல வேண்டுமென்றால், இந்த இரண்டு உண்மைகள் என்பது எல்லாவற்றின் யதார்த்தம். ஒன்று வெறும் மேம்போக்கானது, இன்னொன்று மேலார்ந்த நிலை கொண்டது மற்றும் மற்றொன்று ஆழமான நிலை கொண்டது. இரண்டும் செல்லுபடியாகக்கூடியது ஆனால் வேறுபட்ட கோணம் கொண்டவை. இரண்டு குறித்து பல்வேறு கருத்தாக்கங்கள் இருக்கின்றன, ஆனால், புனிதர் தலாய்லாமா மக்கள் மத்தியில் அடிக்கடி குறிப்பிட்டுச் சொன்னதை பின் தொடர்வோம். 

காரணமும் விளைவும்

நாம் அனுபவிக்கும் எல்லாவற்றின் உண்மையான மேல்நிலைத்தன்மை என்ன? நடப்பில் நாம் அனுபவிக்கும் எல்லாவற்றிக்கும் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களுடன் தொடர்பு இருக்கிறது. வேறு மாதிரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்மைச் சுற்றி நடப்பவை/ உந்துதல் அனைத்தும் காரணம் மற்றும் விளைவின் தாக்கத்தை முக்கியமாக கொண்டிருக்கிறது. தாக்கத்தின் விளைவு குறித்து நமக்கு இயற்பியல் கற்றுக்கொடுக்கலாம், ஆனால் அது பந்தை எட்டி உதைத்தால் எப்படி நகரும் என்பதை உணர்த்துவதைப்போல் இருக்கும். இந்த உறவு என்பது மிகச் சாதாரண இயங்குமுறை, காரணம் மற்றும் விளைவு.

உதாரணமாக, பொருளாதாரப் பிரச்னைகள், உலக வெப்பமடைதல், மண்டலப் போர்கள் உள்ளிட்டவற்றை பார்த்தால், நிச்சயமாக அவை ஒரே ஒரு காரணத்தில் இருந்து வரவில்லை. மேலும் அவை எந்த காரணமும் இன்றியும் வருவதில்லை, தொடர்பில்லாத காரணத்தில் இருந்தும் வருவதில்லை. மாறாக, இந்த அனைத்து சூழல்களும் பல வெவ்வேறு காரணிகள் சார்ந்து பல வெவ்வேறு காரணிகளால் எழுகிறது. இப்போது என்ன சென்று கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இது குறிக்கவில்லை, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையும் குறிக்கிறத. இங்கே, உக்ரைனில், தற்கால சூழலை உங்களால் கடந்த கால சோவியத் அல்லது இரண்டாம் உலகப் போர் உள்ளிட்டவற்றில் இருந்து பிரிக்க முடியாது.  வரலாறு முழுவதும் நிகழ்ந்த எல்லாவற்றின் விளைவாக இன்று பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சூழ்நிலைகள் எழுந்துள்ளன. எனவே இப்போது நடப்பது அனைத்தும் ஒருவரின் அல்லது ஒரு விஷயத்தின் தவறு என்று நீங்கள் சொல்ல முடியாது. காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் பெரிய வலையமைப்பைச் சார்ந்து விஷயங்கள் எழுகின்றன. இது யதார்த்தம், இல்லையா?  

அல்லது உளவியல் ரீதியில் நீங்கள் பார்த்தால்: குடும்பத்தில் உங்களுக்கு பிரச்னை இருந்தால், மீண்டும் அது ஒரு காரணம் அல்லது காரணமே இன்றி வந்ததாக உங்களால் கூற முடியாது. குடும்பப் பிரச்னைக்கு குடும்பத்தின் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கிறது. அதே போன்று, அவர்கள் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதத்திற்கும், வேலைக்கும், பள்ளிக்கும் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. ஒவ்வொன்றுமே ஆதிக்கம் செய்கிறது. மேலும், குடும்பச் சூழ்நிலை சமுதாயம், அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார அமைப்புகளிலிருந்து தனித்து இல்லை. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் பிரச்சனையையும் கூட பாதிக்கிறது.

இங்கே, யதார்த்தவாதம் என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் மற்ற எல்லாவற்றையும் பாதிக்கும் என்ற உண்மையைக் குறிக்கிறது. காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பெரிய சிக்கலான வலையமைப்பின் விளைவாக நிகழும் அனைத்தும் நடக்கிறது. அதுவே யதார்த்தம்.

உடல் சார்ந்த விஷயங்களிலும், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகளிலும் இதே நிலை என்றால், நாம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் என்ன செய்வது? மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை பற்றியது என்ன? அவை காரணம் கொண்டிருக்கின்றனவா? அவை காரணம் இன்றி வருகின்றனதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிலநேரங்களில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன், சில சமயங்களில் நாம் மகிழ்ச்சியின்றி உணர்கிறேன், அடுத்த கனம் நான் என்ன உணரப் போகிறேன் என்பதை அறிவதற்கான வழியில்லை. எனவே காரணமில்லாததில் இருந்து இப்போது நடக்கிறதா? அல்லது இந்த கணத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதைச் சார்ந்து அவை நடக்கின்றனவா? நிச்சயமாக இது அர்த்தத்தை கொடுக்காது, இல்லையா?

ஒரே உணவுப் பொருளை நான் இரண்டு நாட்களுக்குச் சாப்பிடுகிறேன், ஒரு நாள் அதைச் சாப்பிடும் போது மகிழ்ச்சியாக உணர்கிறேன், அடுத்த நாளே அதைச் சாப்பிடும் போது துயரமானதாக உணர்கிறேன், எனவே உணர்வு என்பது உணவில் இருந்து வரவில்லை. எனக்கு மிகவும் அன்பான ஒருவருடன் நான் இருக்கும் போது சில சமயங்களில் மகிழ்ச்சியையும், சில சமயங்களில் மகிழ்ச்சியின்மையையும் நான் உணரக் கூடும். செல்வந்தராக இருக்கலாம், எல்லாம் நல்ல விதமாக சென்று கொண்டிருந்தாலும், நான் இன்னும் மகிழ்ச்சியின்றியே உணரக் கூடும்.

எனவே இந்த மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் எங்கிருந்து வருகிறது? அவை ஏதேனும் சில உயர்ந்தவர்களால் அனுப்பப்படுகிறதா அவர்கள் ஒரு பொத்தானை அழுத்தியதும் சில நேரங்களில் நான் மகிழ்ச்சியாகவும் சில நேரங்களில் மகிழ்ச்சியின்றியும் உணர்கிறேன்? என்னை மன்னித்து விடுங்கள், விருப்பமில்லாமல் இருப்பதை நான் அர்த்தப்படுத்தவில்லை. நான் அதை ஒரு வேடிக்கையான உச்சத்திற்கு எடுத்துச்செல்கிறேன். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் - உடல் வெப்பமான அடுப்பைத் தொடும்போது உங்கள் உடல் எரிவது அல்லது உங்கள் கை எரிவது மற்றும் காயமடைவது போன்றவை - காரணம் மற்றும் விளைவின் விதிகளைப் பின்பற்றினால், மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியின்மை காரணங்களின் புரிந்துகொள்ளக்கூடிய சட்டங்களிலிருந்து பின்பற்றப்பட வேண்டாமா?

இந்த வரிகளின் சூழலில் தொடர்புடைய உண்மையை ஒப்பிடும்போது யதார்த்தம் பற்றிய முக்கிய கேள்வி இதுவேயாகும். நம்முடைய நடத்தை மற்றம் நம்முடைய மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியில்லாத அனுபவத்தின் முடிவுகளுக்கு இடையேயான சாதாரண உறவுமுறையிலான யதார்த்தத்தை இது குறிக்கிறது. 

கர்மா

இது நம்மை கர்மாவின் அடிப்படை பௌத்த போதனைகளுக்கு கொண்டு செல்கிறது. கர்மா என்றால் என்ன? இது எளிமையான தலைப்பல்ல. ஏராளமான விளக்கங்கள் மற்றும் எண்ணற்ற தவறான புரிதல்கள் இருக்கின்றன, ஆனால் அடிப்படையில்:

கர்மா என்பது நாம் வலுக்கட்டாயமாக செயல்பட, பேச மற்றும் சிந்திக்க இயக்கும் மற்றும் குணாதிசயத்தை குறிப்பிடுகிறது. 

நம்முடைய நடத்தையை பற்றி சிந்தித்தால் அது அழிவுகரமானதாகவோ, ஆக்கப்பூர்வமானதாகவோ அல்லது நடுநிலையானதாகவோ, மாறாக வலுக்கட்டாயமானதாகவோ இருக்கலாம். 

  • நான் எரிச்சலைடைந்து யாரிடமாவது கத்த வேண்டும் என்று உணர்ந்து, அதன் பின்னர், வலுக்கட்டாயமாக, நான் கத்துகிறேன். 
  • நான் மிகவும் அதிக பாதுகாப்புடன் இருக்கிறேன் குழந்தை நலமாக இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றுகிறது, அதன் பின்னர், வலுக்கட்டாயமாக, தேவை இல்லாவிட்டாலும் அல்லது குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும் நான் மீண்டும் மீண்டும் சரி பார்க்கிறேன். 
  • நான் பசியோடு இருக்கும் போது குளிர்சாதன பெட்டிக்கு அருகில் சென்று சிற்றுண்டியை எடுக்க வேண்டும் என்று உணர்கிறேன், அதன் பின்னர், வலுக்கட்டாயமாக, நான் செல்கிறேன். 

இந்தக் கட்டாயப்படுத்துதல் எங்கிருந்து வருகிறது? மேலும் அது வழிநடத்துவது என்ன? கர்ம போதனைகளில் இது போன்ற கேள்விகளே கேட்கப்படுகிறது. பௌத்த விளக்கமானது நீங்கள் வலுக்கட்டாயமான விதத்தில் பேசினால், செயல்பட்டால் அல்லது சிந்தித்தால், அது மனத்தொடர்ச்சிக்கான திறன்கள் மற்றும் போக்குகளை கட்டமைக்கிறது அது உங்களின் ஒவ்வொரு கன அனுபவத்திற்குப் பிறகும் தொடர்கிறது.  பல்வேறு சூழ்நிலைகளால் தூண்டப்படும்போது, அவை நடத்தை முறையை மீண்டும் செய்வது போன்ற உங்கள் உணர்வுக்கு வழிவகுக்கும்.அந்த உணர்வின் அடிப்படையில், கட்டுப்பாடின்றி செயலை மீண்டும் செய்வதற்கு ஈர்க்கும் கட்டாயப்படுத்துதல் எழுகிறது. இந்த கட்டாயப்படுத்துதலே உண்மையான கர்மா சேர்ந்ததாகும்.  

நிச்சயமாக நீங்கள் இந்த முறையை உடலியல் மட்டத்தில் கூட விவரிக்கலாம் : ஒரு குறிப்பிட்ட வழியில் கட்டமைக்க செயல்படுதல் மற்றும் நரம்பியல் பாதையை வலுவூட்டுதல், எனவே நீங்கள் மிக அதிகமாக எளிதில் ஒரு நடத்தை வடிவத்தை பின்பற்ற முடியும். பௌத்தம் இந்த உடலியல் அடிப்படையை மறுக்கவில்லை;  இது அனுபவக் கண்ணோட்டத்தில் நிகழ்வை அணுகுகிறது, ஆனால் அது இன்னும் காரணம் மற்றும் விளைவின் ஒரு எடுத்துக்காட்டு என பகுப்பாய்வு செய்கிறது.

மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை பற்றியது என்ன? பௌத்தம் இதனையும் கூட கர்ம காரணம் மற்றும் தாக்கம் என்கிற விதத்தில் விவரிக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியின்மையை அனுபவித்தால், அது சிக்கலான உணர்வுகளின் தாக்கத்தின் கீழ் நீங்கள் செய்யக்கூடிய வலுக்கட்டாயமான அழிவுகரமான நடத்தையின் நீண்ட- காலப் பலனின் முடிவாகும். நீங்கள் வழக்கமான மகிழ்ச்சியை அனுபவித்தால் -  நீடித்திருக்காத எப்போதும் திருப்தி தராத வகை மகிழ்ச்சி, இருப்பினும் நீங்கள் இன்னும் நன்மையாக உணர்கிறீர்கள் – அது பொறுமை மற்றும் கருணை போன்ற நேர்மறை உணர்வுகளின் தாக்கத்தின் கீழ் நடந்த ஆக்கப்பூர்வமான நடத்தையின் நீண்ட காலப் பலனின் முடிவாகும். இன்னமும் இது வலுக்கட்டாயமானதாக இருக்கிறது, ஏனெனில் நாம் எப்படி இருக்கிறோம், கட்டாயமாக நன்மை செய்பவராக அல்லது கட்டாய பரிபூரணவாதியாக எப்படி இருக்கிறோம் என்ற குழப்பங்களின் கலவை அது. 

இந்த வழக்கமான உறவுமுறைகளை நாம் எப்படி புரிந்துகொள்வது? முதலில், நாம் ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான நடத்தைக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நடத்தை வேறு யாரோ மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு வரையறுக்கப்படவில்லை. உதாரணமாக, நீங்கள் யாருடனாவது கோபமாக இருந்தால் அவரை நீங்கள் கத்தியால் தாக்கினால், அது அழிவுகரமானது. மற்றொரு புறம், நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து, யாருடைய உடலையாவது கத்தியை வைத்து கிழித்து, உயிர் காக்கும் ஆபரேஷன் செய்தால், அது ஆக்கப்பூர்வமானது. வெளிப்படையாக யார் மீதாவது ஒரு கத்தியை செலுத்துவ து ஆக்கப்பூர்வமானதா அல்லது அழிவுகரமானதா என்பது இங்கே விவரிக்கும் காரணியல்ல. இவை அனைத்துமே உந்துதல் அடிப்படையிலானது:  செயல் செய்யப்படும் மனநிலை மற்றும் நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை செயல் மூலம் அடைதல். 

கோபம், இணைப்பு, பேராசை, அப்பாவித்தனம், பொறாமை, பிடிவாதம், சுயநலம் உள்ளிட்ட சிக்கலான உணர்வின் மூலம் செயல் உந்தப்பட்டால், நீங்கள் அதன் நன்மைக்காகவே செய்தாலும் கூட அவை அழிவுகரமானவையே.

உதாரணமாக, தீராத ஆசை மற்றும் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தும் விருப்பம் பற்றி யாருக்கேனும் நீங்கள் சிறப்பான செய்தியைத் தந்தாலும், உங்களின் செயல் அழிவுகரமானதே. மற்றொருபுறம், உங்களுடைய செயல் இந்த சிக்கலான உணர்வுகளுக்கு தொடர்பில்லாமல் சுயாதீனமாக இருந்தால், அந்தச் செயல் நல்லதாகவே இல்லாவிட்டாலும் கூட அது ஆக்கப்பூர்வமானது.   உதாரணமாக, ஒரு பெற்றோராக, தவறாக நடந்து கொண்ட குழந்தையை அதனுடைய அறைக்கே நீங்கள் அனுப்புகிறீர்கள், அது கோபத்தின் வெளிப்பாடல்ல, அன்பு மற்றும் அக்கறையின் வெளிப்பாடு குறும்புத்தனமாக இருக்கக் கூடாது என்று அவர்களுக்கு பயிற்சிக்கும் முறையாகும். பெரும்பாலான விஷயங்களில் ஆக்கப்பூர்வமான செயல் இன்னமும் கட்டாயமானதாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆக்கபூர்வமான செயல் இன்னும் கட்டாயமாக இருக்கும், ஏனெனில் உங்கள் செயலில் இருந்து உண்மையான அடையாள உணர்வைப் பெற ஒரு சுயநினைவில்லாத உந்துதலுடன் கலக்கப்படுகிறது - இந்த விஷயத்தில், ஒரு நல்ல பெற்றோராக இருக்கிறீர்கள்.

பிறகு எப்படி நாம் சிக்கலான உணர்வுகளின் அடிப்படையிலான மகிழ்ச்சியின்மை மற்றும் அழிவுகரமான நடத்தை இடையிலான சாதாரண உறவுமுறை மற்றும் சிக்கலான உணர்வுகளின் தொடர்புகளில் இருந்து விடுபடும் மகிழ்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான நடத்தை இடையிலான சாதாரண உறவுமுறையை புரிந்து கொள்ள முடியும்? இது மிக சுவாரஸ்யமான கேள்வி மட்டுமல்ல, இது மிக முக்கியமான ஒன்றும் கூட, ஏனெனில் புத்தர் கர்மா, சிக்கலான உணர்வுகள் மற்றும் நாம் எப்படி இருக்கிறோம் காரணங்களால் நாம் எப்படி உணர்கிறோம் என்பன பற்றிய குழப்பம் உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டார். இவையாவும் மகிழ்ச்சியின்மை மற்றும் திருப்திபடுத்தாத சாதாரண மகிழ்ச்சியின் காரணங்கள்.  மகிழ்ச்சியற்ற மற்றும் திருப்தியற்ற சாதாரண மகிழ்ச்சிக்கான காரணங்கள் அவையே. இரண்டு வகையான உணர்வுகளாலும் ஏற்படும் துன்பங்களில் இருந்தும் விடுபட நாம் இரண்டிற்கும் அப்பால் செல்ல வேண்டும்.

அதைப் பற்றி இப்படி சிந்தித்துப் பாருங்கள். யாரைப் பற்றியாவது அவ்வது கோபத்துடன் யாருடனவது செயல்படுகிறீர்கள், பேசுகிறீர்கள் அல்லது சிந்திக்கிறீர்கள், உதாரணமாக, நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா? உங்களுடைய சக்தி அமைதியாகிவிட்டதா? இல்லை, அது எப்போதும் அமைதியாக இல்லை; அது எதிர்த்துக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? கோபத்தையோ அல்லது ஏதாவது இதர சிக்கலான உணர்வுகளை அனுபவிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று யாரும் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதே போன்று, நீங்கள் பேராசையாக உணரும் போது, உங்களின் ஆற்றலை உற்று நோக்கினோல், நீங்கள் நிம்மதியாக இருக்க மாட்டீர்கள்; உங்களுக்கு போதுமானது கிடைக்காது என்று அஞ்சுகிறீர்கள். 

நீங்கள் யாருடனாவது மிகவும் பிணைப்புடன் இருக்கிறீர்கள் அவரை இழந்து பயங்கரமாக வருத்தப்படுகிறீர்கள், நீங்கள் நிம்மதியாகவும் இல்லை; உங்களுடைய ஆற்றல் மிகவும் தொந்தரவுக்கு ஆளாகி இரக்கிறது. நீங்கள் எந்த கோபம், பேராசை, சுயநலம் உள்ளிட்டவற்றை உணரவில்லையெனில் நீங்கள் கருணையுடன் இருக்க முயற்சி செய்கிறீர்கள், உங்களுடைய ஆற்றல் மென்மையானது, இல்லையா? அடிப்படையில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள், இது ஒரு நுட்பமான மகிழ்ச்சியாக இருந்தாலும், வியத்தகு விஷயம் எதுவும் இல்லை. நீங்கள் வலுக்கட்டாயமாக “நல்லது- செய்பவராக” இருந்தாலும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய விரும்பினாலும், கோபத்தின் வெளிப்பாடாக செயல்படுவதை விட உங்களுடைய ஆற்றல் மிகவும் நிம்மதியாக இருக்கும் மேலும் பயனுள்ள ஏதோ ஒன்றை செய்வதாக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நிச்சயமாக, நேர்மறையாக எதையாவது செய்யும் போது தவறு செய்துவிடுவோமா அல்லது போதுமான அளவு நன்மை செய்யவில்லையோ என்று நீங்கள் அச்சப்படுவீர்கள், அப்படிப்பட்ட எண்ணங்கள் மற்றும் கவலைகளால் நீங்கள் நிச்சயமாக நிம்மதியாக இருக்கமாட்டீர்கள்.

இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால், இந்த மகிழ்ச்சியற்ற உணர்வு அல்லது தொடர்புடைய மகிழ்ச்சி உங்கள் செயல் முடிந்த பிறகும் சிறிது நேரம் நீடிக்கும். நீங்கள் வேறு எதையாவது செய்யும்போது கூட நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது நீங்கள் முன்பு செய்ததை பாதிக்கலாம் என்பதை இது குறிக்கிறது. கர்மாவுக்கும் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற நிலைக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசும்போது, சில செயல்களுக்குப் பிறகு நாம் உணருவதை முதன்மையாகக் குறிப்பிடவில்லை. நீண்ட காலம் நீடித்திருக்கும் அதிக விளைவுகளைப் பற்றி அவர் பேசுகிறார். இருப்பினும், நமது கட்டாய உணர்ச்சி நடத்தைக்கும் நமது உடலில் நம் ஆற்றல் பாயும் விதத்திற்கும் உள்ள உறவைப் பற்றி சிந்திக்கும்போது அவருடைய கருத்தை நாம் பாராட்டத் தொடங்கலாம்.

நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் பற்றிய ஒப்பீட்டு உண்மை என்னவென்றால், நம்முடைய பொதுவான மனநிலை மற்றும் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது மட்டுமல்லாமல், நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவர்களாகவோ இருந்தாலும், காரணங்கள் மற்றும் நிபந்தனைகளைச் சார்ந்து எல்லாம் எழுகிறது. இது யதார்த்தத்தின் ஒரு அம்சம் – இந்த வரியில் உள்ள வசனம் அதை அடித்தளம் என்று அழைக்கிறது, எல்லா விஷயங்களும் நிலைத்திருக்கும் வழி - எனவே, எல்லாம் இருக்கும் வழிகள், செயல்பாடுகள் மற்றும் செயலாற்றுதல்கள்.

ஆழமான உண்மை

எல்லாவற்றையும் பற்றிய இரண்டாவது உண்மை ஆழ் மட்ட அளவில் கவனம் செலுத்துகிறது. நம் கற்பனையின் கணிப்புகளால் விஷயங்கள் இருப்பதாகவும், சாத்தியமற்ற வழிகளில் செயல்படுவதாகத் தோன்றினாலும், அவை இருப்பதாகத் தோன்றும் சாத்தியமற்ற வழிகள் யதார்த்தத்துடன் ஒத்துப்போவதில்லை.

நம்முடைய கணிப்புகளுக்கு ஒத்ததாகக் காணக்கூடிய ஒன்று இல்லாதது "வெற்றிடம்" என்று அழைக்கப்படுகிறது, இது பெரும்பாலும் "வெறுமை" என மொழிபெயர்க்கப்படுகிறது.

சாத்தியமற்ற வழிகளில் நுட்பமான பல நிலைகள் இருந்தாலும், நம் மனது பழக்கமான குழப்பத்திலிருந்து வெளிப்படுகிறது, இந்த ஆழ்ந்த உண்மையுடன் நாம் மிகவும் பொதுவான அளவில் செயலாற்றத் தொடங்கலாம்: சாத்தியமற்ற வழிகளில் விஷயங்கள் இல்லை. அவை எப்படி இருக்கின்றன? யதார்த்தம் என்னவென்றால், நம் குழப்பமான மனங்கள் முன்னிறுத்தும் சாத்தியமற்ற முட்டாள்தனத்துடன் தொடர்புடைய எதுவும் இல்லை. இது முற்றிலும் இல்லை, அப்படி எதுவும் இல்லை.

ஒரு பழமையான உதாரணத்தை கருத்தில் கொள்ளுங்கள்: ஒரு குழந்தை கட்டிலுக்கு கீழே அசுரன் இருப்பதாக நினைக்கிறது. உண்மையில் கட்டிலுக்கு கீழே பூனை இருக்கிறது, ஆனால் பூனைக்கு பதிலாக அந்த இடத்தில் குழந்தை அசுரனை முன் நிறுத்துகிறது. 

ஏனெனில் உண்மையில் அங்கே அசுரன் இருப்பதாக குழந்தை நம்புகிறது, அது முட்டாள்தனமாக இருந்தாலும், குழந்தை மிகவும் பயந்துவிட்டது. எனவே இந்த முட்டாள்தனத்தை முன்நிறுத்துவதால் குழந்தையிடம் தாக்கம் ஏற்படுகிறது, ஆனால் அது பூனையை உண்மையில் அசுரனாக மாற்றவில்லை, ஏனெனில் அசுரன் என்ற ஒன்று இல்லவே இல்லை.  வெற்றிடம் என்பது உண்மையான அசுரனின் மொத்த இல்லாமை அது குழந்தையின் கற்பனைக்கு ஒத்ததாகும். அசுரன் என்ற ஒன்று இருந்ததில்லை, அப்படி ஒருவன் இருக்கவும் முடியாது. ஆனால் படுக்கைக்கு அடியில் இன்னும் ஒரு பூனை இருக்கிறது என்ற முன்நிறுத்தலை எடுத்துச்செல்கிறது; அங்கு எதுவும் இல்லை என்று சொல்லவில்லை. 

பழக்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நமக்குத் தோன்றும் விதத்தில் இருப்பதாக நாம் கற்பனை செய்கிறோம். நம் கண் முன் என்ன இருக்கிறதோ அதைப் பற்றி மட்டுமே நாம் அறிவோம் அல்லது அந்த நேரத்தில் உண்மையில் நாம் என்ன உணர்கிறோமோ அதையே அறிவோம். உதாரணமாக, நான் இப்போது மகிழ்ச்சியற்றவனாக உணர்கிறேன், அது எந்த காரணமும் இல்லாமல் தானாகவே எழுந்தது போல் தோன்றுகிறது. நான் மகிழ்ச்சியற்றவன். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சலிப்பாக உணர்கிறேன்; நான் வெறுப்பாக உணர்கிறேன்; நான் மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறேன், அது நான் என்ன செய்கிறேன் அல்லது என்னுடன் இருப்பவர்களுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. திடீரென்று நான் வெறுப்படைகிறேன்; நான் மகிழ்ச்சியற்றதாக உணர்கிறேன். இது வியத்தகு முறையில் இருக்க வேண்டியதில்லை. இது குறைந்த அளவிலான அதிருப்தி உணர்வாக இருக்கலாம். ஆக இது எப்படி தோன்றியது? எந்தக் காரணமும் இல்லாவிட்டாலும் அது தோன்றும். ஆனால் அது சாத்தியமற்றது. அது யதார்த்தத்திற்கு ஒத்து போகாது. அதுவே ஆழ்ந்த உண்மை.

வழக்கமான, ஒப்பீட்டு உண்மை என்னவென்றால், என்னுடைய மகிழ்ச்சியின்மை அல்லது மகிழ்ச்சி உட்பட அனைத்தும் காரணம் மற்றும் விளைவின் செயல்முறையிலிருந்து எழுகிறதா? யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும், எனக்கு அது அப்படியாகவே தோன்றவில்லை. நான் என்ன உணர்கிறேனோ அது எந்த காரணமும் இல்லாமல் வருவதாக எனக்குத் தோன்றுகிறது. ஆழமான உண்மையானது அது எப்படி நமக்கு தோன்றுகிறது என்பதற்கும் யதார்த்தத்திற்கும் ஒத்துபோகாதது – சாத்தியமில்லாத ஏதோஒன்றின் முன்நிறுத்தல் அது. அதைப் பற்றி நீங்கள் நினைத்தால் உண்மையில் அது மிகவும் ஆழமானது. 

நான் இன்னொரு உதாரணத்தை கொடுக்கிறேன். ஒருவேளை எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார் சில நேரங்களில் அவர் என்னிடம் கத்துகிறார். நாங்கள் அற்புதமான உறவுமுறையை கொண்டிருக்கிறோம், ஆனால் திடீரென்று என்னுடைய நண்பர் ஏதோ ஒரு விஷயத்திற்காக கோபப்பட்டு என்னிடம் கத்துகிறார். அது எனக்கு எப்படித் தோன்றும்? “இனிமேல் நீ என்னை நேசிக்க மாட்டாய்” என்று அது தோன்றிக் கூடும். நான் மிகவும் வருத்தமடைவேன் ஏனெனில் என்னுடைய மனதிற்கு தோன்றுவதெல்லாம் என்னுடைய நண்பர் என்னிடம் கத்தினார் அதை வைத்து மட்டுமே நான் அவரை அடையாளப்படுத்துகிறேன் வேறெதுவும் தோன்றுவதில்லை. ஆனால் அந்த முன்னிறுத்தல் யதார்த்தத்திற்கு ஒத்து போகாது. அந்த கத்தல் ஒன்றிலிருந்தும் எழவில்லை, எங்கள் நீண்டகால நட்பின் பின்னணியில் ஒரு சம்பவமாக இருந்து முற்றிலும் தனித்து இருக்கிறது. ஒருவேளை இது உங்களுக்கும் நடந்திருக்கலாம்.

என்ன நடக்கிறது என்றால், நம் நண்பருடனான முழு உறவையும் நாம் இழந்துவிடுகிறோம் - மற்ற எல்லா நேரங்களிலும் எஞ்சிய மற்ற எல்லா தொடர்புகளிலும் நாம் அந்த நபருடன் இருந்தோம். ஆனால் அது மட்டுமே விஷயமல்ல; வாழ்வின் போக்கையும் கவனிக்க தவறிவிடுகிறோம். நண்பரின் வாழ்க்கையில் நாங்கள் மட்டும் இல்லை, நம்முடைய நட்பு மட்டுமே அவருடைய வாழ்க்கையில் நடக்கவில்லை.  நம்முடைய நண்பருக்கு என்னைத் தாண்டிய ஒரு முழுமையான வாழ்க்கை இருக்கிறது இதுவும் கூட அவர் எப்படி உணர்கிறார் மற்றும் செயல்படுகிறார் என்பதில் தாக்கம் தருகிறது. வேலையில் அவருக்கு கடினமான நாளாக இருந்திருக்கலாம் அல்லது அவருடைய பெற்றோருடன் சில பிரச்னை இருந்திருக்கலாம் அது என்னுடைய நண்பனின் மனநிலையை மோசமாக்கி இருக்கலாம், அதனால் அவர் என்னிடம் கத்தி இருக்கலாம். 

ஆழமான உண்மை என்னவெனில் நான் முன்நிறுத்தியது சாத்தியமில்லாதது: எங்கள் நட்பின் மீதமிருக்கும் சூழல் மற்றும் எஞ்சிய அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையும் மீறி, அவர் என்னைத் திட்டியது முற்றிலும் தானாகவே இருந்தது என்பது உண்மை அல்ல. சுதந்திரமாக இருக்கும் நிகழ்வுகளின் தோற்றத்துடன் தொடர்புடைய ஒரு உண்மையான யதார்த்தம் இருக்க முடியாது, அப்படி எதுவுமே இல்லை. அத்தகைய இருப்பு முறை இல்லாதது சமஸ்கிருதத்தில் "வெற்றிடம்", "சூன்யாதா" என்று அழைக்கப்படுகிறது, பூஜ்ஜியத்திற்கான வார்த்தையும் இதுவேயாகும். 

இரண்டு உண்மைகள் என்ற விஷயத்தில், விஷயங்கன் ஒன்றோடொன்று தனித்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும்போது, காரணம் மற்றும் விளைவு செயலாற்றுகிறது.  ஏனென்றால், காரணமும் விளைவும் ஒருவருக்கொருவர் சார்பாகவும் சார்ந்து மட்டுமே உள்ளது. சாத்தியமுள்ள தாக்கம் அதில் இருந்து கிடைக்காவிட்டால் காரணமின்றி எதுவும் இருக்க முடியாது. ஏதோ ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தவில்லையெனில், அது எப்படி ஏதோ ஒன்றின் காரணமாக இருக்கும்?  ஒப்பீட்டு உண்மை, அதாவது, அவற்றின் காரணத் தொடர்புகள், எல்லாவற்றையும் பற்றிய ஆழமான உண்மையின் காரணமாக மட்டுமே செயல்பட முடியும்: மற்ற எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்படுவதற்கான சாத்தியமற்ற வழியில் எதுவும் இல்லை.

இரண்டு உண்மைகளும் ஒன்றுக்கொன்று இந்த வழியில் ஆதரிக்கின்றன என்பது, வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அடித்தளம், எல்லாம் நிலைத்திருக்கும் வழி. “அடித்தளம்” என்பது அடுத்த வரியில் என்ன வருகிறதோ அதற்கான அடித்தளம் என்பதையும் குறிக்கிறது. யதார்த்தத்தை பார்ப்பதன் அடிப்படையில், இரண்டு உண்மைகள் பெயரில் புத்தர் பின்னர் நான்கு உண்மைகளை புரிந்து கொண்டார். 

கேள்விகள்

உண்மையான யதார்த்தத்தை அனுபவித்தல்

உங்களிடம் தவறான கருத்துகள் இல்லாத போது நேரடியாக உண்மையான யதார்த்தத்தை அனுபவிப்பது சாத்தியமா? அல்லது இது ஏதேனும் சாத்தியமற்றதா?

இல்லை, இல்லை, அது சாத்தியமே. நம் மனச் செயல்பாட்டில் எல்லாம் சாத்தியமற்ற வழிகளில் இருப்பதாகத் தோன்றினாலும், அவை யதார்த்தத்துடன் ஒத்துப்போகாததால், அந்த சிதைவை ஏற்படுத்தியவற்றிலிருந்து விடுபட முடியும். யதார்த்தம் என்று ஒன்று இருப்பதாலும், யதார்த்தத்தை சிதைப்பது மன செயல்பாட்டின் அடிப்படை இயல்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதாலும். எந்தவொரு கணிப்பும் சிதைவும் இல்லாமல் மன செயல்பாடு இயங்க முடியும்.

அதன் அடிப்படையில், நம்முடைய மனச்செயல்பாடு யதார்த்தத்தை சிதைத்தால் அது நமக்கு பிரச்னைகள், துன்பம் மற்றும் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாகும் என்பது நமக்கு புரியும். இருப்பினும் சிதைவை முன்னிறுத்தும் நம்முடைய மனதை நிறுத்துவது சாத்தியமே, நாம் நீடித்த நாட்களுக்கு நமக்கு நாமே பிரச்னைகளை ஏற்படுத்தவோ அனுபவிக்கவோ மாட்டோம்.   நம் மனதால் இந்த இலக்கை அடைய முடியும் என்பதை நாம் புரிந்துகொண்டவுடன், துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் நம் வாழ்வில் பாதுகாப்பான திசையை அடைந்து கொண்டிருக்கிறோம். இந்த பாதுகாப்பான திசையே நாம் அழைக்கும் “அடைக்கலம்.” ஆனால் இலக்கை அடைய முடியும் என்று உறுதியாக இருக்கும்போது மட்டுமே நாம் இலக்கை அடைய முடியும். நான் குறிப்பிட்டுள்ள அனைத்தும் யதார்த்தம் மற்றும் அதை உணரும் திறனை அடிப்படையாகக் கொண்டது என்பதை உணர்வதிலிருந்து நமக்கு நம்பிக்கை வருகிறது.

ஆனால் மனத் தடைகளை அகற்றுவதற்கு யதார்த்தத்துடன் நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள மிக நீண்ட பயிற்சி தேவைப்படுகிறது. இங்கு தான் தியானம் உள்ளே வருகிறது. தியானம் என்பது, இந்தச் சூழலில், யதார்த்தத்தை நன்மை பயக்கும் பழக்கமாகப் பார்ப்பதன் மூலம் யதார்த்தத்துடன் நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் பயிற்சியாகும். அந்த பழக்கத்தை நீங்கள் கட்டமைத்தால், பிறகு, நீங்கள் யாரை சந்தித்தாலும், அவரை உங்கள் கண்களுக்கு முன்னால் தோன்றும் விதத்தில் மட்டும் பார்க்காமல் இருக்க உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வீர்கள். மாறாக, அவர்கள் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தனர், அவர்களுக்கு குழந்தைப்பருவம் மற்றும் பதின்பருவ வாழ்க்கை இருந்தது, மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பல விஷயங்கள் அவர்களை பாதித்தன என்பதை நீங்கள் முழுமையாக அறிவீர்கள். மேலும் அவர்களுக்கு வயதாகி இருக்கலாம் இன்னமும் கூட கூடுதலான விஷயங்களால் பாதிக்கப்படலாம். இந்த வழியில், ஒருவரின் வாழ்க்கையின் முழு சூழலின் யதார்த்தத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள், மேலும் அதில் நடந்த அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதைக் காண்கிறீர்கள். அவரின் யதார்த்தத்தைப் பற்றிய இந்த பார்வை உங்கள் கண்களுக்கு முன்பாக ஒரு நிழற்படத்தைப் போல குறுகிய பார்வையில் பார்ப்பதை விட மிகவும் நன்மை பயக்கும் மற்றும் யதார்த்தமான முறையில் தொடர்பு கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

ஆனால் அதைச் செய்வதற்கு உங்களை நீங்களே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சந்தேகமின்றி அவர்களின் வாழ்க்கை மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் உங்களுக்குத் தெரியாது, ஆனால் அது முக்கியமல்ல. இந்த நபருக்கு கடந்த கால வரலாற்றில் பல தாக்கங்கள் இருப்பதையும், எதிர்காலத்திலும் இருக்கும் என்பதையும் அறிந்திருப்பது, அந்த நபரின் யதார்த்தத்தம் உங்களுக்கு திறந்து காட்டுகிறது. ஆகவே, நீங்கள் ஒரு குழந்தையை பார்த்தால், உதாரணமாக, நீங்கள் அந்தக் குழந்தையை குழந்தையாக மட்டும் பார்க்காமல்; அது ஒரு திறனுள்ள வயது வந்தவர், நான் இப்போது செய்யும் அனைத்தும் இந்த குழந்தை எவ்வாறு வயது வந்தவராக இருக்கப் போகிறது என்பதைப் பாதிக்கப் போகிறது. நீங்கள் முழு படத்தையும் பாருங்கள். நீங்கள் யதார்த்தத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள்.

Top