இரண்டாவது மேன்மையான உண்மை: துன்பப்படுவதற்கான உண்மையான காரணங்கள்

முதலாவது மேன்மையான உண்மையானது நாம் அனைவரும் அனுபவிக்கும் உண்மையான துன்பங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த துன்பங்கள் அனைத்திற்கும் நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க உந்தப்பட்டால், அதன் உண்மையான காரணங்களை நாம் சரியாக அடையாளம் காண்பது அவசியம். நாம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனை என்னவெனில் நாம் மகிழ்ச்சியற்ற மற்றும் திருப்தியற்றவற்றை அனுபவிப்பது மட்டுமல்ல, குறுகிய கால மகிழ்ச்சியை எதிர்பாராமல் எல்லா நேரத்திலும் மாறி மாறி அனுபவிப்பதால், அவற்றின் எழுச்சியை நிரந்தரமாக்குகிறோம். அதிபயங்கரமாக, நாம் வரையறுக்கப்பட்ட வகைகளான உடல்கள் மற்றும் மனங்களை கொண்டிருப்பதையும் நிரந்தரமாக்குகிறோம் அதனால், கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் ஏற்ற இறக்கங்களை நாம் அனுபவிக்கிறோம். "தலை இல்லையென்றால் தலைவலி இல்லை!" என்ற சொல்வதைப் போல, கேட்பதற்கு இது சிரிப்பிற்குரியதாக இருந்தாலும், அதில் சில உண்மையும் இருக்கிறது. மேலும், நம்பமுடியாத அளவில், புத்தர் தலைவலிக்கு மட்டுமல்ல தொடர்ந்து தலைவலியை பெறும் வகையான தலைகளுடன் இருப்பதற்கான உண்மையான காரணத்தையும் கண்டுபிடித்தார். நம்முடைய நடத்தையின் காரணம் மற்றும் தாக்கம் மற்றும் யதார்த்தம் பற்றிய விழிப்புணர்வின்மை, அல்லது அறியாமையே உண்மையான காரணம் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

நமது குறித்த இருப்பு பற்றிய அறியாமை

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தவறான தகவல் பரவலாக இருக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம், மேலும் பலர் "உண்மைக்கு மாறானவற்றை" நம்புகிறார்கள்.  அனைத்து துன்பங்களுக்கும் உண்மையான காரணம் - விழிப்புணர்வின்மை, சில சமயங்களில் "அறியாமை" என்று புத்தர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டதில் ஒரு அதிர்வு உள்ளது. இந்த விழிப்புணர்வின்மை என்பது இணையதளம் எப்படி செயலாற்றுகிறது என்று அறிவதை குறிப்பிடவில்லை. மாறாக நம்முடைய நடத்தையின் நீண்ட கால தாக்கங்கள், பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் குழப்பம், மேலும் இவற்றிற்கு கீழ் இருக்கும் யதார்த்தம் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் குழப்பம், குறிப்பாக நாம் எப்படி இருக்கிறோம் என்பது. விஷயங்கள எது மோசமாக்குகிறது என்றால் நாம் பார்க்கும் தவறானவற்றை சரியானவை என்று நம்புவதாகும்.

இன்னும் சற்றே நெருங்கிச் சென்று பார்ப்போம். "நான், நான், நான்" என்று நம் தலைக்குள் கேட்கும் ஒரு அசரிரியை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம். அதன் அடிப்படையில்,உடல் மற்றும் மனதில் இருந்து பிரிந்து வந்த "நான்" என்று அழைக்கப்படும் கண்டறியக்கூடிய ஒரு  உருபொருள் இருக்கிறது அதுவே அனைத்தையும் பேச வைக்கிறது என்று நாம் தானாகவே நம்புகிறோம். இந்த குழப்பமான நம்பிக்கை வலுப்பெறுகிறது, ஏனென்றால் "எனக்கு" என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நம் தலைக்குள் புகார் செய்யும் போதெல்லாம் அல்லது "நான்" அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று நினைக்கும் போதெல்லாம், "நான்" என்று அழைக்கப்படும் சில உறுதியான உருபொருள் இருப்பது போல் தெரிகிறது, அதைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம். நிச்சயமாக நாம் இருக்கிறோம்; புத்தர் அதனை மறுக்கவில்லை. பிரச்னை என்னவென்றால், நாம் இருப்பதைப் போல உணரும் விதத்தில் நாம் இல்லை. அந்த உண்மை நமக்குத் தெரியாது; இந்த மாற்று யதார்த்தத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், அதனால் நாம் முற்றிலும் குழப்பமடைந்துள்ளோம்.

தொந்தரவு செய்யும் உணர்ச்சிகள் மற்றும் வலுக்கட்டாய நடத்தையுடன், பாதுகாப்பின்மை மற்றும் பயனற்ற முயற்சியால் நாம் பாதுகாப்பாக உணர முடியுமா?

நம்மைப் பற்றிய இந்த தவறான எண்ணத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி என்னவென்றால், அது யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது என்று நாம் நம்பும்போது, பாதுகாப்பின்மையின் துன்பத்தை அனுபவிக்கிறோம். பாதுகாப்பாக உணர முயற்சிக்கும் பயனற்ற முயற்சியில், நமக்குள்ளே நம்மை நிரூபிக்கவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ அல்லது நமக்குள்ளாகவே உறுதியாக இருப்பதையோ உணர்கிறோம். அவ்வாறு உணர்தல் தொந்தரவு தரும் உணர்ச்சிகள் எழக் காரணமாக இருக்கின்றன:

  • நம்மை பாதுகாப்பாக உணர வைக்கும் என்று எதையோ பெறுவதற்கு ஏங்கி ஆசைப்படுதல்
  • நம்மிடமிருந்து கோபம் மற்றும் குரோதம் போன்ற எதையாவது புறந்தள்ளுவதால், நாமும் பாதுகாப்பாக உணர்வோம்
  • அப்பாவித்தனத்துடன் நம்மைச் சுற்றிச் சுவர்களை எழுப்பிக் கொண்டு, அதற்குள் பாதுகாப்பாக இருப்பதாக நாம் உணர்கிறோம்.

இது போன்ற தொந்தரவு தரும் உணர்ச்சிகள் நாம் மன அமைதி மற்றும் சுய - கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாகின்றன, நம்முடைய முந்தைய போக்குகள் மற்றும் பழக்கங்களின் அடிப்படையில் எதையாவது சொல்வதற்கோ அல்லது செய்வதற்கோ நோக்கத்தை தூண்டுகின்றன. அதன் பின்னர், கட்டாயப்படுத்தும் கர்மத் தூண்டுதல் உண்மையில் அதனைச் செய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ நம்மை இழுக்கின்றன.

விழிப்புணர்வின்மை, தொந்தரவு தரும் உணர்ச்சிகள் மற்றும் வலுக்கட்டாயமான நடத்தை நம்முடைய உணர்ச்சிகளில் ஏற்ற இறக்கங்கள் நிரந்தரமாக இருப்பதற்கான உண்மையான காரணங்கள்

கர்மாவின் காரணம் மற்றும் விளைவானது நம்முடைய நடத்தையின் குறுகிய கால முடிவுகளை நோக்கமாகக் கொண்டிருக்காது மாறாக நீண்ட கால விளைவுகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக, நம்மைப் பற்றிய பாதுகாப்பற்ற உணர்வு,  சமூக ஊடக பதிவுகளில் "லைக்குகள்" வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருப்பது, அவ்வாறு பெறுவது நமது இருப்பை உறுதிப்படுத்தி, சுய மதிப்பு உணர்வைத் தரும் என்று கற்பனை செய்கிறோம். நீங்கள் சமூக ஊடகத்தில் இருந்தால் ஒரு செல்ஃபியை பதிவிட்டு, உங்களுடைய சொந்த அனுபவத்தை நீங்களே பகுப்பாய்வு செய்யுங்கள். எத்தனை "லைக்குகளை" பெற்றிருக்கிறீர்கள் என்று வலுக்கட்டாய தூண்டுதலின் எழுச்சியால் அன்றைய நாளில் எப்படி அடிக்கடி உங்களது போனை சரிபார்க்கிறீர்கள்? யாராவது உங்களது பதிவிற்கு "லைக்" போட்டிருந்தால் வரும் மகிழ்ச்சியானது எவ்வளவு காலம் நீடித்திருக்கிறது? அதன் பின்னர் எவ்வளவு விரைவாக மீண்டும் உங்களது போனில் அதையே திரும்பவும் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எப்போதாவது போதுமான "லைக்குகள்" கிடைத்திருக்கிறதா? நாள் முழுவதும் உங்களுடைய போனை வலுக்கட்டாயத்தின் பேரில் சரிபார்த்துக்கொண்டே இருப்பது மகிழ்ச்சியான மனநிலையா? இது ஒரு தெளிவான உதாரணமாகும் லைக்குகள் வேண்டும் என்பதன் நீண்ட கால தாக்கமானது மகிழ்ச்சியற்ற துன்பமாகும். இது ஒரு உறுதியான, சுயாதீனமாக இருக்கும் "என்னை" போதுமான அளவு "லைக்குகளுடன்" பாதுகாப்பாக இருக்க வைக்க முடியும் என்ற தவறான அடிப்படையைக் கொண்டது.

அன்பு போன்ற நல்ல உந்ததலை நாம் கொண்டிருந்தாலும் கூட, அதனுடன் நாம் நமது வளர்ந்த பிள்ளைகளுக்கு கட்டாயமாக உதவுகிறோம், அது பயனுள்ளதாக இருக்கும் அல்லது தேவைப்படுவதாக உணர்வது நம்மைப் பற்றி நாமே நல்ல விதமாக உணர வைக்கும், என்ற தவறான அப்பாவித்தனமான எண்ணத்தின் அடிப்படையில் இருந்தால், அதில் இருந்து நாம் அனுபவிக்கும் எந்த மகிழ்ச்சியும் ஒருபோதும் திருப்தியை கொடுக்காது. சுருக்கமாகச் சொன்னால், நமது உணர்ச்சி ஏற்றத் தாழ்வுகள் நீடித்து நிலைத்திருப்பதற்கான உண்மையான காரணங்கள், நாமும் மற்றவர்களும் எப்படி இருக்கிறோம் என்பது பற்றிய நமது அறியாமை மற்றும் தவறான எண்ணங்கள், மேலும் குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் கட்டாய கர்ம தூண்டுதல்கள் மற்றும் அவை தூண்டும் கட்டாய நடத்தையாகும்.

நமது கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறப்பை நிரந்தரமாக்குவதற்கான உண்மையான காரணங்கள் விழிப்புணர்வின்மை, தொந்தரவு தரும் உணர்ச்சிகள் மற்றும் வலுக்கட்டாயமான நடத்தை 

அறியாமை, குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் கர்ம தூண்டுதல்கள் ஆகியவையும் நம் இருப்பை நிர்ப்பந்தமாக நிலைநிறுத்துவதற்கு உண்மையான காரணங்களாகும் என்று புத்தர் போதித்தார், நிகழ் மற்றும் எதிர்கால வாழ்வில் வரையறுக்கப்பட்ட உடல் மற்றும் மனதுடன் இந்த அடிப்படையில் மகிழ்ச்சியற்ற துன்பம் மற்றும் திருப்தியற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறோம். இந்த உணர்வுகளைப் பற்றிய நமது குழப்பமான அணுகுமுறையே புத்தர் சுட்டிக் காட்டியதே, நமது கட்டுப்பாடற்ற தொடர்ச்சியான இருப்புக்கான உண்மையான காரணம், நமது "சம்சாரியம்".

சிறிது நேரத்திற்கான மகிழ்ச்சி எழும் போது, அது முடிவடையக் கூடாது என்று நாம் ஏங்குகிறோம், இருப்பினும் அது பயனற்றது ஏனெனில் அந்த மகிழ்ச்சி நீடித்திருக்காது. நாம் மகிழ்ச்சியின்மையை உணர்ந்தால், அது நம்மிடமிருந்து சென்று விட வேண்டும் என்று ஏங்குகிறோம். மிக உறுதியான வலிநிவாரணிகளை எடுத்துக்கொண்டாலும் கூட நாம் எதையுமே உணர மாட்டோம், அல்லது நாம் ஒரு ஆழமான ஒருநிலைப்படுத்துதலில் மூழ்கிவிடுகிறோம், அதில் நாம் அதேபோன்று எதையும் உணரவில்லை, தவிர்க்க முடியாததாக இருந்தாலும், குறையாமல் இருக்க எதையும் உணராத அந்த நிலைக்கு நாம் தாகம் கொள்கிறோம்.

இதனுடன், "நான்" என்பதில் நம்மை பொருத்துகிறோம், அது ஒரு உறுதியான நிறுவனமாக இருந்தால், "பாவம் நான்" என்ற சிந்தனைகளுடன்: " இந்த மகிழ்ச்சியில் இருந்து நான் வில விரும்பவில்லை; இந்த மகிழ்ச்சியின்மையில் இருந்து வில நான் விரும்புகிறேன்; ஒன்றுமில்லை என்ற இந்த உணர்வு தேய்ந்து போகக்கூடாது என்று நான் விரும்புகிறேன்." "நான்" என்ற நமது குழப்பமான எண்ணம் மற்றும் நமது உணர்வுகளை நோக்கி இந்த குழப்பமான உணர்ச்சிகள் நாம் உயிரிழக்கும் தருணத்தில் ஏற்படும் போது, அவை ஒரு கர்ம தூண்டுதலை செயல்படுத்துகின்றன, இது ஒரு காந்தம் போல, நம் மனதையும் இந்த குழப்பமான உணர்ச்சிகள் உடலை மறுபிறப்பு நிலைக்கு ஈர்க்கின்றன, அவற்றுடன் மறுபிறவி எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நாம் தொடர்ந்து வாழ முடியும். இது உயிர்வாழும் உள்ளுணர்வின் பௌத்த பதிப்பு போன்றது.

துன்பப்படுதலுக்கான உண்மையான காரணங்களுக்கான நான்கு அம்சங்கள்

நம்முடைய குழப்பமான அணுகுமுறைகளே, நம்முடைய உண்மையான துன்பங்களுக்கான உண்மையான காரணங்களாகும். உண்மை என்னவென்றால் கட்டுப்பாடின்றி நிகழும் நம்முடைய துன்பங்களை நாம் நிரந்தரமாக்குகிறோம். இதற்கு நான்கு அம்சங்கள் இருக்கின்றன, குறிப்பாக நாம் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுப்பதைக் குறிக்கும் வகையில், இந்த அம்சங்களிலிருந்து, அவை பொதுவாக துன்பங்களுக்கு உண்மையான காரணங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்:

  • முதலாவதாக, நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றிய அறியாமை, அதனுடன் தொந்தரவு தரும் உணர்ச்சிகள் மற்றும் கட்டாயப்படுத்தும் கர்மத் தூண்டுதல்களே, நம்முடைய அனைத்து துன்பங்களுக்குமான உண்மையான காரணங்கள். நமது துன்பம் எந்த காரணமும் இன்றியோ அல்லது ஜோதிட அமைப்பு அல்லது துரதிர்ஷ்டம் போன்ற பொருத்தமற்ற காரணங்களினாலோ வருவதில்லை.
  • இரண்டாவதாக, நமது துன்பங்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கு அவையே தொடக்கம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், துன்பம் ஒரு காரணத்தினாலே மட்டும் வருவதில்லை, மாறாக பல காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் கலவையிலிருந்து வருகிறது.
  • மூன்றாவதாக, துன்பங்கள் நமது வலியால் உண்டாகும் உள் உற்பத்தி. நமது துன்பங்கள் வெளிப்புற ஆதாரங்களில் இருந்து வருவதில்லை, ஏதோ ஒரு சக்தி வாய்ந்த தெய்வத்திடமிருந்தும் கூட வருவதில்லை.
  • நான்காவதாக, நம் துன்பங்கள் எழுவதற்கு அவையே நிபந்தனைகள். துன்பங்கள் உலகச் செயல்களினால் தானாகவே எழுவதில்லை, மாறாக அவற்றைப் பற்றிய நமது குழப்பமான மனப்பான்மையிலிருந்தே ஏற்படுகிறது.

சுருக்கம்

நம் தொடர்ச்சியான பிரச்சனைகள் மற்றும் துன்பங்களுக்கு உண்மையான காரணங்களை ஒரு முறை நாம் அறிந்தால் - அதனை தொடர்ந்து கடந்து செல்ல நம்மில் யாருமே விரும்பாத- நம்மைப் பற்றிய தவறான யதார்த்தத்தின் நமது சொந்த கணிப்புகள், அவை வெறும் கற்பனை என்ற நமது அறியாமை மற்றும் குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் கட்டாயப்படுத்துதல், அது போன்ற தொந்தரவு செய்பவர்களிடமிருந்து என்றென்றும் நம்மை விடுவித்துக் கொள்ள செயலாற்றுவதில் அர்த்தமில்லையா?

Top