நான்காவது மேன்மையான உண்மை: சரியான பாதை

குழப்பமற்ற வெறுமையே, உண்மையில் துன்பத்திற்கான நிஜமான காரணங்களை நிறுத்துவதில் முக்கியமானது. வெற்றிடம் (வெறுமை) என்பது நாம், மற்றவர்கள் மற்றும் அனைத்து நிகழ்வுகளும் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நாம் பொய்யாகக் கற்பனை செய்வதுடன் தொடர்பற்றது. கருத்தியல் அல்லாத வெற்றிட அறிவாற்றல் ஒரு உண்மையான மனப்பாதை ஆகும், அது உண்மையான நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் ஒரு பாதையாக செயல்படுகிறது.

முதல் மூன்று மேன்மையான உண்மைகள்

நாம் அனைவரும் எதிர்கொள்ளும் உண்மையான துன்பம் என்னவென்றால், மகிழ்ச்சியின்மை மற்றும் திருப்தியற்ற மகிழ்ச்சியின் ஏற்ற தாழ்வுகளை நாம் தொடர்ந்து அனுபவிப்பதை நிரந்தரமாக்குகிறோம், அதே போல் வரையறுக்கப்பட்ட உடல்களையும் மனதையும் மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறோம் என்றும் புத்தர் போதித்தார். அதன் உண்மையான காரணங்கள் என்னவெனில் நமது மற்றும் இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வின்மை (அறியாமை). அவை சாத்தியமற்ற வழிகளில் இருப்பதாக நாம் முன்நிறுத்துகிறோம் - உதாரணமாக, சுய-கட்டுமான உறுதியான நிறுவனங்களாக - மேலும் அவை நமக்குத் தோன்றும் இந்த ஏமாற்றும் வழியில் அவை உண்மையில் எப்படி இருக்கின்றன என்பதற்கு ஒத்து இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்தத் தவறான புரிதல் சிக்கலான உணர்வுகளைத் தூண்டுகிறது, இது நமது "சுயமாக" நாம் கற்பனை செய்வதை உறுதிப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ கட்டாயப்படுத்தும் கர்ம தூண்டுதல்களைத் தூண்டுகிறது, ஆனால் அவை வெறும் மாயைகள். இந்தத் தவறான கருத்து, நாம் இறக்கும் நேரத்தில், கட்டுப்பாடற்ற உடல் மற்றும் வரையறுக்கப்பட்ட மனதுடன் கட்டுப்பாடற்ற மறுபிறப்பைத் (சம்சாரியத்தை) தூண்டுகிறது.
 

எப்படி இருந்தாலும், இந்த உண்மையான காரணங்களையும், அதன் மூலம் இந்த உண்மையான துன்பங்களையும் அகற்றுவது சாத்தியம் என்பதை புத்தர் உணர்ந்து கற்பித்தார். நான்காவது மேன்மையான உண்மை, அத்தகைய உண்மையான நிறுத்தத்தைக் கொண்டுவரும் உண்மையான மாற்று மருந்தைப் போன்றதாகும்.

சரியான புரிதலே அறியாமையை என்றென்றைக்கும் அகற்றுவதற்கான சரியான பாதை

சாதாரணமாக, நாம் சில மகிழ்ச்சியின்மை உணர்வு, திருப்தியற்ற மகிழ்ச்சி அல்லது ஒன்றுமில்லாததாக உணர்ந்தால்,  அதிலிருந்து அசாதாரணமான மற்றும் உறுதியான ஒன்றை உருவாக்குகிறோம், அது என்றென்றும் நீடிக்கும் என்று கற்பனை செய்கிறோம். ஆனால், நிச்சயமாக, நாம் அனுபவிக்கும் எந்த உணர்வைப் பற்றியும் சிறப்பானதாக ஒன்றுமில்லை - அவை அனைத்தும் நிலையில்லாதவை மற்றும் நிரந்தரமில்லாதவை. அவை நீடிக்கும் வரை அவை தொடர்ந்து தீவிரத்தில் மாறுகின்றன, இறுதியில் அவை அனைத்தும் இயற்கையாகவே முடிவுக்கு வரும். அந்த உண்மை பற்றி அறியாமல் எதிர்பதத்தில் சிந்தித்து, நம்முடைய தலைக்குள் சத்தமாக கத்தும், "நான் இந்த மகிழ்ச்சியில் இருந்து எப்போதும் பிரிந்து வர விரும்பவில்லை; இது மிக அற்புதமானது," அல்லது "நான் இந்த மகிழ்ச்சியின்மையில் இருந்து பிரிய வேண்டும்; இது மிகவும் பயங்கரமானது, என்னால் இதனுடன் இருக்க முடியாது," அல்லது "ஒன்றுமில்லாத இந்த உணர்வு எப்போது குறையக் கூடாது; இது மிகப்பெரிய நிம்மதியானது" என்ற இந்த ஓசையால் ஏமாற்றப்படுகிறோம். "என்னை" பற்றிய இந்த நிலைப்படுத்தல் மற்றும் "என்னை" என்ற வீக்கம் சில உறுதியான பொருளாக மாறி, குழப்பமான உணர்ச்சிகளையும் கட்டாய நடத்தையையும் தூண்டி, நமது உண்மையான துன்பத்தை நிரந்தரமாக்குகிறது.

உங்களை நீங்களே கேளுங்கள், "நான்" என்ற ஒரு வகையான நிரந்தர நிறுவனத்துடன் ஏன் நீங்கள் இருப்பதாகக் கருதுகிறீர்கள், அது சுய-நிறைவானது, மனம், உடல் மற்றும் உங்களுடைய தலைக்குள் இருக்கும் குரலின் எழுத்தாளரில் இருந்து சுயாதீனமானதா? அப்படி உணர்வதால் நான் அப்படி நினைக்கிறேன் என்று நீங்கள் சொன்னால், "ஏனெனில் நான் அப்படி நினைப்பதால்" என்று சொல்வது எதையோ நம்புவதைப் போன்றதாக இல்லையா? ஏதோ ஒரு கற்பனை முன்நிறுத்தலை நாம் நம்பினால், குறிப்பாக நம்மைப் பற்றியே, "ஏனெனில் நான் அப்படி சிந்திப்பதால்" என்பதன் அடிப்படையில், நாம் அதைப் பற்றி ஏன் பாதுகாப்பின்மையாக உணர வேண்டும்? நமது தவறான நம்பிக்கையை ஆதரிக்க எதுவும் இல்லை என்பதால் தான்; இது உண்மை அல்லது காரணத்தால் ஆதரிக்கப்படவில்லை.

உண்மை என்னவென்றால், மகிழ்ச்சி, மகிழ்ச்சியற்ற உணர்வு அல்லது எதையும் பார்க்கும்போது, கேட்கும்போது, நுகரும் போது, சுவைக்கும்போது, உடல் ரீதியாக உணரும்போது அல்லது சிந்திக்கும்போது நாம் அனுபவிக்கக்கூடிய உணர்வில் சிறப்பாக எதுவும் இல்லை. அவற்றில் இருந்து பற்றிக் கொள்ளக் கூடிய எதுவும் இல்லை. அவற்றைப் பின்தொடர்வது மேகத்தைப் பற்றிக்கொள்வது போன்றது - முற்றிலும் பயனற்ற ஒன்று. மேலும் "நான்" எந்த நேரத்திலும் நான் என்ன உணர்கிறேன் என்பதில் சிறப்பாக எதுவும் இல்லை. நம்முடைய தலைக்குள் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு விதமான தன்நிறைவு உறுதியான நிறுவனம் எப்போதும் தன்னுடைய சொந்த வழியைப் பெற விரும்புவதைப் போல நாம் இருக்க முடியாது. நாம் இருக்கிறோம், ஆனால் சாத்தியமற்ற வழிகளில் அல்ல, நாம் அதைச் செய்கிறோம் மற்றும் நம்புகிறோம் என்று தவறாகக் கருதுகிறோம், ஏனெனில் "நான் அப்படி நினைக்கிறேன்" என்று அது நம்மை உணரச் செய்கிறது.

நம்மைப் பற்றிய இந்தத் தவறான மற்றும் குழப்பமான நம்பிக்கையில் இருந்து வெளிவர அவற்றை முழுமையாக அழிக்கும் ஒரு எதிர்ப்பாளர் நமக்குத் தேவை. நம் மனதை அமைதிப்படுத்துவதும், அப்படி நினைப்பதை நிறுத்துவதும் நம் குழப்பத்தை தற்காலிகமாக அடக்கிவிடலாம், ஆனால் அவை மீண்டும் எழுவதைத் தடுக்காது. நமது உண்மையான பிரச்சனைகளின் உண்மையான காரணத்தை உண்மையான நிறுத்தத்தை அடைவதற்கான உண்மையான மனப்பாதை, அப்படியானால், நமது அறியாமைக்கு ஒன்றுக்கொன்று எதிரான மனநிலையாக இருக்க வேண்டும். அறியாமையின் எதிர்பதம் விழிப்புணர்வு. எனவே, நமக்கு என்ன விழிப்புணர்வு தேவை? சரி, நாம் ஒருவித தன்-நிறைவு நிறுவனமாக இருக்கிறோம் என்ற தவறான எண்ணத்தை அழிப்பது என்னவென்றால், அப்படி எதுவும் இல்லை என்ற கருத்தியல் அல்லாத அறிவாற்றல் - அதன் வெற்றிடத்தின் கருத்தியல் அல்லாத அறிவாற்றல் மற்றும்  சில கருத்துகளின் மூலம் வெற்றிடத்தின் மீது கருத்தியல் கவனம் செலுத்துவது அல்ல துல்லியமான ஒன்று கூட.

பகுத்தறிவு மற்றும் கருத்தியல் அல்லாத அனுபவத்தின் அடிப்படையில், நாம் பொய்யாக நம்பியது உண்மையுடன் ஒத்துப்போவதில்லை என்ற விழிப்புணர்வு, "நான் அப்படி நினைப்பதால்" மற்றும் இது தவறானது என்ற அறியாமையின் அடிப்படையில் அது ஒத்துப்போகிறது என்ற தவறான நம்பிக்கையை அழிக்கிறது. அறியாமையின் போக்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆழமாக உட்பொதிக்கப்பட்டு இருப்பதால், அவற்றின் அழித்தல் படிப்படியாக, பகுதிகளாக மற்றும் நிலைகளாக நிகழ்கிறது.

உண்மையான பாதையின் நான்கு அம்சங்கள்

வெற்றிடத்தை கருத்தியல் அல்லாத அறிவாற்றலுடன் வரும் பாகுபடுத்தும் விழிப்புணர்வு (அறிவொளி) அடிப்படையில் உண்மையான பாதையை புரிந்து கொள்ள முடியும் என்று புத்தர் விளக்கினார். இந்த மனக் காரணி எது உண்மை எது பொய் என்பதை வேறுபடுத்துகிறது.

  • முதலாவதாக, இந்த பாகுபடுத்தும் விழிப்புணர்வானது ஒரு மனப்பாதையை முறைப்படுத்தும் வழியாகும், அது படிப்படியாக பல்வேறு நிலைகளின் அறியாமை மற்றும் முழுமையான நிறுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தொடக்கத்தில், நம் பெற்றோர் மற்றும் சமூகத்தால் பெரிய அளவில் நம்மில் வேரூன்றியிருக்கும் வேறுபட்ட நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளைக் கற்று ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஏற்படும் அறியாமை மற்றும் குழப்பத்திலிருந்து இது நம்மை என்றென்றும் நீக்குகிறது. வணிக விளம்பரம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து பெறப்பட்டவையும் இதில் அடங்கும்.

    சமூக உடகத்தில், பார்ப்பதற்கு நன்றாக  மற்றும் அற்புதமான தருணத்தை கொண்டிருந்தவர்களின் செல்ஃபிகளை நீங்கள் பார்த்தால், அது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் மற்றும் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற உங்களுடைய கருத்தியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? உங்களைப் பற்றி நீங்களே நல்ல விதமாக அல்லது மோசமாக உணர வைக்கிறதா? அந்த இடுகைகள் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை என்ற பாகுபடுத்தும் விழிப்புணர்வை அவை பிரதிபலிக்கின்றன என்ற தவறான நம்பிக்கையிலிருந்து நம்மை நாமே நிரந்தரமாக அகற்றுவதற்கான பாதையாகும். இதன் விளைவாக, நாம் அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, அப்படி இருக்க ஏங்கும்போது இதுபோன்ற தவறான நம்பிக்கைகள் உருவாக்கும் மகிழ்ச்சியற்ற மற்றும் மனச்சோர்விலிருந்து அது நம்மை என்றென்றும் விடுவிக்கிறது.

    இந்த முதலாவது நிலைக்குப் பின்னால், நாம் "ஆர்ய" அல்லது உயர்நிலை உணர்வாளராக இருந்தால், கூடுதல் பரிச்சயத்துடன், இந்த பாகுபடுத்தும் விழிப்புணர்வானது வரப்போகின்ற தானாக எழுகின்ற அறியாமை நிலைகளில் இருந்து நம்மை எப்போதைக்குமாக விடுவிக்கிறது, உதாரணமாக, நம்முடைய தலைக்குள் எப்போதும் கேட்கும் குரலுக்கு பின்னால் "நான்" என்ற வலுவான நிறுவனத்தை காணமுடியும் என்ற கற்பனையில் இருந்து வெளியேறலாம். வெற்றிடத்தைப் பற்றிய பாகுபடுத்தும் விழிப்புணர்வு, நமது உண்மையான துன்பங்களுக்கான இந்த உண்மையான காரணங்களிலிருந்து நம்மை என்றென்றும் விடுவிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, அவற்றில் இருந்து விடுதலை பெற வழியே இல்லை என்ற தவறான எண்ணத்தை அது நீக்குகிறது.
  • இரண்டாவதாக, "நான்" என்று அழைக்கப்படும் ஒரு தன்னிறைவான, உறுதியான பொருள் எதுவும் இல்லை என்ற பாகுபடுத்தும் விழிப்புணர்வே, அப்படி ஒன்று இருக்கிறது என்ற அறியாமை மற்றும் தவறான நம்பிக்கையை என்றென்றும் அகற்றுவதற்கான சரியான வழிமுறையாகும். ஏனெனில் இது ஒன்றுக்கொன்று எதிரானது. ஒரே நேரத்தில் அப்படி ஒன்று இருப்பதாகவும், அப்படி ஒன்று இல்லை என்றும் உங்களால் நம்ப முடியவில்லை, இல்லையா? இந்த பாகுபடுத்தும் விழிப்புணர்வு உண்மையான நிறுத்தத்தை அடைவதற்கான ஒரு பொருத்தமற்ற வழிமுறை என்ற தவறான கருத்தை இந்த புள்ளி நீக்குகிறது.
  • மூன்றாவதாக, வெற்றிடத்தின் பாகுபடுத்தும் விழிப்புணர்வானது விடுதலை பெற்றவராக, ஞானமடைந்த புத்தராக மாறுவதற்கான சாதனைகளை உண்மையாக்குவதற்கான வழிமுறையாகும். ஆழ்ந்த ஒருநிலைப்படுத்துதல் நிலைகளில் ஒன்றை அடைவதே இந்த சாதனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை என்ற தவறான நம்பிக்கையை இது எதிர்க்கிறது.
  • இறுதியாக, இந்த பாகுபடுத்தும் விழிப்புணர்வானது  குழப்பமான உணர்ச்சிகள், அவற்றின் போக்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கூட நமது விடுதலை மற்றும் ஞானமடைதலைத் தடுக்கும் திட்டவட்டமான நீக்குதலைப் பெறுவதற்கான வழிமுறையாகும். இவை நம் மன இயல்பின் பகுதிகள் மற்றும் முழுமையாக அகற்ற முடியாது என்ற தவறான கருத்தை இது எதிர்க்கிறது.

சுருக்கம்

வெற்றிடத்தின் கருத்தியல் அல்லாத அறிவாற்றலின் உண்மையான மனப்பாதையானது, பாகுபடுத்தும் விழிப்புணர்வுடன் கண்டறியப்பட்டது, நம்முடைய உண்மையான துன்பங்களின் உண்மையான காரணங்களை அழிக்கும் எதிரியாகும். ஒருமுறை அடைந்துவிட்டால், இந்த உண்மையான மனப்பாதையானது, அடுத்தடுத்த ஜென்மங்களில் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் மீண்டும் எழும் உண்மையான துன்பங்களை நிலைநிறுத்துவதற்கான உண்மையான காரணங்களான அறியாமை மற்றும் தவறான நம்பிக்கைகளிலிருந்து நம்மை என்றென்றும் நீக்குகிறது. அப்படிப்பட்ட மனதை அடைவதே நாம் முயல்கின்ற மிகவும் பயனுள்ள விஷயம் அல்லவா?

Top