நான்கு மேன்மையான உண்மைகளில் இருந்து, மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்கள்

மதிப்பாய்வுரை

மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கு, இரண்டு உண்மைகளில் இருந்து நான்கு மேன்மையான உண்மைகளை புரிந்து கொள்வதற்கு எப்படி செல்லப்போகிறோம் என்பதை புனிதர் தலாய்லாமாவுடன் நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். விஷயங்களின் இருப்பு குறித்து இரண்டு உண்மைகள் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம்: 

 • தொடர்புடைய அல்லது வழக்கமான உண்மை; காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நடப்புகளை நாம் உணர்கிறோம். உண்மையில் இந்த உலகில் விஷயங்கள் எப்படி இயங்குகிறது என்பதைப் பார்த்தால், நாம் இவைகளின் வழியாகத்தான் பார்ப்போம். ஆனால் துரதிஷ்டவசமாக, நாம் வழக்கமாக மற்ற விஷயங்களை இந்த நோக்கில் காண்பதில்லை.
 • ஆழ்மட்ட அளவிலான உண்மை என்கிற ரீதியில் பார்த்தால், நம்முடைய குழப்பம் அதனை நோக்கி முன் நிறுத்தும் விஷயங்கள் சாத்தியமில்லாத வழிகளில் இருக்காது. உதாரணமாக, நாம் பார்க்கும் போது தோன்றுவதைப் போலவே எந்தக் காரணங்கள், நிபந்தனைகள், பகுதிகள் அல்லது எதுவுமே இன்றி விஷயங்கள் தன்னுடைய சுய சக்தியில் எழுவதாக நாம் நினைக்கிறோம்; ஆனால் இது தவறானது. 

ஆக இதுவே அடித்தளம். 

யதார்த்தத்தை சரியாக பார்க்கும் இடத்தில் நம்முடைய குழப்பம் சூழ்ந்திருப்பதைப் பற்றி நான்கு மேன்மையான உண்மைகள் பேசுகின்றன. யதார்த்தம் பற்றி நாம் குழப்பமாக இருந்தால், அதுவே துன்பப்படுவதற்கான காரணமாகச் செயல்படுகிறது: துன்பமே முதலாவது மற்றும் காரணமாக இருப்பது இரண்டாவது மேன்மையான உண்மை. மற்றொரு வகையில் பார்த்தால், நாம் யதார்த்தத்தை சரியாகப் பார்த்தால் அதிலேயே எல்லா நேரமும் கவனத்துடன் இருக்க முடியும், மூன்றாவது மேன்மையான உண்மையையும் நாம் கொண்டிருக்கிறோம், அது துன்பப்படுவதற்கான சரியான நிறுத்தம். புரிதலே சரியான பாதை, நான்காவது மேன்மையான உண்மை சரியான நிறுத்தத்தை கொண்டு வருவதைப் பற்றியது.  

யதார்த்தம் பற்றி நாம் தெளிவின்றி இருந்தால், அறியாமை மற்றும் குழப்பம் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம், மேலும் நாம் கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பை நிலைநிறுத்துகிறோம். இந்த அறியாமையில் இருந்து நமக்கு நாமே வெளியேறினால், பின்னர் நம்மால் தலைகீழாக்க முடியும் – அல்லது சம்சாரிய மறுபிறப்பில் இருந்து வெளியேற முடியும்.  

மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்கள்

நாம் இப்போது இந்த வசனத்தின் மூன்றாவது வரியை பார்ப்போம்:

செல்லத்தக்க அறிவாற்றலை கொண்டு வருவதன் மூலம், மூன்று சரணாகதிகள் என்ற நம்பிக்கை உண்மை என்பது உறுதியாகிறது.  

நாம் ஏற்கனவே பார்த்தது போல, மூன்று சரணாகதிகள் புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தை குறிக்கிறது. இவை சமஸ்கிருத வார்த்தைகள். ஷக்யமுனி புத்தர் மற்றும் இதர அனைத்து புத்தர்கள் இந்த ஞான நிலையை அடைந்து, அதனை நாமும் அவ்வாறே எப்படி செய்ய வேண்டும் என்று போதித்திருக்கிறார்கள். தர்மம் என்பது அவர்களின் போதனைகள். சங்கம் என்பது உறர்நிலை உணர்வாளர்கள் சமூகம். இது ஒரு அளவிலான புரிதல், ஆனால் அதற்கு ஆழமான அர்த்தமும் இருக்கிறது. 

ஆழ்ந்த அர்த்தம் என்ற வகையில், தர்மம் என்பது உண்மையான அடைதலை குறிக்கிறது – மூன்றாவது மற்றும் நான்காவது மேன்மையான உண்மைகளை அடைவது என்று பெயரிடப்படுகிறது. உங்களுக்கு நினைவிருக்கும், துன்பப்படுதல் மற்றும் அதற்கான காரணங்களுக்கான சரியான நிறுத்தம் மூன்றாவதாகும், மேலும் இது நிலைகளில் தோன்றும். நாம் அதனை முழுவதுமாக அடைந்தால், கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் (சம்சாரியம்) இருந்து விடுதலையை அடையலாம்.  காரணம் மற்றும் விளைவு பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் காரணங்களிலிருந்து நாம் விடுபடும்போது, அனைவரையும் விடுதலைக்கு எப்படி வழிநடத்துவது என்பதை நாம் நன்கு அறிவோம், நாம் ஞானமடைந்த புத்தர்களாக மாறுகிறோம். நான்காவது உண்மையானது இந்த சரியான நிறுத்தங்களை கொண்டு வருவதைப் பற்றிய புரிதல் மற்றும் அந்தப் புரிதலில் இருந்து வரும் முடிவுகளாகும்.

இவை இரண்டும் ஒரு சரணாகதியை உருவாக்குகின்றன. இந்த விஷயத்தில், துன்பம் மற்றும் பிறருக்கு உதவுவதில் நமக்கு இருக்கும் போதாமைகளில் இருந்து சரணாகதி நம்மை பாதுகாக்கிறது. சரியான நிறுத்தங்கள் மற்றும் சரியான மனப்பாதைகளை நாம் அடைந்துவிட்டால், பின்னர் துன்பத்தை அனுபவிப்பதில் இருந்தும் மற்றவர்களுக்கு எப்படி சிறப்பாக உதவுவது என்று அறியும் இயலாமையில் இருந்து நம்மை நாமே பாதுகாக்கலாம். யாரோ இதனை அடைந்திருக்கிறார்கள் அதனால் எளிதில் நம்மை அவர்களிடம் ஒப்படைக்கிறோம், இதனால் ஏதோ ஒரு மாயாஜாலத்தால் நாம் காப்பாற்றப்படுவோம் என்று நம்புகிறோம்.  

யூதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் – போன்ற ஆப்ரஹாமிய சமயங்கள் – வரலாறு சார்ந்த மதங்களாக அறியப்படுகின்றன. ஒவ்வொரு மதங்களும் கடவுளிடம் இருந்து சில வகையான வெளிப்பாட்டைக் கொண்ட ஒரு வரலாற்று தோற்றத்தை, வரலாற்று நிகழ்வை கொண்டிருக்கின்றன. அவை இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன மேலும் அதுவே இறுதியானது. மோசஸ் அல்லது ஜுசஸ் அல்லது முகமது என்ன செய்தார்களோ அதனை நம்மால் செய்ய முடியாது, வெறுமனே நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கலாம், அதன் மூலம் நாம் நம்முடைய துன்பங்களில் இருந்து காப்பாற்றப்படலாம். நம்பிக்கை என்பது இங்கே தனிப்பட்ட உருவத்தை, அல்லது அவர்கள் என்ன கற்பித்தார்கள் மற்றும் வெளிப்பாட்டின் நம்பிக்கையை குறிக்கலாம், மோசசிற்கு கடவுள் பத்து கட்டளைகளைக் கொடுத்தார், அல்லது ஜுசஸ் புதிய அத்தியாயத்தை வெளிக்காட்டினார் அல்லது குரான் முகமதின் வெளிப்பாடு போன்ற வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லாம். இந்த குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளே இந்தச் சமயங்களின் மையத்தில் இருக்கிறது. 

இந்திய சமயங்களான, இந்து சமயம், பௌத்தம் மற்றும் ஜெயினத்தை, “தர்ம சமயங்களாக” பேச முடியும், அது முற்றிலும் மாறுபட்டது. புத்தர், அல்லது கிருஷ்ணர், அல்லது மஹாவீரர் (ஜெயின மதத்தை நிறுவியர்) இவர்களின் வரலாற்று உண்மை மைய நிகழ்வாக இல்லை. மாறாக, நமக்கு நாமே, ஒவ்வொருவரும் கூட, இவர்களைப் போன்ற அதே நிலையை அடைய முடியும். பௌத்த சூழலில், நாம் அனைவரும் விடுதலை மற்றும் ஞானமடைதலை அடைய முடியும், இதர தர்மசமயங்களும் கூட விடுதலைக்கான தங்களின் சுய விளக்கத்தை முன்வைக்கின்றன. நம்முடைய மேற்கத்திய, ஆப்ரமிய சமயங்களுக்கும், இந்திய சமயங்களுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசத்தில் இதுவும் ஒன்று. 

மூன்று சரணாகதிகளை நாம் பார்த்தால், நாம் அவ்வாறே வளர்ந்திருந்தாலும் கூட நம்முடைய ஆப்ரஹாமிய சமய முன்னிறுத்தல் மூலம் அதனை பார்க்காமல் இருப்பது முக்கியம். புத்தர் மட்டுமே ஞானத்தை அடைந்தவர், அவரை நாம் நம்பினால் காப்பற்றப்படுவோம் என்று இல்லை. ஆகவே வழக்கமாக நான் “சரணாகதி” என்ற வார்த்தையை தவிர்க்கிறேன் ஏனெனில் அது செயலற்ற சுவையைத் தரலாம், நாம் செய்ய வேண்டியதெல்லாம் “புத்தரே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று சொன்னால் நாம் காப்பற்றப்படுவோம். அது பௌத்தம் அல்ல. “பாதுகாப்பான திசை” என்ற வார்த்தையை பயன்படுத்த நான் பரிந்துரைக்கிறேன், புத்தர், தர்மம் மற்றும் சங்கம் பாதுகாப்பான திசையில் நாம் செல்வதைக் குறிக்கிறது, அங்கே புத்தர் அடைந்த நிலையை நாமும் கூட அடைய முடியும். நம்மை நாமே பாதுகாப்பதற்கான வழியை புத்தர் போதித்திருந்தாலும், நாம் அதனை பயிற்சியில் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய சொந்த அடைதலுக்கான நம்முடைய சுய முயற்சி, துன்பப்படுவதில் இருந்து அது நம்மை பாதுகாக்கிறது.  

தர்ம ஆபரணம்

ஆழ்ந்த தர்ம ஆபரணம் குறித்து நாம் பேசினால், அல்லது எப்படியாயினும் நீங்கள் அதனை அழைக்க விரும்பினால், அது ஏதோ அரிதானது மற்றும் விலைமதிப்பற்றது, திபெத்தியர்கள் இங்கே ஆபரணம் என்று மொழிபெயர்க்கும் இரண்டு எழுத்துகளின் சரியான அர்த்தம் இது. சரியான நிறுத்தல்களின் உண்மையான நிலை மற்றும் சரியான மனப்பாதைகள் பற்றியும், அவற்றைக் கொண்டுவரும் மற்றும் விளைவைப் பற்றியும் நாங்கள் பேசுகிறோம். இந்த விஷயங்கள் நமக்குள்ளாகவே நாம் அடைய விரும்புகிறோம், அதனால் நாம் அதனை கட்டாயம் அடைய முடியும் என்று நம்பிக்கை பெறுவோம். இரண்டு உண்மைகள் மற்றும் நான்கு உண்மைகள் பற்றிய நமது விவாதம் விடுதலை மற்றும் ஞானமடைதல் போன்ற விஷயங்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது, அவற்றை நாமே அடைய முடியும்.

புத்தர் ஆபரணம்

புத்தர்கள் என்பவர்கள் விடுதலை மற்றும் ஞானத்தை முழுமையாக அடைந்தவர்கள். இது ஷக்யமுனி புத்தரை மட்டும் உள்ளடக்கவில்லை, மாறாக மேலும் பல புத்தர்களையும் சேர்த்தது. நாமே அந்த நிலையை அடைய முடிவதற்கான வழியை அவர்கள் போதித்து குறிப்பிட்டுக்காட்டினர். இரண்டு வழிகளில் அவர்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்: அவர்களின் போதனைகளுடன், மற்றும் அவர்களின் புரிதல்கள் மற்றும் உணர்தல்கள் அடிப்படையிலான உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான விஷயம், ஏனென்றால் வாய்மொழி போதனைகளுடன் மட்டுமல்லாமல், நாம் என்ன கற்பிக்கிறோம் என்பதற்கு உயிருள்ள உதாரணமாக இருப்பதன் மூலமும் மற்றவர்களுக்கு கற்றுக்கொள்ள உதவ முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. தர்மம் என்பது சில புலனாகாத போதனை அல்ல, மாறாக உண்மையில் மக்கள் மற்றும் நம்மால் எட்ட முடியும். 

சங்கம் ஆபரணம்

நமக்கு ஏன் இந்த மூன்றாவது ஆபரணம், ஆர்ய சங்கம் தேவை என்று சில நினைக்கலாம்? நிச்சயமாக புத்தர் மற்றும் தர்மமே போதாதா? துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சங்கத்தை குறித்தாலும், உண்மையில் சங்க ஆபரணம் அதுவல்ல. சிலைகளும், ஓவியங்களும் புத்தலை குறிப்பது போல, புத்தகங்கள் தர்மத்தை குறிக்கிறது, அவை வெறும் குறிப்பீடுகளே. 

புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தை சிலவை குறித்தாலும், துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள்மரியாதையை காண்பிப்பதற்கான நோக்கத்தைத் தருகிறார்கள், ஏனெனில் பலனில்லாத அதிக விஷயங்களுக்கு மரியாதையை காண்பிப்பது அவ்வளவு எளிதல்ல. நிச்சயமாக, இவை அனைத்திற்கும் ஆழமான அர்த்தம் இருக்கிறது. 

சங்க ஆபரணம் மிகவும் முக்கியமானது. சங்கம் அரியர்களைக் குறிக்கிறது, அல்லது கருத்தியல் இல்லாமல், அதனைக் கண்டவர்கள், இரண்டு உண்மைகள் அடிப்படையிலான நான்கு மேன்மையான உண்மைகள்.  ஏனென்றால் கருத்தியல் ரீதியாக அவர்கள் இதை அறியாதவர்கள், அவர்கள் ஓரளவு உண்மையான நிறுத்தங்களையும், ஓரளவு உண்மையான மனப்பாதைகளையும் அடைந்துள்ளனர், ஆனால் முழு விஷயங்களையும் அல்ல. அதிக உயர்நிலை அரியர்கள் கடைசியாக விடுதலையை அடையும் வரையும் இறுதியில் ஞானமடைதல் இரண்டையும் படிப்படியாக அதிகம் அடைந்தனர். இந்த மேன்மையான உண்மைகளே அரியர்களின் உண்மைகள் என்று வரையறுக்கப்படுகிறது – அதுவே அர்யர்கள் – யதார்த்தத்தின் கருத்தியல் அல்லாத அறிவாற்றலை கொண்டிருப்பவர்கள் – அதனை உண்மையாகப் பார்ப்பார்கள். அவை நமக்கு சொல்லக்கூடியவை:

 • இவை அனைத்தையும் உணர்ந்து சரியான நிறுத்தங்களையும் சரியான மனப்பாதைகளையும் அடைவது புத்தர்கள் மட்டுமல்ல. மாறாக, இது ஒரு படிப்படியான செயல்முறை.
 • விடுதலையை அல்லது ஞானத்தை அடைவதற்கு முன்னரே, நாம் துன்பப்படத் தொடங்கி, உண்மையான துன்பங்களின் பல்வேறு அம்சங்களிலிருந்து விடுபட ஆரம்பிக்கிறோம், ஏனென்றால் அவற்றின் உண்மையான காரணங்களின் பல்வேறு நிலைகளில் இருந்து நாம் விடுபடுகிறோம். 

விடுதலை மற்றும் ஞானமடைதல் படிப்படியான செயல்முறை, அவை நாம் புத்தராக அல்லது விடுதலைபெற்றவராக மாறுவதற்கு முன்பிருந்தே தொடங்குகின்றன. புத்தர்களை விட ஆர்யர்கள் ஒப்பிடுவதற்கு எளிமையானவர்கள், ஏனெனில் அவர்கள் இன்னமும் சிக்கல்களைக் கொண்டிருக்கின்றனர் உள்ளிட்டவையால், சிலர் இன்னமும் கட்டுப்பாடில்லாமல் நிகழும் மறுபிறப்பில் இருந்து முழுவதுமாக சுதந்திரம் அடையவில்லை, மாறாக அவர்கள் அதில் இருந்து பாதி விடுபட்டிருக்கின்றனர். இவ்வழியில், அவர்களுடன் ஒப்பிடுவது சிறிதே எளிமையானது.  

அர்ய சங்கம் ஊக்கம் மற்றும் உத்வேகத்தை அளிக்கிறது, படிப்படியாக அவர்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பான திசையில் நாம் சென்றால், நாமும் கூட அந்த இறுதி இலக்குகளான விடுதலை மற்றும் ஞானத்தை அடையலாம். 

நாம் அனைத்து வழியிலும் செல்ல முடியாவிட்டாலும், அந்த நேரத்திற்கு சில டிகரியிலான துன்பத்தில் இருந்து நம்மை நாமே விடுவிக்க முடியும் ஏனெனில், துன்பத்திற்கு காரணமான அறியாமையில் இருந்து நம்மை நாமே விடுவிக்கலாம். யதார்த்தத்தில் நாம் எந்த அளவிற்கு முழு கவனத்துடன் இருக்குறோம் என்பதைப் பொருத்தது அது. நீங்கள் இன்னும் ஆர்யர் என்றால், உங்களால் எல்லா நேரமும் கவனத்துடன் இருன்ன முடியாது, ஆனால் புத்தராக இருந்தால் உங்களால் முடியும். 

விடுதலையும் ஞானமடைதலும் ஒன்றல்ல. விடுதலை என்பது நாம் கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் இருந்து நாம் விடுபடுவது, அப்போது தான் நாம் அர்ஹதர்களாக, சுதந்திரமானவர்களாக மாறுவோம். ஞானமடைதல் என்பது நாம் உணர்ச்சிபூர்வமான மறைவுகளிலிருந்து விடுபடாதபோது - குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் நாம் எப்படி இருக்கிறோம் என்பது பற்றிய அறியாமை - ஆனால் நாம் அறிவாற்றல் தெளிவின்மை இல்லாதவர்களாக இருக்கிறோம் - அறியாமையின் நிலையான பழக்கங்கள். 

மற்றொரு விதமாகச் சொல்வதானால், சாத்தியமில்லாத எதுவோ அந்த முன்னெடுப்புகளை நம்பும் நம்முடைய பழக்கங்களால் – நம்முடைய மனச் செயல்பாடு முன்னெடுப்புகளை உருவாக்குவதற்கு தொடர்கிறது, நாமும் அது யதார்த்தத்தோடு ஒத்துப்போகிறது என்று தொடர்ந்து நம்புகிறோம்.  

இந்த ஏமாற்று தோற்றங்கள் யதார்த்தத்துடன் ஒத்துப்போகின்றன என்று நம்புவதை நிறுத்தும்போது நாம் விடுதலை பெறுகிறோம். இது வெறும் குப்பை என்று நாம் புரிந்து கொள்கிறோம், விஷயங்கள் இவ்வாறு தோன்றினாலும், உண்மையில் அது எப்படி இருக்கிறதோ அப்படி இல்லை. நம்முடைய கருத்து இன்னமும் குறைவாகவே இருக்கிறது மேலும் விஷயங்களை நாம் பெட்டியில் இருக்கும் போக்கிலேயே பார்க்கிறோம், ஆனால் நமக்குத் தெரியும் உண்மையில் அவை அவ்வாறு இருப்பதில்லை. 

மிக எளிமையான அளவிலான அணு இயற்பியலிலும் கூட, நமக்கு அணுக்கள் மற்றும் விசை புலங்கள் மற்றும் பல கிடைத்துள்ளன, ஆனால் எந்தவொரு பொருளையும் சுற்றி திடமான கோடு இல்லை, "கோட்டின் இந்த பக்கத்தில், பொருள் உள்ளது. அடுத்த பக்கத்தில், அது இல்லை.” விஷயங்கள் தோன்றுவதைப் போன்று அப்படியே நிலைத்து இருப்பதில்லை. இந்த ஏமாற்றுத் தோற்றங்களை உண்டாக்கும் அறிவாற்றல் தெளிவின்மையிலிருந்து நாம் விடுபட்டால், மனம் அவற்றை முன்னிறுத்துவதை நிறுத்தும் போது நமக்கு ஞானம் கிடைக்கும். ஞானத்தை நாம் பெற்றால், அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதைக் காணலாம். மற்றவர்களை தங்கள் சொந்த விடுதலை மற்றும் ஞானத்தை அடைவதற்கு இட்டுச் செல்லும் மிகவும் திறமையான வழியைக் காண இது நம்மை அனுமதிக்கிறது.

அர்யர்கள் பற்றி நாம் பேசினால், வெறுமனே ஞானத்தை நோக்கமாகக் கொண்ட போதிசத்துவ ஆர்யர்களைப் பற்றி நாம் பேசவில்லை. விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அர்யர்களைப் பற்றியும் பேசுகிறோம். பாதுகாப்பான திசை என்னும் சூழலில் மூன்று ஆபரணங்கள் என்று நாம் பேசினால், நாம் வெறுமனே விடுதலையை நோக்கமாகக் கொண்டவர்கள் அல்லது விடுதலை ஞானம் இரண்டையும் நோக்கமாகக் கொண்டவர்கள் பற்றி பேசுகிறோம், வெறுமனே ஞானத்தை நோக்கமாகக் கொண்ட போதிசத்துவர்களைப் பற்றி பேசவில்லை. 

மூன்று ஆபரணங்களில் உறுதியான நம்பிக்கையை வளர்த்தல்

சம்சாரத்தில் நாம் எப்படி சிக்கிகொண்டு இருக்கிறோம் என்பதற்கான இரண்டு உண்மைகள் மற்றும் நான்கு உண்மைகளையும், அதில் இருந்து நாம் எப்படி வெளியேறுவது என்பதையும் புரிந்து கொண்டால், பின்னர் ஆழமான தர்ம ஆபரணம் உண்மையில் இருக்கிறது என்று உறுதியாக நம்புபவராக மாறுவோம், அதுவே உண்மை. சாத்தியமற்றது பற்றிய நம்முடைய ஏமாற்றும் தோற்றத்தை உருவாக்கும் குழப்பம் நம் மன செயல்பாட்டின் உள்ளார்ந்த அம்சம் அல்ல என்பதை நாம் மிகத் தெளிவாக புரிந்துகொள்கிறோம். ஏன்? ஏனெனில் அறியாமை என்பதன் சரியான எதிர்பதத்தை நாம் இலக்காகக் கொண்டால் நம்மால் அதில் இருந்து வெளியேற முடியும். 

மற்றொரு விதமாகச் சொல்வதானால், விஷயங்கள் எப்படி இருக்கிறது என்ற இரண்டு உண்மைகளின் விழிப்புணர்வை நீங்கள் நோக்கமாகக் கொண்டால், பின்னர் உங்களுக்கு ஏமாற்றம் தோற்றங்கள் இருக்காது, மேலும் நிச்சயமாக அவற்றை நீங்கள் நம்ப மாட்டீர்கள். நீங்கள் முழுவதுமாக சரியான பாதை என்ற இந்த விழிப்புணர்வில் நோக்கமாக இருந்தால், பின்னர் உங்களால் சரியான நிறுத்தத்தை அடைய முடியும், மேலும் இது தர்க்கத்தை பின்புலமாகக் கொண்டது. இது யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த முடியும், மேலும் இது இந்த விளைவை உருவாக்குகிறதுன். நீங்கள் நீண்ட காலத்திற்கு துன்பத்தின் மகிழ்ச்சியின்மை, வழக்கமான மகிழ்ச்சியின் ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்க மாட்டீர்கள் மேலும் நீங்கள் நீடித்த கட்டுப்பாடின்றி நிகழும் இருத்தலை கொண்டிருக்க மாட்டீர்கள்.

நீங்கள் மறுத்து இப்படிச் சொல்லலாம், “எல்லா நேரமும் நீங்கள் அறியாமையில் கவனத்துடன் இருந்தால், பின்னர் நீங்கள் புரிதல் அல்லது விழிப்புணர்வை கொண்டிருக்க மாட்டீர்கள்,” அது உறுதியானது - யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத அறியாமையுடன் கவனம் செலுத்துவதா அல்லது யதார்த்தத்திற்கு இசைவான விழிப்புணர்வில் கவனம் செலுத்துவதா?

நாம் இதை பகுப்பாய்ந்தால், அறியாமையை பின்புலமாகக் கொண்ட கணிசமான எதுவும் இல்லை என்பதை நாம் பார்க்கிறோம், எனினும் தர்க்கம் சரியான புரிதலை ஆதரிக்கிறது. விஷயங்கள் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளில் இருந்து எழுகிறது, மேலும் அவை வெறுமனே தன்னுடைய சொந்த சக்தியின் மூலம்இருத்தலுக்கு வரவில்லை. கூடுதலாக, எல்லா நேரமும் நாம் சரியான புரிதலுடன் கவனத்துடன் இருந்தால், அது அதன் தாக்கத்தை உருவாக்குகிறது: நாம் நீடித்த துன்பத்தை அல்லது சம்சாரிய மறுபிறப்பை அனுபவிக்க மாட்டோம். 

இது மீண்டும் நான்கு மேன்மையான உண்மைகளுக்கு நம்மை எடுத்துச் செல்கிறது. நாம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்ன? நாம் எல்லா நேரமும், எப்போதும் துன்பப்பட விரும்புகிறோமா? நாம் அப்படி செய்தால், பின்னர் நம்மால் அறியாமையில் கவனத்துடன் இருக்க முடியும், மேலும் நாம் துன்பப்படுவோம்; அதைப் போன்று இதுவும் எளிதானது. உங்களை அதற்காக வரவேற்கிறோம்! ஆனால் அனைத்தில் இருந்தும் நீங்கள் விடுபட விரும்பினால், அதுவே பௌத்த ஆன்மிகப் பாதையின் இலக்கு, பின்னர் யதார்த்தம் அடிப்படையில் விழிப்புணர்வுடன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாகும்.

அடைக்கலம் என்ற தலைப்பை அணுகுவதற்கான இந்த வழி செல்லுபடியாகும் அறிவாற்றலால் கொண்டு வரப்படுகிறது, பின்னர் மூன்று சரணாகதிகள் என்ற உண்மையான நமது நம்பிக்கை உறுதியாகிறது. நாம் இனி இந்த திசையில் சென்றால், நாம் துன்பத்திலிருந்து விடுபடுவோம் என்று நினைக்கவோ அல்லது நம்பவோ மாட்டோம், ஏனென்றால் "நமது ஆசிரியர் அப்படித்தான் கூறி இருக்கிறார்!" அனுமான புரிதல் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் இது சரியான அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டது.

செல்லத்தக்க அறிவாற்றலை கொண்டிருக்க இரண்டு வழிகள் இருக்கின்றன – அனுமானத்தின் மூலம் தர்க்கத்தின் மூலம் அல்லது வெறும் உணர்தல் மூலம், அதாவது பார்த்தல், கேட்டல், அல்லது நமக்கு நாமே கருத்தியல் இன்றி அதனை அனுபவித்தலைப் போன்றதாகும். இந்த இரண்டாவது ஒன்றுடன், இருக்கும் பிரச்னையானது உங்களுக்கு நீங்களே அதனை அனுபவிக்க மின மிக மேம்பட்டவராக இருக்க வேண்டும், இதனால் நீங்கள் அனுமானத்தை அடிப்படையானக் கொண்டு உங்களுடைய செல்லத்தக்க அறிவாற்றலை கொண்டிருக்கத் தொடங்கலாம்.

ஆன்மிகப் பாதையில் முன்னேறுதல்

இப்போது, நாம் நான்காவது வரியைக் கொண்டிருக்கிறோம்:

விடுதலைக்கு வழிவகுக்கும் மனப்பாதையின் இந்த வேர் விடுதலைக்கு வழிநடத்துவதற்கு என்னை ஊக்குவிக்கும்.

விடுதலைக்கான மனப்பாதைகள் பற்றி நாம் பேசினால், அதை பல வழிகளில் வழங்க முடியும், அதில் ஒன்று முயற்சியின் மூன்று நம்பிக்கைகள், பொதுவாக திபெத்திய வழக்கத்தில் லாம்-ரிம் (தரப்படுத்தப்பட்ட பாதை) என்று அறியப்படுகிறது. இந்த தரப்படுத்தப்பட்ட பாதைகள் மூன்று முற்போக்கு இலக்குகள்: 

 • முதல் நம்பிக்கையானது மோசமான மறுபிறப்புகளைத் தவிர்த்தல், மேலும் சிறப்பான மறுபிறப்புகளைப் பெறுதல். மிகக் குறைவான துன்பத்துடன் நாம் சிறப்பான மறுபிறப்புகளை கொண்டிருக்க விரும்புகிறோம், ஏனெனில், ஆன்மீகப் பாதையில் தொடர உகந்த நிலைமைகள் நமக்கு இருக்கும். மறுபிறப்பில் நாம் கரப்பான் பூச்சியாகப் பிறந்தால், ஆன்மிக முன்னேற்றம் என்ற ரீதியில் நாம் அதிகம் செய்யத் தேவையில்லை. மோசமான மறுபிறப்புகளை தவிர்ப்பதற்காக, தொடர்புடைய உண்மை பற்றிய நம்முடைய குழப்பத்தில் இருந்து நாம் வெளியேற வேண்டும், அதுவே காரணம் மற்றும் தாக்கம். மோசமான மறுபிறப்புகளுக்கு முக்கிய காரணம் அழிவுகரமான நடத்தை, நாம் அழிவுகரமாக செயல்படுகிறோம் ஏனெனில் நம்முடைய செயல்களின் விளைவுகளைப் பற்றி நாம் அறியவில்லை, அல்லது இது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நாம் நினைக்கிறோம்.
 • இடைப்பட்ட இலக்கானது அனைத்து மூன்று வகையான துன்பங்களில் இருந்து விடுபடுவதை நோக்கமாக வைத்தல் – மகிழ்ச்சியின்மை, நம்முடைய வழக்கமான மகிழ்ச்சி, மேலும் இவை இரண்டிற்குமான அடிப்படை, நம்முடைய கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பாகும். இதனைச் செய்வதற்கு, வெற்றிடத்தை புரிந்து கொள்வதன் மூலம் ஆழ்ந்த உண்மை பற்றிய நம்முடைய குழப்பத்தில் இருந்து வெளியேற வேண்டும். உண்மையில், நாம் எல்லா நேரமும் அனைத்து நான்கு மேன்மையான உண்மைகளின் புரிதலைப் பெற வேண்டும். எல்லா நேரமும் தொடர்ந்து அதில் கவனத்துடன் இருப்பது மிகவும் கடினம், எனவே நாம் மேலும் செல்ல வேண்டும்.  
 • மேம்படுத்தப்பட்ட நம்பிக்கையானது புத்தரின் ஞான நிலையை அடைதல் இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் சிறந்த சாத்தியமுள்ள வழிகளில் நம்மால் உதவ முடியும். ஆழ்ந்த நம்பிக்கையில் நாம் கவனத்துடன் இருந்தால், நாம் முழுமையாக தொடர்பு உண்மையை புரிந்து கொள்ளலாம். எல்லா நேரமும் தொடர்ந்து இரண்டு உண்மைகளில் கவத்துடன் இருக்க புத்தரால் மட்டுமே முடியும். 

நாம் இந்த வரியில் ஆழமாகப் பார்த்தால், “இரண்டு உண்மைகளில் இருந்து நான்கு உண்மைகள்; நான்கு உண்மைகளில் இருந்து மூன்று சரணாகதிகள்,” இதுவே மேலே இருக்கும் மூன்று நம்பிக்கைகளின் வேர், மற்றும் இந்த இலக்கிற்கு வழிநடத்தும் பயிற்சிகளாகும். அது சொல்கிறது இதுவே வேர், வேர் விதையல்ல. வேர் என்பத வளைந்து கொடுக்கும் தன்மையையும் செடிக்கு உறுதியையும் கொடுப்பது. தர்க்கத்தின் அடிப்படையில் மூன்று இலக்குகளும் அடையக்கூடியவை, அவை உள்ளன, அவற்றை நம்மால் அடைய முடியும் என்பது யதார்த்தமானது என்று நாம் உறுதியாக நம்பினால், நிச்சயமாக அது நமக்கு ஸ்திரத்தன்மையை கொடுக்கும், இலக்கை நோக்கிய முழு ஆன்மிகப்பாதையில் அது நம்மை ஆதரிக்கும். 

இந்த மூன்று நம்பிக்கைகளின் வேரானது ஆன்மிக ஆசிரியருடன் ஆரோக்கியமான தொடர்பை கொண்டிருப்பவை என்று மற்ற வழங்கல்கள் கூறுகின்றன, மேலும் இதனை நீங்கள் அடிப்படையாக அனைத்து லாம்-ரிம் புத்தகங்களில் இருந்தும் காணலாம். இந்த ஆரோக்கியமான உறவு முழு ஆன்மீக பாதையின் வேர், நாம் ஆசிரியரிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம் என்ற அர்த்தத்தில் உள்ளது, மேலும் இந்த உத்வேகமே இலக்குகளை நோக்கி முன்னேற வலிமையையும் ஆற்றலையும் தருகிறது.

மீண்டும், ஆன்மீகப் பாதையில் நாம் எவ்வாறு நிலையான வழியில் தொடர முடியும் என்பதற்கு இரண்டு மாறுபாடுகளைக் காண்கிறோம்:

 • நம்முடைய ஆன்மிக ஆசிரியர்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பின் ஸ்திரம் மற்றும் ஊக்கத்தை பயன்படுத்துவது ஒரு வழி. அதன் அடிப்படையில், நாம் இப்படிச் செல்லும் இந்த வரியை பயன்படுத்தலாம்: “என்னுடைய ஆசிரியர் தகவலுக்கான செல்லத்தக்க ஆதாரம். எனவே, ஞானத்தை அடைவது சாத்தியமே என்று என்னுடைய ஆசிரியர் என்ன கூறி இருப்பது சரியே. என்னுடைய ஆசிரியர் அதனை ஏன் உருவாக்கினார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.” எனவே ஒரு குறிப்பிட்ட வகை தர்க்கம் இங்கே இணைந்திருக்கிறது. ஆனால் பலரும் அதிகமான உணர்தல் மட்டத்தில் அனுபவித்திருக்கிறார்கள், அந்த ஆசிரியர் நம்மை மிக அதிக உணர்வு ரீதியில் ஈர்க்கிறார், அது நமக்கு வியத்தது உறுதியை அந்தப் பாதையில் செல்வதற்குத் தருகிறது. இது போதிச்சிட்டாவை வளர்ப்பதற்கான இரண்டு வழிகளில் முதன்மையானது. இதனுடன், நாம் தொடர்புடைய போதிசிட்டாவை மேம்படுத்தத் தொடங்குவோம் அங்கே நாம் பிறருக்கு உதவுவதற்கு தூண்டப்படுவோம் அதில் இருந்து சாத்தியமுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஞானமடைய தூண்டப்படுவோம். அதன் பின்னர் அதனை அடைய முடியும் என்று தர்க்க ரீதியில் நாம் நம்பிக்கை பெறுவோம். 
 • மற்றொரு விதத்தில், நாம் பயிற்சிக்கும் விதத்தில் பிரதிபலித்தால் அதனுடன் முதலில் நாம் ஆழ்ந்த போதிசிட்டாவை மேம்படுத்தலாம், வரிகளில் விளக்கப்பட்டுள்ளதைப் போல வெற்றிடத்தில் நம்மால் நம்பிக்கையை வளர்க்க முடியும். முதலில் அது அடையக் கூடியது என்று நாம் நம்ப வேண்டும், பின்னர் நாம் உண்மையில் ஞானத்தை செயலாற்றுவதை நோக்கி வேலை செய்யும் உணர்ச்சிகரமான பக்கத்தில் செயலாற்றுகிறோம், நம்முடைய இதயங்களைத் திறக்கிறோம், உள்ளிட்ட பல.

ஆன்மிகப் பாதையை அணுக இரண்டுமே செல்லத்தக்க வழிகள், மேலும் இவை அனைத்தும் நம்முடைய சொந்த நம்பிக்கை அல்லது திறன் அடிப்படையிலானது. மிகவும் கூர்மையான திறமைகள் மற்றும் புத்திசாலித்தனம் உள்ளவர்கள் தர்க்கரீதியான விளக்கக்காட்சியை நம்புவது அவர்களின் ஆளுமைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று உரைகளில் விவரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கூர்மையாக இல்லாதவை உணர்ச்சி மட்டத்தில் அதிக செயலாற்றும். இந்த இரண்டாவது வகைக்கு, ஆசிரியரின் உத்வேகம் மற்றும் அன்பு மற்றும் கருணை அடிப்படையில் உருவாக்கப்பட்ட உணர்ச்சியை நம்பியிருப்பது சிறந்தது.

பல வழிகளில், இரண்டு அணுகுமுறைகளையும் சமன்படுத்துவது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். மேலும் நாம் மூன்றாவதான, பக்தி அம்சத்தை இவை அனைத்துடனும் சேர்க்கலாம். சிலர் ஞானமடையும் பாதையை பின்பற்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிற்சியாளர்கள் ஈடுபட்டிருந்த சடங்குகளைச் செய்தல் மற்றும் பங்கேற்பதன் மூலம் உத்வேகம் பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பாணியை பின்பற்றுவது நமக்க மிகவும் சவுகரியமாக இருக்கிறது என்பதற்காக பௌத்த பாதையை அணுகும்போது நாம் சில வழிகளை விட்டு விடக்கூடாது. நமக்கு நாமே வளர்ச்சியை ஏற்படுத்தினால் நம்முடைய திறன்கள் முழுமையடைகிறது, அனைத்து மூன்று அணுகுமுறைகளையும் நாம் சமன்படுத்த வேண்டும்.  

இந்த குறிப்பிட்ட வரிகளின் குறிப்பிட்ட பிரார்த்தனையில் புனிதர் தலாய் லாமாவால் வழங்கப்பட்ட அடிப்படை இதுவே. என்னுடைய ஆசிரியர் எப்போதும் சொல்வதைப் போல, பசுவிடம் இருந்து நீங்கள் பால் கறப்பதைப் போல, இந்த குறுகிய வரிகளில் இருந்து ஏராளமான அர்த்தமுள்ளவற்றை கறக்க முடியும்.  

கேள்விகள் மற்றும் பதில்கள்

நான்கு மேன்மையான உண்மைகளை நடைமுறையில் பொருத்துதல்

என்னுடைய நண்பர் எல்லா நேரமும் கவலைப்பட்டால், விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் எளிதாக எடுத்துக்கொள்ள நான் கூற முடியும். நமக்கும் பிறருக்கும் கொடுக்கக் கூடிய ஒரு நினைவூட்டல் இது. ஆனால் நான் சுயநலவாதியாக இருக்கும்போது மற்றவர்களுடன் பழகும்போது, என் சுய-மைய மனதின் முன்னெடுப்பு மற்றும் யதார்த்தம் எங்கே இருக்கிறது? என்பதை ஆராய மறக்காமல் இருக்க நான் பயன்படுத்தக்கூடிய மந்திரம் அல்லது நினைவூட்டல் ஏதாவது இருக்கிறதா? 

மிகப்பெரிய திபெத்திய குரு செங்கப்பாவை பொருத்தவரையில், வெற்றிடத்தை நாம் கருத்தியல் அல்லாத ரீதியில் நோக்கப்படுத்துவதைத் தவிர, நம்முடைய மனச் செயல்பாடு இருத்தலுக்கான சாத்தியமற்ற வழிகளை முன்நிறுத்துகிறது. இது எல்லா நேரமும் நடக்கிறது. மறுப்புக்கான பொருள் அந்த ஆழ்ந்த தியானத்தைத் தவிர நம் அனுபவத்தின் ஒவ்வொரு கணமும் ஆகும்.  

நாம் உணரும் பல ஏமாற்றுத் தோற்றங்களை மறு கட்டமைக்க பல்வேறு சின்ன விஷயங்கள் நமக்கு உதவ முடியும். நமக்கு உதவக்கூடிய ஒரு உருவம் என்னவெனில் கற்பனையென்னும் “பலுனை வெடித்தல்”, ஆனால் அதனை இரட்டை வழியல்லாததாக செய்தல் வேண்டும், “நான்” என்ற ஒரு ஊசியுடன் அங்கே ஒரு பெரிய பலூன் இல்லை, மேலும் “நான்” சென்றால் பலூன் வெடிக்கிறது. அது வெறம் பலூன் – விஷயங்கள் எப்படி இருக்கிறது என்ற மிகைப்படுத்தல் – மட்டுமே வெடிக்கிறது. ஏமாற்றும் தோற்றம் என்பது “நீங்கள் மிகவும் பயங்கரமானவர்” அல்லது “நான் இருக்கும் இந்தச் சூழ்நிலை மிகவும் பயங்கரமானது” அனைத்து காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் என்ற சூழலுடன் நாம் பார்க்கக் கூடாது, இதே போன்ற நிலையை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடும். அதன் பின்னர் “பாவம் நான்!” என்று நினைக்கிறோம் நாம் வெறுமனே இந்த அனைத்தும் வெடிப்பதாக மட்டுமே நாம் கற்பனை செய்கிறோம்.  

மற்றொரு உருவமானது ஒரு திறந்த புத்தகத்தின், ஒரு பக்கத்தில் “பாவமான நான் இதில் இருந்து துன்பப்படுகிறேன்” என்று இருத்தல், மற்றொரு பயங்கரமான சூழ்நிலையை நம்மால் கையாள முடியாது. இது ஒரு திகிலான தேவதை கதையைப் போன்றது. அதிக சொற்களைப் பயன்படுத்த, இரட்டைவாதத்தின் புத்தகத்தை மூடுவதைப் பார்க்கிறோம்!

நீங்கள் ஒரு மந்திரத்தை விரும்பினால், நமக்குத் தோன்றுவது குப்பை என்பதை நினைவில் கொள்ள "குப்பை" என்று சொல்லலாம். முக்கியமான பிரச்னை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு வலுவான குழப்பமான உணர்ச்சியை அனுபவிக்கும் போது நமக்கு நேரம் மிகவும் தேவைப்படும். திபெத்தியர்கள் பயன்படுத்தும் உதாரணம், நீங்கள் எதாவது செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்படும் போது ஏற்படும் உணர்வு மற்றும் "நான் அதை செய்யவில்லை! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நான் பொய்யன் மற்றும் திருடனா?!” நான் என்ற வலுவான உணர்வு மேலே வருகிறது. 

பௌத்தம் மற்றும் இதர தர்ம சமயங்கள் இடையெயான வேறுபாடு

இதர தர்ம சயங்களும் இருப்பதாகவும் அந்த ஒவ்வொன்றும் பிரச்னைகள் இருப்பதாகவும் அதே சமயம் பிரச்னைகளில் இருந்த விடுதலையையும் தருவதாகச் சொல்கிறது என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். நிச்சயமாக, ஒவ்வொரு சமயமும் அவர்களின் முறைகள் சிறந்தது என்று சொல்கிறது, இந்த பார்வையில் பௌத்தத்தில் சிறப்பானது என்ன என்று உங்களால் விளக்க முடியுமா?

நீங்கள் சொன்னது சரி. இந்து, பௌத்தம் மற்றும் ஜெயினம் அனைத்துமே கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பில் இருந்து விடுதலை பெறுவதைப் பற்றி பேசுகின்றன, விடுதலையின் நிலை என்ன என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் விடுதலையைப் பெறுவதற்கான வழி யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது, அவர்கள் யதார்த்தத்தை விவரிக்கும் வழி என்று சொல்கிறது. இவ்வழியில், பௌத்தம் இந்திய சமய சூழலுக்குள் முழுவதுமாகப் பொருந்துகிறது. பௌத்தத்தில் உண்மையில் தனித்துவமானது நான்கு மேன்மையான உண்மைகள். பௌத்தம் போதிப்பவை:

 • துன்பம் என்றால் என்ன என்று மற்றவர்கள் விவரிக்கலாம், ஆனால் புத்தர் உண்மையான துன்பப்படுதலைப் பற்றி பேசுகிறார்கிறார்;
 • துன்பப்படுதலுக்கான காரணம் குறிப்பிட்ட வகையான அறியாமை என்று மற்றவர்கள் கூறலாம், ஆனால் புத்தர் ஆழ்ந்த வகையான அறியாமை, உண்மையான காரணம் பற்றி பேசுகிறார். 
 • இதர தர்ம சமயங்கள் உண்மையான நிறுத்தங்கள் நீடித்திருக்காது, அல்லது முற்றிலும் சுதந்திரமானதல்ல என்று கருதுகிறது. 
 • மற்றவர்கள் பேசக்கூடிய புரிதல் உங்களை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு செல்லாம், ஆனால் அது உங்களை விடுதலைக்கு அழைத்துச் செல்லும் உண்மையான மனப்பாதையல்ல. 

இயல்பாக, பௌத்தம் பற்றி மற்றவர்களும் இதையே தான் சொல்வார்கள், இதனால் உண்மையில் யதார்த்தம் என்ன என்று யாரும் ஆராய்வதில்லை. புத்தக வரிகளில் நாம் பார்த்தது போல, ஆன்மீகப் பாதையின் முழு அடித்தளமும் - இது பௌத்தத்தில் மட்டுமல்ல இந்து மதத்திற்கும் சமணத்திற்கும் உண்மை - என்பதே யதார்த்தத்தின் பார்வை. இது தர்க்கம், அனுபவம் மற்றும் புரிதல் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

இந்த வாழ்நாளில் ஒரு கனிவான, இரக்கமுள்ள நபராக ஆன்மீக வழியைப் பின்பற்றுவதற்கும், விடுதலை பெற விரும்புவதற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.  ஞானமடைதல் பற்றி நாம் பேசினால், நீங்கள் தர்க்கம் மற்றும் விவாதத்தின் அடிப்படையில் பார்ப்பதற்கு எந்த விளக்கம் சிறந்த செல்லத்தக்கது என்பதை ஆராய முடியும். அவர்கள் தாங்கள் என்று சொல்லலாம், ஆனால் அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது மற்றும் இந்த வாழ்நாளில் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிக்கிறார்கள். அதுவும் நல்லதே, அதில் எந்தத் தவறும் இல்லை.

ஆகவே, புனிதர் தலாய் லாமாவிடம் எந்த சமயம் சிறந்தது என்று கேட்டதற்கு, தனிப்பட்ட உங்களை பண்பாளராகவும் மற்றும் சிறந்த இரக்கமுள்ள மனிதராகவும் மாற்றுவதற்கு எது உதவுகிறதோ அதுவே சிறந்த சமயம் என்றார். 

ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர் அதனால் உண்மையில் நம்மால் இரக்கம், கருணை, பொறுமை, மன்னித்தல் உள்ளிட்டவற்றை வளர்ப்பதற்கு மிகச் செல்லத்தக்க வழி என்று எதையும் கூற முடியாது. பல்வேறு சமயங்களின்படி அவை சமமாக வளர்க்கப்படலாம். இதுதான் மத நல்லிணக்கத்திற்கான அடிப்படை. 

ஆன்மிகப்பாதையை முன்னேற்றுவது எப்படி?

பாதையில் முன்னேறுவது பற்றி நான் கேட்க விரும்புகிறேன். சோவியத் யூனியனில், பொருளாதார வளர்ச்சிக்கான 5 ஆண்டு திட்டங்கள் இருந்தன. பௌத்த நடைமுறையைத் தொடங்குவோருக்கு அவர்கள் வழிதவறாமல் இருக்க ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து வருடங்கள் என்ன செய்யலாம் என்று அறிவுரை வழங்கலாம்.

மிகவும் பொதுவான மற்றும் நம்பத்தக்க வழியானது, குறைந்தபட்சம் நான் பயிற்சி எடுத்த பாரம்பரியம் சொல்வது தரப்படுத்தப்பட்ட பாதைகளான லாம்-ரிம் மூலம் செயல்படுவது. ஆன்மிகப் பாதையில் முன்னேற நாம் என்ன புரிந்து கொண்டு, ஜுரணிக்க வேண்டும் என்பதை படிப்படியாக அது காட்டுகிறது.

லாம்-ரிம் பாதையை பின்பற்றுவதற்கான பாரம்பரிய வழியானது நீங்கள் ஒரு விஷயத்தை பெறுவீர்கள், அடுத்து என்ன நடக்கிறது என்று அறியாமல் நீங்கள் அதனுடன் செயல்படுகிறீர்கள். ஒரு பாதியை நீங்கள் புரிந்து கொண்டால், பின்னர் அடுத்ததை நோக்கிச் செல்கிறீர்கள். இக்காலத்தில் முழுப் பாதையும் புத்தகங்களில் இருக்கிறது ஆகவே ஒரு முறை நீங்கள் முழுவதையும் படித்துக்கொள்ளலாம், ஆனால் ஒவ்வொரு புள்ளியிலும் நீங்கள் இன்னும் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிட வேண்டும்.  நீங்கள் முழுமையாகப் படித்த பிறகும், நீங்கள் திரும்பிச் சென்று ஒவ்வொரு புள்ளியும் மற்ற எல்லாவற்றுடனும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த முன்னேற்றம் எப்போதும் நேரியல்போடு இருப்பதில்லை, மாறாக எப்போதும் ஏற்ற இறக்கத்துடனே செல்லும். ஆகவே ஒரு நாள் அது நன்றாகச் செல்லும் மற்றொரு நாள் அப்படி இருக்காது – அதைப் பற்றி சிறப்பானது ஒன்றுமில்லை. நீங்கள் வெறுமனே தொடர வேண்டும். “அதில் சிறப்பாக ஒன்றும் இல்லை”: இளம் மறுபிறப்புக்காக என்னுடைய ஆசிரியருக்கு மிகவும் பிடித்த வாசகம் இதுவாகும். நீங்கள் என்ன அனுபவிக்கிறீறர்கள் என்பது பற்றி எந்தச் சிறப்பும் இல்லை. அது நன்றாகச் சென்றதோ, நன்றாகச் செல்லவில்லையோ. அதனால் என்ன?

ஆகவே, 5 ஆண்டு திட்டத்தை அமைப்பது யதார்த்தமில்லாதது ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் வேறுபட்ட முறையில் முன்னேற்றத்தை உருவாக்குகின்றனர். இருப்பினும், முன்னேற்றத்திற்கான வழியை நாளுக்கு நாள் அல்லது மாதத்திற்கு மாதம் பார்க்காமல், 5 ஆண்டுகள் என்ற ரீதியில் பார்க்க வேண்டும் என்கிறார் புனிதர் தலாய் லாமா. 

பிரச்னைகளை முன்னர் எப்படி எதிர்கொண்டோம் இப்போது எப்படி கையாள்கிறோம் என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம். நாம் மேலும் அமைதியாக இருக்கிறோமா? அதன் பின்னர் நம்முடைய முன்னேற்றத்தை பார்க்கலாம்.

ஆரம்ப கட்ட பயிற்சிகள் போன்ற இதர பாணிகளும் கூட இருக்கின்றன, அந்தப் பயிற்சியில் நீங்கள் 100,000 சாஷ்டாங்கங்கள், சரணாகதி சூத்திரங்கள் உள்ளிட்டவை அடங்கும். பொதுவாக மக்கள் இவ்வாறாகத் தொடங்குவார்கள். இந்த இரண்டு அணுகுமுறைகள் தர்ம போதனைகளை இரண்டு வழிகளில் அறகுவதை பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன். ஆரம்ப கட்ட பயிற்சியை நீங்கள் தொடங்கும் போது, பொதுவாக அது ஆசிரியரின் ஊக்கத்தின் அடிப்பைடையிலானது. உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்காது, ஆனால் நீங்கள் வியத்தகு முறையில் ஆசிரியரால் ஈர்க்கப்பட்டிருப்பீர்கள், மேலும் அவர் விவரித்தது பலனுள்ளததாக இருக்கும் என்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் ஆரம்ப கட்டத்தின் 100,000 பயிற்சிகளைச் செய்வீர்கள்.   

நான் பயிற்சி பெற்ற அணுகுமுறை, இந்த வசனத்திலிருந்து நான் விளக்கும் அணுகுமுறை, அனைத்துமே தலாய் லாமா தானே வழக்கமாக போதிப்பவையாகும். முதலில் நீங்கள் நம்பிக்கையையும் பாதையைப் பற்றிய புரிதலையும் பெறுவீர்கள் - அது சாத்தியம், இலக்கு என்ன, மற்றும் பலவற்றைப் பெறுவீர்கள் - பின்னர் நீங்கள் ஆரம்ப கட்ட பயிற்சியைச் செய்கிறீர்கள்.

நிச்சயமாக, ஒருவரால் அவர்களுக்கு இடையே ஒரு நடுத்தர பாதையை ஏற்படுத்த முடியும். ஆரம்ப கட்ட பயிற்சியுடன் எளிதாகத் தொடங்கி, இலக்கு அடைவது சாத்தியம் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் கூட நீங்கள் செயலாற்ற தொடங்கலாம். அல்லது ஏற்கனவே நீங்கள் ஆரம்ப கட்ட பயிற்சியை செய்யத் தொடங்கி இருந்தாலும், நீங்கள் இந்த படிப்பு மற்றும் பயிற்சியை செய்யலாம். எனவே அவற்றை ஒன்றாக இணைக்க பல்வேறு வழிகள் உள்ளன. நான் விளக்கிய இந்த அமைப்பிற்குள் வெவ்வேறு திபெத்திய ஆசிரியர்கள் தர்மத்தை போதிக்கும் முறையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால், இது பொருந்தும் என்று நான் நினைக்கிறேன்.  இது நாகார்ஜுனா மற்றும் போதிசிட்டாவை வளர்க்கும் இரண்டு வெவ்வேறு வழிகளுக்குச் செல்கிறது – முதலில் தொடர்புடையது பின்னர் ஆழமானது, அல்லது முதலில் ஆழமானது பின்னர் தொடர்புடையது. தனக்கு எது பொருத்தமானது என்பதை ஒருவர் தானே முடிவு செய்ய வேண்டும்

சுருக்கம்

நான்கு மேன்மையான உண்மைகள் இரண்டு உண்மைகளில் உள்ள பௌத்த போதனைகளுடன் எவ்வாறு தொடர்புடையவை, மற்றும் மூன்று விலைமதிப்பற்ற ஆரபணங்களுடன் எவ்வாறு தொடர்புடையது என்பது மிகவும் மேம்பட்ட பகுப்பாய்வு ஆகும். உண்மைகள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் என்ன என்பதில் மட்டும் அவை ஒளிபாய்ச்சுவதில்லை மாறாக பௌத்த தத்துவம் மற்றும் பயிற்சியின் தெளிவான வடிவத்தை வழங்குகிறது. தலாய் லாமாவின் ஒரு சுருக்கமான ஆனால் ஊடுருவிச் செல்லும் வசனத்தை இந்த உணர்தல்களின் மேம்பட்ட விசாரணைக்கு அடிப்படையாகப் பயன்படுத்தினோம். குறிப்பிடத்தக்க முடிவுகள் நமது புரிதலை அதிகரிப்பதற்கான ஒரு தர்க்கரீதியான உத்தரவை மட்டுமல்ல, ஒவ்வொரு அத்தியாவசிய பௌத்த உணர்வும் மற்றொன்றை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு, ஒரு சிக்கலான மற்றும் ஒருங்கிணைந்த ஆன்மீக பாதை வெளிப்படுகிறது.

Top