நான்கு மேன்மையான உண்மைகள்: ஒரு கண்ணோட்டம்

14:08
உலகில் உள்ள அனைவருமே தங்களின் வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் மற்றும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்; வரலாறுகளில் துன்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பல்வேறு முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இன்றைய உலகில், இணையதளம் பல தத்துவங்களுக்கு உடனடி அணுகலை வழங்குகிறது, நாம் ஏன் கஷ்டப்படுகிறோம், நம் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு காணலாம், என்று 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் எடுத்த தனித்துவமான அணுகுமுறையை நாம் இங்கு பார்க்கலாம்.

முன்னுரை

பௌத்தத்தை பார்ப்பதற்கு முன்னர், நான்கு மேன்மையான உண்மைகளையும் பார்ப்பது நல்லது. அது பொருத்தமானதும் கூட, ஏனெனில் போதிக்க தொடங்கும் போது புத்தர் இந்தப் பாதையில் தான் தொடங்கினார். புத்தரின் காலத்தில், ஏற்கனவே ஏராளமான மத மற்றும் தத்துவ அமைப்புகள் இருந்தன, நாம் இன்று அதைவிட பரந்து விரிந்த ஆன்மீக போதனைகளைக் காண்கிறோம். எனவே, நாம் பௌத்த மதத்திற்கு வரும்போது, பௌத்த அணுகுமுறையில் தனித்துவமானது என்ன என்பதை அடையாளம் காண முயற்சிப்பது முக்கியம்.

கருணையோடு, அன்பானவராக, இருக்க முயற்சித்தல், பிறருக்கு தீங்கு விளைவிக்காதிருத்தல் உள்ளிட்ட பொதுவான பல போதனைகளை பௌத்தமானது மற்ற மத போதனைகளோடு பகிர்கிறது. நாம் இந்த அம்சங்கள் அனைத்தையும் ஒவ்வொரு மதம் மற்றும் தத்துவங்களில் பெரும்பாலும் பார்க்கிறோம், இவற்றை கற்பதற்காக பௌத்தத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை, எனினும் பௌத்தமானது கருணை, அன்பு மற்றும் இரக்கத்தை மேம்படுத்துவதற்கு சிறப்பான உயர்ந்த வழிகளைக் கொண்டுள்ளது. பௌத்த போதனைகளில் இருந்து நாம் எதைக் கற்றாலும் கற்காவிட்டாலும் இந்த முறைகளின் மூலம் பலன் பெற முடியும்.

எப்படியாயினும், “பௌத்தத்தில் குறிப்பிடும்படியானது என்ன?” என்று கேட்டால்,நாம் இந்த நான்கு மேன்மையான உண்மைகளைப் பார்க்க வேண்டியது அவசியம். இது குறித்த நம்முடைய கலந்துரையாடலில் கூட, மற்ற அமைப்புகளுக்கு பொருந்திப்போகக் கூடிய பொதுவான அம்சங்கள் அதிகமாக பகிரப்படுவதை கண்டறிய முடியும். 

“மேன்மையான உண்மை” என்பதற்கு செய்கை இருக்கிறது, ஆனால் இதனை மொழிபெயர்த்தல் விசித்திரமானது. “மேன்மை” என்ற வார்த்தை நம் மனதில் இடைக்கால உயர் குடியாட்சி என்ற தோரணையை கொண்டு வரலாம், ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் உயர்வை உணர்ந்தவர்கள் என்பதையே குறிக்கிறது.

எனவே தான் நான்கு மேன்மையான உன்மைகள் என்பது கருத்தியலின்றி யதார்த்ததை உண்மையில் பார்த்த நான்கு மெய்மைகள் எனப்படுகிறது. இந்த நான்கு மெய்மைகளும் உண்மையாகவே இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இவற்றை புரிந்து கொள்வதில்லை மற்றும் அதிகப்படியானோருக்கு இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லை.   

முதல் மேன்மையான உண்மை

முதல் சரியான உண்மை பொதுவாக “துன்பம்” என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் துன்பங்கள் நிறைந்திருப்பதாகவும், சாதாரண மகிழ்ச்சியாக நாம் கருதுவதும் கூட அதனுடன் தொடர்புடைய எல்லா பிரச்னைகளையும் கொண்டுள்ளது என்றும் புத்தர் கூறி இருக்கிறார். சமஸ்கிருதத்தில் “துன்பம்” என்ற சொல் “துக்கம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. நமக்கு சுகம், மகிழ்ச்சி மற்றும் துக்கம், துன்பமும் இருக்கிறது. மொழியியல் ரீதியில், கா என்றால் இடம், துஹ் என்பது திருப்தியற்ற தன்மை, விரும்பத்தகாத தன்மையை குறிக்கும். “கெட்டது” போன்ற தீர்மானமான வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது, ஆனால் அதன் அர்த்தத்தை தான் இந்த சொற்களும் வழிநடத்துகின்றன.  இந்த இடத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை துக்கம் சுட்டிக்காட்டுகிறது, அது நம்முடைய மனமாகவும் இருக்கலாம், பொதுவாக நாம் வாழும் இடமாகவும் இருக்கலாம். இது ஒரு நிம்மதியில்லாத சூழ்நிலை.

ஆக, அதில் என்ன நிம்மதி இல்லை? எல்லாவற்றிற்கும் முதலாவதாக, நாம் ஒட்டு மொத்த துன்பங்களான வலி, மகிழ்ச்சியின்மை, சோகத்தை அனுபவிக்கிறோம். இது நாம் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று, எல்லோரும், விலங்குகள் கூட இதைத் தவிர்க்க விரும்புகின்றன. வலி மற்றும் மகிழ்ச்சியின்மை என்பது ஒரு திருப்தியற்ற சூழ்நிலை என்று பௌத்தம் சொல்வதில் தனித்துவமான எதுவும் இல்லை, நாம் அதிலிருந்து வெளியேறுவது நல்லது. இரண்டாவது வகையான துன்பமே மாற்றத்திற்கான துன்பம் எனப்படுகிறது, இது நம்முடைய அன்றாட, தினசரி மகிழ்ச்சியை பற்றி பேசுகிறது. இவ்வகையான மகிழ்ச்சியில் என்ன சிக்கல் உள்ளது? இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் அவை நீடித்திருக்காது; அவை எல்லா நேரமும் மாறிக்கொண்டே இருக்கும்.

சாதாரண மகிழ்ச்சியையும் கூட உண்மையான மகிழ்ச்சியாகக் கருதினால் நம்மிடம் அதிகமான மகிழ்ச்சி இருக்கும். எனவே, சாக்லேட் உண்பதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவித்தால், அதிக அளவில் நாம் உண்டால், அந்த நேரத்தின் இறுதி வரை நாம் மகிழ்ச்சியாக இருப்போம். இது ஒரு விஷயமே அல்ல என்பது நமக்கே தெரியும். அல்லது மணிக்கணக்கில் உங்களுக்கு பிரியமானவர் உங்கள் கரங்களை அன்பாக பற்றிக்கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். மனதிற்கு இதமான அந்த உணர்வும் கூட விரைவில் வெறுப்பாகவோ அல்லது விசித்திரமாகவோ உணரக்கூடும். இதற்கான உண்மையான காரணத்தை எளிதாக சொல்வதானால், சாதாரண மகிழ்ச்சி மாறக்கூடியது.  நமக்கு போதும் என்ற மனமே இருக்காது, நாம் எப்போதும் திருப்தியடைவதில்லை. சாக்லெட் சாப்பிடும் போது உடனடியாக இல்லாவிட்டாலும், சிறிது நேரம் கழித்து நமக்கு அதிகமான சாக்லேட் தேவை என விரும்புகிறோம்.

நீங்கள் இவ்வாறு யோசித்தால், சுவாரஸ்யமாக இருக்கும், “எனக்கு பிடித்தமான உணவை உண்டு மகிழ எனக்கு எவ்வளவு தேவைப்படுகிறது?” ஒரு சிறிய அளவே போதுமானது, ஆனால் உண்மையில் நாம் எப்போதும் இன்னும், இன்னும், இன்னும் அதிகமாக தேவை என்றே விரும்புகிறோம். தற்போது, நம்முடைய இந்த சாதாரண பிரச்னையை வென்று உலக அளவிலான மகிழ்ச்சியை அடைவது மட்டுமே பௌத்தத்தின் பிரத்யேகமான நோக்கமல்ல.  உலக இன்பங்களைத் தாண்டி, நித்திய ஆனந்தத்துடன் ஒருவித சொர்க்கத்தைக் கண்டுபிடிக்க நமக்குக் கற்பிக்கும் பல மதங்கள் உள்ளன.

மூன்றாவது வகையான துன்பம் குறிப்பாக பௌத்தர்களுக்கு, “அனைத்து பரவலான துன்பங்கள்” என்று அழைக்கப்படுகிறது. நாம் இதனை நம்முடைய “அனைத்து பரவலான சிக்கல்கள்” என்றும் கூறலாம். இந்தத் துன்பமானது நாம் அனுபவிக்கும் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது, மேலும் நாம் கட்டுப்பாடில்லாமல் மறுபிறப்பை எடுக்கும் வழியைக் குறிக்கிறது, இது நமது அன்றாட வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளுக்கான உண்மையான அடிப்படையாகும். வேறு வகையில் கூறுவதென்றால் இதே வகையான மனம் மற்றும் உடலுடன் மீண்டும் மீண்டும் மறுபிறப்பு எடுப்பதே முதல் இரண்டு வகையான துன்பங்களுக்கான அடிப்படையாகும். இது மறுபிறப்பு என்ற தலைப்பை தழுவுகிறது, அது குறித்து நாம் பின்னர் படிக்கலாம்.

நிச்சயமாக, பல்வேறு இதர இந்திய தத்துவ முறைகள் மறுபிறப்பு பற்றி கற்பிக்கின்றன, எனவே மீண்டும், புத்தரிடம் எதுவும் புதிதாக இல்லை. எனினும், அவர் புரிந்து கொண்டு மறுபிறப்பின் இயங்கமைப்பை இன்னும் ஆழமான முறையில் எந்த இதர தத்துவங்களோ அல்லது மதங்களோ விளக்கிக் கூறிடாத அந்த கால கட்டத்திலேயே விவரித்துக் கூறியவர். மறுபிறப்பு எவ்வாறு செயலாற்றுகிறது, மேலும் நம்முடைய மனம் மற்றும் உடல் இவ்வகை வலியின் ஏற்றத் தாழ்வுகள், மகிழ்ச்சியின்மை மற்றும் சாதாரண மகிழ்ச்சியை எவ்வாறு அனுபவிக்கிறது என்று புத்தர் மிகத் தெளிவான விளக்கத்தைத் தந்தார்.

இரண்டாவது மேன்மையான உண்மை

இரண்டாவது மேன்மையான உண்மை நாம் அனுபவிக்கும் இந்த எல்லா மகிழ்ச்சியின்மைக்கான மெய்யான காரணத்தைப் பார்க்கிறது. மறுபிறப்பு போன்ற எதையும் நாம் இப்போது கொண்டு வர வேண்டிய அவசியமில்லை; மாறாக புத்தர் எளிய முறையில் தர்க்க ரீதியில் என்ன விளக்கத்தைத் தந்தார் என்பதை அறிய முயற்சிக்கலாம்.

நாம் துன்பம் மற்றும் சாதாரண மகிழ்ச்சி மற்றும் அவை தோன்றியதற்கான காரணங்களைப் பற்றி பேசுகிறோம் ஆனால் புத்தர் “உண்மையான காரணங்களில்” ஆர்வம் காட்டினார். நமக்கு மகிழ்ச்சியும் வலியும் ஏற்படுவது வெகுமதியாலோ அல்லது தண்டனையோ அல்லது அது போன்ற ஏதோ என நாம் நினைக்கலாம், ஆனால் புத்தர் உண்மையான காரணத்தின் அழிவுகரமான மற்றும் ஆக்கப்பூர்வமான நடத்தை குறித்து பேசினார்.

அழிவுகரமான நடத்தை என்றால் என்ன? இது தீங்கு விளைவிப்பதை மட்டும் குறிக்கிறதா? தீங்கு ஏற்படுத்துவதைப் பற்றி நாம் பேசினால், அது பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவது அல்லது தனக்கே தீங்கை உண்டாக்குவது. நம்முடைய நடத்தையானது பிறர் மீது எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிவது உண்மையில் கடினமானது, அது அவர்களுக்குத் தீங்காவும் இருக்கலாம் அல்லது உதவியாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, நாம் யாரோ ஒருவருக்கு ஒரு பெருந்தொகையை கொடுக்கிறோம், இதன் விளைவு யாரோ ஒருவர் அந்த பணத்தை திருடுவதற்காக அவர்களைக் கொன்று விடுகிறார்கள். நம்முடைய நோக்கமென்பது அவர்களுக்கு உதவுவது, ஆனால் அது உதவி தான் செய்தது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இதில் நிச்சயம் என்னவென்றால் இவ்வகையான நடத்தைகள் நமக்கே அழிவுகரமானவை. இதைத் தான் புத்தர் அழிவுகரமான நடத்தை என்கிறார் – இதுவே சுய-அழிவு.

இது என்னவென்றால், குழப்பமான உணர்வுகளுடன் சிந்தித்தல், செயலாற்றுதல் அல்லது பேசுதல் என்பதைக் குறிக்கிறது. குழப்பமான உணர்வுகள், வெறும் தொந்தரவு மட்டுமே! அவை நமது மன அமைதி மற்றும் சுய – கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது. இது கோபம், பேராசை, இணைப்பு, பொறாமை, பிடிவாதம் மற்றும் அப்பாவித்தனம் என்று நீண்டு கொண்டே செல்லும் பட்டியலைக் குறிக்கிறது. நம்முடைய சிந்தனையானது இது போன்ற உணர்வுகளில் சிக்கிக் கொண்டால், நாம் அதன் கட்டுப்பாட்டில் செயல்படவோ அல்லது பேசவோ செய்கிறோம், அது நமக்கு துன்பத்தையே உருவாக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும், நீண்ட கால திட்டத்தில் இது துன்பத்தை ஏற்படுத்தும், ஏனெனில் அவ்வாறே இருப்பதற்கான போக்கை அது கட்டமைக்கிறது. 

மற்றொரு புறம், நாம் ஆக்கப்பூர்வமான நடத்தை கொண்டிருக்கிறோம், அந்த நடத்தையானது இது போன்ற சிக்கலான உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இல்லாதது ஆனால் நம் நேர்மறை உணர்வுகளான அன்பு, இரக்கம் அல்லது பொறுமை போன்றவற்றால் நாம் கூடுதலாக ஊக்கப்படுத்தப்படலாம்.

ஆக்கப்பூர்வகமாக செயல்படுதல் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. நம்முடைய மனம் மேலும் இலகுவாக மற்றும் பொதுவாக அமைதியாக இருக்கும். சாதாரணமாகவே நமக்கு அதிக சுய- கட்டுப்பாடு உள்ளது, எனவே நாம் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கு காரணமான முட்டாள்தனமான செயலையோ, பேச்சையோ பேச மாட்டோம்.

மீண்டும் சொல்வதானால், இதன் பிரதிபலன் உடனடியாக இருக்காது, ஆனால் நீண்ட கால நோக்கத்தில் பார்த்தால், இது மகிழ்ச்சியை உருவாக்கும். எவ்வாறாயினும் நாம் இருக்கும் விதம், மற்றவர்கள் இருக்கும் விதம் மற்றும் பொதுவான யதார்த்தம் பற்றிய அப்பாவித்தனத்தை அடிப்படையில் கொண்டது.

நம்முடைய சாதாரண மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை என்பது வெளியே இருக்கும் நடுவர் போன்ற ஒருவரால் தரப்படுகிற வெகுமதியோ அல்லது தண்டனையோ அல்ல. அதுவும் பெரும்பாலும் இயற்பியல் விதியைப் பின்பற்றுவதைப் போன்றது தான். எந்த நடத்தையின் காரணம் மற்றும் தாக்கம் இருக்கிறது என்பது எதன் அடிப்படையிலானது? இதற்கான அடிப்படை குழப்பம், அதிலும் குறிப்பாக நம்மைப் பற்றியே. “நான் தான் மிக முக்கியமான நபர், எனக்கென தனி வழி இருக்க வேண்டும். சிறப்பு அங்காடியில் நான் வரிசையை முந்தி செல்ல வேண்டும், நான் தான் முதலில் இருக்க வேண்டும்”   என்று நாம் சிந்திக்கிறோம். நாம் முதலில் இருக்க பேராசைப்படுகிறோம், இதனால் நமக்கு முன்னால் இருப்பவர்கள் மீது கோபப்படுகிறோம். நாம் பொறுமை இழக்கிறோம் ஏனெனில் நமக்கு முன்னால் இருக்கும் நபர் மிக மெல்ல நகர்கிறார் மேலும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார், நம்முடைய மனமானது அவர்களைப் பற்றிய இது போன்ற துன்பமான சிந்தனைகளால் நிரம்பி இருக்கிறது. நாம் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட்டாலும், அடிப்படையில் “என்னை” பற்றியே ஏராளமான குழப்பங்கள் உள்ளன.

உதாரணத்திற்கு நாம் பிறருக்கு உதவலாம் ஏனெனில் அவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்று வேண்டுகிறோம் அல்லது பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம். அல்லது அது தேவை என்று நம்மை உணர வைக்கிறது. மிக குறைந்தபட்சமாக நன்றியாவது வேண்டும் என்று விரும்புகிறோம்.

இது போன்ற உதவியைச் செய்வது நமக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அடிப்படையில் இது சவுகரியமில்லாதது. இந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கலாம், நீண்ட கால போக்கில் நீடித்திருக்காது. இது ஏதோ அதிருப்தியாக மாறுகிறது. நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே போகிறது பௌத்தத்தில் இவை எதிர்காலத்திலும் தொடரும் என்றே பார்க்கப்படுகிறது.

நாம் உற்று நோக்கினால், நமக்கு எல்லாவற்றைப் பற்றியும் குழப்பம் இருப்பதை அறியலாம். உதாரணத்திற்கு, நாம் யாரோ ஒருவரை மிகவும் நேசிக்கிறோமென்றால், நாம் முழுவதுமாக அவர்களின் நல்ல குணங்களை மிகைப்படுத்துகிறோம். அல்லது நாம் யாரோ ஒருவரை அவ்வளவாக விரும்பவில்லையென்றால், அவர்களின் எதிர்மறை குணங்களை மிகைப்படுத்துகிறோம் அவர்களிடத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பார்க்க முடிவதில்லை. நாம் அதிகமாக ஆராய்ந்தால், அவ்வளவு குழப்பமும் நாம் அனுபவிக்கும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பதை காண முடியும்.

இன்னும் ஆழமாகச் சென்றால், இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை நம்முடைய சொந்த வரையறையே என்பதைக் காண முடியும். நாம் கொண்டிருக்கும் இந்த மனம் மற்றும் உடலுடன், சில வரையறைகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். நாம் கண்களை மூடிக்கொண்டால், எஞ்சி இருக்கும் இந்த உலகம் இல்லை, நான் மட்டுமே என்ற நினைப்பு. நம்முடைய மண்டையில் ஒரு சப்தம் கேட்கும் அது இவ்வாறாக இருக்கும் “நான்”, அது எனக்குள் இருக்கும் நான் என்பதைப் போன்றது. இது மிகவும் வியப்பானது.  இருப்பினும் நாம் இதனுடன் அடையாளம் காணலாம் ஏனெனில் இது ஒன்றே எப்போதும் குற்றம் சொல்கிறது, “நான் முன்னேற வேண்டும்; நான் இதைச் செய்ய வேண்டும்.” இது ஒன்றே எப்போதும் கவலைக்குரியது. நம் தலைக்குள் இருக்கும் இந்த குரல் சிறப்பானது, தனித்துவமானது மற்றும் எல்லோரிடமிருந்தும் சுயாதீனமாக இருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது, ஏனென்றால் நாம் கண்களை மூடிக்கொண்டால், “என்னை” தவிர வேறு எதுவும் இல்லை என்று கருதுகிறோம்.

இது மிகவும் குழப்பமான வழியிலான சிந்தனை ஏனெனில், வெளிப்படையாக, யாருமின்றி நாம் சுயாதீனமாக இருக்க முடியாது; உண்மையில் யாரைப் பற்றியும் சிறப்பாக எதுவும் இல்லை. நாம் அனைவருமே சமம். உறைந்திருக்கும் அன்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை கற்பனை செய்யுங்கள்: ஒன்றை விட மற்றொன்றை எது சிறப்பாக்குகிறது? உண்மையில் அவை அனைத்தும் சமமே. நாமும் அப்படியே. பென்குயின்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள்!

எப்படியிருந்தாலும், இந்த சிந்தனையின் அடிப்படையில், “நான் எல்லோரிடமிருந்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தவனாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன்,” நமக்கு நம்முடைய சொந்த வழி இருக்க வேண்டும், அவ்வாறு கிடைக்காவிட்டால் நாம் கோபமடைகிறோம்.

அடிப்படையில் நம் மனம் மற்றும் உடலின் வன்பொருள் இந்த குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு உகந்ததாகும். இது வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் நாம் இந்த உலகை நம் தலையின் முன்னால் இருக்கும் இரண்டு துளைகளின் வழியாகவே முக்கியமாக அனுபவிக்கிறோம். எனக்கு பின்னால் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. நேரே என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பார்க்க முடிகிறது; முன்னர் என்ன வந்தது அல்லது பிறகு என்ன வரும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இது எல்லைகளுக்குட்பட்டது. அதன் பின்னர் நமக்கு முதுமை வந்துவிடுகிறது கேட்கவும் முடிவதில்லை. யாரோ எதையோ சொல்கிறார் நமக்கு சரியாக கேட்கவில்லையென்றால், அவர்கள் ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு கோபமடைகிறோம். நீங்கள் இதைப்பற்றி யோசித்தால், மிகவும் பரிதாபகரமாக இருக்கும்.

இந்த பரவலான நம்முடைய பிரச்னைகளாலும், நீடித்திருக்கச் செய்யும் இந்த குழப்பங்களாலும் நாம் மீண்டும் மீண்டும் இதே வகையான உடல் மற்றும் மனதுடன் மறுபிறப்பு எடுக்கிறோம். இந்த குழப்பத்தின் அடிப்படையில் நாம் அழிவுகரமாக செயல்படுகிறோம் அல்லது சாதாரண ஆக்கப்பூர்வ வழியில் செயல்படுகிறோம், இதுவே நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியின்மை மற்றும் சாதாரண மகிழ்ச்சியை உருவாக்குகிறது.

நாம் மேலும் ஆழமாக சென்றால், இது மிக சிக்கலாகிவிடும்  இப்போதைக்கு அப்படி செல்வதற்கான தேவையில்லை, ஆனால் அந்த குழப்பமே கட்டுப்பாடில்லாமல் நிகழும் மறுபிறப்பிற்கு வழிவகுக்கிறது. இதுவே நம்முடைய உண்மையான பிரச்னைகளுக்கான உண்மையான காரணம். இந்த குழப்பம், அல்லது விழிப்புணர்வின்மை, அவ்வப்போது “அறிவீனம்” என்றும் மொழியாக்கப்படுகிறது. இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றே நான் பரிந்துரைப்பேன், ஏனெனில் இது நாம் முட்டாள் என்று உணர்த்துகிறது; ஆனால் உண்மையில் இதுவல்ல பிரச்னை, நாம் விரும்பும் அர்த்தம் இதுவல்ல. விழிப்புணர்வின்மை உணர்த்துவது என்னவென்றால் நாம் யார் என்பது நமக்கு தெரியாது அல்லது நிகழ்வுகள் எப்படி நிகழ்கின்றன எனத் தெரியாது. நாம் இவ்வாறு விழிப்புணர்வின்றி இருக்கிறோம், அதாவது நாம் தான் மிக முக்கியமான நபர் – இந்த அண்டத்தின் மையம்- என்று நினைக்கிறோம் யதார்த்தத்தோடு இது முற்றிலும் முரண்படுகிறது. யதார்த்தம் என்னவெனில் நாம் அனைவரும் இங்கு ஒன்றாகவே இருக்கிறோம். இதன் அர்த்தம் நாம் முட்டாள் என்பதல்ல ஆனால் நம்முடைய உடல் மற்றும் மனம் இவ்வாறு நம்மை சிந்திக்கச் செய்கிறது.

இதைத் தான் நாம் “மேன்மையான உண்மைகள்” என்று அழைக்கிறோம். யதார்த்தத்தை பார்ப்பவர்களால் மட்டுமே எல்லோரும் பார்ப்பதை விட வித்தியாசமான பாதையை காண முடியும். நம்முடைய குழப்பங்களும் முன்னிறுத்தலும் யதார்த்தத்தோடு ஒத்துப் போவதாக நாம் உண்மையில் நம்புகிறோம். அவை உண்மை என்று நாம் நம்புகிறோம். உண்மையில் நாம் அதைப்பற்றி யோசித்திருக்கக் கூட மாட்டோம், ஏனெனில் நம்முடைய உள்ளுணர்வானது, “நான் தான் முக்கியமானவர், எனக்கென தனி வழி இருக்கிறது, எல்லோரும் என்னை நேசிக்க வேண்டும்.” அல்லது சிலர் “எல்லோரும் என்னை வெறுப்பார்கள், நான் நல்லவனில்லை” என்று நேரெதிராக நம்புவார்கள். இது நாணயத்தின் இருபக்கத்தைப் போன்றது தான். இது தான் உண்மையான காரணம். 

மூன்றாவது மேன்மையான உண்மை

மூன்றாவது உண்மையானது நாம் சொல்லும் உண்மையான நிறுத்தலே ஆகும். வழக்கமாக இது சரியான “இடை நிறுத்தம்” என்று மொழியாக்கப்படுகிறது மேலும் இது குறிக்கும் உண்மையானது குழப்பத்தை தடுப்பதும் அதில் இருந்து விடுபடுவதும் சாத்தியமே, எனவே அது மீண்டும் நிகழாது. உண்மையான காரணத்தோடு, நாம் குழப்பத்தில் இருந்து விடுபட முடிந்தால், அதன் பின்னர் நம்மால் நம்முடைய உண்மையான பிரச்னைகளில் இருந்தும், ஏற்ற இறக்கங்கள் மற்றும் அடிப்படையில் நாம் கொண்டிருக்கும் கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்பு உள்ளிட்டவற்றிலும் விடுபட முடியும். நாம் இதைச் செய்தால் நம்மால் “விடுதலை” எனும் லாபத்தை பெற முடியும். கட்டுப்பாடின்றி நிகழும் மறுபிறப்புகளுக்கு “சம்சாரா” என்ற வார்த்தையையும், விடுதலைக்கு “நிர்வானா” என்ற வார்த்தையையும் சமஸ்கிருதத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன். 

புத்தர் காலத்தில், சம்சாரத்தில் இருந்து விடுதலை பெறுவதைப் பற்றி பேசும் இதர இந்திய அமைப்புகளும் இருந்தன. இந்தியாவில் இது பொதுவான கருத்து. எனினும் இந்த இதர அமைப்புகள் ஆழமாகச் சென்று உண்மையான தாக்கத்தை அடையாளம் காணவில்லை என்பதை புத்தர் அறிந்தார். கட்டுப்பாடில்லாத தொடர்ச்சியான இந்த சிக்கல்களிலிருந்து நீங்கள் ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளலாம், உதாரணமாக, நீங்கள் சொர்க்கத்தில் பிறந்திருப்பீர்கள், உங்கள் மனம் ஒரு யுகத்திற்கு வெறுமையாக இருக்கும். ஆனால், எப்படியாயினும் அது ஒரு முடிவுக்கு வரும். இது போன்று இதர அமைப்புகளில் உண்மையான விடுதலை இல்லை.

புத்தர் உண்மையான நிறுத்தம் பற்றி கற்பித்தார், அதனை உணர்வது முக்கியம் மேலும் மீண்டும் ஏற்படாதவாறு இந்த குழப்பத்தில் இருந்து உண்மையில் விடுபடுவது சாத்தியமே என்பதில் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் ஏன் அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறீர்கள்? நல்ல நோக்கத்திற்காக குழப்பத்தை நிறுத்துவதற்கு அக்கறை காட்டாவிடில், நீங்கள் அமைதியாக அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அதை சிறப்பாக்கலாம். பல்வேறு சிகிச்சைகள் இதையே அவர்களின் இறுதி இலக்காக வைத்துள்ளன : இப்படியே வாழப் பழகு அல்லது மருந்தை உட்கொள்!

நான்காவது மேன்மையான உண்மை

நான்காவது உண்மையானது “சரியான பாதை” என்று மொழியாக்கப்படுகிறது, இது மூன்றாவது உண்மையை உணர்ந்துகொள்ள நமக்கு உதவுகிறது. நாம் மேம்படுத்தினால் விடுதலைக்கு வித்திடும் வழியாக மாறும் என்பதை இந்த மன நிலை குறிப்பிடுகிறது. நாம் இதனை “கால்போன போக்கில் மனம்” என்று சொல்கிறோம், ஆனால் இதனை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பது கடினம்.

நம்முடைய மனம் நிச்சயமாக மோசமானவற்றையே முன்னிறுத்தும். ஆனால் இந்த மோசமான முன்னிறுத்தல்களுக்கும் ஒரு அளவு இருக்கிறது. இதன் உச்சம் மனச்சிதைவு நோய் அல்லது சித்தபிரமை, இந்த நிலையில் நாம் எப்போதுமே மற்றவர்களை நமக்கு எதிரானவர்கள் என்றே சிந்திப்போம்.  இதில் குறைந்த உச்சமும் இருக்கிறது, “இது தான் நான் இதுவரை பார்த்ததிலேயே அற்புதமான சாக்லேட் கேக் துண்டு; அதை நான் சாப்பிட்டால், அது உண்மையில் என்னை மகிழ்ச்சியாக்கும்” என்று நம்புவது. நானும் இதை அனுபவித்திருக்கிறேன், புக்கரெஸ்டுக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வியன்னாவில் விமானம் நிறுத்தப்பட்டது. “வியன்னாவின் ஆப்பிள் ஸ்ட்ரூடல் தான் உலகிலேயே சிறந்தது” என்று நினைத்து நான் ஒரு துண்டு கேக் வாங்கினேன், ஆனால் அது சிறப்பாக இல்லை. அது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய என்னுடைய முன்னிறுத்தல்கள் குப்பைத்தனமானது. ஆப்பிள் ஸ்ட்ரூடல் இருக்கிறது - அது என்னுடைய மனதில் நான் முன்னிறுத்தியதைப் போல அல்ல; ஆனால் ஒரு ஸ்ட்ரூடல் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது, ஒரு சிறந்த அற்புதமான விஷயம் என்னை உண்மையில் சந்தோஷப்படுத்தும் என்றால் என் மனதில் இருந்து முன்னிறுத்தப்பட்டது.

அதே போலத்தான் நான் இருக்கிறேன் நீங்களும் இருக்கிறீர்கள். நம்மால் உயிர்வாழ முடியாது என்பதை பௌத்தம் கூறவில்லை. யதார்த்தமாக இருப்பதற்கான வழியை நாங்கள் முன்நிறுத்துகிறோம் என்றே அது சொல்கிறது, அதற்காக உண்மையில் என்னவென்பதற்கு பொருந்தாது. காரியங்கள் அனைத்தும் தங்களுக்குள்ளாகவே சுயாதீனமாக நடக்கிறது என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்கிறோம், இருத்தலுக்கான சாத்தியமில்லாத வழி இது. காரியங்கள் அனைத்தும் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளில் இருந்து வருகிறது, மேலும் அவை எப்போதும் மாறும். எனினும் நாம் இதனை பார்ப்பதில்லை; நம் கண் முன்னால் என்ன நடக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறோம். உதாரணத்திற்கு, நாம் யாரையோ பார்க்கச் செல்கிறோம், அவர்களை பார்க்க முடியவில்லை. மற்றொரு நபர் பயங்கரமானவர், எப்போதும் நம்மை தாழ்த்தி பேசுபவர், இனி எப்போதும் நம்மை பிடிக்காது என்று நமக்குத் தோன்றுகிறது.

அவர்களின் வாழ்க்கை போக்குவரத்தில் சுயாதீனமாக இருப்பதாக நாம் நினைக்கிறோம் அல்லது அலுவலகத்தில் கூடுதல் பணி, அல்லது என்னவென்று யாருக்கு தெரியும். ஆனாலும் எல்லாமே காரணங்கள் மற்றும் நிபந்தனைகளில் இருந்தே தோன்றுகின்றன, தன்னுடைய சொந்த பக்கத்தில் இருந்து கொண்டு, எல்லாவற்றில் இருந்தும் சுதந்திரமாக இருந்து கொண்டு, அவர்கள் பயங்கரமானவர்கள் என்று கருதுவது சாத்தியமில்லாதது. நம்முடைய மனம் இன்னும் இந்த திட்டத்தை முன்னிறுத்தி அதிலேயே நின்றுவிடுவதால், கோபம் உண்டாகிறது, அதுவே அழிவுகரமான உணர்வு. அதன் பிறகு நாம் அடுத்தது அவர்களை பார்க்கும் போது அவர்களை வேறு விதமாக அணுகுகிறோம், தங்கள் தரப்பை விவரிக்க வாய்ப்பு கூட கொடுக்க வில்லை என்று கத்துகிறோம். இவை அனைத்திலும், நாம் மிகவும் பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறோம், இல்லையா?

ஆகவே, நாம் இருக்கிறோம், ஆனால் நாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ அவ்வாறே இருக்கிறோம் – மற்றவர்களிடம் இருந்து சிறப்பாக மற்றும் சுயாதீனமாக இருக்கிறோம் என்பது நாம் முழுமையாக முன்னிறுத்துபவை. அது ஒரு குப்பை. யதார்த்தத்தோடு எப்போதும் ஒத்துபோகாது. அதைத் தான் நாம் பௌத்தத்தில் “வெற்றிடம்” என்று அழைக்கிறோம், பெரும்பாலும் “வெறுமை” என்று மொழியாக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இந்த வார்த்தை “பூஜ்யம்” இதன் அர்த்தம் “ஒன்றுமில்லை” உண்மையாக இல்லாத ஒன்று.

நம்முடைய புதிய வாழ்க்கைத் துணை தேவதைக் கதைகளில் வருவது போல வெள்ளைக் குதிரையில் வரும் இளவரசன் அல்லது இளவரசி போல இருக்க வேண்டும் என்று கனவு காண்பது – நிச்சயமாக சாத்தியமற்றது. அவ்வாறு யாருமே இல்லை, ஆனால் நாம் எப்போதும் அப்படியானவர்களையே தேடுகிறோம். நம்முடைய கணிப்புகளுக்கு ஏற்க அந்த நபர் இல்லையென்றால், நாம் விரக்தியடைந்து மற்றொருவரை தேடுகிறோம், மற்றொருவரைத் தேடினாலும் அவரும் உங்கள் கணிப்புக்கு பொருத்தமற்றவராகவே இருப்பார்.

எனவே, இவை அனைத்தும் தேவையற்ற குப்பை, நம்முடைய கணிப்புகளுக்கு ஏற்ப நிஜத்தில் எதுவும் இல்லை என்று புரிந்து கொள்வதே மனதின் சரியான பாதை. உண்மையான காரணத்தை நாம் பார்த்தால், நம்முடைய கணிப்புகள் உண்மையில் எதையாவது நிஜம் என்று நம்புவதில் இருந்தே துன்பம் வருகிறது. சரியான பாதையானது அப்படியெதுவும் நிஜத்தில் நடக்காது என்பதை ஆழமாக புரிந்து கொள்ளும்.  நம்முடைய கற்பனை மற்றும் யதார்த்தம் பற்றிய கணிப்புகள் பரஸ்பரம் பிரத்யேகமானவை. நான் மீண்டும் சொல்கிறேன் – குழப்பத்திற்கான முக்கிய காரணம் கணிப்புகள் உண்மையில் எதையாவது நிகழ்த்தும் என நினைப்பது மற்றும் சரியான புரிதல் என்பது அவ்வாறு எது நடக்காது என்பதைக் காண்பதாகும். எளிமையாகச் சொன்னால், ஏதோ ஒன்று இருக்கிறதா அல்லது இல்லையா. அது ஆம் அல்லது இல்லை; இரண்டுமே சரிதான் என்று நாம் சிந்திக்க முடியாது.  

இப்போது நமக்கு எது பலம் என்று நாம் ஆராயலாம்: “ஆம்” அல்லது “இல்லை”? தர்க்க ரீதியில் நாம் ஆராய்ந்தால், வெளிப்படையாக “இல்லை”, “ஆம்” என்றால் அதை தர்க்க ரீதியானதாக இருக்காது. நான் கண்களை மூடிக்கொண்டால் எல்லாமே இயங்குவதை நிறுத்திவிடுமா? நிச்சயமாக இல்லை. நான் இந்த உலகிலேயே மிக முக்கியமான நபர், எனக்கென தனி வழியை எப்போதுமே கொண்டிருக்க வேண்டும் என்பது சரியா? இல்லை, அது அபத்தமானது. நாம் அதிகமாக ஆராய்ந்தால், நமக்குள் இருக்கும் அந்த சிறிய “நான்” என்பதைப் பற்றி நம் தலைக்குள் அதிக கேள்விகள் எழும். மூளையை ஆராயத் தொடங்கினால், மூளை தான், “நான்” அது நம் தலைக்குள் பேசி முடிவுகளை எடுக்கிறதா? உண்மையில் என்ன நடக்கிறது? ஆய்வுகளின்படி நாம் அழைக்கும் “நான்” என்ற ஒன்றை எங்கேயும் கண்டறியமுடியவில்லை. நிச்சயமாக, நான் செயல்படுகிறேன், என்னால் செய்ய முடியும், நான் பேசுகிறேன். அதை நாம் மறுக்கவில்லை. நாங்கள் மறுப்பது என்னவென்றால் “நான்” என்ற ஒன்றிற்காக, தனக்கென ஒரு வழி இருக்க வேண்டும் என திடமாக இருப்பது, ஏனெனில் தர்க்கம் ஆதரிக்கும் அப்படி ஒன்று இல்லை. காலணம் மற்றும் ஆய்வுகளின்படி, அப்படி ஒன்று இல்லை என்பதை நம்மால் காண முடியும் எனவே நம்முடைய குழப்பமே உண்மையில் எதையுமே ஆதரிக்காத ஏதோ ஒன்று இருப்பதாக ஒத்திருக்கச் செய்கிறது.

நாம் சத்தியமில்லாத வழியில் இருக்கிறோம் என்று சிந்திப்பதன் முடிவு என்ன? நம்மை நாமே சோகமாக்குகிறோம்! அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சிந்திப்பதன் முடிவு என்ன? நம்மை நாமே இது போன்ற எல்லா சிக்கல்களில் இருந்தும் விடுவிக்கலாம். அப்படி எதுவுமே இல்லை, “அது ஒரு குப்பை,” என்று நாம் சிந்தித்தால், அதே சமயம் அவ்வாறு யோசிப்பது சாத்தியமில்லாதது ஏனெனில் அது உண்மையை ஒத்தது. சரியான புரிதல் சக்தியை கூட்டி தவறான புரிதலை மாற்றிவிடும். எல்லா நேரமும் சரியான புரிதலில் நம்மால் கவனம் செலுத்த முடிந்தால், குழப்பம் என்பதே எப்போதும் மீண்டும் எழாது.

அதே போன்று யதார்த்தம் பற்றிய சரியான புரிதல் தவறான புரிதலை மாற்றியமைக்கும் மேலும் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுதலும், மறுபிறப்பும் தனித்துவமானதல்ல என்கிறது புத்தரின் போதனை. இதர இந்திய அமைப்புகளும் இதையே உறுதியாகக் கூறுகின்றன. இதில் தனித்துவம் என்னவென்றால் குறிப்பிடும்படியான புரிதல் என்பது யதார்த்தம் குறித்த நுட்பமான அளவிலான குழப்பத்தை எப்போதைக்கும் சிதறச்செய்ய முடியும். சிறந்த ஒருமுகப்படுத்துலை தியானத்தின் மூலம் அடையலாம், எனவே நம்முடைய மனதில் இந்த சரியான புரிதலை வேரூன்றவும், குழப்பம் குறித்த சரியான நிறுத்தத்தை அடையவும், இந்திய பாரம்பரியத்தில் சாதாரணமாக உள்ள வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்று புத்தர் பகிர்ந்திருக்கிறார்.

அவற்றின் மூலம் நாம் உண்மையான தாக்கத்தில் இருந்து சரியான நிறுத்தலை அடைய முடியும், ஆகவே துன்பத்தில் இருந்தும் சரியான நிறுத்தலை அடையலாம்.

நம்முடைய மனம் எப்போதும் யதார்த்தம் குறித்த சரியான புரிதலுடன் எப்போதும் வலிமையாக இருப்பதையும், இந்த எல்லா அழிவுகரமான உணர்வுகளையும் வெட்டி எறியவும் என்ன தேவையென்றால், அதுவே உந்துவித்தல். அங்கு தான் அன்பு, இரக்கம் உள்ளிட்டவை வரும். ஏனெனில் நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர் அதே போன்று ஒவ்வொருவருமே மகிழ்ச்சியை விரும்புகிறோம், முழுமையாக உதவுவதற்கு நாம் நம்முடைய குழப்பத்தில் இருந்து விடுபடுவது அவசியம்.

நான்கு மேன்மையான உண்மைகளுக்கு இதுவே அடிப்படையான முன்வைப்பு. இதனை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள, பௌத்தத்தின் மனம் மற்றும் கர்மாவின் புரிதல் பற்றி மேலும் கற்க வேண்டும்.

சுருக்கம்

மற்ற பெரிய மதங்கள் மற்றும் தத்துவார்ந்த அமைப்புகளுடன் பௌத்தம் பல விஷயங்களை பொதுவாக பகிர்ந்தாலும், நான்கு மேன்மையான உண்மைகள், புத்தரின் முதல் போதனையான இவை நாம் வாழ்தல், நாம் அனுபவிக்கும் துன்ம், மற்றும் நம்முடைய பிரச்னைகளை எப்படி வென்று வருவது போன்றவற்றின் தனித்துவமான வழியை முன்னெடுக்கிறது.

புத்தர் அவ்வபோது மருத்துவருக்கு ஒப்பானவராகிறார். மருத்துவர் நமக்கு உடல் சுகமில்லை என்பதை உறுதிபடுத்துவார், அதே போன்று புத்தரும் எங்கெங்கிலும் வாழ்பவர்கள் கணக்கில் அடங்கா துன்பத்தை அனுபவிப்பதை சுட்டிக்காட்டுகிறார். மருத்துவர் உடல் சுகமின்மைக்கான காரணத்தை ஆராய்வார், அதே போல புத்தரும் நாம் வாழ்தலுக்கான வழியைப் பற்றிய குழப்பத்திற்கான சரியான தாக்கத்தை குறிப்பிட்டு காட்டுகிறார். நமக்கு உடல் நிலை சரியாகுமா இல்லையா என்று மருத்துவர் கூறுகிறார் மேலும் அதற்கான மருந்துகளை பரிந்துரைக்கிறார். புத்தரும் சரியான நிறுத்தலை கற்பித்து அதில் இருந்து வெளியேற வழிகாட்டுகிறார். இறுதியில் அந்த மருந்தை எடுத்துக்கொள்வதா வேண்டாமா என்பது நம்முடைய கையில், அல்லது நம்முடைய துன்பத்தை நாமே வெல்ல முடியுமென்றால் அந்த வழியில் செல்லுங்கள்.

Top