பௌத்தர்களை பொருத்தவரையில், "தர்மம்" என்ற வார்த்தையானது புத்தரின் போதனைகளை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது, அந்த தர்மமானது நம்முடைய தற்போதைய குழப்பம் மற்றும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு பெறவும், மகிழ்ச்சி நிலை நோக்கி நகர உதவுகிறது. ஆங்கில வார்த்தை "மதம்" என்பது லத்தின் அர்த்தமான "ஒன்றுபடுதல்" என்பதில் இருந்து வந்ததைப் போல, தர்மம் என்ற வார்த்தையானது சமஸ்கிருதமான "தர்" இல் இருந்து பெறப்பட்டது, இதன் பொருள் இருக்கமாக பிடித்தல் அல்லது ஆதரித்தல் என்பதாகும். முக்கியமாக, நீண்ட காலமாக நாம் கட்டுப்படுத்த முடியாத துன்பங்களுக்கு ஆளாக வேண்டிய கீழ்நிலை, துரதிர்ஷ்டவசமான நிலைகளுக்கு நாம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதன் மூலம் தர்மம் நம்மை உறுதியாக ஆதரிக்கிறது.
What is dharma

புத்தரின் முதல் தர்ம போதனை

புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகயாவில் ஞானம் அடைந்த போது, முதலில் தர்மத்தைப் போதிக்கத் தயங்கினார், அது மிகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கலாம் அல்லது உலக இன்பங்களில் மகிழ்ந்திருக்கும் மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று பயந்தார். ஆரம்பகால நூல்களில், பிரபஞ்சத்தை படைத்த பிரம்மா, புத்தரின் முன் தோன்றி, ஞானத்தை அடையக்கூடிய சிலர் நிச்சயமாக இருப்பதால், உயிரினங்களுக்கு நன்மை பயக்கும் விதமாக தமக்கு தர்மத்தை கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று கூறுகிறது. இதனுடன், நான்கு மேன்மையான உண்மைகள் பற்றி புத்தர் தனது முதல் தர்ம போதனையை மான் பூங்காவில் வழங்கினார், இது முழு பௌத்த பாதையின் கட்டமைப்பை உருவாக்குகிறது மற்றும் இன்றும் உலகில் உள்ள அனைத்து புத்த மரபுகளுக்கும் அடித்தளமாக உள்ளது.

புத்தர் போதித்த முதல் உண்மையானது வாழ்க்கை எப்போதுமே திருப்தியில்லாதது.  எந்த நேரத்திலும் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த மகிழ்ச்சி நிலையற்றது மற்றும் தற்காலிகமானது. இது உலகளாவியது - நாம் அனைவரும் நம்முடைய வாழ்வில் இதனை அனுபவிக்கிறோம். நாம் எந்த மகிழ்ச்சிய கொண்டிருந்தாலும் அது நீடித்திருக்காது எப்போது வேண்டுமானால் அது மகிழ்ச்சியற்றதாக மாறலாம். இரண்டாவது உண்மையானது நம்முடைய மகிழ்ச்சியின்மையானது வெளியில் இருந்து வரவில்லை, மாறாக நாம் விரும்புவதைப் பெறுவதற்கான நமது சொந்த பற்றுதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தும் உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பற்றிய நமது அறியாமையில் இருந்தே வருகிறது. மூன்றாவது உண்மையானது, அனைத்து துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது சாத்தியம் என்று கூறுகிறது, மேலும் நான்காவது உண்மை ஒரு பாதையை கோடிட்டுக் காட்டுகிறது, அதை நாம் பின்பற்றினால், எல்லா பிரச்சனைகளில் இருந்தும் என்றென்றும் விடுதலையை அடைய முடியும்.

புத்தர் போதனைகளின் நோக்கம் துன்பத்தை விரட்டுதல்

புத்தர் பாலத்தில், அனைத்து தர்ம போதனைகளும் வாய்மொழியாக சொல்லப்பட்டு நினைவில் வைக்கப்பட்டிருந்தது. கையெழுத்துப் பிரதிகளாக ஒன்று சேர்க்கும் வரையில் இவ்வாறாகவே பல தலைமுறைகளுக்கு புத்தரின் போதனைகள் பரப்பட்டன. இன்று,  நூற்றுக்கும் மேற்பட்ட நூற்றுக்கணக்கான சூத்திரங்கள், புத்தரைப் பின்பற்றுபவர்களுக்கான விதிகள் கொண்ட நூல்கள் மற்றும் தத்துவ சொற்பொழிவுகள் என இவை ஒன்றாக திரிபிடகம் அல்லது மூன்று கூடைகள் என அழைக்கப்படுகின்றன. பாரம்பரியத்தை பொருத்தவரையில், மொத்தமாக புத்தர் 84,000 தர்ம போதனைகளை கொடுத்திருக்கிறார் என்று சில நேரங்களில் சொல்லப்படுகிறது, அவை 84,000 சிக்கலான உணர்வுகளை வென்றவர உதவுகிறது. எண்ணிக்கை தன்னிச்சையாக இருந்தாலும், எத்தனை பிரச்சனைகள், விரக்திகள் மற்றும் துன்பங்களின் வகைகளை நாம் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை எளிமையாகக் காட்டும் ஒரு வழியாகும், மேலும் அவை அனைத்தையும் எதிர்கொள்ள புத்தர் வழங்கிய பரந்த போதனைகள் இவை.

உண்மையில், புத்தரின் அனைத்து போதனைகளும் துன்பத்தை வென்றுவருவதைப் பற்றியதே ஆகும். புத்தர் மனோதத்துவ ஊகங்களில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் சுயம் மற்றும் பிரபஞ்சம் தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் அளவிற்கு சென்றார், ஏனெனில் இந்த பிரச்சினைகளை சிந்திப்பது நம்மை விடுதலைக்கு நெருக்கமாகக் கொடு செல்லாது. புத்தர் மனிதனின் நிலையைக் கண்டார், நாம் அனைவரும் துன்பப்படுகிறோம் என்று பார்த்து அதன்று தீர்வு கண்டார். இதனாலேயே பெரும்பாலும் புத்தர் மருத்துவர் என்றும்  தர்ம போதனைகள் மருந்து என்றும் கருதப்படுகிறது. இந்த தர்ம மருந்தானது நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் ஒரே முறையில் எல்லாவற்றையும் தீர்க்க உதவுகிறது.

இருப்பினும் அடைக்கலத்திற்கு மூன்று ஆபரணங்கள் இருக்கின்றன - புத்தர், தர்மம் மற்றும் சங்கம்- அதில் தர்மம் என்பதே உண்மையான அடைக்கலம். புத்தர்கள் தர்மத்தை போதித்தாலும், ஒரு சொடுக்கு போட்டதும் நம்முடைய பிரச்னைகளை தீர்க்கும் அதிசயத்தை செய்ய முடியாது. மேலும் சங்கம் நமக்கு அதரவையும் ஊக்கத்தையும் கொடுத்தாலும், அவை நாம் தர்மத்தை பயிற்சிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. உண்மையில் தர்மத்தை நாமாக படித்து அதில் ஈடுபட வேண்டும்: அதுவே துன்பத்தில் இருந்து வெளியேவதற்கான ஒரே வழியாகும். இதன் விளைவு, நம்மை நாமே சொந்தமான காப்பாற்றிக்கொள்கிறோம்.

தர்மத்தின் தகுதிகள்

தர்மத்திற்கு எண்ணற்ற குணங்கள் உள்ளன, ஆனால் முக்கிய குணங்கள் என்று நாம் இவற்றைக் கூறலாம்:

  1. தர்மம் என்பது பலவிதமான மற்றும் மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்றது. தாய்லாந்து, திபெத், இலங்கை, ஜப்பான் மற்றும் பல இடங்களில் பௌத்தம் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட வடிவங்களைப் பெற்றிருந்தாலும், மரபுகள் அனைத்தும் முக்கிய பௌத்த போதனைகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் விடுதலையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  2. தர்மம் தர்க்கத்தின் அடிப்படையிலானது. அது நாம் நம்முடைய மனங்கள் மற்றும் நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் யதார்த்தமாக பார்க்க வேண்டும் என்று நம்மை கேட்கிறது.  கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கை தேவை, என்பது போன்ற பிடிவாதமானது அல்ல மாறாக எல்லாவற்றையும் தர்க்கத்துடன் கேள்வி கேட்கும்படி நம்மை தூண்டுகிறது. புனிதர் தலாய் லாமா முக்கிய பௌத்த அம்சங்களான ஒருநிலைப்படுத்துதல் மற்றும் மனம் போன்றவற்றை கண்டறிவதற்காக பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார், மேலும் ஒத்த கருத்துடைய பௌத்தர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் கூட பரஸ்பரம் கற்றுக் கொள்கிறார்கள்.
  3. தர்மம் என்பது ஒரே ஒரு பிரச்சனையை நோக்கியது மட்டும் அல்ல, எல்லா பிரச்சனைகளுக்குமான வேரை நோக்கமாகக் கொண்டது. நாள் தவறாமல் அன்றாடல் நாம் பொருத்து கொள்ள முடியாத தலைவலியை கொண்டிருந்தால், நாம் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். நிச்சயமாக, குறுகிய காலத்திற்கு அது உதவும், ஆனால் தலைவலி மீண்டும் வரும். நம்முடைய தலைவலிக்கு நிரந்தர தீர்வு காணும் மருந்து இருந்தால், நிச்சயமாக நாம் அதனை எடுத்துக்கொள்ளலாம். தர்மம் அதைப் போன்றதே, அது தலைவலிக்கு மட்டுமல்ல அனைத்து பிரச்னைகள் மற்றும் துன்பத்திற்கும் நிரந்தரமான நிவாரணத்தைத் தருகிறது.

சுருக்கம்

புத்தர் மிகத் திறன் வாய்ந்த மருத்துவரைப் போன்றவர் அவர் நம்முடைய துன்பங்களை கண்டறிந்து சாத்தியம் இருக்கும் சிறந்த மருந்தான தர்மத்தை நமக்கு தந்திருக்கிறார். ஆனால் மருந்தை எடுத்துக்கொள்கிறோமோ -அல்லது தர்ம பயிற்சிகளில் ஈடுபடுகிறோமா என்பது நம்மைப் பொருத்தது. அவ்வாறு பயிற்சிக்குமாறு யாரும் நம்மை வற்புறுத்த முடியாது, ஆனால் தர்மம் கொடுக்கும் பலன்கள் மற்றும் மனஅமைதியை உண்மையில் நாம் பார்த்துவிட்டால் மேலும் அது எப்படி நம்முடைய அனைத்து பிரச்னைகள், விரக்திகள் மற்றும் துன்பத்தை விலக்க உதவுகிறது என்பதைக் கண்டால், நாமும் மற்ற அனைவரும் கூட பயனடைவதற்காக நாம் மகிழ்ச்சியுடன் தர்மத்தை பயிற்சிப்போம்.

Top