"சங்கம்" என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமூகம்" என்று பொருள், மேலும் இது பிக்குகள் மற்றும் பிக்குனிகள் அல்லது துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் என அறியப்படும் புத்தரின் நியமிக்கப்பட்ட பின்பற்றாளர்களைக் குறிக்க முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது புத்த மதம் மேற்கத்திய நாடு முழுவதும் பரவி இருப்பதால், ஒட்டுமொத்த பௌத்த சமூகம் அல்லது ஒரு தர்ம மையத்தில் உள்ள சாதாரண பின்பற்றாளர்களின் சிறு குழுக்கள் கூட ஒரு சங்கத்தை உருவாக்குவதாகச்சொல்வது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
What is sangha 1

சங்கத்தின் தோற்றங்கள்

புத்தர் ஞானமடைந்த பின்னர், நான்கு மேன்மையான உண்மைகள் பற்றிய தன்னுடைய முதல் போதனையை பல ஆண்டுகளாக சந்நியாசம் பயின்ற தன்னுடைய முன்னாள் நண்பர்கள் ஐவருக்கு வழங்கினார் என்று தர்ம சக்கரத்தின் சூத்திரம் அல்லது தர்மசக்ரபிரவர்த்தனா கூறுகிறது. இந்த போதனை வழங்களின் போது, அந்த ஐந்து சந்நியாசிகளும் புத்தரின் சீடர்களாக மாறினர், அவர்களுள், கௌந்தேயன், விடுதலை பெற்ற அர்ஹத நிலையை அடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு, சுய வெற்றிடம் அல்லது சுயத்தில் சாத்தியமில்லாத வழியில் எப்படி இருக்க முடியாது என்று போதித்ததில் இருந்து, இதர சந்நியாசிகளும் அர்ஹதநிலையை அடைந்தனர். இந்த ஐந்து சீடர்களே சங்கத்தின் முதல் உறுப்பினர்கள் அல்லது முதல் புத்தத் துறவிகளாக மாறினர். 

அதன் பின்னர் புத்தர் தன்னுடைய எஞ்சிய காலத்தை மொத்தமாக சுமார் 45 ஆண்டுகள் தான் கண்டறிந்த தர்ம போதனைகளை பரப்புவதற்காக செயல்பட்டார், அவருடைய சீடர்களும் கூட வட இந்தியாவின் சமவெளிகளில் இருந்த கிராமங்கள் மற்றும் நகரங்கள் முழுவதும் சென்று புத்தரின் கருத்துகளை பரப்பினர். இதர மத ஆசிரியர்கள், ராஜாக்கள் மற்றும் ராணிக்கள், விவசாயிகள் மற்றும் இறைச்சி வெட்டுபவர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களில் இருந்து வந்த பல பின்பற்றாளர்களை புத்தர் மிக விரைவாக ஈர்த்தார்.  பெரும்பாலான சீடர்கள் உலக வாழ்க்கையைத் துறக்க விரும்பவில்லை என்றாலும், பாமர வாழ்க்கையை விட்டுவிட்டு சங்கத்தில் சேர விரும்புபவர்கள் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து பணி செய்தல், திருமணம் என்றிருந்த பாமர சீடர்கள், உணவு மற்றும் உடையுடன் சங்கத்தை ஆதரித்தனர்.

ஒரே நேரத்தில், பலரும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக புத்த மதத்தில் இணைந்தனர், அதனால் சீடர்களுக்கென விதிகள் வகுக்கப்பட வேண்டியது கட்டாயமானது அப்போது தான் இணக்கமான ஆன்மிக சமூகத்தை அவர்களால் உருவாக்க முடியும். சங்கத்திற்குள் நிகழும் விரும்பத்தகாத விளைவுகளுடன் கூடிய சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில், தேவைப்படும்போது மற்றும் சோதனை மற்றும் பிழைகள் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட்டன. புத்தரின் வாழ்க்கை முடிவில், துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு பல நூறு விதிகள் இருந்தன.

பெண்களை அர்ப்பணித்தல்

தொடக்கத்தில், புத்தர் ஆண்களை மட்டுமே பௌத்தர்களின் வரிசையில் அனுமதித்தார். துறவிகளின் நிறுவல் நடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தரின் அத்தை மஹாபிரஜபதி கௌதமி தன்னை ஒரு கன்னியாஸ்திரியாக நியமிக்கும்படி புத்தரின் வேண்டுகோள் விடுத்தார், ஆனால் புத்தர் அதனை மறுத்துவிட்டார். இருப்பினும், மஹாபிரஜபதி மனம் தளராமல், 500 பெண்களுடன் சேர்ந்து, தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து, புத்தரைப் பின்பற்ற முடிவு செய்தார்.

புத்தரிடம் மஹாபிரஜபதி மேலும் இரண்டு கோரிக்கைகளை விடுத்தார், ஒவ்வொரு முறையும் அவற்றை நியமிப்பதை புத்தர் மறுத்து வந்தார். நான்காவது முறை, புத்தரின் உறவினரான ஆனந்தா, ஆன்மிகப் பாதையில் சென்று ஞானம் பெற ஆண்களுக்கு நிகரான திறன் பெண்களுக்கு இருக்கிறதா என்று மஹாபிரஜாபதிக்கு ஆதரவாகப் பரிந்து பேசினார், அதற்கு புத்தர் உறுதியுடன் பதிலளித்தார். பெண்கள் கன்னியாஸ்திரிகளாக மாறுவது நல்லது என்று அதன் பின்னர் ஆனந்தா பரிந்துரைத்தார், புத்தர் ஒருபடி முன்னேறிச் சென்று பெண் சீடர்களை நியமனம் செய்ய அனுமதித்தார்.

வழக்கமான சங்கம் மற்றும் ஆர்ய சங்கம்

பொதுவாக, சங்கம் என்ற சொல், புத்தரின் போதனைகளைப் பின்பற்றும் கன்னியாஸ்திரிகள் மற்றும் துறவிகள், பிக்குகள் மற்றும் பிக்குனிகளின் இந்த இரண்டு குழுக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பிக்கு என்ற வார்த்தைக்கான உண்மையான பொருள் "யாசகன்",  இவ்வாறு அழைக்கப்படுவது ஏனெனில் நியமிக்கப்பட்ட இந்த சமூகத்தினர் பெரும்பாலான பொருட்களைத் துறந்து, உணவுக்காக மற்றவர்களைச் சார்ந்து இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைய வேண்டும். உணர்தல் பற்றிய விழிப்புணர்வின் நிலை எந்த நிலையில் இருந்தாலும், குறைந்தபட்சம் நான்கு முழுமையாக நியமிக்கப்பட்ட அல்லது புதிய துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகள், ஒரு சங்கத்தை அமைக்கத்  தேவை. இதனை வழக்கமான சங்கம் என்று அழைக்கிறோம். ஆரிய சங்கமும் உள்ளது, இது தனி நபர்களை குறிக்கும், நியமிக்கப்பட்டவர்களோ இல்லையோ, அவர்கள் உண்மையில் தர்ம பாதையின் சில உணர்தல்களை அடைந்திருப்பார்கள். 

வழக்கமான சங்கத்திற்கும் ஆரிய சங்கத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பது முக்கியம். பல சிறந்த சாதாரண துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இருக்கும்போது, நம்மைப் போலவே உணர்ச்சிவசப்படுபவர்களும் அவர்களுள் இருக்கலாம் - அவ்வாறு இருக்கம் போது நாம் ஏன் அவர்களிடம் தஞ்சம் அடைய வேண்டும் என்று நமக்குள் கேள்வி எழலாம். இவ்வாறு, மூன்று ஆபரணங்களில் ஒன்றாக, நாம் அடைக்கலம் புகும் உண்மையான ஆபரணமாக ஆரிய சங்கம் உள்ளது. நாம் சரியான திசையில் செல்ல உண்மையாக உதவக்கூடியவர்கள் அவர்களே.

சங்கத்தின் குணங்கள்

அப்படியானால், நம்மை நாமே வளர்த்துக் கொள்ள விரும்பும் எத்தகைய குணங்களை சங்கம் கொண்டுள்ளது?

  • போதிக்கும்போது, புத்தகங்களில் இருந்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்களோ அதையே மீண்டும் கற்றுத்தர மாட்டார்கள். அவர்கள் தங்களின் சொந்த உண்மையான அனுபவத்திலிருந்து பேசுகிறார்கள் - இது உண்மையில் ஊக்கமளிக்கிறது.
  • அவர்களின் ஒரே நோக்கம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும், மேலும் அவர்கள் பிரசங்கிப்பதை பயிற்சிக்கிறார்கள். புகைப்பிடிப்பவரே புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி கூறி நம்மைத் திட்டுவதைப் பற்றி சிந்தியுங்கள், அவர்களின் ஆலோசனையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்று நாம் நினைப்போம், இல்லையா? அந்த காரணத்திற்காகவே, தாங்கள் செய்யும் செயல்களில் சங்கத்தினர் எப்போதும் நேர்மையாக இருக்கிறார்கள், எனவே நாம் அவர்களை உண்மையிலேயே நம்பலாம்.
  • தீய சகவாசத்தினருடன் நேரத்தைச் செலவிடும்போது, அவர்களுடைய கெட்ட குணங்களை எந்த அளவிற்கு எடுத்துக்கொள்கிறோம் என்பதை நாமே பெரும்பாலும் உணர மாட்டோம். அதேபோல, நல்ல நண்பர்களுடன் பழகும் போது அதிகம் முயற்சி செய்யாமலேயே, விரைவில் நல்ல குணங்களைப் பெறுவோம். எனவே, நமது தர்மப் பழக்கத்தை மேம்படுத்துவதற்குச் சங்கம் நம்மீது நல்ல ஆதிக்கத்தை கொண்டுள்ளது.

சங்கத்தின் முக்கியத்துவம்

தன்னுடைய போதனைகளையும் நாம் பயிற்சிப்பதற்கு தங்மத்தையும் விட்டுவிட்டு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் மறைந்தார். ஆக இதுவே புத்த மதமாகும். ஆனால் நாம் நன்றாகப் பயிற்சி செய்ய, புத்தரின் போதனைகளை உண்மையில் கற்று, படித்து, பயிற்சி செய்து, அதன் சில இலக்குகளை அடைந்து, நமக்கு உதவவும் வழிகாட்டவும் நம்பகமான எடுத்துக்காட்டுகள் நமக்குத் தேவை. அப்படிப்பட்டவர்களின் சமூகமே சங்கம்.

இப்போதெல்லாம், நடிகர்கள், நடிகைகள், மாடல்கள், பாடகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களையே நாம் பெரும்பாலும் முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம். ஆனால் இந்த பிரபலங்களுக்கும் அவர்களின் சொந்த பிரச்சினைகள் உள்ளன, இல்லையா? அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில், அவர்கள் பெரும்பாலும் குழம்பி இருப்பதை நாம் அறிவோம்! அது மட்டுமல்லாமல், பிரபலங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் மீது நாம் வெறித்தனமாக மாறும்போது, அது பொதுவாக நம் நண்பர்களுடன் கிசுகிசுப்பதற்கும், பொருள் இணைப்புகளில் வழக்கத்தை விட அதிகமாக ஈர்க்கப்படுவதற்கும் மட்டுமே வழிவகுக்கிறது;  இந்த நடவடிக்கைகள் நமக்கோ அல்லது பிறருக்கோ எந்த உண்மையான நன்மையையும் மகிழ்ச்சியையும் தருவதில்லை. மறுபுறம், சங்கத்தினர் ஏற்கனவே தங்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டவர்கள் - அது சிறந்தது இல்லையா! - மேலும் எஞ்சி இருப்பவற்றை அகற்ற செயலாற்றுகிறார்கள். நாமும் நம்முடைய சொந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதில் அர்த்தம் கொடுக்காதா?

இன்று, நமது நவீன உலகில், புத்தரின் போதனைகள் ஒரு தலைமுறை விட்டு மற்றொரு தலைமுறைக்கு கடைப்பிடிக்கப்படும் விதமாக அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதற்கு சங்கத்தினருக்கு நன்றி செலுத்த வேண்டும். நமது உடனடி பிரச்சனைகளுக்கு பின்னால் இருப்பவற்றை பார்த்து, எல்லா துன்பங்களிலிருந்தும் நம்மை முழுமையாக வெளியேற்றும் ஒரு பாதை இருப்பதைக் காணவும் சங்கம் நம்மை ஊக்குவிக்கிறது. மேலும் அவை நம்மை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிலையிலும் நம்மை வழிநடத்துகின்றன, ஊக்குவிப்பதோடு, ஆதரிக்கவும் செய்கின்றன. இதனாலேயே சில சமயங்களில் சங்கம் இல்லாமல் பௌத்தம் இல்லை என்று கூறப்படுகிறது.

சுருக்கம்

வாழ்வில் நாம் எப்படி ஒரு நல்ல முன்மாதிரியை தேர்ந்தெடுப்பது? உண்மையான அடைதல்களுடன் இருக்கம் யாரோ ஒருவரை - சங்கத்தின் உண்மையான உறுப்பினரை நாம் பார்க்காவிட்டாலும், ஆர்ய சங்கத்திவ் இன்னும் நாம் தர்மத்தில் அதிக அனுபவம் கொண்டவர்களை பார்க்க முடியும் அதோடு நாம் அவர்களிடம் இருந்து உந்துதல்களையும் பெற முடியும். அவர்களின் உதாரணங்களை பார்த்து, அவர்களின் காலடிகளை நாமும் பின்பற்றுபவர்களாக மாற ஊக்குவிக்கப்படுகிறோம்.

வழக்கமான சங்கத்தின் பௌத்த துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் அர்ப்பணிப்பு மூலம் தர்மம் உலகம் முழுவதும் பரவ முடிந்தது. புத்தரை மருத்துவராகவும் தர்மத்தை மருந்தாகவும் ஒப்பிடுவது போல, சங்கம் செவிலியர்களைப் போன்றது, நம் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் என்றென்றும் விடுபட நாம் செயலாற்றும்போது, நம்மை ஊக்குவிக்கும் பாதையில் வழிநடத்துகின்றனர்.

Top