சரணாகதி என்றால் என்ன?

What ias refuge%20article

நாம் அனைவருமே வாழ்க்கைக்கான அர்த்ததை தேடிக்கொண்டிருக்கிறோம். சிலர் தங்களது பணியில் அதைத் தேடுகிறார்கள், வேறு சிலர் நவநாகரீகத்திலும், மற்றவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பயணித்தும் அதைக் காண்கிறார்கள்.  ஆனால் இறுதியில் பார்த்தால் வேலை பணி மூப்பில் முடியும், நவநாகரீகம் என்பது மாறிக்கொண்டே இருக்கும்; நிலையற்றது, கண்ணை மூடித் திறப்பதற்குள் சுற்றுலா முடிந்துவிடுகிறது. இவை எதுவுமே நிரந்தரமான திருப்தியையோ அல்லது மகிழ்ச்சியையோ தருவதில்லை. நவீன உலகில் பொருளீட்டு மற்றும் ஆன்மிகம் குறித்து தேர்வு செய்ய லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது- ஆனால், அவற்றும் நமது வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து ஏகப்பட்ட குழப்பம் இருக்கிறது.

பௌத்தத்தில், சாரணாகதி என்பது அர்த்தமுள்ள திசையில் வாழ்க்கையை திருப்பதுவதாகும். அப்பாதையானது நம்மை நாமே செம்மைபடுத்திக்கொண்டு குறைபாடுகளைக் கடந்து நமக்குள் இருக்கும் திறனை உணர்ந்து நமக்கும் பிறருக்கும் சிறந்த வகையில் உதவுவது. பெளத்த சரணாகதி என்பது பசி, மன அழுத்தத்திலிருந்து காக்கும் தற்காலிக அடைக்கலத்தைவிட மேம்பட்டது. வெளிப்புறத்தில் மாற்றம் செய்வதல்ல: இதற்கென தனி ஆடைகளோ அல்லது சிகையலங்காரத்தையோ மாற்ற வேண்டிய அவசியமில்லை. பௌத்தத்தில் சரணாகதி என்பது நமது மனநிலையை மாற்றுவதாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுதல் என்பதே இதன் அர்த்தம், மேலும் எது நமக்கு இப்போதும் எதிர்காலத்திலும் மகிழ்ச்சியைத் தரும் என்பதையும் உணர்தலாகும். சுருக்கமாகச் சொன்னால் பௌத்த சரணாகதி நம்மை துன்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

பௌத்தர்கள் பொதுவாகவே “சரணாகதி அடை” அல்லது “சரணமைடை” என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள், ஏனெனில் சரணாகதி என்பது உயிர்ப்புள்ள செயல்முறை. பௌத்த பாதையில் நம்மை நாமே எவ்வாறு பிணைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடிப்படை முதல் அடி இதுவே. ஆனால் நாம் ஏன் இதனைச் செய்கிறோம்? மனிதனின் இயற்கை குணாதிசயத்தை புரிந்து கொண்டால் – நாம் அனைவருமே மகிழ்ச்சி மற்றும் திருப்தியைத் தேடுகிறோம், யாரும் துன்பத்தை விரும்புவதில்லை – நமக்கு உதவும் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறோம். எனவே பௌத்தத்தில், சரணடைதலை நாம் மூன்று அணிகலன்களாக மாற்றுகிறோம்.

புத்தா, தர்மா, மற்றும் சங்கா என்பதே அந்த மூன்று அணிகலன்கள்.

நாங்கள் புத்தரிடம் சரணாகதியடைகிறோம், ஏனெனில் அவர் ஞானத்தின் குரு, அர்த்தமற்றவையில் இருந்து விடுபடுவதற்கான பாதையை மட்டுமல்ல, துன்பத்தில் இருந்தும் முழுவதும் வெளியேற அவர் வழிகாண்பிக்கிறார். மனது என்பது தூய்மையானது, இரக்கம் மற்றும் ஞானத்துடன் அது இருந்தால், என்ன குழப்பம் ற்றும் எதிர்மறை உணர்வுகள் இருந்தாலும் அவை திரும்ப வரவே முடியாத அளவிற்கு அதனை நிரந்தரமாக ஒழிக்க முடியும். தர்மா என்பது பௌத்த போதனைகளில் இதனை எப்படி அடைவது என்பதாகும், எனவே நாம் சரணாகதியடைந்தால், பல்வேறு பௌத்த முறைகளில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கையின் பிரச்னைகளை அணுகும் முறைகளை பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும். சங்கா என்பது துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பௌத்த பிரிவினர்கள்.  இவர்களில் பௌத்தபோதனைகளை உண்மையிலேயே பழகுபவர்கள் முன்மாதிரிகளாகத் திகழ்கின்றனர், தொடர்ந்து பௌத்த பாதையில் பயணிக்க அவர்கள் உந்துசக்தி பெறுகின்றனர்.

நமது உறுதி நிலையால், நம்மை நாம், நண்பர்கள் அல்லது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அர்த்தமல்ல. உண்மையில், நாங்கள் மூன்று அணிகலன்களில் சரணாகதியடையும் போது, எங்களுக்கான மட்டும் நல்வாழ்க்கை அமைத்துக்கொள்வதில்லை, நாங்கள் பிறரிடத்திலும் வெளிப்படையாக இருக்கிறோம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் எவ்வாறு பங்களிப்பாற்றலாம் என்பதையும் நாங்கள் பார்க்கத் தொடங்குகிறோம்

புத்தா, தர்மா, சங்காவில் சரணாகதி அடைந்தால், நாம் எங்கும்,எப்போதுமே குழப்பமாக உணர மாட்டோம். எப்போதும் ஆன்மிகத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்க மாட்டோம், எனினும் சில பொருள் ஆறுதல் மற்றும் உடைமைகளின் தேவைகள் நமக்கு இருக்கிறது, நாம் எப்போது அதை சார்ந்திருக்க முடியாது, அவை நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்கிறோம்.  பௌத்த கொள்கைகளுக்கு நாம் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பு நம்மை உண்மையில் அழுத்தத்தில் இருந்து விடுவித்து எது முக்கியமானதோ அதில் அதிக நேரம் செயலாற்ற வைக்கிறது: நமக்குள்ளேயே உணர்வுப்பூர்வமாக மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமாக உணர வைக்கிறது.  

 இதனால் தான் சரணாகதி என்பது, நடப்பிலும் உயிர்ப்புடன் இருக்கும் செயல்முறை. நாம் எப்போதும் அதற்காக ஏதேனும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நமது நம்பிக்கை இது, புத்தரும் ஒரு விதமான கடவுள் என்று அவர் பிரார்த்திப்பது போன்றதல்ல. நமது பௌத்த நண்பர்கள் நமக்காக செயலாற்றும் திறன் கொண்டவர்கள் என்பதும் அல்ல.  எனவே தான் உயர்நிலை சரணாகதியடைதல் என்றால் தர்மா எனும் பௌத்த போதனைகள். நமக்கு புத்தர் மீது உறுதியான நம்பிக்கை இருந்தாலும் கூட ஏராளமான விவேகம் மற்றும் இரக்கம் நிறைந்த பௌத்த நண்பர்கள் இருந்தாலும் தர்மாவின் போதனைகளை நாம் பின்பற்றாவிட்டால் சரணாகதியின் பலனை நம்மால் பெற முடியாது. பலன் தரும் செயல்களில் பங்கெடுக்க, நம் மனதைக் கட்டுப்படுத்த முக்கிய அறிவுரையான  பிறரைத் துன்புறுத்தக் கூடாது என்பதை பின்பற்றினால், நம்முடைய வாழ்க்கை அதிக அர்த்தமுள்ளதாகும். 

எனினும் பௌத்தத்தின் பாதையில் அதிகாரப்பூர்வமாக பயணிக்கத் தொடங்கும் முன்னர் சில சிறப்புச் சடங்குகள் இருக்கின்றன, உண்மையான பொறுப்புணர்வு என்பது மனதில் இருந்து வரவேண்டும். நமக்குள்ளாகவே செயல்படத் தொடங்கினால், உண்மையில் நாம் சரணாகதியை கையில் எடுத்திருக்கிறோம் என்று அர்த்தமாகும். 

Top