சரணாகதி: வாழ்வின் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பயணம்

27:27
சரணாகதி அடைதல் என்பது பௌத்த போதனைகள் மற்றும் பயிற்சிகளில் எல்லாவற்றிற்குமான அடிப்படையாகும். “பௌத்தைத் நோக்கிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான நுழைவுவாயில்” இது என அழைக்கப்படுகிறது. சரணாகதி அடைதல் என்பது நமக்குள் நாமே செயலாற்றுதல் என்பதை உணர்ந்தால், வாழ்வை அர்த்தமுள்ள பாதுகாப்பான திசையில் செலுத்துவதற்கான செயல்பாட்டு முறை இது என்பதை நம்மால் பின்னர் உணர முடியும். குழப்பம், சிக்கல் தரும் உணர்வுகள், வலுக்கட்டாயமான நடத்தை உள்ளிட்டவற்றில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள புத்தர் போதித்த வழிமுறைகளை பின்பற்றி நமக்கு நாமே செயலாற்றுவதன் மூலம் எல்லா நல்ல குணங்களையும் மேம்படுத்த முடியும். இதையே தான் அனைத்து புத்தர்களும் செய்தனர், உயர்நிலையில் உணர்ந்த குருக்களும் செய்கின்றனர், மேலும் அவர்களின் அடியை பின்பற்றி நாமும் செய்ய முயற்சிக்கிறோம்.

நமது வாழ்வில் பௌத்த நடைமுறையின் நோக்கம் குறித்த குழப்பத்தை நீக்குதல்

அன்றாட வாழ்வில் சரணாகதி அடைதல் பற்றி பேசுமாறு என்னைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் திபெத்துக்குச் சென்ற சிறந்த இந்திய குரு அதிஷாவின் உதாரணத்தை மனதில் கொண்டு வந்தது. இந்தியாவில் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பௌத்தம் வீழ்ச்சியடைந்த பின்னர் திபெத்தில் பௌத்தத்தைப் புதுப்பிக்க உதவிய சிறந்த குருக்களில் இவரும் ஒருவர். அந்த நேரத்தில் திபெத்தில் ஒரு தவறான புரிதல் இருந்தது, குறிப்பாக தந்திரம் மற்றும் இன்னும் சில மேம்பட்ட போதனைகள் பற்றி தவறான புரிதல் இருந்தது. உண்மையில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. உண்மையில், விஷயங்களை இன்னும் தெளிவாக விளக்கக்கூடிய எந்த ஆசிரியர்களும் இல்லை. மொழி பெயர்க்கப்பட்ட பல நூல்களும், பல பிரதிகளும் இருந்தபோதிலும், பலரால் படிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். அப்படியே அவர்கள் படித்தாலும் அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதற்கான விளக்கம் கண்டறிவது மிகக்கடினமாக இருந்தது.

இந்த நிலைமைக்கு உதவ, மேற்கு திபெத்திய அரசர்களில் ஒருவர் சிறந்த பௌத்த குருக்களை திபெத்திற்கு திரும்புமாறு அழைப்பு விடுக்க மிகவும் தைரியமான மாணவர்களை இந்தியாவிற்கு அனுப்பினார். அவர்கள் மொழிகளைக் கற்று, பருவநிலையை சமாளித்து நடந்தே சென்றனர். பலர் பிரயாணத்தின் போதோ அல்லது இந்தியாவிலேயோ மரணமடைந்தனர். எப்படியாயினும், அவர்கள் எல்லாவற்றையும் கடந்து சிறந்த குருவான அதிஷாவை இந்தியாவில் இருந்து திபெத்திற்கு திரும்ப அழைத்துச் சென்றனர். அவர் அங்கே இருந்த பல ஆண்டுகளாக சராணகதி மற்றும் கர்மா பற்றியே முதன்மையாக கற்பித்தார். உண்மையில், அவர் “சரணாகதி மற்றும் கர்மா லாமா” என்றே அறியப்பட்டார். அவருக்கு திபெத்தியர்கள் கொடுத்த பெயர் அது.

அதிஷாவின் உதாரணங்கள் தற்காலத்திற்கு பொருத்திப்போகின்றவை. தற்காலத்தில் கூட, பௌத்த குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன, அதன் நடைமுறைகள் அன்றாட வாழ்வில் என்ன அர்த்தத்தை கொடுக்கிறது என்ற குழப்பம் இருக்கிறது. மீண்டும் சொல்ல வேண்டுமானால், தந்திரம் மற்றம் மேம்படுத்தப்பட்ட இதர போதனைகள் குறித்து பல்வேறு தவறான புரிதல் இருக்கின்றன. அடிப்படை பௌத்த போதனைகளின் அடித்தளமேதுமின்றி மக்கள் சிறிதளவே தெரிந்து கொண்டு இந்த பயிற்சிகளில் இறங்கிவிடுகின்றனர். மாயாஜாலம் நிகழ்த்தும் சடங்குகளை செய்வதே பௌத்தத்தை பயிற்சிப்பதற்கான அர்த்தம் என்று அவர்கள் கற்பனை செய்துகொள்கின்றனர். சரணாகதியின் முக்கியத்துவத்தையும் பொருத்தமானதையும் அற்பமாக்குவதன் மூலமும், அது நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் வித்தியாசத்தினாலும், அவர்கள் அதன் மையப்புள்ளியை காண தவறவிட்டுவிடுகின்றனர்.  

நம்முடைய வாழ்வில் எத்தகைய சூழலில் இருந்தாலும் அது பொருட்டல்ல, பௌத்த பயிற்சியின் நோக்கமே நமக்கு நாமே செயலாற்றி, நம்மை சிறந்த மனிதராக மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சியாகும். ஒரு நாளைக்கு அறைமணி நேரமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறை நம்முடைய வேலை முடிந்த மிகவும் அசதியாக இருக்கும் போது சிறிது நேரம் செய்வது போன்ற ஒரு பொழுதுபோக்கோ அல்லது ஒரு விளையாட்டு போலவோ அல்ல இது. மாறாக, நாம் எப்போதும் செய்ய முயற்சிக்க வேண்டிய நடைமுறை – எப்போதும் நமக்குள்ளாகவே செயலாற்றுதல். இதன் அர்த்தம் நீங்கள் உங்களுடைய குறைபாடுகள் மற்றும் நல்ல குணங்கள் இரண்டையும் உணர்ந்து, பின்னர் குறைபாட்டை வலுவிழக்கவும், நல்ல குணங்களை வலுப்படுத்தவும் செய்தலாகும். இதன் நோக்கமே நம்முடைய எல்லா குறைபாடுகளில் இருந்து விலகி, முழு நல்ல குணங்களை உணர்தல். இது வெறுமனே நம்முடைய சொந்த பலனுக்காக மட்டுமல்ல, அதோடு நாம் இதன் மூலமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பலனையும் அடைய முடியும். பிறருக்கு உதவுவதிலும் இதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும், இதன் காரணமாக மற்றவர்களும் பலனடைவார்கள். பௌத்த போதனை என்பது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதே.  குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை பௌத்தம் தெளிவாகக் காட்டுகிறது, மேலும் சரணாகதி என்றால் நாம் அந்த முறைகளுக்குத் திரும்பி அவற்றை நம் வாழ்வில் பின்பற்றுகிறோம்.

சரணாகதி செயலற்றதல்ல

புத்தர்கள், தர்மம் மற்றும் சங்கம் ஆகிய மூன்று விலைமதிப்பற்ற ரத்தினங்களில் சரணாகதி என்பது அனைத்து பௌத்த போதனைகளுக்கும் மையமானது. உண்மையில் அடைக்கலம் என்பது நீங்கள் பௌத்தரா இல்லையா என்பதை பாகுபடுத்தும் எல்லைக் கோடாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தர்மத்தை நமக்குள்ளாகவே செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், நாம் அனைவரும் அடையக்கூடிய இலக்கையும் குறிக்கிறது; இந்த வழிமுறைகளை கற்பித்தவர்கள் மற்றும் அந்த இலக்கை முழுமையாக அடைந்தவர்கள் புத்தர்கள்; அதில் ஒரு பகுதியை எட்டியவர்கள் சங்கம் என அழைக்கப்படுகிறார்கள். “தர்மம்” என்ற வார்த்தையின் அர்த்தம் “தடுப்பு நடவடிக்கைகள்” - நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் பிரச்சினைகளை உருவாக்குவதைத் தடுக்க நாம் எடுக்கும் நடவடிக்கைகள். அவை நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சிகள்.

எதுவாயினும் உண்மையான சமஸ்கிருதம் “சரணாகதியை”, ஷரனா என மொழிபெயர்க்கிறது, இதன் அர்த்தம் “பாதுகாப்பு” , “அடைக்கலம்” என்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. நாம் இதனை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் தாத்பரியம் தர்மத்தின் அர்த்தத்தோடு பொருந்துகிறது. நமக்கு பாதுகாப்பை வழங்கும் சில வெளிப்புற மூலங்களுக்கு நாம் செயலற்ற முறையில் சரணடைய வேண்டும் என்பதல்ல. பௌத்த கருத்தாக்கத்தில், "சரணாகதி அடைவது" என்பது மிகவும் சுறுசுறுப்பானது; நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

எனது ஆசிரியர்கள் அடிக்கடி பயன்படுத்திய பின்வரும் எடுத்துக்காட்டை கருத்தில் வையுங்கள். மழை பெய்கிறது, அருகில் ஒரு குகை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். “நான் இந்த குகையில் தஞ்சம் அடைகிறேன்; நான் குகைக்குச் சென்று தங்கப் போகிறேன்” என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருக்கிறோம், அதற்குப் பின்னர் மழையில் வெளியே நின்று இதையே தொடர்ந்து கூறினார், அது உதவப் போவதில்லை. நாம் உண்மையில் குகைக்குள் செல்ல வேண்டும். அதே போலத்தான், நாம் வெறுமனே “புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தில் சரணாகதியடையப்போகிறேன் அவர்களிடம் புகலிடம் வேண்டி செல்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அந்த திசையில் உண்மையில் செல்வதில்லை அதனை நம் வாழ்வில் பொருத்துவதும் இல்லை, இதனால் அது உதவப்போவதும் இல்லை. அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து செயல்படுத்த வேண்டும், இதனால் நம்மை நாமே பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கலாம். எனவே தான் நான் “பாதுகாப்பான திசை” மற்றும் நம்முடைய “வாழ்க்கைக்கு பாதுகாப்பான திசையை பொருத்துதல்” என்ற வார்த்தையை குறிப்பிடுகிறோம்.

குகைக்குள் இருப்பது போன்ற எண்ணத்தைத் தொடர்வதென்பது, வெறுமனே குகைக்குள் சென்று அங்கு நின்று கொண்டு இருப்பது மட்டும் போதாது, மேலும் அங்கே நின்று கொண்டிருப்பதனாலேயே நம்முடைய வாழ்க்கையின் எல்லா பிரச்னைகளில் இருந்தும் காப்பாற்றப்படுவோம் என்று நம்புகிறோம், ஆனால் நாம் நனைவதில் இருந்து கூட காப்பாற்ற முடியாது. இதன் சாரம்சம் என்னவென்றால், புத்தர், தர்மம் மற்றும் சங்கம் குறிக்கும் இலட்சியத்தை அணுக முயற்சிக்க நாம் தொடர்ந்து நமக்குள்ளாகவே செயலாற்ற வேண்டும். புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் வருவதற்கு இது போதுமானது என்று நாம் நினைத்தால், இதனை ஒரு தனிப்பட்ட ரட்சகரான கிறிஸ்தவ எண்ணத்தோடு கலப்பதென்பது மிகவும் எளிமையானது, புத்தர் எப்படியாயினும் நம்மை காப்பாற்றப் போகிறார். இந்த விஷயத்தில் புத்தர் ஒரு கடவுள் போன்றவர், சங்கங்களில் இருப்பவர்கள் அவரை பின்பற்றும் புனிதர்களைப் போன்றவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பாலான மேற்கத்திய சமூகங்கள் கிறிஸ்தவ தாக்கங்களின் அடிப்படைகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிந்தனையுடன், எப்படியாவது ஏதோவொரு அதிசய சக்தி நம்மை அற்புதமாகக் காப்பாற்றப் போகிறது என்று பிரார்த்திக்கிறோம். பௌத்த வாக்கியங்களைப் பயன்படுத்துவதனால், நம்முடைய எல்லா பிரச்னைகள் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் அற்புதம் நிகழும்.

இது தான் நிலைமை என்றால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் திபெத்திய மொழியில் ஒரு பௌத்த பெயரைப் பெறுவது, சிவப்பு வண்ண சாரத்தை அணிதல், மந்திரத்தின் சில மாய வார்த்தைகளை ஜெபிப்பது, கடுமையாக வேண்டுவது என்று செய்தால் எப்படியாயினும் நாம் காப்பாற்றப்படுவோம். குறிப்பாக திபெத்தி மொழியில் நாம் ஒரு வார்த்தை கூட புரியாத பிரார்த்தனைகளையும் நடைமுறைகளையும் ஓதினால், அதற்கு இன்னும் பெரிய மாய சக்தி இருப்பதாக நாம் நினைக்கலாம். மிகச் சிறந்த லாமாவான சோங்சர் கியென்ட்ஸே ரின்போசே சமீபத்தில் நான் வசிக்கும் பெர்லினுக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஒரு ஆழமான கருத்தைச் சொன்னார். திபெத்தியர்கள் தமது நடைமுறைகள் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் பாராயணம் செய்ய வேண்டுமானால், திபெத்திய எழுத்துகளுடன் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தால், அவர்கள் சொல்லும் எதையும் பற்றி அவர்களுக்கு முற்றிலும் தெரியாது என்றால், திபெத்தியர்கள் அனைவரும் உண்மையில் பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று பலர் நம்புவது ஆச்சர்யமானது எனச் சொன்னார். இதைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். ஆனால், அவர் சொன்ன ஆழ்மான கருத்து குறித்து நாம் சிந்திக்க வேண்டுமா? இல்லையா? நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் ஒருவித மாயாஜால, விசித்திரமான தீர்வை வழங்குவதே சரணாகதி என்பது தவறு, அதன் அடிப்படையில் நாம் சரணாகதியை பார்க்க வேண்டியதில்லை. எந்தவொரு மனநிலையையும் சமாளிப்பது மிகவும் முக்கியம், ஒரு பெரிய சக்திக்கு முன்பு சரணடைதல் என்பது அல்ல நமது முன்னெடுப்பு.

உண்மையில் இங்கு ஒன்றி இருக்கும் சிக்கல்: “நான் என்னுடைய வாழ்க்கையோடு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” “என்னுடைய வாழ்க்கை எங்காவது போய்க்கொண்டிருக்கிறதா?” நம்முடைய வாழ்க்கை எங்கும் போகவில்லை என்ற நிலையைப் பலர் உணர்ந்திருக்கலாம்; அது ஒரு வட்டத்தை சுற்றியே போய்க் கொண்டிருக்கிறது. மறுபிறப்பு என்ற வட்டத்தைப் பற்றி நாம் ஆழமாக பேச வேண்டாம், ஆனால் அவை அனைத்தும், நம்முடைய வாழ்க்கை எங்கும் போவதில்லை என்று தோன்றுவதோடு, அர்த்தமற்றதாகவும் உணரவைக்கிறது. உண்மையில் நாம் ஏன் உயிரோடு இருக்கிறோம் இவ்வாறு உணர்வது மிகவும் மோசமான நிலையா? இது மகிழ்ச்சியான மனநிலையா? ஆகவே நம் வாழ்க்கைக்கான சில அர்த்தமுள்ள திசை தேவை, ஏதோ ஒரு நோக்கம் அல்லது குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும். இது நம் வாழ்வில் நமக்காகவே செய்ய வேண்டிய ஏதோ ஒன்று. இது ஒரு ஆக்கப்பூர்வமான செயல். நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தமுள்ள நோக்கம் அல்லது குறிக்கோளுடன் இருந்தால், நாம் என்ன செய்கிறோம் என்பதை எப்படியாவது அறிவோம். இது நம்மை இன்னும் கொஞ்சம் பத்திரமாகவும், சற்று பாதுகாப்பாகவும் உணர வைக்கிறது, இல்லையா?

வாழ்க்கையில் அர்த்தமுள்ள குறிக்கோளைக் கொண்டிருத்தல்

நம் வாழ்வில் என்ன மாதிரியான குறிக்கோளை வைக்க முடியும்? வழக்கமாக நாம் தற்போது இருக்கும் திருப்தியற்ற சூழ்நிலையின் அடிப்படையில், அதிலிருந்து வெளியேற விரும்பும் வகையில் அந்த குறிக்கோளை வரையறுக்கிறோம். அடிப்படையில், அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள் என்றே நம்மால் சொல்ல முடியும், யாருமே துன்பத்தை அனுபவிக்க விரும்பவில்லை. இது பௌத்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒருவகை உரைகோள், அதில் சில உயிரியல் உண்மையும் இருக்கிறது. நாம் வலியை தவிர்க்க விரும்புகிறோம். நாம் துன்பத்தை தவிர்க்க விரும்புகிறோம். நாம் கஷ்டப்படுவதை தவிர்க்க விரும்புகிறோம். பூச்சிகள் மற்றும் புழுக்களும் கூட இதையே விரும்புகின்றன, இல்லையா? நம்முடைய இலக்கும் அது தான்.

இங்கு எழும் கேள்வியே எவ்வளவு அளவிலான துன்பம் அல்லது அதிருப்தியை நாம் காண்கிறோம் என்பதே? நாம் கொண்டிருக்கும் இலக்கானது நம்முடைய பிரச்னைகளை பராமரிப்பதற்கான நோக்கமாக மட்டும் இல்லாமல், நாம் கொண்டிருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் கூட தீர்வைத் தருமா? உதாரணத்திற்கு, நம்முடைய பிரச்னையே பொருளாதாரத்தில் நாம் ஏழையாக இருப்பதால் அனுபவிக்கும் கஷ்டம், எனவே நம்முடைய இலக்கானது ஒரு நல்ல பணியை தேடிக்கொண்டு நிறைய பணம் சம்பாதித்தல். அது நல்ல பணியாக இல்லாவிட்டால், சிறந்த குற்றவாளியாக மாறிக் கூட விரைவிலேயே பணக்காரராகலாம்.

எப்படி என்பது விஷயமல்ல, எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். ஆனால் நிறைய பணம் வைத்திருப்பவர்களை விசாரித்தால், அவர்களிடம் உண்மையாக பேசினால், அவர்கள் தங்களின் வாழ்க்கை பற்றி நேர்மையாகச் சொல்வார்கள், அந்த மக்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அவர்களிடம் எப்போதும் போதுமான பணம் இல்லை. அவர்களிடம் எத்தனை கோடிகள் இருக்கிறது என்பது பெரிதல்ல, அவர்கள் எப்போதுமே அதைவிட அதிகமாக விரும்புகிறார். அவர்கள் எப்போதும் திருப்தியடைவதில்லை.

நான் மிக சுவாரஸ்யமான ஒன்றை கண்டேன். ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம் நூறு கோடி டாலர் இருந்தது, ஆனால் உலகின் நிகழ்கால பொருளாதார நெருக்கடியால், தற்போது நூறு கோடி டாலரில் பாதியே இருக்கிறது. அவர்கள் எப்போதுமே நன்கொடை கொடுத்ததில்லை அல்லது கொடைப்பண்புள்ள பணிகள் போன்ற எதிலுமே பங்கேற்றதில்லை, ஏனெனில் அவர்களிடம் தற்போது ஐம்பது கோடி டாலர் மட்டுமே இருக்கிறது, இதனால் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்கிறார்கள். தங்களுடைய செல்வத்தை யாருடனும் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவர்கள் அந்தப் பணத்தை சேமித்து, அதை எப்படியாவது நூறு கோடியாக்கிவிட என நினைக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பங்குச்சந்தை அறிக்கைகள் பார்த்துக்கொண்டு, தாங்கள் வைத்திருக்கும் பணத்தில் மேலும் சிலவற்றை இழக்க நேரிடலாம் என்று அன்றாடம் கவலைப்படுகிறார்கள்.

அப்படி கவலைப்படுபவர்கள் தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்தலாம் மற்றும் இதர பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தலாம், ஏனெனில் அவர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை திருடப்படலாம் அல்லது அவர்களின் குழந்தைகளை உள்ளூர் மக்கள் கடத்திவிடுவார்களோ என அஞ்சுகிறார்கள். லத்தின் அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களிடம் இது பொதுவான விஷயம். இதனுடன், கூடுதலாக, மக்கள் தங்கள் பணத்தைப் பெற முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அவர்களுடன் நட்பாக இருப்பதாக அவர்கள் ஒருபோதும் உணரவில்லை. தங்களுக்கு நல்லவர்களாக யாராவது இருந்தால் அவர்கள் தங்களுக்குப் பிறகு இருக்கும் பணத்திற்காகத்தான் பழகுகிறார்கள் என்று அவர்கள் எப்போதும் சந்தேகிக்கிறார்கள். வெளிப்படையாக, அவர்கள் ஏழைகளாக இருப்பதில் சிக்கல் இல்லை என்றாலும், நிச்சயமாக நிறைய பணம் இருப்பதால் பிற பிரச்சினைகள் உள்ளன.

நிலையற்ற லௌகீக இலக்குகள்

பணத்திற்கு அப்பால் பல்வேறு அம்சங்கள் “லௌகீக இலக்குகளாக” பௌத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. “லௌகீகம்”, என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எதிர்மறை அர்த்தத்தை கொண்டுள்ளது மற்றும் கிட்டதட்ட தீர்வாகத் தோன்றலாம். அது விஷயமல்ல. என்னுடைய ஆசிரியர் செர்காங் ரின்போச், திபெத்திய வார்த்தையின் இரண்டு எழுத்துகள் “லௌகீகம்” – ஜிக்-டென் – உண்மையான அர்த்தத்தை கொடுக்கும் என்று விவரித்தார்.    

அவை ஒரு அடிப்படையுடன் எதையாவது குறிக்கின்றன (டென்) அது வீழ்ச்சியடையும் (ஜிக்). நொறுங்கிப் போகும் இலக்கை நாம் இலக்காகக் கொண்டிருந்தால், அது நமக்கு நீடித்த மகிழ்ச்சியைத் தராது. உறுதியான அடித்தளம் இல்லாததால், இது இன்னும் சிக்கல்களைக் கொண்டுவரப் போகிறது.

உதாரணத்திற்கு, வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோள் ஒரு அருமையான குடும்பத்தைக் கொண்டிருப்பது, குழந்தைகளை வளர்ப்பது, அவர்கள் நம் வயதான காலத்தில் நம்மைக் கவனித்துக்கொள்வார்கள் என்று கருதி, நாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்போம் என்று எண்ணுகிறோம். சரி, அது எப்போதுமே மிகச் சிறப்பாக செயல்படாது, இல்லையா? மற்றொரு உதாரணம் பிரபலமாக இருக்க பாடுபடுவது. நாம் அதிகளவில் பிரபலமடைந்தால், அதிகமான மக்கள் நம்மைத் தொந்தரவு செய்கிறார்கள், நம்முடைய நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஒருவித மாறுவேடம் அணியாமல் வெளியில் கூட செல்ல முடியாத திரைப்பட நட்சத்திரங்களை நாம் பார்க்கிறோம், ஏனென்றால் மக்கள் அவர்களைப் பார்க்கத் திரள்கிறார்கள், அவர்களின் ஆடைகளில் சிறு துண்டையேனும் கிழிக்க விரும்புகிறார்கள். ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பது உண்மையில் ஒரு நரகமாகும்.

நாம் நம்முடைய வாழ்க்கையை தீவிரமாகப் பார்த்தால், நம் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளையும் கடந்து வர சில சொகுசான பொருள்களையோ அல்லது நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமூகமான உணர்வுப்பூர்வமான உறவை ஏற்படுத்திக்கொண்டாலோ அவை எல்லாப் பிரச்னைகளையும் வென்று வர நமக்கு ஆழமாக உதவுவதில்லை. ஏனெனில் நம்மிடம் கோபம், இணைப்பு, பேராசை, பொறாமை, ஆணவம் மற்றும் இது போன்ற எல்லா விஷயங்களும் இருக்கும் போது, “உலக” பொருத்தவரையில் நாம் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும், இன்னும் பிரச்னைகளோடே இருக்கப் போகிறோம்.

குழப்பமான உணர்வுகள்

“குழப்பமான உணர்வுகள்” என்று சொல்லக்கூடியவற்றை நாம் கொண்டிருக்கும் போது நாம் அதன் அடிப்படையில் வலுக்கட்டாயமாக செயல்பட்டு எதிர்மறைத் திறனை வளர்க்கிறோம். பௌத்தம் எதிர்காலத்தைப் பற்றியும், எதிர்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களையும், பயங்கரமான விஷயங்களையும் விவாதிக்கிறது. இது மோசமானது மற்றும் நமக்கு எது நல்லது என்று தெரிந்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை பௌத்தம் தெளிவுபடுத்துகிறது, ஏனென்றால் எதிர்மறை ஆற்றல் பிரச்சினைகள் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.

ஆனால் பெரும்பாலான மேற்கத்தியர்கள் எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது அவற்றை நம்பவில்லை என்பதனால், நாம் இதனை வாழ்நாளுக்கான அம்சங்கள் என்ற புள்ளியில் விவாதிக்க முடியும். நம்முடைய சொந்த வாழ்க்கையையே தற்போது பார்ப்போம், நாம் ஆழமாக ஆராய்ந்தால், நம்முடைய உணர்வுக்ள் சார்ந்த பிரச்னைகளுக்கு அகம் ஒன்றே உண்மையான ஆதாரம் என்பதை கண்டறியலாம். வெளிப்புறக் காரணிகள் என்பவை வெறுமனே அந்த சூழ்நிலையைத் தூண்டுபவையே. உண்மையில் நம்முடைய குழப்பமான உணர்வுகள் – நம்முடைய கோபம், இணைப்பு, பேராசை உள்ளிட்டவை – நம்முடைய மன அமைதியையும், மகிழ்ச்சியையும் களவாடுகின்றன.

நம்மிடம் உள்ள எந்த நல்ல குணங்களையும் பயன்படுத்துவதை அவை தடுக்கின்றன. நாம் ஒருவருக்கு உதவ முயற்சி செய்யலாம், அது ஒரு நல்ல குணம், ஆனால் அதன் பின்னர் அவர்களிடம் கோபப்படுகிறோம். நாங்கள் அவர்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அல்லது அவர்கள் நம்முடன் வாக்குவாதம் செய்கின்றனர், நாம் நம்முடைய பொறுமையை இழக்கிறோம். இந்த குழப்பமான உணர்ச்சிகள் உண்மையில் யாருக்கேனும் உதவுவதைத் தடுக்கின்றன.

நம்முடைய பொறுமையை இழந்து, அவர்களிடம் கோபப்படுகையில், அவர்களுக்கு எது சிறந்தது என்று நமக்குத் தெரியும், நாம் என்ன செய்யச் சொல்கிறோமோ அதை அவர்கள் செய்யவில்லை, குறிப்பாக இது நம்முடைய குழந்தைகளுக்கு நடக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இது நம் குழந்தைகளுடனான உறவை மிகவும் கடினமாக்குகிறது, இல்லையா? நாம் இது குறித்து ஏதாவது செய்யாவிட்டால், அது மேலும் மோசமாகிவிடும் என்பதை உணர வேண்டும். நம்மிடம் அதிக ஆற்றல் இல்லாததால், வயதாகும்போது நாம் கொஞ்சம் தணிந்தவராக மாறக்கூடும், ஆனால் இதன் அர்த்தம் நம் கோபமும் இந்த வகையான விஷயங்களும் தானாகவே விலக்கிக் கொள்ளும் என்பதல்ல. அவை மறைந்து போவதில்லை.

இவை தொடர்பாக நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அம்சங்களாக பௌத்தம் குறிப்பிடுவது “பயம்”. ஆனால் “பயம்” என்பது நம்முடைய பெரும்பாலான மொழிகளில் கடினமான வார்த்தை. இந்த வார்த்தைக்கு நல்ல அர்த்தம் இல்லை. சில நேரங்களில் நான் “அச்சம்” என்ற வார்த்தையை பரிந்துரைப்பேன், ஆனால் மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபலமல்ல. “அச்சம்” என்ற வார்த்தைக்கான அர்த்தம் பெரும்பாலும் “உண்மையில் நான் இது நடக்கக் கூடாது என்று விரும்புகிறேன்” என்றே பொருள்படும். உதாரணத்திற்கு, நாம் பணி நிமித்தமாக ஒரு சலிப்பான சந்திப்பிற்கு செல்ல வேண்டும். அந்த சந்திப்பை நினைத்து பயமில்லை, ஆனால் போவதற்கு அச்சப்படுகிறோம். உண்மையில் நாம் அதனை செய்ய விரும்பவில்லை.

ஆனால், இன்னும் துல்லியமாக சொல்வதென்றால், இரண்டு விதங்களான பயத்தை நாம் வேறுபடுத்த வேண்டும், மோசமான எதிர்கால மறுபிறப்பை குறித்த பயத்தை பேசுவதோ அல்லது முதுமை பற்றிய பயமோ அல்லது எல்லாவற்றைப் பற்றிய பயமோ. ஒருவித பயம் இருக்கிறது அதனால் நாம் வெளியேறும் வழியைக் காண முடியவில்லை, நாம் கையறு நிலையிலும், நம்பிக்கையற்றவராகவும் உணர்கிறோம். இது நம்மை மேலும் முடக்கிப் போடுகிறது, இல்லையா? இது ஒரு ஆரோக்கியமற்ற பயம் என்றே நான் நினைக்கிறேன், எனினும் நாம் அடிக்கடி இதனை அனுபவிப்போம். ஆனால் சரணாகதி என்ற கருத்தமைப்பில் பயத்தின் வகை பற்றிய விவாதமானது வேறு விதமான அர்த்தத்தை கொண்டுள்ளது, ஏனெனில் அதில் பிரச்னையை தவிர்ப்பதற்கான வழியைக் காண முடியும். எனவே, இது நம்பிக்கையின்மையல்ல, நாம் உதவியற்ற நிலையிலும் இருக்க மாட்டோம்.  ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல,  ஏதோ ஒரு புலனறிவுக்கப்பாற்பட்ட சக்தி வரப்போகிறது அல்லது அது நம்மை பயமுறுத்தும் சூழலில் இருந்து காப்பாற்றும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் கடினமாக பிரார்த்தித்தால் போதும், நாம் விடுவிக்கப்பட்டு, பயத்தில் இருந்து காப்பாற்றப்படுவோம் என்பதல்ல.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஏதோ வகையில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்னைகளையும் தவிர்ப்பதற்கு என்ன உதவியாக இருக்கப் போகிறது? அதனை எது சாத்தியமாக்கப் போகிறது? இந்த மிகப்பெரிய கருத்தாக்கத்தில், பிரச்னைகளை ஏற்படுத்தும் குழப்பமான உணர்வுகளான – நம்முடைய கோபம், பேராசை, இணைப்பு, உள்ளிட்ட அனைத்திற்குமான – எல்லா கிளையும் யதார்த்தத்தைப் பற்றிய குழப்பத்தினால் வருபவை என்பதே உண்மை. இந்த குழப்பமான உணர்ச்சிகள் அனைத்தும் உண்மையில் மனதின் இயல்பான அம்சம் அல்ல. அவை என்றென்றும் அகற்றப்படலாம், இதனால் அவை ஒருபோதும் மீண்டும் நிகழாது. தர்ம சரணம் அவை “உண்மையிலேயே நிறுத்தப்படலாம்” என்பதைக் குறிக்கிறது.

மனம் அல்லது மனம் சார்ந்த செயல்பாடு

பௌத்தத்தில் நாம் மனம் பற்றி பேசும் போது, அது பற்றி விரிவாக பேசாமல், மனதின் செயல்பாடு பற்றியே பேசுகிறோம்.  இது தனிப்பட்டது, நாம் உறங்கும் போது கூட ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம் மனதின் செயல்பாடு நிகழ்கிறது.  மனமானது அக செயல்பாட்டுக்கான மனதின் செயல்பாடை குறிக்கிறது, ஆனால் மூளை அறிவியலானது அடிப்படையில் உடல் ரீதியிலான விளக்கத்தைத் தருகிறது. இவற்றில், அந்த மனதின் செயல்பாட்டிற்கான அடிப்படை இயல்பானது குழப்பத்துடனோ அல்லது கோபத்துடனோ அல்லது இது போன்ற ஏதோ ஒன்றுடனோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படையில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கிறது என்றால் நாம் விவரிக்கும் மனதின் முப்பரிமானம் போன்ற ஏதோ ஒன்று எழுகிறது. உதாரணத்திற்கு, உடல் ரீதியிலான பார்வையில், ஃபோட்டான்கள் கண்களுக்குள் நுழைந்து ஒரு வித மின் தூண்டலாக மாற்றப்பட்டு நரம்பியல் கடத்திகள் மூலமாக மூளைக்குள் செல்கிறது, மூளை எப்படியாயினும் ஒரு அக முப்படிமத்தை அதில் இருந்து உருவாக்குகிறது. அதுவே நாம் அழைக்கும் “பார்த்தல்” இல்லையா? நிச்சயமாக இது ஒரு சிலந்தி அல்லது பறப்பன கண்ணின் உயிரனுக்களுக்கு மாறாக மனித கண்ணின் செயல்பாடுகள் வழியாக நடக்கிறது என்றால் மிகவும்வித்தியாசமாக இருக்கும். இதே போன்று நாம் சொல்லும் “ஒலி அலைகள்” அதிர்வலைகளை ஏற்படுத்தவும் இதே போன்ற செயல்பாட்டை உள்ளடக்கியது தான், இதன் காரணமாகவே நாம் கேட்கும் திறனை உணர்கிறோம். மனதின் முப்படிமமானது எந்த அர்த்தத்திலும் அல்லது சிந்தனையிலும் கூட இருக்கலாம்.

காணுதலைப் பொறுத்த வரையில், கேமராவிற்குள் ஃபோட்டான்கள் வந்தவுடன் அவை சில மின் தூண்டல்களாக மாற்றப்பட்டு அதன் பின்னர் புகைப்படமாவது போன்ற செயல்முறையல்ல. இது ஒன்றும் அதே போன்றதல்ல ஏனெனில் ஏதோ ஒன்றைப் பற்றி மன முப்படிமம் எழுவதும் ஒருவித “அறிவாற்றல் ஈடுபாடு” ஆகும். நீங்கள் நினைவுடன் இருந்தாலும் அல்லது நினைவிழந்திருந்தாலும், உணர்ந்திருந்தாலும் அல்லது எதையாவது உணர்ந்திருக்கவில்லை என்றாலும், அது ஒருவித அறிவாற்றல் அம்சமாகும்.

மனதின் செயல்பாடு என்பது ஒரு கணினியை வைத்திருப்பதைப் போன்றதல்ல. நாம் சில சின்ன பொத்தான்களை அழுத்தியதும் சில மின் தூண்டல்கள் இயந்திரத்திற்கு தரப்படுகிறது, அந்த இயந்திரமானது கிடைக்கப்பெற்ற உள்ளீட்டை படமாக மாற்றி திரையில் தோன்றச் செய்கிறது அல்லது ஒலிப்பானில் ஒலியாக்குகிறது. கணினி ஒரு வகையில், சில அறிவாற்றல் விழிப்புணர்வைக் கொண்டுள்ளது என்று நாம் கூறலாம், ஏனெனில் செயற்கை நுண்ணறிவால் அது தகவல்களை செயலாக்குகிறது. ஆனால் கணினி ஒரு உயிரினத்தைப் போன்றது அல்ல. ஒரு கணினியிலிருந்து நம்மை வேறுபடுத்துவது என்னவென்றால், கூடுதலாக, நம்முடைய மன செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவித மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கிறோம். கணினி அவ்வாறு இல்லை. ஒரு கணினி எதையும் பற்றியும் மகிழ்ச்சியோ அல்லது துன்பத்தையோ உணர்வதில்லை. “என் அகத்தில் பிழை ஏற்பட்டுள்ளது, என்னை மறுதொடக்கம் செய்தால், நாம் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த கோப்பானது அழிந்துபோகும் என்று கணினி சிந்திப்பதில்லை, அதை நினைத்து துன்பப்படுவதும் இல்லை. அப்படி இல்லை தானே? மற்றொரு புறம் அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் நாம் மிகவும் துக்கப்படுகிறோம். 

இந்த நொடிக்கு நொடியிலான மனதின் செயல்பாடானது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கிறது. சில வகையிலான மனதின் முப்படிமமானது எழுகிறது, அதனுடன் ஒரு விதமான மனதின் ஈடுபாடு மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற உணர்வு. நாம் உறங்கும் போதும், முப்படிமமானது  இருளில் இருக்கக்கூடும், இதில் ஈடுபாடு என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு உள்ளது, இல்லையெனில் நமக்கு கடிகாரத்தின் அலாரம் கேட்கவே கேட்காது. ஏனெனில் முற்றிலும் செயல் நிறுத்தப்படவில்லை. நாம் கனவு காணாதபோது ஒருவித உணர்வு, நடுநிலை உணர்வு கூட, மகிழ்ச்சியாகவோ, மகிழ்ச்சியற்றதாகவோ இல்லை. நாம் ஒரு கனவு கண்டால் கூட, கோபம், பேராசை மற்றும் இந்த எல்லா விஷயங்களுடனும் மகிழ்ச்சி அல்லது துன்பம் இருக்கும். ஆனால் இந்த குழப்பமான உணர்ச்சிகள் இந்த முழு செயல்முறையிலும் நொடிக்கு நொடி நடக்கும் அவசியமான பகுதியாக இல்லை.

வெளிப்படையாக, நம்முடைய மன செயல்பாட்டின் அடிப்படை தூய்மையைப் பற்றி மேலும் மேலும் உறுதியாக நம்புவதற்கு நாம் செல்லக்கூடிய மிகவும் சிக்கலான சிந்தனைக் கோடுகள் உள்ளன. இது உண்மையில் அதற்கான சந்தர்ப்பம் அல்ல. ஆனால் அதைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறோமோ, அவ்வளவுதான் நம் மன செயல்பாட்டின் குழப்பமான அம்சங்களிலிருந்து விடுபட முடியும் என்பதில் உறுதியாக இருப்போம்

ஒரு குழப்பமான உணர்ச்சியின் வரையறை, எல்லாவற்றிற்கும் மேலாக, அது எழும்போது, நம் மன அமைதியை இழக்கவும், சுய கட்டுப்பாட்டை இழக்கவும் காரணமாகிறது. இதன் விளைவாக, கோபம், பேராசை மற்றும் பலவற்றை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான குழப்பமான வழிகளிலும் நாம் கட்டாயமாக செயல்படுகிறோம், அது நிறைய சிக்கல்களை உருவாக்குகிறது. உதாரணமாக, நாம் சுய கட்டுப்பாட்டை இழந்து, யாரோ ஒருவர் சொல்லும் விஷயங்களைக் கேட்டு அதன் உண்மைத்தன்மையை சிந்திக்காமல் கத்துகிறோம், பின்னர் நாம் சொன்னதற்காக வருந்துகிறோம். எனினும்கூட, இது "எதிர்மறை ஆற்றல்" என்று அழைக்கப்படுவதை கட்டமைப்பதால் பின்னர் துன்பமாக உணர்கிறோம்.

உண்மையிலேயே நாம் எதிர்காலப் பிரச்னைகளை தவிர்க்க விரும்பினால், நாம் இது போன்ற அனைத்து குழப்பமான உணர்வுகள் மற்றும் குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டும். அவை மனதில் இருந்து விடுபடுவது உண்மையில் சாத்தியம், ஏனென்றால் அவை மனதின் உள்ளார்ந்த இயல்பின் ஒரு அங்கமல்ல, மன செயல்பாடு. கூடுதலாக, ஒவ்வொரு கணமும் நம்மிடம் இருக்கும் இந்த வகை மன செயல்பாடுகளைப் பற்றி நாம் அதிகம் சிந்தித்தால், ஒரு அற்புதமான அம்சம் என்னவென்றால், அந்த மன செயல்பாடு செயல்பாட்டைப் புரிந்துகொள்வது சாத்தியமாகும். நம்மால் எதையோ புரிந்து கொள்ள முடியும். இதர நேர்மறை குணங்களான அன்பு, இரக்கம் உள்ளிட்டவற்றையும் நாம் கொண்டிருக்கலாம். இந்த நேர்மறை குணங்கள் மேலும் மேலும் விஷயங்களை வளர்க்கின்றன.

இப்போது, என்ன வித்தியாசம்? இடையூறான அம்சங்கள் குழப்பத்தின் அடிப்படையிலானவை. நேர்மறை அம்சங்களான புரிதல் உள்ளிட்டவை யதார்த்தத்தின் அடிப்படையிலானவை. இதற்கு ஒரு எளிமையான உதாரணம்: குழப்பமாக இவ்வாறு யோசிக்கலாம், “நான் தான் இந்த அண்டத்தின் மையப்புள்ளி. நான் மிகவும் முக்கியமான ஒருவன். நான் எப்போதுமே என்னுடைய வழியைக் கொண்டிருக்கிறேன். நான் எப்போதுமே கவனத்தின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்,” இது போன்றவை. எனவே, நாம் கவனத்தை ஈர்க்கும் மையப்புள்ளியாக இல்லாமலோ, நமக்கான வழி கிடைக்காவிட்டாலோ, நாம் கோபமடைகிறோம். ஒரு நாயைப் போல நாம் குறைக்கிறோம் அல்லது மற்றவர்களைப் பார்த்து உறுமுகிறோம். “நான் விரும்பும் வழியில் நீங்கள் அதை செய்து முடிக்கவில்லை.” இவை அனைத்தும் குழப்பத்தின் அடிப்படையிலானவை. யதார்த்தம் என்பது நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம் நாம் அனைவரும் சமம்.  ஒவ்வொருவருமே தங்களது சொந்த வழியைப் பெற விரும்புகின்றனர், ஆனால் அது சாத்தியமல்ல. யதார்த்தம் என்பது எப்படியாயினும் நாம் எல்லோருடனும் வாழ கற்றுக்கொண்டிருக்கிறோம்.

உண்மையான நிறுத்தங்கள்

நாம் எவ்வளவு அதிகமாக ஆராய்கிறோமோ, நம்முடைய குழப்பம் நீடிக்காது என்பைதை அவ்வளவு அதிகமாக நம்மால் காண முடியும். இது தவறானது. மறுபுறம், சரியான புரிதல் சரிபார்க்கக்கூடிய ஒன்று. அதுவே உண்மை. இதன் காரணமாக, புரிதல் வலுவாகிறது மற்றும் குழப்பத்தை குறைக்க முடியும். ஒருமுகப்படுத்துதல் மற்றும் ஒழுக்கத்துடன், யதார்த்தத்தைப் பற்றிய சரியான புரிதலை நாம் எப்போதுமே கொண்டிருக்க முடியும் என்றால், குழப்பம் மீண்டும் ஒருபோதும் எழ வாய்ப்பில்லை. அது முடிந்து போகும்.

இதுவே சரணாகதியின் மையப்புள்ளி. நாம் நம்முடைய வாழ்வில் எந்த வகையிலான திசையில் பொருத்துகிறோம்? என்ன வகையான அர்த்தம்? நாம் எந்த வகையிலான இலக்கை கொண்டிருக்கப் போகிறோம்? இந்த குழப்பங்கள் அனைத்தும் ஒரு "உண்மையான நிறுத்தத்தை" அடைவதே இலக்கு, அதில் இருந்து முழுவதுமாக விடுபடுவதனால் அவை மீண்டும் எழாது. இந்த வாழ்நாளில் அல்லது எதிர்கால வாழ்நாளில் நாம் அதைப் பற்றி பேசினாலும், இந்த குழப்பமே எல்லா பிரச்னைகளுக்குமான உண்மையான காரணம். இதில் இருந்து முழுவதுமாக எப்போதுமே விடுபடுவது சாத்தியமே, ஏனெனில் இவை நம் மன செயல்பாடின் உள்ளார்ந்த அம்சமல்ல. சரியான புரிதலை பொருத்துவதன் மூலம் அதை அகற்றலாம். குழப்பத்தைத் தவிர்த்தால், நமக்கு குழப்பமான உணர்வுகளும் இல்லை, நமக்கு நாமே பிரச்சினைகளையும் துன்பங்களையும் உருவாக்குவதில்லை. 

இதில் இரண்டு அம்சங்களுக்கு தொடர்பு உள்ளது. ஒன்று நாம் எப்போதும் சிக்கலான பக்கத்தில் இருந்து விடுபட முடியும் மற்றொறு அம்சம் நேர்மறைப் பக்கத்தை நம்மால் அதிகரித்து மேம்படுத்த முடியும். நேர்மறை பக்கம் என்பது சரியான புரிதலாகும். இதை நாம் எப்போதும் மொழிபெயர்க்கும் “நான்கு மேன்மை தரும் உண்மைகள்” என்ற கருத்தாக்கத்தோடு பொருத்திப் பார்க்கலாம் அல்லது முக்கிய கருத்து அல்லது புத்தர் போதனையின் அமைப்பாகப் பார்க்கலாம். முதல் உண்மையானது நமக்கு இருக்கும் மற்ற எல்லா வித்தியாசமான பிரச்னைகளை ஒப்பிடும் போது நமக்கு உண்மையாக துன்பம் இருக்கிறது. அடுத்தது உண்மையான காரணங்களும் இருக்கின்றன அவை தான் நம்முடைய குழப்பம். மூன்றாவது  இவை அனைத்தையும் உண்மையில் நிறுத்ததுவதை அடைவது சாத்தியமே, அதனால் அவை மீண்டும் எப்போதும் எழாது. கடைசியாக, நாம் அந்த சரியான நிறுத்துதலை “சரியான பாதை”யின் மூலம் அடையலாம். இந்த புரிதலே உண்மையான நிறுத்தத்தை ஏற்படுத்தும், குழப்பமான அனைத்து கூறுகளையும் அகற்றுவதன் விளைவும் அதே புரிதலேயாகும்.

தெளிவாகச் சொன்னால், நாம் நம் வாழ்வில் பொறுத்த விரும்பும் திசை இதுவே – சரியான நிறுத்தங்கள் மற்றும் மனதின் சரியான நடைபாதையை அடைவதற்கான திசை. இதுவே தர்ம சரணாகதி. நமக்குள்ளாகவே நாம் செயலாற்றுகிறோம் என்று சொல்லும் போது, நாம் இந்த சொல்லைப் பயன்படுத்தினால் அது இதையே குறிக்கிறது.

இந்த சிக்கலான பக்கத்தில் இருந்த விடுபட நாம் மேலும் மேலும் முயற்சிக்கிறோம், அதோடு நம்முடைய நேர்மறை பக்கத்திற்கான திறன்களையும் மேலும் மேலும் உணர்கிறோம். நாம் இதைச் செய்கிறோம் ஏனெனில் நாம் ஆரோக்கியமான வழியில் அச்சப்படுகிறோம், நாம் தற்போது இருக்கும் விதத்தையே நீடித்தால் நாம் அதிக பணம் ஈட்டினாலும், அதிக நண்பர்களைக் கொண்டிருந்தாலும், மிகப் பிரபலமாக இருந்தாலும் நமக்கு பிரச்னைகள் வரத் தான் போகிறது. ஏனெனில் நாம் தொடர்ந்து பேராசையுடனும், பாதுகாப்பின்மை உணர்வுடனே இருக்கப் போகிறோம். கோபப்படுதல் உள்ளிட்டவற்றை நாம் தொடரத் தான் போகிறோம். இது எப்படியென்றால் நமக்கு தீக்காயம் பட்டு விடுமோ என்று அஞ்சுகிறோம் ஆனால் நாம் ஜாக்கிரதையாக இருந்தால் காயம்படாமல் தவிர்க்கலாம். ஒருவித அச்சம் இருக்கிறது, ஆனால் அது ஆரோக்கியமான அச்சம். நாம் சித்தபிரமை பற்றி பேசவில்லை.

இப்போதே தொடர்ந்து கோபப்பட்டுக் கொண்டும், கத்திக்கொண்டும் இருக்கிறோம், குறிப்பாக நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் என்றால் நமது முதுமையில் என்ன நடக்கும்? நாம் மூதாட்டியாகவோ அல்லது முதியவராகவோ தனிமையில் தான் இருக்க நேரிடும் யாருமே நம்மை பார்க்க வருவதற்கு விரும்பமாட்டார்கள், நம்மை பராமரிக்க யாரும் விரும்ப மாட்டார்கள், ஏனெனில் நாம் அவர்களுடன் இருக்கும் போது அத்தனை வலியைத் தந்திருக்கிறோம்.

நாம் செய்தது எல்லாமே குற்றம் சொல்வது மற்றும் எல்லோரிடமும் கத்துவது, ஆகவே யார் நம்முடன் இருக்க விரும்புவார்கள்? யாருமே விரும்பமாட்டார்கள். தீர்வு என்பது நமக்கு ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் நம்மைக் கவனித்துக் கொள்ள கடமைப்பட்டிருப்பதாக உணர்வதோ, அல்லது வங்கியில் போதுமான பணம் வைத்திருப்பதால் நாங்கள் ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் இருக்க முடியும் என்பதல்ல, ஏனென்றால் நாம் இன்னும் பரிதாபமாக இருக்கப் போகிறோம். நாம் உண்மையிலேயே செய்ய வேண்டியது, நம்முடைய ஆளுமைகளை மிகச் சாதாரணமாகச் சொல்வதே.

 எல்லோருக்குமே மாறும் திறன் உள்ளது

நம்முடைய ஆளுமைகள் சரி செய்யப்பட்டுள்ளன என்றும், இது நாம் இருக்கும் ஒரு சாதாரண வழி என்றும் நாம் அடிக்கடி நினைக்கிறோம். "எனக்கு ஒரு மோசமான மனநிலை இருக்கிறது, அதனுடன் வாழ நீங்கள் கற்றுக்கொள்வது நல்லது." என்றால் அது வேலை செய்யாது, இல்லையா? இந்த குழப்பமான பக்கத்திலிருந்து விடுபடவும், நம்முடைய எல்லா நல்ல குணங்களையும் உணரவும் முடியும். நமக்கு நாமே செயலாற்றிக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்று பயத்தின் ஆரோக்கியமான உணர்விலிருந்து, இந்த குழப்பமான அம்சங்களிலிருந்து விடுபட முடியும் மற்றும் நேர்மறையை அதிகரிக்கவும் பலப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையுடனும், இந்த பாதுகாப்பான திசையை நாம் நம்முடைய வாழ்வில் பொறுத்துகிறோம்.

நாம் இதனை “மகாயனா” என்ற பரந்த மார்க்க வழியில் செயல்படுத்த விரும்பினால், நாம் இதனுடன் இரக்கத்தையும் சேர்க்கலாம். அடிப்படையில், மகாயனா பார்வை என்பது நாம் கோபப்படும் யாரோ ஒருவருக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதாகும்? உண்மையில் நாம் பிறருக்கு உதவ விரும்புகிறோம், ஆனால் அவர்களுடன் நமக்கு இருக்கும் கோபம் அல்லது இணைப்பு அல்லது பொறாமை உள்ளிட்ட இவை அனைத்தின் காரணமாக எல்லாமே குழப்பமாகிவிடுமோ என்று அஞ்சுகிறோம். நாம் இந்த குழப்பமான உணர்வுகள் மற்றும் குழப்பத்தில் இருந்து விடுபட்டால் நம்மால் பிறருக்கு சிறப்பாக உதவ முடியும். இந்த உணர்வு தான் நாம் பிறருக்கு உதவ முடியும் என்று உண்மையில் விரும்புகிறோம், ஆனால் நம்மால் அதிகம் செய்ய முடியாது என்று பயப்படுகிறோம். நமக்கு போதுமான பொறுமை இல்லை அல்லது போதுமான புரிதல் நமக்கு இல்லை. நல்லதை விட அதிக தீங்கு ஏற்பட காரணமாகிவிடுவோம் என்று அஞ்சுகிறோம். நம்முடைய சொந்த குழந்தைகளை வளர்ப்பதில் கூட தோற்றுவிடுவோம் என்று அச்சப்படுகிறோம்.  அது மிகவும் மோசமானதாக இருக்கும் இல்லையா? அந்த பயமே பாதுகாப்பான மற்றும் நல்ல திசையை நம் வாழ்வில் கொண்டுவர நமக்குள்ளே நாம் செயலாற்ற தூண்டுகிறது.

உண்மையில் இந்த தர்ம செயலானது நம்முடைய அன்றாட வாழ்வோடு மிகவும் பொருந்துவது, சரணாகதி என்ற தோரணையில் நம்முடைய சூழ்நிலைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து மிகவும் நேர்மையாக இருத்தல். நம் அனைவருக்கும் எல்லாமும் இருக்கிறது, நாம் அனைவரும் இது போன்ற சிக்கலான உணர்வுகளைக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை. எல்லா வகையான மாறுபாடுகளையும் கொண்ட சிலர் மற்றவர்களை விட வலுவானவர்களாக இருக்கலாம், ஆனால் நம் அனைவருக்கும் இந்த உணர்ச்சி சிக்கல்கள் உள்ளன. ஆழ்ந்த உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை. பெரும்பாலான மக்கள் சாதாரணமாகக் கருதுவதைப் பற்றியே நாம் பேசுகிறோம். ஆனால் ஆபத்து என்னவென்றால், நாம் சில நேரங்களில் கோபப்படப் போகிறோம், சில சமயங்களில் பேராசை, சுயநலம் மற்றும் பொறாமைப்படுபவர்களாக இருக்கிறோம் என்று சாதாரணமாகக் கருதுகிறோம். இது சாதாரணமானது தான் பரவாயில்லை என்று நாம் நினைக்கிறோம். ஆம், அது நல்லதல்ல, ஏனென்றால் நாம் உதவ முயற்சிக்கும் போது இது நமக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

நம்முடைய குறிக்கோளானது, நம்முடைய கோபத்துடன் எவ்வாறு வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்வது அல்லது அதை உள்ளுக்குள் வைத்து கஷ்டப்பட்டுக் கொண்டு அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல. நம்முடைய குறிக்கோள் அதை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, இந்த குழப்பமான விஷயங்களை முழுவதுமாக அகற்றுவதும் ஆகும்.

சில சமயங்களைப் பற்றி சிறிதேனும் புரிந்து கொள்வது மட்டுமே நமக்குத் தேவையில்லை, ஆனால் யதார்த்தத்தைப் பற்றிய முழு புரிதலை வளர்த்துக் கொண்டு, நாம் எப்படி உயிர் வாழ்கிறோம், எல்லோரும் எப்படி இருக்கிறார்கள், உலகம் எப்படி இருக்கிறது, மற்றும் இவை அனைத்தையும் எல்லா நேரத்திலும் கொண்டிருக்க வேண்டும். இது முற்றிலும் சாத்தியம், ஏனென்றால் மன செயல்பாடுகளின் தன்மை அடிப்படையில் தூய்மையானது மற்றும் நல்ல குணங்களின் அனைத்து திறன்களையும் கொண்டுள்ளது.

 புத்தரின் வெளிப்படையான நல்ல குணங்கள்

பாதுகாப்பான திசையை அல்லது சரணாகதியைக் குறிக்கும் பொருள்களைப் பற்றி பேசும்போது, புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தைப் பற்றி பேசுகிறோம். இந்த மூன்றையும் புரிந்து கொள்ள பல நிலைகள் உள்ளன: ஒவ்வொன்றும் வெளிப்படையான நிலை, ஆழமான நிலை மற்றும் அவற்றைக் குறிப்பவை. ஒவ்வொன்றின் வெளிப்படையான மட்டத்தின் நல்ல குணங்களை முதலில் பார்ப்போம்.

ஒரு புத்தரின் உடல் அசாதாரண உடல் குணங்கள் மற்றும் மிகவும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, புத்தர்களால் உடனடியாக எங்கும் செல்லவும், அவர்களின் உடல்களை எல்லையற்ற வடிவங்களாகப் பெருக்கவும், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கவும் முடியும். இது மிகவும் அருமையானது மற்றும் அவ்வளவு எளிதாக நம்பவும் முடியாதவை. கூடுதலாக, ஒரு புத்தர் பேசும் போது, எல்லோருமே தங்களுடைய சொந்த மொழியில் புரிந்து கொள்கின்றனர், அவர்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பது பொருட்டல்ல அவர்களால் புத்தர் கூறுவதை தெளிவாகக் கேட்க முடியும்.  அதற்கும் மேலாக, ஒரு புத்தர் அனைவரையும் சமமாக நேசிக்கும், அனைத்தையும் சமமாக நேசிக்கும் எல்லாம் அறிந்தவராகவும், எல்லாவற்றையும் அறிந்த புரிந்து கொண்டவராகவும் இருக்கிறார்.

திரும்பவும் பார்த்தால் இவை அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும், நம்புவதற்கு கடினமாகவும் இருக்கும். எனவே நாம் இந்த அளவிலான சிந்தனைகளோடு புத்தர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்தால், நாம் தவறான எண்ணத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய அபாயம் இருக்கிறது. நாம் ஏதோ ஒரு அற்புதமான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்று தோன்றும், கிட்டதட்ட கடவுளைப் போல, இல்லையா? ஆனால் எல்லாம் அறிந்தவராக இருப்பதென்றால், உதாரணத்திற்கு, புத்தர் இந்த கிரகத்தில் இருக்கும் எல்லோருடைய தொலைபேசி எண்களையும் அறிந்தவரல்ல, ஆனால் ஒவ்வொருவரின் நிலைமைக்கும் காரணம் என்ன அவற்றில் இருந்து எப்படி திரும்பி வருவது, மேலும் அவர்களை பாதிக்கும் அனைத்து காரணிகளும் புத்தருக்குத் தெரியும். 

ஒரு புத்தர் ஒருவருக்கு ஒன்றை கற்பிக்கும் போது, அது அந்த நபருக்கு ஏற்படுத்தும் தாக்கம் மட்டுமின்றி, அந்த நபர் தொடர்புகொள்வதன் மூலம் மற்ற அனைவருக்கும் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கும். இதன் விளைவாக, ஒரு புத்தருக்கு எல்லோருக்கும் கற்பிப்பதற்கான சிறந்த முறை நன்றாகத் தெரியும். அது மிகவும் நல்லது, இல்லையா? அதைச் செய்ய முடிந்தால் உண்மையில் நன்றாக இருக்கும்.

புத்தர் புரிந்து கொள்வார், நமக்கு உதவும் சிறந்த விஷயம் என்ன என்பதை அறிந்திருப்பார் என்று நாம் ஏதோ ஒரு நம்பிக்கை கொண்டுள்ளோம். புத்தர் நம்முடைய மொழியைப் பேசுவார் நமக்கு விருப்பம் இருக்கும் போது அவர் என்னை தேடி வருவார் என நினைப்பது. புத்தரை கடவுளைப் போல சிந்திக்கும் திசையில் நாம் போய்க்கொண்டிருந்தால், இது சற்றே தனிப்பட்டதாக மாறுகிறது. “அவரால் எனக்கு தனிப்பட்ட உதவி செய்ய முடியும். அவர் என்னை புரிந்து கொள்வார். யாராலும் என்னை புரிந்து கொள்ள முடியாது, ஆனால் புத்தரால் முடியும்.” ஆனால் நமக்கு தெரியும் புத்தர் எல்லோரிடத்திலும் சமமான அன்பை பாராட்டுபவர். “சிறப்பு.. மற்ற எல்லோரையும் விட என் மீது அதிக அன்பு வைத்திருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். ஆனாலும் பரவாயில்லை.”   

ஒரு புத்தருக்கு எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டு, வெகுமதிக்காக நாம் என்ன செய்தாலும் அது பெரிதல்ல. நாம் புத்தரிடம் பிரார்த்திக்கவோ அல்லது படையலிடவோ வேண்டாம்.  புத்தர் எப்படியும் உங்களுக்கு உதவப் போகிறார். எனவே இது மலிவானது. நாம் எதையும் செலுத்த வேண்டியதில்லை. என்ன ஒரு பேரம்! புத்தருக்கு அதிக பொறுமை இருப்பதால், வேறு ஏதேனும் ஒரு பாரம்பரியத்தில் நாம் வேறு ஆசிரியரிடம் கற்றால் அவர் ஒருபோதும் பொறாமைப்படப் போவதில்லை, மேலும் ஒருபோதும் கோபப்படப்போவதும் இல்லை, மின்னல் போல நம்மை தாக்கவோ அல்லது அது போன்ற எதையும் செய்ய மாட்டார். இது மிகவும் பாதுகாப்பானது.

தெரிந்தோ தெரியாமலோ நடக்கும் ஒரு பொதுவான தவறு இது. பேரம் மற்றும் பாதுகாப்பிற்கான மாற்றுக் கடவுளாக புத்தரை நாம் பார்க்கிறோம். புத்தர் எப்போதும் உங்களை தாழ்த்தப்போவதில்லை உள்ளிட்ட இது போன்ற விஷயங்களை போதனைகள் சொல்கிறது. இது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் புத்தரால் காலில் இருந்து முள்ளை எடுப்பது போன்று துன்பங்களில் இருந்து நம்மை வெளியே இழுக்க முடியவில்லை என்று பின்னர் படிக்கக் கூடும். பெளத்தர்கள் ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர்கள் அல்ல. ஆனால் நாம் அதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இது ஒரு புத்தரின் வெளிப்படையான நிலை, ஒருவரின் பொதுவான சிந்தனை வழி. ஆனால் ஒரு ஆழமான புரிதல் இல்லாமல் அதை அந்த மட்டத்தில் விட்டுவிடுவது புத்தரைக் காப்பாற்றப் போகிற மாற்று கடவுளாகக் கருதும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

புத்தர்கள் சிலைகளாக மற்றும் ஓவியங்களாக குறிப்பிடப்படுகின்றனர். சரி அது அழகானது தான், ஆனால் நாம் பழமைவாத கிறிஸ்துவ உருவத்துடன் இதனை குழப்பிக்கொள்கிறோமா? இது என்ன? இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டுவது போல நாம் உருவ வழிபாட்டில் இருக்கிறோமா? உண்மையில் இங்கு என்ன நடக்கிறது? உண்மையில் நாம் ஒரு சிலையின் முன்பு தலைவணங்க வேண்டுமா? ஒரு புத்தரைப் பற்றிய நமது புரிதலை இந்த மட்டத்தில் விட்டுவிட்டால் அதில் சிக்கல்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். தவறான புரிதலுக்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் சிலருக்கு, ஒரு புத்தரைப் பற்றி இவ்வாறு நினைப்பது மிகவும் உதவியாக இருக்கும், ஆனால் அது ஆழமான புரிதல் அல்ல. இந்த அளவில், சிலைகள் மற்றும் ஓவியங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் கடவுள் போன்ற ஒரு உருவம் கிட்டத்தட்ட இருப்பது போல, நாம் அவர்களை வணங்குகிறோம்.

 தர்மத்தின் வெளிப்படையான நல்ல குணங்கள்

தர்மத்தின் வெளிப்படையான அளவு என்பது எல்லா போதனைகளுமே. இதைத் தான் புத்தர் தனக்குள் உணர்ந்தார், அவர் போதித்ததும் அதையே. இதைப் புரிந்துகொள்வதற்கான பொதுவான வழி என்னவென்றால், நம்முடைய தனிப்பட்ட கடவுள், புத்தர் நம்மிடம் இருக்கிறார், நம்முடைய வேதங்களும் எங்களிடம் உள்ளன. ஒரு பைபிள் அல்லது குரானுக்கு பதிலாக, இப்போது என்னிடம் புத்தரின் நூல்கள் உள்ளன. இது எனது புத்த பைபிளைப் போன்றது, மேலும் அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் புனிதமானது என்று நாம் கருதுகிறோம். ஆம், நாம் அதற்கு மரியாதை செலுத்தவேண்டும், ஆனால் புத்தர் தனக்குள் சொல்லிக்கொண்டது: “நான் சொன்னேன் என்ற மரியாதைக்காக எதையும் நம்ப வேண்டாம்,  ஆனால் தங்கத்தை வாங்கும் போது பரிசோதிப்பது போல் நீங்களே சோதிக்கவும்”. புத்தர் எப்போதும் தம்மைப் பின்பற்றுபவர்களை அவர் கற்பித்ததை விமர்சிக்க ஊக்குவித்தார். அன்றாட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த அளவில், புத்தர் நம்மை நேசிக்கிறார், புத்தர் நம்மைப் புரிந்துகொள்கிறார், இங்கே புனித புத்தகத்தில் உள்ள அனைத்து விதிகளும் உள்ளன, அதை நாம் பின்பற்றுகிறோம். நிச்சயமாக, அது அன்றாட வாழ்க்கையில் ஒரு இடத்தைப் பெறக்கூடும், ஆனால் இது உண்மையில் புத்தமதம் அல்ல. இப்போது, நிச்சயமாக, இது சிலருக்கு வேலை செய்யக்கூடும், ஆனால் பௌத்தத்தை கிறிஸ்தவத்தின் மற்றொரு மாறுபாடாக மாற்றுவது இதன் நோக்கமல்ல.

 சங்கத்தின் வெளிப்படையான நல்ல குணங்கள்

சரி, சங்கம் என்றால் பற்றியது என்ன? துரதிஷ்டவசமாக, மேற்கு நாடுகளில், நாங்கள் செல்லும் தர்ம மையத்தின் அனைத்து உறுப்பினர்களையும் எங்கள் “சங்கம்” என்று குறிப்பிடும் பழக்கத்தை நாங்கள் பெற்றுள்ளோம். சமஸ்கிருதத்திலோ அல்லது திபெத்திய மொழியிலோ இந்த வார்த்தையின் நோக்கம் நிச்சயமாக இல்லை. ஆனால், பலருக்கு, “சங்கம்” என்பது நமது சபையின் உறுப்பினர்கள், நமது புத்த தேவாலயம் என்று பொருள். இந்த உறுப்பினர்களில் சிலர் மிகவும் சிக்கலாக இருக்கும்போது, நாம் உண்மையில் அவர்களிடம் சரணாகதி அடைகிறோமா? இப்போது, ஒரே மாதிரியான குறிக்கோளை இலக்காகக் கொண்ட ஒத்த எண்ணம் கொண்ட ஆன்மீக சமூகத்தை வைத்திருப்பவர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் நான் அர்த்தப்படுத்தவில்லை, அவர்கள் எங்களுக்கு சில ஆதரவையும், சில கருத்துகள் உள்ளிட்ட பலவற்றையும் வழங்க முடியும். இது மிக மிக முக்கியமானது, ஆனால் அது ஒரு சரணாகதிக்கான பொருள் அல்ல.

சங்கத்தின் மற்றொரு அளவில், அதை துறவற சமூகம் என்று நாம் புரிந்து கொள்ள முடியும், எனவே பௌத்த பிக்குகள் மற்றும் கன்னியாஸ்திரிகள். ஆனால், மீண்டும், துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் சரியான உதாரணங்களை நாம் எப்போதும் காணவில்லை, இல்லையா? அங்கிகள் அணியும் மிகவும் குழப்பமான சிலர் உள்ளனர். ஆனாலும், அவர்கள் துறவியாக மாறுவதற்காகத் தங்களுக்குள்ளாகவே செயலாற்ற முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்களிடம் மரியாதையுடனும் ஆதரவாகவும் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் சில துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழ்க்கையின் கஷ்டங்களில் இருந்து தப்பிப்பதற்காகவும், என்னுடைய ஒரு நண்பர் ஒருவர் சொல்வது போல் இலவச மதிய உணவைப் பெறுவதற்காகவும் அங்கியை அணிகிறார்கள்!

சங்கத்தின் இன்னொரு நிலையும் உள்ளது. இந்த தாந்த்ரீக குருமார்கள் சொல்ல நாம் இவ்வாறு கேட்டிருப்போம், உண்மையில் சங்கம் என்பது சென்ரெசிக், தாரா, மஞ்சுஸ்ரீ மற்றும் இவை உள்ளிட்டவற்றை "தாந்த்ரீக தெய்வங்கள்" என்று அழைக்கப்படுபவை. நாம் பரிசுத்த தாய் அல்லது புனித தாராவை பிரார்த்தனை செய்தால், அவள் நம்மைக் காப்பாற்றுவாள். நிச்சயமாக இந்த புத்த உருவங்கள், நான் சொல்வது போல, தாந்த்ரீக தெய்வங்கள் என்று அழைக்கப்படுபவை, எந்த வகையிலும் புனிதர்களல்ல மேலும் கடவுள் புத்தரோடு நெருங்கிப் பழகுவதற்கு நமக்கு எப்படியாயினும் உதவப்போகின்றன ஆனால் இடைத்தரகர்களாக அல்ல.

 புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தின் ஆழ்ந்த அர்த்தம்

புத்தர், தர்மம் மற்றும் சங்கத்தின் ஆழமான பொருளைப் பார்த்தால், இந்த எல்லா குழப்பங்களின் உண்மையான நிறுத்தங்கள், உண்மையான உணர்தல்கள் அல்லது உண்மையான பாதைகள் அல்லது மனதின் தொடர்ச்சியான அகப்பாதைகளே தர்மத்தின் ஆழகமான அர்த்தம் என்பதை நாம் கண்டுபிடிப்போம். அதுதான் உண்மையான தர்மம். நாம் அதனை நம்முடைய சொந்த மனத்தொடர்ச்சியோடு அடைய விரும்பினால், தர்மமே நம்மை துன்பங்களில் இருந்து பாதுகாக்கும்.  

எல்லா குழப்பங்கள், சிக்கலான உணர்வுகள், நடத்தைகள் மற்றும் தீர்ந்து போன பிரச்னைகளுடன் அங்குள்ள அனைத்து உணர்தல்களைவும் முழுமையாக நம்மால் இந்த நிலையை அடைய முடியும். புத்தர்கள் அனைவரும் இதனை முழுமையாக நிறைவேற்றியவர்கள் மேலும் நாம் இதனை எவ்வாறு முழுமையாக்கலாம் என்றும் கற்பித்தவர்கள். சங்கம் என்பது உண்மையில் “ஆர்ய சங்கம்” என்று அழைக்கப்படுவதையே குறிப்பிடுகிறது, அவர்கள் மிக அதிகமாக உணர்ந்த எதையோ அடைந்த உயர்நிலை பயிற்சியாளர்கள், ஆனால் இந்த உண்மையான நிறுத்தங்கள் மற்றும் உண்மையான உணர்தல்கள் அனைத்திலும் இல்லை. நீங்கள் பார்த்தால் தெரியும், உண்மையில் நாம் வெளிவர வேண்டிய குழப்பத்திற்கு பல அளவுகள் இருக்கின்றன மற்றும் அவற்றை எதிர்கொள்ள பல படிப்படியான வலுவான உணர்தல் நிலைகளும் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கான செயல்முறை பல நிலைகளில் நிகழ்கிறது. ஆர்ய சங்கம் இன்னும் முழு தொகுப்பான அனைத்தையும் அகற்றுவதை அடையவில்லை, ஆனால்  அவை இன்னும் பலவற்றை அடைவதற்கான பாதையில் உள்ளன.

நம்முடைய அன்றாட வாழ்வில் புத்தர்கள் மற்றும் ஆர்ய சங்கத்தின் இவர்களைப் போன்ற கடந்த கால மற்றும் நிகழ்கால இந்திய மற்றும் திபெத்திய குருக்கள் சிலர் மிகவும் எழுச்சியூட்டுகின்றனர். இது நமக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது. புனிதர் தலாய் லாமா போன்று எழுச்சிமிக்க ஒருவரை நாம் காண்கிறோம் அல்லது சந்திக்கிறோம். அவர் எப்படி இவ்வாறு மாறினார்? தர்மத்தின் வழியே இது சாத்தியமானது. அவர் புத்தரா அல்லது இன்னும் புத்தரகவில்லை என்பது பொருத்தமற்றது. நாமும் அவரைப் போல மாறினால், அது மிகவும் நல்லதாக இருக்கும். தர்மத்தில் எதைப்பற்றி வேண்டுமானாலும் போதிக்கும் திறன் பெற்றவர் அவர் என்பதைப் பற்றியோ அல்லது அவர் தான் நிபுணர், அதிகம் கற்றவர் மமேலும் மற்ற ஆசிரியர்களை விட மிகவும் ஆழமாக அறிந்தவர் என்பவற்றைப் பற்றி மட்டும் நான் சாதாரணமாக பேசவில்லை.

உலகம் முழுவதும் பயணிப்பதற்கான அட்டவணை வகையை வைத்திருக்கிறார், மற்றவர்களுக்கு உதவவும் கற்பிக்கவும் உதவுகிறார் என்பது மட்டுமல்ல. இவற்றிற்கு மகுடம் வைக்கும் ஒரு விஷயம் அவர் சீனாவால் பொதுவான முதன்மை எதிரியாகப் பார்க்கப்படுகிறார். நீங்கள் இன்னமும் விரும்பும், இரக்கம் கொண்டிருக்கும் நிலையில் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் உங்களை எதிரியாகப் பார்க்கிறார்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனாலும் அவர் மனமுடைந்துவிடவில்லை, அவரால் எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடும், மன அமைதியோடும் செய்ய முடியும். இது நம்பமுடியாதது இல்லையா?

சிக்கலான உணர்வுகளில் இருந்து அவர் எப்படி விடுபட்டார், இவற்றில் எதையேனும் நிறைவேற்றி இயல்பான உணர்தலைப் பெற்றது எப்படி? இது அவ்வளவு எளிதில் சாத்தியப்படாது. அவர் எப்போதும் புத்தராக இருக்கிறாரா இல்லையா என்று பார்ப்பது பொறுத்தமற்றது.

புத்தரின் அனைத்து குணங்களுடனும் நம்மை தொடர்புபடுத்த முடியாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் புனிதர் தலாய் லாமா போன்ற ஒருவரின் குணங்களை நாம் காணலாம். அவர் மிகவும் ஊக்கமளிப்பவர். அவரைப் போன்ற ஒருவர் இந்த நிலையை அடைய முடிந்தால், மனதின் தன்மை தூய்மையாகவும்  அனைத்து திறன்களையும் கொண்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, நம்மால் அதைச் செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லோரும் அதை செய்ய முடியாது என்பதற்கு காரணம் ஒன்றும் இல்லை. நிச்சயமாக அதற்கு மிக அதிக அளவில் செயலாற்ற வேண்டும், ஆனால் இது சாத்தியமே, மேலும் அந்த திசையை நோக்கிச் செல்வது மிகவும் பயனுள்ளது. தலாய் லாமா புத்தருக்கு இணையாக இருந்தாலும், தற்போது கற்பிக்கும் சில பெரிய லாமாக்களுக்கு, தலாய் லாமாவை ஒத்த குணங்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் சங்கத்திற்கு இணையானவர்கள், அவர்களுக்கு அதற்கான சில குணங்கள் உள்ளன. அவையும் கூட நமக்கு ஊக்கமளிப்பவையே.

தலாய் லாமா மற்றும் இதர பெரிய குருக்களுக்கு பொதுவாக என்ன குணங்கள் உள்ளன? அவர்கள் மாறுபட்ட தன்மைகள், கோபம், பேராசை, வெறுப்பு, பொறாமை மற்றும் இந்த வகையான எல்லா விஷயங்களிலிருந்தும் விடுபட்டுள்ளனர். புரிதல், இரக்கம், பொறுமை போன்ற மகத்தான நல்ல குணங்களை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த பல்வேறு லாமாக்கள் அடைந்துள்ள மாறுபட்ட நன்மைகள் என்ற அடிப்படையில் நாம் காண வேண்டும். நான் சொல்வதைப் போல புத்தர் அல்லது மிலரெபா மற்றும் இதர வரலாற்று உதாரணங்களோடு ஒப்பிட்டு பார்ப்பதே கடினம் என்ற நிலையில் சிந்திப்பதை விட நாம் காண வேண்டிய வாழும் உதாரணங்கள். அவையாவும் நல்ல கதைகள் என்றும் நாம் கருதுவோம், ஆனால் உண்மையில் அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்றால் நம்புகிறோமா? குரு ரின்போச் தாமரையில் இருந்து பிறந்தார் என்று படிக்கிறோம் நம்மால் உண்மையில் அதை நம்ப முடிகிறதா? அதனை தொடர்புபடுத்துவதும் கடினமாக கூட இருக்கலாம்.  இல்லாத நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்துவதைவிட தற்போது புத்தர், சங்கத்தைப் போல இருக்கும் தலாய் லாமா மற்றும் பெரிய குருமார்கள் நிரூபித்ததுள்ள நேர்மறை குணங்களில் கவனம் செலுத்தலாம்.

அதையும் செய்யக்கூடிய திறன் நமக்கு இருக்கிறது என்பதை உணர்வோம், அதுவே தர்மம் மேலும் இந்த உண்மையான நிறுத்தங்கள் மற்றும் உண்மையான மனதின் நடைபாதைகளும் அடையக்கூடிய இலக்குகளே. இது சாத்தியமே நம்மால் அதனை செய்ய முடியும், அது நமக்கு பாதுகாப்பு, நிலையான மற்றும் நம் வாழ்வில் பொருத்த வேண்டிய அர்த்தமுள்ள திசையை காட்டும்.

நம் அன்றாட வாழ்வில் பாதுகாப்பான திசை அல்லது சரணாகதி

புத்தர், தர்மா மற்றும் சங்கத்தின் திசையை நம்முடைய வாழ்வில் நடைமுறையில் பொருத்துவதன் அர்த்தம் என்ன? அதற்கு அர்த்தம் நாம் எப்போதும் நமக்குள்ளாகவே செயலாற்றுகிறோம். நாம் அவ்வாறு செய்வதனால், உதாரணத்திற்கு சொல்கிறேன், நாம் கோபமடைந்தாலோ அல்லது சுயநலமாக செயல்பட்டாலோ நாம் அதிக அளவில் அதனைப் பற்றி அறியும் விழிப்புணர்வு இருக்கும். நம்மால் அதனை கண்டறிய முடியும். அதற்காக நம்மை பற்றி நாமே பாரமாக நினைத்து நமக்கு நாமே தண்டனை வழங்கிக் கொள்ள வேண்டும் என சிந்திக்கக் கூடாது, “நான் மிக மோசமானவன் அல்லது நான் மிக கொடுமையானவன் ஏனெனில் எனக்கு இன்னும் கோபம் வருகிறது.” இப்படியும் அல்ல எந்த ஒரு எல்லைக்கும் சென்று சிந்திக்க வேண்டாம், யதார்த்தமாக இருப்பதன் ஒரு அங்கமே இவை. நாம் அதனை அவ்வாறு பார்க்க வேண்டும், "அதனால் என்ன? நான் தொடர்ந்து அப்படியே இருப்பேன். ” ஆனால் நம்முடைய குழப்பமான உணர்ச்சிகளை அறிந்திருப்பதும், அவற்றை நாம் அகற்ற விரும்பும் விஷயங்களாக கருதுவதும் கூட, அவற்றின் சக்தியை பலவீனப்படுத்துகிறது.

ஆனால் இங்கு மையப்புள்ளி என்னவென்றால், நம்முடைய அன்றாட வாழ்வில் இது போன்ற எதிர்மறை விஷயங்கள் மேலோங்கினால் நாம் அவற்றை அடையளம் கண்டு அவற்றை வெல்வதற்கான சில வழிமுறைகளை கற்பதே சிறந்த தனித்துவமான விஷயமாகும். நாம் கோபமாக இருந்தால் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். யாரேனும் என்னிடம் பயங்கரமாக நடந்த கொண்டால், அது அவர்களின் மகிழ்ச்சியின்மையை குறிக்கிறது. அவர்களை ஏதோ ஒன்று இடையூறு செய்கிறது. இதற்காகக் கோபப்படுவதை விட அவர்களுக்காக சிறிது இரக்கப்படுங்கள்.

கோபப்படுவதற்காக நம் மீதே நாம் கோபப்படுதல், நாம் ஒருதலைபட்சமாக இல்லை என்பதை தெளிவுடுத்தும். மற்றொரு புறம், பரவாயில்லை அல்லது போனால் போகட்டும் என்று நம்மை நாமே குழந்தைத்தனமாக நடத்தக் கூடாது. ஆனால் நாம் நம்முடைய கோபத்தை வெல்ல சிறப்பான முயற்சியை செய்யப்போகிறோம், ஏனெனில் அது சாத்தியமே என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.  ஒரு வேளை நம்மால் விரைவில் விடுபட முடியாமல் இருக்கலாம், நிச்சயமாக, நம்மால் விரைவாக விடுபட முடியாது, ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் நாம் செயலாற்ற விரும்பும் திசை இது தான். நாம் இதைச் செய்யப் போகிறோம், ஏனென்றால் இந்த விஷயங்களை அகற்றுவது உண்மையில் சாத்தியம் என்று நமக்குத் தெரியும். இந்த திசையில் செல்வது இலட்சியவாத சிந்தனையின் பயனற்ற முயற்சி அல்ல.

நாம் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நமக்கு கொஞ்சம் பொறுமை, அல்லது கொஞ்சம் புரிதல், அல்லது கொஞ்சம் கருணை உணர்வு இருக்கும் பட்சத்தில், இது அதிகரிக்கக்கூடிய ஒன்று என்பதை நாம் உணர வேண்டும். இதை நாம் மேலும் உறுதியானதாக மாற்ற முடியும். அவ்வாறு செய்வது சாத்தியமே.மற்றவர்கள் செய்திருக்கிறார்கள் நம்மாலும் கூட செய்ய முடியும். நம்மிடமும் சிறப்பாக எதுவும் இல்லை, மற்றவர்களுக்கும் சிறப்பாக எதுவும் இல்லை. இது நமது சரணாகதி, நம்முடைய வாழ்வின் பாதுகாப்பான திசை இது, ஏனென்றால் நாம் இந்த திசையில் எவ்வளவு அதிகமாகச் செல்கிறோமோ, அந்த அளவிற்கு சிக்கலில் இருந்தும், பிரச்னைகளில் இருந்தும் நம்மை நாமே காப்பாற்றுகிறோம்.

சுருக்கம்

சரணாகதியின் அர்த்தம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இதன் பாதுகாப்பான திசை மற்றும் என்ன காரணங்களுக்காக நம்முடைய வாழ்வில் இதனை பொருத்துகிறோம். பௌத்த நடைமுறையில் மிகவும் அடிப்படையானதாக மற்றும் மிகவும் முக்கியமானதாக இது கருதப்படுகிறது. பலர் இதனை அர்ப்பமாக்க முனைவது உண்மையில் அவமானகரமானது. நம் வாழ்வில் இந்த திசை இருக்கிறதா இல்லையா என்பது மிக முக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும் மற்றும் நம் வாழ்வில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.சரணாகதி என்பதன் அர்த்தம் ஒரு சடங்கிற்கு சென்றோம், சிறிது தலைமுடியை நறுக்கினோம் மற்றும் ஒரு திபெத்திய பெயரைப் பெற்றோம், இப்போது கழுத்தில் சிவப்பு கயிறை அணிந்து கொண்டு ஒரு மன்றத்தில் இணைந்து விட்டோம் என்பதல்ல. உண்மையில் இது போன்ற சிந்தனை மொத்த அம்சங்களையும் அர்ப்பமாக்குகிறது மற்றும் அதை மிகவும் அர்த்தமற்ற ஒன்றாக மாற்றுகிறது.

நம்மை நாமே கேட்க வேண்டிய ஒரு கேள்வி: “சரணாகதி எடுத்துக்கொண்ட யாரோ ஒருவர், பௌத்தரான அவர், உண்மையில் அவருடைய வாழ்வில் இந்த திசையை பொருத்துகிறாரா? ஒரு மன்றத்தில் இணைந்திருக்கிறோம் என்பதைத் தவிர வேறு ஏதேனும் குறியீடு தன்னுடைய வாழ்வில் இருக்கிறதா?” சரணாகதி அடைவதன் மூலம் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டதற்கான அடையாளம் இல்லையென்றால், நிச்சயமாக நாம் மேலும் செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அடித்தளம் இல்லாமல் இன்னும் மேம்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற முயற்சிப்பது வெற்றியைக் கொடுக்காது.

Top