வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை புகுத்துத்தல்

நம் வாழ்க்கையை வழக்கமாகவும் அர்த்தமற்றதாகவும் காணும்போது, ​​நம்முடைய குறைபாடுகளை சமாளிக்கவும், நம்முடைய திறன்களை உணரவும் நமக்கு நாமே செயல்படுவதன் மூலம் ஒரு அர்த்தமுள்ள திசையைப் பெறுகிறோம்.
Meditation a meaning in life

விளக்கம்

நம்மில் பலரும் வாழ்க்கை எங்கும் நம்மை போய்விடாது என்று கருதுகிறார்கள். நாம் செய்யும் பணியை அர்த்தமில்லாததாகக் காணலாம், அல்லது முன்னேற்றத்திற்கான எந்த வாய்ப்புகளையும் காணாமல் நாம் வேலையின்றி இருக்கலாம். நம்முடைய கல்வியின் அர்த்தம் மற்றும் மதிப்பை கேள்வி கேட்பவராக இன்னும் பள்ளியிலேயே கூட இருக்கலாம்.  வாழ்வில் விஷயங்கள் மோசமாகிவிடக் கூடாது என்று நாம் பயப்படுகிறோம் அதனால் அழுத்தத்தில் விழுந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. இவை எல்லாவற்றுடனும், நாம் சில அர்த்தமுள்ளவற்றை செய்ய விரும்புகிறோம் அது நம்முடைய உலகத்தில் சில நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும், மேலும் நாம் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். நிறைய பணம் சம்பாதித்தலும், ஏராளமான பொருட்களைக் கொண்டிருத்தலும் அர்த்தத்திற்கான திருப்தியைத் தராது என்பதை நம்மில் பெரும்பாலானவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். 

பௌத்தம் இந்த விவகாரத்தை பாதுகாப்பான திசை என்ற தலைப்பில் அணுகுகிறது, பொதுவாக அடைக்கலம் என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது. நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத இந்த மனித வாழ்க்கையானது நிச்சயமாக மரணம் என்பதில் தான் முடியும், இந்த வாழ்வில் நாம் நேர்மறையான எதையாவது இப்போது செய்யாவிட்டால் மோசமான மறுபிறப்புகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்தால், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை நாம் காணலாம். அதே போன்று, மறுபிறப்பை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட,நாம் இப்போது கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையை போற்றலாம், இறக்கப் போகிறோம் என்பது தெரிந்ததும் வருத்தத்துடன் இந்த வாழ்க்கை எவ்வளவு அர்த்தமில்லாதது என்று வேதனைப்படுகிறோம், இந்த வாழ்க்கை காலகட்டத்தில் விஷயங்கள் மேலும் மோசமடையப் போவதாக நாம் அஞ்சுகிறோம்.  

பௌத்தம் கொடுக்கும் பாதுகாப்பான திசையானது மூன்று விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் மூலம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. அதில் முக்கியமானது தர்மம் – சரியான நிறுத்தங்கள் மற்றும் சரியான மனதின் பாதைகள் – எனவே, நம்முடைய குறைபாடுகளை வெல்வதற்கு நமக்கு நாமே செயலாற்றுதல் மேலும் அனைத்து நல்ல குணங்களை வளர்ப்பதன் மூலம் நம்முடைய அனைத்துத் திறன்களையும் உணரலாம். குறைபாடுகள் என்பது சிக்கலான உணர்வுகள், ஒருநிலைப்படுத்த இயலாமை, சுய –போற்றுதல், திறம்படதொடர்பு கொள்வதில் இருக்கும் கஷ்டங்கள், உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. நற்பண்புகள் என்பது அடிப்படை மனித மதிப்புகளான கருணை, இரக்கம், பொறுமை, புரிந்துகொள்தல், மன்னித்தல், நேர்மை அதே போன்று நன்னெறிகளுக்கான உணர்வு, ஒருநிலைப்படுத்துதல் மற்றும் உள்ளுணர்வு உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியது. புத்தர்கள் முழுமையாகச் செய்ததைப் போல அதிகம் உணர்ந்த குருக்கள் பகுதியாக செய்ததைப் போல நல்ல குணங்களைப் பெறுவதற்கு செயலாற்றுதல், நிச்சயமாக நம்முடைய வாழ்வில் தெளிவான அர்த்தத்தை புகுத்தும்.

நாம் விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், அதன் அர்த்தம் வெறுமனே நம்முடைய  வெற்றியை சமூக ஊடகத்தில் பகிர்வது என்பது மட்டுமல்ல, மாறாக வளர்ச்சி காணும் தன் – நம்பிக்கையை நம்மால் இயன்ற சிறயதோ அல்லது பெரியதோ ஏதோ ஒரு வழியில் நம்முடைய வளர்ச்சியுடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவலாம். நம்முடைய வாழ்வில் பாதுகாப்பான திசையை செலுத்துதல் என்பது விஷயங்கள் மேலும் மோசமாகிவிடுமோ என்ற பயத்தின் அடிப்படையிலானது, நம்பிக்கை என்பது உண்மையில் நமக்கு நாமே செயலாற்றி நம்முடைய வாழ்க்கை மோசமாகாமல் பாதுகாப்பான திசையில் தற்காத்துக்கொள்வதாகும், மேலும் யாருக்காக நாம் இரக்கமும் அக்கறையும் கொள்கிறோமோ அவர்களுடன் நமது சாதனைகளை பகிர்ந்து உதவலாம்.   

தியானம்

  • அமைதியாக அமர்ந்து சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் வாழ்க்கை பற்றி சிந்தித்து அதை அர்த்தமுள்ளதாகக் கருதுகிறீர்களா இல்லையா என்பதை மதிப்பிடுங்கள்.
  • உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களை மற்றவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்
  • உங்களுடைய குறைபாடுகளை வெல்வதற்கு நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள் மேலும் உங்களது திறன்கள் உங்களுடைய வாழ்வில் அர்த்தத்தை கொடுக்கிறது என்பதை உணருங்கள் மேலும் மற்றவர்களுடன் அர்த்தமுள்ளவற்றை பகிர்ந்து கொள்ள உங்களை இயக்குங்கள், வெறுமனே அற்பமானவற்றை பகிராமல், நீங்கள் என்ன பகிர்ந்தீர்களோ இணையவழியில் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் கலந்துரையாடியது ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவியது என்றால் அது எவ்வளவு அற்புதமானது. 
  • உங்கள் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள திசை இல்லாததால் ஒரு குன்றிலிருந்து ஆழ்ந்த மனச்சோர்வுக்குள் விழுந்துவிடுவதைப் போன்று கற்பனை செய்து பாருங்கள்.
  • இந்த அழுத்தத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள் அதை மற்றவர்களிடமும் நீங்கள் பகிர்ந்தால் அதுவே அற்புதமான பரிசு. 
  • உங்களுடைய வாழ்வில் அந்த திசையை செயல்படுத்த தீர்மானியுங்கள்.
  • திரும்பவும் அதையே கற்பனை செய்யுங்கள், மாறாக இப்போது நீங்கள் விழப்போகும் அந்தக் குன்றின் விளிம்பில் இருக்கிறீர்கள். 
  • மீண்டும் அதையே கற்பனை செய்யுங்கள், மாறாக உங்களுக்கு குன்றில் இருந்து சில வழிகள் இருக்கிறது, ஆனால் நீங்கள் மெல்ல அதை நெருங்கிச் செல்கிறீர்கள்.   

சுருக்கம்

நம்முடைய வாழ்வை வழக்கமானதாகவும், சலிப்பானதாகவும், அர்த்தமற்றதாகவும் கண்டால், நாம் செயல்திறன் அணுகுமுறையை எடுக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் நாம் நேர்மறை திசையை செலுத்த வேண்டும், அந்த ஒன்று நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த திசையானது நம்முடைய குறைபாடுகளை வெல்வதற்க நமக்கு நாமே செயலாற்றி நம்முடைய நேர்மறை திறன்களை உணர்தலாகும்.  புத்தர்கள் செய்ததைப் போலவும், மிகவும் உணர்ந்தவர்கள் ஓரளவுக்கு சாதித்திருப்பதைப் போலவும் இதை முழுமையாகச் செய்வதே நமது இறுதி குறிக்கோளாக இருக்கிறதோ இல்லையோ - இந்த பயணத்தில் தொடர்ந்து செல்வது நம் வாழ்வின் தரத்தை பெரிதும் மேம்படுத்தும்.

Top