நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்த நமக்கு நாமே செயலாற்றுவதற்கு கொண்டிருக்கும் சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்.
Meditations appreciating life

விளக்கம்

நமக்கு மிகவும் பிடித்த உணவு ரெஸ்டாரன்ட்டில் தீர்ந்து போதல் அல்லது நாம் விரும்பும் நேரம் அல்லது தேதியில் விமானம் அல்லது ரயிலில் இடம் கிடைக்காமல் போதல், அல்லது சளி பிடித்திருப்பதால் நாம் விரும்பும் நேரத்தில் நீச்சல் அடிக்க முடியாமல் போதல் உள்ளிட்ட சிறு பிரச்னைகளுக்காக நமக்கு நாமே பெரும்பாலான சமயத்தில் சோகமாக உணர்வோம். ஆனால் நாம் நம்முடைய வாழ்வை புறநிலை ரீதியாக பார்த்தால், நாம் நம்ப முடியாத அதிர்ஷ்டசாலி என்பதை நாம் அடையாளம் காண்போம். ஆக்கபூர்வமான அல்லது பயனுள்ள எதையும் செய்வதற்கான நமது திறனை உண்மையில் பாதிக்கும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு இருக்கிறோம். குறிப்பாக நம்முடைய வாழ்வின் சூழலை மேம்படுத்தும் பௌத்தம் போன்ற ஆன்மிக போதனைகளைப் பற்றி கற்கும் கூடுதலான பல வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன.

நாம் அழிவு மண்டலத்தில் சிக்கிக்கொண்டிருந்தால் உதாரணமாக நேபாளத்தில் 2015 நிலநடுக்கத்திற்கு பிறகோ அல்லது பஞ்ச மண்டலத்திலோ, அல்லது போர்க்களத்திலோ, அல்லது ஆன்மீக பயிற்சியானது சட்டத்திற்கு எதிரானது மற்றும் கிடைக்கக்காத இடத்திலோ, அல்லது சிறையில் வன்முறையான குற்றவாளிகளுடன் பூட்டிவைக்கப்பட்டு இருந்தாலோ, அல்லது போர்க்களத்தில் ராணுவத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தாலோ, நம்மால் எப்படி பௌத்த போதனைகளை கற்றுக்கொண்டு அந்த வழிமுறைகளை நம்முடைய நடைமுறையில் பயிற்சிப்பது? அல்லது நாம் உடல், மனம் அல்லது உணர்வு ரீதியாக ஊனமாக இருந்தால் ஒரு வேளை நாம் செய்வது சாத்தியமாக இருந்தாலும் அது குறிப்பாக கஷ்டமாக இருக்கும்? அல்லது நாம் மிகவும் செல்வந்தராக இருக்கிறோம், வேலை செய்ய வேண்டிய அவசியம் எப்போதுமே இல்லை, நம்முடைய வாழ்க்கை முழுவதும் பார்ட்டிகள் மற்றும் கேளிக்கையாகவே நிறைந்திருக்கிறது, இதனால் ஆன்மிக விஷயங்களில் நாட்டமில்லை?  அல்லது ஆன்மிக பயிற்சியை நோக்கி  நாம் முற்றிலும் குறுகிய எண்ணம் கொண்டவராகவும் நாத்திகராகவும் இருக்கிறோம்? 

அதே போன்று, நாம் பல வாய்ப்புகளை இப்போது கொண்டிருக்கிறோம். போதனைகளின் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன, அவை புத்தகத்திலும், இணையதளத்திலும் கிடைக்கின்றன, அங்கு புரவலர்கள் தங்களது பதிப்பை ஆதரிக்கின்றனர், ஆசிரியர்களும் இருக்கின்றனர், மையங்கள் இருக்கின்றன அங்கு சென்று நாம் படிக்கலாம் மற்றும் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள், மேலும் நமக்கு அறிவாற்றலும் கற்றல் ஆர்வமும் இருக்கிறது. 

உண்மை என்னவென்றால் நாம் இதுபோன்ற மோசமான சூழல்களில் இருந்து விடுபட்டிருக்கிறோம் மேலும் நம்முடைய வாழ்க்கை இது போன்ற வாய்ப்புகளால் நிறைந்திருந்திருப்பதால் நம்முடைய வாழ்வை தனித்துவமாக்குகிறது. நம்முடைய விலைமதிப்பில்லாத வாழ்வில் நாம் மகிழ்ச்சிகொள்ள வேண்டும் மேலும் அதன் முழுப் பலனையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

தியானம்

 • சுவாசத்தில் கவனம் செலுத்தி அமைதியாக இருங்கள்.
 • நேபாளத்தின் நீங்கள் மலையேற்றம் செய்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், அந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு, தப்பிக்க எந்த வழியும் இன்றி, உணவோ அல்லது தண்ணீரோ இல்லாமல் சிக்கிக்கொள்கிறீர்கள். அதன் பின்னர் நீங்கள்  விமானத்தின் மூலம் மீட்கப்பட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அது போன்ற ஒரு மோசமான சூழலில் இருந்து விடுபட்டதை எவ்வளவு அற்புதமாக உணர்வீர்கள். அந்த சுதந்திரத்தில் மகிழ்ந்திருங்கள்.
 • நீங்கள் சிரியாவில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், இஸ்லாமிய அரசு உங்கள் நகரத்தை கைப்பற்றிவிட்டது, நீங்கள் வெளியேறுவதற்கு வழியே இல்லை. பின்னர் அதில் இருந்து விடுபட்டதாக கற்பனை செய்யுங்கள். மகிழ்ந்திருங்கள்.
 • முரட்டுத்தனமான குற்றவாளிகள் கும்பலுடன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்யுங்கள், அந்த குற்றவாளிகள் வன்முறையானவர்கள் மற்றும் பகலிலும் இரவிலும் உங்களை அச்சுறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட சிறையில் இருந்து விடுபட்டதாக கற்பனை செய்யுங்கள். மகிழ்ந்திருங்கள்.
 • சூடானின் பஞ்சம் மற்றும் வறட்சியில் பசியோடு இருப்பதாக கற்பனை செய்யுங்கள். அதன் பின்னர் ஒரு உணவுப் பொட்டலம் விழுகிறது அதில் உண்பதற்கு போதுமான உணவு மற்றும் குடிப்பதற்கு குடிநீரும் இருப்பதாக கற்பனை செய்யுங்கள்.

மகிழ்ந்திருங்கள். 

 • அல்சைமர் நோய் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் எதையும் அல்லது யாரையும் நினைவில் வைத்திருக்க முடியாது, மேலும் சேர்ந்தால் போல மூன்று சொற்களைக் கூட பேச முடியாது. பின்னர் அதில் இருந்து குணமடைந்துவிட்டதாக கற்பனை செய்து பாருங்கள். மகிழ்ச்சியடையுங்கள்.
 • பூகம்பத்தில் நேபாளத்தில் சிக்கிக் கொள்தல், ஐ.எஸ்.ஐ.எஸ் கீழ் சிரியாவில் சிக்கிக் கொள்தல், வன்முறைக் கும்பலுடன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருத்தல், சூடானில் பஞ்சத்தில் பட்டினி கிடத்தல், அல்சைமர் நோயால் பாதிக்கப்படுதல் – உங்கள் முதுகில் இருக்கும் இந்த சுமைகளிலிருந்து விடுபடுவதை படிப்படியாக உணருங்கள்.
 • நீங்கள் கொண்டிருக்கும் நம்பமுடியாத சுதந்திரத்தை உணருங்கள்.
 • நீங்கள் கொண்டிருக்கும் அனைத்து நம்பமுடியாத வாய்ப்புகளையும் சிந்தியுங்கள்:  போதனைகளின் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன, அவை புத்தகத்திலும், இணையதளத்திலும் கிடைக்கின்றன, அங்கு புரவலர்கள் தங்களது பதிப்பை ஆதரிக்கின்றனர், ஆசிரியர்களும் இருக்கின்றனர், மையங்கள் இருக்கின்றன அங்கு நாம் படிக்கலாம் மற்றும் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள், மேலும் நமக்கு அறிவாற்றலும் கற்றல் ஆர்வமும் இருக்கிறது. 
 • முடிவில், உங்களிடம் உள்ள அனைத்து சுதந்திரங்களையும், வளப்படுத்தும் காரணிகளையும் நினைவூட்டுங்கள்,  பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடுகையில் மற்றும் வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில் இது எவ்வளவு தனித்துவமானது.
 • மகிழ்ச்சியடையுங்கள், உங்களிடம் உள்ள இந்த தனித்துவமான வாழ்க்கையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதை வீணாக்காதீர்கள்.

சுருக்கம்

நம்முடைய தற்போதைய சூழலைப் பற்றி சிந்தித்து பாருங்கள், குறைந்தபட்சம் இந்த நொடியிலாவது, நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருக்கிறோம், நம்முடைய சொந்த உணர்வு மற்றும் ஆன்மிக மேம்பாட்டிற்காக செயல்படுவதற்கு நேரமின்றி வாழும் கொடிய சூழலில் இருந்து விடுபட்டு, நாம் என்ன கொண்டிருக்கிறோமோ அதில் ஆழ்ந்த போற்றுதலை உருவாக்குகிறோம். யாருடைய வாழ்க்கையும் எந்தச் சூழலும் சிறந்ததல்ல, இருப்பினும் ஒப்பிட்டு பார்க்கும் போது அது எவ்வளவு மிகக் கொடுமையானது, உண்மையில் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலி.  இந்தப் போற்றுதலுடன், நம் வாழ்க்கையை இன்னும் சிறப்பாகச் செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம்.

Top