வாழ்க்கையில் எல்லாமே எல்லா நேரத்திலும் மாறுகிறது என்ற உண்மையை நாம் மதிக்கும்போது, ​​மற்றவர்களுடன் பழமையான வழிகளில் தொடர்புபடுகிறோம் என்று சிக்கித் தவிப்பதைத் தவிர்க்கிறோம்.
Meditation impermanence

விளக்கம்

நிலையாமையின் அர்த்தம் மாற்றம்: காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் பாதிக்கப்படும் விஷயங்கள் ஒருபோதும் நிலையானவை அல்ல. அவை நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மை கொண்டவை. உங்களது கணினி, கார் அல்லது உடலைப் போன்ற சில விஷயங்கள், ஒரு முறை உருவாக்கப்பட்டால், மெல்ல தேய்ந்து அழிந்து முற்றுமாக வீழ்ந்து போகும். மற்ற சில விஷயங்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாறும், ஆனால் எந்த சமயத்திலும் புதுப்பிக்கத்தக்கது, 

உங்களது அடிப்படை மனதின் செயல்பாடு போல. நீங்கள் குழந்தையாகவோ, வயதானவராகவோ அல்லது அல்சைமர் பாதிக்கப்பட்ட நோயாளியோ ஏன் யாராக இருந்தாலும் மனதின் செயல்பாடு நீர்த்துப் போய்விடுவதில்லை. இன்னும் சிலவற்றைப் பார்த்தால் அவை ஏறும் அல்லது இறங்கும், வெப்பநிலை அல்லது உங்களது தியானத்தின் தரம் போல; இன்னும் சில அம்சங்கள், விமானப் பயணிகளைப் போல சட்டென கூடி, பட்டென கலைவதைப்போல; வேறு சில விஷயங்கள் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வட்டமடிக்கும், பருவ நிலை மாற்றங்கள் அல்லது பகல்-இரவு சுழற்சி போன்றவை, ஆனால் வெகு சில விஷயங்கள் தோன்றி, நெடுங்காலம் இருந்து பின்னர் முடிவுக்கு வரும் அண்டம் போன்றது என்கிறது பௌத்த பார்வை. இப்படி பல வகையான நிலையாமைகள் இருக்கின்றன.

துரதிஷ்டவசமாக, நம்முடைய மனம் ஒரு கனத்தில் நேரத்தை ஒரே முறையாக உணர முடியாததால் நாம் குழப்பமடைகிறோம். நம்முடைய உறவுமுறைகள், நம்முடைய இளமை, நம்முடைய மனநிலை உள்ளிட்டவை போல சில நேரங்களில் விஷயங்கள் எப்போதும் மாறாமல் நிலையாக இருக்கும் என்று நினைக்கிறோம். நாம் அவ்வாறு சிந்தித்தால், நாம் துன்பத்தையும் சிக்கல்களையும் நமக்கு நாமே உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு, நாம் ஒருவருடன் அன்பான உறவுமுறையில் இருக்கிறோம். இது குறிப்பிட்ட காரணம் மற்றும் சூழ்நிலையால் தோன்றுகிறது – நாம் இருவருமே ஒரே இடத்தில் இருக்கிறோம், நாம் இருவருமே துணையைத் தேடுகிறோம், இருவரின் வாழ்விலுமே வேறு இதர குறிப்பிட்ட விஷயங்கள் உள்ளன. ஆனால், காலப்போக்கில், அந்த நிபந்தனைகள் மாறிவிட்டன. தொடக்கத்தில நாம் கொண்டிருக்கும் வகையான உறவுமுறையிலேயே நாம் பிடிமானமாக இருந்தால், நம்முடைய இணையர் பணியை மாற்றினாலோ, வேறு நகரத்திற்கு இடம்பெயர்ந்தாலோ அல்லது பார்வையாளர் யாரோ வந்திருந்தால், அல்லது புதிய நண்பர்களை உருவாக்கினால், அல்லது வாழ்க்கையில் இதே போன்ற ஏதேனும் நடந்தால் நம்மால் நம்முடைய உறவுமுறையில் விட்டுக்கொடுத்து வாழ முடியாது. நம்முடைய உறவுமுறை முன்னர் எப்படி இருந்ததோ அதையே நாம் பற்றிக்கொள்கிறோம், ஏனெனில் அது யதார்த்தத்திற்கு வெளித்தொடர்பில் இருக்கிறது, நாம் பாதிக்கப்படுகிறோம், மகிழ்ச்சியின்றி இருக்கிறோம். 

நம்முடைய தியானத்திற்காக, மாற்றங்களுக்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவோம், அவை எப்போதும் மாறக்கூடியவை, காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும் கடைசியில் முடிவிற்கு வரும் என்பதை உணர்ந்து அதில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

தியானம்

  • அமைதியாக அமர்ந்து சுவாசத்தின் மீது கவனம்செலுத்துங்கள்.
  • உங்களுடைய தாயுடனான உறவுமுறையில் கவனம் செலுத்துங்கள்.
  • அது எப்படி தொடங்கியது என்று கவனியுங்கள் – நீங்கள் சிசுவாக இருந்தீர்கள் அது உங்களது உறவுமுறையை குறிப்பிட்ட வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
  • பின்னர் நீங்களும் உங்களது தாயும் வயது முதிர்ந்தீர்கள், குழந்தையாக இருந்த நீங்கள், பதின்பருவத்தினராக, இளைஞரானீர்கள், உங்கள் தாய்க்கும் வயது கூடியது, உங்களது உறவு முறையும் மாறியது – அல்லது அப்படி நடக்கவில்லையா?
  • அவர் இறக்கும் போதோ அல்லது ஏற்கனவே இறந்திருந்தாலோ, நேரடியாக தொடர்பு கொள்ளும் உறவுமுறை வேண்டுமானால் முடிவுக்கு வந்திருந்தாலும், அவரைப் பற்றிய உங்களது அணுகுமுறை மற்றும் நினைவுகள் எப்படி மாறுகிறது தொடர்ந்து மாறப்போகிறது என்பதை கவனியுங்கள். 
  • இவ்வாறே உங்கள் தந்தையுடனான உங்களது உறவு முறையில் கவனம் செலுத்துங்கள். 
  • இதே வழியில் நீங்கள் அதிகம் விரும்பும் அல்லது மிக அதிகமாக விரும்பிய துணையுடனான உறவு முறையில் உங்களது கவனத்தை செலுத்துங்கள். 
  • உங்களது தொழிலிலும் கவனம் செலுத்துங்கள்.

சுருக்கம்

நிலையாமை என்பது வாழ்வின் நிதர்சனம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்துமே எல்லா நேரங்களிலும் மாறக்கூடியது, எதுவுமே மாறாமல் அப்படியே இருக்கப் போவதில்லை. நாம் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால், ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டு, அது எப்போதும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது பயனற்றது என்பதை உணரலாம். நம்முடைய வாழ்வில், உறவுமுறையில், உடலில் எதிர்பாராமல் நிகழும் மாற்றங்களை சகித்து வாழ முடிந்தால், மகிழ்ச்சியின்மை மற்றும் நாம் கொண்டிருக்கம் பிரச்னைகள் எனும் பெரிய சவாலை தவிர்க்கலாம்.

Top