இரக்கத்தை உணர்தல்

நம்முடைய பிரச்னைகள் மற்றும் அவற்றின் காரணங்களிலிருந்து விடுபட ஒருமுறை நாம் உறுதியாகிவிட்டால், நம்முடைய அக்கறையை நாம் மற்றவர்களுக்கும் இரக்கத்தோடு பரிமாற்றுவோம், இரக்கத்துடன், அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்கிறோம்.
Meditation feeling compassion

விளக்கம்

அக்கறை, யதார்த்தமான அணுகுமுறையை நாம் ஒரு முறை வளர்த்துக்கொண்டால், அடுத்த அடியானது பிறருக்காக இரக்கத்தை வளர்த்தெடுப்பதாகும். இரக்கம் என்பது பரிதாபப்பட்டு மற்றவர்களை குறைத்துக் காண்பதல்ல மாறாக பச்சாதாபம் அடிப்பமையிலானது – மற்றவர்களின் உணர்வுகளை உணர்தலாகும். துன்பம் மற்றும் அதற்கான காரணங்கள் நம்மை விட்டு விடுபட வேண்டும் என்று நாம் விரும்புவது போல மற்றவர்களும் விடுபட விரும்புதலே இரக்கம் என்பதாகும். இது விருப்பமான சிந்தனையை குறிப்பிடுவது மட்டுமல்ல  நம்பிக்கையில்லாதது என்றும் அறிதலுக்கு மாறாக அவ்வகையானவற்றில் இருந்து விடுபடுவது சாத்தியமே என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது. இரக்கம் என்பது பிறருக்கு உதவும் ஆவலையும் உள்ளடக்கிய ஒரு காரணியே மேலும் நம்மால் இயன்ற ஏதாவது ஒரு வழியில் உதவுவதற்கான நோக்கம். இது வெறுமனே செயலற்றதல்ல. நாம் உடல் ரீதியிலோ அல்லது பொருள்வாதம் வழியாகவோ உதவலாம், அல்லது தேவையெனில், மற்றவர்கள் அவர்களின் சிக்கல்களை வென்று வருவதற்கான மன நிலையை நாம் உளப்பூர்வமாக உருவாக்கி, அதை அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக கற்பனை செய்வதாகக் கூட இருக்கலாம். 

தியானம்

  • அமைதியாக அமர்ந்து சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள்.
  • நிலநடுக்கத்தில் நீங்கள் உங்களது வீடு மற்றும் அனைத்து உடைமைகளையும் இழந்து  விட்டதாக கற்பனை செய்துகொள்ளுங்கள், நீங்கள் இப்போது வெட்டவெளியில் தான் உறங்க வேண்டும், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி போராட வேண்டும், உங்களுடைய வாழ்வை மறுகட்டமைக்க உங்களிடம் பணம் இல்லை. நீங்கள் இப்போது முழுவதுமாக நம்பிக்கையின்றி மன அழுத்தமாக உணர்கிறீர்கள். 
  • நீங்கள் இந்தச் சூழலில் இருந்து எப்படி விடுபடுவீர்கள் என்று கற்பனை செய்யுங்கள் மேலும் உங்களுடைய மகிழ்ச்சியின்மைக்கான காரணம் உங்களது மனஅழுத்தம் என்பதை அடையாளம் காணுங்கள், எனவே அந்த அழுத்தத்தில் இருந்து விடுபடுவும், வாழ்வை மறுகட்டமைப்பதற்கான வழியை கண்டறியவும் வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். 
  • உங்களுடைய தாயும் அதே சூழலில் இருப்பதாக கற்பனை செய்யுங்கள் நீங்கள் விடுபட வேண்டும் என்று கொண்ட உறுதியை உங்களுடைய தாயாருக்கானதாக மாற்றுங்கள் இவ்வாறாக இரக்கத்தை வளர்த்தெடுங்கள் – அவருக்கான உறுதியென்பது அவர் அதில் இருந்து விடுபட வேண்டும். 
  • அவர் நம்பிக்கை இழக்காமல் தைரியத்துடன் இருந்து வாழ்வை மறுகட்டமைப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும் என்று விரும்புங்கள். 
  • பின்னர் இதே சிந்தனையை நேபாளத்தில் தற்போது இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கான சூழலாக கற்பனை செய்து அவர்களுக்கான இரக்கமாக மேம்படுத்துங்கள். 
  • இதே நடைமுறையை உணர்வுகளின் சமநிலையின்மைக்கு செயல்படுத்துங்கள். நீங்கள் எப்போது உணர்வு சமநிலையின்றி இருந்தீர்கள் என்பதை நினைவுபடுத்துங்கள், மேலும் உணர்வின் சமநிலையை அமைதியை வளர்த்தல், தெளிவான மனநிலையின் மூலம் பெற முடியும் என்பதை உணருங்கள், சமநிலையின்மையில் இருந்து விடுபடுவதற்கான உறுதியை உருவாக்குங்கள். 
  • தொடர்ந்து இதனையே உங்களுடைய தாய் மற்றும் அனைவருக்குமானதாக மாற்றுங்கள்.

சுருக்கம்

நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், துன்பப்படக் கூடாது என்று விரும்புகிறோமோ, மற்ற அனைவருக்கும் கூட அதே நிலை தான் என்பதே உண்மை. நம்மைப் போலவே, ஒவ்வொருவருமே தங்களுடைய துன்பம் மற்றும் சிக்கல்களில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். அவர்களுக்கான இரக்கத்தை வளர்த்தெடுக்க – அவர்கள் துன்பத்தில் இருந்து விடுபட விரும்புவது – முதலில் நாம் நம்முடைய பிரச்னையை அங்கீகரித்து அதனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான உறுதியான நம்பிக்கையை வளர்த்தெடுங்கள். நாம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய சொந்த துயரங்களை அகற்றலாம், நம்மால் முயன்ற சிறந்ததை முயற்சித்தால் பிறரின் துன்பங்களை உணர்ந்து அவர்களின் துன்பங்களையும் கூட அவர்கள் வென்று வருவதற்கான உறுதியை மேம்படுத்த உதவலாம். மற்றவர்கள் மீது நாம் செலுத்தும் அந்த உறுதியையே நாம் “இரக்கம்” என்று அழைக்கிறோம்.

Top