சுவாசத்தில் கவனம் செலுத்தி அதன் சுழற்சியை எண்ணிக்கொண்டிருக்கும் போது, நம்மை நாமே அமைதிப்படுத்திக்கொள்வதனால் நம்மால் நேர்மறை மன நிலைகளை உருவாக்க முடியும்.
Meditation calming down cesar couto unsplash

விளக்கம்

தியானம் என்பது ஒரு முறை திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் நேர்மறை பழக்கங்களை கட்டமைப்பதற்கானது, அதாவது பழைய பழக்கத்தை பலவீனமாக்கி புதிய நரம்பு மண்டல பாதையை உருவாக்குவதைப் போன்றது. இவ்வாறு செய்வதற்கு, முதலில் போட்டி போடும் நம்முடைய மனதை அமைதிப்படுத்த வேண்டும். இதனால் புதிய மேலும் பயனுள்ள புரிதல் மற்றும் அணுகுமுறைக்கான திறந்த இடத்தை உருவாக்கலாம். அமைதிப்படுத்தும் ஒரு திறனும் கூட பயனுள்ள பழக்கமே, ஆனால் அது ஒரு நடுநிலையான நிலை பின்னர் அதுவே ஆக்கப்பூர்வமான அல்லது அழிவுகரமான நடத்தையை உருவாக்குவதற்கான அடித்தளமாகிறது. நாம் இந்த அமைதியான நிலையை ஆக்கப்பூர்வமான மனநிலையை உருவாக்குவதற்கான திறந்த இடமாக பயன்படுத்த வேண்டும் மேலும் இது அதற்கான இன்றியமையாத தயார் நிலையாகும். 

அமைதிபடுத்துவது வாழ்வில் வரும் கடினமான விஷயங்களை மேலும் சிறப்பாக கையாள உதவுகிறது. பெரும்பாலும், அவற்றை சரியாக கையாள்வதில் இருந்து எது நம்மை பாதுகாக்கிறது என்றால் நம்முடைய தெளிவில்லாத மனநிலை; சோர்வாகவும் அழுத்தத்துடனும் இருப்பதால் அவை மன அலைபாய்தலுடன் நிறைந்திருக்கிறது. உதாரணமாக, நமக்கு அன்றைய வேலை கடினமாகவும், நீண்டதாகவும் இருந்திருக்கும்; நாம் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரையிலும் கூட மேலும் அதிகமான பணி இருக்கும். சுவாசத்தில் கவனம் செலுத்துவது அமைதிப்படுத்துவதற்காக நமக்கு உதகிறது எனவே இந்த சவாலான மனநிலையை நாம் தெளிவான மனதோடு கையாள முடியும்.

தியானம்

  • நேராக அமர்ந்து, உங்களுடைய மடி மீது கை வைத்து, கண்களை பாதி-திறந்து, தரையை நோக்கி பார்க்கவும் மேலும் உங்களுடைய பற்களை இறுக கடித்திருக்கக் கூடாது.
  • உங்கள் உடலில், குறிப்பாக உங்கள் தோள்கள், வாய் மற்றும் நெற்றியில் உள்ள பதற்றத்தை நிதானப்படுத்துங்கள். உடலில் பதற்றத்தை வெளியேற்றாவிட்டால் நம்மால் மனதை அமைதிப்படுத்த முடியாது.
  • மூக்கு வழியாக சாதாரணமாக சுவாசியுங்கள்.
  • உங்கள் மனதில், உங்கள் மூக்கிலிருந்து உள்ளும் புறமுமாக  வரும் சுவாசத்தின் உணர்வை மையமாகக் கொண்டு 11 சுற்றுகளாக சுவாசத்தை மீண்டும் மீண்டும் எண்ணுங்கள்.
  • சுவாசித்தல் மற்றும் எண்ணுதல் உணர்வை நினைவில் கொள்ளுங்கள் (மனப்பசையை இறுகப் பிடித்திருங்கள்)
  • சோர்வு அல்லது மனம் அலைபாய்வதனால் நீங்கள் கவனம் இழக்க நேரிட்டால் கண்டறிந்து விழிப்படைவதை பேணுங்கள்.
  • நீங்கள் கவனம் இழந்து விட்டதை கண்டறிந்தால், உங்களுடைய கவனத்தை சுவாசம் மற்றும் எண்ணிக்கையில் மீண்டும் செயல்படுத்துங்கள்.
  • மனம் அலைபாய்வதை நீங்கள் கண்டறிந்தால், மேல்ல அந்த சிந்தனையை வெளியேற்றி, நீங்கள் மூச்சை வெளியே விடுவதைப் போல உங்கள் மனதில் இருந்து அந்த சிந்தனை வெளியேறி விட்டதாக கற்பனை செய்யுங்கள், மீண்டும் உங்களுடைய கவனத்தை சுவாசித்தல் மற்றும் எண்ணிக்கைக்கு திருப்புங்கள். 
  • உங்களுடைய தோள்பட்டைகள் அல்லது முகம் மீண்டும் இறுக்கம் அடைந்தால், மீண்டும் ஒரு முறை அதனை நிதானப்படுத்துங்கள்.
  • முடிவில், தியானத்தில் இருந்து வெளியேறும் மாற்றமாக, அமைதியான மனதுடன் மீண்டும் அமைதிபடுத்துங்கள். 

சுருக்கம்

நாம் சோர்வாகவோ மற்றும் அழுத்தமாகவோ இருந்தால் சவாலான சூழல்களை கையாள்வதற்கு மேலும் அதிக மனத்தெளிவு மற்றும் உணர்வின் சமநிலை தேவையென்றால், நாம் அமைதிபடுத்தி நம்முடைய மனம் மற்றும் உணர்வின் அமைதியை திரும்பப் பெறலாம்.  ஒரு கணினி போல, நாம் நம்முடைய மனதை மறுதொடக்கம் செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்கு, சுவாச எண்ணிக்கை சுழற்சியின் போது நாம் நம்முடைய உடலை நிதானப்படுத்தி சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தியானிக்கும் போது இந்த முறையை பயிற்சிப்பதனால், அது ஒரு புதிய நரம்புப் பாதையையும் பழக்கத்தையும் கட்டமைக்கிறது, எனவே நாம் அந்த முறையை நினைவில் கொண்டு அன்றாட வாழ்வில் தேவைப்படும் போது செயல்படுத்துவோம் மேலும் செயல்படுத்துவதற்கும் இது எளிதாக்கி அதை நிலைநிறுத்துகிறது.

Top