வழிகாட்டப்பட்ட தியானங்களை எவ்வாறு பயன்படுத்துவது

இந்த வழிகாட்டப்பட்ட தியானங்களை பின்பற்றுவதன் மூலம், நம்மால் பயனுள்ள பழக்கங்களை கட்டமைக்க முடியும்.

இலக்கு – பௌத்த பாரம்பரியத்தில் தியானம் என்றால் என்ன என்பதை கண்டறியுங்கள்; அதனை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்; பயிற்சியின் போது வழிகாட்டுதலைப் பெறுங்கள்

பயனாளி –  அனைத்து வயதினர்

அமைப்பு

  • விளக்கம்( சிக்கல், காரணம், உதாரணம், வகை)
  • தியானம் (குறிப்பு வார்த்தைகளுடன் வழிகாட்டப்பட்டுள்ளது)
  • சுருக்கம்

எங்கே பயிற்சிப்பது – இரைச்சல் இல்லாத, அமைதியான, சுத்தமான எந்த இடமாகவும் இருக்கலாம்

எப்போது பயிற்சிக்கலாம் – அன்றைய நாளின் தொடக்கமான காலையில் வேறு எந்த செயலிலும் ஈடுபடுவதற்கு முன்னர் செய்யலாம். அது சாத்தியமில்லாவிடில், நாளின் முடிவில், உறங்கச் செல்வதற்கு முன்னர் தியானிக்கலாம்

எப்படி அமர்வது – அதிக உயரம், அதிக தாழ்வு, அதிக மென்மை அல்லது அதிக கடினமாக இல்லாத தலையணையை வைத்து அதன் மேல் பின்புறத்தை வைத்து குறுக்கு காலிட்டு அமர வேண்டும். சாத்தியமில்லையென்றால், பின்புறத்தை நேராக வைத்து அமரக்கூடிய நாற்காலியில் அமரலாம். இரண்டு விதத்திலுமே உங்களுடைய முதுகு நேராக இருக்க வேண்டும் மேலும் உங்களுடைய கைகளை மடி மீது மடித்து வைத்திருக்க வேண்டும். கண்களை பாதியாக திறந்து வைத்திருப்பது சிறந்தது, லேசான கவனத்துடன், கீழ் நோக்கி தரையைப் பார்க்க வேண்டும்.   

எத்தனை முறை தியானம் செய்வது -  குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு தரம், முடிந்தால் இரண்டு முறை செய்யலாம்(காலையில் பணிக்கு செல்வதற்கு முன்னரும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னரும்), குறைந்தது ஒரு வாரத்திற்கு தினசரி ஒவ்வொரு தியானத்தை வழிகாட்டப்பட்ட முறையில், இணையதளத்தில் அவை பட்டியலிடப்பட்டிருக்கும் வரிசையில் செய்யலாம். தேவை என்று நினைத்தால், எந்த நேரத்திலும், நீங்கள் செய்து முடித்த தியானத்தை மீண்டும் செய்யலாம்.

மேலம் தகவல்களுக்கு – 

[பார்க்கவும் : தியானிப்பது எப்படி?]

Top