இரக்க குணத்தை வளர்தெடுப்பது எப்படி?

How zo develop compassion clay banks unsplash

துன்பங்கள் மற்றும் அதற்கான காரணங்களில் இருந்து எல்லோரும் விடுபட வேண்டும் என விரும்பும் நாம் அனைவரும் பிறக்கும் போதே இரக்க மனம் படைத்தவர்கள். நம்மால் அந்தத் திறனை வளர்த்தெடுப்பதன் மூலம் நமக்கும் பிறர்க்கும் வியத்தகு நலன்களை பெற முடியும்

இரக்கத்தை வளர்த்தெடுக்கத் தொடங்குவதற்கான சிறந்த வழி, நிஜ வாழ்விலும், ஆன்லைனிலும் சிக்கலைத்தரும் நபர்கள் மற்றும் சில விலங்குகளையும் வரையறைக்குள் வைத்தல் வேண்டும். மெல்ல மெல்ல நம்முடைய இரக்க குணத்தில் ஒவ்வொருவராக சேர்த்துக்கொள்ள பயிற்சிக்க வேண்டும்: விருப்பமானவர்கள், அறிமுகமில்லாதவர்கள், ஏன் நாம் விரும்பாதவர்களையும் கூட சேர்க்க வேண்டும். ஒட்டு மொத்த உலகையும், ஆம் கரப்பான்பூச்சிகளைக்கூட நம் இரக்கப் பட்டியலில் சேர்க்கும் வரை பயிற்சியைத் தொடர வேண்டும்.

இரக்கம் என்பது உணர்ச்சி மற்றும் பகுத்தறிவின் கூறு. இப்புவியில் வாழுவதற்கு ஒருவரை ஒருவரை சார்ந்திருப்பது உணர்வளவில் பாராட்டத்தக்கது. உலகளாவிய பொருளாதாரம் காரணமாக பயன்படுத்தி மகிழும் - உணவு, உடை, பொழுதுபோக்கு சாதனங்கள், வீடு, வாகனங்கள் - எல்லாமே மற்றவர்களின் கடின உழைப்பினால் கிட்டியவை. பிறரின் உதவியின்றி, சாலைகள், மின்சாரம், எரிபொருள், தண்ணீர் அல்லது உணவோ நமக்கு கிடைக்காது. இதுவே இயற்கையாக நம்மை நன்றிக்கடன் உள்ளவர்களாக்குகிறது, மகிழ்ச்சியான மனநிலையே இதமான அன்பு என்பதை நோக்கி அழைத்துச்செல்கிறது. தனது ஒரே குழந்தைக்கு மிக மோசமான ஒன்று ஏற்பட்டால் பயங்கரமானதாக உணரும் அன்னையைப் போல, இந்த செய்நன்றியை அதிக அளவில் பிரதிபலித்தால், மற்றவர்களிடத்தில் உறுதியாக மலர்ச்சியை உண்டாக்கலாம். மற்றவர்களின் துரதிஷ்டத்தை பார்த்து வருத்தப்படுகிறோம், ஆனால், துக்கம் அல்லது அவர்களுக்காக கஷ்டப்படுவதில்லை. அவர்களின் பிரச்னையும் நம் பிரச்னை தான் என்று நாம் கண்டுணர வேண்டும்.

நம் இரக்க உணர்வை பகுத்தறிவு அடிப்படையில் எல்லோருக்கும் சமமானதாக விரிவாக்குவது மிகவும் வெளிப்படையானது, ஆனால் பலர் இதைப்பற்றி கருத்திலேயே கொள்வதில்லை : மகிழ்ச்சியை விரும்புவதில் அனைவரும் சமமே, துன்பம் மற்றும் சோகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்புவதிலும் அனைவரும் சமமே. ஒருவர் நம்மிடம் நெருக்கமாக இருக்கிறாரோ அல்லது தூரத்தில் இருக்கிறாரோ, அவர்கள் என்ன செய்தாலும் இந்த இரண்டு உண்மைகளும் நிலைத்திருக்கும். யாரேனும் பெருந்தீங்கிற்கான காரணமாக அமைந்தால், அவர்கள் புறக்கணிப்பு, குழப்பம் மற்றும் மாயையால் அதனைச் செய்கிறார்கள், அதனால் அவர்களுக்கும் அல்லது சமுதாயத்திற்கும் நன்மை என்று தவறுதலாக சிந்திக்கிறார்கள். அவர்கள் இயல்பாகவே கெட்டவர்கள் என்பதால் அல்ல; யாருமே இயல்பாகவே கெட்டவர்களும் அல்ல. எனவே அவர்களுக்காக இரக்கப்படுவது சரியானது மற்றும் பொருத்தமானது, ஏனெனில் நாம் கஷ்டப்பட விரும்பாதபோது அவர்கள் விரும்புவார்களா.

 இரக்கத்திற்கான தியானம்

இரக்கத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சியானது திடமான நிலைகளில் இருந்து உருவாகிறது. சிரமத்தில் இருக்கும் நமக்கு விருப்பமானவர்கள் மீது முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டும், பின்னர் நடுநிலையாளர்கள் அதன் பிறகு நாம் விரும்பாதவர்கள். கடைசியில், நாம் எல்லோரின் துன்பத்திற்காகவும், எல்லா இடத்திலும் சமமாக இருக்க அக்கறை காட்ட வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் நாம் மூன்று உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்:

  • துன்பங்கள் மற்றும் அதற்கான காரணிகளிருந்து அவர்கள் விடுபட்டால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்.
  • அவர்கள் விடுதலை அடையவேண்டும்; அதற்கு நான் வேண்டுகிறேன்.
  • அவர்கள் விடுபட என்னால் உதவ முடியுமா.

ஆகவே, இரக்கம் என்பது மற்றவர்களை அவர்களின் சிக்கல்களில் இருந்தும், அவர்களின் ஒட்டுமொத்த துக்கத்தில் இருந்தும் விடுவிக்க உதவுவதற்கான ஆவலை உள்ளடக்கியது. எந்தச் சூழலும் நம்பிக்கை தரவில்லையென்றால் யதார்த்த வழிகளை பின்பற்றி சிக்கல்களை நிச்சயமாகத் தீர்க்க முடியும். பௌத்தத்தில் இரக்கம் என்பது சுறுசுறுப்பான மனநிலை, அது எந்த நேரத்திலும் மற்றவர்களின் நலனுக்காக செயல்படத் தயாராக இருக்கிறது.

Top