What is compassion

பௌத்தத்தில், இரக்கம் என்பது மற்றவர்கள் அவர்களின் துன்பங்கள் மற்றும் துன்பங்களுக்கான காரணங்களில் இருந்து விடுபட விரும்புதலாகும். குறிப்பாக நாம் எதிர்கொண்ட அதே சூழலை  சந்திக்கும் மற்றவர்களின் உணர்வுகளை போற்றதலை அடிப்படையாகக்கொண்டது. நாம் அந்தச் சூழலை அனுபவித்திருக்காவிட்டாலும், அவர்களிடத்தில் நம்மை பொருத்திப்பார்த்து அந்த வலி எப்படி இருக்கும் என்பதை உணர்தல். நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்க கற்பனை செய்கிறோமோ, அதே போன்று மற்றவர்களும் சுதந்திரமாக இருக்க நாம் நிலையாக விரும்ப வேண்டும்.

அன்பும் இரக்கமும் அத்தியாவசியம், ஆடம்பரமல்ல. இவை இல்லாவிட்டால் மனிதம் உயிர்ப்போடிருக்க முடியாது. – 14வது தலாய் லாமா

இரக்கம் நம்முடைய இதயம் மற்றும் மனதை மற்றவர்களுக்கு திறந்து காட்டுகிறது, நம்மை பற்றி மட்டுமே சிந்திக்கும் சுய திணிக்கப்பட்ட எல்லைகளில் இருந்தும், தனிமையில் இருந்தும் உடைத்து நம்மை வெளிக்கொண்டுவருகிறது. வாழ்வில் பிரச்னைகளைச் சந்திப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டே இருக்கிறோம், நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம் என்று உணர்ந்தால் தனிமை மற்றும் கவலையை வென்று வரலாம். இரக்க குணத்தோடு இருப்பது நம்மை மகிழ்ச்சியாகவும், மிகுந்த பாதுகாப்பு உணர்வோடும் வைத்துக்கொள்ளும் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் வலியையும், துன்பங்களையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு உதவ விரும்புவது உள்ளார்ந்த உறுதி மற்றும் தன்நம்பிக்கையை அளிக்கும். இரக்கத்தை மேம்படுத்திக் கொள்ள நமக்கு நாமே பயிற்சித்துக்கொண்டால், அது உண்மையிலேயே நன்வாழ்வின் ஆழமான ஆதாரமாக மாறும்.

இரக்கம் நம்மை சுறுப்பாக்கும், மற்றவர்களின் துன்பங்களை அகற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள நம்மை உந்து சக்தியாக இருக்கும். நாம் செய்யும் உதவி குறைவானதாக இருக்கலாம், எனினும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும், ஏனெனில் மக்கள் வலியிலும், துன்பத்திலும் இருக்கும் போது எதுவும் செய்யாமல் இருப்பதை ஏற்கவே முடியாது.

அறிவு மற்றும் ஞானத்தோடு சேர்ந்தால் இரக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எனவே நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சரியான தேர்வு செய்ய வேண்டும். உணர்வு ரீதியில் போதுமான முதிர்ச்சி பெறாமலோ அல்லது நம்மால் உதவ முடியவில்லை என்று சோர்வடையும் போதோ அல்லது நாம் கூறிய அறிவுரை கைகொடுக்கவில்லை என்றாலோ, இரக்கம் உறுதியான செயல்நோக்கமாக மாறி நம்முடைய குறைபாடுகளைக் கடந்து முழுத்திறனை மேம்படுத்த உதவும்.

Top