Image%201

போதிசத்வர் என்பவர் ஒரு புத்திசாலி மற்றும் இரக்கமுள்ள நபர், அவர் மற்றவர்கள் அனைவரையும் நேசிக்கிறவர். நிச்சயமாக, புத்திசாலித்தனமான, அன்பான மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள், அப்படியானால் போதிசத்வரை வேறுபடுத்துவது எது? முதலில், போதிசத்வர்கள் மற்றவர்களின் நலனை மட்டும் விரும்பவில்லை, ஆனால் மற்றவர்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவரும் பல திறமையான முறைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் உண்மையில் அனைத்து உயிரினங்களுக்கும் உதவ அயராது உழைக்கிறார்கள். போதிசத்வர்கள் எல்லா பிரச்சனைகளின் ஆழமான வேரைப் புரிந்துகொண்டு, இந்த வேரை வெட்டுவது சாத்தியம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், இதனால் உயிரினங்களுக்கு மீண்டும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த அறிவும் நோக்கமும் தான் ஒரு போதிசத்வரின் இரக்கத்தை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது.

போதிசத்வா என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து வந்தது: “போதி” என்பதன் அர்த்தம் “ஞானம்,” “சத்வா” என்றால் “உயிரினங்கள்” என்றும் பொருள். தொடக்க கால பௌத்த போதனைகளில், “போதிசத்வர்” என்கிற வார்ததை ஞானமடைந்த சக்யமுனி புத்தரைப் பற்றி விவரிக்க பயன்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு, புத்தரின் கடந்த கால வாழ்க்கைக் கதைகளில், அவர் ஒரு போதிசர்வராக விவரிக்கப்பட்டுள்ளார். அதனால், புத்தரைப் போல, எண்ணற்ற உயிர்கள் விழித்தெழுவதற்காக அசாத்தியமான ஆற்றலையும் முயற்சியையும் செய்பவர், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதற்காக ஞானமடைவதை நோக்கிய பயணத்தில் தங்களை அமைத்துக் கொள்ளும் ஒருவரே போதிசத்வர் ஆவார். தங்களுக்கு இன்னும் பல வரம்புகள் இருப்பதை அவர்கள் உணர்ந்ததால் இதைச் செய்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவ பல வழிகளை அவர்கள் அறிந்திருந்தாலும், ஒவ்வொரு நபருக்கும் எந்த முறை மிகவும் பொருத்தமானது என்பதை அவர்களால் முழுமையாகப் பார்க்க முடியாது. இது ஒரு புத்தருக்கு மட்டுமே தெரியும். எனவே, தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவும்போது, அவர்கள் ஒரு புத்தராவதற்கு மேலும் மேலும் தங்களுக்குள் செயல்படுகிறார்கள். 

அனைத்து உயிரினங்களின் விடுதலைக்காக செயல்படும் சபதத்தை போதிசத்வர்கள் எடுக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கானது, தங்களுக்காக ஞானமடைவது மட்டுமல்ல, மற்ற உயிர்களும் கூட ஞானமடைவதற்காக உதவுவதாகும். அவர்களின் பெருங்கருணையால், மற்றவர்களுக்கு உதவுவதற்காக தாங்கள் ஞானமடையும் தங்களின் சொந்த பணியை தள்ளிப்போட்டுக் கொண்டு ஆன்மீக வழிகாட்டிகளாக பாதுகாவலர்களாக மதிப்பிற்குரியவர்களாகிறார்கள்.

போதிசத்வருக்கான பயிற்சிகள் மற்றும் தகுதிகள்

போதிசத்துவர்கள், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, புத்தரிடம் உள்ள பல குணங்களை முழுமையாகக் கொண்டுள்ளனர். மற்றவர்களை ஞானமடைவதற்கு நெருக்கமாகக் கொண்டு வரவும், அவர்களுக்கு மேலும் பலனளிக்கவும் உதவி அவர்களை வளப்படுத்துகின்றனர். போதிசத்வர்கள் கொண்டிருக்கும் சில குணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்:

  • இரக்கம் – போதிசத்வர்கள் அனைத்து இதர உயிர்களையும் போற்றுகின்றனர். நம்மில் பெரும்பாலானவர்கள் நம்மை தான் முதன்மைப்படுத்துவோம் ஆனால் போதிசத்வர்கள் தங்களுக்குப் பதிலாக மற்றவர்களை முன்னிலைப்படுத்துவார்கள். ஒரு தாய் அனைத்தையும் தன்னுடைய அன்பான குழந்தையாக பார்ப்பதைப் போலவே அவர்களும் இருப்பர். அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டால், குழந்தை துன்பப்படுவதை தாயால் பார்க்க முடியாது அதில் இருந்து விடுபட ஏதேனும் உதவி செய்வாள். அதே போலத் தான், போதிச்த்வர்களும் நம்மில் யார் துன்பப்பட்டாலும் அதை அவர்களால் பார்க்க முடியாது. அனைவரையும் சமமாக பார்த்துக் கொள்ளும் விருப்பத்தை மட்டுமின்றி, எப்படியாவது எங்கிருந்தாவது அவர்களால் முடிந்தவரையில் அவர்கள் நமக்கு உதவி புரிவார்கள். 
  • ஞானம் – போதிசத்வர்களால் எது பயனுள்ளது எது தீங்கானது என்று பாகுபடுத்த முடியும். கற்பனையில் இருந்து யதார்த்தத்தைக் கூட அவர்களால் பாகுபடுத்த முடியும். இந்த ஆழமான புரிதலே மற்றவர்களை விடுதலையை நோக்கி அழைத்து செல்ல வழிகாட்ட உதவுகிறது. 
  • திறனறிதல் பொருள்- மற்றவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்கிற திறனறிந்தவர்கள் போதிசத்வர்கள் அப்படி செய்வதற்கு அவர்கள் பல்வேறு வழிதுறைகளைப் பயன்படுத்தினர். 
  • பெருந்தன்மை – தங்களிடம் உள்ள பொருட்கள், நேரம், ஆற்றல் என அனைத்திலும் போதிசத்வர்கள் தாராள மனம்கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்காக தாங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் அவர்கள் அடைந்தவை மற்றும் அவர்களிடம் உள்ளவற்றுடன் அவர்கள் பற்றுதல் கொண்டிருக்க மாட்டார்கள். 
  • பொறுமை – தங்களுக்குள்ளும் மற்றவர்களிடத்திலும் போதிசத்வர்கள் பொறுமையாக இருப்பவர்கள். ஞானமடையும் பாதை நீண்டது என்பதை புரிந்து கொண்டு அந்த நேரத்திற்குள் எவ்வளவு வேகத்தில் செல்ல முடியுமோ அத்தனை வேகத்தில் மற்றவர்களுக்கு உதவ விரும்புபவர்கள். 
  • நன்னெறி நடத்தை – நன்னெறி நடத்தையில் குறிக்கோளாக இருப்பவர்கள் போதிசத்வர்கள், அதாவது மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்த்து அனைத்து உயிர்களுக்கு பலனளிக்கும் செயல்களையே விதைப்பர்.
  • தைரியம் – போதிசத்வர்கள் துணிவு மற்றும் தைரியமிக்கவர்கள், மற்றவர்களுக்கு உதவ தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள். மற்றவர்கள் பயன்மடைவதற்காக கடினமான சூழல்களை அல்லது ஆபத்தை கையில் எடுக்கத் தயங்காதவர்கள். 

சீனாவின் 4 ஆம் நூற்றாண்டு மைஜிஷன் குரோட்டோவில் இருந்த போதிசத்வா சிலைகள்.

செயலில் இருக்கும் நிகழ்கால போதிசத்வர்

போதிசத்வருக்கான ஒரு சிறந்த உதாரணம் புனிதர் பதினான்காவது தலாய் லாமா. புனிதர் சோர்வின்றி, ஓய்வின்றி, அதிகாலை முதல் நள்ளிரவு வரை செயல்படுகிறார். அவருடைய ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணிக்கு பல மணி நேர தியானத்துடன் தொடங்குகிறது அதன் பின்னர் அந்த நாளின் எஞ்சிய நேரம் மற்றவர்களை சந்திப்பது அவர்களுக்கு உதவுவது என்று அர்பணிக்கிறார். 

ஒரு நீண்ட பயணத்திற்கு பிறகு புனிதர் ஒரு முறை ஸ்பிடிக்கு வந்தார். அந்த சமயத்தில் அவர் ஏற்கனவே பல நாட்கள் பிரசங்கம் செய்ததால் அவருடைய குரல் வற்றிப் போயிருந்தது. அவரை மேலும் சோர்வடையச் செய்ய விரும்பாமல், அவரை இருக்கையில் அமர நான் வேண்டினேன், அதற்கு ஒப்பு கொண்டவர் இரக்கத்தின் மந்திரமான ஓம் மனி பத்மா ஹேமை பார்வையாளர்களுக்கு வழங்கவும் அனுமதி அளித்தார். நன்றாக உறங்கியவர் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் போதிக்க முடிவெடுத்தார். அதன் பின்னர் அனைத்து நற்குணங்களுக்கான அடித்தளம் பற்றி ஏறத்தாழ 3 மணி நேரங்கள் தொடர்ச்சியாக போதித்தால், அதே நேரத்தில் அவருடைய குரலும் சரியாகிவிட்டது. 

அந்த போதனைக்குப் பிறகு நான் அவரை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றேன் அங்கு அவர் தன்னுடைய மேல் அங்கியை எடுத்துவிட்டு சோபாவில் படுத்து, அவர் மிகவும் சோர்வாக இருப்பதால் என்னை செல்லும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவருடைய முகத்தில் எந்தச் சோர்வையும் என்னால் பார்க்கமுடியவில்லை; உண்மையில் முகம் முழுக்க பெரும் ஆற்றல் நிரம்பி இருப்பதையே என்னால் பார்க்க முடிந்தது. 80 வயதில் சாதாரண மனிதரால் இதனைச் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்தேன். புனிதர் தலாய் லாமா உண்மையில் அதிசயமானவர்!

இதற்குப் பின்னல் இருக்கும் ரகசியம் என்ன என்று நான் வியந்தேன். அது இரக்கம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. மற்றவர்கள் அவர்களின் துன்பத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்காக அவர் சோர்வின்றி செயலாற்றுகிறார். 4 அல்லது 5 மணி நேரம் வீடியோ கேம் விளையாடினாலும் நாம் சோர்வடைய மாட்டோம், ஆனால் அவ மற்றவர்களுக்கு பலனளிப்பதற்காக உதவுவதை மட்டுமே பார்க்கிறார், அதனால் அவர் சோர்வடைவதில்லை. ஒரு போதிசத்வரின் குணங்களைப் பாருங்கள் – இரக்கம், ஞானம், தைரியம் – சந்தேகமே இல்லாமல் நாம் பார்க்கக் கூடிய அத்தகைய நபர் புனிதர் ஒருவரே. 

முடிவுரை

ஞானமடையும் பாதையை பின்பற்றுபவர்களுக்கு உதவும் ஆற்றல்மிக்க இரக்கமுள்ள வழிகாட்டிகள் போதிசத்வர்கள். தங்களின் சுயநலமற்ற செயல்கள் மற்றும் போதனைகள் மூலம், அவர் பௌத்தர்களின் முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள் மேலும் நமக்குள்ளும் இந்த குணங்களை விதைக்க நமக்கு ஊக்கமளிக்கிறார்கள். உலகம் முழுவதிலும் போடிக்கணக்கான பௌத்தர்களின் ஆன்முக வாழ்வில் தொடர்ந்து முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் போதிசத்வர்கள், தங்களின் வாழ்வில் அடைய நினைக்கும் உயர்ந்த ஞானம் மற்றும் இரக்கத்தை பெறுவதற்கான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலுக்கான ஆதாரமாகத் திகழ்கின்றனர். 

வெளித்தோற்றத்தை வைத்து ஒருவர் போதிசத்வரா இல்லையா என்று சொல்வதற்கு வழியில்லை, உண்மையில் நாம் ஒவ்வொருவரும் நாமே போதிசத்வராக முடியும். அனைத்து உயிர்களுக்கும் உதவ வேண்டும் என்கிற நோக்கத்துடன் புத்தராக வேண்டும் என்று நாம் செயலாற்றினால், நாம் போதிசத்வர்களே. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் இல்லாமல் அதற்கான திறன் நம்முடைய நேரம் மற்றும் ஆற்றலை அனைத்து உயிர்களுக்காகவும் செயல்படுத்துவது எவ்வளவு அற்புதமானது. மற்றவர்கள் பயனடைய நாம் உண்மையில் விரும்பினால், முதலில் நாம் போதிசத்வராக வேண்டும், அதன் பின்னர் நாம் புத்தராவதை நோக்கி நம்மால் செயலாற்ற முடியும். வாழ்வை அதிக அர்த்தமுள்ளதாக்கும் வேறு எதுவும் இல்லை. 

Top