உலகளாவிய அன்பு – மகிழ்ச்சி அனைவருக்குமான விருப்பம் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணங்கள் நம்முடைய வாழ்க்கை முழுவதும் எவ்வாறு மற்றவர்களைச் சார்ந்திருக்கிறது என்ற புரிதலில் இருந்து தோன்றுகிறது. நாம் ஒவ்வொருவரும் மனிதாபிமானத்தின் அங்கம், நம்முடைய நலன் என்பது ஒட்டுமொத்த உலக சமுதாயத்தோடும் ஒன்றோடு ஒன்று இணைந்தது – பொருளாதார சரிவின் பாதிப்புகள் அல்லது பருவநிலை மாற்றத்தில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. மனிதஇனமான நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்புபட்ட இருக்கிறோம், எல்லோர் மீதும் அன்பை பொழிய இதுவே சரியாகப் பொருந்தும்.
பிறர் மீது நீ விதைக்கும் அன்பு உன் மனதை இலகுவாக்கும். வாழ்வில் வெற்றி காண்பதற்கான இன்னொரு ஆதாரம் அதுவேயாகும். – 14வது தலாய் லாமா
அன்பை மேம்படுத்த, நாம் இணைந்திருத்தலை போற்றுதல் வேண்டும். நாம் உண்பவை, பயன்படுத்துபவை மற்றும் மகிழ்பவை அனைத்துமே பிறரது கடின உழைப்பில் இருந்து வந்தவை. நாம் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த மின்னணு சாதனத்தை உலகின் பல்வேறு மூலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் இணைந்திருக்கிறோம் மற்றவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்ற ஆழமான பிரதிபலிப்பு, ஆழமான மகிழ்ச்சிக்கு நம்மை முன்நடத்திச் செல்கிறது. அதுவே நம்மை இயற்கையாக மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக அக்கறைப்பட வைக்கிறது; உலகளாவிய அன்பிற்கு இதுவே அடிப்படை உணர்வுகளாகும்.
அன்பான கருணையை மேம்படுத்தும் தியானம்
முதலில் நமக்குள்ளாக அன்பான கருணையை மேம்படுத்த வேண்டும். நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பவில்லை என்றால், மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் ஏன் விரும்பப்போகிறோம்?
ஆழமான உணர்வுகளில் இருந்து தொடங்குவோம்:
- நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மகிழ்ச்சிக்கான காரணம் இருக்கிறது என்பது எவ்வளவு அற்புதமானது.
- நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்.
- என்னால் மகிழ்ச்சியை எனக்குள் கொண்டு வர முடியுமா?
நம்முடைய மகிழ்ச்சிக்கான நிலையான ஆவலை ஒரு முறை நான் அனுபவித்துவிட்டால், அந்த நம்பிக்கையை அதே சிந்தனையை மற்றவர்களுக்கும் நாம் விரிவாக்கம் செய்ய முடியும்.
- முதலில் நம்முடைய இலக்கு நம் அன்பிற்குரியவர்கள் மற்றும் நண்பர்களிடம் அன்பு செலுத்துதல்
- நாம் அன்றாடம் சந்திக்கும் பொதுஜன மக்களுக்கும் அன்பை விரிவு செய்யுங்கள்.
- நாம் விரும்பாதவர்களிடத்திலும் அன்பை மேம்படுத்த முயற்சியுங்கள்.
- கடைசியாக, ஒட்டு மொத்த உலகில் இருக்கும் அனைத்தும் ஜீவராசிகளிடத்திலும் அன்பு செய்வதே நமது இலக்காக இருத்தல் வேண்டும்.
இந்த விதத்தில், நாம் நமக்கான அன்பு உணர்வை மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்கள் மற்றும் எல்லா ஜீவன்களிடத்திலும் அன்பை மேம்படுத்தலாம்.
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த நம்மால் ஏதேனும் செய்ய முடியுமென்றால், நாம் அதைச் செய்யலாம். அப்படி முடியாவிட்டால் அவர்களுக்கு குறைந்த கால சந்தோஷத்தையும் நீண்ட கால நலனையும் தருபவனவற்றைக் கொடுப்பதாக கற்பனை செய்து பாருங்கள். வீடற்றவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு கொடுப்பவை மட்டுமல்ல – எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் நமது விருப்ப பட்டியலில் சேர்த்துவிட வேண்டியதுதான். நமது குடும்பத்திற்கான, நண்பர்களுக்கான மற்றும் ஒவ்வொருவருக்கான உண்மையான அன்பை பொறுமையாக வளர்த்தெடுத்தால், நமக்கும் மற்றவர்களுக்குமான மகிழ்ச்சி சாத்தியமாகும்.