குற்ற உணர்வை வெளியேற்றுதல்

நம்முடைய வாழ்நாள் முழுவதிலும் நாம் செய்த தவறு அல்லது ஏதேனும் தவறாக செய்திருக்கிறோமா என்ற கோணத்தில் பார்த்தால், விகிதாச்சார அடிப்படையில் அதனை பெரிதாக்குவதை நிறுத்துவோம். குற்ற உணர்ச்சியுடன் அல்ல, மன்னிப்புடன் அதை மீண்டும் செய்யக்கூடாது என்று நாம் தீர்மானிக்கிறோம்.
Meditation dispelling guilt

விளக்கம்

பெருங்குற்றம் தொடங்கி சிறு தவறு நடக்கும்போது கோபப்படாமல் இருப்பது, எதிர்புகார்களை எழுப்பாமல் இருப்பதும்தான் மன்னித்தல். இது ஒரு நேர்மறை மனநிலை மேம்படுத்தவும் மற்றவர்கள் செய்த தீங்கான செயல்கள் மற்றும் அவர்கள் செய்த தவறுகளுக்காக பொறுப்பேற்று மட்டுமல்ல மாறாக நம்முடைய சொந்த எதிர்மறை செயல்கள் மற்றும் தவறுகளுக்காகவும் தான். இதனைச் செய்வதற்கு, நாம் செய்த எதாவது குறிப்பிட்ட செயலிலிருந்தும் அல்லது தவறிலிருந்தும் ஒரு நபராக நம்மை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி சிந்தித்தால், நாம் நம்முடைய ஒட்டு மொத்த வாழ்வை பற்றியும் சிந்திக்க வேண்டும் – மறுபிறப்பு குறித்த புத்தரின் போதனைகளை நாம் ஏற்றுக்கொண்டால், அது நம்முடைய எல்லா கடந்த கால மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்ததே. நாம் நம்முடைய மனதைத் திறந்து நம்மை இந்தப் பெரிய சூழலோடு கருதிப்பார்த்தால், நாம் செய்திருக்கம் ஏதோ ஒரு எதிர்மறை செயல் அல்லது தவறு ஒரு விபத்தே என்பதைக் காணலாம். நம்முடைய வாழ்வில் நாம் பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறோம் நாம் புத்தர்களாகும் வரை நாம் தவிர்க்க முடியாமல் தவறுகளை செய்கிறோம். ஒரு தவறு நடந்தால் அல்லது தவறாக ஏதேனும் செய்தால் நாமே அதை அடையாளம் கண்டு, இது தான் நம்முடைய உண்மையான அடையாளம் என்று பிடித்துக்கொள்கிறோம், இதன் முடிவு நாம் குற்றஉணர்ச்சி கொள்கிறோம். நாம் எவ்வளவு நீண்ட காலம் அந்தக் கருத்தை பிடித்துக் கொள்கிறோமோ, அவ்வளவு காலம் நாம் குற்ற உணர்ச்சியையும் மோசமாக உணர்கிறோம். 

நம்மை நாமே மன்னித்தல் என்பதன் அர்த்தம் அது ஒரு பெரிய விஷயமாக இல்லாத பட்சத்தில் நாம் செய்ததை மறப்பதென்பதல்ல. நாம் செய்த தீங்கு அல்லது நாம் செய்த தவறுக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறோம். ஆனால் குற்ற உணர்வோடு அதில் நாம் பிடிமானமாக இருக்கப்போவதில்லை மேலும் நம் மீதே நாம் கோபம் கொள்ளப் போவதும் இல்லை. நம்முடைய தவறான செயல்கள் மற்றும் தவறுகளை நாம் ஒப்புகொள்கிறோம், நம்மை நாமே தனித்து அடையாளம் காண இவர்களோடு செல்லுங்கள் – நாம் “கெட்ட மனிதர்” அல்லது “ஒரு முட்டாள்” என்று சிந்தித்துக் கொண்டு – இந்த நான்கு எதிர் சக்திகளை செயல்படுத்துங்கள்: 

 • வருத்தப்படுங்கள்
 • நம்மால் முடிந்தவரை தீங்கு விளைவிக்கும் செயல் அல்லது தவறை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
 • நம் வாழ்வின் பயணம் நேர்மறையான திசையில் செல்வதை மீண்டும் உறுதிப்படுத்தவும்
 • சாத்தியமென்றால், நமது தவறைச் சரிசெய்து, நாம் செய்த தீங்குகளுக்கு மன்னிப்பு கேட்கலாம், முடிந்தால், சில நேர்மறையான செயல்களால் அதை சமநிலைப்படுத்தலாம்.

தியானம்

 • அமைதியாக அமர்ந்து சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
 • நீங்கள் செய்த தீங்கினை நினைவுகூர்ந்து – ஒருவேளை உங்களது செயல்கள் அல்லது வார்த்தைகளால் யாரேனும் ஒருவரை நீங்கள் காயப்படுத்தி இருக்கலாம் – பின்னர் நீங்கள் என்ன சொன்னீர்கள் அல்லது செய்தீர்கள் என்பதை எவ்வாறு சிந்திக்கிறீர்கள் அதற்காக குற்ற உணர்வுகொள்கிறீர்கள் மேலும் உங்கள் மீதே நீங்கள் கோபப்படுகிறீர்கள்.
 • உங்களுடைய நம்பிக்கையை விரிவாக்கம் செய்து உங்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்க்கைக்குமான நீங்களே சிந்தித்து பார்த்தால் இது வெறும் ஒரு சம்பவமே என்பதை உணர்ந்து மேலும் அவ்வாறு மீண்டும் நடந்தாலும் கூட, அது தவிர மேலும் பல விஷயங்கள் உங்களுடைய வாழ்வில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 
 • ஒரே ஒரு செயலை வைத்து உங்களை அடையாளப்படுத்துவதாக உணர்வதும் அதிலேயே சிக்கிக்கொள்வதும் நீங்கள் குற்றஉணர்வாகவும் மோசமாகவும் உணரக் காரணமாகின்றன. உங்களை நீங்கள் மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வைத்தே சிந்திக்கிறீர்கள்.
 • இது உங்களின் முழுமையானதல்ல என்பதைக் கண்டு, அந்த அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
 • பின்னர் உங்கள் முழு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை உங்களை நீங்களே பாருங்கள், நீங்கள் செய்திருக்கும் அனைத்து நேர்மறை, ஆக்கப்பூர்வமான விஷயங்களை எண்ணி மகிழுங்கள். 
 • நீங்கள் என்ன செய்தீர்களோ அது அழிவுகரமானது மற்றும் தீங்கானது என்பதை அங்கீகரியுங்கள். நீங்கள் இன்னும் சுதந்திரமானவரல்ல மேலும் சில சமயங்கள் தீங்கான செயல்களையும் நீங்கள் செய்கிறீர்கள். 
 • இருப்பினும் நிஜத்தில் நீங்கள் செய்ததை மாற்ற முடியாது, அதைச் செய்ததற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். அதாவது அதனை செய்திருக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதுபொருள். 
 • தீங்கு விளைவிக்கும் செயலை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள், பேசுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள், மேலும் அழிவுகரமான ஒன்றைச் செய்யவோ அல்லது சொல்லவோ நினைக்கும்போது ஒரு எல்லைக்கோட்டை நிறுவி அதை தாண்டாமல் கடைப்பிடிக்கவும்.
 • உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செலுத்தும் நேர்மறையான திசையை மீண்டும் உறுதிப்படுத்தவும் - உங்கள் குறைபாடுகளையும்  சிக்கலான பகுதிகளை சமாளிக்கவும், உங்கள் முழு திறன்களை உணரவும் நீங்களே  செயல்படுகிறீர்கள்.
 • குறைந்தபட்சம் மனதளவிலாவது நீங்கள் புண்படுத்திய நபரிடமோ அல்லது நபர்களிடமோ மன்னிப்பு கேளுங்கள், நீங்கள் செய்ததை மறுசீரமைக்க அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்வதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் மீண்டும் அந்த நபரை சந்தித்தால், நீங்கள் கற்பனை செய்ததை நிஜத்தில் செய்வீர்கள்.

நீங்கள் செய்த தவறுடன் இந்த நிலைகளை மீண்டும் செய்யவும்:

 • நீங்கள் செய்த சில தவறை நினைவுகூறுங்கள் -  உங்கள் கணினியில் சில முக்கியமான கோப்பை தவறாக நீக்கிவிடுகிறீரைகள் - அதற்காக உங்கள் மீதே நீங்கள் எப்படி கோபமடைந்தீர்கள், மிகவும் வருத்தப்பட்டீர்கள், சத்தியமா உங்களை ஒரு முட்டாள் என்று நீங்களே அழைத்திருக்கலாம்.
 • உங்களுடைய நம்பிக்கையை விரிவாக்கம் செய்து உங்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையை கருத்தில் கொண்டு சிந்தித்தால், இது வெறும் ஒரு சம்பவமே என்பதை உணர்வீர்கள் மேலும் அது திரும்பத் திரும்ப நிகழ்ந்தாலும், உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் பெரும்பாலும் விஷயங்களைச் சரியாகச் செய்கிறீர்கள். 
 • வெறுமனே இந்தத் தவறுடன் உங்களை அடையாளம் காண்பதும், அதில் சிக்கிக் கொள்வதும் நீங்கள் பரிதாபமாகவும் வருத்தமாகவும் உணர்வதற்குக் காரணமாகின்றன. உங்களைப் பற்றி நீங்கள் மிகவும் குறைவாகவே நினைக்கிறீர்கள்.
 • இது உங்களின் முழுமையானதல்ல என்பதைக் கண்டு, அந்த அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
 • நீங்கள் என்ன செய்தீர்களோ அது அழிவுகரமானது மற்றும் தீங்கானது என்பதை அங்கீகரியுங்கள். நீங்கள் இன்னும் சுதந்திரமானவரல்ல மேலும் சில சமயங்கள் தீங்கான செயல்களையும் நீங்கள் செய்கிறீர்கள்.
 • நீங்கள் என்ன செய்தீர்களோ அது தவறு என்பதை அங்கீகரியுங்கள், சில சமயங்களில் நீங்கள் தவறு செய்வீர்கள் – அதில் சிறப்பு ஒன்றுமில்லை.
 • இருப்பினும் நிகழ்ந்ததை உங்களால் மாற்ற இயலாது, அதைச் செய்ததற்காக நீங்கள் வருத்தப்படலாம். இதன் பொருள் நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது என்று விரும்புகிறீர்கள். 
 • அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க உங்களால் முயன்ற சிறந்ததை முயற்சித்து தீர்வு காணுங்கள். நீங்கள் கணிணியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது விழிப்புடன் இருப்பதோடு எப்போது நினைவில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், இதனால் நீங்கள் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பீர்கள். 
 • உங்களுடைய வாழ்வில் நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நேர்மறை திசையை உறுதிபடுத்துங்கள் – நீங்கள் உங்களுடைய குறைபாடுகள் மற்றும் தவறுகளை வெல்வதற்காக செயலாற்றுகிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தாமல் உங்களுடைய முழுத்திறனை உணர்வீர்கள். 
 • அமைதியான மனநிலையுடன், கோப்பில் என்ன இருக்கிறது என்பதை நியாபகப்படுத்தி மீண்டும் அச்சடிக்க நீங்கள் முயற்சிக்க தீர்மானிப்பீர்கள். பின்னர் உண்மையில் அதைச் செய்வீர்கள்.  

சுருக்கம்

நாம் செய்த தீங்கு அல்லது தவறுக்காக நம்மை நாமே மன்னித்தல் என்பதன் பொருள் நம் மீதே கோபம் கொள்ளாமல் அல்லது நாம் கெட்ட மனிதர் மற்றும் குற்ற உணர்ச்சி கொள்ளாமல் அல்லது நான் ஒரு முட்டாள் என்று நம்மை நாமே சபித்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். நாம் செய்த தவறான செயல் அல்லது செய்துள்ள தவறுகள் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே நம்மை அடையாளப்படுத்துவதை நிறுத்திக்கொண்டு, இவ்வாறு பார்ப்பது நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கைக்குமானதல்ல என்பதைல் கருத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய செயல்களுக்காக  பொறுப்பேற்று அவற்றை கையாள வேண்டும்.  நாம் என்ன செய்தோமோ அது தவறு என்பதை அங்கீகரித்து, வருத்தப்பட்டால், அதை மீண்டும் செய்யாமல் இருக்க சிறப்பாக முயற்சிப்பேன் என்று உறுதிமொழி செய்யுங்கள், நம்முடைய வாழ்வில் நேர்மறை திசையை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிபடுத்துங்கள், மன்னிப்பு கேட்டோ, செய்த தீங்கை எதிர்கொள்ள ஏதாவது நல்லது செய்தோ, நமது தவறை சரிசெய்கிறோம். 

Top