11 ways to help others

மனிதர்களில் பலரும், விலங்குகளும் தினசரி துன்பத்திற்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு உதவ பல வழிகள் இருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு சிறந்த உதவியை வழங்குவதற்கான அவர்களின் சூழலை அறிந்தும், சரியாக புரிந்து கொண்டும் உதவ வேண்டும். இரக்கத்தோடும், திறமையோடும் இருந்தால் மட்டும் போதாது – நம்முடைய நேரத்திலும் பெருந்தன்மையோடு இருத்தல் வேண்டும், சுய- ஒழுக்கம், பொறுமை, விடாமுயற்சி, கவனம் மற்றும் ஞானமும் தேவை. மற்றவர்களுக்கு உதவுவதற்கான 11 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை தேவையில் இருப்போருக்கு பலன் தருவதோடு மட்டுமின்றி, நம்முடைய தனிமைச்சிறையை உடைத்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவுகின்றன:

1. துன்பத்தில் தவிப்பர்கள் மீது அக்கறைப்படுதல்

உடல்நலமின்றியோ, மாற்றுத்திறனோடு அல்லது வலியோடு இருப்பவர்களை நாம் பராமரிக்க வேண்டும். அதிக பாரம் சுமக்க முடியாமல் துன்பப்படுபவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு நாம் முன்சென்று அவர்களின் சுமையை குறைக்க வேண்டும்.

2. தனக்குள்ளாகவே எப்படி உதவிக்கொள்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு வழிகாட்டுதல்

கடினமான சூழல்களில் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, அவர்கள் கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு அறிவுரை கூறலாம் அல்லது குறைந்தபட்சம் அவர்களது கஷ்டத்தை காது கொடுத்து கேட்கலாம். நம்முடைய செல்லப்பிராணியான நாயோ, பூனையோ ஒரு அறையில் மாட்டிக்கொண்டால், கதவைத் திறந்து அவற்றை வெளியேற்றுவோம். இதே வழிமுறை தான் நம் ஜன்னலுக்கு அருகில் வந்து அமரும் பூச்சிகளுக்கும். அந்தப் பூச்சிகளுக்கு நம்முடைய அறையில் இருக்க விருப்பமில்லை; அது வெளியே செல்ல நினைக்கும், அதனால் நாம் கதவைத் திறந்து அவற்றின் விடுதலைக்கு உதவுவோம்.  

3. நமக்கு உதவியவர்களுக்கு கருணையை திருப்பிக்கொடுத்தல்

உலகை இயங்க வைத்துக்கொண்டிருக்கம் அனைவரின் செயலாற்றலையும் பாராட்ட வேண்டியது மிக முக்கியம் – நம்முடைய பெற்றோர் நமக்கு எண்ணற்றவற்றை செய்திருப்பது போல. அது உண்மையான நன்றிக்கடனாக இருக்க வேண்டும், கடமைக்கென்றோ, அல்லது குற்ற உணர்விற்காகவோ செய்யக்கூடாது.

4. பயம் நிரம்பி இருப்பவர்களுக்கு சவுகரியத்தையும், பாதுகாப்பையும் அளித்தல்

பயத்தில் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நம்மால் முடிந்தவரை சிறந்த சவுகரியத்தை ஏற்படுத்தித்தர வேண்டும். ஒருவர் அபாயமான இடத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது, அங்கு சென்றால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கும் சமயத்தில், நாம் அவருடன் சென்று பாதுகாப்பு அளிக்கலாம். வன்முறைகளில் இருந்து தப்பித்து வந்த அகதிகளுக்கு நாம் பாதுகாப்பு கொடுத்து, அடைக்கலமடைய உதவலாம். குறிப்பாக போரின் அதிர்வலையில் சிக்கியவர்கள் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானவர்களாக இருந்தால், நாம் அவர்களின் நிலையை புரிந்து கண்டு, அவர்களின் உணர்வுத் தழும்புகளில் இருந்து வடு ஆற உதவியாக இருத்தல் வேண்டும்.

5. கவலையை வென்றவர்களைத் தேற்றுதல்

விவகாரத்து பெற்றோ அல்லது அன்பானவர்களின் இறப்பாலோ கவலையில் இருக்கும் மக்களை, இரக்க குணத்துடன் சாந்தப்படுத்த முயற்சிக்க வேண்டும். நாம் எப்போதும் அவர்களின் சோகத்தை அதிகரிப்பது போல, “இப்படி மோசமான விஷயம் நடந்து விட்டதே” என்று சிந்திக்கக் கூடாது, அதற்கு மாறாக அவர்களிடத்தில் உங்களை வைத்து, துன்பத்திலிருப்பவர்களின் வலிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

6. ஏழ்மையில் இருப்போருக்கு பொருள் உதவி செய்தல்

அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் கொடுப்பது நல்லது தான் என்றாலும் சாலைகளில் யாசகர்களைப் பார்த்தால் அவர்களுக்கு யாசகம் கொடுப்பதும் முக்கியம். நம்மிடம் இருக்கும் எந்த பழக்கத்தையும் நாம் வெல்ல வேண்டும், குறிப்பாக வீடற்ற யாசகர்கள் அழுக்காகவும், அழகற்றவர்களாகவும் தோன்றலாம், நாம் அவர்களைப் கவனிக்கக் கூடத் தேவையில்லை, எனினும் ஒரு சின்ன புன்னகையோடு அவர்களை மரியாதையோடு நடத்துங்கள். அந்தச் சாலையில் வாழ்பவரை நம் தாயாகவோ அல்லது மகனாகவோ கற்பனை செய்து பாருங்கள்: அவர்கள் துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டி என்று நாம் எப்படி கொடூர மனதோடு கடந்து சென்றுவிட முடியும்?

7. நெருக்கமானவர்களுக்கு தர்மத்தை போதியுங்கள்

‘நம்மைச்சுற்றியே எப்போதும் இருப்பவர்களுக்காகவும் நாம் உதவுவது அவசியம். நாம் அவர்களை சார்புடையவர்களாக மாற்ற வேண்டாம், ஆனால் நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றால், மகிழ்ச்சியை அடையவும், மற்றவர்களுக்கு உதவுவது பற்றியும் அடிப்படை பௌத்த வழிமுறைகள் காட்டும் போதனைகளை அவர்களுக்கு போதித்து உதவலாம். இது அவர்களை வழிமாற்றுவதல்ல, அவர்களுக்கான பொதுவான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குவதாகும். இந்தப் பாதையால், நாம் நமது பந்தத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும்.

8. மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உதவுதல்

மற்றவர்களுக்கு ஏற்ற வகையில் உதவ நாம் முயற்சிக்க வேண்டும். நம்மை யாரேனும் ஒரு விஷயத்தை கற்றுத் தரச் சொல்கிறார், நமக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், அது அவர்களுக்கு பொருத்தமானதென்றால், அதனைச் செய்யத் தயங்கக் கூடாது, நம்மால் முடிந்த சிறந்த முறையில் அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். நாம் நம் நண்பர்களுடன் உணவு விடுதிக்குச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம், எப்போதும் நமக்கு பிடித்த உணவுகளையே தேர்ந்தெடுப்பது சுயநலம். சில சமயங்களில் மற்றவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். உறவுமுறையிலும் கூட நமக்கு என்ன தேவை மற்றவருக்கு என்ன தேவை என்ற வேறுபாடுகளுக்கு இடையில் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். எப்போதும் நம்முடைய விருப்பம் நமக்கு என்ன தேவை என்றே இருத்தல் கூடாது.

9. உயர்வான வாழ்வை முன்னெடுப்பவர்களை ஊக்கப்படுத்துதல்

உயர்வான வாழ்வை முன்நடத்துபவர்களைப் போற்றி நாம் உதவ முடியும் – சரியான பாதையில், சரியான பணியை பின்பற்றும் மக்களிடம் நாம் திமிர்பிடித்த தனமாக இல்லாமல் அக்கறையோடு பார்த்துக்கொள்ள வேண்டும். இது குறிப்பாக சுயமரியாதை குறைவாக இருத்தலைக் கையாள்வதோடு தொடர்புடையது. நற்குணங்கள் இருந்த போதும், ஏற்கனவே திமிர் பிடித்த மன்பான்மையோடு இருந்தால், அவர்கள் முகத்திற்கு நேராக புகழாமல் மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி பாராட்டலாம். அவர்களின் திறன் மற்றவர்களுக்கு பயன்படுமாறு உதவ நாம் தொடர்ந்த ஊக்கம் தரலாம், எனினும் அவர்களின் பெருமையை குறைக்கும் விதமாக தவறுகள் நடந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாறு நடக்கலாம் என்று எடுத்துக்கூறி உதவலாம். 

10. அழிவுகரமான வாழ்வை முன்னெடுப்பவருக்கு ஆக்கப்பூர்வமான நடத்தையை போதித்தல்

மிகவும் அழிவுகரமான, எதிர்மறை வாழ்க்கை வாழும் மக்களை நாம் சந்திக்க நேரிட்டால், நாம் அவர்களை ஒதுக்கவோ, தவிர்க்கவோ அல்லது கண்டனமோ செய்யக் கூடாது. மக்களை தீர்மானிக்கும் முன்னர் மாற்றத்திற்கு தயாராக இருப்பவர்களாக இருந்தால், அவர்களக்கு எதிர்மறை நடத்தையை வென்று வருவதற்கான வழிகளைக் காட்டலாம்.  

11. எல்லாமே தோற்றுப்போனால், கூடுதல் திறனைப் பயன்படுத்துதல்

நம்மில் சிலருக்கு சாதாரண நிலையைக் கடந்த திறமைகள் இருக்கும். நாம் தற்காப்புக் கலை வல்லுநராக இருக்கலாம், ஆனால் அதனை மற்றவர்களிடம் வெளிக்காட்டி இருக்க மாட்டோம். எனினும் யாரேனும் தாக்கப்படுவதைப் பார்த்தால், அவரை தடுத்து நிறுத்த வேறு வழியில்லையென்றால், நாம் நமது திறனைப் பயன்படுத்தி தாக்குபவரை அடக்கலாம்.

மற்றவர்களுக்கு பலன் தர பல வழிகள் இருக்கின்றன. எப்படி உதவுகிறோம் என்று அறிந்து கொள்ளும் திறன் மட்டுமல்ல, யாருக்கு என்ன உதவி செய்கிறோம், எந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டுகிறோம், எப்போதும் பின்வாங்க வேண்டும் என்றும் அறிதல் வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் தங்களுக்குள்ளாகவே உதவ கற்றுக்கொள்வார்கள். உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ துன்பத்தில் இருப்பவர்களுக்கு நம்முடைய உடனடி அக்கறை தேவை. ஆனால் உதவியை தேவைக்கு அதிகமாவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் சரியான அளவில் அளிக்க வேண்டும். துன்பத்திலிருந்து மீண்டவர்கள் சொந்தக்காலில் நிற்க உதவ வேண்டும், ஆனால், நீண்ட காலத்திற்கான உதவி என்னவென்றால், அவர்களே அவர்களது வாழ்வை கவனித்துக்கொள்ளும் திறனை மேம்படுத்த உதவ வேண்டும்.

Top