நாம் இப்போது தீவிர நெருக்கடியில் சிக்கி இருக்கும், நமது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம், உயிரிழந்தவர்களுக்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் இருக்கின்றனர். பொருளாதார தகர்வு அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக முன் நிற்கிறது, பல மக்களுக்கு உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பானவற்றை செய்ய வேண்டும்.
இந்த மாதிரியான காலகட்டத்தில் நாம் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை எப்படி ஒன்றுபடுத்தலாம் என்பதே நமது இலக்காக இருத்தல் வேண்டும். அதற்கிணங்க, நாம் ஒருவரையொருவர் இரக்கத்தோடு அணுக வேண்டும். மனிதர்களாகிள நாம் அனைவரும் சமமே. நம் அனைவருக்கும் ஒரே விதமான, பயம், நிச்சயமற்ற தன்மைகள், இருந்த போதும் நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான ஆசை என்பதிலும் ஒன்றுபடுகிறோம். காரணங்களைத் தேடும் மனிதத் திறனானது, நிகழ்வுகளை யதார்த்தத்தோடு பார்த்து கடினமானவற்றையும் வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் திறமையை நமக்குத் தருகிறது.
இந்த நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் நமக்கு விடுக்கும் எச்சரிக்கைகளாகும், ஒன்றுபட்டு, உலகளாவிய பொறுப்போடு செயல்பட்டால், எதிர்பாராத சவால்களையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.
தலாய் லாமா, மே 1, 2020