பூமி தினம் குறித்து புனிதர் தலாய் லாமாவின் கருத்து

Sb nasa earth

50வது ஆண்டான பொன்விழா காணும் பூமி தினத்தில், இப்பூமியில் வாழும் மக்கள், நலன் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் இந்த போராட்டத்திலும், நாம் இரக்கத்திற்கான மரியாதையையும் பரஸ்பரம் ஆதரவையும் மறந்துவிடவில்லை. தற்போதைய உலகளாவிய தொற்றுநோய் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இனம், கலாச்சாரம், பாலின பேதமின்றி, மனிதாபிமானம் என்பதையே கட்டாய கடமையாக்கி, தேவையில் இருப்போருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.

நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நாம் இந்த பூமியில் பிறந்துவிட்டதால் மிகப்பெரிய குடும்பத்தின் அங்கமாகிவிட்டோம். ஏழையோ - பணக்காரரோ, படித்தவரோ - படிப்பறிவில்லாதவரோ, ஒரே தேசத்தை சேர்ந்தவரோ அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவரா என்பது முக்கியமல்ல மற்றவர்களைப் போல நாமும் மனிதர்களே. அதைவிட நம் எல்லோருக்கும் கவலைகளை புறந்தள்ளி மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான சம உரிமை இருக்கிறது. எல்லா மனிதர்களுகுக்கும் மரியாதை என்பது சமம் தான் என்பதை உணர்ந்தால், தானாகவே பச்சாதாபமும், பிறருடன் நெருக்கமும் ஏற்பட்டு விடும்.  இதில் இருந்து உண்மையான உலகளாவிய பொறுப்புணர்வும்: பிரச்னைகளில் இருக்கும் மற்றவர்களுக்கு சுயஆர்வத்தோடு அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு உதவுவோம்.

நம் பூமித் தாய் உலகளாவிய பொறுப்புகள் பற்றி நமக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறாள். இந்த நீலநிற கோளானது மகிழ்ச்சியால் நிரம்பிய வாழ்விடம். அதன் வாழ்க்கையே நமது வாழ்க்கை; அதன் எதிர்காலமே நமது எதிர்காலம். பூமி நமது அன்னை போல செயல்படுவதால்; அவளது பிள்ளைகளான நாம், அவளைச் சார்ந்தே இருக்கிறோம். சர்வதேசப் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் நாம் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.

1959ம் ஆண்டு திபெத்தில் இருந்து தப்பித்து வந்த பிறகு தான் சுற்றுச்சூழல் அக்கறை பற்றி நான் முக்கியமாக பாராட்டத் தொடங்கினேன், சுற்றுச்சூழலை தூய்மையானதாக எப்போதும் இருக்க வேண்டும் என நாங்கள் கருதினோம். நாங்கள் எப்போது தண்ணீரைப் பார்த்தாலும் அது குடிப்பதற்கு ஏற்றதா என்று கவலைப்பட்டதில்லை. துரதிஷ்டவசமாக இன்று சுத்தமான குடிநீர் கிடைப்பது உலகம் முழுவதிலும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார பாதுகாவலர்களுக்கு அடிப்படைத் தேவைகளான சுத்தமான நீர் மற்றும் முறையான சுகாதாரம் கிடைத்தால் மட்டுமே கட்டுப்பாடின்றி, பரவிக் கொண்டிருக்கும் கொடிய நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். தூய்மை ஒன்றே சுகாதார பாதுகாப்பிற்கான அடிப்படையாகும்.

நிலையான அணுகுமுறையுடனும், தேவையான கருவிகளைக்கொண்ட சுகாதார பாதுகாப்புப் பணியாளர்களின் சேவையே, தற்போது நம் புவியை தாக்கிவரும் பெறுந்தொற்றியிலிருந்து காப்பாற்ற உதவும். இந்த அனுபவமானது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பொது சுகாதார நெருக்கடிகளுக்கு எதிரான வலுவான பாதுகாப்பை வழங்கும். ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் இவை பிரதான இலக்குகளாக வைக்கப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்து கொள்கிறேன், அந்த இலக்கானது சர்வதேச அளவில் உடல்நலனில் சந்திக்கப் போகும் சவால்களை எதிர்கொள்ளும்.

நாம் இந்த நெருக்கடியை ஒன்றிணைந்து சந்தித்தால், அழுத்தமான சூழல்களில் நாம் ஒற்றுமையுடனும், ஒருங்கிணைந்தும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உலகம் முழுவதிலும் உள்ள குறிப்பாக நமது எதிர்கால சகோதர, சகோதரிகளுக்கு உணர்த்த முடியும். வரும் நாட்களில் நம்மால் முடிந்தவற்றை செய்து மகிழ்ச்சியான ஆரோக்கியமான உலகை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்.

தலாய் லாமா

22 ஏப்ரல் 2020

Top