கொரோனா வைரஸ் பற்றி தலாய் லாமா : பிரார்த்தனை மட்டும் போதாது

நாம் ஏன் கருணையோடு கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும்

Studybuddhism dalai lama oaa

உலகில் நடக்கும் பிரச்னைகளுக்கு சில ”மந்திர சக்தியை” கொண்டு உதவலாமே என்று சில நேரங்களில் என் நண்பர்கள் கேட்பதுண்டு. நான் எப்போதும் அவர்களுக்கு சொல்வது தலாய் லாமாவிற்கு எந்த மந்திர சக்திகளும் இல்லை. அப்படியே நான் செய்தாலும் என் கால்களோ தொண்டையோ வலிக்கப்போவதில்லை. நாம் அனைவருமே மனிதர்கள், அச்ச உணர்வு, நம்பிக்கை, நிச்சயமற்ற தன்மைகள் என அனைத்தும் அனைவருக்கும் ஒரே விதமாகவே இருக்கிறது.

பௌத்த மத பார்வையில், ஒவ்வொரு உணர்வுகளான துக்கம், நோய் வாய்ப்படுதல், முதுமை மற்றும் இறப்பு ஆகியவை உண்மைத் தன்மைகளை உணர்ந்திருக்கின்றன. மனிதர்களாகிய நாம், கோபம், பீதி மற்றும் பேராசையை வெல்ல நம் மனதை பயன்படுத்துவதற்கான திறன் இருக்கிறது.  அண்மைக் காலங்களாகவே நான் “உணர்வுகள் நிராகரிப்பை” வலியுறுத்தி வருகின்றேன்: பயமோ அல்லது ஆத்திரமோ கலந்த குழப்பம் இல்லாமல், நிகழ்வுகளை யதார்த்தத்தோடும் தெளிவாகவும் பார்க்க முயற்சியுங்கள். ஒரு பிரச்னைக்கு தீர்வு இருக்குமானால், அதற்காக கடுமையாக உழைத்து முடிவைக் கண்டறிய வேண்டும்; அப்படி தீர்வு இல்லாத போது அதைப்பற்றி சிந்தித்து நமது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

பௌத்தர்கள் நாங்கள் இந்த உலகம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதாக நம்புகிறோம். இதனாலேயே நான் எப்போதும் உலகளாவிய பொறுப்புகளைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறேன். கொடூர உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் ஒரு மனிதனுக்கு என்ன நேர்ந்தாலும் அது எப்படி மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனினும் கருணை அல்லது ஆக்கப்பூர்வமான செயல்களை இந்த வைரஸானது நமக்கு நினைவுபடுத்தியுள்ளது – மருத்துவமனையில் பணிபுரிவது மட்டுமல்ல, சமூக விலகலை கடைபிடிப்பததன் மூலமும் பலருக்கு உதவ முடியும்.

வுஹானில் இருந்து கரோனா வைரஸ் பற்றிய செய்தி வெளிவந்த நாளில் இருந்தே, சீனா மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் என்னுடைய சகோதர, சகோதரிகளுக்காக வேண்டிக் கொண்டிருக்கிறேன். இந்த வைரஸிலிருந்து யாரும் தப்பவில்லை என்பதை தற்போது காண முடிகிறது. நமது நேசமிகுந்தவர்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் கவலைப்படுகிறோம், தன் குடும்பம் மற்றும் சர்வதேச பொருளாதாரமும் கவலையடையச் செய்கிறது. பிரார்த்தனைகளால் மட்டுமே இதனை சரி செய்ய முடியாது. 

இந்த நெருக்கடி நிலையானது நாம் அனைவரும் கட்டாயம் நம்மால் முடிந்த பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உலகை சகஜ நிலைக்குக் கொண்டு வரவும், நம் எதிர்காலத்தை இது போன்ற வைரஸ் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மனஉறுதியோடு அனுபவ அறிவியலுடன் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். 

அச்சுறுத்தலான இந்த காலகட்டத்தில், ஒட்டு மொத்த உலகிற்கும் மிக முக்கியமான நீண்ட கால சவால்கள் மற்றும் சாத்தியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நீலநிறக் கிரகத்தில் உண்மையிலேயே எந்த எல்லையும் இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளது. எனவே, நாம் அனைவரும் இதை கட்டாயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம் மற்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து பாதுகாக்கவும் செயலாற்ற வேண்டும்.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதே இந்த தொற்றுநோயானது நமக்கு விடுக்கும் எச்சரிக்கை, உலகளாவிய பிரதிபலிப்பு நாம் இதுவரை எதிர்கொண்டிராத அளவிலான சவால்களை சந்திக்கும். 

வீடற்றவர்களுக்கு கைகொடுப்பவர்களோ, மூலப்பொருட்களோ அல்லது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு கொடுத்து உதவுபவர்களோ யாரும் கவலைப்படாமல் இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியானது நாம் தனிக் குடும்பமாக வாழ்ந்தாலும் மற்றவர்களிடம் இருந்து தனித்திருக்கவில்லை என்பதை காட்டுகிறது. எனவே நாம் அனைவரும் கருணை மற்றும் உதவியை பயிற்றுவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. 

ஒரு பௌத்தனாக, நிலையாமைக் கொள்கையில் எனக்கு நம்பிக்கையுண்டு. நான் பல போர்கள் மற்றும் என் வாழ்வில் கொடூரமான மிரட்டல்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன், அதைப் போலவே இந்த வைரஸ் தொற்றும் கடந்து போகும். இதற்கு முந்தைய காலங்களில் சர்வதேச சமூகத்தை மறுகட்டமைப்பு செய்தது போல நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள், அமைதியாக இருப்பார்கள் என்று நான் உளமாற நம்புகிறேன். நிச்சயமில்லாத இந்த காலகட்டத்தில் பலர் நிலைகுலையாதிருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, நாம் நம்பிக்கை மற்றும் உறுதியை இழக்காமல் இருக்க வேண்டியது மிக அவசியம். 

Top