மகிழ்ச்சியின் ஆதாரமான இரக்கம்

Compassion as a source of happiness

வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சிக்காக பாடுபடுவது

நாம் இங்கு இருக்கிறோம்; நாம் உயிர்வாழ்கிறோம் உயிர் வாழ்வதற்கான உரிமை நமக்கு இருக்கிறது. புலன் உணர்வுகள் இல்லாத மலர்கள் கூட உயிர்வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. அதன் மீது வேதியியல் ரீதியிலான எதிர்மறை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், பூக்கள் தன்னைத் தானே சரிசெய்துகொண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால்[இதையும் தாண்டி], மனிதர்களுடன், பூச்சிகள், அமீபாக்கள் உட்பட, சிறு உயிர்கள் கூட புலன் உணர்வு கொண்டவையாக கருதப்படுகின்றன. [புலன் உணர்வு கொண்டவைகளால் நாம் உயிர் பிழைக்க மேலும் சில வழிமுறைகள் உதவுகின்றன.]

தங்களின் முடிவுப்படி அல்லது விருப்பப்படி நடப்பவையே “உயிருள்ள மனிதர்கள்” என்பதன் அர்த்தம் என்பதை நான் விஞ்ஞானிகளுடன் நடத்திய கலந்துரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். “புலன் உணர்வு கொண்ட” என்றால் உணர்வோடு இருத்தல் அல்லது மனிதனாக உணர்வு ரீதியில் இருப்பது என்று மட்டும் அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. வழக்கமாக இதன் அர்த்தம், மனதின் தெளிவான தோற்றம்,வ்அப்படியானால்  அரை நினைவோடு அல்லது சுயநினைவின்றி இருந்தால் உணர்வு இருக்காதா? பூச்சிகள் இப்படி இருக்கின்றனவா? உணர்வுகள் பற்றி பேசுவதை விட “நுண்அறிவாற்றல்” பற்றி பேசுவது சிறந்ததாக இருக்கும்.

எது எப்படியாயினும், நாம் இங்கு குறிப்பிட்டு சொல்ல வரும் மையப் புள்ளி [நுண்அறிவாற்றலின் படி] வேதனை, இன்பம், அல்லது சார்பற்ற உணர்வுகளை அனுபவிக்கும் திறன்தான்.

உண்மையில், இன்பம் மற்றும் வலி [மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை] இரண்டும் நாம் ஆழ்ந்து ஆராயத் தேவையானவை. உதாரணத்திற்கு, ஒவ்வொரு புலன் உணர்வு கொண்டவையும் உயிர் வாழும் உரிமை பெற்றிருக்கின்றன, அந்த உயிர் வாழ்தல் என்பதன் அர்த்தம் மகிழ்ச்சியோடு இருக்கும் ஆசை அல்லது சவுகரியம்: எனவேதான் புலன் உணர்வு கொண்டவை உயிர்வாழ முயல்கின்றன. எனவே, நம் உயிர் வாழ்தல் என்பது நம்பிக்கையை சார்ந்தது – ஏதோ ஒரு நல்லதிற்காக நம்புங்கள்: அதுதான் மகிழ்ச்சி. இதனாலேயே நான் எப்போதும் சொல்லும் முடிவு வாழ்வின் நோக்கம் மகிழ்தல். நம்பிக்கை மற்றும் மகிழ் உணர்வு இருந்தால் நம் உடலும் அந்த நன்மையை உணரும். எனவே நம்பிக்கையும், மகிழ்ச்சியும் நம் ஆரோக்கியத்திற்கான காரணிகள். உடல் ஆரோக்கியம் என்பது மகிழ்ச்சியான மனநிலையின் அடிப்படையில் அமைகிறது.  

மற்றொரு புறம், கோபம் என்பது பாதுகாப்பின்மை என்ற உணர்வால் ஏற்படுகிறது, இது நமக்கு அச்சத்தைத் தருகிறது. நாம் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை செய்தால் நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். நம்மை ஏதோ ஒன்று அச்சுறுத்தினால், நாம் பாதுகாப்பற்றவராக உணர்கிறோம், இதன் விளைவாக கோபப்படுகிறோம். கோபம் மனதின் ஒரு அங்கம், நம் உயிர் வாழ்தலுக்கு அது தீங்கை ஏற்படுத்தும். ஆனால் கோபம் [அது நம்மை மோசமாக உணர வைக்கிறது, எனவே இறுதியில்,அது] உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்காகிறது. 

உயிர் வாழ்தலுக்கு பிணைப்பு ஒரு உதவிகரமான அம்சம். ஒரு செடியை எடுத்துக் கொண்டால் கூட எந்த உணர்வுகளும் இல்லாவிட்டாலும், அதன் மீது வேதிப்பொருள் தெளிக்கப்பட்டால் தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டு வளர்ச்சிக்கும் உதவுகிறது. நம்முடைய உடலும், உடல் ரீதியாக அப்படித் தான் இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நமக்கு உடல் ரீதியில் சில நேர்மறை அம்சங்கள் உணர்வு ரீதியில் இருக்கிறது, அவை யாரோ ஒருவருடன் இணைந்து இருக்கச் செய்கிறது அல்லது நம்முடைய மகிழ்ச்சிக்காக இணைந்திருக்கிறோம். [ மற்றொரு புறம், கோபத்தோடு] தீங்கு ஏற்படுத்த நினைக்கும் அம்சங்கள் நம்மை விலக்கி வைக்கிறது [மகிழ்ச்சி உட்பட]. உடல் ரீதியில் இன்பம் [மகிழ்ச்சியைத் தருகிறது] நம் உடலுக்கு நன்மை தருகிறது; ஆனால் கோபம் [மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்துகிறது] தீங்கானது. எனவே, [உயிர் வாழ்தலுக்கான நோக்கம் எனும் பார்வையில்] வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாகும். 

இது தான் மனித வாழ்வின் அடிப்படை அதைப் பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்; நான் மதங்களைப் பற்றி பேசவில்லை, அவை இரண்டாம் நிலையில் உள்ளவை. மத ரீதியில், வாழ்க்கைக்கான நோக்கத்திற்கு வெவ்வேறு விதமான விளக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன. இரண்டாம் நிலையில் இருப்பது உண்மையிலேயே சற்று கடினமானது; எனவே, அடிப்படையான மட்டத்தில் பேசுவதே சாலச் சிறந்தது.

மகிழ்ச்சி என்றால் என்ன?

நம்முடைய  வாழ்வின் இலக்கு மற்றும் நோக்கம் மகிழ்ச்சி. மகிழ்ச்சி என்றால் என்ன? சில சமயங்களில் உடலுக்கு ஏற்படும் சோர்வு கூட திருப்திக்கான ஆழமான உணர்வைக் கொடுக்கும் [தடகள வீரர் கடுமையான பயிற்சி செய்வது போல. ] எனவே, “மகிழ்ச்சி” என்பதன் அர்த்தம் ஆழ்ந்த திருப்தியைத் தரும் உணர்வு. வாழ்வின் பொருள் அல்லது இலக்கு, திருப்தியடைவதாகும்.

மகிழ்ச்சி, துக்கம் அல்லது கவலை – இவற்றிற்கு, இரண்டு நிலைகள் உள்ளன: ஒன்று உணர்வு ரீதியில் மற்றொன்று மன ரீதியிலானது. உணர்வு ரீதியிலானது சிறு பாலூட்டிகள், பூச்சிகள் – ஒரு ஈக்கும் கூட பொதுவானவை. குளிர் காலத்தில், சூரியன் வெளிவந்ததும், ஒரு ஈ தன்னுடைய மகிழ்ச்சியை சுற்றி சுற்றி வட்டமிட்டு வெளிப்படுத்துகிறது. ஒரு குளிரான அறையில் அது வலுவிழந்து, தனது சோகத்தை வெளிக்காட்டுகிறது. அதுவே, உலகியலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் மூளையாக இருந்தால், அங்கே மகிழ்ச்சியின் உணர்வும் மேலும் வலுவானதாக இருக்கிறது. [அதன் கூடவே, இருப்பினும்,] நம்முடைய அதிநவீன மூளையானது அளவில் பெரியதாக இருப்பதால், நமக்கும் அறிவாற்றலும் உண்டு.

[இதை கவனித்துப் பார்த்தால்] மனிதர்களுக்கு உடல் ரீதியிலான அச்சுறுத்தல் உணர்வுகள் இல்லை. அவர்களுக்கு மகிழ்ச்சியான, சவுகரியமான வாழ்க்கை, நல்ல நண்பர்கள், ஊதியம் மற்றும் அந்தஸ்து இருக்கிறது. இருப்பினும் நாம் சில கோடீஸ்வரர்களைப் பார்த்தால், உதாரணத்திற்கு – தாங்கள்தான் இச்சமூகத்தின் முக்கியமான அங்கம் என கருதுகிறார்கள், ஆனால் இவர்கள் தனி மனிதர்களாக மகிழ்ச்சியில்லாதவர்களாக இருக்கிறார்கள். சில தருணங்களில் நான் வசதியானவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன், செல்வாக்கு பெற்ற மக்கள் மனக்கலக்கத்தையே வெளிக்காட்டி இருக்கின்றனர். ஆழ் மனதில் அவர்கள் தனிமை, அழுத்தம் மற்றும் கவலைகளைக் கொண்டிருக்கின்றனர். எனவே, மன ரீதியில் அவர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர்.

நம்மிடம் அற்புதமான அறிவாற்றல் இருக்கிறது, எனவே மன ரீதியில் நமக்கு கிடைக்கும் அனுபவமானது உடல் ரீதியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. உடல் வலியானது குறையக்கூடியது அல்லது அதனால் அடங்கிப் போகும். ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன், சில காலங்களுக்கு முன்னர் எனது உடல்நிலை சரியில்லாமல் போனது. எனது குடலில் மிகவும் வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் இந்தியாவின் ஏழை மாநிலமான பீஹாரில் இருந்தேன், புத்த கயா மற்றும் நாலந்தாவை கடந்து கொண்டிருந்தேன். அங்கு நான் பல ஏழைக் குழந்தைகளைக் கண்டேன். அவர்கள் மாட்டு சாணத்தை அள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கல்வி, எந்த வசதியும் இல்லை, நான் மிகவும் வருத்தப்பட்டேன். பின்னர், தலைநகர் பாட்னாவை நெருங்கும் போது, எனக்கு வலி அதிகரித்தது, வியர்த்து கொட்டியது. ஒரு வயதான உடல் நலம் குன்றிய, நோய்வாய்ப்பட்டவர், வெள்ளை நிற ஆடை அணிந்து மிகவும் அழுக்காக இருந்தவரைப் பார்த்தேன். அவரைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லை; உண்மையில் அது மிக கவலையளிக்கும் சம்பவம். அன்று இரவு என்னுடைய விடுதி அறையில் எனக்கு உடல் வலி மேலும் அதிகமானது, ஆனால் என்னுடைய மனது அந்தக் குழந்தைகள் மற்றும் முதியவரை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்த அக்கறையான சிந்தனையே என்னுடைய உடல்வலியை வெகுவாக குறைத்தது.  

ஒலிம்பிக் போட்டிகளுக்கு பயிற்சி எடுத்துக் கொள்பவர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அவர்கள் அதி தீவிர பயிற்சி மேற்கொள்கிறார்கள், இதற்காக எவ்வளவு வலிகளையும், கஷ்டங்களையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் மனதளவில் அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். எனவே, மனதளவிலான அனுபவம் உடலை விட மிக முக்கியமானது. ஆகவே, வாழ்வில் எது உண்மையில் முக்கியம் என்றால் மகிழ்ச்சியும் திருப்தியுமேயாகும்.  

மகிழ்ச்சிக்கான காரணங்கள்

மகிழ்ச்சிக்கான காரணங்கள் என்னென்ன? நம்முடைய உடலானது குழப்பமில்லா மனதுடன் அமைதியான மனநிலையில் இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக செல்லும், எனவே அமைதியான மனமே மிக முக்கியம். உடல் இருக்கும் சூழ்நிலை ஒரு பொருட்டேயல்ல, மன அமைதியே மிக முக்கியம். எனவே, மன அமைதியை நாம் எப்படி கொண்டு வருவது?

எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் வெளிவருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது; மனதை மங்கச் செய்து, பிரச்னைகளை மறக்கச் செய்வதும் முடியாத செயல். நாம் நமது பிரச்னைகளை தெளிவாக உற்று நோக்கி அதனை சமாளிக்க வேண்டும், அதே சமயம் அமைதியான மனநிலையையும் கடைபிடிக்க வேண்டும் எனவே நம் அணுகுமுறை யதார்த்தமானதாக இருக்கும், இதனால் அவற்றை நல்ல நிலையில் எதிர்கொள்ள முடியும்.

உறங்குவதற்காக யாராவது தூக்க மாத்திரையை எடுத்துக் கொள்கிறீர்களா – நல்ல வேளையாக எனக்கு அந்த அனுபவம் இல்லை. தூக்க மாத்திரை எடுத்துக் கொள்பவர்களின் அறிவாற்றல் கூர்மையாக இருக்குமா அல்லது மங்கி இருக்குமா என்று எனக்குத்தெரியவில்லை. 1959 ஆம் ஆண்டில் நான் முசோரியில் இருந்த போது, என்னுடைய அம்மாவோ அல்லது யாரோ ஒருவர் என நினைக்கிறேன் கவலை காரணமாக அவர் குழம்பி இருந்தார்: தூக்கமும் வரவில்லை. மருத்துவர் அவரை மருந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார், ஆனால் இதனால் மனது சிறிது சோர்வாக இருக்கும் என்று கூறி இருந்தார். அந்த நேரத்தில் இது நல்லதல்ல என்று நான் நினைத்தேன். ஒரு பக்கம் மனதிற்கு சிறிது அமைதி கிடைக்கும் ஆனால் மற்றொரு புறம் அதன் பாதிப்பான சோர்வு என்பது நல்லதல்ல. இதற்கு பதிலாக நான் வேறொரு வழியையே அறிவுறுத்துவேன். அறிவாற்றலை முழுவதும் செயல்படுத்தி, எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்கவே பரிந்துரைப்பேன், ஆனால் குழப்பமின்றி. குழப்பமற்ற மன அமைதியே சிறந்தது.

இதற்கு இரக்கத்துடன் கூடிய மனித அன்பு உண்மையிலேயே முக்கியம் : நம் மனது அதிக இரக்கத்துடன் இருந்தால், நமது மூளையும் சிறப்பாக செயல்படும். நம்முடைய மனது கோபம் மற்றும் பயத்தை வளர்த்துக் கொண்டால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், நம்முடைய மூளை மிக மோசமாக செயல்படும். ஒரு முறை நான் ஒரு விஞ்ஞானியை சந்தித்தேன், அவருக்கு என்பது வயது தான் இருக்கும். அவர் என்னிடம் அவருடைய புத்தகம் ஒன்றை கொடுத்தார். நாங்கள் கோபத்தின் கைதிகள் என்ற தலைப்புக்கொண்ட புத்தகம் அது என நினைக்கிறேன். அவருடைய அனுபவம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த போது, அவர் கூறினார் நாம் ஒரு பொருளின் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டால், அந்தப் பொருள் நமக்கு எதிர்மறையாகத் தோன்றும். ஆனால் 90 சதவிகிதம் அந்த எதிர்மறையானது நமது மனதின் வெளிப்பாடு. இது அவருடைய சொந்த அனுபவம்.

பௌத்தமும் அதையேத் தான் சொல்கிறது. எதிர்மறை உணர்வுகள் மேலோங்கினால், நம்மால் யதார்த்தத்தைப் பார்க்க முடியாது. நாம் ஒரு முடிவெடுக்கும் போது மனது கோபமாக இருந்தால்; நாம் தவறான முடிவு எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. யாருமே தவறான முடிவெடுக்க விரும்புவதில்லை, ஆனால் அந்த நேரத்தில் நமது அறிவாற்றலின் ஒரு பகுதியான மூளை செயல்பட்டு நல்லது கெட்டதை வேறுபடுத்திக் காட்டி சிறந்த முடிவை எடுக்க வைக்கிறது, அது செயல்படும் போது மிக மோசமாகி விடுகிறது. பெருந்தலைவர்களுக்குக் கூட இதுபோன்ற அனுபவம் இருக்கிறது.

எனவே, இரக்கம் மற்றும் அன்பு நமது மூளை செயல்பாட்டை மென்மையாக்குகிறது. இரண்டாவதாக, இரக்கம் நமக்கு உள்ளார்ந்த பலத்தைத் தருகிறது; அது நமக்கு தன் நம்பிக்கை தந்து, பயத்தைக் குறைக்கிறது, இதனால் நமது மனதையும் அமைதியாக வைத்துக் கொள்கிறது. எனவே, இரக்கத்திற்கு இரண்டு செயல்பாடுகள் இருக்கிறது : அது நம் மூளையை சிறப்பாக செயல்பட காரணமாகிறது மற்றும் நமக்கு உள்ளார்ந்த உறுதியைத் தருகிறது. இவையே மகிழ்ச்சிக்கான காரணங்கள். இது போன்று தான் இருக்கும் என நான் கருதுகிறேன்.

நிச்சயமாக மற்றவையும் கூட மகிழ்ச்சிக்கு நல்லவையே. எல்லோருமே பணத்தை விரும்புவார்கள். உதாரணத்திற்கு, நம்மிடம் பணம் இருங்தால், நாம் நல்ல வசதிகளை மகிழ்வோம். வழக்கமாக, இது போன்றவையே மிக முக்கியமானவை உயர்வானவை என்று கருதுகிறோம், ஆனால் அப்படியல்ல என்று தான் நான் நினைக்கிறேன்.              

நாம் ஒரு கடைக்குச் சென்று வியாபாரியிடம் பணம் கொடுத்து, மன அமைதியை வாங்க விரும்புவதாகக் கூறினால், அப்படி எதுவும் விற்கப்படவில்லை என்றே அவர்கள் கூறுவார்கள். பல வியாபாரிகள் நம்மை பைத்தியக்காரன் என்று நினைத்து எள்ளி நகைப்பார்கள். ஊசிகள் அல்லது மாத்திரைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியையோ அல்லது மன அமைதியையோ ஏற்படுத்த முடியும், ஆனால் அது முழு அளவில் இருக்காது. கலந்தாய்வு செய்யும் முறையை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் நாம் உணர்வுகளை கலந்துரையாடல் மற்றும் காரணத்தின் மூலம் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே மன ரீதியில் நாம் அணுகுவது கட்டாயமாகும். நான் எப்போது உரை நிகழ்த்தினாலும், நவ யுக மக்கள் வெளிப்புற முன்னேற்றம் பற்றி அதிகம் யோசிப்பதை சுட்டிக்காட்டுகிறேன். அந்த அளவில் மட்டுமே நாம் அக்கறையாக இருந்தால் அது போதாது. உண்மையான மகிழ்ச்சியும், திருப்தியும் உள்ளிருந்து வர வேண்டும்.

இவற்றிற்கான அடிப்படை அம்சங்கள் இரக்கம் மற்றும் மனித அன்பு, இவை உயிரியலில் இருந்து வருபவை. பிறந்த குழந்தையின் உயிர் வாழ்தல் அன்பை அடிப்படையாக சார்ந்திருக்கிறது. அன்பு இருந்தால், நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். அன்பு இல்லையென்றால், நாம் கோபம் மற்றும் பாதுகாப்பின்மையாக உணர்கிறோம். தாயிடம் இருந்து பிரிந்தால் குழந்தை அழுகிறது. அம்மாவின் இறுகிப் பிடித்திருக்கும் கைகள், கதகதப்பு, நம்மை மகிழ்ச்சியோடு அமைதியாகவும் வைத்திருக்கிறது. ஒரு குழந்தைக்கு இதுவே உயிரியல் காரணி. ஒரு விஞ்ஞானி, என்னுடைய ஆசிரியரும் கூட, அவர் அணுஉலைக்கு வன்முறை எதிரான உயிரியலாளர் –அவர் என்னிடம் கூறினால், குழந்தை பிறந்த பின்னர் தாயின் ஸ்பரிச தீண்டல் சில வாரங்களுக்கு மிக முக்கியம், இந்தத் தொடுதல் குழந்தையின் மூளையை விரிவுபடுத்தி வளர்ச்சிக்கு உதவுகிறது. தாயின் தொடுதல் குழந்தைக்கு பாதுகாப்பு மற்றம் சவுகரியத்தைத் தருகிறது, இதனால் மூளை வளர்ச்சி உள்பட உடல் வளர்ச்சியும் சரியான முறையில் இருக்க வழி வகுக்கிறது.  

எனவே இரக்கம் மற்றம் அன்பிற்கான விதையானது மதத்தில் இருந்து தோன்றவில்லை: இது உயிரியலில் இருந்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் தாயின் கருப்பையில் இருந்து வந்தவர்கள், நாம் உயிர் வாழ்வதற்கு அம்மாவின் அன்பும் பராமரிப்பும் முக்கிய காரணம். இந்திய பாரம்பரியத்தில், பிறப்பை நாம் ஒரு தாமரையில் இருந்து தூய தேசத்தில் பிறப்பதாகக் கருதுகிறோம். கேட்பதற்கே இது மிகவும் நல்லதாக இருக்கிறது, ஆனால் ஒருவேளை மக்களை விட தாமரை மீது அதிக பாசம் இருக்கலாம். எனவே தாயின் கருவில் இருந்து பிறப்பது நல்லது. நாம் பிறக்கும் போதே இரக்கம் எனும் விதையோடு பிறக்கிறோம். எனவே இதை தான் மகிழ்ச்சியின் விளைவுகள்.

Top