வாழ்க்கைக்காக பௌத்தம் தரும் ஆலோசனைகள்

How to tips for life ridwan meah unsplash

சில நேரங்களில் நாம் தோற்றுவிட்டதைப்போலவும், வாழ்க்கைக்கான சவால்களை எப்படி கையாள்வது என்பது குறித்து தெளிவின்றி இருப்பது போலவும், நமது நேர்மறை இலக்கை அடையும் உணர்வு இல்லாதவர் போலவும் உணர்வோம். மற்றவர்களுடன் சிறப்பான நீடித்த உறவை மேற்கொள்வது எப்படி என்ற குழப்பம் நமக்கு இருக்கும். பாரம்பரிய பௌத்த போதனைகளில் இதனைப் பார்த்தால், நமக்கு செயல்முறை வழிகாட்டுதல்களைத் தரும் ஏராளமானவற்றை காணலாம், அவை நம் ஒவ்வொருவருக்கும், எந்த நேரத்திலும், எல்லா கலாச்சாரத்திற்கும் உதவியாக இருக்கும். 

பிறருக்கு உதவும் குணநலன்களை வளர்த்தல்

 • பெருந்தன்மை – உங்களுடைய நேரம், ஆலோசனை, உதவி மற்றும் உடைமைகள்
 • சுய-ஒழுக்கம் – அழிவுகரமான விதத்தில் நடந்து கொள்வதையோ அல்லது பேசுவதையோ தவிர்க்கவும், உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வழியில் மற்றவர்களுக்கு உதவவும்.
 • பொறுமை – பிறருக்கு உதவும் போது ஏற்படும் கஷ்டங்களால், கோபமோ அல்லது வெறுப்போ அடைதல் கூடாது.
 • தைரியம் மற்றும் சகிப்புத்தன்மை – எவ்வளவு கடினமான நிகழ்வுகளாக இருந்தாலும், கடந்து செல்லுதல்.
 • மனம் மற்றும் உணர்வின் நிலைத்தன்மை - இலக்கில் இருந்து எப்போதும் பிறழாமல் இருத்தல்.
 • பாகுபாடு – உதவிகரமானது எது உபத்திரமானது எது? எது பொருத்தமானது, எது பொருத்தமற்றது? என்ற வேறுபாடு.

மற்றவர்கள் மீது நேர்மறை எண்ணத்தை பாய்ச்சுதலுக்கான வழிகள்

 • பெருந்தன்மையாக இருத்தல் – உங்களுடைய நேரம், ஆர்வம் மற்றும் ஆற்றல்
 • கனிவாகப் பேசுதல் – என்ன பேசுகிறீர்கள் என்பதில் மட்டும் கவனமாக இல்லாமல், நீங்கள் சொல்பவை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும்
 • அர்த்தமுள்ள வகையில் பேசுதல் மற்றும் செயலாற்றுதல் – ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்த பிறரை ஊக்கப்படுத்துதல்
 • சிறந்த உதாரணத்தை பொருத்துதல் – நீங்கள் தரும் அறிவுரைகளை நீங்களும் பயிற்சித்தல்

உங்களது நேர்மறை இலக்குகளை அடைவதற்கான வழிகள்

 • உங்களது இலக்கில் தெளிவோடு இருத்தல் இலக்கு யதார்த்தமானதா என உறுதிபடுத்துதல், அதனை அடைவதற்கான திறன் இருக்கிறதென்ற நம்பிக்கையோடு இருத்தல்.
 • சுய– ஒழுக்கத்தை பேணுதல் – வழிபிறழாமல் அல்லது இலக்கை அடைவதற்கு ஆபத்தானவற்றை செய்யாமல், இலக்கில் கவனமாக இருத்தல்.
 • பெருந்தன்மையோடு இருத்தல் – உங்களுடைய நேரம் மற்றும் முயற்சியோடு இலக்கை நோக்கி செயலாற்றுதல்
 • திறந்த – மனதோடு இருத்தல் – அதிக அளவில் கற்றுக்கொண்டே இருத்தல் உங்களது இலக்கை அடைய உதவியாக இருக்கும்
 • சுய – கண்ணிய உணர்வை பேணுதல் – உங்களுடைய இலக்கை அடைய பாதகமான, அவமானமான வழிகளில் செயல்படாது இருத்தல்
 • அக்கறை பேணுதல் –  எந்த ஒரு  பொறுப்பற்ற நடத்தையும் உங்கள் குழுவை எப்படி எதிர்மறையாக பாதிக்கும் என அறிதல்
 • கவனத்துடன் வேறுபடுத்துதல் -  உங்களது செயலுக்கு எது உதவியாக இருக்கும், எது தடங்கலாக இருக்கும் என வேறுபடுத்துதல்

உங்களது நேர்மறை இலக்குகளை அடைவதற்கான குணநலன்களை வளர்த்தெடுத்தல்

 • மனநிறைவுடன் இருத்தல் – உண்மையான  இலக்கை அடைய, உண்மையில்லாவற்றின் மீது பேராசை இல்லாமல் இருத்தல்.
 • மற்றவர்களுடன் வெறுப்பாகவோ, கோபமாகவோ அல்லது விரோதமாகவோ இல்லாமல் இருத்தல்  - எதேச்சையாக ஏதேனும் தவறு நடந்திருந்தாலும்
 • உங்களது இலக்கிலேயே கவனத்தோடு இருத்தல் – அதன் பலன்கள் உங்களை இலக்கை அடையச் செய்யும்
 • உங்கள் மனதை பழக்கப்படுத்துதல் –  என்ன நடந்தாலும் அமைதி மற்றும் உணர்வின் சமநிலையோடு இருத்தல்
 • எல்லாமே மாற்றத்திற்குட்பட்டது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்– நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும் அது பொருட்டல்ல, உங்களது மனம் மற்றும் உணர்வின் நிலை நிச்சயிக்கப்பட்ட அல்லது நிரந்திரமானதல்ல, அவை மாறக்கூடியவை.
 • மனஅமைதியை பேணுதல் -  உங்களால் முயன்ற சிறந்தவற்றை செய்வதை அறிந்து கொள்ளுதல்

 வாழ்க்கையை உங்கள் கட்டுக்குள் கொணர்தலுக்கான வழிகள்

 • உங்களது சுய முடிவை எடுக்கும் போது திறனற்றவர் என்ற நிலையை அடையாதிருத்தல் – அது உங்களது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு,  வருத்தப்படும் செயல்களைச்  செய்ய வைக்கும்.
 • நம்பிக்கையில்லாமல் இருப்பதை தவிர்த்தல், நீங்கள் தாம்பத்ய உறவுமுறையில் இருந்தால் - அவை தவிர்க்க முடியாத சிக்கல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
 • முக்கிய பொறுப்புகளுடன் கூடிய தலைமைப் பதவிக்கு  முயற்சிக்காதீர்கள் – அது உங்களது பெரும்பாலான நேரம் மற்றும் ஆற்றலை எடுத்துக்கொள்ளும்
 • உங்களிடம் இருக்கும் நல்ல பழக்கங்களை மற்றவர்களால் மாற்ற முடியாது என உறுதியெடுங்கள்- குறிப்பாக, ஆரோக்கியமான உணவு முறை, புகை பிடிக்காதிருத்தல் மற்றும் உடற்பயிற்சி - தீய பழக்கங்கள் உங்களது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 
 • நிஜத்தில் சாதிக்க முடியாதவற்றை செய்து காட்டுவதாக உறுதி ஏற்காதிருத்தல் – இந்தச் செயல்கள் உங்களை தன்னம்பிக்கை இழக்கச் செய்யும்
 • பொறுப்பற்ற முறையில் செயல்படுவதை தவிர்த்தல் – இவை எதிர்மறை முடிவுகளையே தரும்.

சவாலான சூழலில் பிரச்னைகளை தீர்க்க உதவும் குணநலன்களை வளர்த்தல்

 • பாராட்டப்படும் போதோ அல்லது விமர்சனங்கள் எழும் போது – உணர்ச்சி வயப்படாமலிருத்தல்
 • உங்களுக்கு நெருக்கமானவரையோ அல்லது விரும்பாதவரையோ சந்தித்தால் – நெருங்கி இல்லாமலும், விரோதம் பாராட்டாமலும் கவனமாக செயல்படுதல் வேண்டும்
 • உங்களது அன்றாட செயல்களில் ஈடுபடும் போது – உங்களது நல்ல கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொள்ளக் கூடாது
 • ஏராளமான உடைமைகள் அல்லது செல்வம் இருந்தால், உங்களது உயர்ந்த இலக்கானது புறக்கணிக்கப்படும் – பொருள் ஆசை இல்லாமல் இருத்தல்
 • உடல் சுகமின்றியோ அல்லது வலியோடு இருந்தாலும் அந்தச் சூழலிலும் உள்ளார்ந்த உறுதி மற்றும் குணத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான காலமாக அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் – உங்களுக்கு நீங்களே வருத்தப்படாதீர்கள்
 • எல்லா நேரங்களிலும் – உங்களது குறைபாடுகளைக் கலைந்து, நேர்மறை திறன்களை உணர்வதற்காக தொடர்ந்து செயலாற்றுதல்
Top