பதற்றத்தை எவ்வாறு கையாளுதல்

How to deal with anxiety

பல தருணங்களில் உலகம் முட்டள்தனமாக இடமாகத் தோன்றும். செய்திச் சேனலை வைத்துப்பாருங்கள்: தாக்குதலை ஏற்படுத்தவிருக்கும் தீவிரவாதிகள்! பொருளாதாரம் கடும் வீழ்ச்சி! அப்புறம் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது –அடுத்த சில வாரங்கள் நீங்கள் படுக்கையிலேயே ஓய்வெடுக்க விரும்பினால் இவையே போதுமானவை.

இது வெறும் வெளி உலகம். நாம் நமது தனிப்பட்ட வாழ்வையும் வாழ்ந்தாக வேண்டும். அடுத்தது எந்த சுற்றுலா தளத்திற்குப் போகலாம்? நாம் ஆசைப்பட்ட பதவி உயர்வை பெற்ற சக பணியாளரை எவ்வாறு எதிர்கொள்வது? உண்மையில் நம் வாழ்க்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

நமது சின்ன வயதில், நாம் என்னவாக விரும்புகிறோமோ அவ்வாறு ஆகலாம் என்று சொல்லி வளர்க்கப்படுகிறோம். “உங்களது கனவை பின்பற்றுங்கள்”, என்று சொன்னார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேர் கனவுகளோடு வாழ்கிறோம்? சமூக வலைதளங்களில் உலாவரும்போது நம்மில் எத்தனை பேர், உண்மையான கனவில் வாழ்கிறோம்? விடுமுறை நாட்களில் கடற்கரையில் சுற்றுவது, பற்களை வெள்ளையாக்கிக்கொள்வது ஆகியவை துன்பத்திலிருந்து விடுபட உதவுமா?

“மகிழ்ச்சியாக இருத்தல்” என்ற யோசனை தேவதைகளின் கதை போலவோ அல்லது இன்னொரு விளம்பர வரிகள் போல் தெரியலாம் – எப்போதோ வரும் நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நாம் இப்போது கடினமாக உழைக்கிறோம். ஆனால், எவ்வளவு கடினமாக உழைத்தாலும், மகிழ்ச்சி கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. முனைவர் பட்டம் பெற்ற சிலரது வாழ்க்கை McDonalds-ல் பணியாற்றுவதில் முடிந்துவிடும், மற்ற சிலர் நம்பமுடியாத அளவு செல்வம், புகழைப் பெற்றாலும், முடிவில் மனஅழுத்தம் காரணமாக, உயிரை மாய்த்துக்கொள்வார்கள். இவை அனைத்துமே வாழ்க்கை குறித்த பதட்டத்தை நமக்கு உண்டாக்குகின்றன. அதுவே சமூக பதட்டம் ஏற்பட காரணியாகிறது. இதன் காரணமாக நாம் நம்மை மற்றவர்களோடு எப்போதும் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

நேருக்கு நேர் சிலரை சந்திக்கும்போது அசவுகரியமாகவும், பாதுகாப்பற்றதாகவும் உணர்கிறோம், அதனால், நம்முடைய ‘ஸ்மார்ட்போன்’ திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவருடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம்.

இது இக்காலகட்டத்தின் பெருந்தொற்று நோய். எய்ட்ஸ், புற்றுநோய் அல்லது மனஅழுத்தம் அளவிற்கு ஆபத்தானதாக தோன்றாமல் இருக்கலாம், ஆனால் பதற்றம் நம்முடைய மொத்த சக்தியை இழக்கச்செய்து, அசவுகரியமில்லாத உணர்வை நிலையாக உருவாக்கும். நம்முடைய சிந்தனைகளோடு தனித்திருக்க முடியாததால், புதிய தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பது, முகநூல் பக்கத்தை மேலும் கீழுமாக தள்ளிக்கொண்டே இருப்பது ஆகியவற்றல் நமக்கு நாமே திசை திருப்புதலை உருவாக்கிக்கொள்கிறோம். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள நமக்கு எப்போதும் காதொலிப்பான் மற்றும் நிலையான இசை தேவை என கருதுகிறோம்.

அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும், அதே போன்று எப்போதும் நம்மை பிறரோடு ஒப்பிடக்கூடாது. ஆனால் உண்மையில் இதன் அர்த்தம் என்ன? பதற்றத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?

 பின்நோக்கி பார்த்தல்

நம்முடைய வாழ்வை பின்நோக்கிப் பார்த்து ஆராய வேண்டும். அவை மனச்சலிப்பை கொடுத்தாலும், அதனை எளிதில் விலக்கி விட்டு செல்ல முடியாது. நம்முடைய வாழ்வில் இருந்து எதை வெளியேற்ற நினைக்கிறோம்? எல்லோருக்குமே சரியான பாதை கிடைப்பதில்லை, ஆனால் நமக்கு முன்னால் இதே பாதையில் பயணித்தவர்கள் இருக்கின்றனர். நாம் ஒரு ராக்ஸ்டாராக விரும்பி இருக்கலாம், ஆனால் 24/7 மணி நேரமும் கேமராக்கள் நம்மை துரத்திக் கொண்டிருப்பது உண்மையில் மகிழ்ச்சியைத் தருமா? பிரபல ஸ்டார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? எத்தனை பேர் மது மற்றம் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள்? நாம் செலவிடும் நேரம் மற்றும் செயலாற்றல் தேவையானது தானா என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ரோல் மாடலை கண்டறியுங்கள்

நம் வாழ்வை மகிழ்வாகவும், அர்த்தமுள்ளதாக்கும் வழியை கண்டுபிடித்துவிட்டால், அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது அதனை மேம்படுத்துபவர்களை கண்டறிவதுதான். சிறந்த இசையமைப்பாளராக வேண்டுமா, அதற்கு கடும் பயிற்சி அவசியம். கால்பந்தாட்ட வீரராக வேண்டுமா, பயிற்சி முக்கியம். ஏன் நடப்பதற்குக் கூட பயிற்சி தேவை, நாம் நடப்பதையே மறந்து விட்டோம் என்பது வேறு விஷயம். ஆனால் இங்கு சொல்ல வரும் செய்தி என்னவென்றால், உழைப்பின்றி ஊதியம் இல்லை. அற்பணிப்புடன் இருந்தல் வாழ்க்கை மேம்படும். ரோல் மாடலாக இருப்பவர் நமக்கு சில ஆலோசனைகளை தரலாம், ஊக்கத்திற்கான மிகச்சிறந்த ஆதாரமாகவும் மாறுவார்கள்.

பிறருக்கு உதவுங்கள்

நம்முடைய சொந்த சிந்தனைகள் மற்றும் ஆசைகளை உள்வாங்கிக்கொள்வது மிகவும் எளிதானது. வாழ்வில் இருந்து நமக்கு என்ன தேவை என்பதை முக்கியமாக சிந்தித்து பார்க்க வேண்டும், ஒவ்வொரு முறையும் நம்முடைய வழியில் யாரேனும் வந்தால் நம் நிலையில் இருந்து வெளியேறுகிறோம். பதற்றத்தின் பெரும்பாலான பகுதியே தனித்திருப்பதாக உணர்வதேயாகும், ஆனால் மற்றவர்களுடன் இணைந்திருக்க சிறந்த வழி நேர்மையாக அவர்களுக்காக அக்கறைப்படுதலாகும். நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்தால், நம்மை துக்கம் பற்றிக்கொள்ளும்; அதை விடுத்து முழுமனதோடு பிறருக்கு உதவினால் பதற்றத்தில் இருந்து விடுபடுவதோடு, மகிழ்ச்சியையும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உதவி மிகப் பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைந்த அமாவாசையில் ஒருவரைப் பார்த்து செய்யும் புன்னகையோ அல்லது உண்மையாக யாரோ ஒருவருக்கு நன்றி சொல்வதோ இரண்டு பக்கமும் ஆத்ம திருப்திக்கு போதுமான ஊக்கமாக இருக்கும்.  உண்மையான ஆசையோடு ஒருவரின் நாளை மகிழ்ச்சிகரமாக்க வேண்டும், கடமையே என்று செய்தல் கூடாது. அதன் பிறகு உங்களது மனநிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

 நீங்கள் யார் என உணருங்கள்

நாம் தனித்துவமானவர்கள் என ஒவ்வொருவரும் நினைக்கிறோம், ஆனால் இதுவே நாம் சமமானவர்கள் என்பதை உணர்த்துகிறது. நீங்கள் யார்? என உணருங்கள் என நாம் சொல்லும் போது, உண்மையில் நாம் யார் என்பதை உணர வேண்டும். நம் அனைவருக்குமே பிரச்னைகள் இருக்கின்றன, பிரச்னைகள் இல்லா வாழ்க்கை என்ற ஒன்று இல்லை. உங்கள் சிந்தனையில் உதிக்கும் அனைத்தும் உண்மையென நீங்கள் நம்பிவிடாதீர்கள்.

நாம் நன்றாக இல்லாத புகைப்படத்தை எப்படி மற்றவர்களுக்கு காட்ட விரும்பமாட்டோமோ மற்றவர்களும் அப்படியே தான். பொது இடத்தில் ஏளனம் செய்யப்பட்டால் நாம் பயப்படுகிறோம் – அது ஏன்? – மற்றவர்களும் அப்படித் தான். சரியான வாழ்க்கை வாழ்வதாக நினைக்கும் இந்த மோசமான காலகட்டத்தில். நாம் அந்த வலையில் வீழ்ந்து விடக்கூடாது. இவற்றை மனதில் நிறுத்தி, முழுமனதோடு பிறருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த முயல்வது, நம்முடைய சொந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்க செயலாற்றினால், நம்முடைய பதற்றமானது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும்.

Top