மனஅழுத்தத்தை துறப்பதற்கு உதவும் பௌத்த பகுப்பாய்வு

இந்த இனிய மாலைப்பொழுதில் துறவறம் பற்றி பேசுமாறு என்னை கேட்டுக் கொண்டார்கள்- நம்முடைய சுய பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான தீர்மானம் – அதிலும் குறிப்பாக மாஸ்கோ போன்ற பெருநகரத்தில் மனஅழுத்த சூழலில் வாழும் போது அதனை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இந்தத் தலைப்பை நீங்கள் பகுப்பாயத் தொடங்கும் போது, நவீன உலகில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் பெரும்பாலும் பெருநகரத்தில் வாழ்வதனால் மட்டுமே வருவதல்ல என்பதை நீங்கள் காண முடியும். 

மிகைப்படுத்தப்பட்ட தூண்டுதலே மனஅழுத்தத்திற்கு அடிப்படை 

நிச்சயமாக பெருநகரத்தில் மாசு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்கள் இருக்கின்றன, அவை கிராமங்களில் கிடையாது, ஆனால் நம்முடைய மனஅழுத்தத்திற்கு பங்கு வகிக்கும் காரணிகள் இவை மட்டுமல்ல. நாம் மிக ஆழமாகப் பார்த்தால், நவீன உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாம் காண முடியும், அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்பதைத் தாண்டி, நமக்கு மிக மிக அதிகமான விஷயங்கள், அதிகமான வாய்ப்புகள், அதிகமான தகவல், அதிகமான தொலைக்காட்சி நிலையங்கள், தேர்ந்தெடுப்பதற்கு அதிகமான படங்கள், அதிகமான பொருட்களில் இருந்து தேர்வு செய்யக்கூடிய வாய்ப்புகள் என ஏராளமானவை இருப்பதாக நான் நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் மொபைல் போன்களை வைத்திருக்கின்றனர், எனவே உங்களுக்கு மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கும், எப்போதும் குறுந்தகவல்கள், தகவல் பரிமாற்றங்கள் போன்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் எல்லாவற்றையும் நாம் பார்க்க வேண்டும் என்கிற மனஅழுத்த உணர்வைக் கொண்டிருக்கிறோம், ஏனெனில் நாம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்களுடன் நம்மை தொடர்பில் வைத்திருப்பது போன்ற விஷயங்கள் குறிப்பிட்ட பலன்களைக் கொண்டிருந்தாலும், அப்படி தொடர்பில் இருப்பது முக்கியமானதாக இருந்தாலும், சில நேரங்களில் இவை சற்றே அதிகமானவை தான், தொடர்பில் இருப்பது முக்கியமானதாக இருந்தாலும், சில நேரங்களில் இவை சற்றே அதிகமானவை தான்; அது நிலைத்துப் போய்விடும் மேலும் நாம் மிக பாதுகாப்பற்றவர்களாகிறோம் ஏனெனில் அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது, அதற்குப் பின்னால் இருக்கும் மனநிலையானது “நான் எதையும் இழக்க விரும்பவில்லை. அது முக்கியமானதாகக் கூட இருக்கலாம். நான் விட்டுவிட விரும்பவில்லை” என்று இருக்கிறது.

எனவே நாம் எப்போதுமே என்ன நடக்கிறது என்பதை சரிபார்க்கும் பழக்கத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகிறோம், நிச்சயமாக அது நம்மை பாதுகாப்பானதாக உணர வைக்காது, ஏனெனில் எப்போதும் எதாவது ஒரு புதிய நிகழ்வு, புதிய செய்தி மற்றும் ஒரு புதிய தகவல் வந்து கொண்டிருக்கும். நாம் எதையாவது பார்க்கத் தேர்ந்தெடுத்தால், உதாரணத்திற்கு யூ டியூப் அல்லது டிவி என்று வைத்துக் கொள்வோம் – மாஸ்கோவில் எத்தனை ஸ்டேஷன்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவை உள்ளன, எனவே நீங்கள் எப்போதுமே எதையும் பார்க்கும் போது திருப்தியானதாக உணர மாட்டீர்கள் ஏனெனில் “இதைவிடச் சிறப்பானது வேறு எதாவது இருக்கும்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள், எனவே எப்போதுமே எதையாவது பார்ப்பதற்கான நிர்ப்பந்தம் இருக்கிறது, “நான் பார்க்கத் தவறிய, வேறு ஏதேனும் சிறப்பானது இருக்கலாம்” என்று பார்க்கிறோம். 

நமது மெய்நிகர் உலகங்களில் ஒப்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளலைத் தேடுதல்

இது போன்ற விஷயங்கள் உண்மையில் நம்முடைய மனஅழுத்தத்தை அதிகரிக்கின்றன, குறிப்பாக நமது நவீன உலகில் நாம் எங்கே வாழ்கிறோம்; பெரிய நகரமா அல்லது கிராமமா என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு சில வகையான சமூகத்தையும், சில வகையான நண்பர்கள் குழுவுடன் இருக்க விரும்புகிறோம்; எனவே முகநூல் பக்கத்தில் நாம் பதிவிடும் அனைத்திற்கும் “லைக்குகளை” விரும்புகிறோம், அப்போது தான் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக உணர்கிறோம், ஆனாலும் நாம் அதனால் அமைதி கொள்வதில்லை. எவ்வளவு லைக்குகளை நாம் பெற்றிருக்கிறோம் எனிபதில் நாம் திருப்தியடைவதில்லை, நாம் எப்போதுமே மேலும் அதிகம் பெற விரும்புகிறோம், அல்லது “உண்மையில் அதில் அர்த்தம் இருக்கிறதா?” அவை வெறுமனே ஒரு பொத்தானை அழுத்துவது அல்லது ஒரு எந்திரத்தை அழுத்துவதாக இருக்கலாம் (அதிக லைக்குகளைப் பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்). ஒரு செய்தியைப் பெற்றிருக்கிறோம் என்று உங்களுடைய தொலைபேசி குறிப்பிடும் போது, நாம் உற்சாகமாக உணர்கிறோம்; ஒருவேளை அது ஏதாவது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் நம்முடைய முகநூல் பக்கத்திற்குச் சென்று “இன்னும் சில லைக்குகள் கிடைத்ததா?” என்று பார்க்கும்போது இந்த எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும். அல்லது நான் எப்படி அடிக்கடி என்னை ஒரு செய்தி விரும்பி என்று வர்ணிக்கின்றேனோ அப்படி ஆகிவிடுவோம், மேலும் நான் எப்பொழுதும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், புதிதாக ஏதாவது, சுவாரஸ்யமான ஏதாவது நடக்கிறதா என்று பார்க்கிறேன், ஏனென்றால் நான் எதையும் தவறவிட விரும்பவில்லை.

பிரச்னையை இன்னும் ஆழமாகப் பகுப்பாய்ந்தால், அதற்குப் பின்னால் இருக்கும் விஷயம், “நான் மிகவும் முக்கியமானவன், நடக்கும் அனைத்தையும் நான் அறிந்த கொள்ள வேண்டும். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும்” என்கிற உணர்வு இருப்பதை நம்மால் கண்டறிய முடியும்.  நான் முக்கியமானவன், அனைத்தையும் நான் அறிந்து கொள்ள வேண்டும் நான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன், என்பதை நாம் பௌத்த பார்வையில் இருந்து சற்றே ஆழமான பகுப்பாய்வை செய்யலாம். நாம் ஏன் மிகவும் சுயநலமாக இருக்கிறோம், ஆனால் இன்று மாலை அந்த திசையில் நான் ஆழமாக செல்ல விரும்பவில்லை.

நம்முடைய யதார்த்த சூழலில் இருந்து தப்பித்தல்

மற்றொரு விதத்தில், நம்மைச் சுற்றி இருக்கும் சூழலோடு நாம் ஒன்றிவிட்டதாக உணர்கிறோம், அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக மொபைலை பார்ப்பது அல்லது மெட்ரோவில் பயணிக்கும் போதோ நடந்து செல்லும் போதோ இசையை கேட்பது போன்றவற்றை செய்கிறோம். நம்மிடம் எப்பொழுதும் iPod உடன் இயர்போன்கள் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் நினைத்தால் மிகவும் சுவாரஸ்யமான முரண்பாடை உணரலாம். ஒருபுறம் நாம் ஒரு சமூகக் குழுவாக ஏற்றுக்கொள்ளப்பட விரும்புகிறோம், ஆனால் மறுபுறம் நாம் உண்மையில் சமூகத்தில் இருக்கும்போது, தொலைபேசியில் கேம் விளையாடுவதன் மூலம் அல்லது மிகவும் சத்தமாக இசையைக் கேட்பதன் மூலம் அனைத்திலும் இருந்து தனித்து இருக்கிறோம்.

இதன் அர்த்தம் என்ன? இதற்குப் பெயர் தனிமை இல்லையா? நாம் சமூக அங்கீகாரத்தை விரும்புகிறோம்; நாம் தனித்து இருக்கிறோம், ஏனெனில் உண்மையில் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நாம் எப்போதுமே விரும்பவில்லை, ஆனால் மறுபுறம், நம்முடைய காட்சி உலகிற்கு தப்பித்து செல்வதன் மூலம் நம்மிடம் இருந்தே நம்மை வெளியேற்றுகிறோம், அதுவும் கூட தனிமை தான், இல்லையா?

ஒன்றுமே நடக்காமல் ஒரு நொடி கூட இருக்கக் கூடாது. எப்படியாவது பொழுதைபோக்க வேண்டும் என்று நாம் கட்டாயமாக உணர்கிறோம்; திரும்பப் பார்த்தால் இதுவும் ஒரு முரண்பாடானதே, ஏனெனில் ஒருபுறம் நாம் அமைதி மற்றும் நிசப்தத்தை வேண்டுகிறோம், மற்றொரு புறம் தகவல் மற்றும் இசை இல்லா வெற்றிடம் பற்றி கவலை கொள்கிறோம்.

மெட்ரோவோ அல்லது வேறு எதுவோ வெளிஉலகம் தரும் அழுத்தத்தில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், எனவே நாம் நம்முடைய சிறிய மெய்நிகர் உலகான தொலைபேசி, இணையதளத்திற்குள் மூழ்கிப் போகிறோம், ஆனால் அங்கும் கூட நம்முடைய நண்பர்கள் மற்றவர்களுடைய அங்கீகாரத்தை விரும்புகிறோம், நாம் எப்போதுமே பாதுகாப்பாக உணர்வதில்லை. நாம் உண்மையில் சிந்திக்க வேண்டியது பற்றிய சில உள்ளன:  அழுத்தத்தில் இருக்கும் போது நம்முடைய தொலைபேசி கருவிக்குள் மூழ்கிப்போவது பிரச்னைகளுக்குத் தீர்வைத் தருமா? நாம் பெருநகரத்தில் அல்லது வேறு எங்கோ வாழ்ந்தால், அது தீர்வா?

எதிர்மறையான பழக்கவழக்கங்களை உணர்தல் மற்றும் சுதந்திரமாக இருப்பதற்கான உறுதியை உருவாக்குதல்

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அனுபவம் நமக்கு மகிழ்ச்சியின்மையை கொடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கான ஆதாரத்தை அடையாளம் காண வேண்டும். நாம் ஏன் இந்தப் பழக்கங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்?

அதன் பின்னர் இந்த மகிழ்ச்சியின்மை உணர்வில் இருந்து விடுபடுவதற்கான ஆதாரங்களில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதன் அடிப்படையில் தீர்மானித்து, அது நிச்சயமாக செயல்புரியும் என்று நம்ப வேண்டும். ஆனால் அது நாம் வெறுமனே மகிழ்ச்சியின்மையை அகற்றிவிட்டு பேயைப் போல மாறி ஒன்றுமே இல்லாதது போல, ஆவிகளாக நகரத்தை சுற்றி வருவதைப் போன்ற உணர்வு அல்ல; மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியின்மை இல்லாதது மட்டுமல்ல; இது ஒரு நடுநிலையான, அமைதியான உணர்வுக்கு கூடுதலான ஒன்று. நாங்கள் உணர்ச்சியற்றவர்களாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, அது முக்கியமும் அல்ல.

நாம் உணர வேண்டும், அதன் பின்னர் அந்த வெளிப்புற விஷயங்கள் மற்றும் சூழல்கள் எதுவுமே உண்மையில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியின்மை, துன்பம் மற்றும் அழுத்தத்திற்கான ஆதாரமாக இருக்காது. அவை இருந்தால், பிறகு அனைவருமே அதே போலத் தான் அனுபவிக்க நேரிடும். 

மேலும் இணையதளமோ நம்முடைய செல்பேசிக் கருவிகளோ பிரச்னையல்ல. நாம் அதனை சரியாகப் பயன்படுத்தினால், நிச்சயமாக அவை நம்முடைய வாழ்வில் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். பிரச்னையே அவற்றுடனான நம்முடைய அணுகுமுறைகள் மற்றும் அவை கொண்டுவரும் உணர்ச்சிகள் மற்றும் வலுவூட்டல், இந்த அற்புதமான இணையதள உலகை உண்மையில் நாம் எப்படி கையாள வேண்டும் மற்றும் நம்முடைய வாழ்வில் நாம் எப்படி பிரச்னைகளைக் கையாள்கிறோம். 

சுய-அழிவைத் தரும் பல்வேறு பழக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம், இவை அனைத்துமே சில சிக்கல் தரும் மனநிலையில் இருந்து வருகிறது, அது பாதுகாப்பின்மை, யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, தனித்துவிடப்பட்டுவிட்டோம், கட்டாயப்படுத்தப்படுகிறோம், இது போன்ற விஷயங்களினால் வரும் பாதுகாப்பின்மையாக இருக்கலாம். ஆனால் அவற்றை கடந்து வருவதற்கு நாம் எடுக்கும் அஸ்திரம் 

சமூக வலைதளத்தில் மூழ்கிப்போதல், இது நம்முடைய அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது; இது ஒரு பின்கருத்தரியும் தொடர்ச்சி. “எல்லோருக்கும் என்னை பிடிக்குமா?” என்கிற எதிர்பார்ப்பை தான் ஏற்படுத்தும் அது மிக ஆழமாகவே இருக்கும். 

பதின்பருவத்தினரை பற்றி நினைத்தால் இணையத்தில் அவர்கள் செய்யும் கேலி இன்னும் மோசமாக இருக்கும். இதுவெறுமனே நுங்கள் விருப்பங்களை பெறுகிறீர்கள் நீங்கள் எத்தனை லைக்குகளைப் பெறுகிறீர்கள் என்பதை மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதோடு இது நின்றுவிடவில்லை, மாறாக நீங்கள் கேலிக்கு ஆளானால் – “பிடிக்கவில்லை” - போன்ற விஷயங்களையும் எல்லோரும் பார்க்கிறார்கள். இது பயங்கரமானது இல்லையா. 

எல்லோரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய சந்தோஷமான நேரத்தை பதிவிடுகிறார்கள், இல்லையா? யாருமே கஷ்டமான நேரத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவதில்லை. அதனால் உங்களுடைய நண்பர்களின் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நானோ போனில் என்னை நானே பார்த்துக் கொண்டே இந்த அறையில் அமர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள். இது மகிழ்ச்சியான மனநிலை இல்லை, அப்படித் தானே?

சமூக வலைதளம் போன்றவற்றில் என்ன நடக்கிறது என்ற சில யதார்த்தமான அணுகுமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும். முகநூல் பக்கத்தில் நீங்கள் பெறும் அதிக லைக்குகள் உங்களை எந்த விதத்திலும் பாதுகாப்பாக உணர வைக்காது, அதற்கு அப்படியான திறனும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். நிதர்சனம் அதற்கு எதிரானது. நாம் அப்பாவி, இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று நினைக்கிறோம், அதுவே அதிக விருப்பங்களை பெற வேண்டும் என்கிற தீராத ஆசையை கொடுக்கிறது – போதும் என்கிற மனமே வராத அளவிற்கு பொறாமை கொள்கிறோம் -இன்னும் அதிக லைக்குகள் வந்திருக்கிறதா என்பதை தொடர்ந்து சரிபார்க்கும் பாதுகாப்பின்மையைப் பெறுகிறோம். 

என்னுடைய வலைதளப் பக்கத்துடன் எனக்கு இந்த உணர்வு இருக்கிறது என்பதை நான் ஒப்புகொள்கிறேன்; தினசரி என்னுடைய வலைதளப் பக்கத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நான் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பேன். அன்றாடம் நாணய மாற்று விகிதத்தை பார்த்து இன்று எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று பார்ப்பதைப் போன்ற விஷயம் தான் இதுவும். நாம் எப்போதுமே அமைதியான மனநிலையை கொண்டிருப்பதில்லைண்டிருப்பதில்லை (புன்னகை). அல்லது மெய்நிகர் உலகின் கணினி விளையாட்டிற்குள் மூழ்கிப் போய்விடலாம் பிரச்னைகள் எப்படியாவது சரியாகிவிடும் என்று அப்பாவியாக நினைக்கிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் அதிகமான வோட்கா குடித்தால், பிரச்னைகள் சரியாகிவிடும் என்று நினைப்பதற்கு சமமானது இல்லையா. 

இந்த நாம் நிறைவானதாக மதிப்பீடு செய்தால், அது மிகவும் சுய அழிவு என்பதை நாம் காண முடியும், மேலும் வாழ்க்கையின் அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க முயற்சிக்கும் நம்முடைய வழிமுறைகள் மேலும் சிக்கல்களையே உருவாக்குகின்றன.

நம்முடைய சூழ்நிலையை சிறப்பான முறையில் கையாள்வதற்கு விழிப்புணர்வை பாகுபடுத்தும் தேவை

இந்த குறைபாடுகளைக் கையாள்வதற்கு, நாம் இருக்கும் சூழலின் விழிப்புணர்வை நாம் பாகுபடுத்த வேண்டும். உதாரணத்திற்கு, தேவைப்படும் வேலை: நாம் இதனுடன் சமாளிக்க வேண்டும்; அதுவே யதார்த்தம். இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யதார்த்தம் என்னவென்றால் நம்மால் முடிந்ததை மிகச்சிறப்பான நாம் செய்ய முடியும் என்பதே ஆகும். இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால், “நான் நன்றாக இல்லை” என்று நமக்கு நாமே சிந்திப்பது மற்றும் நம்முடைய வேலையில் இது ஒரு பயங்கரமான சித்திரவதை என்று வெளிக்காட்டுவதை நிறுத்துவதற்கு நமக்கு உதவுகிறது. 

பிரச்னை என்னவென்றால் நாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், நாம் புத்தராக இல்லாவிட்டால் யாருமே சிறப்பானவர்கள் இல்லை. நம்முடைய முதலாளியே நாம் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று நினைத்து நம்மீது அழுத்தம் கொடுத்தாலும், நம்மால் அப்படி இருக்க முடியாது என்பதே யதார்த்தம். அப்படி அது சாத்தியம் இல்லையென்றால் சுவற்றில் தலையை மோதிக்கொண்டு, சாத்தியமில்லாத ஏதோ ஒன்றை என்னால் செய்ய முடியவில்லையே என்று பிறகு ஏன் குற்ற உணர்வு கொள்ள வேண்டும்? 

அதனால் நம்மால் செய்ய முடிந்த சிறந்த விஷயத்தை செய்யலாம், சூழ்நிலையின் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் தந்து அதனை ஏற்றுக் கொள்வோம். அதன் பின்னர் ஒருநிலைபடுத்த முயற்சிக்கலாம்; நாம் எதிர்கொள்ளும் பிரச்னையை மனந்தெளிநிலையோடு ஏற்போம் –“இது சாத்தியமே” என்று கூடுதலாக மதிப்பிடாமல், அல்லது குறைத்து மதிப்பிட்டு “என்னுடைய தொலைபேசியில் மூழ்கிவிட்டு, விளையாட்டு தேடல் என்று இப்போது இருக்கும் நிலையை மறந்துவிடலாம் என்று எண்ணக் கூடாது. 

நிலைமையை நீங்கள் சமாளிக்க வேண்டும். அந்த வேலையுடன் நீங்கள் கையாள வேண்டும். நாம் அதை குறைத்து மதிப்பிட்டுவிட்டு பின்னர் உண்மையில் சமாளிக்கத் தேவையில்லாத விஷயம் இது என்று நாம் நினைக்கிறோம். இது எப்படி இருக்கிறதென்றால், உதாரணத்திற்கு, வேலையில் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய ஒரு சவால் இருக்கிறது, உண்மையில் அதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லை, அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நிச்சயமா இதைச் செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு உங்களிடம் இருக்குமா அல்லது நீங்கள் இணையதளத்தில் மூழ்கிவிடுவீர்களா, அல்லது உடனடியாக உங்களுடைய போனை எடுத்து ஏதேனும் புதிய செய்தி வந்திருக்கிறதா, யாரேனும் சுவாரஸ்யமான எதையாவது பதிவிட்டிருக்கிறார்களா” என்று பார்ப்பீர்களா. இந்த சவாலை நீங்கள் செய்ய வேண்டும் என்கிற உண்மையான யதார்த்தத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். இவை அனைத்துமே விடுபட வேண்டும் என்கிற தீர்மானத்துடன் சேர்ந்தவை. இது என்ன என்று அறிய முயற்சிக்கும் உணர்தல், அதுவே உண்மையில் நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 

நாம் இதனை எப்படி கையாளப் போகிறோம்?

ஹார்மோன் சுரப்பை நமது செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்தல்

சுய-ஒழுக்கம் எனும் சின்ன விஷயங்களுடன் தொடங்கி, நம்முடைய அழுத்தத்தை சமாளிக்கும் கையாளும் முறை எப்படி செயல்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும், அறிவியல் ரீதியில் ஹார்மோன்கள் என்கிற விதத்தில் பார்த்தாலும் கூட, அது நமக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை கொடுக்கும், மேலும் பௌத்தம் எதைப்பற்றி பேசுகிறது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் அது நமக்கும் கொடுக்கிறது. 

கார்டிசோல் மற்றும் டோபமைன் ஹார்மோன்கள்

நீங்கள் மனஅழுத்தமாக உணர்கிறீர்கள், அதனால் ஹார்மோன் அளவில் என்ன நடக்கிறதென்றால் நம்முடைய கார்டிசோல் அளவு அதிகரிக்கிறது. கார்டிசோல் என்பது அழுத்தம் தரும் ஹார்மோன், எனவே சில இளைப்பாறுதலை நாம் நாடுவோம். நம்முடைய வியூகம் என்ன, நாம் நினைப்பது நமக்கு மகிழ்ச்சியை தரப் போகிறது என்று நினைக்கிறோம் அதனால் நம்முடைய உடலுக்குள் போய்க்கொண்டிருக்கும் கார்டிசோலில் இருந்து நம்மால் விடுபட முடியும் என்று நினைக்கிறோம். ஒரு சிகரெட்டை புகைக்கலாம் அல்லது இணையத்தில் நேரம் செலவிடலாம், சமூக வலைதளத்தில் உலவலாம், இந்த அழுத்தத்தில் இருந்து விடுபட சுவாரஸ்யமான எதையாவது செய்யலாம் என்று நினைக்கிறோம். என்ன நடக்கிறது என்றால், இது நம்மை சிறப்பாக உணர வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பின் உற்சாகமும் மகிழ்ச்சியும் நமக்கு இருக்கிறது, அதனால் நமது டோபமைன் அளவு அதிகரிக்கிறது.

டோபமைன் என்பது வெகுமதியை எதிர்பார்க்கும் ஹார்மோன்; ஒரு விலங்கு மற்றொரு விலங்கைத் துரத்தும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு; அங்கும் இந்த எதிர்பார்ப்பு உள்ளது. நீங்கள் நேசிப்பவரை சந்திக்கச் செல்லும்போது, அது போன்ற ஒன்றை அடையாளம் காண்பது எளிது. அது எவ்வளவு அற்புதமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பால் டோபமைன் மிகவும் உயர்கிறது. நீங்கள் உண்மையில் அந்த நபருடன் இருக்கும்போது, அது அவ்வளவு அழகாக இருக்காது, ஆனால் இந்த டோபமைன் ஹார்மோன் அடிப்படையில் உங்கள் மகிழ்ச்சியின் அளவை உயர்த்தும் எதிர்பார்ப்பு இது.

நாம் உயிரியல் உயிரினங்கள். சிகரெட் அல்லது இணையத்தை சரிபார்த்த பிறகும், திருப்தி அடையவில்லை, அதனால் நம் மன அழுத்தம் திரும்புகிறது. எனவே இது கையாள்வதற்கு ஒரு நல்ல உத்தி அல்ல.

ஒரு சிகரெட் அல்லது செய்தியில் இருக்கும் சுவாரஸ்யமான நம்முடைய பிரச்னையை தீர்த்து விடும் என்கிற நம்முடைய தவறான கருத்தை நம்புவதன் தீமைகளை நாம் பாகுபடுத்த வேண்டும். 

பின்பற்றுவதற்கு இதுவே சிறந்த வழிமுறை என்று நாம் நினைப்பதில் இருக்கும் தவறுகளை நாம் புரிந்து கொள்ளும் போது, இவ்வகையான பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான தீர்மானத்தை நம்மால் வளர்க்க முடியும்; இந்தப் பழக்கம் உதவாது. 

எதிர்மறை பழக்கத்தை பின்பற்றுவதை தவிர்த்தல்

எனவே நாம் சிகரெட்டிடம் தஞ்சம் அடைவதை நிறுத்த வேண்டும். சிகரெட் புகைத்தல் என்பது மொத்தத்தில் மிகப்பெரிய விஷயம், எப்படியானால் : சிகரெட் புகைப்பதால் ஏதேனும் நன்மை உள்ளதா? இல்லை அப்படி எதுவும் இல்லை. ஆனால் இணையதள பயன்பாடு, சமூக ஊடக பயன்பாடு மற்றும் எல்லா நேரமும் நமக்கு வந்திருக்கும் தகவல்களை சரிபார்த்தல் போன்றவற்றை நாம் நெறிபடுத்த வேண்டும், எல்லா நேரமும் அதிலேயே மூழ்கி இருக்கத் தேவையில்லை. மற்றொரு விதமாகச் சொன்னால், இதை பயன்படுத்துவதன் மூலம் அதிலேயே தஞ்சம் அடைவதை நிறுத்துங்கள். தப்பிப்பதற்கான ஒரு வழியாக இதை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இதனால் பூர்த்திசெய்ய முடியாது என்ற நோக்கத்திற்காக இல்லாமல் ,பயனுள்ள நோக்கத்திற்காக அவற்றை பயன்படுத்துங்கள்.

நிச்சயமாக அது மிக மிகக் கடினம், நாம் சலிப்படைந்தால், வீட்டிலோ அல்லது பணியிலோ நாம் எதிர்கொள்ளும் எதையாவது நாம் செய்யப் பிடிக்கவில்லையெனில், அப்போது உங்களுடைய போனில் நேரத்தை செலவிடுவதற்காக கட்டாயம் ஏற்படுகிறது, இல்லையா? உடல் பருமனை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாட்டை நாம் மேற்கொள்ளும் போது, மனப் பருமனில் இருந்து வெளியேற நாம் தகவல் கட்டுப்பாட்டிற்கு செல்ல வேண்டும். உணவை உட்கொள்வதில் இருந்து கட்டுப்பாட்டுடன் இருப்பதைப் போல தகவல்கள், குறுஞ்செய்திகள், இசை உள்ளிட்டவற்றை உள்வாங்கிக் கொள்வதில் இருந்து நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

முதலில் நம்முடைய சுய-அழிவு தரும் பழக்கங்களில் இருந்து வெளியேறுவது நம்முடைய கார்டிசால் அளவிலான அழுத்தத்தை அதிகரிக்கும். ஏனெனில் பழைய பழக்கங்கள் மிக, மிக திடமானவை. எனவே சிகரெட் அல்லது மருந்து மற்றும் போதைப்பழக்கத்தை நீங்கள் கைவிடும்போது மோசமான திரும்பப் பெறும் அறிகுறிகளான கார்டிசால் அழுத்த ஹார்மோன் நாம் கொண்டிருப்பதைப் போல – இணையதளம், சமூக ஊடகங்கள் அல்லது இசை போன்றவற்றை நாம் கைவிடும்போதோ அதில் இருந்து இடைவேளை எடுக்கவோ விரும்பினால், அப்போது திரும்பப்பெறும் அழுத்தம் நிலவும். இது ஒரு வகையில் நச்சை வெளியேற்றுவதைப் போன்றதாகும்; இசையை கேட்பதில் இருந்து நச்சு நீக்கம் செய்வதை மக்கள் விவரித்துள்ளனர், குறிப்பாக அவர்கள் எப்போதும் ஐபாடுடன் இயர்போன்களை வைத்திருப்பதற்கு அடிமையாக இருக்கும்போது, சிறிது நேரத்திற்குப் பிறகு, தொடர்ந்து உங்களுடைய சிந்தனைக்குள் அந்த இசையை பாடிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இசை இல்லாமல் போவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். கற்பனை செய்வதற்கு இது மிக நல்ல உருவமாகும்; உடல் பருமனுடன் காதில் ஹெட்போனுடன் பாட்டு கேட்பது.. அது அப்படி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். 

எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்காததால் உங்களால் இயங்க முடியாது, ஏனெனில் எப்போதும் இந்த இசையானது ஒலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாட்டில் ஒரே ஒரு வரி மீண்டும் மீண்டும் வரும் போது உங்களை அது முட்டாள்தனமாக இயக்குகிறது. ஆனால் நாம் விடாமுயற்சியுடன் இருந்தால், திரும்பப்பெறுவதற்கான அழுத்த அளவான இறுதியில் மாண்டு போகும், மேலும் நாம் அமைதியான மனநிலையை அனுபவிப்போம். அதன் பின்னர், நம்முடைய எதிர்மறை பழக்கங்களை நேர்மறை பழக்கங்களுடன் மாற்றும் சிறந்த நிலையில் நாம் இருப்போம். 

மனிதாபிமானத்தில் நாமும் ஒரு அங்கம், நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு உள்ளவர்கள், நம்முடைய நலன் மற்ற அனைவரையும் சார்ந்து இருக்கிறது, மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கவும் இணைப்புடன் இருக்கவும் இணையதள சமூக வலைபின்னல் உண்மையில் ஒரு அங்கமல்ல என்கிற திருப்தியை நிலையாக பெறுவதற்கான வழி இது என்று உணர்வதைப் போன்ற நாம் இங்கே மிகச் சிறந்த பௌத்த முறைகளைக் கொண்டிருக்கிறோம், அவை பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. 

ஆக்ஸிடாசின் ஹார்மோன்

அதற்கு ஒரு ஹார்மோன் இருக்கிறது, அதுவே ஆக்சிடாக்சின். இது ஒரு இணைப்பைத் தரும் ஹார்மோன்; குழந்தைகள் மீது தாய்க்கு இருக்கும் இணைப்பை போன்றது. நமக்குள் இருக்கும் அந்த ஹார்மோனின் இயக்கம் நாம் அனைவரிடமும் பிணைப்புடன் இருக்க உந்துகிறது, ஒரு கூட்டத்தின் அங்கமாக உணர வைக்கிறது. இது நேர்மறையான விதத்தில் கூட நம்மால் திருப்தியாக எடுத்துக் கொள்ள முடியும், மனித இனத்தில் நாமும் ஒரு அங்கம், நாம் அனைவரும் சமம், எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், யாரும் மகிழ்ச்சியின்றி இருக்க விரும்பவில்லை போன்ற உணர்வு – இவ்வகையான சிந்தனையானது சமூக ஊடக குழுவில் இருக்கும் போது திருப்தியைப் பெற முயற்சிப்பதை விட அதிக நிலைத்தன்மையை கொண்டிருக்கிறது, அதுவும் விருப்பங்களின் அடிப்படையில். 

நான் இங்கே ஹார்மோன்கள் பற்றிய தகவலை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சொல்லி இருக்கிறேன். நாம் 21ம் நூற்றாண்டின் பௌத்தர்களாக இருக்க வேண்டும் என்று புனிதர் தலாய் லாமா அடிக்கடி கூறுவார், அதன் பொருளானது பௌத்த போதனைகள் மற்றும் அறிவியலுக்கும் இடையே பாலம் போல இருத்தலாகும், ஒரு விளக்கம் தரும் போது பௌத்த போதனைகளுடன் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன அவை அறிவியலுடன் தொடர்புடையவை, அதனால் தான் அவர் மன மற்றும்  வாழ்வியல் கருத்தரங்கிற்காக அடிக்கடி விஞ்ஞானிகளை சந்தித்து கலந்து ஆலோசிப்பார், பொதுவாக எந்த விஷயங்கள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, வாழ்க்கை பற்றிய முழு வடிவத்தை முழுமையாக பெறுவதற்கு இரண்டு விதங்களும் எப்படி ஒன்றுக்கு ஒன்று உதவுகின்றன என்பதை பார்ப்பதற்காக அவர் அப்படி செய்கிறார். 

உடல் மற்றும் மரபியல் அளவில் நம்முடைய உடலுக்குள் இருக்கும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் அடிப்படையில் மட்டுமே நாம் மிகவும் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் அவற்றை திருப்தி படுத்த நாம் என்னென்ன உத்திகளைக் கையாள்கிறோம் என்பதை நம்மால் பகுப்பாய முடியும், ஒருவேளை அவை செயல்படாமல் போனால் அவற்றை நேர்மறையாக கொண்டு செல்வதற்கான சுய-அழிவில்லாத இதர உத்திகளை, கண்டறியுங்கள்.

டோபமைன், எதிர்பார்ப்பு ஹார்மோன் மற்றும் ஆக்கப்பூர்வமான இலக்குகளை பொருத்துதல்

நாம் டோபமைன் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், சன்மானத்தை எதிர்பார்க்கும் விதமான ஹார்மோன் அது. அது உங்களை மிகவும் உற்சாகமாக உணர வைக்கும், இரைக்காக புலி மானை வேட்டையாடுவதைப் போன்ற உணர்வு. ஆக நாம் சில அழிவுகரமான வழிகளைக் கொண்டிருக்கிறோம் அவை செயல்படாது, டோபமைன் தாக்கத்தின் பலனை எடுக்க முயற்சிக்கிறோம், அதாவது நமது முகநூல் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் போன்றது– இவை உதவாது. 

அல்லது நடுநிலையான வழிகளில் அதனை திருப்திபடுத்துவதற்கான வழிகளையும் நாம் கொண்டிருக்கலாம். எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் ஒரு பளுதூக்கும் வீரர். அதனால் இப்போது அவரால் 180 கிலோ எடையை தூக்க முயுடிம் என்று எதிர்பார்த்தார், அடுத்தாக 200 கிலோ எடையை தூக்க முடியும் என்று எதிர்பார்ப்பை வைத்தார். அவர் மிக உற்சாகமாக இருந்தார், சன்மானம் பெறப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு அவரை மிகவும் மகிழ்ச்சிபடுத்தியது.  இருந்தாலும், அவரல் 200 கிலோ எடையை தூக்க முடிந்தாலும் கூட – இந்தச் செயல் அவருக்கு சிறப்பான மறுபிறப்பை தரப் போகிறதா? என்று ஒரு பௌத்தராக, மிக சிடுமூஞ்சித்தனமாக நாம் கேட்கலாம். 200 கிலோ எடையை தூக்க முடியும் என்பதால் அவருக்கு சிறப்பான மறுபிறப்பு கிடைக்கப் போகிறதா?; அப்போது அவர் திருப்தியடைய மாட்டார், அடுத்ததாக அவருடைய எதிர்பார்ப்பானது 210 கிலோ எடையை தூக்கலாம் என்று அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். 

ஆனால் செயல்படுவதற்கான டோபமைன் நோய்க்குறியின் நன்மைகளை நாம் எடுத்துக் கொண்டால், உதாரணமாக சமாதி அடைதல், சிறந்த ஒருநிலைப்படுத்துதல், அல்லது பொறுமைநிலையை அடைதல், நம்முடைய கோபத்தை கடந்து வருதல் உள்ளிட்டவற்றை நோக்கியதாக எடுத்துக் கொள்வோம், இங்கே இது மிகவும் உற்சாகமானதாக மாறிப்போகும். “எனக்கு போதுமான நல்லது எதுவும் இல்லை, என்னால் இதை எடுத்துக் கொள்ள முடியாது” போன்ற வெறுப்பு உணர்வுக்கு மாறாக, “இது தான் சவால், இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற முயற்சிப்பது தான் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி” என்கிற விதத்தில் நீங்கள் செயல்படத் தொடங்கலாம். 

தியான வழிகாட்டுதல்களில் இது உங்களுக்கு இருக்கிறது- நாம் இதனை எதிர்பார்ப்புகள் அல்லது ஏமாற்றங்கள் இல்லாமல் செய்ய முயற்சிக்க வேண்டும். உடனடியான தீர்வுகளைத் தரும் என்கிற எதிர்பார்ப்பை நீங்கள் கொண்டிருந்தால், நிச்சயமாக நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். எனவே எதிர்பார்ப்புகள் இல்லாமல், ஆனால் நீங்கள் இலக்கை நோக்கி செயல்படுகிறீர்கள். இலக்கை நோக்கி செயல்படுதல் குறிப்பாக அது அர்த்தமுள்ள இலக்காக இருந்தால் அதுவே மகிழ்ச்சிக்கான ஆதாரமாகும். நாம் உணரக் கூடிய அந்த மகிழ்ச்சிக்கு ஒரு உயிரியல் அடிப்படை இருக்கிறது, எனவே இது நிச்சயமாக விஞ்ஞானத்துடன் சிறந்த ஸ்திரத்தன்மை கொண்டது: 21ம் நூற்றாண்டு பௌத்தம். வேறு விதமாகச் சொல்வதானால், இதனை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், ஏன் எப்படி பௌத்த வழிமுறைகள் வீரியமானவை என்பதை நம்மால் விவரிக்க முடியும். அது தான் நோக்கமாகும். 

மூன்று உயர் பயிற்சிகள்: சுய- ஒழுக்கம், ஒருநிலைப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை பாகுபடுத்துதல்

சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரமாக இருப்பதற்கான தீர்மானத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும், இதைத் தான் பௌத்தத்தில் துறவு என்கிறோம். நம்முடைய சொந்த பழைய எதிர்மறை பழக்கங்களில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள, நம்மை நாமே சுய-ஒழக்கம், ஒருநிலைப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை பாகுபடுத்துவதில் பயிற்சித்துக் கொள்ள வேண்டும்; அவையே மூன்று பயிற்சிகள் என்று அழைக்கப்படுபவை ஆகும்: பயனுள்ளது என்ன, தீங்கானவை எவை, எது செயலாற்றும், எது செயலுக்கு உதவாது, நோக்கத்தில் கவனமாக ஒருநிலைபடுத்துதலுடன் இருத்தல் மற்றும் நம்முடைய நடத்தையை தேவைக்கேற்ப மாற்றும் ஒழக்கத்துடன் இருத்தலை பாகுபடுத்துதலாகும்.

சுய- ஒழுக்கத்திற்கான இடையூறு : வருத்தம்

இந்த மூன்றும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும், ஆனால் அவற்றை சரியாக மேம்படுத்த, அவற்றிற்கு இடையூறாக நம்மிடம் இருக்கும் காரணிகளை நமக்கு நாமே விட்டு வெளியேற வேண்டும். வருத்தம் நம்முடைய சுய-ஒழுக்கத்திற்கு இடையூறாகும். உதாரணமாக, இணையதளத்தில் நேரத்தை செலவிடவில்லை, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று நாம் வருத்தப்படுகிறோம், இது போன்ற வருத்தங்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இணையதளத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்கிற நம்முடைய சுய-ஒழுக்கத்திற்கு தீங்காகும்.

பயனுள்ள உத்தியானது “உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறதா?” - அல்லது உங்களுடைய கணினி அல்லது செல்போனில் இருக்கும் சுட்டிக்காட்டும் அலாரத்தை அணைத்து வைத்து விடுங்கள், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவற்றை சரிபாருங்கள். முக்கியமானவற்றிற்கு மட்டுமே படித்த உடன் பதில் அனுப்புங்கள், பின்னர் பார்த்துக கொள்ளலாம், அப்புறம் பதிலளிக்கலாம் என்று நமக்கு சுய-ஒழக்கம் தேவை, நாம் ஓய்வாக இருக்கும் வரை அந்தக் கேள்விகள் காத்திருக்கலாம், அல்லது பதில் தகவல்கள் அனுப்புவற்கென்றே அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். 

இங்கே நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும், இந்த விஷயத்தில் நான் சற்று குற்றஉணர்ச்சி கொள்கிறேன், எனவே எனக்கு வரும் மின்னஞ்சல்களைக் கையாள்வதற்கு ஒரு உத்தியை முயற்சிக்கிறேன். நான் சமூக ஊடகத்தில் இல்லை, எனவே எனக்கு இது போன்ற தகவல்கள் வராது, ஆனால் குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு முப்பது அல்லது அதற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் எனக்கு வரும். நான் என்ன செய்கிறேன் என்றால் உடனடியாக பதிலளிப்பதற்கு பதிலாக உண்மையில் முக்கியமானவற்றிற்கு உடனடியாக பதிலளித்துவிடுவேன், எஞ்சியவற்றை குறிப்பிட்டு வைத்துவிடுவேன். எனக்குத் தெரியும் மாலையில் என்னுடைய மனம் சற்று தெளிவில்லாமல் எழுதவோ அல்லது முக்கியமான விஷயங்களை செய்யவோ முடியாமல் இருக்கும் போது, இந்த மின்னஞ்சல்களுக்கு நான் பதிலளிப்பேன். எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் கட்டுப்பாடில்லாமல் போய்விடுவீர்கள். 

ஒருநிலைப்படுத்துதலுக்கான இடையூறுகள்: தூக்கம், மனச் சோர்வு மற்றும் அலைபாய்தல்

தூக்கம், மனச்சோர்வு மற்றும் அலைபாய்தல் ஆகியவை நம்முடைய ஒருநிலைப்படுத்துதலுக்கு இடையூறாகின்றன. இவற்றில் எதாவது ஒன்றால் வாழ்வை குறைவான சிக்கலுக்கு உள்ளாக்கும் நமக்கு வந்திருக்கும் செய்திகளை சரிபார்ப்பதில் இருந்து விலகும் நம்முடைய மனந்தெளிநிலையை இழக்கிறோம். அதிலேயே கவனமாக இருக்க, நினைவில் கொள்ளுங்கள், அதுவே மனந்தெளிநிலையின் பொருள். 

பெரும்பாலான தகவல்களுக்கு மாலையில் பதிலளிக்கப் போகிறேன் என்கிற நிதர்சனத்தை நான் ஏற்றுக் கொண்டால், என்னுடைய வாழ்க்கை மிகக் குறைவான அழுத்தத்துடன் இருக்கப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சியுங்கள். அல்லது எந்நேரமும், அது எந்த காலமாக இருந்தாலும் நாம் அவற்றை சமாளிக்கப் போகிறோம் என்பதை நாம் பொருத்தி வைத்துக் கொள்வோம். இடையூறாக இருப்பது என்னவென்றால், நீங்கள் தூங்கிவிட்டீர்கள், நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்பதாகும். உங்களுடைய முகநூல் பக்கத்திற்கு செல்வது மிக எளிமையானது. அல்லது நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள் தண்ணீர் அல்லது வேறு எதையாவது குடிப்பதற்கு எழுந்திருப்பதற்கு பதிலாக நீங்கள் இணையதளத்திற்குள் செல்கிறீர்கள். அல்லது அலைபாய்தலால், என்னுடைய மனம் எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகிறது, அது தான் நடக்கிறது; அப்படி நடக்கிறது மேலும் சற்றும் யோசிக்காமல் நீங்கள் தகவலுக்கு பதிலளிக்கிறீர்கள். போய் அதைப் படிக்கிறீர்கள். “நான் எதையும் தவற விடுவதற்கு விரும்பவில்லை.”

பாகுபடுத்தும் விழிப்புணர்வுக்கான தடைகள்: உறுதியற்ற அலைச்சல் மற்றும் சந்தேகம்

கடைசியில், உறுதியற்ற அலைபாய்தல் நம்முடைய பாகுபடுத்தும் விழிப்புணர்வுக்கு இடையூறாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தகவல்களை பார்ப்பது என்கிற முடிவில் நாம் முன்னும் பின்னுமாக அலைபாய்கிறோம் – “இது சரியான முடிவுதானா?” – என்று நம்முடைய முடிவிலேயே நாம் நிலையற்று இருக்கிறோம். சந்தேகிக்கிறோம். 

இது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன ஏனெனில் தகவல்களை பார்க்காமல் இருப்பது கடினமானது மற்றும் அழுத்தம் தரக் கூடியது. இந்த சந்தேகங்களுக்குத் தீர்வு கான நம்முடைய பழக்கங்களை மாற்றுவதில் இருக்கும் நன்மைகளை நமக்கு நாமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்; எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, சரியான வரிசையில், சரியான கட்டமைப்பில் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள முடிந்தால், அது என் வாழ்க்கைச் சுமையை குறைக்கும். இல்லையெனில் அது குழப்பம், மற்றும் குழப்பம் மன அழுத்தம் மிகுந்ததாகவே இருக்கும்.

சமத்துவம் மற்றும் இரக்கம்

நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக்கிக் கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய வேறு உத்திகளும் உள்ளன. உதாரணமாக, நெரிசலான மெட்ரோவில் செல்லும் போது எப்படி அந்த சூழலை சமாளிப்பது. நாம் அதிகமாக நம்மைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவோம், நம்மை பாதுகாத்துக் கொள்ள விரும்பிவோம், அதற்காக செல்போனுக்குள் தப்பித்துக் கொள்வதால், நம்மை நாமே வெளிஉலகில் இருந்து பூட்டி வைத்துக் கொண்டதாக உணர்கிறோம். அமைதியாக மெட்ரோவில் நேரத்தை கழிப்பதை பற்றி நான் சொல்லவில்லை, எங்காவது செல்வதற்கு அதிக நேரம் பயணிக்க வேண்டியதிருந்தால், புத்தகம் வாசிக்கலாம். நான் இங்கே குறிப்பிடுவது சமூகத்தில் இருந்து தப்பிப்பதற்கான வழியாக மொபைல், இசை அல்லது விளையாட்டை பயன்படுத்துவதை. நம்மைப் பற்றியே நாம் அதிக அக்கறை செலுத்தி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள விரும்பி செல்போனுக்குள் தொலைந்து போவதால், நம்மை நாமே தற்காத்துக் கொண்டதாக உணர்கிறோம், எனவே நம்முடைய சக்தியானது இழுக்கப்படுவதால், நாம் மேலும் பதற்றமாக உணர்கிறோம். நாம் இளைப்பாறவில்லை, ஏனெனில் நாம் அபாயத்தால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்கிறோம், குறிப்பாக இங்கே மாஸ்கோவில் மெட்ரோக்கள் வியத்தகு மக்கள் நெரிசல் மிக்கதாக இருக்கிறது. பெர்லினில் அவ்வளவு மக்கள் நெரிசல் இல்லை. 

நம்முடைய செல்போனில் விளையாடும் விளையாட்டால் நாம் வேறு உலகத்திற்கு சென்றாலும், நம்முடைய ஐபாடில் அதிக சத்தத்துடன் பாடலைக் கேட்கும் போது, நம்மைச் சுற்றி நாம் ஒரு சுவரை எழுப்புகிறோம், நம்மை யாரும் தொந்தரவு செய்வதை விரும்பவில்லை, அதனால் நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். உண்மையில்,  நாம் பொழுதை போக்க முயற்சித்தாலும், இது மிக மகிழ்ச்சியில்லாத அனுபவம். ஏனெனில் நாம் அமைதியாக இல்லை. 

மற்றொரு புறம், மெட்ரோவில் ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தில் நாமும் ஒரு அங்கம் என்கிற ரீதியில் நம்மை நாமே பார்த்து, நம்மைப் போலவே அவர்களும் இந்தச் சூழலில் இருக்கிறார்கள் என்று அக்கறை மற்றும் இரக்கத்தை வளர்த்துக் கொண்டால், நம்முடைய மனம் மற்றும் இதயம் வெளிப்படையாக இருக்கும். நிச்சயமாக நாம் அபாயத்தில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் நாம் மட்டுமே என்கிற சுயநல கவனம் இல்லாததாக அது இருத்தல் அவசியம். எல்லோருமே பாதுகாப்பாக இருக்க நாம் விரும்ப வேண்டும். மற்ற அனைவரையும் இசையால் மூழ்கடிக்கவோ அல்லது விளையாட்டின் மூலம் எல்லோரிடமிருந்தும் தப்பிக்கவோ நாம் முயற்சிக்க மாட்டோம். அது நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதாகும். நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

அனைவரிடமும் வெளிப்படைத்தன்மையை உணர்தல்

மிகவும் உதவக் கூடியது என்னவென்றால் எல்லோரிடத்திலும் வெளிப்படைத்தன்மையை உணர்தலாகும், ஆனால் வெளிப்படையாக இருப்பதென்றால், அதுவும் கூட மிக மென்மையானது. நான் என்பதை நீங்கள் திடமாக பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அது உள்ளுக்குள், இப்போது நான் வெளிப்படையானவன், நான் இப்போது மிக பாதிக்கப்படக் கூடும், நான் புண்படப் போகிறேன் என்கிற வகையின் அடிப்படையில் அதனை செய்யக் கூடாது. 

எல்லோரையும் பற்றி சிந்திக்கும் வெளிப்படைத்தன்மை, ஒருபுறம், மந்தையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த விலங்கு உள்ளுணர்வை திருப்திப்படுத்துகிறது. மந்தையிலிருந்து உங்களை தனிமைப்படுத்துவதை விட, நீங்கள் மந்தையின் ஒரு பகுதியாக இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்கள். எனவே ஒரு விலங்கு மட்டத்தில் அது செயலாற்றுகிறது. ஆனால் இப்போது உள்ளே இருக்கும் இந்த திடமான நான் என்கிற சுவற்றை அழிப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.. "இப்போது எல்லோரும் என்னைத் தாக்கப் போகிறார்கள்".

இது ஒரு நுட்பமான திட்டம் ஆனால் உங்களால் அதைச் செய்ய முடிந்தால் மிக உதவியானதாக இருக்கும். இதனைச் செய்வதற்கு நாம் சுய-ஒழுக்கம், ஒருநிலைப்படுத்துதல் மற்றும் பாகுபடுத்தும் விழிப்புணர்வை ஒருங்கிணைக்க வேண்டும். 

தீவிர பணியிலிருந்து பயனுள்ள இடைவெளிகளை எடுத்தல்

நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் அழுத்தத்தை கையாள்வதற்கு நம்மால் வேறு சில உத்திகளைக் கூட தழுவ முயற்சிக்க முடியும், அவை மிக எளிமையானவையாகக் கூட இருக்கலாம். அதாவது தீவிர வேலையில் இருந்து நமக்கு இடைவேளை தேவையெனில், இணையதளத்தில் உலவுவதை விட, எழுந்து ஒரு கோப்பை நீரை அருந்துவது, ஜன்னலுக்கு வெளியே பார்த்தல் போன்ற எதையாவது செய்யலாம். வேறுவிதமாகச் சொன்னால் அதிக தூண்டுதலுக்குப் பதிலான குறைவான தூண்டுதல். அதீத-தூண்டுதலில் இருந்தே அழுத்தமானது வருகிறது. இன்னும் அதிக தூண்டுதலைக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் அதற்குத் தீர்வு காண வேண்டாம். குறைவானதே சிறந்தது. 

விடுபடுவதற்கான தீர்மானத்துடன்  சுய-ஒழுக்கம், ஒருநிலைப்படுத்துதல் மற்றும் பாகுபடுத்தும் விழிப்புணர்வு ஆகிய இந்த மூன்று பயிற்சிகளை செயல்படுத்துவதன் மூலம், நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் அழுத்தத்தையும்,நாம் கொண்டிருக்கும் சுய-அழிவைத் தரும் பழக்கங்களையும் குறைக்க முடியும். குடும்பம், வேலை, பொருளாதாரச் சூழல் போன்ற அழுத்தம் தரும் செயல்களில் இருந்து நம்முடைய மனதை மேலும் அமைதியாக வைத்துக்கொள்ள நம்மால் முடியும். இணையதளம், சமூக ஊடகம், இசை போன்று நாம் கொண்டிருக்கும் நவீன சூழலைக் கையாள்வதற்கு அது நமக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக இணையதளத்தை பயன்படுத்துவதையே விட்டுவிட வேண்டும், உங்களுடைய செல்போனை தூக்கி எறிந்துவிட வேண்டும், இசையே கேட்கக் கூடாது என்று அர்த்தமில்லை. ஆனால் சிறந்த உத்தியை கட்டமைக்க, எப்படி ஆரோக்கியமாகவும் பயனுள்ள வகையிலும் பழக்கத்தை சிறப்பாக்கலாம். நன்றி.

கேள்விகள்

நவீன உலகில் நமக்கு இருக்கும் பிரச்னையே, நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். உதாரணமாக, நாம் செய்தியைப் படித்தால், சுய-நேர செலவிடுதலுக்காக மட்டும் அதனைச் செய்யவில்லை, மாறாக நாம் என்ன செய்ய வேண்டும், நிகழ்வுகளுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். உதாரணமாக விலை, சில நேரங்களில் அவை எப்படி மாறுகின்றன என்பதை ஆன்லைனில் காட்டுகிறார்கள் நாம் அப்போது அதற்கு பதிலளிக்க வேண்டியது வரலாம். அல்லது ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் உதவி தேவை என்று தகவல் அனுப்புகிறார். அல்லது நம்முடன் பணியாற்றும் சக நண்பர் நம்மிடம் எதையோ கேட்பதற்காக நமக்கு எழுதி இருக்கலாம், நாம் இவற்றையெல்லாம் சரிபார்க்காவிடில், நாம் அந்த அவசரத் தகவலை பெற முடியாது. அல்லது உதாரணமாக வானிலை அறிக்கையை வைத்துக் கொள்வோம். காலையில் நாம் வானிலை அறிக்கையை சரிபார்க்காமல், நாம் வெளியே சென்று விடுகிறோம், காலநிலை குளிரானதாக இருக்கலாம், நமக்கு அது தெரியாது, அதனால் அந்த சமயத்தில் நாம் வெளியே சென்றால் நாம் நோய்வாய்ப்படலாம். இந்த எல்லா விஷயங்களிலும் நம்முடைய செயல்திறன் குறைகிறது இதனால் நம்முடைய நேரம் அல்லது ஆரோக்கியம் சேதமடையலாம். 

அதனால் தான் நான் சொல்கிறேன் இணையத்தை எப்படி பயன்படுத்துவது என்று நாம் ஒரு ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான உத்தியை மேம்படுத்த வேண்டும். நாம் உடல் ரீதியில் பருமனாக இருந்து கொண்டு உணவுக் கட்டுப்பாட்டிற்கு சென்றால், அதற்கு அர்த்தம் நாம் முழுவதுமாக சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல. நாம் உண்ணும் உணவில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். அதே போலத் தான் தகவல் பருமன், நாம் என்ன பார்க்க வேண்டும், தேவையானது மற்றும் உதவிகரமானது என்னவோ அதைப் பார்க்கலாம், நான் ஏற்கனவே சொன்னது போல, என்னுடைய மின்னஞ்சல் திட்டத்தில் நான் பயன்படுத்து உத்தி போல, நீங்கள் சிலவற்றை குறிப்பிட்டு வைத்துக் கொள்ளலாம் அதனால் அவற்றை பின்னர் பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவரும். அதனால் அவற்றை பின்னர் பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவரும்;அவற்றை பின்னர் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் இந்த உத்தியும் கூட எந்த விஷயத்திற்கு பொருந்தும் என்றால், நாம் எல்லா தகவலையும் பெறுகிறோம் அவற்றில் எதற்கு பதிலளிக்க வேண்டும் என்று நாம் தேர்வு செய்கிறோம், அப்போதும் கூட நாம் அனைத்து செய்திகள் மற்றும் தகவல்களையும் படிக்கிறோம். 

திரும்பவும், நீங்கள் வெவ்வேறு உத்திகளைத் தழுவ வேண்டும். காலையில் எழுந்தவுடன் வானிலை அறிக்கையை பார்ப்பதற்கும் ஒரே இரவில் எவ்வளவு லைக்குகளை பெற்றிருக்கிறீர்கள் என்று பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எவ்வளவு லைக்குகளை பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் பார்க்கக் கூடாது. மேலும் நீங்கள் பெறக்கூடிய செய்திகளில், சில விளம்பரத்திற்கானவை, சில முக்கியமில்லாதவர்களிடம் இருந்து வந்திருக்கலாம்: சில விஷயங்களை உங்களால் பின்னர் கூட கையாள முடியும். உங்களுடைய பட்டியலில் எது முக்கியமானது எது முக்கியம் குறைவானது என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய நண்பர் ஒருவர் தான் சமைக்கும் காலைச் சிற்றுண்டியை புகைப்படம் எடுத்து எல்லோருக்கும் அனுப்ப விரும்புவார். நான் அவற்றை பார்க்கவே மாட்டேன்.

நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்பது அவருக்குத் தெரியுமா?

நான் அதனை பின்னர் பார்த்துக் கொள்வேன், ஆனால் நிச்சயமாக என்னுடைய வேலைக்கு நடுவே இடையூறாக அதனை பார்க்க மாட்டேன். 

இதர மதங்களும் கூட “சிறப்பாக உணர்கிறேன்” என்கிற உணர்நிலையைக் கொடுக்கும் வழிமுறைகளைத் தருகின்றன. பௌத்தத்திற்கு அதற்கும் பின்னர் என்ன வேறுபாடு இருக்கிறது?

“கர்த்தர் என்னை நேசிக்கிறார்”, “கடவுள் என் மீது அன்பு செலுத்துகிறார்” என்கிற விதத்தில் இதர மதங்களும் கூட இதனை வழங்குகிறது என்பது உண்மை- ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இலக்கை நோக்கி செயல்படுபவராக இருத்தல். நிச்சயமாக இவை அங்கே இருக்கின்றன, என்பது உண்மை. நான் சொல்லிக் கொண்டிருக்கும் வழிமுறைகள் பௌத்தத்திற்கு மட்டுமே குறிப்பாக பொருந்துபவையல்ல, எந்த மதச்சூழலும் இன்றி அவை காணப்படுகிறது; அவை வெறுமனே பொதுவான உத்திகள் எல்லோருக்கும் உதவிகரமானவை. நான் சொல்வது பௌத்தத்தில் மட்டுமே குறிப்பாக இருக்கிறது என்பதல்ல. 

பௌத்தத்தில் குறிப்பிடும்படியாக என்ன இருக்கிறது என்று நாம் கேட்டால், மிக நுட்பமான அளவில் யதார்த்தத்தை நாம் நோக்கும் பார்வையாகும். விஞ்ஞானிகளுடனான இந்த உரையாடல்கள் வெளிப்படுத்துவது என்னவென்றால், அது கூட அவ்வளவு தனித்துவமானது அல்ல, ஏனென்றால் யதார்த்தத்தின் இந்த பார்வை குவாண்டம் பிரபஞ்சத்தின் பார்வையுடன் மிகவும் ஒத்துப்போகிறது. பிரபஞ்சத்தின் கட்டமைப்பின் அடிப்படையில் குவாண்டம் கோட்பாட்டை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டால், வெற்றிடத்தையும் சார்ந்து எழுவதையும் பற்றிய பௌத்த போதனைகளைப் பெறுவீர்கள்.

நாம் யாரையோ பார்ப்பதற்காகத் தயாராகிறோம், நாம் அந்த நபரை சந்திக்கச் செல்கிறோம், ஆனால் உண்மையில் அந்த நபரை பார்க்கும் போது, அவர் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் நம்மிடம் அதிக கவனம் செலுத்தவில்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும். இது போன்ற சூழ்நிலையில்,இது சரியல்ல என்று அந்த நபரிடம் வெளிப்படுத்துவது சரியா, ஏனெனில் நாம் உண்மையான சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்?

என்னைப் பொருத்தவரையில் நான் அப்படி நினைக்கிறேன். “ஹலோ! நான் இங்கே இருக்கிறேன்” என்று அந்த நபரிடம் சொல்வது சரியாக இருக்கும். சொல்போனை பொருத்த வரையில் ஒரு குறிப்பிட்ட வழக்கம் இருக்கிறது அது மிக முக்கியமானது, குறிப்பான நீங்கள் பெற்றோராக இருந்தாலோ, பதின் பருவ பிள்ளை உங்களுக்கு இருந்தாலோ சாப்பாட்டு மேஜையில் மெசேஜ் அனுப்பாமல் போனில் பேசாமல் இருப்பதை நிறுவ வேண்டும். ஆம், இதற்கு அனுமதி இல்லை என்று நீங்கள் சொல்லலாம், மேலும் அவர்கள் போனை தூர வைப்பதற்கு நீங்கள் அறிவுறுத்தலாம். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் என்னுடைய தோழி ஒருவர், விரிவுரையின் போது மாணவர்கள் செல்போனை மேசையிலேயே வைத்துவிட அறிவுறுத்துவார். தங்களுடைய இருக்கைக்கு செல்போனை கொண்டு வர அவர்களுக்கு அனுமதி இல்லை. அது முற்றிலும் சரியானது என்றே நான் நினைக்கிறேன். இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் அது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேர கருத்தரங்கமா என்று நான் மறந்து விட்டேன்; ஏனெனில் அது மூன்று மணி நேர கருத்தரங்கம் – அவள் மற்றவர்களுக்கு தொலைபேசியில் இருந்து இடைவேளை கொடுத்திருந்தார். அதற்காக அவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூடாது என்பதல்ல, ஆனால் போனை எடுத்து பார்க்காததால் அவர்கள் மிகவும் இருக்கமாக இருந்தனர், இடைவேளையின் போது ஓடிச் சென்று போனை எடுத்துப் பார்க்க அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. சமூகரீதியில் இது மிக சுவாரஸ்யமானது. 

இது உண்மையில் மக்கள் தங்கள் தொலைபேசி மீது வைத்திருக்கும் ஒரு நாள்பட்ட போதை, மேலும் ஒருவித சமூக ஒழுக்கத்தை உருவாக்க மக்களுக்கு நீங்கள் அடிக்கடி உதவ வேண்டிய ஒன்று. அமைதியான வழியில் செய்தால் இது சரியானது என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவித பேரழிவு இருக்கிறதா அல்லது மிகவும் முக்கியமில்லாத ஒன்றைப் பற்றி அரட்டை அடிப்பதா என்பதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மேலும் யதார்த்தமாக இருங்கள், பேரழிவுகள் குறித்த தொலைபேசி அழைப்புகளை நாம் எவ்வளவு அடிக்கடி பெறுகிறோம்? நாம் யாரையாவது சந்திக்கும் போது, நம்முடைய குழந்தை பத்திரமாக வீட்டிற்கு வந்துவிட்டதா என்பதை அறிவதற்கான ஒரு தொலைபேசி அழைப்பிற்காக  காத்திருக்கிறோம் என்றால், நீங்கள் அந்த நபரிடம் சொல்லலாம். "நான் ஒரு அழைப்பை எதிர்பார்க்கிறேன். என் குழந்தை பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்காக நான் காத்திருக்கிறேன்," என்று கண்ணியமாகக் கூறுங்கள். பின்னர் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், எல்லாம் தெளிவாக இருக்கிறது.

மெட்ரோவில், சுரங்கப்பாதையில் செல்லும் போது, நான் எப்போதும் இசையை கேட்கிறேன், அதிக தூண்டுதலுக்காக நான் இதனைச் செய்யவில்லை, உண்மையில் எதிர்மறை தூண்டுதலை குறைக்கும் விதத்தில் செய்கிறேன். ஏனெனில் என்னைச் சுற்றி இருக்கவர்கள் எதைப்பற்றியாவது பேசுகிறார்கள் சில நேரங்களில் நான் அவற்றை கவனிக்க விரும்பவில்லை, இந்த உரையாடல்களில் ஏராளமான எதிர்மறைத்தன்மை இருக்கிறது. அதே போல மெட்ரோவில் விளம்பரமும் இருக்கிறது, உங்கள் மனதிற்கு தெரிந்த எதையாவது அவை சொல்கின்றன. எனவே இது போன்ற எதிர்மறை தூண்டுதல்களில் இருந்து தனித்திருக்கவே, நான் இசையை கேட்கிறேன். நான் தப்பித்துக் கொள்கிறேனா? அல்லது என்னுடைய எதிர்மறை மற்றும் மிகத் திறன் கொண்ட தூண்டுதல்களை குறைவானத்திறன் கொண்டவையாக மற்றும் குறைவான அழிவுகரமான ஒன்றாக மாற்றுகிறேனா? 

இது மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. என்னுடைய மனதில் வந்த முதல் விஷயமானது ’இந்தியா’ பதில், ஒருவேளை அது மிகச் சரியான விடையாக இல்லாமல் இருக்கலாம்: இந்தியாவில் வீடியோ கோச் வசதி கொண்ட வாகனத்தில் இரவு முழுவதும் பயணம் செய்கிறீர்கள், இரவு முழுவதும் பேருந்தில் வீடியோ ஒளிபரப்பாகிறது. திரும்பத் திரும்ப அதே திரைப்படம் உச்சபட்ச சத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஓட்டுநரிடம், “வீடியோ சத்தத்தை சற்று குறைக்க முடியும்” என்று கேட்கிறீர்கள், அதற்கு அவரின் பதில்,”அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்" என்பதாக இருக்கும்.

எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று மெட்ரோவில் நீங்கள் கவனிக்கத் தேவைளில்லை. அது கவனித்தலை பொருத்தது. உங்களுடைய கவனம் எதில் இருக்கிறது? உங்களுடைய கவனம் அனைவரையும் பார்ப்பதாக இருந்தால், இப்படி வைத்துக் கொள்வோம், அவர்களின் முக பாவனைகள், ஒருவேளை அவர்கள் மிக மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், இரக்க்ததுடன் அவர்களுக்காக அவர்கள் மகிழ்ச்சியின்மையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் விருப்பப்பட்டால், உங்களுடைய கவனம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் இல்லாமல்; விளம்பரத்தை பார்க்காமல் உங்களுடைய கவனமானது வேறு எங்கோ இருக்கிறது. 

நம்மால் அதைச் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை, இசையை கேட்கலாம். ஆனால் இசையானது மக்களை தவிர்ப்பதற்கான ஒரு சாக்காக இருக்கக் கூடாது. இரக்கத்தை பயிற்சிப்பதற்கு இது சிறந்த வாய்ப்பாகும். 

மேம்பட்ட பௌத்த பயிற்சியான கொடுத்தல் மற்றும் எடுத்தலான டோங்லென் கொள்கையை பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய முயல்கிறீர்கள் என்பதைத் தள்ளிவிட்டு, மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைச் சுற்றிச் சுவர்களைப் போடுங்கள், நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள், எனவே நீங்கள் வெளிப்படையாக இருக்கிறீர்கள், மேலும் அவர்கள் அற்பமான ஒன்றைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். எதிர்மறையான ஒன்று, பின்னர் நீங்கள் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறீர்கள், அவர்களை வருத்தப்படுத்துவது எதுவாக இருந்தாலும், அவர்கள் அதைக் கடக்கட்டும். அவர்கள் அதிக அர்த்தமுள்ள நேர்மறையான விஷயங்களில் அதிகமாக ஈடுபடலாம். எனவே டோங்லென் பயிற்சிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

பெரும்பாலும், நாம் முதலில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருக்கும்போது, ஒரு கட்டத்தில் அது குறைகிறது, மேலும் சோம்பல் அல்லது பிற காரணங்களால், இதை நாம் உணர மாட்டோம், அப்படி நடந்தால், அதை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்.

பொதுவாக வழங்கப்படும் முக்கிய அறிவுரை என்னவென்றால், நாம் எதிலிருந்து விடுபட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் அதன் தீமைகளை நமக்கு நினைவூட்டுவது; என்ன துன்பமான சூழ்நிலை இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டால் நன்மைகள் கிடைக்கும். மேலும் விடுபடுவதற்கான வழிமுறைகளை நமக்கு நினைவுபத்துகிறது, மேலும் அந்த முறை மட்டும் செயலாற்றவில்லை, மாறாக நம்மால் அதைச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை அது மறு உறுதிப்படுத்துகிறது. இவை அனைத்துமே விடுபடுவதற்கான முடிவின் மிக முக்கிய அங்கம். வேறு விதமாகச் சொல்வதானால், “நான் கடினமாக உழைத்தால் என்னால் விடுபட முடியும்” என்று நமக்கு நாமே நினைவுபடுத்துவதாகும்.” இல்லாவிட்டால் நீங்கள் ஊக்கமளிக்கப்படாததாக உணர்ந்து எதுவுமே செய்யாமல், விட்டுக் கொடுத்துவிடுவீர்கள். 

நாம் தியானப் பயிற்சி செய்தால், அது நம்மை மேலும் நிலையானவராகச் செய்யும், நாம் அடையக் கூடிய ஒன்று இதுவாகும். ஆனால் நம்மை நிலையாவர் ஆக்குவதற்கு மருந்துகளை நாம் எடுத்துக் கொண்டால், எந்த முயற்சியும் இல்லாமல் பெறுவதன் அடிப்படையிலானது, மேலும் இது நம்மிடம் மாற்றத்தைத் தராது. நிச்சயமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அந்த நிலையை உயர்த்துவற்காக அன்றாட வாழ்வில் அழுத்தத்தை குறைக்க மற்றும் இதர மனதில் எழும் எதிர்மறை தாக்கங்களை குறைப்பதற்காக அன்றாடம் எதையாவது எடுத்துக்கொண்டால் என்னவாகும்?

பௌத்த முறைகள் குறித்து நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட அளவு முதிர்ச்சியும் நிலைத்தன்மையும் அடைந்தவர்களுக்கு பௌத்த முறைகள் அதிக பயன்தருகிறது. உண்மையில் நீங்கள் மனதளவில் குழம்பியோ, உணர்ச்சிவசப்பட்டோ இருந்தால், உங்களால் பௌத்த முறைகளை செயல்படுத்தமுடியாது. நீங்கள் ஒரு நிலைத்தன்மைக்கு வர வேண்டும், மருத்துவம் அதற்கு மிக உதவியாக இருக்கிறது – அவை அமைதிப்படுத்தும் tranquilizers மற்றும் அழுத்தத்தை குறைப்பவை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்கு உதவிசெய்யும் ஏதோ ஒன்று தேவை. “நன்றாக தியானம் செய்யுங்கள்” என்று வெறுமனே சொன்னால் சிலவரால் அதைச் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் நிலையானவரானால், நிச்சயமாக நீங்கள் மருந்து மாத்திரைகளின் பிடியை தளர்த்தி வெளியேறலாம். நீங்கள் அதிக நிலையானவரானால், உண்மையில் தியானப் பயிற்சிகளை செயல்படுத்தும் ஒரு மனநிலைக்கு வந்துவிடுவீர்கள். முதலில் நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தததால்; ஒருநிலைப்படுத்துதல் இல்லாமல் இருந்தீர்கள். 

புத்தர் ஹெட்போன்களை போட்டக் கொண்டிருப்பதைப் போன்ற படத்தை உணவுவிடுதி விளம்பரத்தில் போட்டதற்காக பர்மாவில் மூன்று நபர்கள் சிறை தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டனர். பௌத்த பார்வையில் இருந்து இந்த சம்பவத்திற்கு உங்களுடைய கருத்து என்ன?

புத்தராக வேண்டும் என பேராசைக் கொண்டிருந்த அவரது உறவினரான தேவதத்தா, எப்போதும் புத்தரை புண்படுத்த முயற்சிப்பார், ஆனால் புத்தர் புண்பட வில்லை, உடனடியாக இதற்காக அவர் மனச்சோர்வும் அடையவில்லை. எனவே ஹெட்போன்களுடன் இருக்கும் படத்தால் புத்தரை புண்படுத்தமுடியாது. ஆனால், பௌத்தத்தை பின்பற்றுபவர்கள், அல்லது எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், முக்கிய உருவத்திற்கு மக்கள் அவமரியாதை செய்தால்,அது மிகவும் குற்றமாகும். அவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; இது மிக மூர்க்கமானது. அவர்களை சிறையில் அடைப்பது, அல்லது மிக அதிக அபராதம் கொடுப்பதும் கூட பொருத்தமில்லாதது. எப்படி இருந்தாலும், அவர்கள் அப்படி செய்யக் கூடாது. பேச்சு சுதந்திரம் என்பது உண்மையில்  தேவையில்லாமல் மற்றவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று அர்த்தப்படுத்தவில்லை; குறிப்பாக இந்த விஷயம் மக்களிடம் பிரளத்தை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியும் போது தண்டனை தேவையற்றது. எது குற்றம் எது குற்றமில்லை என்று தீர்மானிப்பதன் அடிப்படையிலானது, மேலும் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் மதம் என்கிற விஷயத்திற்கு வரும் போது, அதாவது இயேசு அல்லது முகமது அல்லது புத்தருக்கு அவமரியாதை என்று வரும்போது, இது பொருத்தமற்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. புது ஐபாட் அறிமுகத்திற்காக சிலுவை போட்டுக் கொண்டிருக்கும் இயேசு ஹெட்போனுடன் ஐபாடில் பாடல் கேட்டுக் கொண்டிருப்பதைப் போன்று விளம்பரப்படுத்தினால் கிறிஸ்தவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? உறுதியான கிறிஸ்த்துவ நம்பிக்கையாளர்கள் இதனை பாராட்டுவார்கள் என்ற எனக்குத் தோன்றவில்லை. 

நாம் உலக இலக்குகளை அடைய முயற்சி செய்யலாம் அல்லது ஆன்மீக இலக்குகளை அடையலாம். இரண்டு உச்சநிலைகள் இருப்பதை நான் காண்கிறேன். ஒன்று உலக இலக்குகளில் அதிக கவனம் செலுத்துவது, ஆனால் இந்த விஷயத்தில் அது முடிவற்றது, நீங்கள் ஒரு இலக்கை நிறைவேற்றுகிறீர்கள், பின்னர் மற்றொரு குறிக்கோள் உள்ளது. உதாரணமாக பௌத்த சமூகங்களில் நான் காணக்கூடிய மற்றொரு உச்சநிலை, அவர்கள் ஆன்மீக இலக்குகளை அடைய முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்கள் உலக இலக்குகளை மறந்து விடுகிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்த்து சமநிலையைக் கண்டறியும் முறைகள் அல்லது வழிகள் உள்ளதா?

பாதிக்குப் பாதி சாத்தியமே இருக்கிறது என்று புனிதர் தலாய் லாமா எப்போதும் கூறுவார். நமது வாழ்க்கையின் யதார்த்தங்கள் என்ன, நமது பொறுப்புகள் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும்: நமது நிதி நிலைமை, நம்மைச் சார்ந்து யாராவது இருக்கிறார்களா?என்று பார்க்க வேண்டும்.  எனவே யதார்த்தமாக இருங்கள்.

Top