பௌத்தர்கள் அன்பு, கருணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றி ஏராளமாகப் பேசுவார்கள், ஆனால் மிகப்பெரிய மதகுருக்களான தலாய் லாமா உள்ளிட்டோர் கூட சில சமயங்களில் கோபப்படுவார்கள், அப்படி இருக்க நாம் என்ன விதிவிலக்கா? கோபப்படுதல் என்பது சர்வ சாதாரணமான விஷயம் என்கிறது அறிவியல், மனோதத்துவ நிபுணர்கள் கூட கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றே நமக்கு அறிவுரை கூறுகின்றனர், சில மதங்கள் கோபப்படுதல் நேர்மையானது என்கிறது. மற்றொரு புறம், பௌத்தம் கோபம் எப்போதுமே தீங்கானது என்று சொல்கிறது.
கோபம் என்பது எதிர்மறை சக்தியின் உச்சம் என்கிறார் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த ஆராய்ச்சியாளர் சாந்திதேவா. நாம் கடினமாக உழைத்து உருவாக்கிய நல்லனவற்றையெல்லாம் அழிக்கக்கூடிய திறன் பெற்றது கோபம் என்கிறார் அவர். யோசித்துப் பாருங்கள். ஒரு நிமிட கோபத்தில் நாம் துப்பாக்கியை எடுத்து ஒருவரை சுட்டுவிட்டால் நம்முடைய சுதந்திரமான வாழ்க்கையானது ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் அடைபட்டுவிடுகிறது. இதைவிட சிறந்த நாம் அன்றாடம் சந்திக்கும் உதாரணம் கோபம் எவ்வாறு நாம் தலைமுறைகளாக கட்டமைத்த நட்பையும் நம்பிக்கையையும் அழிக்கிறதென்பதே. உலகில் இருக்கும் எல்லா வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை ஒன்று சேர்ந்திருப்பதை விட மிக ஆபத்தானது கோபம்.
கோபம் என்பது மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்பதை நாம் அறிவோம், ஆனால் நாம் அதை வைத்து என்ன செய்யப்போகிறோம். நம்முடைய மனதை மாற்றிக்கொள்ள பௌத்தம் எளிமையான சில வழிமுறைகளை வழங்குகிறது. எச்சரிக்கையாக இருங்கள் – இது ஒன்றும் மாயாஜால மாத்திரையல்ல! கோபத்தை கையாள பௌத்தம் வழங்கும் சிறந்த எட்டு ஆலோசனைகள் இவையே:
1. இது தான் வாழ்க்கை : மனித பிறப்பு
2,500 ஆண்டுகளுக்கு முன்னரே புத்தர் போதித்த முதல் போதனை நேராக மையப்புள்ளியை நோக்கி அழைத்துச் செல்லும்: வாழ்க்கை என்பது திருப்தியில்லாதது. யோசித்து பாருங்கள்? நம்முடைய வாழ்க்கை எப்போதுமே திருப்தியடையாது.
நாம் பிறக்கிறோம், இறக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நல்ல நேரங்கள், கெட்ட நேரங்கள் மற்றும் சில நேரங்களில் எதையும் உணராமல் கூட இருந்திருக்கிறோம்: முடிவில்லாத இந்தத் தொடர் சங்கிலியையே பௌத்தம் “மனித பிறப்பு” என்கிறது. நாம் இந்த உலகிற்கு வந்த போது, வாழ்க்கை அருமையாக, எளிதாக, மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லாததாக இருக்கும் என்று யாருமே நமக்கு சொல்லவில்லை, எனவே நாம் எப்போதுமே நமக்கு என்ன தேவையோ அதைச் சார்ந்தே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதபிறவியாக நம்முடைய வாழ்க்கைச் சூழல் என்ன என்பதை புரிந்து கொண்டால், அது மற்ற அனைவரையும் கூட புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது.
நாம் அனைவரும் இதில் ஒன்றுசேர்ந்தே இருக்கிறோம். கோபமாக இருக்கும் சூழ்நிலைகளில், மற்றவர்களோ, அல்லது நாமோ இதை விட சிறந்ததை செய்துவிடப் போவதில்லை. மற்றவர்கள் விரும்பத்தகாதவற்றை பேசலாம், செய்யலாம் –ஆம் – அவர்களின் வாழ்க்கை முட்டாள்தனமானதும் கூட.
இது போன்ற சிந்தனைகள் நம்முடைய பார்வையையும் மாற்றிவிடும். நாம் அனைவருமே நம் சொந்த உலகின் மையப்புள்ளியாகக் கருதினாலும், எல்லாமே நமக்கு கிடைத்துவிடும் – அல்லது எதிர்காலத்தில் கிடைக்கும் என்பது அர்த்தமல்ல – நமக்குத் தேவையான பாதையில் சரியாக செல்ல வேண்டும்.
2. பொறுமையின் கதாநாயகனாக இருங்கள்
இடையூறு செய்யும் உணர்வுகளை அதன் எதிரிகளைக் கொண்டு சிறப்பாக வெல்ல வேண்டும்; தீயை எதிர்த்து தீயால் சண்டையிடுவதென்பது பலன் தராது. ஏன்? நம் மனதிற்கு இரண்டு எதிர் உணர்வுகளை ஒரே நேரத்தில் வைத்துக்கொள்வதென்பது முடியாத காரியம். நீங்கள் மற்றவர்களுடன் சண்டையிடுவதைவிட அந்த நேரத்தில் பொறுமையாக இருங்கள். பொறுமை என்பது எப்போதும் பலவீனத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது, மற்றவர்கள் உங்களைச் சுற்றி வந்து அவர்களுக்குத் தேவையானதை எடுத்துச் செல்லலாம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. யதார்த்தத்தில், அப்படியல்ல, சற்று வித்தியாசமானது. நாம் வெறுப்படைந்தால் அலறுவதோ, கத்துவதோ எவ்வளவு எளிது? அதே சமயம் அமைதியாக இருந்து நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்துவதென்பது எவ்வளவு கடினமானது? நம்முடைய உணர்வுகளைப் பின்பற்றி அவர்கள் முன்னெடுக்கும் வழியில் சென்றால் அது நம்மை கதாநாயகனாக்காது – மாறாக நம்மை பலவீனமாக்கும். எனவே அடுத்த முறை கூச்சலிடுவதை தவிர்த்து, பொறுமை எனும் ஆயுதத்தை கையில் எடுத்து, உங்களது கோபத்தின் தலையைக் கொய்திடுங்கள்.
எப்படி இது முடியும்? ஆழ்ந்து சுவாசித்து முயற்சிக்கலாம் – நாம் பதற்றமாக இருப்பதை நாமே உணர்ந்தால் - நாம் கோபமாக இருந்தால் குறுகிய இடைவெளியில், ஆழ்ந்து சுவாசித்தல் நேரடி மாற்றுமருந்தாக அது அமையும். நாம் சொல்லும் வார்த்தைகளால் பின்னால் வருத்தப்படுவதில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ள மெதுவாக 100 வரை எண்ணலாம். அல்லது நாம் நேரடி மோதலில் இருந்தால், அந்தச்சூழல் மேலும் மோசமடைவதற்குள் நாமே அங்கிருந்து விலகிவிட வேண்டும். ஒவ்வொரு சூழலும் வித்தியாசமானது, எனவே நீங்கள் உங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எது உங்களுக்கு சிறந்ததாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
3. நிஜத்தை உணருங்கள் : சூழ்நிலையை பகுப்பாய்தல்
நாம் கோபமாக இருக்கும்போது, ஆத்திரமானது ஒரு பாதுகாவலன் போல வந்து, நம்முடைய சிறந்த நண்பனாக நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றி, போர்க்களத்தில் இருந்து மீட்பதைப் போன்று தோற்றம் தரும். இந்த மாயையானது கோபமாக இருப்பது நியாயம் தான் என்று சிந்திக்க வைக்கும். ஆனால் நாம் கவனமாக பார்த்தால், கோபம் நம்முடைய தோழனல்ல எதிரி.
கோபமானது அழுத்தம், வேதனை, தூக்கமின்னை மற்றும் பசியின்மைக்கு காரணமாகிறது. நாம் கோபமாகவே இருந்தால், அது நீடித்த தாக்கத்தை பிறர் மனதில் ஏற்படுத்திவிடும். எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள்: கோபமான மனிதருடன் இருக்க யார் விரும்புவார்கள்?
நாம் ஏதோ ஒன்றை குற்றம் சொல்லும்போது, நம் வயிற்றில் தற்காப்பு முடிச்சு விழுந்து இறுக்குவதைப் போல உணரத்தொடங்கினால், நாம் அதனை நிறுத்திவிட்டு, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். இரண்டு வாய்ப்புகளே இருக்கின்றன: அந்தக் குற்றச்சாட்டு சரியோ, தவறோ. சரியாக இருந்தால் நாம் ஏன் கோபப்பட வேண்டும்? நாம் வளர்ந்தவர்கள், முதிர்ச்சி பெற்றவர்களாக நடந்து கொள்ள விரும்பினால், நாம் அதனை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து பாடம் கற்று, வாழ்க்கையை நகர்த்திச் செல்ல வேண்டும். அது தவறு என்றாலும் கூட நாம் ஏன் கோபப்பட வேண்டும்? அந்த நபர் செய்த தவறை நம் வாழ்வில் நாம் எப்போதுமே செய்யக் கூடாது?
4. உங்கள் மனதை உற்று நோக்குங்கள் : தியானம்
தியானம் மற்றும் மனநிறைவு பயிற்சிகள் கோபத்தை வெல்ல அதிகப் பலன்களைத் தருபவை. பலர் தியானிப்பதென்பது நேரத்தை வீணடிப்பதாகப் பார்ப்பார்கள் – ஒரு நாளின் பெரும்பகுதியை பயன்படுத்தும்போது மெத்தையில் அமர்ந்தே 20 நிமிடங்கள் ஏன் செலவிட வேண்டும், எனத் தோன்றும் இல்லையா? மற்ற சிலர் தியானம் என்பது நிஜ வாழ்வில் இருந்து அருமையாக தப்பிக்கும் வழி, குழந்தைகள், ஈமெயில்கள், கணவன், மனைவியிடம் இருந்து சிறிது நேரம் விலகி இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
ஆனால் தியானம் என்பது எல்லாவற்றையும் விட மேலானது – இது உண்மை- வாழ்க்கைக்கான தயாரிப்பு. இரக்கப்பட்டு தினசரி காலையில் தியானிப்பதில் எந்த நன்மையும் இல்லை, ஆனால் நாம் வேலைசெய்யத்தொடங்கியது, நம்முடைய பணியாளர்களிடம் கத்துகிறோம், சக பணியாளர்கள் மீது புகார் கூறுகிறோம்.
தியானம் நம்முடைய மனதிற்கு நேர்மறை சிந்தனைகளைப் பழக்கப்படுத்துகிறது – பொறுமை, அன்பு, இரக்கம் – இவையனைத்தையும் நம்மால் எங்கும், எல்லா நேரத்திலும் பயன்படுத்த முடியும். நமக்குப் பிடித்த தளத்தை கேட்க காலையில் அரை மணி நேரம் செலவிட்டால், அந்த நேரத்தில் குறைந்தபட்சமாக செலவிடும் பத்து நிமிடங்கள் மற்றவர்கள் மீதான கனிவான அன்பிற்கான சிந்தனைகளை உருவாக்கும் – கோபத்தை குறைப்பதற்கான சாத்தியான ஒன்று மேலும் நம்மை சுற்றி நமக்குத் தேவையானவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் மனிதராகவும் அந்த சிந்தனை மாற்றும்.
5. தலைவணங்கு : எதிரியிடம் இருந்து கற்றுக்கொள்
நாம் வழக்கமாக செய்வதற்கு எதிரானவற்றை செய்ய வேண்டும் என்றே எப்போதும் பௌத்தம் போதிக்கிறது. நாம் யார் மீதாவது கோபத்தில் இருந்தால் பழிவாங்க துடிப்போம். முடிவு? நாம் முன்பு இருந்ததைவிட மிகவும் பரிதாபமாகவிடுகிறோம். இது எதிர்விளைவாகத் தோன்றலாம், ஆனால் எதிர்ப்பதமாக செயல்பட்டால், எதிர்வினை முடிவுன மகிழ்ச்சிக்கான வழி கிடைக்கும்.
கேட்பதற்கு முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் சிந்தித்துப்பாருங்கள் கோபத்தை உங்களது ஆசிரியராக வைத்துக்கொள்வோம். நாம் சிறப்பாக இருக்க விரும்பினால் – அதாவது அதிக பொறுமை, அதிக அன்பு, கருணை, மகிழ்ச்சியானவராக – அதற்காக நாம் பயிற்சி செய்தல் தேவை. நம் அனைவருக்குமே உலக அளவு கால்பந்து வீரராகவோ அல்லது வயலின் வாசிப்பவராகவோ வேண்டுமானால் அதிக நேரமும்,முயற்சியும் தேவை, எனவே நமது மனப்பயிற்சி மட்டும் இதில் என்ன வேற்றுமையா? நாம் அனைவருமே எப்போதுமே நாம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் மக்கள் சூழ இருந்தால், நமக்கு எப்போதும் சவால்களே இருக்காது.
அப்படியாக, கோபத்துடன் இருக்கும் மனிதன் மிகவும் விலைமதிப்பில்லாதவராக மாறுகிறார், நமக்கும் நிஜத்தில் பொறுமையை பயிற்றுவிக்கும் வாய்ப்பை வழங்குகிறார். இவை உடனடியாக கோப உணர்வுக்கு எதிரான அலையை எழுப்புகின்றன, ஏனெனில் அவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதில் இருந்து நமக்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கோணத்தில் நம்முடைய பார்வையை மாற்றுகிறது.
6. மரணத்தை நினைவில்கொள் : நிலையாமை
நீங்கள், நான், நாம் அனைவருமே ஒரு நாள் மரிக்கப்போகிறோம். எனவே ஒருவர் நம் பக்கம் இருக்காமல் நாம் கோபப்படுவது போல ஏதேனும் செய்தால், ஒருநிமிடம் நின்று நிதானமாக யோசியுங்கள்: “நான் என்னுடைய மரணப்படுக்கையில் இருந்தால் இதைப் பொருட்படுத்துவேனா?” விடை, அந்த மனிதர் உண்மையிலேயே உலகைக்கைப்பற்றவும் அழிக்கவும் நினைக்கிறாரா என்பது தெரியாவிட்டால் அதன் பதில் “இல்லை”. இந்த சின்ன ஆலோசனை மிகவும் எளிதாக இருக்கலாம், எனினும் வாழ்வின் சின்னச்சின்ன சஞ்சலங்களைப் போக்க உதவும்.
நாம் மரணிக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரியும், ஆனால் வெளிப்படையாக நாம் அதைப்பற்றி உண்மையில் தெரிந்து வைத்திருக்கிறோம். மரணம் என்பது புலனாகாதது - வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோர், எதிர்பாராத விபத்தில் சிக்குபவர்கள் என மற்றவர்களுக்கு நடக்கும் தொலைதூர கருத்தாக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு நாளும் முதியோர்களுக்கு முன்னரே இளைஞர்கள் இறக்கிறார்கள், உடல்நலம் குன்றியோருக்கு முன்னரே ஆரோக்கியமானவர்கள் மரணிக்கிறார்கள்.
எதிர்காலத்தில் நிகழப்போகும் மரணத்தின் மீது இப்போதே கவனம் செலுத்தினால், (நாளையே? ஓராண்டிற்குள்? 50 ஆண்டிற்குள்?) பல்வேறு விஷயங்கள் நம்மை செயல்படாமல் முடக்கிப்போடும், சொல்லப்போனால் ஒன்றுமில்லாதவர்களாகிவிடுவோம். அப்படி இல்லையென்றால் அவர்கள் நம்மிடம் இனி சண்டையிடவே மாட்டார்கள், நம்முடைய விலைமதிப்பில்லாத நேரம், மூச்சு அல்லது சக்தியை அவர்களுக்காக செலவிடுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
7. நம்மை சுற்றி என்ன நடக்கிறது : கர்மா
“எது போனாலும் வந்தாலும்”, அல்லது, “அது அவருடைய கர்மவினை – அவருக்கு அது நடந்தது சரியே” வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றெல்லாம் மக்கள் சொல்வதுண்டு. கர்மா பற்றிய பௌத்தத்தின் புரிதல் இதுவல்ல, அவை சிக்கலானவை மற்றும் நுட்பமானவை. மற்றவர்கள் படும் துன்பத்திற்கு அவரது கர்மாவே காரணம் என்று சுட்டிக்காட்டி மகிழும் பெரும்பாலானவர்கள் அவர்கள் அந்தச் சூழலில் இருந்தால் எப்படி இருக்கும் என பேசு மாட்டார்கள், அப்போதும் அது அவர்களின் கர்மாவில் இருந்து வந்தது தானே.
நாம் அனுபவிக்கும் யாவும் – வியக்கத்தக்க மகிழ்ச்சியான தருணங்களில் இருந்து மனக்கசப்பின் ஆழத்திற்கு சென்றவையே – இவை தோன்றியதற்கான காரணங்களும் இருக்கின்றன. இந்தக் காரணங்கள் எங்கிருந்தோ எளிதில் நம்முடைய மடியில் வந்த உட்கார்ந்துகொள்ளவில்லை, நம்மால் உருவாக்கப்பட்டவையே. எனவே நாம் கடினமான சூழ்நிலைகளை அனுபவிக்க நேர்ந்தால், கோபப்படுவதற்குப் பதிலாக, நிறுத்தி நிதானமாக சிந்தியுங்கள்: எங்கிருந்து இந்த பிரச்னை வந்தது, நான் இதை மேலும் மோசமாக்க வேண்டுமா?
நம்மிடம் இருக்கும் பழைய குணாதிசயங்களின் அடிப்பயிலேயே எவ்வாறு வலுக்கட்டாயமாக செயல்படுகிறோம் என்பதே கர்மா. கர்மா எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, எதிர்கால அனுபவங்களை மாற்றுவதற்கான திறன் நமக்கு நம்மிடம் இப்போது இருப்பதுடன்- இங்கே குறிப்பிடுவதன் அர்த்தம் கோபம் தலைக்கேரும்போது பொறுமையை பயிற்சி செய்தல்.
8. எதுவும் நிஜமல்ல : வெற்றிடம்
பொறுமை என்பது நேரடி மாற்று மருந்தாக இருக்கலாம், கோபத்திற்கு மட்டுதல்ல நம் எல்லா பிரச்னைகள் மற்றும் கஷ்டங்களுக்கும் உறுதியான மாற்றுமருந்து வெற்றிடம். உண்மையில் நாம் எவ்வளவு பொறுமையாக இருக்கிறோம் என்பது பெரிதல்ல, வெற்றிடத்தை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், பிரச்னைகள் என்பது இந்திய பருவமழை போல நம் மீது பொழிந்து கொண்டே இருக்கும்.
நாம் கோபமாக இருக்கும் போது ஒரு நிமிடம் நம் மனதை பகுப்பாய்வு செய்தால், “நான்” அல்லது “என்னுடைய” என்ற அழுத்தமான உணர்வு இருப்பதை கவனிக்க முடியும். நீ என்னிடம் என்ன சொன்னாயோ அதற்காக நான் கோபமாக இருக்கிறேன். அவர் என் நண்பனுக்கு என்ன செய்தார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! நிச்சயமாக நான் சரியாக இருக்கிறேன், அவள் தவறு செய்கிறாள்!” எல்லா இடத்திலும் மேலோங்கும் நான், நான், நான் என்ற சிந்தனை.
நாம் கோபமாக இருந்தால் “நான்” என்ற தோற்றம் நிலையாக இருப்பதை பகுப்பாய்வற்கான சரியான வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அப்படி அது இல்லை! நம்மால் இருக்க முடியாது அல்லது அது ஒரு விஷயமல்ல என்று நாம் சொல்வதில்லை, ஆனால் “நான்” என்பதைக் கண்டறிய முயன்றால் – நான் என்பது நம் மனமா? உடலா?அல்லது இரண்டுமா? – எந்த வழியிலும் “ஆம் அது அங்கே இருக்கிறது” என்று நம்மால் சொல்ல முடியாது.
இதை புரிந்து கொள்வது நமக்கு கஷ்டமான ஒன்று, ஆனால் உண்மையில் யதார்த்தத்தை நாம் பகுப்பாய்வு செய்யத் தொடங்கினால், அது நம்முடைய போர்வை கோணத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும்.
சுருக்கம்
“நான் கோபப்பட மாட்டேன்” என்று எத்தனை முறை நாம் திரும்பத்திரும்பச் சொல்கிறோம் என்பது விஷயமல்ல; உண்மையான முயற்சியில்லாமல், நாம் விரும்பும் மன அமைதியை நம்மால் அடைய முடியாது.
மேலே கூறியுள்ளவை அனைத்தும் அருமையான பட்டியல் மட்டுமல்ல – உண்மையில் நம்மை நாமே வெறுப்பு, கோபம் மற்றம் துக்கத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான ஆயுதங்களாகப் பயன்படுபவை. பயிற்சியின் மூலம் நம்மில் யார் வேண்டுமானாலும் இதனைச் செய்ய முடியும்.
முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.