உறவுகளில் பொறாமையை கையாள்வது எப்படி?

How to jealousy ben blennerhassett unsplash

பொறாமை நம்மை சித்தபிரமை பிடித்தவர்களாக்கி, நண்பர்கள் மற்றும் வாழ்வில் சிறந்த சரிபாதி உறவுகளாலேயே கைவிட வைக்கும், உறவுமுறைகளில் தொந்தரவு ஏற்படுத்தி, மன அமைதியை முழுவதுமாக இழக்க காரணமாக அமைந்துவிடும். நாம் எவ்வளவிற்கு எவ்வளவு பொறாமை மற்றும் தன் உடைமை என்று நினைக்கிறோமோ, அந்த அளவிற்கு மற்றவர்களை விட்டு விலகிச்செல்கிறோம் என்று அர்த்தம். எண்ணற்ற மக்களிடத்தில் அன்பு காட்டும் திறன் நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தால், அவை பொறாமை உணர்வை வெல்ல உதவும். நண்பர்கள், தொழில், விளையாட்டு மற்றும் சிலவற்றின் மீது இருக்கும் அன்பு நம் இணை உறவு நம் வைத்திருக்கும் அன்பையோ அல்லது நாம் அவருக்காக கொண்டிருக்கும் அன்பையோ குறைக்காது; உண்மையில் அது நம்மை செம்மைப்படுத்தும்.

பொறாமை VS பேராசை

பொறாமையால் சில வடிவங்களை எடுக்க முடியும். நாம் திருமணமாகாதவராக இருந்தால், தம்பதியைப் பார்த்தாலோ அல்லது வேறு ஒருவருடன் உறவில் இருப்பவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலோ பொறாமைப்படுவோம், ஆனால் உண்மையில் அது பேராசை. ஒருவரின் அன்பு மற்றும் கவனத்தைப் பெற வேண்டும் என்று விரும்பலாம், அல்லது நாமும் இது போன்ற அன்பான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படலாம். இந்த இரண்டு விஷயங்களிலுமே, நமக்கு கிடைக்காத ஒன்றை அடைய நினைக்கிறோம், இந்த உணர்வுகளே ­­போதாமை மற்றும் இதர சுய-மதிப்பு பிரச்னைகளைக் கொண்டு வரும்.

உறவுகளில் ஏற்படும் பொறாமை

நாம் ஒரு உறவுமுறையில் இருக்கும்போது ஏற்படும் பொறாமையானது மேலும் தொந்தரவாகவே இருக்கும். மற்றவர்களிடத்தில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதென்பது, நம்முடைய இணை உறவு அல்லது நண்பர் மற்றம் மூன்றாவது நபரை கவனிப்பதைப் போன்றது; மூன்றாவது மனிதருடனான சிறப்பான உறவுமுறையை இழந்து விடுவோமோ என்று நாம் எப்போதும் கவலைப்படுகிறோம். சாத்தியமான நம்பிக்கையின்மையையோ அல்லது எதிர்ப்புகளைக் கண்டோ சகிப்புத்தன்மையற்றவர்களாகி விடுகிறோம். உதாரணத்திற்கு, நம்முடைய இணை உறவு அவர்களின் நண்பர்களுடனோ அதிக நேரம் செலவிட்டாலோ அல்லது அவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றாலோ நாம் பொறாமையாக உணர்கிறோம். ஒரு வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த வீட்டின் செல்லப்பிராணியாக இருந்த நாய்க்கு கூட இதே உணர்வு தான் மேலெழும். இந்தப் பொறாமையின் வடிவமானது மனக்கசப்பு மற்றும் பகைமையோடு கூடுதலாக பாதுகாப்பின்மை மற்றும் அவநம்பிக்கையை உள்ளடக்கியது.

நாம் பாதுகாப்பின்மையாக உணர்ந்தால், எப்போது நம்முடைய இணை உறவு அல்லது நண்பர் மற்றவர்களுன் இருப்பதைப் பார்த்தாலும், நாம் பொறாமைப்படத் தொடங்கிவிடுகிறோம். நம்முடைய சுய- மதிப்பின் மீதே நமக்கு நிச்சயமில்லாததே இதற்குக் காரணம் மேலும் மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பில் இருக்கும் பாதுகாப்பற்ற மனநிலை நம்முடைய இணை உறவையே நம்பக்கூடாத நிலையை முன்நடத்துகிறது. நாம் கைவிடப்படுவோம் என்று பயப்படுகிறோம். நம்முடைய இணை உறவு அல்லது நண்பர் வேறு யாருடனும் நேரத்தை செலவிடாவிட்டாலும் இந்த பய உணர்வு வர சாத்தியங்கள் இருக்கின்றன. சுயநலத்தின் உச்சத்தால், அவர்கள் எப்போது வேண்டுமானால் நம்மை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்று சித்தபிரமை கொள்கிறோம்.

பொறாமையை வெல்லுதல்

பொறாமையை கையாள எல்லோரிடத்திலும் அன்பு பாராட்ட நம் மனதிற்கு எவ்வளவு திறன் இருக்கிறது என்பதை பிரதிபலிக்க வேண்டும் – புத்த – பாரம்பரியத்தில் இது ஒரு முறை. நாம் இந்த உண்மையை மறுஉறுதி செய்தால், பொறாமையை வெல்ல அவை உதவும், ஒருவரை நேசிப்பதற்காக மற்றவர்களை விலக்கி வைக்கத் தேவையில்லை என்பதைக் காண முடியும். நம்மைப் பற்றி மட்டும் யோசியுங்கள், மற்றவர்களுக்காக நாம் எவ்வளவு திறந்த மனதுடன் இருக்க முடியும். திறந்த மனதுடன், நம்முடைய இணை உறவு, நண்பர்கள், குழந்தைகள், செல்லப்பிராணிகள், பெற்றோர், நாடு, இயற்கை, கடவுள், பொழுதுபோக்கு இன்னும் சிலவற்றின் மீது நமக்கான அன்பை கொண்டிருக்கலாம். நம்முடைய மனதில் ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம் இருக்கிறது, ஏனெனில் அன்பு என்பது பிரத்யேகமானதல்ல. அன்பின் அனைத்து வடிவங்களையும், அதன் தொடர்பிலானவற்றையும் கையாளும் சிறந்த திறனுடன், நம்முடைய உணர்வுகளை பரஸ்பரம் பொருத்தமாக வெளிப்படுத்தலாம். நிச்சயமாக நம்முடைய மனைவி அல்லது கணவர் அல்லது பெற்றோரிடம்  காட்டும் அதே அன்பு மற்றும் பாசத்தை நம்முடைய வளர்ப்பு நாயிடம் வெளிக்காட்ட மாட்டோம்!

நம்மால் திறந்த மனதுடன் இருக்க முடிந்தால், நம்முடைய இணை உறவு அல்லது நண்பராலும் அவ்வாறே இருக்க முடியும். எண்ணிலடங்கா மக்களிடத்திலும் ஏன் முழு உலகிலும் அன்பை விரிவு செய்ய எல்லோர் மனதிலும் ஒரே திறன் இருக்கிறது. மற்ற அன்பான நட்புவட்டமோ அல்லது இதர ஆர்வங்களோ இருக்கவே கூடாது, ஒருவரின் அன்பு நமக்கு மட்டுமே உரித்தானது என்று எதிர்பார்ப்பதோ ஏன் கோருவதோ கூட நியாயமற்றது மற்றம் யதார்த்தமற்றது, நம் மனது அவ்வளவு குறுகியதா, நம் இருவரோடு மற்றவர்களுக்கும் சேர்த்து மனதில் ஓர் இடம் இல்லையா?

நாம் இங்கு பாலின மோசடிகளைப் பற்றி பேசவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி மற்றும் பாலின நம்பகத்தன்மையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் மிகவும் மோசமானவை, இவை வேறு சில சிக்கல்களைக் கொண்டு வரும். ஒருவேளை, நம்முடைய தாம்பத்ய உறவில், குறிப்பாக வாழ்க்கைத் துணை மீது நம்பிக்கையின்மையோ அல்லது சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் அதிக நேரத்தை செலுத்துவதாலோ ஏற்படும் பொறாமை, மனக்கசப்பு மற்றும் தன் உடைமை என்ற உணர்வுகள் எப்போதும் பொறுப்பான உணர்வுகளுக்கு உதவியாக அமையாது. நாம் இந்தச் சூழலை நிதானமாகக் கையாள வேண்டும், ஏனெனில் நம் வாழ்க்கைத்துணையுடன் கூச்சலிடுவதாலோ அல்லது அவர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதோலோ அவர்களை நம் மீது அன்பு செலுத்த வைத்து விடலாம் என்பதில் வெற்றி கிடைப்பது கடினமே.

அன்பிற்காக நம் மனதை திறந்துவைத்தல்

நெருக்கமான அன்பு நிறைந்த நட்பானது ஒருவருடன் மட்டும் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம், ஒரே ஒருவர் மட்டுமே அதற்கு உரித்தானவர் என்று கருதுகிறோம் – நம்முடைய வாழ்க்கைத்துணை அல்லது நண்பர் யாரோ ஒருவருடனான அன்பு. நம் மீது அன்பு செலுத்த வேறு சிலர் இருந்தாலும்,நாம் அந்த உண்மையை ஏற்ப மறுக்கிறோம், “எண்ணிக்கையில் இவை அடங்காது” என்று நினைக்கிறோம். தொடர்ச்சியாக நம்முடைய மனதை திறந்து வைத்து நம்மால் இயன்ற வரை நண்பர்கள், உறவினர்கள், செல்லப்பிராணிகள் மற்றும் இன்னும் பிறர் இப்போது நம் மீது செலுத்தும் அன்பை அங்கீகரித்து பதிலுக்கு நாமும் அன்பு செய்தால் எதிர்காலத்தில் அதிக உணர்வு ரீதியிலான பாதுகாப்பை உணர அவை உதவி செய்யும். அதே போன்று, அன்பு செலுத்த ஒருவர் மட்டுமே தகுதியானவர் என்று பொருத்திக்கொண்ட மனநிலையைக் கடந்து வரவும் இது உதவும்.

நிறைபேரறிவு மற்றும் அனைத்தையும் விரும்புதல் இரண்டும் எல்லோரையும் மனதிலும் இதயத்திலும் வைத்திருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும் புத்தர் ஒரு நபர் மீது தனிக்கவனம் செலுத்தினால், அந்த ஆணோ பெண்ணோ 100% அவர் மீது கவனம் செலுத்துகிறார். எனவே எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டுதல் என்பதற்கும், தனி ஒருவர் செலுத்தும் அன்பும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. நம்முடைய மனதை திறந்து பலர் மீது அன்பு செலுத்துவதால், நம்முடைய சொந்த உறவுகள் மீது காட்டும் அன்பு குறைந்துவிடும் அல்லது நிறைவடையாது என்று நாம் பயப்பட வேண்டாம். முழு திருப்தியை உறவுகளுக்கு கொடுக்க  நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கும் நேரம், மற்றவர்களை சார்ந்திருப்பது வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொருவருடனும் நாம் செலவிடும் குறுகிய நேரம் கூடி முழு ஈடுபாடுடன் இருக்கும். பிறர் நம் மீது காட்டும் அன்பும் இதே போன்று இருப்பதே சரியானது, மற்றவர்களுடன் அன்பு கலந்த நம்பு பாராட்டுவதால் நாம் பொறாமைப்பட்டால், உண்மையான அன்பு என்ற உணர்வு நீர்த்துப் போய்விடும்.

எல்லா விதத்திலும் நம்மை பூர்த்தி செய்பவர், வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருவர், யாரோ ஒருவர் நமக்கு சிறந்த பொருத்தம், “நம்மில் பாதி”,என்று நினைப்பது யதார்த்தமில்லாதது. இந்த எண்ணங்கள் பிளட்டோவின் பண்டை கால கிரேக்க கட்டுக்கதைகளை அடிப்படையாகக்கொண்டது, உண்மையில் நாம் அனைவரும் முழுமையானவர்கள், இருவராக பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஏதோ ஒரு இடத்தில் “எங்கோ” நம்மில் பாதி இருக்கிறார்; உண்மையான அன்பு என்பது அவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் ஒன்றுசேர்வதாகும். எனினும் இந்தக் கதைகள் எல்லாம் மேற்கத்திய கற்பனைக்கான அடித்தளமாக இருந்தாலும், யதார்த்தத்தை அவை ஒப்பிடவில்லை. இதை நம்புவதென்பது ராஜகுமாரன் ஒருவன் வெள்ளைக் குதிரையில் வந்து நம்மை மீட்டெடுப்பான் என்பதைப் போன்றதாலும். நம்முடைய விருப்பங்கள், தேவைகளை பகிர்ந்து கொள்ள நாம் பலரிடத்தில் அன்பான நட்பை பேணுதல் வேண்டும். இது நமக்கு சரியென்றால் நம்முடைய வாழ்க்கைத்துணை மற்றும் நண்பர்களுக்கும் அதுவே சரியானது. எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றுவதென்பது இயலாத காரியம், எனவே தான் அவர்களுக்கும் மற்ற நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.

சுருக்கம்

நம்முடைய வாழ்வில் புதிதாக யாரேனும் வந்தால், அவர்களை நம் ஜன்னலோரத்தில் வந்திருக்கும் காட்டுக்குயில் போல அழகாக பார்க்க வேண்டும். அந்தப் பறவையானது மற்றவர்களின் வீட்டு ஜன்னலுக்கும் செல்லும் என்று நினைத்து அதனை கூண்டில் அடைத்து வைக்க நினைத்தால், அது துவக்கத்திலேயே பொலிவிழந்து ஏன் மறித்துப்போகக் கூட வாய்ப்பிருக்கிறது. சுயநல எண்ணமின்றி அந்தப்பறவையை சுதந்திரமாக பறக்கவிட்டால், அந்தப் பறவை நம்முடன் இருக்கும் நேரத்தை அற்புதமாகக் கொண்டாட முடியும். அந்தப்பறவையானது பறந்த போனால், அது அதனுடைய உரிமை, நம்மிடம் இருப்பதை பாதுகாப்பானதாக உணர்ந்தால் அந்தப்பறவையே மீண்டும் வரும். எல்லோருக்குமே பல நெருங்கிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, மதித்தால் நாம் உள்பட நம்முடைய உறவுமுறைகளுக்கும் அவை ஆரோக்கியமானதாகவும், நீடித்த மகிழ்ச்சியையும் அளிக்கும்.

Top