தொழில் நடத்த உதவும் 5 பௌத்த கொள்கைகள்

How to 5 tips business

பௌத்தம் தியானத்தோடு இணைந்தது. எனினும் அவை எல்லாத் துறையிலும் பொருந்தக்கூடிய பலவிதங்களில் யோசிப்பதற்கான பன்முகப் பார்வைகளையும் தருகிறது. எந்த ஒரு திட்டம் அல்லது தொழில் நடத்த பௌத்தம் வழங்கும் கொள்கைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இலக்கை வரையறுக்கவும்

பௌத்த பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னர் இலக்கு மற்றும் பயணிக்கும் திசை பற்றி தெளிவான புரிதல் இருத்தல் வேண்டும் என்று பௌத்தம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. அந்த இலக்கானது இடையூறு தரும் உணர்வுகளில் இருந்து நம்மை நாமே விடுவிக்கவும், நம்முடைய மனம் மற்றும் இதயத்தின் முழுத் திறனை உணர முடியும். இந்த இறுதி நிலையே “ஞானம்.”

இதைப் போலத்தான் நாம் ஒரு திட்டத்தையோ அல்லது தொழிலையோ தொடங்கும் போது, இலக்கை வரையறுப்பது கடினமானது. அது லாபம் தருமா? வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுமா அல்லது அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையுமா? அதிக துள்ளியமாக இலக்கை வரையறுக்கலாம், நம்மை முன்நடத்தி செல்லும் சாலையை கண்டறிந்து இலக்கை அடைவதற்கு இருக்கும் அதிகப்படியான வாய்ப்புகளை ஆராய்ந்தால் இலகுவாக அமையும்.

காரணம் மற்றும் பின்விளைவு கொள்கையை பின்பற்றுங்கள்

ஒரு முறை இலக்கை வரையறுத்துவிட்டால், இலக்கை முன்நடத்திச் செல்லும் காரணங்களை பட்டியலிட வேண்டும். அழிவுகரமான செயல்பாடை நிறுத்துதல் மற்றும் நம் மனதில் நல்ல குணங்களை பயிற்சித்தல், நம்மை நாமே ஆக்கப்பூர்வமாக வைத்துக்கொள்ளுதல், உலகை யதார்த்தமான வழியில் அணுகி அதனை கையாளுதல் உள்ளிட்டவை ஞானமடைதலுக்கான காரணங்கள். 

தொழில் தொடர்பான திட்டமாக இருப்பின், இறுதி இலக்கை அடைய முன்நடத்தி செல்லும் காரணங்களை தர்க்க ரீதியாக சிந்தித்து வடிவமைக்க வேண்டும். இந்த செயல்முறையானது பின்னோக்கிய பொறியியல் போன்றது. வரையறுக்கப்பட்ட இலக்கை முன்நடத்திச் செல்லும் தர்க்க ரீதியிலான செயல்களை மீண்டும் கண்டறியத் தொடங்க வேண்டும். இந்தச் செயல்முறையானது இலக்கை அடைய தேவையான அடிகளை வரையறுக்க உதவுவதோடு, அந்தச் செயலுக்கான பயணிக்கும் பாதையை நல்ல முறையாக அமைத்துக்கொடுக்கும்.

இரக்கம் : வாடிக்கையாளர் சிக்கலைத் தீர்க்கவும்

இரக்கம் என்பது பௌத்த கொள்கைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. பௌத்த போதனைகளின் படி:

இரக்கம் என்பது மற்றவர்கள் அவர்களின் வலிகளில் இருந்து விலகுவதை விரும்புதல்.

தொழிலில் இது என்ன செய்யப்போகிறது? தொழில் வாடிக்கையாளரின் சிக்கலுக்குத் தீர்த்தைத் தருகிறது. ஒரு தொழில் மூலம் ஏற்கனவே இருக்கும் தீர்வுகளை விட சிறந்தத் தீர்வைத் தர முடிந்தால், போட்டிப் பந்தயத்தில் அவை வெற்றி பெறுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை திறனறிந்து, அதற்கேற்ற ஒத்துணர்வு கொள்ளுதல் என்பது கடினமானது.  நம்முடைய இலக்கான வாடிக்கையாளர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உண்மையான பிரச்னைகளை கண்டறிவதோடு அதனை எப்போதும் மனதில் வைத்து, அந்தப் புரிதலோடு, பிரச்னைக்கான தீர்வை இயன்ற வழியில் சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு தொழிலில் வாடிக்கையாளர் மீதான இரக்கமே முதல் அடித்தளம் அல்லது தொழில் விருத்தி பயன்படுத்துவோரை மையப்படுத்தி இருத்தல் அவசியம்.

அசாத்தியம்: உலக மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல்

பௌத்த பகுப்பாய்வுகள் யதார்த்தம் குறித்து மற்றொரு மதிப்புமிக்க பார்வையை நமக்கு தந்திருக்கிறது: அனைத்துமே மாறுதலுக்குட்பட்டது – நாம், நம் சுற்றுச்சூழல், நம்மைச் சுற்றி இருக்கும் மக்கள். எளிதாக ஒரு எண்ணத்தில் சிக்குண்டு கொள்ளலாம், அதுவே திடமாகவும் வெளிப்படையானதாகவும் தோன்றலாம்; ஆனால், வேகமாக மாறி வரும் யதார்த்தத்தில், குறுகிய சிந்தனை, பிடிவாதம் மற்றும் வளைந்து கொடுத்தலுக்கான காரணமாகவும் ஆகிவிடுகிறது. 

நெட்ஃபிளிக்ஸை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இணையதள ஊடகத்திற்கு மாறும் வாடிக்கையாளர்களின் மனநிலையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பழைய பள்ளி சிந்தனையில் வீடியோக்களை பார்க்க ஒரே ஒரு தீர்வு தான் இருந்தது : டிவிடியை வாடகைக்கு எடுத்தல். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களைப் பார்க்க எளிய வழி இருக்கிறது என்ற விழிப்புணர்வை கொடுத்தது. ஒட்டுமொத்த ஊடக நுகர்வுத் துறையும் இந்தச்சந்தையின் அசாத்தியத்தையும், பயனாளர்களின் பழக்கங்களையும் கணித்திருக்கவில்லை. ஆனால் முதலில் நெட்ஃபிளிக்ஸ் உணர்ந்து, முழுத்துறையையும் எப்போதைக்குமானதாக மாற்றியது.

நன்னெறிகள்: உங்களை, உங்கள் குழு மற்றும் வாடிக்கையாளரை மதியுங்கள்

பௌத்த நன்னெறிகள் அகிம்சைக்கான கொள்கை அடிப்படையிலானவை. ஒவ்வொருவருமே மகிழ்ச்சியை விரும்புகிறார்கள், துன்பத்தை விரும்புவதில்லை என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய செயல்களை இந்த அடிப்படையில் புரிந்து செய்வதோடு, பிறருக்கு துன்பம் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முயற்சித்தால், நாம் அவர்களின் மதிப்பு மற்றும் நம்பிக்கையைப் பெறுவோம்.

நம் சகபணியாளர்களை மதித்தால், அவை நம் குழுவினரிடையே நம்பிக்கை மற்றும் புரிதலைக் கொண்டுவரும். முகத்திற்கு நேராக இழிவாக பேசுவதையோ அல்லது புறம் பேசுவதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும், வெளிப்படையாக இருக்கப் பழகுங்கள். மேலும் நம் வாடிக்கையாளர்கள் மீது காட்டும் அதிக மரியாதை, அவர்களின் கூடுதல் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை நமக்குத் திரும்பத் தரும். Zappos போன்ற பெருநிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் தொழில் மாதிரிகளையும், தொழிலாளர்கள் மத்தியில் சமத்துவம் மற்றும் வெளிப்படைத் தன்மையையும் கொண்டிருக்கின்றன.

சுருக்கம்

நம்முடைய தொழிலை உறுதியானதாக்க நாம் 5 பௌத்த நெறிகளைப் பயன்படுத்தலாம். அந்த நெறிகள் எவை:

  • இலக்கை வரையறு
  • காரணம் மற்றும் தாக்கத்தை நம்பு
  • வாடிக்கையார்களுக்காக ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தை மேம்படுத்துதல்
  • அசாத்திய மனநிலையோடு, வளைந்து கொடுத்து, புத்தாக்கமாக இருங்கள்
  • நன்னெறி கொள்கைகளைப் பின்பற்றி, சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை அளித்தல்.
Top