பொருள் முதல் வாதத்தை எவ்வாறு கையாள்வது?

How deal with materialism

பொருட்கள் உடலுக்கு மட்டுமே சவுகரியத்தைத் தருகின்றன, மனதிற்கு சுகம் தருவதில்லை. எண்ணிலடங்கா பொருட்களை வைத்திருப்பவர் மூளையும் நமது மூளையும் ஒன்று தான். எனவே இருவருமே மனவலி, தனிமை, பயம், பொறாமையை உணர்கிறோம். இவை யார் மனதை வேண்டுமானாலும் சஞ்சலப்படுத்தலாம். பணத்தால் இதனை விலக்குவதென்பது முடியாத காரியம். சிலர் மனகலக்கம், அதிகப்படியான அழுத்தத்தத்திற்காக, மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தற்காலிகமாக அழுத்தத்தை குறைக்கலாம், ஆனால் கூடுதலான பின்விளைவுகளைப் பெறுவார்கள். உங்களால் மனஅமைதியை விலை கொடுத்து வாங்க முடியாது. யாருமே அதை விற்பதில்லை, ஆனால் எல்லோருக்குமே மன அமைதி தேவை. பலர் நோய் தீர்க்கும் மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் அழுத்தத்தில் இருக்கும் மனதிற்கான உண்மையான மருந்து இரக்கம். எனவே, பொருள்முதல்வாத மக்களுக்கு தேவை இரக்கம். 

மன அமைதியே நல்ல ஆரோக்கியத்திற்கான சிறந்த மருந்து. உடல் சார்ந்த விஷயங்களுக்கு இவை அதிக சமநிலையைத் தருகின்றன. போதுமான தூக்கத்தைப் பெறுதலும் அதே போன்ற உண்மை தான்.  நாம் மன அமைதியோடு உறங்கினால் எந்த சஞ்சலமும் இருக்காது, தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. பலரும் அழகான முகத்தை பராமரிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் கோபமாக இருந்தால், உங்கள் முகத்தில் எந்த நிறத்தில் முகப்பூச்சு போட்டிருந்தாலும் அது பெரிதல்ல, அவை கை கொடுத்தும் உதவாது. நீங்கள் அழகற்றவர்களாகவே தோன்றுவீர்கள். ஆனால் நீங்கள் கோபப்படாமல் புன்னகைத்தால், உங்களது முகம் மேலும் வசீகரமாகவும், அழகாகவும் தோற்றமளிக்கும்.

இரக்கப்பட நாம் உறுதியாக முயன்றால், கோபம் வந்தாலும் கூட அது சிறிது நேரம் மட்டுமே இருக்கும். இரக்கம் என்பது திடமான எதிர்ப்பு சக்தியைப் போன்றது. ஒரு வைரஸ் வரும் போது அதிக கஷ்டம் இருக்காது. எனவே நமக்கு நிறைவான பார்வையும், இரக்கமும் தேவை. அதன் பின்னர், பிரபலமடைதல் மூலமாகவும், எல்லோருடனும் ஒன்றோடொன்று இணைந்திருத்தலுக்கான பகுப்பாய்வினாலும் நாம் கூடுதல் உறுதியைப் பெறலாம்.

நம் அனைவரிடமும் ஒரே மாதிரியான நற்குணங்களே இருக்கின்றன. எனவே உங்களைப் பாருங்கள். உங்களிடம் இருக்கும் நேர்மறை திறன்களைக் காணுங்கள். எதிர்மறைகளும் இருக்கும், ஆனாலும் நல்ல விஷயங்களுக்கான அம்சங்களும் இருக்கின்றன. எதிர்மறையை விட கூடுதல் நேர்மறையாக இருத்தலே அடிப்படை மனித இயல்பு. நம்முடைய வாழ்க்கையானது இரக்கத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே கோபத்திற்கான விதையை விட இரக்கத்திற்கான விதையே உறுதியானது. ஆகவே, உங்களை நீங்களே நேர்மறையாளராகப் பாருங்கள். இதுவே அதிக அமைதியான மனநிலையைக் கொடுக்கும். அதன் பிறகு சிக்கல்கள் வந்தாலும், அவை எளிதாகக் கடந்து போகும்.

நாம் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் போது, அதை தவிர்ப்பதோ அல்லது அதிலிருந்து மீண்டெழவோ நாம் பகுப்பாய்ந்தால், கவலைப்படுவதற்கான அவசியமில்லை.  நம்மால் அவ்வாறு பிரச்னையை வெல்ல முடியாவிட்டால், கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை, யதார்த்தத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் மிகச்சிறந்த பௌத்த குரு, சாந்திதேவா எழுதிவைத்திருக்கிறார்.

Top