நம்மைச் சுற்றி எது நடந்தாலும், சந்தோசமாக உணர்வதே மகிழ்ச்சியான நிலை. ஆனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதனை எதிர்கொண்டு அடிப்படையில் எப்படி மகிழ்ச்சியானவராக இருப்பது? அதற்கான சில பௌத்தம் தரும் ஆலோசனைகள்:
- ஒவ்வொரு நாளும் அமைதியாக இருக்க தனியாக நேரத்தை ஒதுக்குங்கள் – அமைதியாக இருந்து சுவாசித்தை உற்று கவனியுங்கள்.
- மற்றவர்களுடன் இருக்கும் போது என்ன பேசுகிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் மனநிறைவோடு அடைய வேண்டும்; தனிமையில் இருக்கும் போது, உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும் – ஆக்கப்பூர்வமான வழியில் பேச, செயல்பட, சிந்திக்க முயற்சியுங்கள்.
- அன்றாடம் ஒருவருக்கேனும் ஏதாவது நல்லவற்றை செய்யுங்கள் – மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு உண்மையான காரணியாக இருங்கள்.
- மற்றவர்களிடம் பெருந்தன்மையாக இருங்கள் – உங்களின் சுய-மதிப்பிட்டின் உணர்வை இது ஊக்கப்படுத்தும்.
- உங்களுடைய மற்றும் மற்றவர்களின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துங்கள் – பிரச்னைகள் எழும் போது தேவையான யோசனைகளைத் தந்து உதவலாம்.
- மற்றவர்கள் செய்த தவறை விட்டுத்தள்ளுங்கள் – மன்னிக்க பழகுங்கள்.
- உங்களுடைய தவறுகளை தூக்கி எறியுங்கள் – உங்களை நீங்களே மன்னியுங்கள்.
- யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் – வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள் இருக்கும், எவ்வளவு கெட்ட நிகழ்வாக இருந்தாலும், எல்லாமே கடந்து போகும்.
மகிழ்ச்சியாக இருப்பது வெளியில் இருந்து வராது; உங்களுக்குள் நீங்கள் அதற்காக செயலாற்ற வேண்டும். ஆனால் பயிற்சியின் மூலம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான வாழ்வை முன்னெடுக்க முடியும்.