எல்லோரும் புத்தராக முடியும்

நாம் அனைவருமே நீடித்த மகிழ்ச்சியை அடையவே விரும்புகிறோம், மிக அர்த்தமுள்ள மற்றும் தர்க்க ரீதியில் யதார்தத்தில் அந்த இலக்கை அடைய பயணிக்கிறோம். புதிதாக வாங்கும் சில பொருள்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மகிழ்ச்சிக்கான உண்மையான மூலாதாரம் நமது சொந்த மனம்தான். நம்முடைய அனைத்து திறன்களையும் முழுவதும் மேம்படுத்தி நம்முடைய குறைபாடுகளை வெல்ல முடிந்தால், நாமும் புத்தராக மாறலாம், மகிழ்ச்சிக்கான இந்த் மூலாதாரம் நமக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் சொந்தம். நாம் அனைவரும் புத்தர்களாக முடியும், ஏனெனில் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் முழு செயல்பாட்டுக் காரணிகள் இலக்கை அடைய நமக்கு உதவுகிறது. நாம் அனைவரும் புத்த இயல்பு கொண்டவர்கள்.

நாம் அனைவரும் புத்தர்களாக மாற முடியும் என்று புத்தர் உறுதியாகக் கூறினார், ஆனால் உண்மையில் அவர் கூறியதன் அர்த்தம் என்ன? யார் ஒருவர் தன்னுடைய குறைபாடுகளை நீக்கி, தன்னுடைய குறைபாடுகளை சரி செய்து, தன்னுடைய திறன் அனைத்தையும் உணர்கிறாரோ அவரே புத்தர். ஒவ்வொரு புத்தரும் நம்மைப் போன்று தொடங்கியவர்களே, யதார்த்தத்தைப் பற்றிய குழப்பம் மற்றும் நம்பத்தகாத கணிப்புகள் காரணமாக சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் தொடர்ச்சியான சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

தங்களுடைய பிடிவாதமான கணிப்புகள் உண்மையில் யதார்த்தத்திற்கு ஒத்துப்போவதில்லை என்பதை உணர்ந்து, தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உறுதியால், அவர்களின் மனம் பிரதிபலிக்கும் கற்பனைக்கு ஏற்ப செயல்படுவதை தானாக நிறுத்துகின்றனர். இடையயூறான உணர்வுகள் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் அனுபவங்களை நிறுத்திக்கொண்டு துன்பங்களில் இருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்கின்றனர்.

இதன் மூலமாக அவர்கள் தங்களுடைய நேர்மறை உணர்வுகளான அன்பு மற்றும் இரக்கத்தை வலுப்படுத்துவதற்காக செயல்படுகின்றனர், மேலும் தங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுகின்றனர். சேயின் மேல் தாய்க்கு இருக்கும் ஒரு விதமான அன்பை போல் எல்லோரிடத்திலும் அதை மேம்படுத்துகின்றனர். எல்லோரிடத்திலும் செலுத்தும் இந்த ஆழ்ந்த அன்பு மற்றும் இரக்கத்தின் சக்தி மற்றும் விதிவிலக்கின்றி எல்லோருக்கும் தீர்வு ஏற்படும் வகையில் உதவுதல், அவர்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்வதை மேலும் மேலம் வலுப்படுத்துகிறது. இது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுகிறது, அவர்களின் மனமானது எல்லோரும் எல்லாமும் தனக்காக மட்டுமே என்று ஏமாற்றும் தோற்றத்தை கற்பனை செய்வதைக் கூட நிறுத்தி விடுகின்றன. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு இருக்கிறது என்பதை எந்தத் தடையுமின்றி அவர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

இந்தச் சாதனையின் மூலம் அவர்கள் ஞானமடைகின்றனர்: அவர்கள் புத்தர்களாகின்றனர். அவர்களின் உடல், தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் அவர்களின் மனம் எல்லா வரையறைகளில் இருந்தும் விடுபடுகிறது. தான் கற்பிப்பதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஏதோ விளைவு ஏற்படுகிறது என்பதை அறிந்து கொண்டு, எல்லா உயிர்களுக்கும் தங்களால் இயன்ற அளவில் யதார்த்தத்தில் உதவ முடியும். ஆனால் புத்தர் சர்வ வல்லமையும் படைத்தவர் அல்ல. திறந்தமனதுடன், ஆலோசனைகளை ஏற்று அதனை பின்பற்றுபவர்களிடம் மட்டுமே புத்தரால் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தான் அடைந்ததை எல்லோராலும் அடைய முடியும் என்று புத்தர் கூறி இருக்கிறார்; எல்லோராலும் புத்தராக முடியும். ஏனெனில் நம் அனைவருக்குள்ளும் “புத்த – இயல்பு” இருக்கிறது – புத்தமதத்தை இயக்கும் அடிப்படை செயல்பாடுகள்.

நரம்பியல் என்பது நியூரோபிளாஸ்டிசிட்டி பற்றி பேசுகிறது – வாழ்நாள் முழுமைக்குமான புதிய நரம்பியல் பாதைகளை மாற்றும், மேம்படுத்தும் மூளையின் திறன். உதாரணத்திற்கு இடது கையைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியானது முடமாகிப்போனால், முடநீக்கியல் பயிற்சியினால் மூளையில் புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்கி வலது பக்கத்தை பயன்படுத்த உதவ முடியும். அதீத மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான புதிய நரம்பியல் பாதைகளை இரக்கம் போன்ற தியான முறையால் உருவாக்க முடியும் என்று அண்மை ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே வெறுமனே மூளையின் நரம்பியல் மேம்பாடு மற்றும் வளர்ச்சியான நியூரோபிலாஸ்டிசிட்டி பற்றி மட்டும் பேசாமல், மனதின் நெகிழ்த்தன்மை குறித்தும் பேச வேண்டும். உண்மையில் நம்முடைய மனம் மற்றும் அதன் மூலம் நம்முடைய ஆளுமைப் பண்புகள், நிலையாகவும் சரியாகவும் இருப்பதில்லை, புதிய நேர்மறைப் பாதைகளை மேம்படுத்த தூண்டப்படலாம், இதுவே நாம் ஞானம் பெற்ற புத்தர்களாக மாறுவதற்கான அடிப்படையான காரணியாக நமக்கு உதவும்.

உடல் அளவில், நாம் ஆக்கப்பூர்வமான எதையோ பேசினாலோ அல்லது சிந்தித்தாலோ, நேர்மறை நரம்பியல் பாதையை நாம் வலுப்படுத்தலாம், இதனால் செய்யும் செயல் எளிதாகி அதை மீண்டும் செய்கிறோம். மனதளவில் இது நேர்மறை பலம் மற்றும் திறனை கட்டமைப்பதாக பௌத்தம் கூறுகிறது.  நாம் மிக அதிகமான நேர்மறை பலம் போன்ற அமைப்பை வலிமைபடுத்துகிறோம், குறிப்பாக இது மற்றவர்களுக்கு பலம் தரும்போது, அது மேலும் வலுப்படுகிறது. ஒரு முழுமையான புத்தராக எல்லா உயிரினங்களுக்கும் உதவக்கூடிய திறனுடன் செயல்படக்கூடிய நேர்மறை பலமே உலகளவில் உதவியாக இருக்க வேண்டும் என்ற அந்த இலக்கை அடைய நமக்கு உதவுகிறது.

அதே போன்று யதார்த்தம் பற்றிய நம்முடைய தவறான கணிப்புகளுக்கு ஏற்ற உண்மையாக எதுவும் இல்லாத ஒன்றில் கவனம் செலுத்துகிறோம், இது நம்முடைய நரம்பியல் பாதைகளை மேலும் பலவீனமாக்குகிறது, முதலில் இந்த மன ரீதியிலான முட்டாள்தனத்தை நம்புகிறோம் பின்னர் அவற்றையெல்லாம் செயல்படுத்துகிறோம். கடைசியில் நம்முடைய மனம் இது போன்ற மருட்சியான நரம்பியல் மற்றும் மனப்பாதைகளில் இருந்து விடுபடுவதோடு, சிக்கல் தரும் உணர்வுகள் மற்றும் அவை சார்ந்துள்ள கட்டாயப்படுத்தும் நடத்தை முறை பாதைகளில் இருந்தும் கூட விடுபடலாம். இதற்கு பதிலாக யதார்த்தம் குறித்த ஆழ்ந்த விழிப்புணர்வுக்கான வலுவான பாதைகளை நாம் மேம்படுத்தலாம்.  இந்தப் பாதைகள் புத்தரின் எல்லாம் அறிந்த மனதிற்கு அதிகாரம் கொடுப்பதை மையப்படுத்தினால் ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட உயிரினங்களிடங்களுக்கும் எவ்வாறு உதவ வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும், ஆழ்ந்த விழிப்புணர்வுக்கான இந்த பிணையமானது புத்தரின் மனநிலையை அடைய நமக்கு உதவியாக இருக்கும்.

ஏனெனில் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும் வசதிக்கான உடல் நம்மிடம் இருக்கிறது –அதில் பிரதானமானது பேச்சு – மனமும் கூட, புத்தரின் மனநிலை, பேச்சு, சரீரத்தை அடைய நம்மிடம் செயல்பாட்டு முறைகள் இருக்கின்றன. இந்த மூன்றும் புத்தரின் இயல்புக் காரணிகள். நம்மிடம் சில அளவிலான நல்ல குணநலன்கள் இருக்கின்றன -தற்காப்பிற்கான நம்முடைய உள்ளுணர்வு, இனங்களைப் பாதுகாத்தல், நம்முடைய தாய் மற்றும் தந்தையின் உள்ளுணர்வு, உள்ளிட்டவை – இதே போன்று செயல்படவும் மற்றவர்களிடம் தாக்கம் ஏற்படுத்தவும் முடியும். இவை கூட புத்தரின் இயல்புக் காரணிகள்; அளவில்லாத அன்பு மற்றும் அக்கறை, புத்தரின் ஞானமடைதல் செயல்பாடுகள் உள்ளிட்ட நல்ல குணங்களை விளைவிப்பதற்கான நம்முடைய செயல்பாட்டு முறைகள் இவை.

நம்முடைய மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்தால், புத்தரின் – இயல்பு காரணிகளை நாம் மேலும் கண்டறியலாம். நம் அனைவராலும் தகவலை உள்வாங்க முடியும், சில விஷயங்களை ஒன்றிணைத்து தரமானவற்றை பகிரலாம், விஷயங்களின் தனித்துவத்தை வேறுபடுத்தலாம், நாம் உணர்ந்தவற்றிற்கு பதிலளிக்கலாம் மேலும் விஷயங்கள் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த வழிகளில் நம்முடைய மனதின் செயல்பாடுகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் இவை கூட புத்தரின் மனநிலையை அடைவதற்கான செயல்பாட்டு வழிமுறைகள், அவை தனது உச்ச சக்தியில் செயல்படும்.

 சுருக்கம்

புத்தராக மாறுவதற்கான செயல்பாட்டு முறைகள் நம் அனைவரிடமும் இருக்கிறது, இது உந்துதல் என்னும் சிறிய விசயம் மற்றும் ஞானமடைதலுக்கு முன்னர் செய்ய வேண்டிய நிலையான கடின உழைப்பு. முன்னேற்றம் எப்போதும் நேரியலானதல்ல: சில நாட்கள் நல்ல முறையில் செல்லும், சில நாட்கள் மோசமாக இருக்கும்; பௌத்தவியலுக்கான பாதை நீண்டது எளிதானதல்ல. ஆனால் நம்முடைய புத்த இயல்பு காரணிகள் நாம் எவ்வளவு அதிகமாக நினைவுபடுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் ஊக்கமிழப்பதை தவிர்க்கிறோம்.  நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இயல்பில் நம்மிடம் தவறாக எதுவும் இல்லை. ஒரு வலுவான நல்ல உந்துதலுடனும், இரக்கத்தையும் ஞானத்தையும் திறமையாக இணைக்கும் யதார்த்தமான முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் எல்லா தடைகளையும் கடக்க முடியும்.

Top