ஞானமடைதலை நோக்கி நாம் பாடுபடும்போது, மற்ற அனைவருக்கும் உதவும் வகையிலான புத்தராக மாறுவதற்கு நமக்குத் தேவையான அனைத்து நல்ல பண்புகளையும் முதிர்ச்சியடையச் செய்வதற்காக ஆறு தொலைநோக்கு அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் மற்றவர்களை அவர்களின் சுய நற்குணங்களுடன் பக்குவநிலைக்கு கொண்டு வருவதற்கு, முதலில் நாம் அவர்களை நம்முடைய நேர்மறை செல்வாக்கின் கீழ் ஒன்று கூடச் செய்ய வேண்டும். இவற்றை தீவிரமாக எப்படி அடைய முடியும் என்பதை புத்தர் நான்கு நிலைகளில் போதித்திருக்கிறார்:
1. பெருந்தன்மையாக இருத்தல்
நம்மால் முடிந்தவரை, மற்றவர்களிடத்தில் பெருந்தன்மையாக இருத்தல் வேண்டும். நம்மை பார்ப்பதற்காக யாராவது வந்தால், நாம் அவர்களுக்கு புத்துணர்ச்சி உணவு தந்து உபசரிக்கலாம்; சாப்பிடுவதற்கு வெளியே சென்றால், நாம் அவர்களையும் உடன் அழைத்துச் சென்று அவர்களுக்கும் சேர்த்து கட்டணத்தை செலுத்தலாம். பெருந்தன்மையாக இருப்பதென்றால் கட்டாயமாக ஏதாவது பொருளை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உண்மையில் முக்கியமானது நாம் நம்முடைய நேரத்துடன் பெருந்தன்மையாக இருத்தல். எதையேனும் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருத்தல், அவர்களின் பிரச்னைகளை நேர்மையான விருப்பத்துடன் கேட்டல் மற்றும் அக்கறைப்படுதல், அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய வரம் என்பதை தீவிரமாக எடுத்துக் கொண்டு நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இவ்வாறு கருதுவது மற்றவர்கள் அவர்களை ஏற்றுக்கொண்டதாகவும் நிம்மதியாகவும் உணர்வார்கள், அவர்கள் மகிழ்ச்சியாகவும் நம்முடன் சவுகரியமாகவும் இருப்பதாக உணர்வார்கள். நம்முடைய நேர்மறை செல்வாக்கில் நாம் வெளிப்படையாக இருப்பதற்கான முதல் படி இதுவாகும்.
2. மகிழ்வூட்டுகிற விதத்தில் பேசுதல்
பிறர் நம்மிடத்தில் மேலும் வெளிப்படையாக இருப்பவராக மாற்றுவதற்கு நாம் அவர்களுடன் கணிவுடனும் மகிழ்வூட்டுகிற விதத்திலும் பேச வேண்டும். அதாவது அவர்கள் புரிந்து கொள்கிற விதத்தில், அவர்களுக்கு தொடர்புடைய வகையிலான மொழி மற்றும் அவர்களுக்கு ஆர்வமுள்ளவற்றை பற்றி பேசுவதன் மூலம் புரிய வைத்தல். அடிப்படையில், நாம் மற்றவர்களை நம்முடன் சவுகரியமாக இருப்பவர்களாக்க வேண்டும். நாம் அவர்களின் உடல்நலன் குறித்து கேட்கலாம் மற்றும் அவர்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்களை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாக காட்டிக்கொள்ளலாம். யாருக்காவது கால்பந்து பிடிக்குமெனில், "அது முட்டாள்தனமான விளையாட்டு, எவ்வளவு நேர விரயம்!" என்று சொல்லக் கூடாது இது மிக முக்கியமான விஷயம், ஏனெனில் நாம் அவ்வாறு சொன்னால், அவர்கள் நாம் சொல்பவற்றை உள்வாங்குபவராக இருக்க மாட்டார். அவர்களை விட கீழானவர்களாக நாம் அவர்களைப் பார்ப்பதாக மட்டுமே அவர்கள் உணர்வார்கள். அதற்காக யார் போட்டியில் இன்று வெற்றி பெறுவார்கள் என்று பெரிய அளவில் விவாதிக்க வேண்டியதில்லை, ஆனால் கொஞ்சமாவது கால்பந்து தொடர்பானவற்றை பேசுவது அவர்களை ஏற்றுக் கொண்டவர்களாக உணர வைக்கும். மற்றவர்களுக்கு உதவுவதற்கு நாம் ஆசைப்பட்டால், அனைவர் மீதும் அவர்களுக்கு விருப்பானவற்றின் மீது ஆர்வம் எடுத்துக் கொள்வது மிக முக்கியம். நாம் அப்படி செய்யாவிட்டால், நாம் எப்படி மற்றவர்களுடன் தொடர்புபடுத்துக் கொள்ள முடியும்?
யாரேனும் ஒருவர் ஒருமுறை வெளிப்படையாகவும் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் உணர்ந்தால், நம்முடைய மகிழ்ச்சியூட்டும் வகையிலான பேசும் விசயமானது அவர்களுக்கு அதிக அர்த்தமுள்ளவையாக மாறும். சரியான நேரங்களில், சரியான சூழல்களில், பொருத்தமான பௌத்த போதனைகளின் சிறப்பம்சங்கள் பற்றி நாம் பேசலாம் அது ஒருவருக்கு உதவியாக இருக்கலாம். அப்படி செய்வதில் இருந்து சில பலன்களை அவர்கள் நிச்சயமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதை குறிப்பிட வேண்டியது அவசியம்.
அறிவுரை வழங்கும் போது நம்முடைய பேசும் தொனியானது மிகவும் முக்கியமானது. அழுத்தம் கொடுக்கும் விதத்தில் அதிகாரத் தொனியில், விட்டுக்கொடுத்தல் அல்லது ஆதரவளிப்பதைப் போன்று பேசுவதை தவிர்த்தல் வேண்டும். இது தான் மகிழ்வுடன் பேசுதல் என்பதை குறிக்கிறது. மற்றவர் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் அவர்கள் மிரட்டப்படுதாகவோ அல்லது தேவையற்ற அறிவுரையால் இயக்கவைக்கப்படுவதாகவோ உணராத விதத்தில் பேச வேண்டும். இதற்கு சரியான நேரம் மற்றும் அறிவுரை வழங்குவதற்கான சரியான வழியை அறிவதற்கான பெரிய உணர்நிலையும் திறனும் தேவை. நாம் எப்போதும் மிக ஆழமானவற்றையும் அர்த்தமுற்ற விவாதங்களை மட்டுமே வலியுறுத்தினால், மக்கள் நம்மை புரிந்துகொள்ள கடினமானவர் என்று கருதுவதுடன் நாம் சொல்வதை உள்வாங்குபவராக இருக்க மாட்டார்கள். எனவே தான் சில நேரங்களில் நம்முடைய பேச்சை லேசானதாக்குவதற்கு நாம் நகைச்சுவையை பயன்படுத்த வேண்டும், குறிப்பாக நாம் அறிவுரை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த நபர் தற்காத்துக் கொள்ளத் தொடங்கும் போது நகைச்சுவையானது கைகொடுக்கும்.
ஒருவருக்கு சில போதனைகளை விளக்கும் போது இனிமையான அதே சமயம் அர்த்தமுள்ள விதத்தில் நாம் கனிவாகப் பேசுவதன் விளைவாக, நாம் அறிவுறுத்தியவற்றின் நோக்கங்களை அடைவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் அறிவுரை என்ன என்பதில் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள், அதன் பலன்களை உணர்ந்து, அதற்கு மதிப்பளிப்பார்கள்.
3. மற்றவர்கள் அவர்களின் நோக்கங்களை அடையத் தூண்டுதல்
நாம் கொடுக்கின்ற எந்த அறிவுரையையும் வெறுமனே பௌத்த தேற்றம் என்ற மட்டத்தில் மட்டும் விட்டுவிடக் கூடாது. மற்ற தனிப்பட்ட நபரின் சூழலுக்கு அந்த போதனையை எப்படி செயல்படுத்தலாம் என்பதை நாம் வெளிப்படையாக விளக்க வேண்டும். இவ்வழியில், மற்றவர்கள் நம்முடைய அறிவுரையை பயிற்சிக்கு கொண்டு வந்து அதன் மூலம் அவர்கள் போதனையின் நோக்கங்களை அடைய நம்மால் தூண்ட முடியும். போதனையை எப்படி செயல்படுத்தலாம்- படிப்படியாக என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிந்தால் மட்டுமே - அதனை முயற்சிக்கும் ஆர்வம் உடையவர்களாக அவர்கள் மாறுவார்கள்.
போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க மற்றவர்களை தூண்டுவதில், அவர்களின் சூழலை எளிதாக்க முயற்சிக்கிறோம். அதாவது முதலில் விஷயங்களை எளிதாக்குதல் என்று பொருள், குறிப்பாக பௌத்தத்தில் அனுபவம் இல்லாதவர்களுக்கு. படிப்படியாகத்தான் அவர்களை மிகவும் சிக்கலான, மேம்பட்ட நுட்பங்களுக்கு இட்டுச் செல்கிறோம். இதன் விளைவாக, அவர்கள் தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள், மேலும் இந்த முறைகளுடன் தொடர்ந்து செல்கிறார்கள். அவர்களின் தற்போதைய நிலைக்கு அப்பாற்பட்ட சில போதனைகளைப் பயன்படுத்த முயற்சிப்பதன் மூலம் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
4. நோக்கங்களை கைவிடாமல் தொடருதல்
ஒருவரிடம் நம்மை கபடவேடதாரியாக பார்க்க அறிவுறுத்துவது மிகவும் ஊக்கமின்மைக்கான விஷயங்களில் ஒன்று. அவர்கள் போதனைகளிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க, நாம் அறிவுறுத்தியவற்றின்படி செயல்படுவதன் மூலம் நல்ல முன்மாதிரியை அமைக்க வேண்டும். கோபத்தை வெல்வதற்கான பௌத்த வழிகளை நாம் யாருக்காவது போதித்தால், உதாரணமாக, நாம் அவர்களுடன் உணவு சாப்பிட விடுதியில் இருக்கிறோம் நம்முடைய உணவு அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் நாம் ஒரு மோசமான நிகழ்வை உருவாக்குகிறோம், அதன் பின்னர் பௌத்த போதனையின் கோப மேலாண்மை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? வழிமுறைகள் அனைத்தும் பலனில்லாதவை என்று நினைத்து அதனை பின்பற்றுவதை கைவிட்டுவிடுவார்கள். அதனால் தான் நாம் என்ன போதிக்கிறோமோ அதன்படியே வாழ்ந்து காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் மட்டுமே நாம் என்ன சொல்கிறோமோ அதனை மற்றவர்கள் நம்புவார்கள்.
நிச்சயமாக இப்போது வரை நாம் இன்னும் புத்தர்கள் அல்ல, அதனால் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாவதற்கான வழியும் நமக்கு இல்லை. இருப்பினும், நம்மால் முடிந்ததை தொடர்ந்து முயற்சிக்கிறோம். ஒரு கபட வேடதாரியாக அல்ல அதாவது யாருடனாவது இருக்கும் போது போதனைகளை பின்பற்றுபவராகவும் உதவ முயற்சிப்பவராகவும் காட்டிக்கொண்டு தனிமையிலோ அல்லது நம்முடைய குடும்பத்துடனோ இருக்கும் போது போதனைகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. தர்மத்தின் நோக்கங்களை முழு நேரமாகவும் நேர்மையாகவும் தொடர்ந்து செயல்படுத்துவது அவசியமாகும்.
சுருக்கம்
பௌத்த போதனைகள் மூலம் பிறர் முதிர்ச்சி அடையச் செய்வதற்கும் உதவுவதற்கும் நான்கு படிகள் நமது தனிப்பட்ட உறவுகளில் மட்டுமல்ல, உலகில் தர்மம் கிடைக்க பெரிய அளவில் பொருத்தமானவை.
- பெருந்தன்மையாக இருத்தல் - போதனைகளை கட்டணமின்றி இலவசமாக்குதல்
- மகிழ்விக்கும் விதத்தில் பேசுதல் - போதனைகளை எளிதில் புரிந்து கொள்ளும் மொழியில் மற்றும் புத்தகங்கள், இணையதளங்கள், பாட்கேஸ்ட்கள், வீடியோக்கள், சமூக ஊடகங்கள் போன்ற பரந்துபட்ட ஊடகம் மூலம் கிடைக்க வழி செய்தல்
- மற்றவர்கள் அவர்களின் நோக்கங்களை அடைய தூண்டுதல் - போதனைகளை எவ்வாறு தெளிவாக படித்து படிப்படியாக உள்வாங்கி அன்றாட வாழ்வில் போதனைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்
- இந்த நோக்கங்களுடன் இணக்கமாக இருத்தல் - நீங்கள் உங்கள் வாழ்க்கையை நடத்தும் விதத்திலும், தர்ம அமைப்பின் விஷயத்தில், அமைப்பு நடத்தப்படும் விதத்திலும் பௌத்தக் கொள்கைகளை எடுத்துக்காட்டுக.
இந்த நான்கு படிகள், ஒரு நேர்மையான நற்பண்புடைய உந்துதலால் ஆதரிக்கப்படுகிறது, போதிசிட்டா ஞானத்தை முழுமையாக அடைவதற்கான நோக்கமாக இல்லாவிட்டாலும், நமது நேர்மறையான செல்வாக்கை மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான சிறந்த வழிகள் ஆகும்.